எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, December 20, 2018

அடுத்த உற்சவம் நடராஜருக்கு!

ரத்னாங்கி சேவை க்கான பட முடிவு

ரத்னாங்கி சேவை. படத்துக்கு நன்றி கூகிளார்

நடராஜனும், ரங்க ராஜனும் என்றால்  நம்ம ஸ்ரீரங்கத்தில்
கோவில் கொண்டிருக்கும் ரங்கநாதரையும், சிதம்பரத்தில் கோவில் கொண்டிருக்கும்  நடராஜரையும்தான் சொல்வார்கள். சைவர்களின் கோயில் சிதம்பரம் என்றால், வைணவர்களின் கோயில் ஸ்ரீரங்கம் என்று எல்லாருக்கும் தெரியும். நமக்கெல்லாம் பிறப்பு, இறப்பு என்று இருக்கிற மாதிரி இவங்களுக்குக் கிடையாது.  அப்படி நினைக்கவும் கூடாது. சிவன் காலத்துக்கு எல்லாம் காலன் என்று சொல்லப் படும் காலகாலன் என்றால் விஷ்ணுவோ என்றால் எங்கும் பரவி, வியாபித்து, எல்லாரையும் படைத்துக் காத்து அருளுபவர். "ஷ்ரவண" என்று சொல்லப் படும் திருவோண நட்சத்திரத்தின் அதி தேவதையான விஷ்ணுவை நாம் ஆராதித்தோமானால் அந்த நட்சத்திரத்தையும் ஆராதித்த மாதிரி ஆகும். அது போல் சிவனை
ஆராதித்தோமானால் அவர் அதிதேவதையாக இருக்கும் "திருவாதிரை" நட்சத்திரத்தை ஆராதித்த மாதிரி ஆகும். இதில் சிவன் சற்றுச் சூடாகவும், விஷ்ணு சற்றுக் குளிராகவும் இருக்கிறார். எப்படின்னு பார்த்தால் இந்த உலகிலேயே குளிர்ச்சியும் இருக்கிறது. சூடும் இருக்கிறது. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. ஒன்றை வைத்துத் தான் மற்றது. வேறுபாடு கிடையாது. நம்ம உடம்பிலேயே இரண்டும் இருக்கிறது. சூடு மட்டும் அதிகம் ஆனால் "காய்ச்சல்" என்கிறோம். குளிர்ச்சி அதிகம் ஆனாலோ நாமே இருக்க மாட்டோமே!

ஆகவே இரண்டும் இருக்க வேண்டும்.குளிரின் சூட்சும ஆற்றல் விஷ்ணு என்றால், சூடின் சூட்சும ஆற்றல் சிவன் ஆவார். பனி படர்ந்த கைலையில் இருக்கும் சிவன் சூடாகத் தானே இருக்க வேண்டும்? பாற்கடலில் இருக்கும் மஹாவிஷ்ணுவோ அதற்கேற்பக் குளிர்ச்சியாக இருக்கிறார் அல்லவா? ஒரே பொருளின் இரண்டு பகுதிகளான இவர்கள் இருவரும் ஒருவரே! அவர்தான் சங்கரநாராயணன் என்று சொல்கிறோம். "உமையொரு பாகன்" என்றும், "அர்த்த நாரீஸ்வரர்" என்றும் சொல்கிறோம். என்னடா வென்று பார்க்கிறீர்களா? ச்யாமளனும் அவனே! ச்யாமளையும் அவளே! நாராயணனும் அவளே! நாராயணியும் அவனே! மாயனும் அவனே! மாயையும் அவளே! வைஷ்ணவனும் அவளே! வைஷ்ணவியும் அவனே!

