எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 25, 2018

மழை வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட அனுபவம், மீள் பதிவு 3

இனி நாம் பம்பாய் பயணத்தைத் தொடரலாம். ரொம்பப் பேருக்குச் சந்தேகம் வருது, நான் எப்படி அம்மாதிரியான நிலையில் ஆட்டோவில் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு ஏறினேன் என்று. பொதுவாக எங்க வீட்டில் முடிவு எடுப்பது என் கணவர்தான் என்றாலும் அப்போது அவர் இல்லை. நானே முடிவு எடுக்கணும். இங்கே உட்காருவதை விட போரிவிலி போனால் அங்கே போய்ப் பார்க்கலாம் அல்லது ஸ்டேஷனிலேயே வெயிட்டிங் ரூமில் தங்கிக் கொண்டால் மறுநாள் லோக்கல் வண்டியில் அலுவலகம் செல்ல என் மைத்துனரகள் இருவருமோ அல்லது என் ஓரகத்தியோ அல்லது மூவருமோ வருவார்கள். அங்கே வந்துதான் ஆகணும். லோக்கல் வண்டியில் போய்ப் பார்க்கலாம் என்பதும் ஒரு காரணம். ஆனால் இது எல்லாம் வெளியில் சொல்லிக்கலை.

ஆட்டோ டிரைவர் ரொம்பவே நல்லவராக அமைந்தது எங்கள் அதிர்ஷ்டம். பொதுவாய் அங்கே எல்லாம் அவ்வளவு ஏமாற்ற மாட்டார்கள் என்றாலும் இவர் நன்கு படித்தவர். எம்.ஏ. படித்துவிட்டு மேற்கொண்டு ஆராய்ச்சிப் படிப்புப் படித்துக் கொண்டு இருந்தார். வண்டி மலைப் பாதையில் போவதால் என்பெண்ணை முதலில் கம்பிக்குப் பக்கத்திலும், நான் நடுவிலும்
பையனை ஓரத்திலும் உட்காரச் சொல்லிவிட்டுக் கயிறைக் கொடுத்து இறுக்கிப் பிடித்துக் கொள்ளச் சொன்னார். கொண்டை ஊசி வளைவுகளில் ஆட்டோ சக்கரம் கார், வான், பஸ் மாதிரி மெதுவாய்ப் போகாது. கொஞ்சம் வழுக்கும் ஆகவே பிடித்துக் கொள்ளுங்கள் என்று எச்சரித்துக் கொண்டே வந்தார். வழி சரியான வழிதான் என்று எங்கள் கூட வந்தவர்களின் வண்டி முன்னால் போனதில் இருந்து தெரிந்தது. இருந்தாலும் நான் எனக்குத் தெரிந்த ராமநாமாவையும், கந்த சஷ்டி கவசத்தையும் மாறி மாறி சொல்லிக் கொண்டே வந்தேன்.

கொஞ்ச நேரத்தில் வந்து விடும் என்று நினைத்தால் டிரைவர் 21/2 மணி நேரம் ஆகும் என்றார். மலைப்பாதை முடியவே ஒரு மணி நேரம் ஆனது. பிறகும் பாதையில் ஏற்ற இறக்கங்கள். எல்லாம் முடிந்து போரிவிலி வருகிறது என்று டிரைவர் சொல்லும்போது அங்கே ஒரு ட்ராஃபிக் போலீஸ்காரர் வந்து எங்கள் வண்டியையும் முன்னால் போன வண்டியையும் நிறுத்தினார். எங்க ஆட்டோவை நிறுத்தின போலீஸ்காரர் ஆட்டோ டிரைவரிடம் லைசென்ஸ் கேட்டார். லைசென்ஸ் குஜராத் மாநிலத்துக்குள் மட்டுமே ஓட்டக் கூடியதாய் இருந்திருக்கிறது. ஆகவே எங்களை போரிவிலிக்குள் கூட்டிப் போக முடியாது எனத் தெரிவிக்க, நாங்கள் ஸ்டேஷன் பக்கம் இறங்கிக் கொண்டு அனுப்புவதாய்க் கேட்டுக் கொண்டு லெவெல் க்ராஸிங் தாண்டியதும் ஸ்டேஷன் வாசலில் இறங்கிக் கொண்டோம். சாமான்களை இறக்கி நாங்களும் இறங்கி ஆகி விட்டது.

