எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 27, 2018

ரங்குவோட பூச்சாண்டி சேவை! குலோப்ஜாமூனோட "திங்க" வாங்க!


முதல்லே எல்லோரும் குலோப்ஜாமூன் எடுத்துக்குங்க. காரத்துக்குத் தவலை வடை நம்ம எ.பியிலே இருக்கு. முதல்லே இங்கே வந்துட்டுஸ்வீட் எடுத்துண்டு அப்புறமாத் தவலை வடை சாப்பிடப்  போகும்படியாப் பதிவைப் போடணும்னு நினைச்சேன். முடியலை. படமே அப்லோட் ஆகலை. அதோட ஒரே ஓட்டம், பிடி! அதிலே உட்காரவே நேரமே வேறே இல்லை. ராத்திரி குஞ்சுலு வேறே வந்ததா! அப்புறமாப் போய்ப் படுத்துட்டேன். முதல்லே பார்க்கிற ஜாமூன் ஜூன் மாசமோ, ஜூலை மாசமோ பண்ணினது. உருளியிலே பண்ணினேன்.    நான் எந்தப் பாகு வைக்கிறதா இருந்தாலும் வெண்கல உருளியில் தான் வைப்பேன். கீழே உருளியில் நீங்க பார்க்கிற குலோப்ஜாமூன் முன்ன்னாடி பண்ணினது. அதுக்குக் கீழே இருப்பது இப்போ வெள்ளிக்கிழமை பண்ணினது. ஒரு குட்டிப் பயலைப் பார்க்கப் போனேன். அப்போப் பண்ணி எடுத்துண்டு போனது கீழே இருப்பது. இப்போப் பண்ணும்போது அலுமினியம் சட்டியிலே பாகு வைச்சேன். நெ.த. கல்கத்தா அலுமினியம் சட்டியே பார்த்தது இல்லைனாரா, அதான் இந்த முறை அதிலே பண்ணினேன். இதை விடப் பெரிசு எல்லாம் இருந்தது. அவ்வளவு இப்போத் தேவை இல்லை என்பதால் தானம் கொடுத்துட்டேன். 








கல்கத்தா அலுமினியம் சட்டி

ஜாமூன்கள்

ஜாமூன்கள் எல்லாம் காலி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சாப்பிடக் கூடாதுனு ரங்க்ஸ் 144 தடை உத்தரவு. அதையும் மீறி இரண்டு சாப்பிட்டுட்டு மிச்சம் சொந்தக்காரங்களுக்குக் கொடுத்தாச்சு. ஒரு முறை இந்த குலோப் ஜாமூன் பவுடரில் சப்பாத்திக்குத் தொட்டுக்க மலாய் கோஃப்தா பண்ணணும். ஆனால் ஒண்ணு வாங்கினால் ஒண்ணு இலவசம் என்பதால் இன்னொண்ணை என்ன செய்யறது? யோசிக்கணும். ஏதேனும் திப்பிசம் தோணாமலா போகும்! பார்ப்போம். :)


பூச்சாண்டி சேவை!Photo: அங்கோ பாங்க சேவை (பூச்சாண்டி சேவை)


பத்து நாட்களாக ரங்குவைப் பார்க்கப் போகணும்னு சொல்லிட்டிருந்தேன். ஏனெனில் இப்போப் பவித்ரோத்ஸவம் நடக்குது. இது முடிஞ்சு ரங்குவுக்குத் தைலக்காப்பு சார்த்தினாங்கன்னா பின்னர் தீபாவளி வரை திருவடி தரிசனம் கிடைக்காது. ஆகவே ரங்குவைப்பார்க்கணும் என்பதோடு இப்போப் பூச்சாண்டி சேவை என்னும் சிறப்புச் சேவை வேறே. இந்த சேவை பார்த்ததே இல்லை. இது குறித்த விவரங்களுக்குப் படத்தின் அருகே உள்ள சுட்டியைக் க்ளிக் செய்து ஆன்மிகப்பயணம் வலைப்பக்கம் போங்க!  எல்லாம் ஒரு விளம்பரந்தேன்!

