எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 06, 2018

அம்மாமண்டபம் படித்துறையில் நேற்று!


நேத்திக்கு அம்மாமண்டபம் படித்துறைக்குப் போனோம். சாயங்காலம் சுமார் ஐந்து மணி இருக்கும். அப்போவும் மண்டபத்திலும் கூட்டம். படித்துறையிலும் கூட்டம். கொஞ்சம் கூட்டம் குறைவாக இருக்கும் கிழக்குப் பக்கம் போனோம். அங்கே உ.பி.கோயிலைப் படம் எடுக்கையில் இந்த மனிதர் குறுக்கே வந்துட்டார். க்ளிக்கிட்டேன். :) அவருக்கு என்னமோ சந்தோஷம்.
சரினு கொஞ்சம் மேற்கே தள்ளி எடுக்கலாம்னு பார்த்தால் அங்கே ஒரு பெண் தலையை விரிச்சுப் போட்டுக் கொண்டு இருந்தார்.  அவர் முகத்தை எடுக்காமல் கொஞ்சம் மேலே தூக்கி எடுத்தும் தலை படத்தில் வந்துடுத்து. வேறே இடம் போகலாம்னா எங்கே பார்த்தாலும் கூட்டம். அதோடு பல பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். ஆகையால் எடுக்கக் கூடாதுனு எடுக்கலை. 


கொஞ்சம் ஆட்கள் காலி ஆன நேரம் பார்த்து உ.பி. கோயிலைக் க்ளிக்கிட்டேன்.  அப்போ யாரும் இல்லை. ஒரு படி மேலே போய் எடுத்தேன். ஜூம் பண்ணினது பத்தலையோ? யாருங்க அது அலட்டல்னு சொல்றது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நிஜம்மாவே ஜூம் பண்ணினேனாக்கும். போறலை போல! இங்கே சிலர் குளிக்கும், துவைக்கும் காட்சி. என்னதான் சொன்னாலும் ஷாம்பூ பாக்கெட்கள், சீயக்காய்ப் பாக்கெட்டுகள், எண்ணெய்ப் பாக்கெட்டுகள், என ஆற்றில் மிதக்கத் தான் செய்கின்றன. துணிகளைப் போடத் தனியாக ஓர் இடம் ஒதுக்கி வைச்சிருக்காங்க! ஆனாலும் ஆற்றிலும் போடுகின்றனர். நாங்க யார் சொன்னாலும் கேட்கமாட்டோமே! அம்மாமண்டபம் படித்துறைக் கோயில்களில் பிள்ளையார் மட்டும் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு இருந்தார். மற்ற சந்நிதிகள் மூடி இருந்தன. மேலே இருப்பது காவிரி அம்மன் சந்நிதி. மூடி இருந்தது. பிள்ளையார் சந்நிதிக்கும், சிவன் சந்நிதிக்கும் நடுவே உள்ள இடத்தில் பலரும் ஆடிக் கிருத்திகைக்கான காவடி ஆட்டங்களுக்குத் தங்களைத் தயார் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் இருந்த உணர்ச்சிப் பிழம்பான முகத்தைப் பார்த்துட்டுப் படமே எடுக்கக் கூடாதுனு வந்துட்டேன். வித விதமான காவடிகள். எல்லோரும் இடுப்புகளில்  மணிகளைக் கட்டிக் கொண்டு விபூதியை அள்ளிப் பூசிக் கொண்டு, காவி, சிவப்பு வண்ண உடைகள் உடுத்திக் கொண்டு வேல்களை ஏந்திய வண்ணமும் காவடிகளை ஏந்திய வண்ணமும் காணப்பட்டனர். கூட வந்த குடும்பத்தினர் பக்திப் பரவசத்துடன் அவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தனர். 


