எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, August 03, 2018

மேலும் கீழும் ஓட வைச்சார் பெருமாள்! :)

ராமர் எப்போத்தான் என்னை இந்த வெளிச்சம் மறைக்காமல் எடுப்பியோனு கேட்கிறார். ஆனால் விளக்கை அணைத்தால் ராமர் தெரியலை!

ராமருக்கு வலப்பக்கம் இருக்கு நவநீத கிருஷ்ணன். கையில் வெண்ணெயுடன்.ராமருக்கு இடப்பக்கம் இருக்கிறார் நம்ம ஆள்!


நேத்திக்கே வாட்சப்பில் நெ.த. எச்சரிக்கை! நாளைக்குப் பெருமாள் அம்மாமண்டபம் வரார், ஒழுங்காப் படம் எடுக்கணும்னு! மனுஷர் சும்மா இருந்திருக்க மாட்டாரோ! ஆனாலும் நான் உடனே உள் மனசு ஏதோ சொல்ல அவரிடம் இருக்கும் கூட்டம் எப்படியோ தெரியாது! முடிஞ்சதை எடுப்பேன்னு சொல்லிட்டேன். ரெண்டு நாள் முன்னேயே மாடிக்குப் போய்க் காவிரியை எடுத்துட்டும் வந்தேன். அதைப் போடலை. ஆடிப்பெருக்கன்னிக்குச் சேர்த்துப் போடலாம்னு இருந்தேன். இன்னிக்கு இங்கே அம்மாமண்டபத்துக்குக் காவிரிக்குச் சீர் வழங்கப் பெருமாள் வரார்ங்கற விஷயமே நேத்திக்குத் தான் நிச்சயமாய்த் தெரிய வந்தது. ஆகவே இன்னிக்குக் காலம்பர எழுந்ததுமே அதிகம் கணினியில் உட்காராமல் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டு சீக்கிரமாவே எட்டரை மணிக்கெல்லாம் குளிக்கவும் போயிட்டேன்.

இன்னிக்கு நம்பெருமாளைப் பார்க்க உங்களுக்கு எல்லாம் கொடுத்து வைக்கலை. ஆகவே இவரைப் பார்த்துக்குங்க ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக! :(


ராகுகால விளக்கு பிரதிபலிக்கிறது. 

குளிச்சுட்டு வந்ததும் ரங்க்ஸ் கீழே அசோசியேஷன் அலுவலகம் போனார். அவரிடம் பெருமாள் வந்தால் சொல்லச் சொல்லிட்டுச் சமையலுக்கான ஏற்பாடுகளைக் கவனிச்சேன். சீக்கிரம் சமைத்து வைத்து விட்டால் பெருமாளைப் பார்த்துட்டுத் திரும்பினதும் சாப்பிடலாமே! மேலும் இன்னிக்குக் கலந்த சாதம் தான் என்பதால் சூடா வேணும்னு இல்லை. ஆகவே வெல்ல சாதம், (சர்க்கரைப் பொங்கல் இல்லை) தேங்காய்ச் சாதம், எலுமிச்சைச் சாதம், எள் சாதம், தயிர் சாதம் ஆகிய ஐந்து சாதங்களைப் பண்ணுவதற்கான ஏற்பாடுகளைக் கவனித்துச் செய்து வைத்து சாதமும் வைத்து எல்லாவற்றையும் கலந்தும் வைத்தேன். மோர்க்குழம்பும் தொட்டுக்கப் பண்ணினேன். வடைக்கு அரைத்து வடை தட்ட எண்ணெயை அடுப்பில் வைத்து இரண்டு வடையைத் தட்டிப் போடும்போதே கீழிருந்து தொலைபேசி அழைப்பு. பாதுகாவலர் பெருமாள் வந்துட்டே இருக்கார்னு சொல்ல மணியைப் பார்த்தால் பத்தே கால்! போட்ட வடைகளை எடுத்துத் தட்டில் போட்டுவிட்டு அடுப்பை அணைத்து சந்தேகத்துக்கு சிலிண்டரையும் மூடிட்டுக் கீழே லிஃப்ட் வழியா இறங்கினேன்.