இன்னிக்கு காயத்ரி ஜபம் என்பதால் காலையிலே ஆகாரம் ஏதும் எடுத்துக்காமல் நேரடியாப் பத்து மணிக்குச் சாப்பாடு சாப்பிட்டாச்சு. உடனே ரங்குவையும் பார்த்து விசாரிச்சுட்டு வரலாம்னு கிளம்பியாச்சு. வழக்கம் போல் முதல்லே தாயாரைப் பார்த்து உத்தரவு வாங்கிக் கொண்டு வெளியே வந்தோம். நல்லவேளையா பாட்டரி கார் நின்னுட்டு இருந்தது. அங்கே அரங்கன் சந்நிதி நுழைவாயிலுக்குக் கொண்டு விட்டாங்க. மறுபடியும் உள்ளே நுழையும் முக்கிய நுழைவாசலை மூடிட்டுக் கம்பி கட்டி உள்ளே அனுப்பறாங்க! உள்ளே போனதும் கொஞ்சம் கூட்டம் இருந்ததால் கவலையாக இருந்தது. ஆனால் 50 ரூ டிக்கெட்டுக்கு அவ்வளவு கூட்டமில்லை என்பதால் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே போனோம். இங்கேயும் நுழையும் படிக்கட்டுகள் முதல் முதல் ஏழு வருஷங்கள் முன்னாடி போனாப்போல் இரண்டாம் நுழைவாயிலுக்கு அருகே மாத்திட்டாங்க! கொஞ்சம் கூட்டம் இருக்கத் தான் செய்தது. மெதுவாக வேறே நகர்ந்தது.

அரை மணி நேரம் நின்றிருப்போம். அரங்கன் சந்நிதி வந்தது. வழக்கம்போல் போறச்சேயே நம்பெருமாளைப் பார்த்துட்டேன். அவர் ஏதேதோ மாலைகள் போட்டிருந்தார். பூச்சாண்டிக்கோலத்தில் வித விதமான மாலைகள் உண்டுன்னாலும் இது பார்க்க ருத்திராக்ஷம் மாதிரி தெரிஞ்சது. ரங்க்ஸ் இல்லை சாளக்கிராமம் என்கிறார். எதுனு கேட்டால் அங்கே யாரும் பதில் சொல்லப் போறதில்லை. ஆகவே நிதானமாப் பெரிய ரங்குவை தரிசனம் செய்துக்கலாம்னு இருந்துட்டேன். தரிசனம் செய்தால் என்ன ஆச்சரியம்! பெரிய ரங்குவின் வலக்கண் நம்மையே பார்க்கிறாப்போல்  ! அவர் கண்ணை விழித்துப் பார்க்கிறாப்போல் இருக்கு! தூக்கி வாரிப் போட்டது எனக்கு! அதுவும் கடைக்கண் தரிசனம்! எனக்குத் தான் அப்படினு நினைச்சா நம்ம ரங்க்ஸும் வெளியே வந்ததும் அதையே சொல்றார்.

திருமுடி, திருவடி தரிசனம் கண்ணாரக் கண்டு கொண்டு விடாப்பிடியாகத் துளசி பெற்றுக் கொண்டு வெளியே தீர்த்தம் வாங்கிக் கொண்டுசந்நிதியை விட்டு வெளியே வந்தோம். அங்கே கிளிமண்டபம் இன்று திறந்து இருந்தது. அங்கே தான் பரவாசுதேவரைப் பார்க்க முடியும்.  பல நாட்கள் ஆகிவிட்டதே எனக் கிளி மண்டபம் ஏறிப் பர வாசுதேவரையும் தங்க கோபுரத்தில் தரிசனம் செய்து கொண்டோம்.  முன்னாடி எல்லாம் மேலே கூரையில் உள்ள ஜன்னல் திறந்திருக்கும். பரவாசுதேவரை முழுசாப் பார்க்க முடியும். இப்போ ஜன்னலில் கம்பி போட்டிருக்காங்க. ஆகவே முழுசாப் பார்க்க முடியாது! :( மறுபடி கீழே இறங்கித் தொண்டைமான் மேடு வழியே மேலே ஏறி விமான தரிசனம் மறுபடி செய்து கொண்டு வெளியே வந்தோம்.  இப்போவும் நல்லவேளையா பாட்டரி கார் தயாராக இருக்கவே அதிலே ஏறித் தாயார் சந்நிதிக்கு அருகே வந்து வடக்கு வாசலில் வெளியே வண்டியை விட்ட இடத்தில் இருந்து எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

51 comments:

  1. குலோப்ஜாமூன் போல திவ்ய தரிசனம்...!

    வாழ்த்துகள் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிப்பா!