ஒரே ஆட்டோக்களும், டாக்ஸிகளுமாய் நின்று கொண்டிருந்தது. ஆனால் விலாசம் தெரியாமல் இனி என்ன செய்வது? பையன் போய் ஸ்டேஷனில் உள்ளே பார்த்து விட்டு வந்தான். ஸ்டேஷன் வெறிச்சோடிக் கிடந்தது. யாரைக் கூப்பிடுவது எனத் தெரியாமல் நாங்கள் தவித்துக் கொண்டு பொது தொலைபேசியில் போய் விலாசங்களைப் பார்த்தால் உறவினர் யாருடைய விலாசமாவது கிடைக்கும். அவங்க யார் கிட்டேயாவது சொல்லலாமான்னு யோசித்தோம். அதைச் செயல்படுத்தலாமா வேண்டாமான்னு எங்களுக்குள் தீவிர விவாதம். அதுக்குள் என் பெண் பக்கத்தில் ஒரு வண்டி கிளம்புவதற்கு யாரோ வருவதைப் பார்த்து விட்டுக்கொஞ்சம் நகர்ந்து இடம் விட்டவள், "சித்தப்பா, அம்மா, சித்தப்பா, அங்கே பாரு சித்தப்பா" என்று கத்தினாள். நான் திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தால் சற்றுத் தூரத்தில் ஒரு வாடகை வண்டி பால்கருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தது.

நாங்கள் வந்த வண்டி அங்கே நின்றிருக்கும் விஷயம் இவர்களுக்குத் தெரிந்த படியால், நாங்கள் வண்டியிலேயே இருப்போம் என்று நினைத்துப் பால்கர் போய் வண்டியில் அழைத்து வர ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கூடவே இன்னொருத்தரும் அவர் குடும்பத்தை அழைத்து வர அவர்களுடன் கிளம்பி இருக்கிறார். எங்க சத்தம் கேட்டதும், அல்லது உடனே எங்க பையன் ஓடிப் போய்ச் சித்தப்பாவைக் கட்டிப் பிடித்ததும் அவர்களுக்கு அதிர்ச்சி. நிஜமாவே அவங்க யாரும் எதிர்பார்க்கவே இல்லை, நாங்க தனியா இவ்வளவு தூரம் வந்திருக்கோம்னு. கொஞ்ச நேரம் யாருக்கும் பேச்சே வரவில்லை. அப்புறம் ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு,நல்ல வேளை நாங்க இறங்கின கிழக்குப் பகுதி (இறங்கும்போது கிழக்கா, மேற்கா தெரியாத், மேற்கே இறங்கி இருந்தால் பார்த்திருக்க முடியாது.)யிலேயே மச்சினன் வீடும் இருந்தது. வீட்டிற்குப் போய்க் குழந்தையைப் பார்த்த போது நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. குழந்தையும் எங்களைப் பார்த்ததும் தெரிந்த மாதிரி சிரித்தான்.

இந்த மாதிரி நடக்குமா, கதை போல் இருக்கிறதே, நம்ப முடியவில்லையே என்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. ஏன் என்றால் இப்படித்தான் நடந்தது. இதுதான் நிஜம். என்ன தைரியத்தில் கிளம்பி வந்தோம், அங்கே என் மச்சினனை அந்த நேரம் பார்த்து யார் கொண்டு விட்டது? இந்தக் கேள்விக்கு என்னிடம் பதில்? எல்லாம் வல்ல அந்த ஈசன் தான் காரணம். நான் என்றும் என் நண்பராய்க் கருதும் அந்த விநாயகரும்,அவர் தம் அருமைத் தம்பியும் தான் எங்களுக்குத் துணை இருந்து கொண்டு சேர்த்தார். "காக்க, காக்க, கனகவேல் காக்க' என்று எத்தனை முறை சொல்லி இருப்பேனோ தெரியாது. அந்த வெற்றி வடிவேலன் தான் துணை இருந்தான்.

"வெற்றி வடிவேலன் -அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்:
சுற்றி நில்லாதே போ!-பகையே
துள்ளி வருகுது வேல்!"