இன்னிக்கு நிவேதனங்கள். வெல்ல சாதம்,  தேங்காய் சாதம், எள்ளு சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், வடை, சொம்பில் காவிரி நீர், வெற்றிலை, பாக்கு, பழம், நிவேதனம்! யாருக்கு எது பிடிக்குமோ எடுத்துக்கலாம்.

எங்க குடியிருப்பு வளாகத்தின் வாசலில் கூட்டமே இல்லை. மற்றக் குடியிருப்பு வாசிகள் யாருமே இல்லை. பக்கத்து மண்டகப்படியிலே போய்க் கேட்டால் இப்போ இல்லை அம்மா, இன்னும் கொஞ்ச  நேரம் கழிச்சு வாங்கனு சொல்லிட்டார். சரினு பாதுகாவலர் அமரும் இடம் சென்று அங்கே அமர்ந்திருந்தேன். பத்தரை, பத்தேமுக்கால் ஆனது. மேலே அப்படியே போட்டுட்டு வந்துட்டோமேனு அடிச்சுக்க அங்கு இருந்த சில பெண்களிடம்  சொல்லிட்டு மறுபடி மாடிக்குப் போனேன். மேலே போய் சாதங்களை நன்கு கலந்து ராகுகால விளக்கு ஏற்றி சாமி அலமாரியிலும் விளக்கை ஏற்றி வைத்து எல்லாவற்றையும் சாமிக்குக் கொண்டு வந்து வைத்து ஒரு சொம்பில் காவிரி நீரையும் நிரப்பி அதையும் சாமி முன்னால் வைத்து நிவேதனம் செய்து காக்கைக்குப் போட்டேன். அப்போ மறுபடி கொட்டுச் சத்தம். உடனே மறுபடி எல்லாவற்றையும் சாப்பாட்டு மேஜையில் வைச்சுட்டு மீண்டும் கீழே ஓடினேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நம்பெருமாள் அப்போத் தான் தெற்கு வாசலே தாண்டி இருக்கார்னு சொன்னாங்க. மறுபடி சற்று நேரம் உட்கார்ந்து பார்த்துட்டுப் பெருமாளைத் தேடியாவது போய்ப் பார்ப்போம்னு கிளம்பினேன். அதற்குள்ளாக அலுவலக வேலை முடிந்து ரங்க்ஸும் வர இரண்டு பேருமாப் போனோம்.

இரண்டு நாட்கள் முன்னர் எடுத்த மொட்டைமாடிப் படங்கள்!

இன்னொரு பாதுகாவலர் வந்து பெருமாள் மங்கம்மா நகருக்குள் போயிருக்கார், வர முக்கால் மணி நேரம் ஆகும்னு சொன்னார். மறுபடி மேலே போனோம்.அங்கே போய் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு எல்லாவற்றையும் சுத்தம் செய்யலாம்னா கீழே இருந்து அழைப்பு. நிஜம்மாவே பக்கத்து மண்டகப்படி வந்துட்டாராம். சாப்பிட்ட எச்சல் கூடத் துடைக்கலை. கையை மட்டும் அலம்பிக் கொண்டு எச்சல் இடத்தின் மேலே தண்ணீரைத் தெளித்துவிட்டுக் கீழே ஓடினோம்.போகும்போதே மிச்சம் இருந்த சாப்பாடை ஒரு பாக்கு மட்டையில் வைத்து மோர்க்குழம்பையும் ஒரு கிண்ணத்தில் ஊற்றிப் பாதுகாவலருக்குக் கொண்டு கொடுத்தோம். அப்போ பெருமாள் குடை வந்து நம்மகுடியிருப்பு வாசலிலே இறங்கியது. சரினு நான் பக்கத்து மண்டகப்படிக்குப் போக அவர் வாசலிலேயே நின்னார்.