சிவசக்தி பேதத்தில் புருஷ சக்திதான் திருமாலாக வணங்கப் படுகிறது. பொதுவாகப் பெண்களை வலப்பக்கமாய்ப் படுக்கச் சொல்வதுண்டு. பள்ளி கொண்டிருக்கும் எம் பெருமாளைப் பாருங்கள். வலப்பக்கமாய்த்தான் ஒருக்களித்துப் படுத்திருப்பார். இவர் நன்கு தூங்க, ஆடவல்லானோ ஆடிக் கொண்டிருக்கிறான். எப்படிப் பட்ட ஆட்டம்? ஆனந்தக் கூத்து ஒரு சமயம்,ஆக்ரோஷக் கூத்து ஒரு சமயம், அமைதியான நடனம் ஒரு சமயம்,
பக்தர்களுக்கு அருள ஒரு சமயம். நாமே பாருங்க, நமக்கு மனதுக்குப் பிடித்த ஒரு காரியம் நடந்தாலோ., அதிக மகிழ்ச்சியான மன நிலையிலோ ஆடலாம், பாடலாம்,. குதிக்கலாம் போல் இருக்குன்னு சொல்வோம். சிலபேர் ஆடிப்பாடிக் குதிக்கவும் செய்வோம். தூக்கமும் மன நிம்மதியில் தான் நல்லாத் தூங்கினேன்னு சொல்வோம்.

இந்த இடையறா ஆட்டமும் சரி, அந்த இடையறாத் தூக்கமும் சரி எதுக்கு? நம்மை உய்வித்து வாழ்வாங்கு வாழ வைக்கத்தான். காலை எப்போ வருது? மாலை எப்போ வருது? இரண்டும் எப்போ சேருது? எப்போ பிரியுது? யாராலும் சொல்ல முடியுமா? முதலில் மாலை வந்ததா? இரவு வந்ததா? அல்லது காலை வந்ததா? பகல் வந்ததா? பதில் சொல்ல முடியுமா? இரண்டும் ஒரே சமயம் வருகிறது, வந்தது போல் போகிறது. இருள் நீங்கினால் கவலை இல்லை. ஒளி வந்தால் களிப்பு, சந்தோஷம், மகிழ்ச்சி. ஆகவே கவலையற்ற நிலையை ஸ்ரீரங்கநாதனின் திருப்பள்ளியும், களிப்புற்ற நிலையை நடராஜரின் திரு நடனமும் நமக்கு உணர்த்துகின்றது. இரண்டுமே பொன்னரங்கம், பொன் சபை ஆகும். எங்கும் வியாபகமாய் இருக்கும் திருமால் ரங்கராஜனாய்த் திருவரங்கத்தில் கவலையற்ற நிலையில் திருப்பள்ளி கொண்டிருக்கிறார். "பூலோக வைகுண்டம்" எனப்படும் ஸ்ரீரங்கத்தில் டிசம்பர் மாதம்18ஆம் தேதி  செவ்வாய்க்கிழமை அன்று "வைகுண்ட ஏகாதசி"ப் பெருநாள் கொண்டாடப் பட்டது. சிதம்பரத்தில்  நடராஜரோ  நம் எல்லாருடைய
நலனுக்காகவும் களிப்புற்ற நிலையில் இடைவிடாது ஆடிக் கொண்டிருக்கிறார். டிசம்பர் 23-ம் தேதி ஞாயிறு அன்று "பூலோகக் கைலாயம்" என்று அழைக்கப் படும் சிதம்பரத்தில் "ஆருத்ரா தரிசனம்" நடைபெறுகிறது. அனைவரும் சிவ, விஷ்ணு பேதங்களை மறந்து, சிவசக்தி ஐக்கியத்தை நினைத்து ஒன்றில்லாமல் மற்றது இல்லை என்றப் பேருண்மையைப் புரிந்து கொண்டு இருவரையும் வணங்கி இறை அருள் பெறுவோமாக.
முத்தங்கி சேவையை விசேஷமாக சொல்வது ஏன்?

படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக மாலை மலர். ஆனால் கர்பகிரஹத்தில் நம்பெருமாள் இல்லை. யாகபேரர் மட்டும் பெருமாளின் காலடிப்பக்கம் ஓரமாக இருக்கார். எட்டிப் பார்த்து நலம் விசாரிச்சுட்டு வந்தேன்.


