எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 27, 2018

பெரிய ரங்குவுக்கு இன்னிக்குத் தைலக்காப்பு!

ஶ்ரீரங்கம் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்!

நேத்திக்குப் பெரிய ரங்குவைப் பார்க்கப்போனோம். முந்தாநாளே போயிருக்கணும். மருத்துவமனையிலேயே நேரம் ஆயிடுச்சு! அப்புறமா வீட்டுக்கு வந்துட்டுக் கிளம்ப அலுப்பு! இன்னிக்கு ரங்குவுக்கு ஜேஷ்டாபிஷேஹம். ஜேஷ்டாபிஷேஹம் குறிச்ச தகவல்களை அறிய எல்லோரும் இங்கே போங்க! ஹெஹெஹெ, ஒரு விளம்பரந்தேன்!

தலைப்பைப் பார்த்துட்டு யோசிக்க வேண்டாம். உள்ளே எழுதி இருப்பது ஜேஷ்டாபிஷேஹம் பத்தித் தான். தலைப்பை மாத்தி இருக்கணும்னு ஏற்கெனவே நெ.த. போட்டு வாங்கிட்டார். என்றாலும் அந்த லிங்கில் ஜேஷ்டாபிஷேஹம் பத்தின குறிப்புகள் இருக்கும். இன்னிக்குக் கோயிலில் தரிசன சேவை இருக்காது. நாளையிலிருந்து பெரிய ரங்குவின் பாத தரிசனம் 48 நாட்களுக்குக் கிடைக்காது. ஆகவே நேத்திக்கே பார்க்கப் போயிட்டோம். எப்போவும் போல் முதல்லே தாயாரைப் பார்த்துட்டுப் பின்னர் தான் ரங்குவைப் பார்க்கப் போனோம். தாயார் சந்நிதியிலேயே கூட்டம் இருந்தது. ஆனால் நாங்க கட்டண சேவைக்குப் போகலை.  கட்டண சேவைக்குப் போயிருந்தாலும் நேரம் ஆகி இருக்கும். தாயாரைப் பார்த்துக் கொண்டு பின்னர் பிரசாதமாகக் கொடுத்த மஞ்சள், மல்லிகைப் பூப் பெற்றுக் கொண்டு சடாரியும் சாதித்த பின்னர் வெளியே வந்தோம்.

அங்கேயே சற்று நேரம் புஷ்கரிணி வாயிலில் காத்திருந்ததும் ஐந்து நிமிடத்தில் பாட்டரி கார் வந்தது. அதில் ஆர்யபடாள் வாயிலுக்குப் போனோம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! வாயிலுக்கு நேரடியாகப் போய்க் கொண்டிருந்ததைத் தடுத்து/ இல்லை இல்லை வந்த வழியை அடைத்துக் கம்பி கட்டி விட்டிருந்தாங்க! கோயிலில் ஒண்ணு அறங்காவலர் புதுசா வந்திருக்கணும். இல்லைனா கோவில் அதிகாரி புதுசா மாறி இருக்கணும்.  ஏன்னா இப்போ ஒண்ணும் பெரிய திருவிழா வரலை! அப்போத் தான் கூட்டத்தை அனுசரித்து எல்லாத்தையும் மாத்துவாங்க. இப்போ ஏன் மாத்தினாங்கனு தெரியலை! அதோட அந்தக் கம்பி கட்டுவதற்கு இடைவெளி ஒருத்தர் நிற்கப் போதுமானதாகவும் இருக்காது. நல்லவேளையா நான் யானை மாதிரி இல்லையோ பிழைச்சேன். கொஞ்சம் குண்டா இருக்கிறவங்க ஒருக்களிச்ச மாதிரித் தான் நுழையணும்! :( 