கொஞ்ச நேரத்தில் அங்கே கூட்டம் கூடியது! கூட்டம்னா கூட்டம் அப்படி ஒரு கூட்டம். இதிலே வெயில் அதிகமா இருப்பதாலே பெருமாள் திரையை விட்டுக்கொண்டு வருகிறார் எனவும் தோளுக்கு இனியானில் வரலை என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் பெருமாள் வந்து விட்டார்.  சாலையிலிருந்து மேடான அந்த மண்டகப்படிக் கட்டடத்திற்குள் பெருமாளை ஏற்ற முடியவில்லை. பெரிய பல்லக்கு வேறே. பல்லக்கை முதலில் திருப்புவதற்கே கஷ்டமாக இருந்தது. உள்ளே தூக்கி வருவதும், பின்னால் போவதும், மறுபடி உள்ளே வருவதுமாக இருந்தனர். அப்புறமாகச் சமாளித்துக் கொண்டு பல்லக்கை உள்ளே தூக்கி வந்தனர். யாராலும் நிற்க முடியவில்லை. ஒரு மாதிரி சிரமப்பட்டுப் பல்லக்கைக் கீழே வைத்தனர். எனக்கு மிக அருகே பெருமாள். ஆனாலும் படம் எடுக்க முடியவில்லை. எப்படியோ சமாளித்துக் கொண்டு ஒரு படம் எடுக்க முயன்றேன். எடுக்கும்போதே ஒருத்தர் கத்த ஆரம்பித்து விட்டார். இதுக்கு நடுவில் மண்டகப்படிக்காரங்க அவங்களோட நிவேதனம், பெருமாளுக்கான சமர்ப்பணங்கள் ஆகியவற்றைக் கொடுக்க பட்டாசாரியார்கள் அவற்றைப் பெருமாளுக்குச் சமர்ப்பிக்க ஆரம்பிக்க பெருமாள்  முகம் தெரியாத மற்றவர்கள் இந்தப் பக்கம் வர ஆரம்பிக்க நடுவில் நான் மாட்டிக் கொண்டேன். அத்தோடு கூட்டம் என்னை வெளியே தள்ள ஒருவழியாக வெளியே வந்தேன். சாலையிலும் இருமருங்கிலும் கூட்டம். காவிரியில் நெரிசல் கேட்கவே வேண்டாம். காலை நான்கு மணியில் இருந்து ஒலிபெருக்கியில் மாற்றி மாற்றி எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். சாலையின் இரு மருங்கிலும் திடீர்க்கடைகள் வேறே. எல்லாப் போக்குவரத்தும் இந்தச் சாலை வழியாகத் தான்! இன்னமும் மாம்பழச் சாலையிலிருந்து செல்லும் வழியில் கட்டப்பட்டிருக்கும் பாலம் திறந்து வழி விடலை! ஆகவே நகருக்குள் நுழையும் எந்த வண்டியும் அம்மாமண்டபம் சாலைக்குத் தான் வந்தாகணும்! அது வேறே இரண்டு பக்கமும்! 2013க்கு அப்புறமா இம்முறை தான் இந்தக் கூட்டம்! ஆனால் இது அதை விடப் பெரிய கூட்டம்! மல்லிகைப் பூ அரை முழம் 35 ரூபாய்!


ஜனங்கள் வந்து மோதும் வேகத்தில் பல்லக்குத் தூக்கிகள்  பல்லக்கைத் தூக்கிக் கொண்டு நகரவே சிரமப்படுகின்றனர். இதில் ஒவ்வொரு மண்டகப்படியாகப் போய்ப் போய்க் கீழே இறக்கி என மிகவும் அதிக சிரமம். அவங்களால் தாக்குப் பிடிக்க முடியலை! அதோடு பல்லக்குக்கும் எனக்கும் ஒரு அடி தூரமே இருந்ததால் மீண்டும் பல்லக்கைத் தூக்கும்போது பாரம் தாங்காமல் அவர்கள் இந்தப் பக்கம் சாய்வார்கள் என்பதால் நான் சுவரை ஒட்டி நின்றதால் உடனே வெளியேறும்படி ஆயிற்று. இதை நேரில் பார்த்தால் தான் புரியும். தரிசனம் கிடைத்ததே பெரிய விஷயம் என்று ஆகி விட்டது!  பெருமாளுக்காக மேலும், கீழும் ஓடியதில் முழங்கால் வேறே பிடித்துக் கொண்டு இருக்கு! விடணும்! :)))))

