நேற்றிரவுக்கொள்ளிட மதகுகள் உடைந்த செய்தி கேட்டதில் இருந்து பரபரப்பு! இன்றைய முக்கிய வேலைக்குப் பங்கம் ஏற்படக் கூடாதெனப் பிள்ளையாரை வேண்டிக் கொண்டோம். கொள்ளிட மதகுகள் மட்டுமின்றிக் காவிரிக்கு நீர் போகும் மதகுகளும் உடையும் நிலையில் இருப்பதாகச் செய்தி காலையில் வந்தது. ஏற்கெனவே கொள்ளிடத்தில் நீர் போய்க் கொண்டிருப்பதால் இந்த அதிகப்படி நீரைக் காவிரிக்குத் திருப்பி விட்டார்கள். ஆகவே காவிரி நீர் ஸ்ரீரங்கம் வந்துடுமோனு கவலை! ஆனால் வரலை. காலை எல்லாம் வழக்கப்படி இருந்தது. என்றாலும் அம்மா மண்டபம் திறந்து விட்டதாகத் தகவல் கிடைக்கவே அங்கே போய்ப் பார்த்துச் சில படங்கள் எடுத்தோம். திரும்பத் திரும்ப அம்மா மண்டபமா என்னும் நண்பர்களுக்கு இவை வேறே கோணத்தில் எடுக்கப்பட்டவை. பொறுத்துக் கொள்ளவும். குளிக்க அனுமதி இல்லை. கரையோரங்களில் காவல் துறையினர் காவலுக்கு இருக்கின்றனர். மக்களை நீரில் இறங்க அனுமதிப்பதில்லை. தொட்டுத் தலையில் புரோக்ஷணம் செய்து கொள்ளலாம். குழந்தைகள் அருகே வர அனுமதிப்பதில்லை.
அப்பாவின் செல்ஃபி மோகத்துக்கு 2 வயதுப் பையர் ஒருவர் தன் உயிரையே கொடுத்திருக்கும் செய்தி அனைவரும் அறிந்திருப்பீர்கள்! :( சின்னக் குழந்தையைப்பாலத்துக் கைப்பிடிச் சுவரில் உட்கார்த்தி வைத்து விட்டு செல்ஃபி எடுத்திருக்கிறார் அப்பா. குழந்தை அப்படியே மல்லாக்கக் காவிரியில் விழுந்து விட்டது! :(
கீழே இன்னிக்கு எடுத்த படங்கள்.
அம்மாமண்டபம் நுழையும் இடம். வழக்கமாய் இருக்கும் கூட்டம் இன்று இல்லை.
கொஞ்சம் கிட்ட இருந்து எடுத்த படம்
பெண்கள் குளிக்கும் படித்துறை போகும் வழி! பக்கத்தில் குளியலறை, உடை மாற்றும் அறை உள்ளது. அங்கே மிக அருகே போக அனுமதி இல்லை.
அந்தப் படித்துறையிலிருந்து ஒரு காட்சி. படிகள் மூழ்கி விட்டன.
திரும்பிப் பொதுப் படித்துறைப்பக்கம் வந்தப்போ கண்ணில் பட்ட கருப்பர்! இன்னிக்குத் தான் பார்த்தேன். உடனே படம் எடுத்துக் கொண்டேன்.
பொதுப் படித்துறையில் கிழக்கு நோக்கி எடுத்த படம். தூரத்தில் தெரிவது உ.பி. கோயில். செல்ஃபோனில் ஜூம் பண்ணத் தெரியவில்லை! :(
இங்கே நின்று நீர் எடுக்கிறாங்களே இவங்க எடுக்கும் படிக்குக் கீழேயும் படிகள் உள்ளன. இந்த மேல்படி வரை நீர் வந்திருக்கு. இப்போக் குறைஞ்சிருப்பதாய்ச் சொன்னாங்க. மேல்படியில் நீர் இருந்தப்போ யாரையும் அனுமதிக்கலை!
நீரைப் பார்த்துவிட்டுச் செல்லும் மனிதர்கள்
அம்மாமண்டபத்தில் ஆஞ்சிக்கு எதிரே ஸ்ரீராமரா, லக்ஷ்மணனா என ஒரு பட்டிமன்றம் நடந்ததே, அந்தச் சிற்பம் இருக்கும் தூணுக்கு இன்னொரு பக்கம் (இது கொஞ்சம் உள்பக்கமாக இருப்பதால் இருட்டு, சரியா வெளிச்சம் இல்லை) இருக்கும் கருடாழ்வார். ஸ்ரீராமர் இருக்கும் தூணுக்கு அந்தப்பக்கம் வெளிப்பக்கம் பார்த்த வண்ணம் யாரோனு நினைச்சா நம்ம சிங்கம்!