      Delete
  2. அதென்ன பூச்சாண்டி கோலம்? நான் கேள்விப்பட்டது இல்லை. தீபாவளி வரை தைலக்காப்பு இருக்குமா? ஓ....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஶ்ரீராம், இப்போப் பதினெட்டாம் பெருக்குக்கு மறுநாள் தைலக்காப்பைக் களைந்தார்கள். போன வாரத்தில் இருந்து பூச்சாண்டி சேவை! இந்த வாரம் பவித்ரோத்சவம் முடிஞ்சு மறுபடி தைலக்காப்பு! பூச்சாண்டி சேவை பத்தி நான் குறிப்பிட்டிருக்கும் சுட்டியில் பாருங்க! :) இஃகி, இஃகி!

      Delete
  3. குலோப்ஜாமூன்கள் இரண்டாவது படத்தில் நன்றாய் இருக்கின்றன. யார் அந்த குட்டிப்பையன்? நீங்கள் எண்ணெய் பார்க்க வரவில்லையே....!!

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், முதல் படத்தின் அந்தக் காலா ஜாமூன்கள் நான் எனக்கென்று கொஞ்சம் கூடுதலாகப் பொரித்து எடுத்தேன். :)))) இப்போ பிறருக்குக் கொடுக்கணும் என்பதால் பொன் நிறத்திலேயே எடுத்துட்டேன். :))))) குட்டிப்பயல் 3 மாசம் ஆகிறது. நல்லாச் சிரிக்கிறார். ங்கு, கங்கு என்கிறார். தூக்கி வைச்சுண்டால் கையை விட்டுக் கீழே இறங்க மாட்டேன் என அடம்! :)

      Delete
    2. //நீங்கள் எண்ணெய் பார்க்க வரவில்லையே....!!// ம்ஹூம், எண்ணெய் எல்லாம் பார்க்கலை! :P :P :P :P ஹிஹிஹி, இப்போச் சென்னைப் பயணம் ஏதும் இல்லை! :)

      Delete
    3. ஸ்ரீராம்... எனக்கென்னவோ முதல் குலோப்ஜாமூன் மனசில் ஆசையை வரவழைத்தது. கொஞ்சம் கருமை படர்ந்த பிரவுன் கலர்தான் அழகு. (ஒரே ஒரு குறையா மனசுல தோணினது... உருண்டையா ஸ்மூத்தா வெளிப்பகுதி இல்லை).

      Delete
    4. எனக்கு என்னமோ மாவாவில் பண்ணும்போது மிருதுவாக வராப்போல் இந்த திடீர்த் தயாரிப்புக்களில் வருவதில்லை. அதனால் மேலே பார்க்க வெடிப்புத் தெரிகிறது! :)

      Delete
    5. கீதாக்கா ஹைஃபைவ் எனக்கும் குலாப்ஜாமூன் கொஞ்சம் பொரியணும் அது இன்னும் சுவையாக இருக்கும் போல தோணும்.

      இந்த குலோப் ஜாமூன் பவுடரில் சப்பாத்திக்குத் தொட்டுக்க மலாய் கோஃப்தா பண்ணணும்// அக்கா நன்றாக வரும். நான் செய்திருக்கேன். செமையா இருக்கும் டேஸ்ட்.அதெல்லாம் ஆச்சு 20 வருஷம்...அப்போவே..

      நான் உங்களைப் போலத்தான் வெளியில் வாங்கும் குலாப்ஜாமூன் மிக்ஸ் செய்வதில்லை ஏனோ எனக்கு வீட்டில் தயாரித்து செய்வதில் தான் சுவை கூடுதல் என்று நினைப்பதாலோ என்னவோ. இதுவும் என் பாட்டியிடம் கற்றுக் கொண்டதுதான். சிலோனில் இருந்தப்ப அங்கு பால் பொருட்கள் எல்லாம் மிக மிக நன்றாகக் கிடைக்கும். ஸோ பாட்டி வீட்டிலேயே கோவா தயாரித்து அதில் பால்பவுடர் மிக்ஸ் செய்து அல்லது பால்பவுடரில் தானே மிக்ஸ் செய்துதான் செய்வார். மைதா அதிகம் போட மாட்டார். அவரைப் பார்த்து நானும் வீட்டிலேயே செய்வதுதான். அப்படி என்பதால் எனக்கு யாரோ குஜா மிக்ஸ் கொடுத்திருக்க அதை கோஃப்தா செய்தேன். செமையா வந்துச்சு...