58 comments:

 1. அட ராமா... இந்த ஜனங்களுக்கு ஒரு ஒழுங்கு புரியறதில்லையோ? பல்லக்குத் தூக்குபவர்கள் பாடுதான் திண்டாட்டம்.

  ஐந்து வகையான சாப்பாடு சாப்பிட்டதற்கு மேலும் கீழும் அலைந்து சுலப ஜீரணமாக ஆகியிருக்கும்.

  நாந்தான் சொன்னேன்னா, கூட்டத்துல கஷ்டப்பட்டுண்டு ஏன் போகணும்? அதுவும் கூட்டத்தில் நெரிசல் அதிகமாக இருக்கும். சின்னவங்க பாஞ்சாங்கன்னா பெருயவங்களுக்குத் திண்டாட்டம்.

  ஆமா.. வெல்லசாதம்னா சர்க்கரைப் பொங்கலா அல்லது வெள்ளை சாதமா (வெறும் சாதம்)?

  ReplyDelete
  Replies
  1. நெ.த. வெல்ல சாதம்னா தெரியாது? வெல்லம், தேங்காய் சேர்த்துப் பூரணம் கிளறி அதில் நெய்யை விட்டுச் சமைத்த சாதத்தைப்போட்டுக் கிளறி எடுப்போம். இன்னிக்கு எங்க வீடுகளிலே அதான் பண்ணுவோம். நல்லவேளையா பிறந்த வீட்டிலும் இதே, மாமியார் வீட்டிலும் இதே! :))))

   Delete
  2. சாப்பிட்டதெல்லாம் அப்புறமாத் தானே! :))))

   Delete
  3. வெல்லசாதம் இதுவரை சாப்பிட்டதில்லை. ரொம்ப இனிப்பு ஜாஸ்தியா இருக்காதோ? பூரணம், சீயனுக்குப் பண்ணுவதுபோல் பாகு வெல்லத்தில் செய்வீர்களா?

   Delete
  4. வெல்லமே நான் பாகு வெல்லம் தான் வாங்குவேன். வேறே வெல்லம் வாங்கறதில்லை. தேங்காய்ப் பூரணம் கொழுக்கட்டைக்கு, சொஜ்ஜி அப்பத்துக்கு, சிய்யத்துக்கு எனச் செய்வாங்களே! அப்படிச் செய்வது தான்! அதிலே சமைத்த சாதத்தைப்போட்டு நெய் விட்டுக்கிளறணும். வெல்லச் சேவை கூட இப்படித் தான் செய்வேன். ஏலக்காய் மட்டும் போடுவேன். பிடித்தால் மு.ப. சேர்க்கலாம்.

   Delete
 2. சிரமப்பட்டால் தான் பலவையும் மறக்காது அம்மா...

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் டிடி! பாடுபட்டால் தானே பலன்!

   Delete
 3. சில சமயம் பெருமாள் இப்படி விளையாட்டு காட்டுவார்! தம்மை விட இந்த வருஷம் காவிரிக்கு முக்கியத்துவம் இருக்கட்டும் என்று இருக்கலாமோ?!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஆனால் அவரைப் பார்த்தாலும் களைப்பாகத் தான் தெரியறார். என் கண்ணுக்குத் தானோ, என்னமோ தெரியலை! :( கூட்டம் வேறே நசுக்குது!

