எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, June 10, 2018

ஒன்றா இரண்டா! எடுத்துச் சொல்ல! திரு கிருஷ்ணமூர்த்தி! 2

உண்மையில் இந்தப் புத்தக விமரிசனம் எழுத ஆரம்பிக்கையில் வரவேற்பு இருக்குமானு யோசனையோடேயே இருந்தேன். ஆனாலும் பலரும் படித்திருப்பது தெரிய வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஆன ஜவகர்லால் நேருவிடம் ஆரம்பித்துக் கடைசியாய் இப்போது திரு மோதி வரை உள்ள பிரதமர்களைப் பார்த்தவர் திரு கிருஷ்ணமூர்த்தி. இதில் அவர் திரு ஜவகர்லால் நேருவின் நம்பிக்கையை மிக இளம் வயதிலேயே பெற்றதில் ஆரம்பித்துப் படிப்படியாகத் திருமதி இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரின் நம்பிக்கையையும் பெற்றுப் பல உயர் பதவிகளைத் தொழில் துறையில் அலங்கரித்ததோடு அல்லாமல் தன் பதவிகள் மூலம் அந்தத் தொழில்கள் எல்லாமே   பல வழிகளிலும் முன்னேற்றவும் அரும்பாடு பட்டிருக்கிறார். ராஜீவுக்குப் பின்னர் வந்த நரசிம்மராவின் ஆட்சியில் தான் அவருக்குச் சற்றே பின்னடைவு! ஆனால் அப்போது சந்தித்த ஒரு ஜோதிடரின் சூசகமான வார்த்தைகளால் தான் அவரால் கருவிலி கோயிலை நினைவு கூர்ந்து அதன் திருப்பணிகளைச் செய்ய முடிந்தது.

கருவிலியைப் பூர்விகமாய்க் கொண்ட திரு கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தின் வளம் க்ஷீணித்துப் போனதால் 1930 ஆம் வருடம் கருவிலியை விட்டுக் கிளம்பிச் சென்னைக்குக் குடும்பத்தோடு இடம் பெயர்ந்திருக்கிறார். அப்போது அவருக்கு ஐந்து வயது தான். சென்னையில் தொழில் தொடங்க இருந்த தந்தையாருக்குக் குடும்பத்தைப் பேணுவது கஷ்டம் என்பதால் கும்பகோணத்துக்கு அருகில் இருந்த குத்தாலம் என்னும் ஊரில் மனைவி, குழந்தைகளை விட்டு வைத்திருக்கிறார். திரு கிருஷ்ணமூர்த்தியின் பதினோராம் வயதில் தாயார் திடீரென இறந்துவிடக் கடைக்குட்டியான அவர் தாயாரின் பிரிவினால் மிகவும் மனம் வருந்தினாலும் படிப்பில் மூழ்கிப் பள்ளி இறுதித் தேர்வைக் குத்தாலம் பள்ளியிலேயே முடித்திருக்கிறார். பின்னர் தன்னை விட இரண்டே வயது மூத்த சகோதரர் வைத்தியநாதனுடன் சென்னையில் இருந்த அனைவருக்கும் பெரிய சகோதரர் ஆன திரு சுப்பிரமணியத்தின் பாதுகாப்பில் வந்து சேர்ந்தார். திரு சுப்பிரமணியம் திருமணம் ஆகி ரயில்வேயில் பணி ஆற்றி வந்தார். இளம் வயதாக இருந்தாலும் குடும்ப சூழ்நிலையால் திரு வைத்தியநாதனும் வேலைக்குச் செல்ல வேண்டியவராக இருந்தார்.