      எங்க வீட்டிலும் கல்கத்தா வாணலி உண்டு. என் இரண்டாவது மாமா நான் பிறந்த சமயத்திலேயே போதே டாட்டா ஸ்டீல் கம்பெனியில் வேலை பார்க்க ஜெம்ஷெட்பூர் சென்றுவிட்டார். அவர் கல்கத்தா வாணலி சப்பாத்திக் கல், தாவா எல்லாம் அங்கிருந்து கொண்டு வந்தார். அப்புறம் என் கல்யாணத்திற்கும் அவர்கள்தான் கொடுத்தார்கள் சீரில் வைக்க....இன்னும் அதேதான் வைத்திருக்கிறேன்.

      ஜாமூன் ஆஹா ஸ்வீட்டூஊஊஊஊஊஊஊஊஊ எனக்கு ரொம்பப் பிடிக்கும் நானும் ஸ்வீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூஊஊஊஊஊஊ...ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    6. உருளைக்கிழங்கு, ப்ரெட் இதிலும் கூட செய்வதுண்டு. நீங்களும் செஞ்சுருப்பீங்களே!

      கீதா

      Delete
    7. வாங்க தி/கீதா, இன்னிக்குக் கூட மலாய் கோஃப்தாவுக்கு குலாப்ஜாமூன் மிக்ஸ் வாங்க நினைச்சு அப்புறமா வேண்டாம்னு விட்டுட்டேன். :) மேலே மிருதுவா வரணும் தான் இல்லைனு சொல்லலை. அது மாவை நாம் பிசைவதில் இருக்கு. இப்போல்லாம் முன்னைப் போல் பிசைய முடியலை. அதோடு குலோப்ஜாமூனுக்கு ரொம்ப அழுத்தியும் பிசையக் கூடாது. அதான் உப்புச் சீடை உருட்டறாப்போல் உருட்டிப் போட்டுட்டேன். :)

      Delete
  4. கல்கத்தா வாயால் எங்கள் வீட்டிலும் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. //கல்கத்தா வாயால்/

      வாணலி

      Delete
    2. imposition கொடுக்க வந்தேன், தப்பிச்சீங்க ஶ்ரீராம்! :))))

      Delete
  5. கடைக்கண் பார்வையா !!!!! ஹைய்யோ.... நான் பார்த்ததே இல்லைப்பா.....

    விடாப்பிடியா துளசியை வாங்குனது கூடுதல் மகிழ்ச்சி !!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், துளசி, அவர் வலப்பக்கம் தானே ஒருக்களிச்சுப் படுத்திருக்கார். அப்படியே கடைக்கண்ணால் ஒரு பார்வை! கொஞ்ச நேரம் அசந்துட்டேன்! !!!!!!!!!!!!!!!!!! பார்த்தால் தான் அந்த அனுபவம் புரியும்! ஆனால் அவருக்கும் அப்படியே தெரிஞ்சிருக்கு! அதான் அதிசயம்!

      Delete
  6. //பெரிய ரங்குவின் வலக்கண் நம்மையே பார்க்கிறாப்போல் ! அவர் கண்ணை விழித்துப் பார்க்கிறாப்போல் இருக்கு!//
    அடடா! என்ன பாக்கியம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி! ஶ்ரீரங்கத்தில் மழை வரும்போல இருக்கு! :) நிஜம்மாவே ரங்கு வலக்கண்ணால் நம்மையே பார்க்கிறாப்போல் தான் இருக்கு! இன்னிக்குத் தான் நல்லாப் பார்க்க முடிஞ்சது!

      Delete
  7. ரொம்ப நாளாக உங்களிடம் கேட்க வேண்டுமென்று நினைத்திருக்கும் ஒரு விஷயம். சாம்பசிவமாகிய உங்கள் கணவரை நீங்கள் ஏன் 'ரங்க்ஸ்' என்று குறிப்பிடுகிறீரங்கள்? ஏற்கனவே இரண்டு கீதாக்கள். அதில் அவருடைய சர்நேம் ரெங்கன். நீங்களும் ரங்க்ஸ் என்று குழப்ப வேண்டுமா?