   Delete
 4. உணவை உண்ண காவிரி கரைக்குப் போக வேண்டாமா

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி ஐயா, காவிரிக்கரைக்குப் போனால் சாப்பிட உட்கார இடத்துக்கு எங்கே போவது? நெரிசல்!

   Delete
 5. ராமரை ஒளிபடாமல் எடுக்கலாம் கோணம் மாற்றி எடுக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. முயற்சி செய்யறேன் கில்லர்ஜி! எனக்குத் தெரிந்து வெங்கட் கூட முயன்றார் என எண்ணுகிறேன்.

   Delete
  2. இது சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. மெட்டல் பூச்சு இருக்கு. அதனால் ஃப்ளாஷ் போடாமல் எடுத்தாலும் சரியாக வருவது கடினம். கோணம் மாற்றி எடுத்தால் படம் நேராகப் பார்ப்பதுபோல் வராமல் ஒன்று சின்னதாகவும் மற்ற பகுதி பெரியதாகவும் வரும்.

   Delete
  3. பார்க்கலாம் நெல்லைத் தமிழரே! எனக்கு நினைவில் இருப்பது சரின்னா, வெங்கட்டே முயன்று பார்த்தார் என்று தான் நினைவு! விளக்கு ராமருக்கு நேர் எதிரே!

   Delete
 6. உங்க வீட்டிலிருந்து பார்த்தால் காவிரி தெரியுமா?! கொடுத்து வச்சவங்கம்மா நீங்க..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ராஜி, காவிரி ரொம்பக் கிட்டக்க!

   Delete
 7. ராமர் எப்போத்தான் என்னை இந்த வெளிச்சம் மறைக்காமல் எடுப்பியோனு கேட்கிறார். ஆனால் விளக்கை அணைத்தால் ராமர் தெரியலை!

  ராமர் படத்துக்கு மேலே கேமராவ தூக்கி படம் எடுங்கம்மா சரியா வரும்...

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொன்னபடி முயன்று பார்க்கிறேன் தம்பி!

   Delete
 8. ஏன் நீங்கள் உங்கள் வளாகத்தில் புதிதாக ஒரு மண்டகப்படி தொடங்கலாமே.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜேகே அண்ணா, 2,3 வருடங்கள் முன்னர் ஒவ்வொரு மண்டகப்படியாகப் போக முடியலைனு பழைய மண்டகப்படிக்காரங்களிலேயே சிலரை வேண்டாம்னு சொல்லும்படி அறநிலையத் துறையினர் கேட்கப் பெரிய சச்சரவு நடந்தது. பழைய மண்டகப்படிக்காரங்களுக்குப் பெருமாளைக் கொண்டு போறதுக்கே அறநிலையத் துறையைக் கேட்கணும். புதுசா எல்லாம் ஆரம்பிப்பது கஷ்டம்!

   Delete
 9. தன் பக்தையை களைப்படைய செய்து விட்டோமே என்று பெருமாள் கவலைபட்டது களைப்பாகத் தெரிந்தார் போலும் உங்களுக்கு.
  பிரசாதங்கள் எடுத்துக் கொண்டேன். கூட்டத்தில் உங்கள் மனகண்ணில் எடுத்து கொண்டீர்களே அதுவே போதும்.
  கீழே தள்ளாமல் இருந்தார்களே கூட்டம் உங்களை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, வெயில் தாங்கலை நேத்திக்கு! அதான் பெருமாளுக்குக் கஷ்டமா இருந்திருக்கும்னு நினைச்சேன். மத்தபடி நம் மனசில் இருப்பது தானே வெளியிலும் தெரியும். இடது முழங்கால் தான் இன்னமும் பிரச்னையா இருக்கு! நாளைக்கு ச்ராத்தம்! வேலை ஓடணும்! :(

   Delete
 10. ஆடிப் பெருக்கு வாழ்த்துகள்....

