இருமுடி கட்டிய பின்னர் நிவேதனம் செய்கிறார் குருசாமி.
சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, மஹாநிவேதனம் சாதம், பருப்பு
தூப, தீப ஆராதனைகள் முடித்துக் கீழே கற்பூர ஆராதனை காட்டுகிறார்.
கற்பூர தீபம் ஸ்வாமிக்கே! நெய்யபிஷேஹம் ஸ்வாமிக்கே! ஸ்வாமியே சரணம் ஐயப்பா!
ஆனால் அங்கே அடுத்தடுத்து ஏற்பட்ட பிரச்னைகளினால் பல ஐயப்பன் சாமிகள் திருப்பி அனுப்பப்பட்டார்கள் என்றெல்லாம் சொன்னதால் கொஞ்சம் யோசனையாகவே இருந்தது. அதோடு கேரள மழையினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள்! சாலை வசதிகள் எப்படியோ என்றெல்லாம் யோசனை! அப்புறமா இங்கே ஐயப்ப சேவா சங்கத்தைத் தொடர்பு கொண்டோம். அவங்க மூலம் தகவல்கள் சேகரித்துக் கொண்டு பையருக்குத் தெரியப்படுத்தினோம். அவரும் அவ்வப்போது செய்திகளை ஆன்லைனில் பார்த்துக் கொண்டு வந்தார். அப்படியே ஆன்லைனில் தரிசனத்துக்கு நேரம் கேட்டப்போ டிசம்பர் 31 ஆம் தேதி காலை ஆறுமணிக்குக் கொடுத்திருக்காங்க. அதுக்கப்புறமாத் தான் டிக்கெட்டே வாங்கினார். எல்லா ஏர்லைன்ஸும் போட்டி போட்டுக்கொண்டு விலையை உயர்த்தி இருந்தன. அதனாலும் எல்லோரும் வர முடியலை! அவருக்கு மட்டும் ஃப்ரெஞ்ச் ஏர்லைன்ஸில் கிடைச்சது.
இன்னிக்கு இந்த ஊர் ஐயப்ப சேவா சங்கத் தலைவரைக் கூப்பிட்டு இருமுடி கட்டச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தோம். அதன்படி குருசாமியும் வந்து இருமுடிக்கு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டி இருமுடி கட்டினார். அதன் பின்னர் நிவேதனம் செய்து ஐயப்பனுக்கும் தீப ஆராதனை காட்டிப் பூஜையை முடித்துக் கொண்டு சாப்பிட்டு விட்டுப் பையர் கிளம்பிப் போய்க் கொண்டிருக்கார். நாளை தரிசனம் முடிந்து நாளை இரவு வரலாம். அதோடு இங்கே குடியிருப்பு வளாகத்தில் இன்றைய தினம் புது வருஷ வரவேற்பு நிகழ்ச்சிகள்! சாப்பாடு எல்லாம் இருக்கிறது. ஆனால் நாங்க சாப்பிட மாட்டோம். ஜனவரி 3 ஆம் தேதி மாமியார் ச்ராத்தம். அதனால் ஒரு மாசமாவே வெளியே சாப்பிடுவது இல்லை. உறவினர்கள் வேறே வராங்க! இரண்டு நாள் தான் தங்கப் போறாங்க என்றாலும் அவங்களைக் கவனிக்கணும். பின்னர் ச்ராத்தம்! அதன் பின்னர் 5 ஆம் தேதியே பையர் அம்பேரிக்கா கிளம்பறார். அதனால் ஆறு தேதி வரைக்கும், (இந்த வாரம் முழுவதும்) வேலை மும்முரம். அவ்வப்போது தலை காட்டுவேன். யாரும் கண்டுக்க மாட்டீங்க என்னும் நம்பிக்கையுடன்! இஃகி, இஃகி, ஆங்கிலப் புத்தாண்டும் கொண்டாடும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். சிலர் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடுவது இல்லை எனத் தெரிவித்திருக்கின்றனர். ஆகவே கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்துகள். கொண்டாடினாலும் கொண்டாடாவிட்டாலும் அனைவருக்கும் புத்தாண்டு மனதுக்கு இனியதாகவும், அனைவர் வாழ்விலும் வளமும் அமைதியும் நிம்மதியும் சேர்க்கும்படியும் அமையப் பிரார்த்தனைகள்.
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ReplyDeleteவாங்க எல்கே. அபூர்வமாத் தான் பார்க்க முடியுது.
Deleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteஉங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எல்கே.
Deleteசாமியே சரணம் ஐயப்பா...
ReplyDeleteஐயப்பனுக்கு தரிசனத்துக்கு ஆன்லைன் புக்கிங் நடக்கிறதா? அமெரிக்காவிலிருந்து இருமுடி கட்டி விரதம் இருந்து மலைக்குச் செல்வது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. உள்ளூரிலிருந்தே நான் செய்வதில்லை.
ஸ்ரீராம், எனக்குத் தெரிந்து பல வருஷங்களாக அம்பேரிக்காவில் இருந்து வந்து இருமுடி கட்டிக்கொண்டு செல்பவர்கள் நிறைய இருக்காங்க. ஒரு சிலர் 30,40 வருஷங்களாகப் போய் வருகிறார்கள். ஆன்லைன் புக்கிங் எப்போ வந்ததுனு தெரியாது. ஆனால் இருக்குனு தெரியும்.
Deleteஉண்மையைச் சொன்னால் ஸ்ரீராம் இப்போ வெளிநாடுகளில்தான் நம்மவர்கள் சமயத்தையும் அதிகம் கடைப்பிடிக்கின்றனர்.. தமிழை வளர்க்கவும் போராடுகின்றனர்.
Deleteஆமாம், அதிரடி சொல்வது சரியே! இங்கே விட அங்கே பக்தியும் அதிகமாய்த் தெரிகிறது.
Delete
ReplyDeleteஇன்றிரவே உங்கள் குடியிருப்பில் புத்தாண்டு கொண்டாட்டமா? என்ன அவசரமாம்? அவ்வப்போதுதான் வலைப்பக்கம் வருவீர்களா? அடடே... எங்கள் பிளாக் பக்கம் உங்களை இந்த வாரம் முழுதும் கண்டிப்பாக எதிர்பார்ப்பேன். குறிப்பாக வெள்ளிக்கிழமை!!!
வெள்ளிக்கிழமை ஜிவாஜி பாட்டா??!! ஹா ஹா ஹா ஹா ஹா
Deleteகீதா
நிகழ்ச்சிகளை நடத்தித் தருபவர் நாளைக்கு 2,3 இடங்களில் ஒத்துக் கொண்டிருக்காராம். அதோடு நாளைக்கு அவங்களுக்குச் சம்பளமும் கூடப் போலிருக்கு. அதான் இன்னிக்கே நடத்தறாங்க. இன்னும் நடந்துட்டு இருக்கு. நாங்க ஆறரைக்குப் போயிட்டு ஏழரை வரை உட்கார்ந்துட்டு வந்துட்டோம். வந்ததும் பையர் தொலைபேசி அழைப்பு, ரேவதி அழைப்பு! நல்ல வேளை! ஃபோன் அட்டென்ட் செய்ய வந்துட்டோம்.
Deleteவெள்ளிக்கிழமை என்ன விசேஷம்? தி/கீதா சொல்றாப்போல் ஜிவாஜி? பார்க்கலாம்! வர முடியுதானு!
Deleteஹா...... ஹா... ஹா.... வியாழனும்தான் எதிர்பார்ப்பேன்!
Delete@Sriram, I cannot! That day Shraddham! :)))) will come after 3.00 PM only.
Deleteபடங்கள் நன்றாக வந்திருப்பதோடு, இந்த முறை அழகாக தலைப்பும் இட்டு வெளியிட்டிருக்கிறீர்கள்.
ReplyDeleteஅட்வான்ஸ் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
படங்கள் பத்திச் சொன்னதை ஒத்துக்கொண்டாலும் அவை அவசரக்கோலத்தில் எடுத்தவை! இஃகி, இஃகி. ஆனால் தலைப்பு! ஒவ்வொரு பதிவிலும் கொஞ்சம் யோசிச்சுத் தான் வைப்பேன். சில சமயங்கள் மேலே மாடி காலியா இருந்தால் நல்லதாத் தோணாது!
Deleteஎல்லாம் நல்ல படியா நடக்கட்டும்.
ReplyDeleteபில்டிங் புத்தாண்டுக் கொண்டாட்டங்களைப் பற்றி அப்போ பதிவு வராது போலிருக்கு
இல்லை நெல்லை. ஃபோட்டோ இல்லை! எடுக்கலை! கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு வந்துட்டோம். இன்னும் நிகழ்ச்சி முடியலை!
