இஃகி,இஃகி, கொஞ்ச நாட்கள் முன்னர் குலாப்ஜாமுன் பண்ணினேன். அதிலே ஜீரா மிச்சம் ஆயிடுத்து. சாதாரணமாக உடனே அதிலே மைதா பிஸ்கட்டோ அல்லது பூந்தி தேய்த்தோ போட்டுடுவேன். ஆனால் இம்முறை அப்படி எல்லாம் செய்ய முடியாமல் படுத்தாச்சு! அதிலும் அடுத்தடுத்து இரு முறை படுத்ததில் இது பத்தின நினைப்பே இல்லை. இரண்டு நாட்கள் முன்னர் தான் குளிர்சாதனப் பெட்டியில் இருப்பதை சென்சஸ் கணக்கு எடுத்தப்போ வீணாகும்படி எதுவும் இல்லை என்பதும் இந்த ஜீரா மட்டும் இருப்பதும் தெரிய வந்தது. என்ன செய்யலாம் என மண்டையை உடைத்துக் கொண்டேன். சேமியா பாயசம் வைச்சிருக்கலாம். ஆனால் அதுக்கு ஜீரா ஜாஸ்தி. ப்ரெட் வாங்கி ரோஸ்ட் மொறுமொறுவெனப் போடலாமா எனில் 2 ஸ்லைஸ் ப்ரெட் தான் போடலாம். அதோடு சீஸ் வேறே பிரிக்காமல் இருக்கு. ப்ரெட் இருந்தால் சீஸை வைத்து சான்ட்விச் செய்தால் ஒரு நாள் காலைப் பொழுதுக்கோ மாலைப் பொழுதுக்கோ மண்டை காய வேண்டாம். அதோட ப்ரெட் ஸ்லைஸ் அப்படியே ஜீராவை உறிஞ்சிக்கும். ம்கூம். போர்! கொஞ்ச நாட்கள் வைச்சுச் சாப்பிடும்படி என்ன செய்யலாம் என மண்டையை உடைத்துக் கொண்டேன். முந்தாநாள் ஜீராவை வெளியே எடுத்து வைச்சுட்டு நேரம் இல்லாமையால் மறுபடி உள்ளே வைச்சுட்டேன்.
நேத்திக்குத் தான் திடீர்னு மைசூர்ப்பாகு பண்ணினால் என்னனு தோணித்து. ஜீரா எப்படியும் ஒரு டம்பளர் அளவுக்கு இருக்கும். அதுக்கு ஏற்றாற்போல் ஒரு சின்னக் கிண்ணம் கடலைமாவு போட்டால் போதும்! நேத்திக்கே செய்திருக்கணும். என்னமோ முடியலை. இன்னிக்குக் காலம்பர சமைக்கும் முன்னே நல்ல நேரம் பார்த்துக் கொண்டு பின்னே! திப்பிசம் ஆச்சே, சரியா வர வேண்டாமா? பத்தரைக்கு எமகண்டம் ஆரம்பிக்கும் முன்னே அடுப்பில் உருளியை வைச்சு நெய்யை ஊத்திட்டேன். :)
மிகுந்திருக்கும் ஜீரா
டப்பாவில் கடலைமாவு
நேத்திக்குத் தான் திடீர்னு மைசூர்ப்பாகு பண்ணினால் என்னனு தோணித்து. ஜீரா எப்படியும் ஒரு டம்பளர் அளவுக்கு இருக்கும். அதுக்கு ஏற்றாற்போல் ஒரு சின்னக் கிண்ணம் கடலைமாவு போட்டால் போதும்! நேத்திக்கே செய்திருக்கணும். என்னமோ முடியலை. இன்னிக்குக் காலம்பர சமைக்கும் முன்னே நல்ல நேரம் பார்த்துக் கொண்டு பின்னே! திப்பிசம் ஆச்சே, சரியா வர வேண்டாமா? பத்தரைக்கு எமகண்டம் ஆரம்பிக்கும் முன்னே அடுப்பில் உருளியை வைச்சு நெய்யை ஊத்திட்டேன். :)
மிகுந்திருக்கும் ஜீரா
உருளியில் நெய்
ஒரு கரண்டி அளவு கடலைமாவு குவித்து எடுத்துக் கொண்டேன். ஜீரா பாகு பதத்தில் இருந்ததால் அடுப்பில் முதலில் வைக்கவில்லை. நெய்யில் கடலைமாவை நன்கு வறுத்துக் கொண்டேன். நெய்யோடு சேர்ந்து கடலைமாவு நன்கு பொங்கிக் குமிழ் விட்டுக் கொண்டு வரும் வண்ணம் வறுத்துக் கொண்டேன்.
கடலைமாவை நெய்யோடு சேர்த்து வறுக்கும்போது
பின்னர் ஜீராவைச் சேர்த்தேன்.
ஜீராவைச் சேர்த்ததும்
பின்னர் சிறிது நேரம் கைவிடாமல் கிளற வேண்டி இருந்ததால் படம் எடுக்க முடியலை. சுமார் 20 நிமிடங்கள் கிளறி இருப்பேன். பின்னர் பதம் வந்தது எனத்தெரிந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அந்தச் சூட்டிலேயே சிறிது நேரம் கிளறினேன். சுமார் 2 வருடங்கள் முன்னர் வரை மைசூர்ப்பாகு பொரபொரவென கூடு விட்டுக் கொண்டு வரும்படி தான் எடுத்துக் கொண்டிருந்தேன். இப்போக் கொஞ்சம் மாற்றி விட்டேன். மைசூர்ப்பாகு மிருதுவாக இருக்கணும்னு பொங்கி வரும் சமயம் அடுப்பை அணைத்துவிட்டு அந்தச் சூட்டிலேயே கிளறிக் கொட்டினால் துண்டங்களும் ஒழுங்காக வருகிறது. மிருதுவாகவும் இருக்கு. ஆகவே இன்னிக்கும் அப்படியே செய்தேன்.