34 comments:

  1. மிகப் பெரிய அதிசயம் கீதா மா..தங்கள் துணிவும் ,முயற்சியும், கடவுள் நாமாவும் தங்களையும் குழந்தைகளையும் காத்தது..என்றேன்றும் நன்றி. படித்த படபடப்பு ஓயவில்லை.

    ReplyDelete
    Replies
    1. இது நடக்கும்போது (அதாவது காரில் அவர்களைப் பார்க்காதற்கு முன்) எப்படி மனசு விக்கித்துப் போயிருக்கும்? திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று சும்மாவா சொன்னார்கள்?

      Delete
    2. ஆமாம், வல்லி. என்ன தான் துணிவா இருந்தாலும் அவங்களைப் பார்க்கும்வரை படபடப்பும், பயமும் உள்ளூர இருக்கத் தான் செய்தது. இப்போது நினைத்தாலும் எப்படி இப்படி எல்லாம் நடந்தது எனத் தோன்றும். ஆனால் இம்மாதிரி அதிசயங்கள் எனக்கு நிறையவே நடந்திருக்கு!

      Delete
    3. ஆமாம், நெ.த. கீழே இறக்கி விட்டுட்டு ஆட்டோக்காரர் பணத்தை வாங்கிக் கொண்டு போய்விட்டார். அது கிழக்கா, மேற்கா எனத் தெரியாமல் எந்தப் பக்கம் போய்க் கேட்பது என நாங்கள் தவித்த தவிப்பு.ரயில்வேயில் போய் உதவி கேட்கலாம்னு நினைச்சிருந்தோம். அதுக்குள்ளாக மைத்துனரைப் பார்த்துட்டோம்.

      Delete
  2. முடிவில் எல்லாம் நலம்.

    ReplyDelete
  3. >>> வெற்றி வடிவேலன் -அவனுடை
    வீரத்தினைப் புகழ்வோம்:
    சுற்றி நில்லாதே போ!- பகையே
    துள்ளி வருகுது வேல்!.. <<<

    அருமை.. அருமை!...
    ஐயன் அருளுண்டு - என்றும்
    பயமில்லை!...

    சுற்றி நில்லாதே போ!- பகையே
    துள்ளி வருகுது வேல்!..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, இந்த வடிவேல் துணையில்லாமல் வெளியே செல்வதே இல்லை. கூடியவரை கந்த சஷ்டி கவசம் இல்லைனா ராமநாமா சொல்லிக் கொண்டே தான் வெளியே கிளம்புவேன். வழியிலும் சொல்லிக் கொண்டு இருப்பேன்.

      Delete
  4. அதிசயம் ஆனால் உண்மை.... இதைல்லாம் அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும்... எல்லாம் ஈசன் அருள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம், நெ.த. நிச்சயமாய் ஈசன் அருள் இல்லாமல் இதெல்லாம் நடக்கலை!

      Delete
  5. இதைப் படித்தபோது எனக்கு லண்டனில் நடந்த ஒன்று ஞாபகம் வந்தது. ஹோட்டல் பெயர் தெரியும். இரவு 8 மணிதானே, நாமே கையில் கொண்டுபோயிருக்கும் மேப்பை வைத்து அங்கு போயிடலாம் என்று நினைத்து, ஏர்போர்ட்டிலிருந்து அந்த இடத்துக்கு டியூபில் வந்தேன். வெளியில் வரும்போது 8 மணி.. சில்ல்... தூரல்... யாரையும் காணோம். வெளியில் வந்து ரோடுகளைப் பார்த்தால், அடையாளம் எதுவும் இல்லை. 10 நிமிடம் இந்த வழி என்று நினைத்து நடந்தேன். கேட்க கடைகளும் இல்லை, யாரும் இல்லை. ஆனால் எப்போதும்போல் என் வாய் சஹஸ்ரநாமத்தை முணுமுணுத்துக்கொண்டிருந்தது. அப்புறம் ஒரு தெருவில் திரும்பியபோது, கொஞ்சம் தூரத்தில் எதிரே ஒரு கட்டிடத்தில் வெளிச்சத்தைப் பார்த்தேன். கொஞ்சம் மனசுல பயம்தான்...அருகே சென்றபிறகு அதுதான் ஹோட்டல் என்று கண்டுகொண்டேன். ஹோட்டலை அடைந்து அவர்கள், என் ரிசர்வேஷனை உறுதிப்படுத்தியபின்புதான் நிம்மதியாச்சு. இது 2004-2005ல் நடந்தது.