உள்ளே போனதும் இலவச சேவையில் நிறைய நேரம் நிற்கணும்ங்கறதாலே 50 ரூ சேவைக்குச் சீட்டு வாங்கப் போனால் அதுக்கும் உள்ளே கம்பி கட்டிச் சுத்தோ சுத்துனு சுத்திட்டுப் போய்ச் சீட்டு வாங்கிட்டு உள்ளே போனோம்.அங்கே பிரகாரத்தில் யாருமே இல்லைனு வேகமாப் போனால் சந்தனு மண்டபத்தில் மக்கள் கூட்டம்! நாங்க கடைசிப் படிகளில் நின்றோம். மேலே ஏறவே அரை மணி ஆச்சு! கூட்டம் மெதுவா, மெதுவா நகர்ந்தது. சுமார் முக்கால் மணி நேரத்தில் ரங்குவைப் பார்க்க உள்ளே போனோம். நம்பெருமாள் சிவப்புக் கலர் விருட்சிப் பூக்கிரீடமும் மல்லிகைப் பூக்கிரீடமும் வைச்சுக் கொண்டு அழகாய்க் காட்சி அளித்தார். 

ஶ்ரீரங்கம் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்!

பெரிய பெருமாள் இன்றைய தைலைக்காப்புக்குத் தயாராகப் படுத்திருந்தார். முக தரிசனம் ஆகும் இடத்தில் கருவறையிலேயே சடாரி சாதித்தார்கள். ஆஹா! முதல்முறையாக! பாத தரிசனம் ஆகும் இடத்தில் துளசிப் பிரசாதம் கொடுக்கப்பட்டது. இம்மாதிரிக் கருவறையிலேயே கொடுத்தது எனக்குத் தெரிந்து முதல் முறை. ஒருவேளை ஒவ்வொரு வருஷமும் ஜேஷ்டாபிஷேஹத்துக்கு முதல் நாள் அப்படிக் கொடுத்திருக்கலாம். இந்த வருஷம் தான் முதல் நாள் போனதால் புதுசா இருந்தது. நம்பெருமாளைக் குசலம் விசாரிச்சுட்டுப் பெருமாளிடம் திரும்பிப் போகற வழியைக் கொஞ்சம் நல்லபடியாத் திறந்து வைக்கச் சொல்லுமாறு வேண்டுகோள் விடுத்துவிட்டு வெளியே வந்தோம். 

எதிரே அர்ஜுன மண்டபம், கிளி மண்டபம் போகும் படிக்கட்டுகள் திறந்திருக்க அந்த வழியாப் போகலாமோனு பார்த்தால் கிளிமண்டபத்திலிருந்து அந்தப் பக்கம் இறங்கும் இடத்தில் வெளியே போகும் வழி அடைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லவே விஷ்வக்சேனர் சந்நிதி வழியாகவே போனோம். நல்ல வேளையாத் தொண்டைமான் மேடு திறந்திருக்கவே படிகளில் ஏறி வெளியே வந்து மீண்டும் பாட்டரி காரில் தாயார் சந்நிதி வந்து வடக்கு வாசல் வழியாக வீடு வந்து சேர்ந்தோம்.

37 comments:

  1. ஆகா...

    தங்கள் வாயிலாக அரங்கனின் அழகு தரிசனம்!...
    யார்க்கெல்லாம் வாய்க்கும் இப்படி!..

    அரங்கன் வாழ்க..
    அவன் அன்புத் துணைவி வாழ்க..
    அரங்கன் தன் பேர் வாழ்க..
    அவன் தன் ஊர் வாழ்க..
    அரங்கன் அருளால்
    அகிலம் முற்றும் வாழ்க.. வாழ்க!...

    ReplyDelete
    Replies
    1. நன்னி, நன்னி சகோதரரே! நீங்களும் இங்கே வந்து தரிசனம் பெற்றுச் சென்றிருக்கலாம். வரலை! இனியாவது வாங்க! நாங்க இருக்கோம்! :)))))

      Delete
  2. ஸ்ரீரங்கத்தில் வீடு இருப்பதால் கோவிலின் எல்லா விசேஷங்களும் ஒன்று விடாமல் தரிசித்துக் கழிக்கிறீர்கள் என்று தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், கூட்டம் இருந்தால் போகவே மாட்டேன். அடுத்து 48 நாட்கள் அரங்கனின் பாத தரிசனம் கிடைக்காது என்பதால் நேற்றுப் போனோம். இரண்டரை மணிக்கே கிளம்பியதால் நாலரைக்குள் திரும்ப முடிஞ்சது. அரை மணி தாமதம் ஆகி இருந்தால் கூடக் கூட்டம் இன்னும் அதிகம் ஆகி இருக்கும். :)

      Delete
  3. ஆஸ்பத்திரி சோதனை முடிவுகள் என்ன சொல்கின்றன?