தட்டில் கொட்டியதும்
துண்டங்கள் போட்டு வைத்திருக்கிறேன்.
துண்டங்கள் போட்ட மைசூர்ப்பாகு வில்லைகள்
இந்தத் திப்பிச வேலையை இங்கே பகிரலாமா, இல்லைனா சாப்பிடலாம் வாங்க பக்கம் போகலாமா இல்லாட்டி ஶ்ரீராமுக்கு அனுப்பவானு பூக்கட்டிப் பார்த்தப்போ இன்னிக்குத் "திங்க"ற கிழமைனு நினைப்பு வந்தது. எல்லோரும் "திங்க" வசதியா இருக்குமேனு இதிலேயே போட்டுட்டேன். அதோடு இதுக்குப் பார்வையாளர்களும் அதிகமா வருவாங்க. ஶ்ரீராமுக்கோ சமையல் குறிப்புகள் வரிசை கட்டி நிற்கும். மெதுவாத் தான் போடுவார். நமக்கோ ஆக்கப் பொறுத்தாலும் ஆறப் பொறுக்காத மனசு! அதான் போட்டுட்டேன். வேணும்ங்கறவங்க எடுத்துக்கோங்க! நல்லாவே இருக்கு. ஏலக்காய் போட்டிருப்பதால் இது என்ன மைசூர்ப்பாகுக்குப் போட மாட்டாங்களேனு தோணும்! இந்தத் திப்பிசம் தெரியதவங்க கிட்டே நாங்க போடுவோமுல்லனு சொல்லிடுவோமுல்ல!
//ஶ்ரீராமுக்கோ சமையல் குறிப்புகள் வரிசை கட்டி நிற்கும். // - சாக்குச் சொல்வதில் கீதா சாம்பசிவம் மேடத்தை யாரும் மிஞ்ச முடியாது.
ReplyDeleteநான் சென்றவாரம் பெங்களூரில் இருந்தபோது, மனைவியிடம் மைசூர்பாக் செய், அதனைப் படமெடுத்து தி.பதிவுக்கு அனுப்பறேன் என்று சொல்லியிருந்தேன். நல்லவேளை அதனைச் செய்து தி.பதிவுக்கு இடுகையாக அனுப்பலை. இப்படி கொஸ்சன் அவுட் செய்கிறவர்கள் இருக்கும்போது என்ன செய்யறது?
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,நெ.த. நான் ஒண்ணும் சாக்கெல்லாம் சொல்லலை. இரண்டு, மூன்று தயாரிப்புகள் படம் எடுத்து இப்படித் தான் போடும்படி ஆச்சு! அதில் ஒண்ணு தவலை வடை. ஃபேஸ்புக்கிலே வேறே உணவுத் திருவிழா நடத்தினாங்களா, அதிலே போட்டுட்டேன். :)))))))) எந்தக் கேள்வியை அவுட் செய்தேன்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteஇதோ பாருங்க... நான் மைசூர்பாக் செய்து தி பதிவுக்கு அனுப்பியிருந்தால் என்னாயிருக்கும்? நான் சொல்வதெல்லாம் உண்மை இல்லை என்றால், அடுத்த வாரம் உங்க செய்முறைதான் தி.பதிவாக வரணும். வேகமா ஏதாவது செய்து அங்க அனுப்புங்க. (ஏன் பால் போளி செய்திருக்கக்கூடாது? மைசூர் பாக்கைவிட அது பெட்டர் இல்லையா? ஜீராவையும் உபயோகப்படுத்தினமாதிரி இருக்கும்)
Deleteஅடுத்தவாரமா? நான் ஏதும் அனுப்பலை ஶ்ரீராமுக்கு! இரண்டு, மூணு இருக்கு! ஆனால் அனுப்பலை! என்னோடது இப்போ வர வாய்ப்பே இல்லை! அனுப்பினால் தானே வர!
Deleteபால் போளியெல்லாம் உடனே பயன்படுத்தணும், ஜீரா போளின்னா இரண்டு மூன்று தான் வரும்! :) கடலை மாவும் சர்க்கரையும் சேர்த்தால் போதுமே, மைசூர்ப்பாகுக்கு! குறைந்தது 20 வில்லைகள் வந்துடும். :) கல்யாணம் ஆன புதுசில் நினைச்சால் மைசூர்ப்பாகுதான்! :)
Delete//மைசூர்ப்பாகு பொரபொரவென கூடு விட்டுக் கொண்டு வரும்படி தான்// - என்ன... சாஃப்டா வந்ததுனால, கதையை இப்படி மாத்துறிங்களா? எப்படி டிரெடிஷனல் மைசூர்பாக் செய்கிறீர்கள் என்றுதான் நான் பார்த்தேன். ஆனா நீங்க சாதாரணமுறையைச் சொல்லிட்டீங்க ஹா ஹா
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கதை எல்லாம் மாத்தலை! முன்ன்ன்ன்ன்ன்ன்னே ஒரு தீபாவளிக்கு இப்படிப் பொரபொரனு செய்த மைசூர்ப்பாகுப் படமும் இருக்கு. 2013? அல்லது 12? நினைவில் இல்லை! தேடிப் பார்த்துப் போடறேன். :))))
Deleteஅப்போ வெங்கட்டும் ரிஷபன் சாரும் கூட வந்தாங்க. மைசூர்ப்பாகை ரசிச்சுச் சாப்பிட்டாங்க! பார்க்கிறேன். :)
Deleteஅது சரி... இனிப்பு சாப்பிடுவதில் பிரச்சனை இல்லையா? பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு. சாப்பிடணும்போல் இருக்கு. ஆனால் எவ்வளவு நாள் 'இனிப்பு' சாப்பிடாமல் இருக்க முடிகிறது என்று (வேற எதுக்கு எடை குறைக்கத்தான்) 4 நாள் முன்பு ஆரம்பித்தேன் (பெங்களூரிலிருந்து வாங்கிவந்த தில்பசந்தை தூக்கிப்போட்ட நாளிலிருந்து).