அப்போது தான் ஆரம்பித்த "கல்கி" பத்திரிகையில் சர்க்குலாஷன் மானேஜராகச் சேர்ந்த திரு வைத்தியநாதன் பின்னாட்களில் அதன் சேர்மன் ஆகவே ஆனார். இந்தச் சமயத்தில் தான் திரு கிருஷ்ண மூர்த்தி தொழில் படிப்புப் படிக்க ஆசை கொண்டு பொறியியல் துறையில் டிப்ளமா பட்டம் பெற்றார். அப்போது சென்னை மாநிலத்தின் மின்சாரத் துறையில் தலைமைப் பொறியாளராக இருந்த திரு வி.பி. அப்பாதுரை என்பவரின் கண்களில் திரு கிருஷ்ணமூர்த்தி பட அதன் பின்னர் அவருக்கு எங்கும் எதிலும் ஏறுமுகமே! அப்போது தான் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த புதிது. புதிய திட்டங்களான பெரியாறு, குந்தா போன்ற நீர்மின் திட்டங்கள் எல்லாம் செயல் வடிவம் பெற்ற நேரம். அவற்றைப் பார்வை இட வந்த பிரதமர் திரு ஜவகர்லால் நேருவுக்கு அவற்றை விளக்கிக் கூற வேண்டிய பொறுப்புத் திரு கிருஷ்ணமூர்த்திக்குக் கிட்டியது அவர் செய்த நல்வினையா, இந்த நாடு செய்த நல்வினையா தெரியாது! இந்நிகழ்ச்சியின் மூலம் பெரும் பாராட்டுப் பெற்ற திரு கிருஷ்ணமூர்த்திக்கு விரைவில் பதவி உயர்வு கிட்டவும் திரு அப்பாதுரை பரிந்து உரைத்திருக்கிறார்.  ஆனால் அது செயல் வடிவம் பெறவில்லை. பரிந்துரை திரும்ப வந்து விட்டது. என்றாலும் மனம் கலங்காத திரு கிருஷ்ண மூர்த்தி மாநில அரசுத் துறையில் இருந்து மத்திய அரசுத் துறைக்குச் செல்ல வேண்டிய முயற்சிகளை எடுத்து இருக்கிறார். ஆனால் அவை தாற்காலிகப் பணிகளே! ஐந்தாண்டுகள் முடிந்தால் திரும்ப மாநிலப் பணிக்கே வரவேண்டி இருக்கும். என்ன செய்யலாம்!

திரு அப்பாதுரைக்கும் இவரை இழக்க விருப்பம் இல்லை. ஆனாலும் இவர் தைரியமாக விண்ணப்பித்துப் பரிந்துரைக்கும்படி வேண்டப் பரிந்துரையின் பேரில் இவர் அப்போது சென்ட்ரல் இஞ்சினிரிங் செர்விஸ் என்னும் பெயரில் இருந்த அலுவலகத்திற்குப் பணியை ஏற்கச் செல்ல வேண்டும். ஆனால் தமிழக அரசு இவரை விடுவிக்கவில்லை. அங்கே வேலை முடிந்ததும் மீண்டும் தமிழக அரசுப்பணிக்கே வர வேண்டும் என்னும் நிபந்தனையுடன் இவரை அனுப்பி வைத்தது. முதல் முறையாக தில்லி சென்ற கிருஷ்ண மூர்த்தி அங்கே திட்டக் கமிஷனில் இயற்கை வளங்கள் குறித்த ஆய்வுப் பிரிவில் ஆய்வுகள் செய்யும் ஓர் அதிகாரியாகச் சேர்ந்தார். 

31 comments:

 1. அரிய தகவல்கள் இன்னும் தொடர்ந்து வரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்ஜி!

   Delete
 2. திரு கிருஷ்ண மூர்த்தி எழுதி இருந்த ஆங்கில நூல் MEMOIRS திரு செல்லப்பா கொடுத்து படித்திருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. கேள்விப் பட்டேன் ஐயா, இந்தப் புத்தகத்தின் முன்னுரையிலும் அது குறிப்பிடப்பட்டுள்ளது.

   Delete
 3. சுவாரஸ்யமான தகவல்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஶ்ரீராம்

   Delete
 4. மேலும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றேன்...

  ReplyDelete
 5. சிறப்பான தகவல்கள். மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

  ReplyDelete
 6. தொடர்கிறேன்.

  ReplyDelete
 7. கீசாக்காவுக்கு மட்டும் இப்படி எல்லாம் எழுத எப்படித்தான் நேரம் கிடைக்கிறதோ?:)..