இதோ இவர் நம்ம ஆஞ்சி. ஏற்கெனவே போட்டிருக்கேன். இவருக்குத் தான் வெத்திலை மாலை சாத்துவேன். ஒவ்வொரு நாளும் மாலை சாத்த வரும்போது பட்டாசாரியார் பத்து ரூபாய் கொடுக்கணும்னு வற்புறுத்துவார். கொடுக்கலைனா மாலையைச் சாத்த மாட்டேன்னு சொல்லுவார். அதுக்காக அவர் இல்லாத நேரம் பார்த்து வந்து மாலையை நானே சாத்திட்டுப் போவேன். காலை நேரங்களில் வந்தால் பட்டாசாரியாருக்குப் பணம் கொடுத்ததும் உண்டு. என்றாலும் இந்த ஆஞ்சியைப் பார்த்துக்கனு அந்த பட்டாசாரியாரை யாரும் நியமிக்கவில்லை என்றே சொன்னார்கள். அம்மாமண்டபம் திருச்சி மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்குனு நினைக்கிறேன். ஆஞ்சிக்கு வலப்பக்கமாத் தெரியும் மேடையில் தான் நம்பெருமாள் வந்து மண்டகப்படி கண்டருளுவார்.  ஆஞ்சிக்கு எதிரே இருக்கும் இவர் ராமர் என முன்னே சொல்லி இருந்தேன். ஆனால் நேத்திக்குப் பார்த்தப்போ ராமர் இல்லைனு தோணியது. இன்னொரு நாள் போய்ப் பார்க்கணும். கிட்டக்க இருந்தாலும் அடிக்கடி போக முடியலை.  வில்லை ஏந்திக் கொண்டிருப்பதால் ராமர் தானோனும் தோணுது. யாரிடமும் கேட்டால் தெரிவதில்லை. அவங்கல்லாம் பார்த்தாலும் இதை எல்லாம் பத்தி நினைக்கமாட்டாங்களோ! படத்தைப் பெரிசு பண்ணிப் பார்த்தால் ராமராய்த் தான் தெரியறார். ஆஞ்சிக்கு எதிரே கூப்பிய கரங்களுடன் ராமரா? யாரங்கே! என் சந்தேகத்தைத் தெளிவிங்க பார்ப்போம்!

49 comments:

 1. Replies
  1. என்ன சிரிப்பு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என்ன சிரிப்புங்கறேன்! :)

   Delete
  2. வாசுதேவன் திருமூர்த்தி சார் - இந்தப் படத்தை பெங்களூரில் பெரும்பாலான கார்களில் பார்க்கிறேன். இது கார் maintenance company logo என்று தோன்றுகிறது. ஹாஹாஹா.

   Delete
  3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எந்தப் படம், ஒரே அடியா ஜிங்க் சக்க சத்தம் இங்கே வந்து கேட்குது! :P:P:P:P:P

   Delete
  4. திருமூர்த்தி சாரின் லோகோ (அவர் பெயருக்குப் பக்கத்தில் தெரிவது)

   Delete
  5. ஓ, ஆஞ்சியா? அவர் இதை மாத்திச் சில மாதங்கள் ஆகுதே! :) என்ன இருந்தாலும் முதல்லே இருந்த குட்டி ஆனை மாதிரி வராது!

   Delete
 2. நன்றி, அம்மா மண்டபம் கூட்டிப் போனதற்கு!
  ராமர் கடைசியில் வைகுண்டம் கிளம்பும் காட்சியை வடித்த சிற்பமாக இருக்குமோ? கற்பனை தான்! :)) முதலில் 'கண்டேன் சீதையை" சொன்னதற்கு நன்றியோ என்று நினைத்தேன், ஆனால் ராஜ கோலம் மாதிரித் தெரிந்தது!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மிகிமா, உடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நானும் "கண்டேன் சீதையை" சொன்னதுக்கு நன்னினு தான் நினைக்கிறேன். ஜி+இல் ஒருத்தர் சீதையை மீட்க உதவினதுக்கு ராமர் நன்றி தெரிவிப்பதாகச் சொன்னார். அதுவும் சரியாத் தான் இருக்கு!

   Delete
 3. வில்லை ஏந்திக் கொண்டிருப்பதால் ராமர் தானோனும் தோணுது. யாரிடமும் கேட்டால் தெரிவதில்லை//

  வில்லை ஏந்தி கொண்டு விஜயனும் இருப்பார், ராஜாக்களும் இருப்பார்கள். கைகூப்பிய நிலையில் இருப்பதால் விஜயன் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ராமர் தான்னு நினைக்கிறேன் கோமதி!

   Delete
  2. ராமராக இருக்கட்டும்.

   Delete
  3. நானும் விநயத்தைப் பார்த்து லக்ஷ்மணராக இருக்கலாம்னு நினைச்சேன் தான்!