ReplyDeleteநெ.த. எனக்கு நீரிழிவு என்பது அவ்வப்போது தான் வந்து போகிறது. தொடர்ந்து சராசரி பார்த்தால் நீரிழிவு இருப்பதாகக் காட்டுவதில்லை. எனினும் ஒரு முன் ஜாக்கிரதைக்காக உணவுக் கட்டுப்பாடு. இது எனக்கு இருக்கும் வயிற்றுப் பிரச்னையால் கூட அனுசரிக்க வேண்டியதாய் இருக்கு. அதோடு இல்லாமல் வீட்டுக்கு வரவங்களுக்குக் கொடுக்க எதுவுமே இருக்கிறதில்லையே! இப்படிப் பண்ணி வைச்சுண்டா கொடுக்கலாம். மிக்சர் பண்ணி வைச்சிருந்தேன். நேத்தோடு ஆயிடுத்து! இனிமேல் வேறே ஏதாவது பண்ணி வைச்சுக்கணும். சிலர் கடைகளில் வாங்கி வைப்பதைச் சாப்பிடுவது இல்லை.
Deleteகடைகளில் வாங்கி வைப்பதைச் சாப்பிட உங்க வீட்டுக்கு ஏன் வராங்க? ஆத்திர அவளர்த்துக்கொள்ள கீழே பஜ்ஜி கடையில் வாங்கி பதிவர் சந்திப்புக்குக் கொடுத்தால் தப்பில்லை.. ஹா ஹா..
Deleteஉங்க பின்னூட்டத்தைப் படிக்கும்போது, திருப்பது வெள்ளிக் கதவைத் தாண்டி வெளியே வரும்போது, இன்று என்ன பிரசாதம் கிடைக்கும் என்ற எண்ணம் வருவதை நினைத்தேன்.
இல்லை. சிலர் வீட்டில் பண்ணினதுன்னா கொஞ்சம் மேலும் கீழும் பார்ப்பாங்க! அதையும் பார்த்திருக்கேன். :) கோயிலுக்குப் போனால் பிரசாதம் தான் நினைப்பா?
Deleteநான் சென்ற மாதம் 3 ஆவின் ஜாமூன் டப்பா வாங்கினேன் (80 ரூபாய், 6 ஜாமூனா என்று ஞாபகமில்லை). அதில் மிஞ்சிய பாகை என்ன செய்வது என்று நினைத்தேன் (சுலபமாக நினைவுக்கு வருவது சேமியா பாயசம்தான்). அப்புறம் எதுவும் மனதிற்குத் தோன்றாததால் தூரப்போட்டுவிட்டேன்.
ReplyDeleteவடக்கே இருந்தவரை கோவா(சர்க்கரை போடாமல்) புதிதாக வாங்கித் தான் ஜாமுன்! காலா ஜாமூன் கூடச் செய்வேன். ஜாமூனில் உள்ளே ஸ்டஃப் செய்தும் பண்ணி இருக்கேன். அப்போல்லாம் இனிப்பு சாப்பிடத் தடை இல்லை. சொல்லப் போனால் 2010 வரை வீட்டில் அடிக்கடி அல்வா கிளறுவேன். அவருக்குப் பிடிக்கும்! கடை அல்வா அதிகம் வாங்கினது இல்லை. அதன் பின்னரே ஸ்வீட் வாங்குவது குறைய ஆரம்பித்தது. ஆவினில் ஜாமூன் வாங்கியதில்லை. எப்போவானும் திரட்டுப் பால் யாருக்கானும் கொடுக்க வாங்குவோம்.
Deleteநீங்க பிரெட் சாண்ட்விச்லாம் சாப்பிடுவீங்களா? சீஸ்லாம் வச்சிருக்கீங்களா?
ReplyDelete20 நிமிஷம் கைவிடாம கிளறணுமா மைசூர்பாக்குக்கு? அதுவும் இந்தச் சிறிய அளவிற்கு?
என்னாஆஆது ப்ரெட் சான்ட்விச் சாப்பிடுவீங்களாவா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சான்ட்விச் டோஸ்டரில் பண்ணினது! டோஸ்டரில் பண்ணாமல் பச்சையாகச் செய்வது என விதம் விதமாப் பண்ணிச் சாப்பிட்டிருக்கேன். சாப்பிடுவோம். சீஸ் ஸ்லைஸாக வாங்கினால் சான்ட்விச்சுக்குள் வைத்து ஸ்டஃப் காய்கள் வைத்துச் சூடு செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். டோஸ்டரில் வைத்தால் சீஸ் ரொம்ப இளகிப் போயிடுது. வழிகிறது. அதனால் தோசைக்கல்லில் தான்! மானுவல் டோஸ்டர் இருக்கு! அது நான் ஸ்டிக்! அதிகம் பயன்படுத்துவதில்லை.