Deleteராத்திரி எப்போ நிகழ்ச்சி முடிஞ்சதுனு தெரியலை. என்னால் உட்கார முடியலை. பையர் பம்பா போயாச்சுனு தெரிஞ்சதும் போய்ப் படுத்துட்டேன். :)
Deleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரி!/கீதாக்கா
ReplyDeleteபடங்கள் நன்றாக வந்திருக்கின்றன...
நல்ல விஷயம் தங்கள் பையர் அங்கிருந்து கொண்டே விரதம் எல்லாம் இருந்து மலைக்குச் செல்வது...
ஆன்லைன் புக்கிங்க் இருக்கு என்று சமீபத்தில் அறிந்தோம்....
பையருக்கு நல்லபடியாக தர்சனம் கிடைத்து வர ஐயப்பன் அருளிடட்டும்..
துளசிதரன், கீதா
கீதா: அப்ப கீதாக்கா அப்பப்பத்தான் வருவீங்களா? பிஸி...ஆமாம் நீங்கள் சொல்லியிருக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது வேலை சரியாக இருக்கும்...
இன்றே புத்தாண்டு நிகழ்வா உங்க ஃப்ளாட்டில்!!
ரொம்ப நன்றி துளசிதரன்/கீதா.
Deleteஅங்கேயே ஒவ்வொரு வருஷமும் விரதம் இருந்து அங்கேயே கோயிலுக்குப் போய் இருமுடி இறக்குவான். இம்முறை இங்கே வந்திருக்கான். இப்போத் தான் நிலக்கல் போய்ச் சேர்ந்திருப்பான். ஓட்டுநருக்கு வழி தெரியாமல் சுத்திட்டாராம். அதானால் ஒன்றரை மணி நேரம் தாமதம்.
ஆமாம், நாளைக்கு வைப்பதற்குப் பதிலா இன்னிக்கு வைச்சிருக்காங்க!
Deleteதங்களது மகன் சிறப்புடன் தரிசனம் முடித்து வர எமது பிரார்த்தனைகள்.
ReplyDeleteசாமியே சரணம் ஐயப்பா!
நன்றி கில்லர்ஜி. மருமகள் வரும் நாள் வெகு அருகில் இருப்பதை அறிந்தேன். வாழ்த்துகள். உங்கள் மகளும், மருமகனும் நலமாக இருப்பார்கள் என நினைக்கிறேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதங்கள் பையர் வந்திருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமே.. அதுவும் ஸ்வாமி விஷயமாக வந்துள்ளார்.மிகவும் மகிழ்ச்சி தருகிறது. இருமுடி பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்று மலைக்கு புறப்பட்டு சென்ற அவருக்கு வாழ்த்துக்கள். நல்லபடியாக ஸ்வாமி தரிசனம் முடிந்து பயணம் இனிதாக அமைய பிரார்த்திக்கிறேன்.
வீட்டில் உறவுகள் வருகையிலும், தங்கள் பையர் வந்திருப்பதால் அவருடன் கழியும் இரு தினங்களும் தங்களுக்கு பிஸியாகவும் மகிழ்வுடனும் இருக்கும். பையருடன் நிறைய நேரம் செலவழியுங்கள்.
தங்களுக்கும், வீட்டிலுள்ளோர்க்கும் இனிய பத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா. இன்னும் இன்று இரவு என் கடைசி நாத்தனார், கடைசிக் கொழுந்தனார் (மைத்துனர்) வராங்க. அவங்க நாளைக்கே கிளம்பிடுவாங்க என்றாலும் இரவு 12 மணிக்கு வருவதால் முழிச்சுட்டு இருக்கணும்! :)))) அப்புறமா 2 நாளைக்கு ச்ராத்த வேலைகள்! வெள்ளிக்கிழமை பையர் ஊருக்குக் கிளம்பும் ஏற்பாடுகள். சனிக்கிழமை அவர் கிளம்பிச் செல்கிறார்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதங்கள் பையர் வந்திருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமே.. அதுவும் ஸ்வாமி விஷயமாக வந்துள்ளார்.மிகவும் மகிழ்ச்சி தருகிறது. இருமுடி பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்று மலைக்கு புறப்பட்டு சென்ற அவருக்கு வாழ்த்துக்கள். நல்லபடியாக ஸ்வாமி தரிசனம் முடிந்து பயணம் இனிதாக அமைய பிரார்த்திக்கிறேன்.