   Delete
  4. ஹிஹிஹி, நெ.த.வுக்குப் போக வேண்டியது!

   Delete
 4. சந்தேகத்தை அறிந்து கொள்ள பிறகு வருகிறேன் அம்மா...

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, டிடி, ராமராத் தான் இருக்கும். அர்ஜுனனாக இருக்கலாம்னு கோமதி சொல்றாங்க!

   Delete
 5. இரண்டாவது படத்தில் பெண்ணின் கூந்தல் குடிசை வீடு போல் இருக்கிறது. முதல் படத்தில் இருப்பவர் சிரித்து இருக்கலாம்.
  பிரதோஷத்திற்கு பால் அபிஷேகத்திற்கு பால் கொடுத்தால் 10 ரூபாய் கொடுத்தால் தான் அபிஷேகம் செய்வேன் என்பார் இங்கு ஒரு கோயிலில் , நீங்கபாட்டுக்கு பாலை கொடுத்து விட்டு போய்விடுவீர்கள் நான்தானே முதுகு ஒடிய அபிஷேகம் செய்ய வேண்டும் என்பார்.

  அவர் சொல்வது போல் அண்டா அண்டாவாக பால் வருகிறது இறைவனுக்கு, அவருக்கு கை நிறைய பணம் கிடைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. அவர் எதிர்பார்க்கலை, நானும் அவர் குறுக்கே வருவார்னு நினைக்கலை. இந்த பட்டாசாரியாருக்கும் பணம் நிறையத் தான் வந்தது. பலரும் புகார் செய்ததால் இப்போ அவரை எடுத்துட்டாங்களாம். வரக்கூடாதுனு சொல்லிட்டாங்களாம். வேறொருத்தர் பண்ணுவதாகச் சொன்னார் நம்ம ரங்க்ஸ்!

   Delete
  2. வில்லேந்தி இருப்பதால்,மட்டும் ராமர்னு சொல்ல முடியாது. ராமர் வணங்கி நான் பார்த்ததில்லை கீதா.
   அது தசரதரோ ,வசிஷடரோ இருந்தாலொழிய.
   இது அர்ஜுனன் ஆக இருந்தால் பின்னாடி ஒரு கதை இருக்கணும்.
   லக்ஷ்மணனாக இருந்தாலும் இருக்கலாம்.
   படங்கள் கதை சொல்கின்றன.

   Delete
  3. ம்ம்ம்ம்ம், விசாரிக்கணும் வல்லி, இம்மாதிரி தூணைப் பார்த்தால் நின்னுடறேன்னு தான் எந்தக் கோயிலுக்குப் போனாலும் விரட்டிக் கொண்டு அழைத்து வந்துடுவார்! :)))) பல இடங்களிலும் இப்போதெல்லாம் காமிரா எடுத்துப் போகக் கூடாதுனு வேறே இருக்கா! இப்போல்லாம் போனேன், வந்தேன் என்று தான்! இங்கே தான் நிதானமாகப் பார்த்துட்டு வந்தேன். ஒவ்வொரு முறை போறச்சேயும் கூட்டம் ஜாஸ்தி இருக்கும்.

   Delete
 6. ஆஞ்சநேயருக்கு எதிரில் கருடரா என்று பார்த்தேன் (பொதுவா கருடாழ்வார்தான் எதிர்ப்புறம் இருப்பார்). லக்‌ஷ்மணர் என்று தோன்றுகிறது. லக்‌ஷ்மணருக்கு விநயமான கைகள்.

  மூன்றாவது படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. பாராட்டுகள்.

  நதியில் பிளாஸ்ட்க்/துணிகளைப் போடுபவர்கள், நதியின்மீது அக்கறை இல்லாத 'மனுசப்பயல்கள்' என்றுதான் நான் படித்திருக்கிறேன். பாவத்தைச் செய்வதற்கா நதியில் நீராடணும்?

  ரொம்ப zoom பண்ணாதீங்க. வை.கோபாலகிருஷ்ணன் சார் வீடு தெரியப்போகிறது.

  ReplyDelete
  Replies

  1. நானும் விநயத்தைப் பார்த்து லக்ஷ்மணராக இருக்கலாம்னு நினைச்சேன் தான்!வைகோ வீடு உ.பி.கோயிலுக்குப் பின்னால் வரும்! :P :P :P :P

   Delete
 7. ஜூம் எடுத்தது உண்மைதான் போலயே...