இன்னிக்குப் பெரிய ரங்குவின் முத்தங்கி சேவையைப் பார்க்கப்போனோம். கோயிலோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்களைக் கலந்து ஆலோசித்துக் கொண்டு மதியம் இரண்டு மணிக்குக் கிளம்பினோம். எங்கே ஆரம்பிச்சு எங்கே முடிகிறது என்பதே தெரியாமல் வரிசைகள், வரிசைகள், வரிசைகள். ஏதோ ஒரு வரிசையில் நின்றோம்.  யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாமல் கன்னாபின்னாவென அனைவரும் நிற்க அது 250 ரூ சீட்டுக்கான வரிசையானு சந்தேகமாவே இருந்தது. இருந்தாலும் பலரும் அங்கேயே நின்றதால் நாங்களும் நின்றோம். அது 250 ரூபாய்ச் சீட்டு வரிசையில் கொண்டு விட்டது. இதுக்கு நடுவில் நான் ஒரு பக்கம் போய்விட ரங்க்ஸ் என்னைத் தேடப் பின்னர் கண்டு பிடித்துக் கொண்டு போய்ச் சேர்ந்தேன். இரண்டரை மணிக்கு வரிசையில் நின்றதுக்கு நாலு மணிக்குத் தான் டிக்கெட்டே வாங்க முடிந்தது. நம்பெருமாள் ஆயிரக்கால் மண்டபத்தில் இருக்கார். அங்கே அப்போத் திரை போட்டுட்டாங்க என்பதால் பெரிய ரங்குவைப் பார்த்துட்டுப் பின்னர் வரலாம்னு போனோம். ரங்குவைப் பார்த்துட்டு வெளியே வரச்சேயே நாலே முக்கால் ஆயிடுச்சு. முகமும், பாத தரிசனமும் திவ்ய தரிசனமாகக் காட்சி அளிக்க உடலோடு ஒட்டிய முத்தங்கி, மஸ்லின் துணியால் போர்த்தப்பட்டுப் பெரிய பெருமாள் அரிதுயில் (அறிதுயில்?) கொண்டிருக்கார். தெரிந்தவர் ஒருத்தர் இருந்ததால் யாரும் விரட்டும் முன்னர் பெருமாளை நன்றாகப் பார்த்துக் கொண்டேன். நம்ம ரங்க்ஸ் தான் முகத்தையும், பாதத்தையும் தவிர்த்து வேறே எதுவும் பார்க்கலைன்னார்.

அங்கே இருந்து வந்து பரமபத வாசல் வழியாகத் தாயார் சந்நிதிக்கு வந்து சேர்ந்தால் அங்கேயும் 50 ரூ சீட்டுக்கே பெரிய வரிசை! வரிசையில் நின்றுசீட்டு வாங்கிக் கொண்டு தாயார் சந்நிதியில் திவ்ய தரிசனம் கிடைத்து மஞ்சள், பூப் பிரசாதம் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தோம். அதுக்குள்ளே ஆயிரக்கால் மண்டபத்தில் கூட்டம். எனக்கும் அதிக நேரம் நின்றதால் கால்வலி. நம்ம ரங்க்ஸ் என்னால் இனிமேல் முடியாது. நம்பெருமாளை மட்டும் தனியாக இன்னொரு நாள் வந்து பார்த்துக்கலாம்னு சொல்லிட்டார். 250 ரூ டிக்கெட் வாங்கினவங்களுக்கு விஜயா வங்கி சார்பாக ஓர் பையில் அரை லிட்டர் குடிநீர் பாட்டில், ஒரு மைசூர்ப்பாகு, ஒன்பது பிஸ்கட்டுகள் அடங்கிய சன் ஃபீஸ்ட் பிஸ்கட் பாக்கெட், கல்கண்டு பாக்கெட், கீதை, ஸ்லோகங்கள் அடங்கிய புத்தகம், மஞ்சள் பொடி எல்லாம் கொடுத்தார்கள். பிஸ்கட்டுகள் தேங்காய் பிஸ்கட்டுகள். அங்கேயே பசியாக இருந்ததால் சாப்பிட்டு விட்டேன். மைசூர்ப்பாகை வீட்டுக்கு வந்து சாப்பிட்டேன். நெ.த.வை நினைத்துக் கொண்டு. நல்ல நெய் விட்ட (நிஜம்மாவே) மைசூர்ப்பாகு! ரசித்துச் சாப்பிட்டேன்.

கடந்த இரண்டு நாட்களாக சிடி யூனியன் வங்கி சார்பாக லட்டு, பிஸ்கட் போன்றவை அடங்கிய பைகள் கொடுக்கப்பட்டதுனு அங்கே கோயில் ஊழியர் ஒருத்தர் சொன்னார்.