    ReplyDelete
    Replies
    1. நான் பாஸ்! குறைந்த மதிப்பெண்களோடு. மாமாவுக்கு இன்னும் குறையணும் என்றாலும் சராசரிக்கு வந்துட்டு இருக்கார். முக்கியமா என்னோட மூட்டு வலிக்கு ஒரு தீர்வு கிடைச்சிருக்கு. இப்போக் கொஞ்சம் நடப்பது சிரமம் இல்லாமல் இருக்கு அரங்கன் தயவில்!

      Delete
    2. கேட்க நினைத்தேன் வாசிக்கும் போது "ஆத்தா நான் பாஸாகிட்டேன்" அப்படினு அக்கா ஃபர்ஸ்ட் ஸீன்லயே சொல்லிட்டாங்க...

      அக்கா உங்களுக்கு 95 மார்க் கொடுத்தாச்சு!!!

      கீதா

      Delete
  4. என்னாதூஊஊஊஊ பெரிய ரங்குவுக்கு தைலத்தில காப்போ அவ்வ்வ்வ்வ்:))..

    எங்களிடத்தில் எண்ணெய்க்காப்பு எனத்தான் சொல்லுவோம்.

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு எண்ணெயெல்லாம் ஒத்துக்காது. சளி பிடிக்கும். குளிர்காலத்திலே ஸ்வெட்டர் இல்லாம வெளியே வரமாட்டார்! :) அதிலும் பெரிய ரங்கு! அவருக்குச் சாம்பிராணித் தைலம், மூலிகைத் தைலம், பச்சைக்கற்பூரம் போன்றவை கலந்து தான் காப்பு இடுவார்கள். எண்ணெயெல்லாம் கிடையாது! எண்ணெய்க் காப்பு வேறே! இது வேறே! எண்ணெய்க் காப்பு சார்த்தினா அபிஷேஹம் பண்ணணும். இங்கே அபிஷேஹம் இல்லை.

      Delete
  5. அரங்கனை இன்னும் இரண்டு மாதங்கள் கழித்துத்தான் சேவிக்க முயற்சிக்கணும்.

    உங்களுக்கு அடிக்கடி தரிசனம் தந்துவிடுகிறான்.

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கண்ணு படப் போகுதையா நெல்லைத் தமிழரே! :))))

      Delete
    2. கண்ணு போட்டாச்சு கீசா மேடம். இப்படி மின்னல் வேகத்தில் பின்னூட்டத்தை வெளியிட்டு அதுக்கு மறுமொழி கொடுக்கறீங்களே.... ஜேஷ்டாபிஷேகத்துக்கு வந்துள்ள மக்களை, திருவரங்கத்தில் கடுமையான மழையில் தவிக்கவைக்க உங்களுக்கு ஆசையா?

      Delete
    3. ஹாஹாஹா, இங்கே மழை பெய்தாலும்!!!!!!!!!!! :) எனக்குத் தெரிந்து சென்னை வெள்ளம் வந்த வருடம் இரண்டு நாட்கள் கொஞ்சம் விட்டு விட்டுப்பெரிய மழையாகப் பெய்தது!

      Delete
    4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கண்ணு படப் போகுதையா நெல்லைத் தமிழரே! :))))//

      ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம், அதிரா, ஏஞ்சல் நோட் திஸ்....அக்காவுக்குச் சின்ன கவுண்டர் பாட்டெல்லாம் தெரிஞ்சுருக்கு....

      கீதா

      Delete
    5. நீங்க வேறே கீதா, சின்னக் கவுண்டர் படத்தை தண்டனை மாதிரிப் பார்த்திருக்கேன். :))))) ஆனாலும் ரொம்பவே ஓவர்!