Deleteநெ.த,பொதுவா எந்தக் கேக் வகைகளுக்குமே கைவிடாமல் கிளறுவதே நல்லது. அதிலும் மைசூர்ப்பாகு, கிளறுவதில் தான் சூட்சுமம். சொல்லப் போனால் நான் இன்னும் பத்து நிமிஷம் கிளறி இருக்கலாம். போதும்னு எடுத்தேன்.
Deleteசூப்பர்
ReplyDeleteநன்றி.
Deleteஇந்தத் திப்பிசம் தெரியதவங்க கிட்டே நாங்க போடுவோமுல்லனு சொல்லிடுவோமுல்ல! ////
ReplyDeleteநாம வச்சதுதானே இங்க சட்டம்
அதானே! சரியாச் சொன்னீங்க ராஜி!
Deleteஅளவுக்கு அதிகமாக சர்க்கரை வியாதியை வைத்துக் கொண்டு குலாப் ஜாமூன், திப்பிச மைசூர் பாகு என்று சாப்பிடும் உங்களை கட்டெறும்பு கடிப்பதாக. நீங்கள் சென்று பார்த்த சித்த வைத்தியர் இப்படி நிறைய இனிப்பு சாப்பிட சொன்னாரோ?
ReplyDeleteஜேகே அண்ணா, அளவுக்கு அதிகமா எனக்குச் சர்க்கரை இருப்பதாக யார் சொன்னாங்க? எனக்கு எப்போதோ ஒரு முறை 180 ஐத் தாண்டும். உடனேயே உணவுக் கட்டுப்பாடு கொண்டு வந்துடுவேன். மேலே நெ.த.வுக்குச் சொல்லி இருக்கேன் பாருங்க! அவருக்குத் தான் ஒரு கைப்பிடி சாதம் கூடப் போனாலும் எகிறும். :)
Deleteஆனால் எனக்கு ஃபாஸ்டிங் சர்க்கரை தான் எப்போவுமே கூடக் காட்டும்! சாப்பிட்ட பின்னர் சர்க்கரை அளவு அதிகம் இருப்பதில்லை! என்னனு புரியலை! :)
Deleteஐயோ... உங்க வாயால அப்படிச் சொல்லாதீங்க. நான் இனிப்பு சாப்பிட்டதுபோல யாருமே சாப்பிடமுடியாது. (ஒரு சமயத்தில் ஒரு கிலோ ஸ்வீட்டும் சாப்பிட்டுடுவேன்) ஷுகர்லாம் இல்லை. 91/108 தான். எடை குறைப்புக்காக ஸ்டாப் பண்ண முயற்சிக்கிறேன்.
Delete//அவருக்குத் தான் ஒரு கைப்பிடி சாதம் கூடப் போனாலும் எகிறும். :)// சாரி சாரி, மன்னிக்கவும். அது உங்களைச் சொன்னது இல்லை. ரங்க்ஸைச் சொன்னேன். அங்கே அந்த வார்த்தை விடுபட்டிருக்கு. "நம்ம ரங்க்ஸ் இருக்காரே, அவருக்குத் தான்" என வந்திருக்கணும். அந்த வார்த்தைகள் காப்பி, பேஸ்ட் பண்ணும்போது விடுபட்டிருக்கு. மன்னிச்சுக்குங்க! :( தவறான பொருளில் வந்திருப்பதையே இப்போத் தான் பார்க்கிறேன்.
Deleteஅடடே படங்கள் ஆசையை தூண்டுகிறதே...
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
Delete👍👍👍அருமை ம்மா ...!
ReplyDeleteநன்றி அஜய்!
Deleteஆவ்வ்வ் மீயும் மைசூர் பாகு போனமாதம் செய்தனே கீசாக்கா.. கொஞ்சம் அளவு பிழைத்து, குழந்து வந்துவிட்டது, அவசரப்பட்டு இறக்கிட்டேன் போலும்.. என் கன்னி மைசூர் பாகு என்பதால் மன்னிச்சு விட்டிட்டேன்:) என்னை நானே.. திரும்ப செய்ய நினைச்சேன் படு இனிப்பு என்பதால அவ்வளவாக ஆசை வருகுதில்லை செய்ய.
ReplyDeleteஅதிரடி, நீண்ட நாட்கள் கழிச்சு வருகை தந்ததுக்கு நன்றி. உங்க செக் இன்னும் ஃப்ரீ ஆகலை போல! ரெண்டு பேரும் இல்லாமல் யாரை வம்பிழுக்கறதுனு நான் தவிச்சது எனக்குத் தான் தெரியும்! :)
Deleteமைசூர்ப்பாகு செய்ய நல்லாக் கிளற வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் மேலே குமிழியிட்டுக் கொண்டு பொங்கி வரும். அதுவரை கிளறணும். நெல்லைத் தமிழர் இந்தச் சின்ன அளவுக்கு 20 நிமிஷமானு கேட்டிருக்கார். சொல்லப் போனால் பொரபொரனு வரதுக்கு இன்னும் பத்து நிமிஷம் கிளறலாம். நான் போதும்னு வைச்சுட்டேன். சாஃப்டா இருப்பதற்கு இது போதும்.
Deleteநல்ல வேளை உண்மையைச் சொன்னீங்க ஞானி. இல்லாட்டா "குழை ஸ்வீட்" என்று இடுகை போட்டு எங்களுக்கு குழை அடிச்சிருப்பீங்க.