திருவாதிரை பற்றிய சிறப்புப் பதிவுகளை வரும் நாட்களில் காணலாம். 

51 comments:

  1. மனுஷனுக்கு ஸ்வீட்டை ஞாபகப்படுத்தாமல் இருக்கமுடியாதே....

    மைசூர்பாக் - யம்மி... பாருங்க.. பெரிய பெரிய விஷயம்லாம் இடுகைல சொல்லியிருக்கீங்க. முத்தங்கி சேவையோடு அரங்கனையும் போட்டிருக்கீங்க. ஆனாலும் இடுகை முடிந்ததும் 'மைசூர்பாக்' மற்றும் 'லட்டு'தான் மனசுல நிற்கிறது. எனக்கெல்லாம் எப்போ பக்தி வந்து.....

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத் தமிழரே! இறைவனை இனிப்போடு வணங்குவோமே! ஒண்ணும் சொல்ல மாட்டார்! :)))

      Delete
  2. திருவிடை மருதூரில் தாயார் (அம்பாள்) சன்னிதி அர்ச்சகர், 'சிவ' என்பதற்கும் 'ஹரி' என்பதற்கும் ஒற்றுமை வேற்றுமைகளைச் சொன்னார். எனக்கு அதுதான் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. நெ.த. பொதுவாக சிவன் கோயில்களில் குருக்கள் விளக்கங்கள் கொடுப்பது அபூர்வம். உங்களுக்குக் கிடைச்சிருக்கு.

      Delete
    2. அதுக்கு காரணம் எங்கேயோ சொல்லியிருந்தேன். நான் நேரே அம்பாள் சன்னிதியை சேவித்துவிட்டு எப்படி சிவன் சன்னிதிக்குச் செல்வது என்று கேட்டதற்கு அவர், சிவன் கோவிலில், நந்தி, சிவன் அப்புறம் அம்பாள் என்ற வரிசைப்படிதான் தரிசனம் செய்யணும்னு சொல்லி நீண்ட விளக்கங்கள் கொடுத்தார்.

      கீசா மேடம் - என் பயணங்களில் நான் கண்டது, பெரிய பெரிய கல்வியில் சிறந்தவர்கள் (ஆன்மீகத்தில்), சாதாரண வாழ்க்கையை அவங்க அவங்க இருக்கற ஊர் கோவிலோடு இணைத்து வாழறாங்க. அவங்களும் நல்லாத்தான் வாழறாங்க இறைவன் காலடியில், பணத்தைத் தேடி ஓடுகிற நாங்களும் வாழ்க்கையை ஓட்டுகிறோம். எதில் பெருமை?

      Delete
  3. ஆளுக்கு ஒரு பாக்கெட் கொடுத்தார்களா இல்லை அவருடையதையும் சேர்த்து நீங்கள் ஸ்வாஹாவா (ஷுகர் என்ற நொண்டிச்சாக்கில்)

    ReplyDelete
    Replies
    1. ஆளுக்கு ஒரு பை! ஹிஹிஹி! மைசூர்ப்பாகு, பிஸ்கட் எல்லாத்தையும் நான் தான் சாப்பிட்டேன்னு வைச்சுக்கோங்க! இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க?

      Delete
    2. அவர் பாவம்... தானும் தரிசனம் செய்யணும் என்ற நல்லெண்ணத்தில் மனைவி தன்னை கோவில்களுக்கெல்லாம் கூட்டிச் செல்கிறார் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். இனிப்பு பிரசாதங்களையெல்லாம் கவர்வதற்குத்தான் இந்த பிளான் என்று அவருக்குத் தெரியலை. என்ன இருந்தாலும் ஆண்கள் நாங்கள் எப்போதுமே அப்பாவிகள்தாம் (அதற்காக தாய்க்குலங்கள், 'அடப்பாவி'கள்தாம் என்று சொல்லலை) ஹா ஹா.

      Delete
  4. படிச்சுட்டேன். அப்பால வர்றேன்.

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், எப்பாலே? ஆளையே காணோமே!

      Delete
  5. பெரிய பெருமாளைத் தரிசனம் செய்து கொண்டேன்...
    திருவாதிரை பற்றிய சிறப்புப் பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்...