    ReplyDelete
    Replies
    1. அது ஒரு பெரிய கதை பானுமதி! இணையம் வந்த புதுசில் பழைய நண்பர் டுபுக்கு என்பவர் தன்னோட பதிவில் மனைவியைக் குறிப்பிடும்போதெல்லாம் "தங்கமணி" என்றே குறிப்பிடுவார். தன்னை "ரங்கமணி" எனச் சொல்லிக் கொள்வார். அது அப்படியே அனைவருக்கும் பரவி எல்லாப் பதிவர்களும் ஆண்களாக இருந்தால் மனைவியைத் "தங்க்ஸ்" என்றும் பெண்ணாக இருந்தால் கணவரை, "ரங்கு" "ரங்க்ஸ்" என்றும் சொல்ல ஆரம்பித்துப் பத்து வருடங்களுக்கு மேல் ஆகின்றன. நம்ம அப்பாவி தங்கமணி என்னும் ஏடிஎம் கூடத் தன் பெயரை அப்படி மாற்றிக் கொண்டவர் தான்! :))) இங்கே அரங்கத்து ரங்கனையும் "ரங்கு" என்பதால் வித்தியாசம் தெரியறதுக்காக நான் அவரை ரங்க்ஸ் என்றும் ரங்கனை "ரங்கு" என்றும் சொல்கிறேன். பழைய பதிவுகளைத் தொடர்ந்து படித்தவர்களுக்குப்புரியும். என்னைத் தவிர இன்னும் சில அக்காலப் பதிவுலக நண்பர்களும் "ரங்க்ஸ்" என்றோ, "தங்க்ஸ்" என்றோ சொல்லுவார்கள். பலரும் இதை விட்டு விட்டாலும் அனன்யா மஹாதேவனும், நானும் இன்னும் தொடர்கிறோம்! அனன்யாவின் சமீபத்திய பதிவுகளைப் பார்க்கலைனாலும் அவரும் இப்படித் தான் சொல்வார்.

      Delete
    2. தி/கீதாவின் கணவர் பெயரே ரெங்கன்! ஆகவே அதுக்கும் இதுக்கும் வித்தியாசம் உண்டு. மேலும் அவர் தன் கணவரை ரங்க்ஸ்னு சொல்வதில்லை. கணவர் என்றே சொல்லுவார். :))))

      அந்த டுபுக்கு அறிமுகம் செய்த "ரங்கமணி, தங்கமணி" என்னும் பெயர்கள் ஏதோ ஒரு கவுண்டமணி, செந்தில் ஜோக்கில் அறிமுகம் செய்யப்பட்டது என என் பழைய நண்பர் அம்பி சொல்வார். நான் கவுண்டமணி ஜோக்கெல்லாம் பார்த்ததில்லை, வாழைப்பழ ஜோக் தவிர்த்து! அது படமே பார்த்ததால் ஜோக் தெரியும். :))))

      Delete
    3. ஆஹா! சைக்கிள் கேப் கிடைச்சா போதுமே ரெண்டு அக்காக்களும் இந்தத் தங்கையை பத்தி ஹா ஹா ஹா அஹ ஹா ஹா...
      பானுக்கா கீதாக்கா இந்தக் கதையை ஏற்கனவே போட்டாச்சே!!! நானும் கூட இந்த ரங்கமணி தங்கமணி எங்கள் ஜோக்குகளிலும் இடம் பெறும் ஒன்று என்று சொல்லியிருந்த நினைவு..

      கீதா

      Delete
    4. யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸு, 2010க்குப் பின் வந்தவங்களுக்காக முன்னர் ஒரு முறையோ 2 முறையோ சொல்லி இருக்கேன். :)

      Delete
  8. குலோப்ஜாமூன் படங்கள் அருமை. பார்க்கும்போதே மனைவியைச் செய்யச் சொல்லலாமா என்று தோன்றியது.

    ரங்கநாதர் சேவை கிடைத்ததா? பாக்கியசாலிதான் நீங்கள். நினைத்தபோது (அவனும் நினைத்தபோது) உங்கள் இருவருக்கும் சேவை கிடைக்கிறதே...

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. குலோப்ஜாமூன் போல அரங்கன் சேவையும் அருமை! நினைச்சப்போப் போக முடிஞ்சா நான் அங்கேயே குடித்தனம் இருக்க மாட்டேனோ! :))))

      Delete
  9. நான் அனுப்பியிருந்த பூச்சாண்டி கோலப் படங்களை இடுகையில் சேர்த்திருந்தால் சந்தேகம் வந்திருக்காது. எல்லோரும் உற்சவர்கள் படங்கள்தான் போடறாங்க.