  ReplyDelete
 11. ஸ்ரீரங்கத்தில் இருப்பதால் காவிரித் தண்ணீரையும் பூஜையில் வைக்க முடிகிறது. ம்ம்ம்...

  ReplyDelete
  Replies
  1. அம்பத்தூரிலும் கிணற்று நீரை வைப்போம் ஶ்ரீராம். ஆடிப்பெருக்குக்கு நீரைத் தானே வணங்கணும்! எங்க பிறந்த வீட்டில் காவிரிக்கு மசக்கை என்று சொல்லி மசக்கை சாதங்கள் என்னும் பெயரிலேயே இந்தக் கலந்த சாத வகையறாக்கள் பண்ணுவாங்க!

   Delete
 12. ஐந்து சாதமா? புளியோதரை இல்லையா? நான் அதனால் ஸ்ரீரங்கம் வரவில்லை! இல்லாவிட்டால் வந்திருப்பேன்!

  ReplyDelete
  Replies
  1. புளிக்காய்ச்சல் முன்னர் பண்ணினதே இன்னும் கொஞ்சம் இருக்கு! அதான் வேண்டாம்னு வைச்சுட்டோம். அதோடு புளியோதரை இல்லைனா எலுமிச்சை ரெண்டிலே ஒண்ணு தான் பண்ண முடியும். ரெண்டும் பண்ண முடியாதே! அப்போ ஆறு சாதம் ஆயிடும்! :)))) ஐந்து தான் கணக்கு!

   Delete
  2. எலுமிச்சை சாதம் யார் கேட்டா? வாணாம்!! ஈஸ்ட் ஆர் வெஸ்ட்... புளியோதரைதான் பெஸ்ட்!

   Delete
  3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். பச்சைப் புளியஞ்சாதம் கூடப் பண்ணலாம். ஆனால் மிஞ்சினால் பிரச்னை! அதான் பண்ணலை! :))))

   Delete
  4. //பச்சைப் புளியஞ்சாதம் கூடப் பண்ணலாம். //

   பச்சைப் புளியஞ்சாதம் யார் கேட்டா? ஈஸ்ட் ஆர் வெஸ்ட் நார்மல் புளியோதரையே பெஸ்ட்!!!!

   Delete
  5. ஶ்ரீராம், ஒரு தரம் நான் செய்யும் முறையில் பச்சைப் புளியஞ்சாதம் சாப்பிட்டுப் பாருங்க! :)))

   Delete
  6. எப்போ சான்ஸ் வருதுன்னு பார்க்கலாம்.

   Delete
  7. பச்சைப் புளியஞ்சாதமா? ரெசிப்பி லிங்க் கொடுங்க. பச்சைப் புளி உடம்புக்கு கெடுதி இல்லையா?

   பாரிசில் பாண்டிச்சேரிக் கார்ர் ரெஸ்டாரன்டில் புளியைக் கொதிக்க வைக்காமல் புளிஜலத்தில் சாப்பிட்ட (சாப்பிடலை டேஸ்ட் தெரிஞ்ச பிறகு) ஞாபகம் வந்துவிட்டது

   Delete
 13. நீங்கள் சொல்வதைப் பார்த்தல் பல்லக்குத் தூக்கிகள் பாடு ரொம்பவே கஷ்டம்தான் போல... அரை முழம் மல்லி 35 ரூபாயா? அடேங்கப்பா...

  ReplyDelete
  Replies
  1. பரம்பரையாகப் பல்லக்குத் தூக்குபவர்கள் தான் தூக்குவார்கள். எல்லோரும் தூக்க முடியாது. சிலர் பிரார்த்தனை செய்து கொள்வார்கள். அப்போக் கொஞ்ச நேரம் தூக்க அனுமதிப்பாங்க! நேத்திக்குச் சுமார் 30 பேர் பல்லக்குத் தூக்கி இருக்காங்க!