    இப்படி இரவு 8 மணிக்கு ஊர் உறங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இங்கு பெரும்பாலும் 6 மணியோடு எல்லாம் மூடி விடுவார்கள்.. சில சுப்பமார்கட் மட்டும் 24 மணி நேர சேர்விஸ்:)).. சாப்பாட்டுக் கடைகள் மட்டுமே 12 மணிவரை திறந்திருக்கும்.

      Delete
    2. நெ.த. வெளிநாடுகளுக்கெல்லாம் அதிகம் போனதில்லையே! அம்பேரிக்கா தான்! அங்கே தனியே போகவே முடியாது! ஆகவே பயமில்லை. காட்மாண்டு, கயிலை யாத்திரைக்குக் குழுவோடு போனதால் பயம் தெரியலை!

      Delete
    3. இல்லை கீசா மேடம்... இதுல நான் சொல்றது, ஒரு இக்கட்டுல மாட்டினபிறகு எப்படி நமக்கு வழி கிடைக்கிறது என்பதைத்தான். (நான் கைல மேப்பை வச்சிருந்தேன். ஆனா அந்த மேப்பைப் பார்க்கவே லைட் இல்லை) என் திருமணம், அப்புறம் என் மனைவிக்கு பஹ்ரைன்ல விசா கிடைத்தது, பாரிசில் எனக்கு லூவர் மியூசியம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது அலர்ஜி ஏற்பட்டது, என்பது போன்ற பல நிகழ்வுகள் என் இறை நம்பிக்கையை ரொம்ப ஆழமாகச் செய்தது.

      Delete
    4. ம்ம்ம்ம். நெ.த. எங்க கல்யாணமும் கிட்டத்தட்ட நின்று போனது தான். மாமனாருக்குக் கொஞ்சமும் இஷ்டம் இல்லை. ஆனால் எங்க ஜோசியர் அடிச்சுச் சொன்னார். இவங்க ரெண்டு பேர்தான் என. குஞ்சுலு வந்துடுத்து. மீதி பின்னர்

      Delete
    5. நேத்திக்கு விட்டது! "இவங்க ரெண்டு பேர் தான் கணவன், மனைவியாக முடியும். அநேகமாய் அந்தப் பையரே தேடிக் கொண்டு வருவார்!" என்று சொன்னதோடு அல்லாமல் கல்யாணத் தேதியும் அவரே சொன்னார். அந்தத் தேதி தான் முஹூர்த்தத்துக்குப் பொருந்தும் என எங்க மாமனார் வீட்டிலேயும் பார்த்தாங்க. அவங்களுக்கு இந்தச் செய்தி தெரியாது. பின்னால் நாங்க சொல்லித் தான் தெரியும். பல சமயங்கள் நான் தொலைந்து போய்த் திரும்ப வந்திருக்கேன். முதல் முதல் வேலைக்குச் சென்றபோதும் இப்படித் தான்! அலுவலகம் போக வழி தெரியாமல் கடைசியில் யாரோ கொண்டு விட்டாங்க! அதையும் எழுதி இருக்கேன்! தெய்வம் மனுஷ ரூபேண!

      Delete
  6. // இந்த மாதிரி நடக்குமா, கதை போல் இருக்கிறதே, நம்ப முடியவில்லையே என்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. ஏன் என்றால் இப்படித்தான் நடந்தது. இதுதான் நிஜம்.//
    இப்படிப்பட்ட சம்பவங்கள் என் வாழ்க்கையிலும் நடந்திருக்கின்றன. அதை நாம் பிறரிடம் சொல்லும் பொழுது சிலர் முகத்தில் ஒரு கேலியான பாவம் தோன்றும். அதனால் அதையெல்லாம் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதை நிறுத்தி விட்டேன். சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, இதை எங்க வீட்டிலேயே நான் எனக்கு நடந்ததாகச் சொல்லி இருந்தால் கட்டாயம் அவங்களும் கேலி தான் செய்திருப்பாங்க. இந்த நிகழ்விலே அவங்களும் ஒரு பாத்திரமாகப் பங்கேற்றதால் நம்பித் தான் ஆகணும்! ஆனாலும் எல்லோருக்கும் இன்னும் ஆச்சரியம் தான் எப்படி நடந்தது என! எனக்கு மட்டும் நம்பிக்கை போகவில்லை!