    ReplyDelete
    Replies
    1. என்னோட மெயிலுக்கு அனுப்புங்க நெ.த. இதில் சேர்க்கிறேன், எனக்கு வாட்சப் மூலம் மெயிலுக்குக் கொண்டு வரதே கஷ்டமா இருக்கு! மெயிலுக்கு அனுப்பித் தான் இங்கே போட முடியும். வாட்சப்பில் இருந்து பதிவுக்குக் கொண்டு வரத் தெரியாது! அதோடு மொபைலில் டாட்டா இருந்தாலும் நான் அதிகம் பயன்பாட்டில் வைச்சுக்கலை! வெளியே போனாலோ, வெளியூர் போனாலோ தான் மொபைல் டாட்டாவை ஆன் செய்துப்பேன்.

      Delete
    2. அனுப்பிவிட்டேன் கீசா மேடம்.

      Delete
    3. படங்களை டவுன்லோட் செய்து டெஸ்க் டாப்பிலும் சேமித்தேன். ஆனால் படம் காப்பி, பேஸ்ட் ஆகவில்லை. என்னோட பிக்சர் ஃபோல்டரில் போட்டு வருதானு பார்க்கிறேன். :(

      Delete
  10. குலாப் ஜாமூன் மிக்ஸ் வாங்குவீர்களா நீங்களாக செய்வீர்களா

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, இப்போத் தமிழ்நாடு வந்ததில் இருந்து குலோப்ஜாமூன் மிக்ஸ் தான்! வடக்கே இருக்கையில் பால் காய்ச்சிக் கோவா சேர்த்து வைத்துச் செய்வேன். பால் பவுடரிலும் செய்திருக்கேன். உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்துப் பால் பவுடரோடு கலந்து பிசைந்தும் செய்திருக்கேன். ப்ரெட்டோடு பால் பவுடர் கலந்தும் செய்வேன். இப்போப் பல வருஷங்கள் கழிச்சு இப்போத் தான் செய்தேன். மறுபடி ஒருமுறை உருளைக்கிழங்கில் செய்து பார்க்கும் ஆசை வருது! :)

      Delete
    2. இதே இதே....இதைத்தான் மேலே சொல்லியிருந்தேன்..நீங்க சென்ஞ்சுருப்பீங்கனும் சொல்லியிருந்தேன்...ஆனா விளக்கமா இல்லாம...பனீரிலும் கூட(நன்றாக மையாகப் பிசைந்து கொண்டு) மில்க்பௌடர் கலந்து கொஞ்சம் மைதா பைண்டிங்கிற்காகச் சேர்த்து செய்தாலும் நன்றாக வரும்...

      கீதா

      Delete
  11. குலோப்ஜாமூனும் ரங்கன் கடைக்கண் பார்வையும் அமிர்தம்.
    கல்கத்தா வாணலி நல்ல கனம்.

    இரண்டு இனிப்புகளைப் பார்த்ததே இனிமை.
    யாருக்கு இந்தக் குட்டிப் பயல் பிறந்திருக்கான்னு
    யோசிக்கிறேன். தெரியணும்னால் நீங்களே சொல்லி இருப்பீர்கள்.

    தங்கமணி ரங்கமணிக் காலங்கள் வந்து போகிறது நினைவில்.

    பூச்சாண்டியைப் போய்ப் பார்க்கிறேன். நன்றி கீதாமா..

    ReplyDelete
    Replies
    1. @Valli, என் கணவர் வழி அத்தை பெண்ணுக்குப் பேரன் பிறந்திருக்கான். அவங்க இங்கேயே திருவானைக்காவில் இருக்காங்க! நல்ல பழக்கம்! எல்லாத்துக்கும் அவங்களும் வருவாங்க நாங்களும் போவோம்! :) அந்தக் குழந்தையைத் தான் பார்த்துட்டு வந்தோம். கேசவன் பெயர்.

      Delete
    2. ஆமாம், வல்லி, அப்போத் தான் எழுத வந்த புதுசு. முதலில் ஒண்ணுமே புரியலை. அப்புறமா அம்பி சொல்லி டுபுக்குவோட பதிவுகளைப் படிச்சதும் தான் புரிஞ்சது! அதுக்கப்புறமாத் தான் நானும் ரங்க்ஸ், தங்க்ஸ்னு சொல்ல ஆரம்பிச்சேன். அப்போல்லாம் உங்க ரங்கமணி என்ன சொல்றார்னே பின்னூட்டத்தில் கேட்பாங்க! :) அப்போது பத்து வருஷங்கள் முன்னால் அது ஒரு ட்ரென்ட்!

      Delete
  12. பூச்சாண்டி சேவை கண்டு மகிழ்ந்தேன்.

    குலோப்ஜாமூன் நன்றாக இருக்கிறது.