   Delete
  2. ஆமாம், ஶ்ரீராம், அரை முழம் மல்லி முந்தாநாள் அந்த விலை! நேத்திக்குச் சாயங்காலம் முழம் 20 ரூயில் இருந்து 30 வரை! குறைந்து விட்டது! ஆனால் இன்னிக்கு வாழை இலையே கிடைக்கலை! ஒரு இலைனா ஒரு இலை கூடக் கிடைக்கலை! :))))

   Delete
  3. ஆமாம், சொல்லிட்டு வந்திருக்கார். சாயந்திரமாக் கிடைக்கலாம். இல்லைனா நாளைக்குக் காலங்கார்த்தாலே போகணும்! :(

   Delete
  4. இலையே கிடைக்காம இன்னிக்கு ச்ராத்தம், இலைக்கு என்ன பண்ணுவதுனு ஒரே குழப்பம். அப்புறமா மறுபடி சாத்தாரத் தெரு மார்க்கெட் போய் ஒரே ஒரு காய்க்காரர்/காரி யிடம் இருந்த இலைகளை ஒரு இலை பத்து ரூபாய்னு வாங்கி வந்தார். ஏன்னா இன்னிக்கு ஆடிக் கிருத்திகையாம்! எல்லோரும் விரதம் விடவோ, ஆரம்பிக்கவோ இலையில் தான் சாப்பிடுவாங்களாம். :)))) ஏதோ ஒரு காரணம்.

   Delete
 14. >>> சற்று நேரம் உட்கார்ந்து பார்த்துட்டுப் பெருமாளைத் தேடியாவது போய்ப் பார்ப்போம்னு கிளம்பினேன்..<<<

  இது தான் விஷயமே!... நாம் தான் புரிந்து கொள்வதில்லை...

  வாழ்க பெருமாள்... வளர்க அவன் பக்தர்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், துரை, புரிஞ்சுக்கத் தான் இல்லை. ஆனால் நேத்திக்குத் தேடியும் போக முடியலை! :))))

   Delete
 15. உருளைக்கிழங்கு மசியல் இல்லையா!..
  அதுசரி.. ரெண்டு வடை தான் இருக்கு.. மத்ததெல்லாம் எங்கே?..

  ReplyDelete
  Replies
  1. நீங்க வேறே துரை! வயிறு இப்போத் தான் சரியாயிட்டு இருக்கு. இதிலே உ.கி.மசியலா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வடை ரெண்டு தானே தட்டினேன். அதுக்குள்ளேக் கீழேயும் மேலேயும் ஓடியாச்சு. அப்புறமாப் பெருமாளைப் பார்த்துட்டு வந்து தான் மிச்சம் வடை தட்டினேன்! :)))))

   Delete
  2. உருளைக் கிழங்கு மசியல் செய்முறை பற்றி சிறுகுறிப்பு உடனே இங்கு வரையவும்!!!

   Delete
  3. அவர் சும்மாக் கேலிக்குக் கேட்டால் நீங்க உடனே உ.கி.மசியல்ங்கறீங்க? துரை நம்ம உ.கி.மசாலாவைத் தான் சொல்றார்னு நினைக்கிறேன்.

   Delete
  4. துரை சார் கருத்துக்குப் பிறகுதான் படத்தைப் பெரிதுபடுத்திப் பார்த்தேன். காலையிலேயே பசி வந்துவிட்டது. ஆமாம், இதற்கு ரெய்த்தால்லாம் பண்ணலையா? உருளைக்கிழங்கு மசியல் அல்லது மசாலா, கதம்ப சாதத்துல எப்படிச் சேரும்?

   Delete
  5. @ஸ்ரீராம். உருளை பொடிமாஸில் கொஞ்சம் புளித்தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்தால் உருளை மசியல். ஹிஹிஹி.