    ஹரி ஓம் நம சிவாய..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, நல்லதே நடக்கப் பிரார்த்திப்போம். விரைவில் உங்கள் மன வருத்தங்கள் நீங்கப் பிரார்த்தனைகள்.

      Delete
  6. வணக்கம் சகோதரி

    தங்கள் எழுத்து நடையே ரசிக்கத் தக்கவண்ணம் மிகவும் அலாதியானது. பதிவை மிகவும் விரும்பி படித்தேன். (நடுவில் இத்தனை நாட்கள் தவற விடச் செய்ததும் என் நேரமே..) ஹரியும், ஹரனும் என்றுமே ஒன்றுதான். விழிகள் இரண்டும் ஒரு முகத்திற்கு மிக அவசியமான ஒன்றுதானே.! ஆனால்,எந்த விழி உசத்தி என நாம்தான் அநாவசியமாக விவாதங்கள் நடத்துகிறோம் என நான் சில சமயங்களில் யார் உயர்த்தி, தாழ்த்தி என்ற பிரச்சனைகள் வரும் போது நினைத்துக் கொள்வேன். அதை மிகவும் அழகாக விளக்கியுள்ளீர்கள். சென்ற பதிவாகிய வைகுண்ட ஏகாதசி பதிவும் தற்சமயம் படித்தேன். அதன் விபரங்களும் மிக அழகாக இணைத்து எழுதியுள்ளீர்கள். மனம் நிறைவான பாராட்டுக்கள்.. அடுத்தாக தில்லையம்பதியை பற்றிய பதிவுக்கு காத்திருக்கிறேன். என்னதான் தெய்வங்கள் மேல் சில மாதங்களாக உரிமையுடன் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு மனஸ்தாபத்துடன் இருந்தாலும், தெய்வ பக்திக்கு மிக எளிதில் மறுபடியும் அடிமையாகிறேன். ஏனெனில் "இது தொட்டில் பழக்கமல்லவா.! அது வரைக்கும் செல்லும்." பகிர்வுக்கு நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா ஹரிஹரன், நீங்க மனம் தேறி வந்ததே பெரிய விஷயம். ஆகவே முடிஞ்சப்போ வாங்க! விரைவில் உங்கள் மனச்சஞ்சலம் அகன்று நல்வழி பிறக்கவும் பிரார்த்தனைகள்.

      Delete
  7. வரவர எல்லோரும் சுத்த மோசம்.. கர்ர்ர்ர்:) சமயக்குறிப்புக்களும் கோயில் படங்களுமே போடுறீங்க:)...

    ReplyDelete
    Replies
    1. சமயக்குறிப்பு! ஹா... ஹா... ஹா... நீங்கள் சமையல் குறிப்பைச் சொல்லவில்லைதானே அதிரா?

      Delete
    2. அதிரா சமயக்குறிப்பு என்றால் கோவில் படம் வராமல் உங்கள் அங்கிள் படமா வரும்.

      Delete
    3. த்றீராம் ... அது சமயம் பற்றிய குறிப்புக்கள் சமயக்குறிப்பு .... உங்களுக்கு எப்பவும் கோயில் புளியோதரை நினைப்புத்தான் கர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா:)...

      கில்லர்ஜி..... நான் ரெண்டுமே வாணாங்கிறேன்:).. இடைக்கிடை போட்டால் ஊக்கே:)...

      Delete
    4. அதிரடி, நான் சமயக்குறிப்புக் கொடுக்க ஆரம்பிச்சதும் நீங்க அப்பாவியா ஆயிட்டீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அது வரைக்கும் ஞானியாத் தானே இருந்தீங்க?

      Delete
    5. ஶ்ரீராம், 2,3 சமையல் குறிப்பும் இருக்கு. போடலாமா, வேண்டாமானு யோசனை!

      Delete
    6. கில்லர்ஜி, அதானே! :)))))

      Delete
    7. சமையல் குறிப்பும் இங்கேயே போடுங்க. 'உணவே மருந்து'ல வேண்டாம். அதுல மிஸ் ஆகிடும்.