    //ரங்குவின் வலக்கண் நம்மையே பார்க்கிறாப்போல் ! அவர் கண்ணை விழித்துப் பார்க்கிறாப்போல் இருக்கு! தூக்கி வாரிப் போட்டது எனக்கு! அதுவும் கடைக்கண் தரிசனம்! //

    மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். பாக்கியம் செய்து இருக்கிறீர்கள்.


    ReplyDelete
    Replies
    1. வல்லிக்குப் போட வேண்டியது தவறுதலா உங்க பின்னூட்டத்தில் வந்தது. நல்லவேளையா உடனே கவனிச்சேன். :)))) இறைவன் நம்மைப் பார்க்கிறான் என்பது எவ்வளவு பெரிய விஷயம்! அதை நம்மால் உணர முடிஞ்சதும் அதைவிடப் பெரிசு இல்லையா!

      Delete
  13. குலாப் ஜாமூன் ஆஹா..

    பூச்சாண்டி சேவை ..ரொம்ப அழகான சேவை ..

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனுராதா, அங்கேயும் வந்து கருத்துச் சொன்னதுக்கும், இங்கே சொன்னதுக்கும் நன்றிம்மா.

      Delete
  14. குலாப் ஜாமூன் - பார்க்கும்போது சாப்பிடத்தோன்றுகிறது. இங்கே கடைகளில் நிறையவே, நன்றாகவே கிடைப்பதால் வீட்டில் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதுவும் சுடச்சுட கிடைக்கும் ஜிலேபி போலவே!

    பூச்சாண்டி கோலத்தில் பெருமாள் - பார்த்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், அங்கே கிடைப்பது ஒரிஜினல் ஆச்சே! அதைச் சாப்பிட்டுட்டு இதையும் சாப்பிடும்போது பால்பவுடர் மாவு வாசனை வராப்போல் இருக்கும் எனக்கு! :)))

      Delete
  15. //ரங்குவின் வலக்கண் நம்மையே பார்க்கிறாப்போல் ! அவர் கண்ணை விழித்துப் பார்க்கிறாப்போல் இருக்கு! தூக்கி வாரிப் போட்டது எனக்கு! அதுவும் கடைக்கண் தரிசனம்!... //

    மகிழ்ச்சி.. எங்கும் மங்கலம் நிறையட்டும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை! உண்மையிலேயே இப்போது நினைச்சாலும் சிலிர்ப்பாக இருக்கு!

      Delete
  16. வணக்கம் சகோதரி

    குலாப்ஜாமூன் பார்க்கவே மிகவும் அழகாய் இருக்கிறது. உடனே செய்து சாப்பிடும் எண்ணத்தை தூண்டியது. குட்டிப்பையனை பார்த்து இனிப்பு கொடுத்து வந்தீர்களா? கல்கத்தா வாணலியும் அருமை. அந்த மாதிரி பளபளப்பு சாதாரண வாணலியில் இருக்காது.

    கடவுளின் கடைக்கண் பார்வை பெற்ற நீங்கள் மிகுந்த பாக்கியசாலி. பூச்சாண்டி சேவை.. பெயரே மிகவும் அழகாயி ருக்கிறது. எம் பெருமானுக்கு அனைத்தும் அழகுதான். அழகுக்கு ஒரு அழகு செய்தது போல.. எனக்கும் ஸ்ரீ ரங்கனை தரிசிக்கும் ஆவல் அதிகரிக்கிறது. அவன் அருளும் கிடைத்தால்தானே அனைத்தும் ஒன்று கூடும். பார்க்கலாம்.! நடக்க, நடக்க நாராயணன் செயல்... பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, குட்டிப்பயல் நல்லாச் சிரிக்கிறான். குப்புறத்திக்கப் பார்க்கிறான். ஆனால் அவனைக் கீழேயே விடக் கூடாது!

      அரங்கன் தரிசனமும் அருமையாய்க் கிடைத்தது என்பதோடு அல்லாமல் இம்முறை முழுசா 2 நிமிடங்கள் அங்கேயே நின்னு பார்க்கிறாப்போலவும் ஆச்சு. :)

      Delete
    2. பூச்சாண்டி சேவை விபரங்கள் தெரிஞ்சுக்க நான் கொடுத்திருக்கும் சுட்டியில் க்ளிக் செய்து போய்ப் பாருங்கள் . இல்லனா துரையோட பதிவைப் பாருங்கள்.