      Delete
  6. பல முறை சென்று தரிசிக்க முடியாமல் திரும்பியதுண்டு

    ReplyDelete
    Replies
    1. வெளி ஊரில் இருந்து வரவங்க நேரம் தெரிஞ்சுக்கணும். காலை ஏழரை மணியிலிருந்து மதியம் பனிரண்டரை வரை சாதாரண நாட்களில் பார்க்கலாம். திருவிழா, விசேஷ நாட்களில் நேரம் மாறும். கோயில் அலுவலகத்தில் கேட்டால் சொல்லுவார்கள். மத்தியானம் ஒன்றரை மணியில் இருந்து சாயங்காலம் ஐந்தரை வரை பார்க்கலாம். ஐந்தரைக்குத் திரை போட்டால் திரும்ப ஏழரைக்குத் தான் தரிசன சேவை! நான் அந்த நேரத்தில் போனதில்லை. காலையும் ஒன்பது ஒன்பதரை மணிக்குத் திரை போடுவதாகச் சொல்லிக் கேள்வி. என்றாலும் அதிகம் நேரம் ஆகாது. மதியம் இரண்டரைக்குச் சாதாரண நாட்களில் போனால் நல்ல தரிசனம் கிடைக்கும். ஏற்கெனவே இதை எழுதி இருக்கேன். :))))

      Delete
    2. நான் இதுவரை அரங்கனின் பிரசாதம்தான் வாங்கியதில்லை. அதுக்கு உதவுங்க (ஐடியா கொடுத்து) கிசா மேடம்.

      Delete
    3. பிரசாதக்கடைகள் இருக்கே! அங்கேயும் இப்போ சூடாக் கொடுக்க ஆரம்பிச்சாச்சு! நேத்திக்குத் தயார் சந்நிதிப்பிரசாதக் கடையில் தோசை சூடாக வந்திருந்தது! ஆனால் ஒரிஜினல் இல்லையே! முன்னெல்லாம் பட்டாசாரியார்கள் கூடையுடன் உட்கார்ந்திருப்பாங்க! இப்போது அதைத் தடை செய்திருக்காங்கனு நினைக்கிறேன். எதுக்கும் விசாரித்துச் சொல்றேன்.

      Delete
    4. வைகுண்ட ஏகாதசி சமயங்கள் பிரசாதக் கடைகள் அதிகமா இருக்கும். அங்கே அவ்வப்போது சூடாக தோசை, அப்பம், செல்வரப்பம், சம்பார தோசை போன்றவை வரும். வாங்கி இருக்கோம். :)))))

      Delete
    5. நெல்லைத் தமிழரே, நேத்திக்கு வந்தவங்க கோயிலோடு சம்பந்தப்பட்டவங்களோட உறவு. அவங்க மூலமா இப்போக் காலை விஸ்வரூப தரிசனம் நிறுத்தியாச்சு எனவும், மாலை, மதியம் பட்டாசாரியார்களால் கொடுக்கப்பட்ட பிரசாதங்கள் விற்பனை/விநியோகமும் தடை செய்யப்பட்டிருப்பதாகவும் கேள்வி. மதியம் தரிசனம் முடிஞ்சு வரும்போது கொடுத்து வந்த அதிரசப் பிரசாதம் விநியோகமும் நிறுத்திட்டாங்களாம். இவை எல்லாம் இப்போக் கும்பாபிஷேஹம் ஆனதுமே கடந்த 2 வருடங்களாக நிறுத்தி இருப்பதாகச் சொன்னார்கள். ஆக நீங்க பிரசாதம் வாங்கிச் சாப்பிடணும்னா மடப்பள்ளியில் தெரிஞ்சவங்க இருக்கணும். இல்லைனா முக்கிய பட்டர்கள் யாரையானும் தெரிஞ்சுக்கணும். இப்போப் பிரசாதக் கடைகள் மூலம் விற்பனை ஒன்று மட்டுமே நடந்து வருகிறது.

      Delete
  7. கிளி மண்டபம்//
    இதுக்கு எதனால் இப்பெயர் ?