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, நாங்க உண்மை தான் பேசுவோம்! :)))))

   Delete
 8. செலவில்லாம கூட்டத்தில் இடிபடாம பயண களைப்பு இல்லாம அம்மா மண்டபம் காட்டியதற்கு நன்றிம்மா

  ReplyDelete
 9. பத்து ரூபாய்தானே? கொடுத்து விட்டுப் போவதுதானே? போனால் போறார்... இதில் என்ன போட்டி?

  ReplyDelete
  Replies
  1. ச்ரீராம், 48 நாட்களுக்கு வெற்றிலை மாலை போடணும். அதுவே சுமார் 500 ரூ ஆயிடும். அதோடு இல்லை. ஒரு நாளைக்குப் பத்து ரூபாய் கொடுத்தால் மட்டும் போதாது அவருக்கு. செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் கூடக் கொடுக்கணும். அதைத் தவிர முடியும் அன்னிக்கு மட்டும் சுமார் ஆயிரம் ரூபாய்க்கு எழுதிக் கொடுத்தார். நாங்க அதெல்லாம் முடியாதுனு சொல்லிட்டு அபிஷேக சாமான்களை நாங்களே வாங்கிக் கொடுத்து, பூ,வெற்றிலை, பாக்கு, பழம், சர்க்கரைப் பொங்கல் , வடைனு பண்ணி எடுத்துட்டுப் போயிட்டோம். அவர் பிரசாதம் மட்டும் 600 ரூ கேட்டார். நாங்க பண்ணிண்டு போனதாலே அங்கே எல்லோருக்கும் விநியோகம் பண்ணினோம். குடியிருப்பு வளாகத்திலும் எல்லோருக்கும் கொடுத்தோம்.

   Delete
  2. இந்த மாதிரி விஷயங்களில் நமக்கு அதிருப்தி வருவது இயற்கைதான். அதாவது செண்டிமெண்டோடு விளையாடுவது. புரிந்துகொள்ள முடிகிறது. எப்போதும் நான் நினைப்பது, நமக்கும் இறைவனுக்கும்தான் நேரடித் தொடர்பு.

   Delete
  3. நெ.த. அது வேறொருத்தர் வேண்டிக்கொண்டது. அவங்களுக்காக நான் செய்தேன். வெற்றிலை மாலை போட வேண்டும் 48 நாட்களுக்கு என்பது தான் சொன்னது. முடிவில் அபிஷேகம் எல்லாம் நாங்களாகத் தான் விரும்பிச் செய்தோம். அதுக்கு மட்டும் 500 ரூ கேட்டுப் பின்னர் முடிவில் 300 ரூ அதிருப்தியுடன் வாங்கிக் கொண்டார். இத்தனைக்கும் அரசு வேலையில் இருப்பவர். அவரை யாரும் இந்த ஆஞ்சிக்குச் செய்யச் சொல்லிக் கேட்கவில்லை. அவராக விரும்பிச் செய்து வருவதாகத் தான் சொல்லிக் கொண்டார்.

   Delete
 10. அவரைப் பார்த்தல் ராமர் மாதிரிதான் தெரிகிறது என்ன, ராமரேதான்.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம், யாரையானும் கேட்டுப் பார்க்கிறேன்.

   Delete
 11. கோமதி அக்கா சொல்வது போல அந்தப் பெண்ணின் தலை குடிசை போலதான் இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. ரெண்டுபேரும் சொன்னதும் பார்த்தாலும் எனக்குத் தலையாத் தான் தெரியுது. நேரில் பார்த்ததால் இருக்கும்.

   Delete
 12. படங்களை பெரிதாக்கிப் பார்க்கும்போது நன்றாய் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. அப்பாடா! வ.வா.பி.ரி.

   Delete
  2. இணையத்தில் ஏகப்பட்ட வசிஷ்டர் இல்லையோ? இருந்தாலும் படத்தைப் பெரிதாக்கிப் பார்க்காமல் பொதுவா இணையத்தில் பதிவேற்றக்கூடாது.