Deleteசரி... கீசா மேடம்... விரைவில் நானே இதனைச் செய்து தி.பதிவுக்கு அனுப்பப் பார்க்கிறேன். அளவு தெரியாமல் அதிகமாகக் கிளறிவிட்டால், உங்கள் பாணியில், 'காலா மைசூர்பாக்' என்று பெயரிட்டு அனுப்பிடறேன். இந்தியால, இந்த ஊர்ல இப்படித்தான் செய்வாங்கன்னு சொல்லிக்கமுடியாதபடி, உங்களைப் போன்ற பலர் எல்லா இடத்திலும் இருந்திருக்கீங்க. பேசாம, இது பஹ்ரைன் ஸ்பெஷல் என்று சொல்லிடவேண்டியதுதான்.
Deleteநெல்லைத் தமிழரே, உண்மையிலே காலா ஜாமூன் அப்படினு ஒண்ணு உண்டு. வெங்கட்டைக் கேளுங்க சொல்லுவார். ஸ்டஃப் பண்ணின ஜாமூனும் உண்டு! ஏன் மதுரை சமையல் எழுதி இருக்கேன். கும்பகோணம் எங்க மாமியார் வீட்டுப் பாரம்பரியச் சமையல் எழுதி இருக்கேன். நெல்லை சமையலும் எழுதி இருக்கேனே! :))))))
Deleteகாலா ஜாமூன் என் மனைவிக்கு ரொம்பப் பிடிக்கும். அது பஹ்ரைன் உ.பிரதேசத்துக் கடைகள்ல எப்போவும் கிடைக்கும். தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது, ஸ்டஃப் பண்ணின ஸ்பெஷல் காலா ஜாமூனும் கிடைக்கும். 'காலா மைசூர்பாக்' கேள்விப்பட்டதில்லை.ஹாஹா. ஆனா ஹோட்டல்ல கண்டதையும் சேர்த்து, 'ஹார்லிக்ஸ் மைசூர்பாக்', 'பூஸ்ட் மைசூர்பாக்', 'ரோஸ் மைசூர்பாக்' என்று கலந்து கட்டறாங்க.
Delete//இஃகி,இஃகி, //
ReplyDeleteசிரிக்கிறீங்களோ?:)
//கொஞ்ச நாட்கள் முன்னர் குலாப்ஜாமுன் பண்ணினேன். அதிலே ஜீரா மிச்சம் ஆயிடுத்து//
ஜீரா எண்டால் என்ன? நான் சீரகத்தை.. ஜீரகம் எனச் சொல்லி அதை ஸ்டைலா ஜீரா என்கிறீங்க எனத்தான் நினைச்சிட்டேன்..
இஃகி, இஃகி நு தமிழில் சிரிச்சேன். கிகிகிகி அப்படினு சிரிச்சா வடமொழி வருதாம். அதான்! :))))) ஜீரா என்பது சர்க்கரைப் பாகு. குலாப்ஜாமுன் செய்தால் மிஞ்சிப் போகும் பாகு!
Deleteஅடடே... காலை மைசூர் பாகுடன் ஆரம்பிக்கிறது! குண்ட்மார்னிங்க்கா....
ReplyDeleteஇல்லையே மத்தியானம்னா போட்டேன். காலம்பர இருந்து இங்கே இணைய இணைப்பே இல்லை . பராமரிப்புப் பணியாம்! :)
Deleteநான் என்னைச் சொன்னேன். நான் அதிகாலையில் பார்த்த முதல் பதிவு!
Deleteகுலோப்ஜாமுன் வாங்கிய சமயங்களில் எல்லாம் மிஞ்சிய ஜீராவை அநியாயமாகக் கொட்டி விட்டேனே... ஜீரா திகட்டும் என்பதால் அதை நான் பெருமளவு உபயோகப்படுத்துவதே இல்லை. ரசகுல்லாவில் வரும் ஜீராவையும் இப்படிப் பண்ணலாமோ...
ReplyDeleteஶ்ரீராம், பொதுவாத் தமிழ்நாட்டில் பாரம்பரிய இனிப்புகளைத் தவிர்த்தால் மற்றவை நல்லா இருப்பதில்லை. குலாப்ஜாமூன் ஜீராவில் மிதந்து கொண்டே இருக்கக் கூடாது. இருக்கவும் இருக்காது. செய்யும் விதத்தில் செய்தால் ஜீரா எல்லாம் உறிஞ்சிக்கும். வட மாநிலங்களில் குலாப்ஜாமூன்கள் தனியாகத் தான் இருக்கும். ஜீராவில் மிதந்து கொண்டு காண முடியாது! அங்கெல்லாம் கோவா போட்டுச் செய்வது தான்! இங்கே தான் குலாப்ஜாமூன் மிக்ஸ்! ருசியே மாறுபடும். அதோடு அளவு! அங்கே உள்ளது ஒரு சின்ன ஆரஞ்சுப்பழ அளவுக்கு இருக்கும்.
Deleteகீசா மேடம்... டப்பால வாங்குகிற ஜாமூன் எல்லாமே (ஆவின், அமுல், ஹால்திராம்.....) ஜீரால மிதந்துக்கிட்டுதான் இருக்கு. 1 கிலோ என்று அளவு போட்டிருந்தால், அதில் 300 கிராம்தான் ஜாமூன் இருக்கும். மீதி எல்லாம் ஜீரா. ஒருவேளை நாள்பட இருக்கணும் என்பதற்காகப் போடறாங்களோ?
Deleteநான், அங்க இருக்கும்போது, கிலோ ஜாமூன், ரசகுல்லா வாங்கும்போது, 'ஜீரா நஹி' என்று சொல்லிவிடுவேன். இல்லைனா, பாதிக்கு மேல ஜீராவே எடையாயிடும். Anyway ஜீராவை தூரத்தானே போடுவேன்.