வீட்டில் உறவுகள் வருகையிலும், தங்கள் பையர் வந்திருப்பதால் அவருடன் கழியும் இரு தினங்களும் தங்களுக்கு பிஸியாகவும் மகிழ்வுடனும் இருக்கும். பையருடன் நிறைய நேரம் செலவழியுங்கள்.
தங்களுக்கும், வீட்டிலுள்ளோர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஹா சந்தோஷமான விஷயம் ,இறைவன் துணையுடன் அனைத்தும் நல்லபடியா நடக்கட்டும் .
ReplyDeleteநாம் எல்லா வருஷப்பிறப்பையும் கொண்டாடுவோம் :) வாழ்த்து சொல்வோம் :)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கீதாக்கா
நன்றி ஏஞ்சல்.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
Deleteகீதாம்மா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எந்து இதயங்கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வருகிற ஆண்டு நல்லாண்டுகளாக அமைய என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ReplyDeleteநன்றி தமிழரே, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
Deleteசுவாமியே சரணம் ஐயப்பா...
ReplyDeleteஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
வாங்க டிடி, உங்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
Deleteசாமியே சரணம்...
ReplyDeleteநல்லபடியாக மலையேறி
நல்லபடியாக ஸ்வாமி தரிசனம்
நிகழ வேண்டும்...
ஸ்வாமியே சரணம் ஐயப்பா...
வாங்க துரை. காலை தரிசனம் முடிந்து நெய்யபிஷேஹமும் ஒரு நம்பூதிரியின் உதவியோடு முடிஞ்சாச்சு. பதினோரு மணிக்குப் பம்பா வந்தாச்சு. அங்கிருந்து கிளம்பி வந்துட்டு இருக்காங்க. இதிலே ஒரு அதிசயம் என்னன்னா, நாங்க பையர் வர வரைக்கும் ஐயப்பனுக்குச் சரணம் சொல்லி நிவேதனம் பண்ணணும் என நேத்திக்குப் பண்ணினோம். இன்னிக்கும் காலை சரணம் சொல்லியாச்சு. நிவேதனம் வைக்கக் கொஞ்சம் நேரம் ஆகும் என்பதால் நான் சமைத்ததும் சாதம் வைத்து விடுகிறேன்னு சொல்லி இருந்தேன். ஆனால் பாருங்க அடுத்தடுத்த வேலைகளில் மறந்தே போச்சு. எப்போதும்போல் வீட்டு ஸ்வாமிக்குப் பண்ணிட்டு காக்காய்க்குச் சாதம் போடும்போது தான் ஐயப்பனுக்கு நிவேதனம் செய்யலையேனு நினைவே வந்தது. காக்காய்க்குப் போட்ட பின்னர் அந்த சாதத்தை எப்படி நிவேதனம் செய்யறது? திராக்ஷைப் பழம் வீட்டிலே இருந்ததால் அதை எடுத்து நிவேதனம் செய்து விட்டு வந்தேன். கொஞ்சம் மனசிலே குற்ற உணர்ச்சியாகவே இருந்தது. பையர் ஃபோன் வந்தப்போ, "சாப்பிட்டாச்சா?" என்று கேட்டதுக்கு, இல்லை நான் அங்கே வந்து தான் விரதம் முடிக்கப் போறேன். பழம் ஏதேனும் கிடைச்சால் சாப்பிட்டுக்கறேன். சாப்பாடு சாப்பிடலை. ராத்திரி தான் என்றார். தூக்கி வாரிப் போட்டது எனக்கு! இங்கே ஐயப்பனுக்கு நான் திராக்ஷையைத் தானே கொடுத்தேன். இது என்ன விளையாட்டு என நினைச்சேன்! நினைத்துக் கொண்டிருக்கேன்! !!!!!!!!!!!!!!!!!!!
Deleteதாங்கள் எழுதியிருப்பதைப் படித்ததும் அழுகை வந்து விட்டது...
Deleteஇந்த மாதிரி எத்தனையோ எத்தனையோ அருள் விளையாடல்களுக்குச் சொந்தக்காரன் ஐயப்பன்...
சென்ற மாதத்தில் ஒருநாள் எனது அறையில் ஸ்வாமி படத்துக்குச் செய்திருந்த புஷ்பங்களையும் நிவேதனத்தையும் துஷ்ட த்ருஷ்டி உடையவன் ஒருவன் வந்து பார்த்தான்...