      Delete
    8. அதிரா நீங்க சொல்லிட்டீங்க....நான் சொல்லலை....ஹா ஹா ஹா ஹா ஹா....அக்கா கூடவே சமயக் குறிப்போடு சமையல் குறிப்பும் கொடுங்க.....

      கொஞ்சம் கும்மி அடிக்கலாம்...

      கீதா

      Delete
  8. //ச்யாமளனும் அவனே! ச்யாமளையும் அவளே! நாராயணனும் அவளே! நாராயணியும் அவனே! மாயனும் அவனே! மாயையும் அவளே! வைஷ்ணவனும் அவளே! வைஷ்ணவியும் அவனே!//

    இது உண்மைதானே.. மனிதர்கள்தான் பங்குபோட்டு, விதம் விதமாக கோயில்கட்டிப் புறிக்கிறார்கள்..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அப்பாவி, நீங்க சொல்வது போல் தானே நடக்குது! எல்லாம் இந்த மனுஷப் பயலாலே வந்த வினை!

      Delete
  9. //இதுக்கு நடுவில் நான் ஒரு பக்கம் போய்விட ரங்க்ஸ் என்னைத் தேடப் பின்னர் கண்டு பிடித்துக் கொண்டு போய்ச் சேர்ந்தேன். //

    ஹா ஹா ஹா மைக்கில எனவுன்ஸ் பண்ணியோ கண்டுபிடித்தார்கள் கீசாக்காவை:)..

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேறே அதிரடி, நான் இன்னும் உள்ளே போயிருந்தேனானால் மைக் இல்லை எதுவா இருந்தாலும் கண்டு பிடிச்சிருக்கக் கஷ்டம்! நல்ல வேளையாக் கூடவே வந்தவரைக் காணோமேனு திரும்பிப் பார்த்தேன். அவர் 250 ரூ சீட்டுக் கொடுக்கும் வரிசையில் என்னைத் தேட, நான் ஐம்பது ரூ சீட்டு வரிசையில் மூழ்கிப்போக இருந்தேன். அது பிரகாரம் சுற்றிக் கொண்டு வரணும். அந்தப் பக்கம் போயிருந்தேனானால் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு வெளியே வந்திருக்க முடியாது!

      Delete
  10. //அரிதுயில் (அறிதுயில்?) //

    ரி தான் வரும்..என நினைக்கிறேன்ன் எதுக்கும் டமில்ப் புரொபிஸர் வருவார் பொறுங்கோ:)..

    ReplyDelete
    Replies
    1. இரண்டுமே சரி என அகராதி சொல்கிறது. அரி துயில் என்பது அரியின் துயில் எனவும் அறி துயில் அனைத்தையும் அறிந்து கொண்டே தூங்குவதையும் குறிப்பிடுவதாய்ச் சொல்கின்றனர்.

      Delete
    2. இரண்டும் சரிதான். அதனால்தான் மெளனம். உங்கள் விளக்கம் சரி கீசா மேடம்.

      Delete
    3. அதிரா நீங்கதான் டமில்ல டி ஆச்சே!!!

      கீதா

      Delete
  11. //விஜயா வங்கி சார்பாக ஓர் பையில் அரை லிட்டர் குடிநீர் பாட்டில், ஒரு மைசூர்ப்பாகு, ஒன்பது பிஸ்கட்டுகள் அடங்கிய சன் ஃபீஸ்ட் பிஸ்கட் பாக்கெட், கல்கண்டு பாக்கெட், கீதை, ஸ்லோகங்கள் அடங்கிய புத்தகம், மஞ்சள் பொடி எல்லாம் கொடுத்தார்கள்//

    250 ரூபாய்க்கு இவ்வளவும் கொடுக்க எப்படி அவர்களுக்கு கட்டுபடி ஆச்சு?..