ஜீராவில் பாலைக் காய்ச்சி ரோஸ் எஸென்ஸ் சேர்த்துக் கலந்து வைக்கலாம். எலுமிச்சம்பழங்கள் வாங்கிச் சாறு எடுத்துக் கொண்டு லெமன் சால்ட் போட்டுக் கலந்து மஞ்சள் கலர் அல்லது லெமன் எஸ்ஸென்ஸ் விட்டு இந்த ஜீராவோடு கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம். பண்டிகை நாட்கள் அடுத்தடுத்து வந்தால் பாயசத்துக்குப் பயன்படுத்தலாம். ஒண்ணும் இல்லைனா மைதாமாவு பிஸ்கட் செய்து இந்த ஜீராவைச் சூடு செய்து போட்டு ஊற வைச்சு எடுத்து வைக்கலாம். இல்லைனா பாதாம், முந்திரிகளை நெய்யில் வறுத்து இவற்றில் போட்டுச் சிக்கி மாதிரி செய்யலாம். எதுக்குக் காசு கொடுத்து வாங்கிட்டுத் தூரக் கொட்டறீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
Deleteஆமாம்.. பொறுமை இருந்தால்தான் எபிக்கு திங்க அனுப்பலாம்! வரவர பெரியவர்களுக்கெல்லாம் கூட பொறுமை இருப்பதில்லை. அப்புறம் என்னை மாதிரி குழந்தைகளைக் குறை சொல்லி என்ன பயன்!
ReplyDeleteஇஃகி,இஃகி, வைச்சிருக்கேன் ரெண்டு, மூணு. அனுப்பி வைக்கப் பார்க்கிறேன். படங்கள் சரியா வந்திருக்கானு பார்க்கணும்.
Deleteஹிஹிஹி ஶ்ரீராம், அது யாரு பெரியவங்க? இங்கே குழந்தைங்க தான் ஜாஸ்தி! :P :P :P :P
Deleteஅனுப்புங்கள். 27-8-18 அன்று வெளியிடுகிறேன்.
Deleteஅடுப்பை அணைத்த உடன் கூட கிளறுவீர்களா? எவ்வளவு நேரம்? எனக்கு அதிலேயே கட்டி கட்டிவிடும் என்று பயம். அடுப்பை அணைத்த கையோடு தட்டில் கொட்டிவிடுவேன்! ஆனாலும் பதம் பார்த்து இறக்குவதும் ஒரு கலைதான்!
ReplyDeleteச்ரீராம், இந்த மைதா கேக், செவன் கப் கேக், போர்ன்விடா கேக், சாக்லேட் கேக் போன்ற எந்த இனிப்பு வகை செய்தாலும் கலவை பொங்கி வரும் நேரம் அடுப்பை அணைத்துவிட்டுக் கைவிடாமல் சிறிது நேரம் கிளறிப் பின்னர் தட்டில் கொட்டினால் கடைகளில் விற்கும் ஸ்வீட் போல மிருதுவாகவும் நல்ல ஷேப்பிலும் கிடைக்கும். மேலே சில்வர் பேப்பரும் ஒட்டிக்கலாம். ஆனால் இப்போது சில்வர் பேப்பர் என்னும் பெயரில் கலப்படம் வருது.மைசூர்ப்பாகும் சாஃப்டாக வேணும்னால் (கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போல) இப்படிச் செய்து பாருங்கள். நல்லா வரும்.
Deleteநான் செய்திருக்கிறேன் அக்கா. பெரும்பாலும் நன்றாகவும் வந்திருக்கிறது. ஆனால் சில சமயங்களில் பதம் தப்பி விடுகிறது.
Deleteசில்வர் ஃபாயில் என்று சொல்லப்படுவது நல்லதே இல்லை. அது எப்படித் தயாரிக்கிறாங்க என்று குமுதத்தில் ஒரு தடவை போட்டிருந்தாங்களே.
Deleteநெ.த. நீங்க சொல்வது கலப்படம். நானும் படிச்சிருக்கேன். ஆனால் உண்மையான சில்வர் ஃபாயில் விலை ஜாஸ்தி!
Deleteஇந்த முறை படங்கள் உடனுக்குடன் எடுத்தது சிறப்பு. எல்லாமே வெண்கல உருளியில்தானா? இன்னும் இது போன்ற பாரம்பரியங்கள் உங்களை போன்ற பெரியவர்களிடம்தான் இருக்கு அக்கா.. பார்க்கவே அழகாய் இருக்கு.
ReplyDeleteஇந்த முறைத் திப்பிசக்காரியம் என்பதால் நினைவு வந்ததோ என்னமோ! பல சமயங்களிலும் நினைவு இருப்பதில்லை. நான் எப்போதுமே வெண்கல உருளியில் தான் கிளறுவேன். நிறையப் பண்ணுவது எனில் ஓர் கல்கத்தா அலுமினியம் சட்டி வைச்சிருக்கேன். அதில் பண்ணுவேன். இப்போல்லாம் நிறையப் பண்ணும் சந்தர்ப்பங்கள் குறைவு. இந்த உருளியில் தான் பொங்கல், அரிசி உப்புமா, பாயசம், எல்லாம் பண்ணுவேன். நிறையப் பண்ண வேறே உருளி வைச்சிருக்கேன்.
Deleteஎங்கள் வீட்டில் வெண்கல உருளியே கிடையாது. அம்மா வீட்டில் பார்த்ததோடு சரி.