சிரிக்கும் சிங்கம். இன்னிக்குக் காலம்பரேயே போனதால் வெளியே கிளம்பவேண்டிய அவசரம். இன்னொரு நாள் சாவகாசமாக ஒவ்வொரு தூணையும் ஆராய வேண்டும்.
நிறைவான காட்சி .மகிழ்ச்சியாக இருக்கு.
ReplyDeleteஆஞ்சனேயர், நரசிம்ஹர் காட்சி இனிமை. இத்தனை தண்ணீர் வந்தும் புதுக்கோட்டை, தஞ்சை எல்லாம் சென்றடையவில்லைன்னு படித்தேன்.
விவசாயிகளுக்குப் பயன்பட்டால் இன்னும் நன்மை. மிக நன்றி கீதாமா.
வாங்க வல்லி தஞ்சைக்கு வடவாறு வழியாப் போனா உண்டு! :) ஆஞ்சியை நேத்திக்கு எடுக்கலை. கருடாழ்வார் அவர். மங்கலாய்த் தெரியறார். இன்னொரு நாள் காமிரா எடுத்துப் போய் எடுக்கணும்.
Deleteதஞ்சைக்குத் தண்ணீர் வடவாறு வழியாப் போனா உண்டு!" என வந்திருக்கணும். "தண்ணீர்" விடுபட்டு விட்டது!
Deleteநல்ல பதிவு, அம்மா மண்டப புகைப்படங்கள் அருமை.
ReplyDeleteநன்றி கும்மாச்சி!
Deleteம்ம்ம்! என்ன சொல்வது என்று தெரியவில்லை. டேக் கேர்.
ReplyDeleteஎன்ன ஆச்சு பானுமதி? !!!!!!!!!!!!!!!!!!
Deleteநல்லவேளை சரியாகவே நரசிம்ஹரை அடையாளம் கண்டுபிடித்திருக்கிறீர்கள். மடியில்தான் இரணியனைக் காணலை.
ReplyDeleteபடியில் அவ்வளவுதூரம் தண்ணீர் வந்திருக்கிறதா?
செல்ஃபி மோக கதையை திருப்பி ஏன் எழுதுனீங்க. படித்ததிலிருந்து அந்தப் பெற்றோர் மீது அவ்வளவு ஆத்திரம். பக்கத்துல இருந்தால் பளார் என்று இருவருக்கும் கொடுத்திருப்பேன்.
எதுக்கு ரிஸ்க் எடுத்து அம்மா மண்டபத்துக்கு இப்போ போகறீங்க? அதுவும் ஆற்றுப் பக்கத்துல இந்தச் சமயத்துல போகவே கூடாது. கூட்டத்தில் இருக்கும் ஒருவன் மேலே விழுந்தாலும் நமக்குத்தான் ஆபத்து.
//நல்லவேளை சரியாகவே நரசிம்ஹரை அடையாளம் கண்டுபிடித்திருக்கிறீர்கள். மடியில்தான் இரணியனைக் காணலை.// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அஹோபிலம் போய் நவநரசிங்கங்களையும் காட்டிலேயும், மேட்டிலேயும் பார்த்துட்டு வந்திருக்கும் என் கிட்டேயேவா?
Delete//எதுக்கு ரிஸ்க் எடுத்து அம்மா மண்டபத்துக்கு இப்போ போகறீங்க? அதுவும் ஆற்றுப் பக்கத்துல இந்தச் சமயத்துல போகவே கூடாது. கூட்டத்தில் இருக்கும் ஒருவன் மேலே விழுந்தாலும் நமக்குத்தான் ஆபத்து.// இதிலே ஆபத்தெல்லாம் எதுவும் இல்லை. அம்மாமண்டபம் திறந்த தகவல்கள் மக்களுக்கு இன்னும் போய்ச் சேராததால் கூட்டமும் இல்லை. இல்லாட்டி வழியும்! நான் கூட்டம் இருந்தால் அங்கே போகவே மாட்டேன்.
Deleteசிங்கம் என்று படித்தாலே வல்லிம்மா ஞாபகம்தான் எனக்கு உடனே வருது.
ReplyDeleteஆமாம்.:(
Deleteஅம்மா மண்டபத்திலிருந்து ஆற்றுக் காட்சிகள் அப்பப்பா!
ReplyDeleteஅம்மா மண்டபத்தில் இருந்துகொண்டே அருளும் தெய்வங்கள் அம்மம்மா!