   Delete
  3. நெ.த. ஆமாம், என் ஆசான் ஜீவ்ஸில் இருந்து ஆரம்பிச்சு உமாநாத், ராமலக்ஷ்மி,தி.வா. எனப் பலர் இருக்காங்க! அவங்கல்லாம் பனோரமானு போட்டா நான் மனோரமாவை நினைச்சுப்பேன். அவ்வளவு புத்திசாலி!

   Delete
 13. வணக்கம் சகோதரி

  தங்கள் பதிவின் மூலம் அம்மா மண்டபம் பார்த்து தரிசனம் செய்து கொண்டேன். உ. பி. கோவில் கோபுரம் கூட தரிசித்து மகிழ்வடைந்தேன். கோடி பாவம் போக்கும் கோபுர தரிசன புண்ணியத்தை தந்தமைக்கு மிக்க நன்றிகள் சகோதரி. படங்கள் அருமையாய் வந்திருக்கின்றன.ஆற்றின் அழகு மனதை கவர்கிறது.

  கடவுளுக்கும், நமக்கும் நடுவே இடை தரகர்கள்.. ஆனால், ஆசை இல்லாமல் நேர்மையாக நடந்து கொள்ள கூடாதோ? நாமும் ஒரு பிராமணருக்கு கொடுத்த புண்ணியம் பெற்றவர்களாவோம்.என்ன செய்வது.. கலி காலம் முத்தி விட்டது.

  ஆஞ்சநேயர் அழகாக இருக்கிறார். எதிரிலிருப்பவர் ராமராகத்தான் இருக்க வேண்டும். பரஸ்பர அறிமுகத்தின் போது கைகள் கூப்பிய நிலையில் (கற்பனையில் கண்டுணர்ந்ததை) வடிக்க பட்ட சிலையாய் இருக்கலாம். ராமர் அன்பின், பணிவின் உறைவிடந்தானே.. அனைத்துமே அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, நீங்க இப்போ எங்கே இருக்கீங்க? சென்னையா? ஆம், கடவுளை நாம் கண்ணாரக் காணவிடாமல் இம்மாதிரி நபர்கள் மனதில் வெறுப்பை ஏற்றி விடுகின்றனர். ராமர் வணங்கும் கோலத்தில் உள்ள சிற்பங்கள் ஏதும் இதுவரை நான் பார்த்ததாய் நினைவில் இல்லை.

   Delete
 14. இந்த தடவை படங்கள் எல்லாம் அருமையாவே வந்து இருக்கு....

  நேரம் கிடைக்கும்போது இங்க வந்து பாருங்க..

  தாயாரின் சீர்வரிசை படங்கள்..
  https://anu-rainydrop.blogspot.com/2018/08/blog-post_4.html

  காவிரியில் எடுத்த காணோளியும்...இந்த வாரம் அங்கு வந்தும் காவிரிக்கு வரல கணவர் மட்டும் பார்த்து எடுத்து வந்தது

  https://anu-rainydrop.blogspot.com/2018/08/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. வரேன் அனுராதா! தாயாரின் சீர்வரிசைப் படங்கள் முகநூலிலும் யாரோ போட்டிருந்தாங்க! மிக்க நன்றி. நாளைக்குள் வரேன்.

   Delete
 15. ஒரு அருமையான உலாவாக இருந்தது. ஆஞ்சநேயருக்கு எதிரில் இருப்பவர் பெரும்பாலும் ராமராகத்தான் இருப்பார் என்பது என் எண்ணம்.

  ReplyDelete
  Replies
  1. இருக்கலாம் ஐயா! ராமர்னே வைச்சுக்கலாமே! :)))

   Delete
 16. நீங்கள் யாராக நினைக்கிறீர்களோ அவராகத்தெரியட்டுமே குறை சொல்ல யாருக்கு தைரியம் சொல்லுங்கள் பார்ப்போம்

  ReplyDelete
  Replies
  1. ஆஹா! ஜிஎம்பி சார், அப்படி எல்லாம் யாரையும் பயமுறுத்தியது இல்லையே! :))))

   Delete
 17. இடையூடும் நகைச்சுவை எங்களுக்கு நல்ல டானிக்!

  விஸ்வநாதன்

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, விஸ்வா, அப்படீங்கறீங்க? :))))

   Delete
 18. படங்கள் சிறப்பு.

  அம்மா மண்டபக் காட்சிகள் உங்கள் மூலம் நானும் கண்டேன். நன்றி.

  ReplyDelete