Deleteஶ்ரீராம், இந்த உருளியே சின்னது. இந்த அளவு உருளி இப்போ வாங்கப் போனாங்க என்னோட சிநேகிதி ஒருத்தர். 2,000 ரூபாயாம் இங்கே மங்கள்&மங்களில்! பேசாமத் திரும்பிட்டாங்க! :(
Deleteகுலாப்ஜாமுன் ஜீரா வைத்து மைசூர்பாகு செய்வதென்பது இப்போது தான் தெரியும்...! மனைவிற்கு இணைப்பை அனுப்பி விட்டேன்... நன்றி...
ReplyDeleteவாங்க டிடி. இன்னும் சிலவும் செய்யலாம். மேலே படிச்சுப் பாருங்க! :)
Deleteஆஹா ..இன்னக்கி படம் எல்லாம் ரொம்ப CLEAN and CLEAR...
ReplyDeleteபார்க்கவே ஆசை வருதே....இன்னும் இதெல்லாம் நான் செஞ்சது இல்ல மா...
வாங்க அனு! பாராட்டிற்கு நன்றி. செய்து பாருங்க!
Deleteபடங்கள் அருமையா வந்திருக்கு. பார்த்தாலே சாப்பிடணும்போல் இருக்கு. உருளில கிளறினதைப் பார்க்கும்போது, என் சிறிய வயதில் இத்தகைய உருளிகளைப் பார்த்ததும், அதிலும், உயரம் கம்மியா ஆனால் 1 அடிக்கும் அடிகமான விட்டத்தோடு, திரட்டுப்பால் கிளறும் உருளியைப் பார்த்ததும் ஞாபகத்துக்கு வந்துவிட்டது.
ReplyDeleteநீங்க இனிப்பு சாப்பிடுவதற்கு (அதாவது டிபன் போன்றவைகளையும்) டயம் வைத்திருக்கிறீர்களா? மதியம் உணவுடன் ஒரு இனிப்பு, இல்லைனா, இரவு ஒரு இனிப்பு என்பதுபோல?
நெ.த. நாங்க எப்போவும் தித்திப்பு பக்ஷணங்கள் வீட்டில் தான் செய்து கொண்டு இருந்தோம். அவருக்கு நீரிழிவு பிரச்னை வந்ததும் யாரானும் வந்தால் செய்யணும்னா செய்யறதுனு ஆயிடுச்சு. பண்டிகை நாட்களில் கூட இப்போல்லாம் பாயசம்னு சாதத்தை நெய் விட்டு மிக்சியில் காய்ச்சிய பாலோடு சர்க்கரை சேர்த்து அடித்து வைப்பது தான்! பிள்ளையார் சதுர்த்தி, கோகுலாஷ்டமி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, கார்த்திகை, பொங்கல் போன்ற நாட்களில் இதைவிடச் சின்னதா ஒரு வெண்கலக் குண்டு இருக்கு. அதில் பாயசம். பொங்கலுக்கு இதைப் போல் ஓர் வெண்கலப்பானை அதில் தான் பொங்கல்! இனிப்பு சாப்பிடும் நாட்களில் எப்போ தோணுதோ அப்போச் சாப்பிட்டிருக்கோம். :))) இப்போ அப்படி இல்லை. சாப்பிட்டதும் ஓர் துண்டை இரண்டு பேருமாப் பிரிச்சுப்போம்.
Deleteகல்கத்தா அலுமினியம் சட்டி - இந்தப் படத்தைப் போடுங்க. அது என்னன்னு பார்ப்போம்.
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏற்கெனவே கல்கத்தாச் சட்டி படம் வந்திருக்கு. ஆனால் மைசூர்ப்பாகு கிளறும் பெரிய சட்டி தான் போடலை! அவ்வளவு பண்ணறது இல்லையே! மேலே இருந்து எடுக்கும்போது போடறேன். :) இன்னொரு பெரிய சட்டியை என் தம்பி மனைவிக்குக் கொடுத்துட்டேன். :) இங்கே தேவை இல்லைனு!
Deleteமைசூர் பாக் குறிப்பு, சொன்ன விதம் எல்லாமே சுவாரஸ்யம். சரியான அளவு எழுதுங்கள் கீதா! செய்து பார்க்க வசதியாக இருக்கும்.
ReplyDeleteஎனக்கு கம்பிப்பாகு மிஞ்சிப்போனால் பணியாரம் அடுத்த நாள் செய்து விடுவேன்!!
வாங்க மனோ! ஜீரா 200 மிலி. இருக்கும். பொதுவா நான் கண்ணளவு தான் எனினும் ஜீராவை ஊற்றும்போது பார்த்ததில் 200 இருக்கும்னு தெரிஞ்சது! ஒரு குழிக்கரண்டி கடலைமாவு குவித்து எடுத்துக் கொண்டேன். நெய் ஒரு சின்னக் கிண்ணம் அல்லது கடலைமாவு எடுக்கும் கரண்டியால் தலை தட்டி ஒரு கரண்டி. உங்களுக்கு மைசூர்ப்பாகு சிவந்த நிறம் வேணும்னா நெய்யை நன்கு புகை வரும்படி காய்ச்சிச் சேர்க்கவும். இல்லை மஞ்சள் நிறமே போதும்னா அப்படியே விடலாம். நான் மனப்போக்குக்கு ஏற்றாற்போல் இரு முறையிலும் செய்வேன்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteசூப்பர். மைசூர் பாகு பதிவு அமர்க்களமாக வந்திருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்.
ஜீராவை வைத்து செய்யலாமென்று அறிந்து கொண்டேன். படங்கள் மிக அழகு. வெண்கல உருளி போட்டோக்கள் என் அம்மாவை நினைவுபடுத்தியது. மலர்ந்த நினைவுகளோடு, இனிப்பான மைசூர் பாகு மிக அருமை.