      Delete
    2. @பா.வெ. இதையெல்லாம் பகிர்ந்துகொள்ள வேண்டும். நேரடியாகச் சொல்லவேண்டாம் என்று தோன்றினால், மற்றவரை முன்னிலைப்படுத்தி (என் நெருங்கிய தோழிக்கு நடந்தது என்பதுபோல்) எழுதுங்க. காரணம், எல்லாமே நம் நம்பிக்கையையும் மற்றவர்களின் அனுபவங்கள் மூலம் நமக்குப் பாடத்தையும் கொடுக்கும்.

      என் பசங்க, என் திருமண நிகழ்வைச் சொல்லும்போது, நம்பாம சிரிப்பாங்க, ஆனால் நடந்தது உண்மை என்று எனக்குத் தெரியும். அவங்க இந்த வயசுல நம்பாவிட்டாலும், அவங்களுக்கு அனுபவம் ஏற்படும்போது நம்புவாங்க. எனக்கு பக்தியும், நம்பிக்கையும் வாழ்க்கையில் முக்கியமான அம்சங்கள் என்று தோன்றும். அதுக்காக ஒவ்வொரு பிரச்சனைக்கும் இறைத் தீர்வு நம்மகிட்ட உடனே வரும்னும் எதிர்பார்க்ககூடாது. எப்போ முட்டுச் சந்தில் நின்று திடுக்கிடறோமோ அப்போது உடனடி தீர்வு நிச்சயம்.

      இப்போவும் பலர், மகாபாரதம் கட்டுக்கதை என்று சொல்றதைக் கேட்டிருக்கேன். ஆனால் அதை முழுவதுமாகப் படிக்கிறவங்களுக்குத்தான், பாரதத்தில் அதில் சொல்லும் எல்லா இடங்களும் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டவர்களுக்குத்தான் அது புரியும். இல்லைனா, சிலர் போல எக்குத்தப்பான கேள்விகள் கேட்கவேண்டியதுதான்.

      Delete
    3. பானுமதி, உங்க அனுபவங்களை உங்களோட அனுபவம் என்று சொல்லியே பகிரலாம். எனக்கெல்லாம் நம்பிக்கை உண்டு. இப்போக் கூட நாலைந்து நாட்கள் முன்னர் ஒரு அனுபவம்! நடக்காது என நினைத்த ஒன்று நடந்தே தீர்ந்தது! உண்மையிலேயே அன்று அது நடந்தது எங்களுக்கு ஆச்சரியமே!

      Delete
  7. நெ.த. உங்கள் அனுபவம் சில்லிட வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நெ.த.வின் அனுபவம் புதுமை தான்!

      Delete
  8. //இருந்தாலும் நான் எனக்குத் தெரிந்த ராமநாமாவையும், கந்த சஷ்டி கவசத்தையும் மாறி மாறி சொல்லிக் கொண்டே வந்தேன்.//

    ஹா ஹா ஹா என்னைப்போலவேதான்:))

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, நான் எப்போவுமே சொல்வேனாக்கும்! :))))

      Delete
  9. முடிவு சுபம்...

    //"வெற்றி வடிவேலன் -அவனுடை
    வீரத்தினைப் புகழ்வோம்:
    சுற்றி நில்லாதே போ!-பகையே
    துள்ளி வருகுது வேல்!"
    //
    எனக்கும் மிகப் பிடித்த வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அதிரடி, இந்த வரிகள் யாருக்குப்பிடிக்காமல் இருக்கும்? அனைவருக்கும் பிடித்திருக்கும்.

      Delete
  10. //"சித்தப்பா, அம்மா, சித்தப்பா, அங்கே பாரு சித்தப்பா" என்று கத்தினாள். நான் திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தால் சற்றுத் தூரத்தில் ஒரு வாடகை வண்டி பால்கருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தது.//
    எவ்வளவு மகிழ்ச்சி தரும் குரல் இல்லையா?
    இறைவனின் கருணையால் மேனி சிலிர்த்து இருக்கும், கண்ணில் ஆனந்த கண்ணீர் அரும்பி இருக்கும்.