   Delete
  6. நெ.த. தொட்டுக்கத் தான் மோர்க்குழம்பு பண்ணி இருப்பதைச் சொல்லி இருக்கேனே! ஒழுங்காவே படிக்கிறதில்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)))))

   Delete
  7. ஜேகே அண்ணா, கஷ்டம், கஷ்டம்! உருளைக்கிழங்கு பொடிமாஸை அப்படியே சாப்பிடலாம். அதை ஏன் கெடுக்கச் சொல்றீங்க? :))))

   Delete
  8. மசிச்ச உருளைக் கிழங்கில் கொஞ்சமாய் தண்ணீர் ஊற்றிக் கிளறி, தேங்காய் சீரகம் அரைத்து விட்டு,.... வரும் விருந்தினர்களுக்குக் கொடுத்து அவர்கள் முகமாற்றத்தைக் கவனமாக ஆராய்ந்து பின்னர் நாம் தேவைன்னா சாப்பிடலாம்!!!

   Delete
  9. ஹையோ, பாவம் விருந்தினர்கள்! எதுக்கு அவங்களைப் போய் சோதனை எலியாக்கிட்டு இருக்கணும்! :))))

   Delete
 16. வணக்கம் சகோதரி

  இன்று நல்ல தரிசனம் பெருமாளின் திவ்ய தரிசனம் கிடைக்கப் பெற்றீர்கள். மனதிற்கு அதை விட வேறு என்ன சந்தோஷம் வேண்டும். காவிரியின் நிறைந்த நீர் அழகை பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் இருக்கிறது. படங்கள் அழகு.

  இவ்வளவு தள்ளு முள்ளிலும் பெருமாள் தரிசனம் நீங்கள் சேவித்தததை, நாங்களும் மனக்கண்ணினால் சற்று நிறையவே பருகினோம். உங்களுடன் நாங்களும் கீழும், மேலும் அலைந்திருக்கிறோமே... ஹா ஹா ஹா ஹா..

  உங்கள் பதிவு அபாரம். உள்ள(த்)தை காட்டும் கண்ணாடி. ஒரு செயல் விடாமல், நேரில் பார்ப்பது போல் விளக்கியிருக்கிறீர்கள். மிகவும் ரசித்துப் படித்தேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கமலா. என்னோட குடும்ப மருத்துவர் கூட்டம் இருக்கும் இடங்களுக்கே என்னைப் போகக் கூடாது என்பார். கல்யாணங்களிலேயே ரிசப்ஷனைத் தவிர்த்து விடுங்கள் என்பார். ஆனாலும் பல சமயங்களிலும் அது நடப்பதில்லை. என்றாலும் நான் முக்கியமான கல்யாண ரிசப்ஷன்களில் கலந்து கொள்ளத் தான் வேண்டி இருக்கு. என்ன ஒரு விஷயம் என்றால் தனியாக ஓரமாகப் போய் உட்கார்ந்து விடுவேன். :)))) நேத்திக்கு மண்டகப்படிக் கட்டடத்துக்குள் இவ்வளவு கூட்டம் வரும்னு எதிர்பார்க்கலை! ரொம்பச் சின்ன இடம்! அவங்களோட நிலத்தில் சுமார் அரை கிரவுண்டைத் தான் எங்களுக்கு நடைபாதையாகக் கொடுத்திருக்காங்க! ஆகவே மண்டகப்படி இடம் குறைஞ்சு போச்சு! சாதாரணமா எங்களை எல்லாம் உள்ளே அனுமதிப்பாங்க! நேத்திக்குக் கூட்டம் அவங்களே எதிர்பார்க்காதது.

   Delete
 17. ஏன் ஓடவச்சார்? ஃபிட்னெஸ் கொஞ்சம் வரட்டுமேன்னுதான் !

  மொட்டைமாடிவழிக் காவிரி தரிசனமும் நன்னாத்தான் இருக்கு..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏகாந்தன், இப்படி அபூர்வமாத் தான் உங்களைப் பார்க்க வேண்டி இருக்கு! நீங்க சொல்வதும் சரியாத் தான் தெரியறது. பெருமாள் உடம்பு சுறுசுறுப்பா இருக்கட்டும்னு அலைய விட்டிருக்கார் போல! :))))

   Delete