இதுல என்ன ஒரு வேடிக்கை யென்றால். நானும் ஒரு மைசூர் செய்து அதை படங்கள் எடுத்து பதிவு எழுதி, எ. பி யா, என் பதிவா, என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.( என்ன ஒரு பிளாடிங் பேப்பர் போங்கள்...) அதிசயமாக இருக்கிறது. இப்போ அதை என்ன செய்வதென்று இன்னும் குழப்பம் மிகுந்து விட்டது. இடையில் சகோதரர் நெல்லை தமிழன் வேறு அவர் பங்குக்கு செய்யப் போகிறேன் என பயமுறுத்துகிறார். ஐயோ.. என்ன செய்வேன்... கடவுளே..
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, பொதுவாக வீணாகும் பொருட்களை மீண்டும் சாப்பிடும் வகையில் செய்துடுவேன். சாதம் மத்தியானம் வடிச்சது மிஞ்சினால் இரவுக்கு அதைப் பொங்கல் அல்லது வெஜிடபுள் சாதமாக மாத்துவேன். குழந்தைங்க இருந்தால் அதையே சாம்பார் சாதமாகவும் மாத்திடுவேன். இப்போ ரெண்டே பேர் தான் என்பதால் பார்த்துப் பார்த்துத் தான் சமைக்கிறேன். அப்படியும் மிஞ்சும்போது என்ன செய்வது. வத்தக்குழம்பு மிஞ்சினால் மறுநாளைக்குப் பழையது சாப்பிடலாம் என்றிருந்தால் அன்று வத்தக்குழம்பு சாதமாக்கி நல்லெண்ணெய் ஊற்றிக் கறுவடாம் வறுத்துச் சேர்ப்பேன். அன்னிக்குக் குழம்பு ஏதும் வைக்காமல் பச்சடி ஏதேனும் செய்து ரசம் வைத்துக் காய் பண்ணுவேன். அம்பத்தூரில் இருந்தவரை வீட்டு வேலை செய்யும் பெண் வருவாள். தோட்டம் பெருக்க, மாடி பெருக்க என வைச்சிருந்தோம். அவளிடம் அன்றைய சமையல் மிச்சத்தை அன்றே கொடுத்துடலாம். இங்கே அப்படிக் கொடுக்க யாரும் இல்லை.
Deleteநீங்க உங்க சமையல் குறிப்பை அனுப்புங்க. நெ.த.வும் அனுப்பட்டும். இரண்டிலும் வித்தியாசம் இருக்குமே! அப்போ ஏதேனும் புதுசாச் செய்யத் தோணும். :))) சும்மா அனுப்பி வைங்க கமலா! ஆனால் எப்போ வருதுனு ஶ்ரீராமுக்குத்க் தான் தெரியும்.
Deleteகமலா ஹரிஹரன் மேடம்... தைரியமாக நீங்களே செய்து அனுப்புங்க. நான் பெங்களூர் சென்றால், மாமனார் வீட்டில் செய்துகொடுக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். இங்கு செய்தால் நான் சாப்பிடவேண்டி வரும். இன்னும் எவ்வளவுநாள் இனிப்பே இல்லாமல் இருக்கமுடியும் என்று சோதனை செய்துகொண்டிருக்கிறேன் (வெற்றிகரமான 6வது நாள்). அதனால இப்போதைக்குச் செய்வேன் என்று தோணலை (பெண் சாப்பிடமாட்டா. மனைவி சாப்பிட்டால் உடம்புக்கு ஆகாது)
Deleteபெங்களூரில் ஒரு ஐயங்கார் பேக்கரியில் மைசூர்பாக் பார்த்தேன். (ஸ்ரீகிருஷ்ணாவின் மைசூர்பா பதம். ஆனால் அகலமா பிரவுன் மஞ்சள் கலந்து அட்டஹாசமா பார்ப்பதற்கு இருந்தது. எப்படி இந்தமாதிரி செய்யமுடியும் என்று யோசித்தேன். கிளறினப்பறம் தட்டுல கொட்டிடறோம். அப்போ யூனிஃபார்ம் கலர்தானே இருக்கும்? இது 7 கப் ஸ்வீட் இல்லையே, பல கலர்களில் கிளறி மேலே மேலே கொட்டுவதற்கு. ஒரு பீஸ் 25 ரூ என்று சொன்னான். எதற்கு எண்ணெய் உடம்புக்கு என்று வாங்கவில்லை)
திப்பிச வேலை என்றாலும் பார்க்க நல்லா இருக்கே.... பார்சல் ப்ளீஸ்! :)
ReplyDeleteஹாஹாஹாஹா! :)))))
Deleteஅளவு ஒன்றும் போடலை. ஒரு அவசரத்துக்கு ரெஃபர் பண்ணவும் வழியில்லை.
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீதா சாம்பசிவம் மேடம். இப்போ நீங்க தேங்காய் பர்பிக்கு கடலை மாவு சேர்த்தீங்கன்னு சொன்னீங்க இல்லையா? அதைத் தேடி வந்தேன்.
ஒன்றையும் கண்டுபிடிக்க முடியாத அளவுல வச்சிருக்கீங்க. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஜீரா எப்படியும் ஒரு டம்பளர் //ஒரு கரண்டி அளவு கடலைமாவு குவித்து எடுத்துக் கொண்டேன்//
Deleteபடத்துடன் அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எனக்கு எப்போதுமே கண்ணளவு தான். அதுக்குத் தான் ஜீரா அளவையும் கடலை மாவு அளவைப் படத்துடனும் காட்டி இருக்கேன்.