    //மைசூர்ப்பாகை வீட்டுக்கு வந்து சாப்பிட்டேன். நெ.த.வை நினைத்துக் கொண்டு. நல்ல நெய் விட்ட (நிஜம்மாவே) மைசூர்ப்பாகு! ரசித்துச் சாப்பிட்டேன்.//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கண்டதையும் சாப்பிடுவது:) பின்பு கை வலி கால் வலி மூச்செடுக்க முடியவில்லை சமைக்கேலாது எனச் சொல்லி மாமாவிடம் பாத்திரம் கொடுத்தனுப்பி ரைஸ் அண்ட் கறி வாங்க வைப்பதுதான் வேலையாப்போச்சு :)) ஹா ஹா ஹா

    நெல்லைத்தமிழன் சுவீட் சாப்பிடுவதை விட்டு இப்போ 6 மாசமாகுது:)

    ReplyDelete
    Replies
    1. அதானே, 250 ரூபாய்க்கு இது ஜாஸ்தி தான். மைசூர்ப்பாகு ஒரு வில்லையே சுமார் 20 ரூ இருக்கும். நீளமாப் பெரிசா வேறே இருந்தது. வாட்டர் பாட்டிலும் பத்து ரூ, பிஸ்கட் பத்து ரூ, புத்தகம் 50 ரூ இருக்கும் மஞ்சள் பொடி, கல்கண்டு பாக்கெட் எல்லாம் பத்து ரூபாய்க்குள் இருக்கும்.

      Delete
    2. //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கண்டதையும் சாப்பிடுவது:) பின்பு கை வலி கால் வலி மூச்செடுக்க முடியவில்லை // க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கண்ணு வைக்காதீங்க! ஏற்கெனவே நெ.த. ஸ்வாஹாவானு கேட்டுக் கண்ணு வைச்சுட்டார்! நீங்க வேறேயா? :)))))) மாமா சாம்பார், ரசம், கறி, கூட்டுத் தான் வாங்கிட்டு வருவார். சாதம் வீட்டிலே வைச்சுடுவேன். :)))) சாதமெல்லாம் அவங்க கொடுத்து நாம வாங்கினால் ஆறிப்போய் இருக்கும்.

      Delete
    3. அதிரா... அப்படீல்லாம் இல்லை. ஒரு வாரம் இனிப்புகள் சாப்பிடாமல் இருந்தேன். அப்புறம் கோவில் பிரசாதம் சாப்பிட்டேன். அப்படியே இனிப்பு சாப்பிடுவதைத் தொடர்ந்துட்டேன். திரும்பவும் ஒரு வாரம் சாப்பிடலை. அப்புறம் கோவில் பயணங்கள். போன இடத்தில் அனேகமா இனிப்பு பிரசாதங்கள்தாம் (கேசரி, சர்க்கரைப் பொங்கல், அப்பம், சர்க்கரைப் பொங்கல்னு.... இது தவிர, நாரத்தங்காய் சாதம்-எலுமிச்சை சாதம் போல், புளியோதரை, தயிர் சாதம், பாயசம்னு அதுக்கும் குறைவில்லை. எல்லாம் கோவில் பிரசாதங்கள்).

      Delete
    4. எனக்குத் தெரியும் நீங்க கள்ளமாக இனிப்பு சாப்பிடுறீங்க என நெ.தமிழன்:) ஹா ஹா ஹா.. சாப்பிடுவதில் தப்பில்லை.. போஸனைக் குறைச்சு, ஆசைக்கு சாப்பிட்டால் ஓகே.

      Delete
  12. கேள்விகளும் அதற்கான விளக்கமும் அருமை அம்மா...

    ReplyDelete
  13. பெருமாள் தரிசனம் நன்று தொடரட்டும் அடுத்த சொற்பொழிவு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! 4,5 பதிவுகள் ட்ராஃப்ட் மோடிலேயே இருக்கு! எது முந்திக்கும்னு தெரியலை! அதிரடி வேறே சமயக் குறிப்புகளானு "க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"ரிட்டு இருக்காங்க!

      Delete
    2. ஹா ஹா ஹா உந்தப் பயம் உப்பூடியே இருக்கட்டும்:)

      Delete
  14. இருள் நீங்கினால் கவலை இல்லை. ஒளி வந்தால் களிப்பு, சந்தோஷம், மகிழ்ச்சி. ஆகவே கவலையற்ற நிலையை ஸ்ரீரங்கநாதனின் திருப்பள்ளியும், களிப்புற்ற நிலையை நடராஜரின் திரு நடனமும் நமக்கு உணர்த்துகின்றது.

    அருமையான விளக்கம்.

