எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 23, 2018

களி சாப்பிடுங்க, அப்புறமா வரேன்!







திருவாதிரை கொண்டாடியாச்சு! இனி அடுத்து நம்ம ஆஞ்சுவிற்குத் தான்! ஜனவரி ஐந்தாம் தேதினு நினைக்கிறேன்.


36 comments:

  1. ஏட்டுச்சுரைக்காய் கூட்டுக்கு உதவாது.
    ஒரிஜினல் பார்.....சல்....

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஹா...

      கில்லர்ஜி!! அல்ரெடி எல்லாம் போனியாயாச்சு...நீங்க பந்திக்கு முந்திக்கிட்டாலும்...ஹிஹிஹி

      கீதா

      Delete
    2. ஹாஹாஹா, கில்லர்ஜி வாங்க, செய்து தரேன். :)

      Delete
    3. ஆமாம், தி/கீதா, இன்னிக்குக் களி போணி ஆகிவிட்டது! :)

      Delete
  2. களியும் கூட்டும் !
    படம் அருமை.
    திருவாதிரை களியில் பாசிப்பருப்பு வறுத்து போடுவோம்.பச்சரிசியை வறுத்து பொடி ரவையாக பொடித்து கொள்வோம். மற்றது எல்லாம் நீங்கள் சொன்ன செய்முறைதான்.
    செய்முறை போய் படித்து விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, மாமியார் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு முழுசாப் போடுவாங்க! அவங்களுக்கெல்லாம் நறுக், நறுக்கென்று வாயில் அகப்பட்டால் பிடிக்கும். இங்கே நம்மவருக்கு நேர்மாறாக! து.பருப்பு ஊற வைச்சு ஜலம் கொதிக்கையிலேயே போட்டுடுவேன். பின்னர் வெல்லம் சேர்த்துக் கொதித்ததும் மாவைக்கொட்டிக் கிளறும்போது உருத்தெரியாமல் போயிடும்.அப்படித் தான் இங்கே பிடிக்கும்.

      Delete
  3. கீழ் பலகையில் ஏதோ மொழியில் எழுதி இருக்கிறதே

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராமஜெயம் श्री रामजयम என்று எழுதியிருப்பதைச் சொல்றீங்களா ஜி.எம்.பி சார்?

      Delete
    2. வாங்க ஜிஎம்பி சார், அது தான் நெல்லைத் தமிழர் சொல்லிட்டாரே! ஶ்ரீராமஜயம் தான்! சம்ஸ்கிருதம், ஹிந்தி இரண்டிலும் எழுதினால் இப்படித் தான் எழுதணும். அதுக்கு இருபக்கமும் சங்கு, சக்கரம், நடுவில் கோலம், கோலத்தின் கீழ் விஷ்ணு பாதம், லக்ஷ்மி பாதம்!

      Delete
  4. திருவாதிரை வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, இரண்டு வருடம் இருக்குமா, நீங்க வந்து? வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  5. கீதாக்கா ஒவ்வொரு வருஷமும் நான் தாளகம் அப்புறம் தனியா சேர்த்த கூட்டும் ரெண்டும் கொஞ்சம் கொஞ்சம் செய்யறதுண்டு. எங்க வீட்டு சென்னை பீப்பிள்க்கு ஒரு சிலருக்கு தனியா சேர்த்தது பிடிக்கும்...ஒரு சிலருக்கு தாளகம்... இன்று உங்க ரெசிப்பிதான் செஞ்சேன்....உங்க தாளகம் (நெல்லை மாட்டிக்கிட்டார்) ப்ளஸ் தனியா சேர்த்த கூட்டு ரெசிப்பி (வாங்க சாப்பிடலாம்....) ரெண்டு வகையும் கொஞ்சம் கொஞ்சம் செஞ்சேன்.

    நல்லா வந்துது கீதாக்கா...மிக்க நன்றி...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா/தி. இங்கே ஒரு ஏழுதான் குழம்பே செலவு செய்ய முழிக்க வேண்டி இருக்கு. இரண்டு விதம் செய்தால் எனக்கெல்லாம் செலவே ஆகாது. அதிலும் நாங்க இரண்டு பேர் தானே!

      Delete
  6. ஆஞ்சுவிற்கு இங்கு எங்கள் ஏரியாவில் கோயிலில் கொண்டாடிட்டாங்க...