வாங்க ஏகாந்தன், அதிசயம்! அம்மாமண்டபத்தில் பிள்ளையார், காவிரிஅம்மன், நவகிரஹ சந்நிதி, விஷ்ணு சந்நிதி, ஆஞ்சி, சிவன், பார்வதி சந்நிதி, விஷ்ணு துர்கை என ஒரு கோயிலுக்கு இருக்க வேண்டிய அத்தனைபேரும் குடி இருக்கின்றனர். முன்னெல்லாம் பிரதோஷத்துக்குப் போயிட்டிருந்தோம். நிற்க முடியலை! கீழே உட்கார முடியாது! அதனால் அப்புறமாப் போவதில்லை.
Deleteஅடாத மழையிலும் விடாத பள்ளி.. என்று அந்தக் காலத்தில் சொல் வழக்கு...
ReplyDeleteஅதுபோல ததும்பும் காவிரி முதல் சிரிக்கும் சிங்கம் வரை என்று பதிவை சிறப்பித்து விட்டீர்கள்..
வாழ்க நலம்..
ஹாஹா, துரை! நன்றி. எனக்கு சிரிக்கும் சிங்கம், ஆஞ்சி, பிள்ளையார் அனைவரும் பிடித்தமானவர்கள்.
Deleteஆவ்வ்வ்வ் கீசாக்கா .. அம்மா மண்டபம் போய் வந்திட்டா. அது என்ன மண்டபம்? மக்கள் தங்கும் விடுதி போல இருக்குமோ? தண்ணி எப்படி முட்டி வந்திருக்கு, ஆனா நல்லவேளை ஆறு என்பதால் அலை இல்லை, இதுவே கடல் எனில் எப்படி இருந்திருக்கும்.. சுனாமிதான்.
ReplyDeleteஹையோ அந்த 2 வயசுக் குழந்தை.. நினைக்கவே நெஞ்செல்லாம் என்னமோ செய்யுது.. குழந்தையை அதுவும் தண்ணி அருகில் என்ன இப்படி அசட்டுத்தனம்.. இதனாலதான் எனக்கு தண்ணி விளையாட்டுக்கள். போட் சவாரி எதுவும் பிடிக்காது, ஆரையும் போகவும் அனுமதிக்க மாட்டேன்,. பெரிய ஃபெரி அல்லது கப்பல் எனில் ஓகே.
வாங்க அதிரடி, அதெல்லாம் மக்கள் தங்கும் விடுதி இல்லை. திருமலை நாயக்கர் தன் அம்மாவுக்காகக் கட்டிக் கொடுத்த படித்துறை எனச் சொல்கின்றனர். நடுவே ஒரு மண்டபம் இருக்கும். அங்கே தான் சித்ரா பௌர்ணமி அன்றும், ஆடிப்பெருக்கன்றும் நம்பெருமாள் வந்து ஒரு நாள் தங்குவார்.
Deleteஎனக்கும் தண்ணீர் அலர்ஜி தான். கங்கையில் நான் படி ஓரத்தில் முங்கிக்குளிக்க என் மாமியார் நீந்திக்கொண்டு சில கஜ தூரம் போனாங்க.திரிவேணி சங்கமத்தில் நல்லாவே நீச்சல் அடிச்சாங்க. எங்க பையர், ரங்க்ஸ் எல்லோருக்கும் நீச்சல் தெரியும். ரங்க்ஸ் கிணற்றில் குதித்துக் கீழே போய் முங்கிட்டு மேலே வருவார். திரும்ப வரும்வரை பக் பக் னு இருக்கும்.
Delete//திரும்ப வரும்வரை பக் பக் னு இருக்கும்.//
Deleteஹா ஹா ஹா எப்படி நம்பி விடுறீங்க? ஆவ்வ்வ்வ்வ்...
அதிரடி, அப்போல்லாம் அவரோட பேசவே பயம்மா இருக்கும். அதோட கிராமம், அதனாலே மாமியார், மாமனார் இருக்கும்போது கணவர் எதிரில் கூட வரக்கூடாது என்பார்கள். இது நான் கிணற்றடியில் துவைக்கும்போதோ, அரைத்துக் கரைத்துச் செய்யும்போதோ நடக்கும். நான் வேண்டாம்னு எல்லாம் சொல்ல முடியாது. கல்யாணம் ஆன மறுநாள் அவரோட பேசிண்டு ரயிலில் வந்ததுக்கே என் நாத்தனார் எல்லாம் , மதுரைக்காரப் பொண்ணு! ரொம்ப தைரியம்"னு சொல்லுவாங்க! இதெல்லாம் பேசினால்! கடவுளே! :))))
Deleteபின்னர் வருகிறேன். பூஜை ஏற்பாடுகள் மும்முரம்.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், பூஜை நல்லபடியா முடிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நானும் இன்னிக்குக் கொழுக்கட்டை பண்ணினேன். சாயந்திரம் ஓர் குஞ்சுக்குட்டிப் பயலைப் பார்க்கப் போகணும். அதுக்காக குலாப்ஜாமூன் பண்ணணும். இப்போப் போயிடுவேன்.