    அக்கா உங்களுக்கு ரெங்கநாதர் பெஸ்ட் ப்ரண்டு போலில்லையா :) அதான் டபுள் சந்தோஷமா இருக்கீங்க பதிவில் தெரியுது :)



    ReplyDelete
    Replies
    1. பலகாலம் பூமிக்குள் புதைந்திருந்த இந்தக் கோயில் கிளி ஒன்றினால் கண்டுபிடிக்கப்பட்டதாய்ச் சொல்வார்கள். இது குறித்து ஸ்ரீரங்கம் வரலாற்றில் எழுதி இருக்கேன். பின்னர் தேடி எடுத்துப் போடுகிறேன். அந்தக் கிளி இருந்த இடமாகச் சொல்லப்படும் இடத்தில் சோழ அரசன் ஒரு மண்டபம் எழுப்பிக் கிளி மண்டபம் எனப் பெயர் வைத்ததாகச் சொல்வார்கள்.

      Delete
    2. எல்லோருமே நண்பர்கள் தான். என்னோட சந்தோஷத்துக்குக் காரணம் இம்முறை கோயில் சென்று வந்ததும் உடல் வலி, கால்வலி, முக்கியமாய் மூட்டுக்கள் அசைக்க முடியாமல் இறுகிப் போகும், அதெல்லாம் இல்லை. அதான் சந்தோஷம்!

      Delete
    3. //சென்று வந்ததும் உடல் வலி, கால்வலி, முக்கியமாய் மூட்டுக்கள் அசைக்க முடியாமல் இறுகிப் போகும், அதெல்லாம் இல்லை. அதான் சந்தோஷம்!//
      ஆஹா !

      //
      பின்னர் தேடி எடுத்துப் போடுகிறேன்.//
      thanks போடுங்க.

      Delete
    4. விபீஷணன் விக்ரஹத்தை எடுக்க முடியாமல் இலங்கை திரும்பியதையும் நடந்த விபரங்களையும் அப்போது சோழ நாட்டை ஆண்டு வந்த தர்ம வர்மா என்னும் மன்னன் தெரிந்து கொள்கிறான். அரங்கனுக்கு அங்கேயே ஒரு கோயில் கட்டி வழிபட்டான். நாளாவட்டத்தில் தர்மவர்மா காலத்திற்குப் பின்னர் காவிரியில் ஏற்பட்ட அதீத வெள்ளம் காரணமாக ஸ்ரீரங்கம் கோயிலின் கோபுர உச்சி வரை மண்மேடிட்டுக் காடுகள் ஏற்பட்டுக் கோயில் காட்டினடியில் மறைந்து போனது. அவன் காலத்திற்குப் பின்னர் வந்த சோழன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாட வந்தபோது ஒரு மரத்தினடியில் சற்று இளைப்பாற அமர்ந்தான். அப்போது திடீரென ஸ்ரீரங்கநாதர் குறித்தும், அவரின் கோயில் குறித்தும் யாரோ ஸ்லோகமாய்ச் சொல்வது மன்னன் காதுகளில் விழுந்தது. சுற்றும் முற்றும் பார்த்த மன்னன் மரத்தின் மேலே இருந்த ஒரு கிளி அது என அறிந்து கொண்டான். உடனேயே மன்னன் தன் ஆட்களை அழைத்து அங்கே தோண்டிப் பார்க்கச் சொன்னான். எதுவும் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் சென்ற மன்னன் கனவில் அன்றிரவு ஸ்ரீரங்கநாதரே தோன்றித் தாம் இருக்குமிடத்தைக் காட்டியருளினார்.



      மன்னனும் காட்டை அழித்தான். மணலை நீக்கினான். கோயிலும், அதன் பிரகாரங்களோடு புதைந்திருப்பதும், ஸ்ரீரங்க விமானமும்,ஸ்ரீரங்கநாதரின் அர்ச்சா விக்ரஹமும் கிடைத்தது. கோயிலை முன்னிருந்தவாறே திருத்தி அமைத்தான். தன்னுடைய நினவாகக் கிளி மண்டபத்தைக் கட்டினான். கிளியின் மூலம் இறைவன் இருக்குமிடம் தெரிந்ததால் கிளிச்சோழன் என்ற பட்டப் பெயரையும் பெற்றான்.