    ஜனுவரி 5 ஆம் தேதியும் கொண்டாடிட்டா போச்சு....வருஷத்துல் ஜனுவரி டிசம்பர் ரெண்டு நாள் போடுறாங்க காலண்டரில்....அப்புறம் ஏப்ரல்ல ஸ்ரீராமநவமி கொண்டாடும் போதும் ஹனுமத் ஜெயந்தி கொண்டாடுறாங்க சிலர்...ராமநவமி 10 நாள் கொண்டாடுறவங்க...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, வடமாநிலங்களிலும், ஆந்திராவிலும் பங்குனி மாசக் கடைசியில் தான் ஹனுமத் ஜயந்தினு சொல்றாங்க. அப்போத் தான் கொண்டாடுவாங்க! எனக்குத் தெரிஞ்சு இங்கே தமிழ்நாட்டில் தான் மார்கழி மாதம் மூல நக்ஷத்திரத்தன்று கொண்டாடுகிறோம். அதையும் முன்னாலேயே உங்க ஏரியாவிலே கொண்டாடிட்டதாச் சொல்றீங்க! ஆச்சரியம் தான்! நீங்க ஜனவரி, டிசம்பர்னு பார்க்காதீங்க! மார்கழி மாசம்னு பாருங்க! மார்கழி மாத அமாவாசையும் மூல நக்ஷத்திரமும் சேர்ந்து வந்தால் அன்று நமக்கெல்லாம் அனுமத் ஜயந்தி. சில சமயங்களில் மார்கழி மாதப்பிறப்பில் முதலிலேயே அமாவாசை வந்துடும். அப்போ டிசம்பரில் வந்திருக்கும். சில சமயம் டிசம்பர் மாதக் கடைசியிலும் வரும். ஒரு வருஷம் போகியன்று அமாவாசையும் அனுமத் ஜயந்தியும் சேர்ந்து வந்தது. அப்படியும் வரும். திதியும் நக்ஷத்திரமும் கணக்கில் எடுத்துக்கணும்.

      Delete
  7. நீங்க எங்கள்கிட்ட சொன்னீங்களா இல்லை சுவாமிகள்ட சொல்லிட்டு சன்னிதியை விட்டுப் போயிட்டீங்களா?

    சரியாத் தெரியாததுனால என்ன பண்ணறதுன்னு யோசிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழரே, பேசாம அங்கே இருங்க! இங்கே இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சுட்டு வரேன். அதுவரைக்கும் அப்படியே இருங்க! இஃகி, இஃகி, இஃகி!

      Delete
    2. திருவாதிரைக்களி பண்ணியாச்சு. அதுக்கு அப்புறம் என்ன வேலை? பாத்திரங்கள்லாம் தேய்த்து கிச்சனை ரெடி பண்ணற வேலையா?

      திருவாதிரைக்களியை வெறும்னவே சாப்பிடலாம் (மைல்ட் இனிப்பு இருக்கும்). அதுக்கு எதுக்கு 7தான் கூட்டுன்னு ஒண்ணு. பாயசத்துக்கு அப்பளாம் தொட்டுண்டு சிலர் சாப்பிடற மாதிரியா இல்லை 7தான் கூட்டு இருக்கறதுனால இனிப்பை ரொம்பக் கம்மியாக்கிடுவீங்களா?

      Delete
    3. இனிப்பு அதிகமாப் போடுவேனே தவிர்த்துக் குறைப்பது எல்லாம் இல்லை. ஒண்ணும் தொட்டுக்காமலும் சாப்பிடலாம். அது என்னமோ இந்தக் குழம்புனு காலா காலமாப் பண்ணிட்டு இருக்காங்க. சேந்தனார் அவர் வீட்டுக் கொல்லையில் கிடைச்ச கீரை, காய் வகைகளைப் போட்டுத் தான் குழம்பு செய்ததாய்ச் சொல்வாங்க. நாம தான் வக்கணையா மாத்தி இருக்கோம். :))))

      Delete
    4. ஒரு நாள் திருவாதிரைக் களி சாப்பிட (குழம்புலாம் வேண்டாம்.. ஆளை விடுங்கள்) உங்கள் வீட்டிற்கு வரணும். ஆமாம், அதில் முந்திரிலாம் போடுவீங்களா இல்லையா?

      Delete
  8. களியும் கடவுளும் அருமை.

    நாங்களும் களி, கூட்டு செய்து களிப்படைந்தோம். நன்றாகவே இருந்தது.

    ReplyDelete
  9. திருவாதிரைக் களிபற்றி வருஷக்கணக்காகக் கேட்டுக் கேட்டு.. இன்னும் சாப்பிட வாய்ப்பு வரவில்லை!

    ஜெய்வீர் ஹனுமான் பெங்களூருவில் வியாழக்கிழமையே (20/12) விசிட்டடித்துவிட்டார்! கொஞ்சமாக என்று சொன்னதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல், பிளேட் நிறைய கேசரி கொடுத்தார்கள். சாப்பிடமுடியவில்லை! தமிழர்களின் சிக்கனச் சின்னமான தொன்னைபற்றி இவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

    இங்கே ஹனுமான் பக்தர்கள் அதிகம். கோவில்களும் அங்குமிங்குமாக எங்கும் வியாபித்து, கன்னடநாட்டை அந்தக் காலத்திலிருந்தே ஜாஸ்தி முண்டமுடியாமல் கவனித்துவருகிறார்போலும் ஆஞ்சனேயர்!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு எப்போ முடியுமோ அப்போ ஸ்ரீரங்கம் வாங்க. ஒரு நாள் முன்னாடி சொல்லிட்டால் நீங்க வரச்சே திருவாதிரை இல்லைனாலும் களி பண்ணிக் குழம்பும் செய்து தருகிறேன். அது ஏன் பெண்களூரில் சீக்கிரமே கொண்டாடி இருக்காங்க? தெரியலை! பஞ்சாங்கத்தைப் பார்த்தால் ஏதானும் தெரியுமானு பார்க்கிறேன்.