  ReplyDelete
  Replies
  1. அதிரடி, கண்ணு வைக்காதீங்க. புத்தக அலமாரியை இன்னும் ஒழிக்கலை! சோம்பேறியா இருக்கேனேனு ம.சா. சொல்லிட்டே இருக்கு! நீங்க வேறே! :))))))

   Delete
 8. அற்புதமான தகவல்கள். ஆர்வமாக இருக்கிறது.
  தொடர்ந்து மேலும் தெரிந்து கொள்ள வேண்டூம்.
  கீதாமா.

  ReplyDelete
 9. ஆஹா !நிறைய தகவல்கள் .
  அப்புறம் ரொம்ப நாளா கேக்கணும்னு நினைச்சது எல்லாரும் ப்ரைமினிஸ்டரை மோடி னு சொல்றாங்கா ஆன்னா நீங்க மட்டும் மோதி னு சொல்றீங்க ..வட இந்தியர் ஆக்ஸன்ட் //தி // யா ?

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், எனக்குத் தெரிஞ்சு தமிழ்நாட்டில் தமிழர்கள் மட்டுமே "மோடி" எனச் சொல்கின்றனர். எழுதுகின்றனர். உச்சரிப்பு "மோதி" தான். எழுதும்போதும் மோதி (Modhi) என்றே எழுதணும். மோடி வேறே! :))))) மோதி குஜராத், மோடி பிஹார் என நினைக்கிறேன். பிரதமர் "மோதி" என்றே சொல்லப் பட வேண்டும்.

   Delete
  2. ஏஞ்சல் கீதாக்கா சொன்னது போல மோதி தான் சரி. தமிழ்நாட்டில் மட்டுமே மோடி என்று சொல்கின்றனர். ஆங்கிலத்தில் மோடி என்று எழுதுவதால் இருக்கலாம்....

   கீதா

   Delete
 10. அறியாத நபர். சுவாரசியமான விவரங்கள். நேருவிலிருந்து மோடி வரையில்.. வாவ்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அப்பாதுரை, ஆமாம், அவருடைய பல யோசனைகளை மோதி இப்போது செயல்படுத்தி வருவதாகச் சொல்லி இருக்கார்.

   Delete
 11. அறியாத நபரைப் பற்றிய அரிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 12. படிக்க இண்டெரெஸ்டிங் ஆக இருக்கு. இதை எப்படி மிஸ் செய்தேன் என்று தெரியலை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. வருகைக்கு நன்னி!

   Delete
 13. தெரியாத தகவல்கள்.
  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அரசு!

   Delete
 14. துளசி: ராயசெல்லாப்பா சார் புத்தகம் கொடுத்திருக்கிறார். சென்னையில் இருக்கிறது. இங்கு வந்த பின் தான் வாசிக்க முடியும். மிகவும் ஸ்வாரஸ்யமான தகவல்கள். ஒரு ரோல்மாடல் என்றும் தோன்றுகிறது.

  கீதா: அக்கா நான் இப்புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்த நிலையில் உங்கள் பதிவுகள்...என்றாலும் நான் வாசித்த பின் இப்படி உங்களைப் போன்று எழுதுவேனா எழுத முடியுமா என்று தெரியவில்லை. அழகா சொல்றீங்க...

  நான் வாஆஆஆஆஆஆஆஆஆசித்து முடித்து துளசிக்கும் அனுப்பிக் கொடுக்க வேண்டும்....

  ReplyDelete
  Replies
  1. நன்றி. தி/கீதா, செல்லப்பா சாரை நீங்கள் அறிவீர்களா? இந்தப் புத்தகம் வந்ததே எனக்குத் தெரியாது. திடீர்னு தான் கிருஷ்ணமூர்த்தியின் ஒன்றுவிட்ட சகோதரர் கண்ணன் வாட்சப்பில் செய்தி அனுப்பி இருந்தார், புத்தகம் கூரியரில் அனுப்பி இருப்பதாக! அதன் பின்னரே செல்லப்பா சாரின் பதிவில் பார்த்தேன்., அங்கேயும் சொல்லி இருந்தார்.

   Delete