Deleteபடங்கள் அருமை...
ReplyDeleteஅம்மா மண்டபம் போய் வந்து படங்களுடன் பகிர்ந்து கொண்டது நல்லதுதான், ஆனால் நீர்வரத்து அதிகமாய் இருக்கும் போது அங்கு போய் இருக்க வேண்டாம். கவனம்.
ReplyDeleteவாங்க கோமதி, அவ்வளவு பயம் இல்லை. அப்படி இருந்திருந்தால் அவரே என்னைக் கூட்டிப்போயிருக்க மாட்டார்! :))))) அங்கே உள்ளேயும் விட்டிருக்க மாட்டாங்க! அபர காரியம் பண்ணுபவர்கள் எல்லாம் பண்ணிட்டு இருந்தாங்க! ஆகவே இப்போ பயன்பாட்டில் வந்துடுச்சு! :)))
Deleteஅம்மா மண்டபம் படங்கள் அழகு - இப்படி கரை புரண்டு ஓடும் நேரத்தில் அங்கே வர முடியவில்லை. அலுவலகத்தில் ஆணி அதிகம்!
ReplyDelete@Venkat,ஒருவேளை வடகிழக்குப் பருவ மழையும் குறிப்பிடத் தக்க விதத்தில் பெய்தால் நீங்க தீபாவளிக்கு வரும்போதும் காவிரியை நிறைந்த கோலத்தில் பார்க்கலாம். எப்படியோ! :)))))
Deleteஇவ்வளவு கெடுபிடிகளுக்கும் நடுவில் சென்று படங்கள் எடுத்து விட்டீர்கள். எல்லாப் படங்களும் அருமை. நான்காவது படம் காவிரியின் ப்ரம்மாண்டத்தைக் காட்டுகிறது.
ReplyDeleteஇப்போக் கெடுபிடி குறைஞ்சிருப்பதாய்ச் சொல்கின்றனர். போன வாரம் எல்லாம் அம்மாமண்டபம் வாசல் அருகே கூடப்போக முடியலை. ஓட்டல்கள், கடைகள் எல்லாம் வெறிச்சோடிக் கிடந்தது. வியாபாரமே இல்லைனு புலம்பிக் கொண்டிருந்தனர். இங்கே விடக் காவிரி நெரூரில் இன்னமும் பிரம்மாண்டமாய், வேகமாய்க் காட்சி அளிப்பாள். படித்துறைக்கு அருகேயே நீரில் இறங்கினால் இழுக்கும்.
DeleteHope you are feeling better now! :( Take care.
Deleteநன்றி அக்கா...
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. நீர் நிரம்பி கடல் மாதிரி உள்ள காவிரி பார்க்க கொஞ்சம் பயமாக உள்ளது. நீர் நிலைகள் அழகென்றாலும், அது நிரம்பி கரைபுரண்டு ஓடும் போது கொஞ்சம் அச்சத்தை ஏற்படுத்துவது இயற்கை அல்லவா?
இன்னமும் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றனவே.. நீங்கள் சொல்லியிருப்பது போல வடகிழக்கு பருவ மழை எப்படி பலன்களை தரப்போகிறதோ..
அனைத்தும் அவன் செயல்.. நீங்கள் தண்ணீர் நிரம்பிய இடங்களுக்கு செல்லும் சமயம் ஜாக்கிரதையாக இருங்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, உங்க பேத்திக்கு உடல் நிலை இப்போது தேவலையா? குழந்தைங்க படுத்துட்டா வீடே சுறுசுறுப்பில்லாமல் போயிடும்! :( விரைவில் குணமாகப் பிரார்த்தனைகள்.
Delete@கமலா, தண்ணீர் இப்போது குறைந்த அளவே வருகிறது. கொள்ளிடமும், முக்கொம்பும் போய்ப் பார்க்கணும். முடியுதானு பார்க்கலாம்!
Deleteவணக்கம் சகோதரி
Deleteஎன் பேத்தி தற்சமயம் குணமாகி வருகிறாள்.அன்புடன் விசாரித்தமைக்கும், குணமடைய பிரார்த்தனை செய்ததற்கும் என் அன்பான நன்றிகள்.
ஆமாம்.. தங்கள் கூற்று உண்மைதான்.. குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டால், எந்த ஒரு வேலையிலேயும் நமக்கும் பிடிமானம் இல்லாமல் போய் விடுகிறது. நீர்நிலைகள் இருக்குமிடங் களுக்கு ஜாக்கிரதையாக சென்று பார்த்து வாருங்கள். மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.