      Delete
    2. இப்போதைய சென்சேஷனல் பேச்சும் தலைப்பும் அனுமனின் ஜாதி பத்தி இல்லையோ? :))))) எல்லோருக்கும் பித்துப் பிடித்திருக்கிறது. :(

      Delete
    3. பக்தர்கள் பிரச்னையில்லை. நாஸ்திகர்களும் நம்பாதவர்களும்கூட பிரச்னையில்லை. நடுவிலே ஓலமிட்டுத் திரியும் இந்த அறிவிலிகளை என்ன செய்வதென்றுதான் புரியவில்லை இந்த நாட்டில்!

      Delete
    4. //பிளேட் நிறைய கேசரி கொடுத்தார்கள். சாப்பிடமுடியவில்லை!// - இது எங்க ஏகாந்தன் சார்? ராகிகுட்டா ஹனுமான் கோவில் இதோ பக்கத்தில்தான் இருக்கு (ஜெபி நகர்)

      Delete
    5. அடுத்தமுறை ஸ்ரீரங்கம் வருகையில் உங்கள் வீட்டு முகவரியை ஞாபகமாகக் குறித்துக்கொண்டு வரப் பார்க்கிறேன்!

      Delete
    6. @ நெல்லைத் தமிழன்: //..இது எங்க..//

      ஹனுமான் மந்திர், ஐடிபிஎல் மெய்ன் ரோட், ப்ரூக்ஃபீல்ட். சின்ன கோவில், பண்டிகைப் பெருங்கூட்டம், ப்ளேட் ததும்பும் பிரசாதம்.

      Delete
  10. ஆவ்வ்வ்வ் கீசாக்கா களி செய்திட்டா....

    அது சாமந்திப்பூக்களோ இல்ல செவ்வந்தியோ அழகா இருக்கு.

    பொதுவா இந்தியாவில் சுவாமியை நிலத்திலதானே வைச்சிருப்பினம் நீங்க இலங்கையர்கள்போல உயரத்தில் வச்சிருக்கிறீங்க, இலங்கையில் நாங்க எப்பவும் நம் கழுத்தளவு[இடுப்புக்கு மேல்] உயரத்துக்கு பிளேட் கட்டி அல்லது இப்படி கபேர்ட் மேல்தான் வைப்போம் நிலத்தில் வைப்பதில்லை..

    ReplyDelete
    Replies
    1. ராமருக்கு வைக்காமலா அதிரடி, படம் எடுக்கையில் அந்த மாதிரி எடுத்திருக்கேன். இது என்னோட தப்புத் தான். பூக்களும் சேர்ந்து தெரியுதானு கவனிக்கலை. பல சமயங்களில் மாலையே தொடுத்துப் போட்டிருப்பேன். இம்முறை மாலை கட்டவில்லை. சாமந்தி இல்லை, ஜவந்திப்பூவிலேயே கொஞ்சம் வேறே வகை! பழைய மாதிரி ஜவந்திப்பூக்கள் இப்போல்லாம் அரிதாகவே கிடைக்கின்றன.

      Delete
    2. எனக்குத் தெரிஞ்சு எங்க வீடுகளில் எல்லாம் ஸ்வாமி அலமாரினு ஒண்ணு செய்து அல்லது வீடு கட்டும்போதே கட்டி அதில் தான் ஸ்வாமி படங்களை வைப்போம். தரையில் எல்லாம் வைக்க மாட்டோம்.

      Delete
  11. ஏன் ராமர் பட்த்துக்கு பூ வைக்கவில்லை? வைக்கக்கூடாதோ? எனக்கு களி வகையே பிடிக்காது ஆனா புடிங் பிடிக்கும்:)..

    ReplyDelete
    Replies
    1. பதிலை மேலே கொடுத்துட்டேன். இஃகி, இஃகி!

      Delete
  12. சிவ..சிவ...

    நான்
    கடைசி பந்தியோ!..
    கடை சிப்பந்தியோ!..

    களி எல்லாம் களித்தாயிற்று!..
    கடையும் கட்டியாயிற்று!..

    ஈசனருள் எங்கும் நிறையட்டும்...

    ReplyDelete
    Replies
    1. அதனால் என்ன துரை! வந்தீங்களே அதுவே போதும். உங்க பிரச்னைகள் சரியாகி இருக்கும் என நம்புகிறேன். வரும் புத்தாண்டில் நல்லபடி வேலையில் முழுத் திருப்தியோடு இருக்கவும், பிரச்னைகள் இல்லாமல் இருக்கவும் பிரார்த்தனைகள்.

      Delete