பாரதிக்கு அஞ்சலி!
நெஞ்சு பொறுக்கு திலையே -- இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
அஞ்சி யஞ்சிச் சாவார் -- இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார் -- இந்த
மரத்தில் என் பார்; அந்தக் குளத்தில் என்பார்,
துஞ்சுது முகட்டில் என்பார் -- மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு) 1
மந்திர வாதிஎன்பார் -- சொன்ன
மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்;
யந்திர சூனியங்கள் -- இன்னும்
எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டே -- ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்
அந்த அரசியலை -- இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார்
(நெஞ்சு) 2
சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் -- ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்
துப்பாக்கி கொண்டு ஒருவன் -- வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்
அப்பால் எவனோசெல்வான் -- அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற்பார்
எப்போதும் கைகட்டுவார் -- இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார். (நெஞ்சு) 3
நெஞ்சு பொறுக்கு திலையே -- இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் -- ஒரு
கோடிஎன்றால் அது பெரிதாமோ?
ஐந்துதலைப் பாம்பென்பான் -- அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்திடுவார் -- பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்.
(நெஞ்சு) 4
சாத்திரங்கள் ஒன்றுங்காணார் -- பொய்ச்)
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றாயிருந்தாலும் -- ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்;
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் -- தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவர்;
ஆத்திரங் கொண்டே இவன்சைவன் -- இவன்
அரிபக்தன் என்று பெருஞ் சண்டையிடுவார்.
(நெஞ்சு) 5
நெஞ்சு பொறுக்கு திலையே -- இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே
கஞ்சி குடிப்பதற்கிலார் -- அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே -- நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின்றாரே -- இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே.
(நெஞ்சு) 6
எண்ணிலா நோயுடையார் -- இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தைகள் போல் -- பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் -- பத்து
நாலா யிரங்கோடி நயந்துநின்ற
புண்ணிய நாட்டினிலே -- இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்.
நன்றி தமிழ் விர்சுவல் பல்கலைக்கழகப் பக்கம்.
நினைத்தேன், இன்று உங்களிடமிருந்து பாரதியார் பதிவு வருமென்று...
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், இன்னிக்குப் பதிவை ஒரு வாரம் முன்னாடியே ஷெட்யூல் பண்ணியாச்சு! :) முதல்லே எல்லோருக்குமாச் சேர்த்து நன்றி மட்டும் தெரிவிக்கலாம்னு தான் இருந்தேன். ஜேகே அண்ணாவின் கருத்து தனித்தனியாகச் சொல்ல வைத்து விட்டது! :(
Deleteபாரதியை நினைவு கூர்வோம்.
ReplyDeleteவாழ்க அவனது புகழ்.
வாங்க கில்லர்ஜி, ஒருவாரமாகச் சென்னையில் விழா நடக்கிறது. முகநூலில் பார்த்து வருகிறேன்.
Deleteமகாகவிக்குப் புகழஞ்சலி...
ReplyDeleteநன்றி துரை!
Deleteவாழ்க நீ எம்மான்.....
ReplyDeleteபதிவை கரெக்டா போட்டுட்டீங்க, நினைவு கூறும் விதமா...
நெ.த. அதெல்லாம் விட்டுடுவோமா என்ன? :)
Deleteகவியை போற்றுவோம் என்றும் ..
ReplyDeleteவாங்க அனுராதா, நீண்ட நாட்கள் கழிச்சு வந்தமைக்கு நன்றி.
Deleteபகிர்ந்த பாடல் அருமை.
ReplyDeleteபாரதியை போற்றுவோம்.
சமீபத்திய உச்சநீதிமன்றத்தீர்ப்புகள், ஒரு சில நிகழ்வுகளின் போக்கு! ஒரு சிலரின் ஒருதலைப்பட்சமான போக்கு! என மனதை வருத்தும் விஷயங்களாகவே கடந்த ஆறு மாதங்களாக! அதான் இதைத் தேர்ந்தெடுத்தேன்.
Deleteதேர்தலில் பாஜாக பின்னடைவு. அதுதான் "நெஞ்சு பொறுக்குதில்லையோ?" வேறு எத்தனையோ இருக்க நினைவஞ்சலிக்கு இது தான் கிடைத்ததோ?
ReplyDeleteJayakumar
பதிவு வெளியான நேரத்தைப் பார்க்கவும். இம்மாதிரி எல்லாம் கூட யோசிக்க முடியும் என்பது இப்போத் தான் தெரிகிற்து. :((((( அதோடு இதை ஷெட்யூல் பண்ணி ஒரு வாரம் ஆகிறது!
Deleteஇன்றும் நெஞ்சு பொறுக்குதில்லை அதே குணங்கள்
ReplyDeleteஆமாம்.மாறியவர் யார்?
Deleteநெஞ்சு பொறுக்குதில்லையே எக்காலத்துக்கும் பொருந்திப் போகும் போல.
ReplyDeleteமகாகவிஞனுது புகழ் நிலைத்திருக்கும்!
துளசிதரன், கீதா
சில விஷயங்கள் எக்காலத்துக்கும் பொருந்திப் போவது என்பதால் தான் இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்தேன். அதுவும் இந்த நீதிமன்றங்கள் கொடுக்கும் தீர்ப்புகள்! :(
Deleteநினைவுகூர்ந்த விதம் நன்று.
ReplyDeleteநன்றி முனைவர் ஐயா!
Deleteஏன் கீசாக்கா நெஞ்சு பொறுக்குதில்லை?.. எப்பவும் பாரதியார் சொன்னதையே சொல்லாமல், நீங்கள் ஏதும் புதுசா அவருக்காகப் பாடலாம் எல்லோ..
ReplyDeleteவாங்க ஞானி! எங்கே உங்க செக்? ஆளே அகப்பட மாட்டேன் என்கிறாரே! பாரதியார் சொன்னதை விட அதிகமா நான் என்ன சொல்லப் போறேன். அதோடு எனக்குக் கவிதை எல்லாம் எழுத வராது. கடுமையான வார்த்தைப் பிரயோகங்களில் ஏதானும் சொல்லிடுவேன். :)
DeleteIntha padalin vilakam podunga••••
ReplyDeleteதமிழக மக்களின் இப்போதைய நிலைமை! :(
Delete