      Delete
    5. ஏஞ்சல், கிளி மண்டபம் பெயர்க்காரணம் போட்டுட்டேன். நீங்க தான் இன்னும் பார்க்கலை! :)

      Delete
  8. துளசி: இதே போன்று நல்ல தரிசனம் உங்களுக்குக் கிடைத்திட அந்த ரங்கு அருள்புரியட்டும்!

    கீதா: ஓ! இப்ப உள்ள பேட்டரி கார் எல்லாம் விடறாங்களா. நான் சென்று பல வருடங்களாயிற்று. என் மாமாவும் இப்போது அங்கு இல்லை இங்கு சென்னைக்கு வந்துவிட்டார்கள் பேரன் படிப்பு என்று. நல்ல தரிசனம் அக்கா...தாயாரையே உங்களுக்குச் சுத்திப் போடச் சொல்றேன்!!!!! (நெத...!!!!)

    அங்கு இருக்கும் கடைகள் வேடிக்கை பார்க்க எனக்கு ரொம்பவும் பிடிக்கும். கலர்ஃபுல் கடைகள். பாத்திரக் கடைகள் குறிப்பாக தோசைக்கல் வாணலி என்று ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசிதரன். தி/கீதா, பாட்டரி கார் பத்து வருஷங்களுக்கும் மேலாக இருக்கிறது. ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியிலேயே இங்கே அதெல்லாம் கொண்டு வந்துட்டாங்க! நாங்களே கடந்த ஏழு வருஷங்களாகப் பயன்படுத்திட்டு இருக்கோமே!

      Delete
    2. தி/கீதா, இப்போச் சில கடைகளை எடுக்கச் சொல்லிட்டாங்க. குறிப்பாக ஒன்றிரண்டு கடைகளே இருக்கு! ஆனால் அவற்றிலும் தோசைக்கல், வாணலி, கல்சட்டி, கல் உரல், அம்மி போன்றவை கிடைக்கின்றன. :)))))

      Delete
  9. ரங்கனின் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
    பாட்டரி கார் இருப்பது மகிழ்ச்சி.
    நாங்கள் ரங்கனை தரிசனம் செய்து ஏழு, எட்டு வருடம் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. பாட்டரி கார் சுமார் பத்து வருஷங்களாக இருக்குனு நினைக்கிறேன் கோமதி அரசு! வாங்க ஶ்ரீரங்கத்துக்கு ரங்கனை தரிசனம் செய்ய! அப்படியே எங்களையும் தரிசனம் செய்துட்டுப் போகலாம். :)))))

      Delete
  10. வணக்கம் சகோதரி

    ஸ்ரீரங்கம்.. தங்கள் பதிவின் மூலம் அருமையான தரிசனம் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். கோவிலைப்பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். வாழ்நாளில் இது வரை ஒருதடவை ரங்கனை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது
    எவ்வளவு வருடங்களுக்கு முன் என்பது நினைவில்லை. மீண்டும் ரங்கனை தரிசிக்க வேண்டுமென சொல்லிக் கொண்டேயிருக்கிறேன். அவன் எப்போது என் ஆவலை தீர்த்து வைப்பானோ தெரியவில்லை. தங்களால் தரிசனம் கிடைத்தமைக்கு நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா ஹரிஹரன், ஶ்ரீரங்கம் பற்றி மேலதிகத் தகவல்களுக்கு இந்த வலைப்பக்கத்திலேயே காணப்படும் ஆன்மிகப் பயணம் பதிவின் சுட்டியை அழுத்தி அங்கே போய்த் தெரிந்து கொள்ளலாம். விரைவில் உங்களுக்கு அரங்கன் தரிசனம் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.

      Delete
  11. உங்கள் வழியாக ரங்கன் என்னை வந்தடைகிறான். மிக நன்றி கீதா மா.
    இன்னும் நிறைய தரிசனம் கிடைக்கட்டும்.
    கை கால் வலி இல்லாமல் இருக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. இப்போக் கொஞ்சம் கை, கால் வலி எல்லாம் தேவலை! வீட்டுக்குள்ளேயே நடக்க முடியாமல் இருந்தது! :( எல்லாம் அரங்கன் அருளே!

      Delete