    அடுத்து திருவாதிரை பதிவுக்கு காத்து இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி. திருவாதிரைப் பதிவெல்லாம் ஏற்கெனவே போட்டதில் இருந்து தான் மீள் பதிவாகத் தரணும். :))))) பத்து வருஷங்கள் முன்னரே எழுதி இருக்கேன்.

      Delete
    2. //அடுத்து திருவாதிரை பதிவுக்கு காத்து இருக்கிறேன்.// - நானெல்லாம் திருவாதிரைக் களி பதிவுக்குக் காத்திருக்கேன்.....

      Delete
  15. கீதாக்கா சாரிக்கா இது எப்படி விட்டுப் போச்சு...ப்ளாகர்ல பார்த்துட்டே இருந்தேனே...பின்னாடி போயிடுச்சு போல ...வாசிச்சுட்டு வரேன்..

    கீதா

    ReplyDelete
  16. டிக்கெட் வாங்கவே காத்திருந்தாலும் நல்ல தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சிக்கா..

    //250 ரூ டிக்கெட் வாங்கினவங்களுக்கு விஜயா வங்கி சார்பாக ஓர் பையில் அரை லிட்டர் குடிநீர் பாட்டில், ஒரு மைசூர்ப்பாகு, ஒன்பது பிஸ்கட்டுகள் அடங்கிய சன் ஃபீஸ்ட் பிஸ்கட் பாக்கெட், கல்கண்டு பாக்கெட், கீதை, ஸ்லோகங்கள் அடங்கிய புத்தகம், மஞ்சள் பொடி எல்லாம் கொடுத்தார்கள். பிஸ்கட்டுகள் தேங்காய் பிஸ்கட்டுகள். அங்கேயே பசியாக இருந்ததால் சாப்பிட்டு விட்டேன். மைசூர்ப்பாகை வீட்டுக்கு வந்து சாப்பிட்டேன். நெ.த.வை நினைத்துக் கொண்டு. நல்ல நெய் விட்ட (நிஜம்மாவே) மைசூர்ப்பாகு! ரசித்துச் சாப்பிட்டேன்.//

    என்னதான் ரங்குவை பத்தி நீங்க எழுதினாலும் கண்ணு முதல்ல தேடுறது என்ன பிரசாதம், சாப்பாடுன்றதைத்தான்..ஹா ஹா..என்னடா ஒன்னையும் காணலையேன்னு பார்த்துட்டே வந்தா .இது கண்ணுல பட்டுருச்சு...

    மைசூர்பாகு சாப்பிடும் போது நெல்லை மட்டும் தான் நினைவுக்கு வராரா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....அப்ப மத்த திங்க கூட்டம் நாங்க எல்லாம் நினைவுக்கு வரலியாக்கா...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....ஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
  17. நாளை திருவாதிரை....வீட்டில் திருவாதிரை களி செய்யனும்...

    கீதா

    ReplyDelete
  18. கீதாக்கா உங்க திருவாதிரைக் களியும் பார்க்கிறேன்...ரெசிப்பி கொடுத்திருப்பீங்களே...நாளை உங்க குறிப்புகள் செய்யலாமேனு.....தலைப்பு என்னவோ உங்க பதிவுக்கு?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. https://geetha-sambasivam.blogspot.com/2012/01/blog-post_10.html

      Delete
  19. நினைவுக்கு வந்துருச்சு...போன வருஷம் போட்டீங்கநு நல்லா நினைவு இருக்கு...ஹப்பா அதுக்குள்ள அடுத்த வருஷம் வரப் போறது....ஓடுகிறதுநாட்கள்....நான் களி செய்வதும் கூட்டு செய்வதும் திருநெல்வேலிப் பக்கம்...உங்கள் கூட்டுக்கு நான் கருத்து போட்ட நினைவு இருக்க்...தாளகம் பற்றி...

    எனக்கு உங்கள் களியின் குறிப்புகள் வேண்டும் பார்க்கிறேன்...நாளை அதுதான்

    கீதா

    ReplyDelete
  20. இப்போது தான் வர முடிந்தது. நல்ல ஏற்பாடு. பொதுவாக திருவரங்கம் கோவில் திருவிழா என்றால் நிறைய ஏற்பாடுகள் செய்வது உண்டு. பக்தர்களின் கைங்கரியம் செய்வதும் உண்டு.

    ReplyDelete