டிசம்பர் 22 க்குப் பிறகு புஷ்ப அர்ச்சனையும் நிவேதனமும் நின்று போகும்படிக்கு ஆகிவிட்டது...
முன்பிருந்த அறையில் ஏகதேசத்துக்கு ராஜா மாதிரி இருந்தேன்...
இங்கு புதிதாக வந்திருக்கும் அறை - புறாக்கூண்டில் யானைகளை அடைத்தாற்போல இருக்கிறது..
கூடவே மாற்று சமயத்து ஆள் ஒருவரையும் போட்டாயிற்று...
இந்த சூழ்நிலையில் விஸ்தாரமாக பூஜைகள் செய்வதற்கு அச்சமாக இருக்கிறது..
ஏனெனில் எந்த நேரத்திலும் ஆட்சேபணைகள் எழலாம்... அல்லது எழுப்பப் படலாம்...
எல்லாம் நல்லதற்கே .. என்கிறார்கள்...
இது எந்த விதமான நல்லதற்கோ?.. ஐயப்பன் ஒருவனே அறிவான்...
எனது மகன் கன்னிச் சாமியாக இந்த வாரம் இருமுடி கட்டி மலைக்குப் புறப்படுகின்றார்...
சாமியே சரணம் ஐயப்பா!...
ஆமாம், துரை, இறை அருள் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. தங்கள் வழிபாடுகளுக்குத் தடங்கல் இல்லாமல் அவனே பார்த்துக்கொள்வான். பதினெட்டாம்படிக்கு அதிபதியான அவன் சரணாரவிந்தங்களை நம்புவோம்.
Deleteசரணம் ஐயப்பா! புத்தாண்டு வாழ்த்துகள் அக்கா!
ReplyDeleteநல்வரவு தம்பி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். சாமி சரணம்!
Deleteசிரமமின்றி சென்று வர வாழ்த்துகள்
ReplyDeleteதரிசனம் முடிந்து திரும்பிக் கொண்டிருக்கிறார் ஐயா. வாழ்த்துகளுக்கு நன்றி.
ReplyDeleteநல்லபடியாக தரிசனம் முடிந்து திருப்பி விட்டார்கள் என்று கேட்டு மகிழ்ச்சி.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
கீசாக்காவின் மகன் விரதம் இருப்பதனால்தானோ கீசாக்கா தொடர்ந்து ஐயப்பசாமி போஸ்ட் தொடர்ந்து போட்டவ..
ReplyDeleteஅருமை.
அதிரடி, அதுவும் தான் காரணம். ஆனால் நான் எழுதியது இப்போது சபரிமலையில் நடந்துவரும் சம்பவங்களுக்காக! மனம் புண்படுகிறது.
Deleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கீசாக்கா.. நாளைக்கு புதுப்போஸ்ட் உண்டோ?.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள் அதிரடி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள். உங்கள் மகன் நல்லபடியாகப் படித்து வருவார் என நம்புகிறேன். பாடங்கள் அவருக்குப் பிடித்தமாகவும் இஷ்டமாகவும் இருக்கும் என நம்புகிறேன்.
Deleteநான் கொஞ்சம் லேட். புத்தாண்டும் நாத்தனாரும் சேர்ந்து வருவதை நீங்களும் இன்னொரு வைகுண்ட ஏகாதசி விரதமிருந்து பரமபதம் விளையாடி வரவேற்றீர்களா? இன்று பையர் வந்திருப்பார். பாயசத்துடன் விருந்து உண்ணும்போது இது ஒரு சிறப்பு புத்தாண்டாக இருக்கும்.
ReplyDeleteJayakumar
வாங்க ஜேகே அண்ணா, நாத்தனார் வருவது 3 மாசம் முன்னாடியே தெரிந்த விஷயம். பயணச்சீட்டு வாங்கி 3 மாசம் ஆயிடுச்சு! :)))) மற்றபடி புத்தாண்டு எப்போதும் போல்! :))))
Deleteஸ்வாமி சரணம்.....
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நன்றி வெங்கட், உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இங்கேயும் இந்த வருஷம் எனக்கே குளிர்! இஃகி, இஃகி! காற்று நேற்று இரவு. மின் விசிறியை அணைச்சுட்டேன்னா பார்த்துக்குங்க!
Deleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் மா...
ReplyDeleteசுவாமி சரணம் ..
வாங்க அனுராதா, புத்தாண்டு வாழ்த்துகள்! அடிக்கடி வாங்க!
Delete