    மாமனும், மருமகன்களும் நல்லபடியாக மச்சினரை பார்க்க வைத்துவிட்டார்கள்.
    நம்பிக்கை, பக்தி எந்நாளும் வீண் போகது.
    என் கணவர் பாடல் பெற்ற தலங்களுக்கு செல்லும் போது (அப்போது எல்லாம் இவ்வளவு போக்குவரத்து வசதி இல்லாத நேரம்) வழியில் இடையூரு வந்தபோதெல்லாம் வழி துணையாக இறைவன் வந்தார் மனிதரூபமாய் என்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கோமதி! உண்மையில் அந்த விநாடியை அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும். கண் தெரியாமல் இருந்த குருடனுக்குக் கண் கிடைத்தாற்போன்ற மகிழ்ச்சி! தெரியாத ஊர்! எங்கே போவது! அதான் எதுக்கும் இருக்கட்டும்னு ஆட்டோ ஓட்டுநரை ரயில் நிலையத்தில் கொண்டு விடச் சொன்னேன். ஏனெனில் எப்படியும் அலுவலகம் போக இவங்க யாரேனும் வரலாம். இல்லைனாலும் ரயில் நிலையத்தில் தங்கலாம். வயசுப் பொண்ணை வைத்துக் கொண்டு எங்கே தங்குவது?

      Delete
  11. வணக்கம் சகோதரி

    தங்கள் அனுபவம் சிலிர்க்க வைக்கிறது. என்னேரமும் நமக்கு தெய்வம்தான் துணை. "கடவுளை நம்பினோர் கைவிடப் படார்" எனும் வாக்கின்படி கடவுள் இருக்கிறார். எந்தெந்த நேரத்தில் அவர் எந்த ரூபத்தில் வந்து நம்மை இக்கட்டில் மாட்டாமல் காப்பார் என்பது நமக்கே தெரியாது. ஆனால் முழு நம்பிக்கையையும் அவர் மேல் வைக்கும் சமயத்தில் அவர் அருள் நமக்கு கிட்டுமென்பது உண்மை.

    தங்களின் பழைய பதிவுகளை இன்னமும் படிக்கவில்லை. பிறகு படிக்கிறேன். சிறிது நாட்களாக நானும் வலை பக்கம் சரியாக வர இயலவில்லை. மன்னிக்கவும். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, அவங்க அவங்களுக்குப் பல வேலைகள் இருக்கும். ஆகவே முடிஞ்சப்போ வாங்க, வந்து படித்துக் கருத்துச் சொல்லுங்க. பேத்திக்கு உடம்பு சரியில்லைனு சொல்லி இருந்ததைப் பார்த்தேன்.
      எனக்கு இது போல் பல அனுபவங்கள்! ஒவ்வொரு சமயமும் கடைசி நேரத்தில் நல்லபடியாக முடியும்! எங்க பையர் ஒரு சமயம் தொலைந்து போய்க் கிடைத்தார்! அதுவும் என் மாமனார் விடாமல் சஹஸ்ர காயத்ரி சொன்னதன் பலன்!

      Delete
    2. வணக்கம் சகோதரி

      என் பேத்திக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிந்து கொண்டு விசாரித்தற்கு நன்றிகள். தற்சமயம் குணமாகி விட்டாள்.

      தங்கள் பையர் தொலைந்து போய் கிடைத்தார் என்றவுடன் எனக்கு மனம் மிகவும் வேதனையடைந்தது. தங்களுக்கு அந்ந நேரம் எப்படி இருந்திருக்கும் என என்னால் நினைக்கவே முடியவில்லை. அந்த சமயத்தில் கடவுள்தான் உங்களுக்கு உறு துணையாக,பக்க பலமாக இருந்திருக்கிறார் உங்களுடைய மாமனாரின் வடிவத்தில். கடவுளுக்கு மிக்க நன்றி. அவரை மிஞ்சிய சக்தி ஏது?

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.



      Delete
    3. ஆமாம், கமலா, அது ஓர் மோசமான அனுபவமா முதலில் தெரிஞ்சாலும் பின்னர் நினைத்து நினைத்துச் சிரிக்க வைச்சது. ஆனால் உண்மையிலேயே அன்று குலை நடுங்கிப் போய் வீட்டில் எல்லோரும் கவலையுடனும், துக்கத்துடனும் ஒவ்வொரு இடங்களில் தேடிக் கொண்டிருந்தோம்.

      Delete