      Delete
  17. துளசிதரன் : குலாப்ஜாமூன் மிகவும் பிடிக்கும். விருமிச் சாப்பிடுவேன். ஆனால் இப்போது மிக மிக அபூர்வம்.

    கீதா : அக்கா பூச்சாண்டி சேவை இப்போதான் முதன்முறையா கேட்கிறென். உங்கள் சுட்டி பார்த்து வாசித்துவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. பூச்சாண்டி சேவை இந்த வருஷம் தான் நாங்களும் பார்த்தோம்.

      Delete
    2. ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பூச்சாண்டி சேவை
      பதிவு: செப்டம்பர் 11, 2019 11:21 IST

      ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பூச்சாண்டி சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

      ஸ்ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பூச்சாண்டி சேவை
      ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவ மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளியபோது எடுத்த படம்.
      பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் நேற்று முன் தினம் தொடங்கியது. உற்சவத்தின் முதல் நாள் யாகசாலையில் நம்பெருமாள் எழுந்தருளினார். அவரைச்சுற்றிலும் பூக்கள் பரப்பி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

      இதனால் இந்நிகழ்ச்சி பூப்பரத்திய ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் மூலவர், உற்சவர் உள்பட சிறிய, பெரிய மூர்த்திகள் அனைவருக்கும் நூலிலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.


      பவித்ர உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டி சேவை எனப்படும் அங்க, உபாங்க சேவை நேற்று மதியம் நடைபெற்றது. பூச்சாண்டி சேவையின் போது மூலவர் ரெங்கநாதரின் திருமுக மண்டலம் உள்பட திருமேணி முழுவதும் நூலிழைகளை சுருள், சுருளாக வைத்து அலங்கரித்திருந்தனர். இந்த காட்சி பார்வைக்கு அச்சமூட்டுவதுபோல் இருக்கும். எனவே இதை பூச்சாண்டி சேவை என்று குறிப்பிடும் பழக்கம் ஏற்பட்டது.

      பவித்ர உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்க கொடிமரத்திற்கு அருகில் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். நேற்றும் அவர் பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். உற்சவத்தின் 7-ம் நாளான வருகிற 15-ந் தேதி உபய நாச்சியார்களுடன் நம்பெருமாள் கோவில் கொட்டாரத்தில் நெல் அளவு கண்டருளுகிறார். 9-ம் நாளான 17-ந் தேதி காலை நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். மறுநாள் பெரிய பெருமாள் ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பு நடைபெறுகிறது.

      Delete
  18. ஸ்ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பூச்சாண்டி சேவை

    ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பூச்சாண்டி சேவை
    பதிவு: செப்டம்பர் 11, 2019 11:21 IST

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பூச்சாண்டி சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பூச்சாண்டி சேவை
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவ மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளியபோது எடுத்த படம்.
    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் நேற்று முன் தினம் தொடங்கியது. உற்சவத்தின் முதல் நாள் யாகசாலையில் நம்பெருமாள் எழுந்தருளினார். அவரைச்சுற்றிலும் பூக்கள் பரப்பி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதனால் இந்நிகழ்ச்சி பூப்பரத்திய ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் மூலவர், உற்சவர் உள்பட சிறிய, பெரிய மூர்த்திகள் அனைவருக்கும் நூலிலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.


    பவித்ர உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டி சேவை எனப்படும் அங்க, உபாங்க சேவை நேற்று மதியம் நடைபெற்றது. பூச்சாண்டி சேவையின் போது மூலவர் ரெங்கநாதரின் திருமுக மண்டலம் உள்பட திருமேணி முழுவதும் நூலிழைகளை சுருள், சுருளாக வைத்து அலங்கரித்திருந்தனர். இந்த காட்சி பார்வைக்கு அச்சமூட்டுவதுபோல் இருக்கும். எனவே இதை பூச்சாண்டி சேவை என்று குறிப்பிடும் பழக்கம் ஏற்பட்டது.

    பவித்ர உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்க கொடிமரத்திற்கு அருகில் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். நேற்றும் அவர் பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். உற்சவத்தின் 7-ம் நாளான வருகிற 15-ந் தேதி உபய நாச்சியார்களுடன் நம்பெருமாள் கோவில் கொட்டாரத்தில் நெல் அளவு கண்டருளுகிறார். 9-ம் நாளான 17-ந் தேதி காலை நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். மறுநாள் பெரிய பெருமாள் ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பு நடைபெறுகிறது.

    ReplyDelete