எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, December 07, 2018

நான் யாருக்கு ரசிகை?

//பெரும்பாலானோர் அடித்து பாய்ந்து எப்படியாவது பார்த்தே ஆகவேண்டும் என்றும் அதை பார்க்கலைன்னா வாழ்க்கையே வீண் என்றும் புளகாங்கிதமடையும் சில உலக விஷயங்கள் (ஆஸ்தான நாயகனின் சினிமா முதல் நாள் முதல் காட்சி ,கிரிக்கெட் கால்பந்து ) சிலரை எந்த விதத்திலும் பாதிப்பதில்லையே ? ஏன் ?//

 உண்மையிலேயே நான் கேட்க நினைத்த கேள்வி. அதென்னமோ எனக்கு இந்த சினிமாவுக்கு அடிச்சுப் பிடிச்சுண்டு போறவங்களைப் பார்த்தால் எப்போவுமே சிரிப்பு வரும். சின்ன வயசிலேயே! ஆனால் அப்போல்லாம் சினிமா பாஸ் கிடைச்சால் தான் போவோம். அது வேறே! ஆனால் அதுக்காகப் போறவங்களைப் பார்த்துச் சிரிக்காமல் இருக்க முடியுமா? அதே போல் எங்க உறவினர் ஒருத்தர் எழுபதுகளில் கிரிக்கெட் மாட்ச் பார்க்க மதுரையிலிருந்து அலுவலகத்துக்கு லீவ் போட்டுவிட்டு டிக்கெட் வாங்கிக் கொண்டு சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நேரில் பார்க்கவெனவே வந்திருந்தார். ஙே! என்று தோன்றியது எனக்கு! இத்தனைக்கும் மத்தியதரக்குடும்பம் தான். இரு தங்கைகள் திருமணத்துக்குத் தயார் நிலையில்! இரண்டு தம்பிகள் படித்துக் கொண்டிருந்தனர். அந்த நிலையிலும் இவ்வளவு செலவு செய்து கொண்டு வருவது என்பது அதிகமாகவே தோன்றியது. அவர் மதுரையிலிருந்து சென்னை வந்து போன செலவு என்னைப் பொறுத்தவரை அப்போ மொத்தச் செலவு ஐநூறுக்குள் ஆகி இருக்கும். அது இருந்தால் ஒரு மாசம் குடும்பத்தை ஓட்டலாமே என நினைச்சேன்! ஒருவேளை நான் சரியில்லையோ என்றும் தோன்றும்! :))))


இந்த சினிமா நடிகர்கள் எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்து ரசிகர்களுக்கு தெய்வமாக இருக்காங்கனு நினைக்கிறேன். அவருக்குப் பின்னர் ஜிவாஜி, எம்ஜார் (எ.பி. இல்லை), ஜெமினி! அதன் பின்னர் கமல், ரஜினி, சிவகுமார், மோகன். மோகன் முந்துவார் போல இருக்கையில் பாவம்! எதிலோ மாட்டிக்கொண்டு வெளிவரமுடியவில்லை. இப்போ விஜய், சூர்யா, அஜித். அதன் பின்னர் தனுஷ்! இவரோடு சொல்லும்படி யார் இருக்காங்கனு தெரியலை. என்னென்னமோ பெயரில் நடிகர்கள்! சிவ கார்த்திகேயன். விஜய் ஆன்டனி, விஜய் சேதுபதி! இரண்டு பேரும் யார்னே தெரியலை! ஆனால் பெயர்கள் அடிபடும். நகைச்சுவைனு எடுத்துக் கொண்டால் ஆரம்பத்தில் என்.எஸ்.கே. டி.ஏ.மதுரம், அதுக்கு முன்னாடி யாருனு தெரியலை. பின்னர் டி.ஆர்.ராமச்சந்திரன் தங்கவேலு, எம்.சரோஜா, சந்திரபாபு போன்றோர். பின்னர் நாகேஷ், மனோரமா ஜோடி. இவர்களோடு சொல்லத் தக்கவிதத்தில் ஒய்.ஜி.மகேந்திரா, சோ, ரமாப்ரபா ஆகியோரைச் சொல்லலாம். பின்னர் கவுண்டமணி, செந்தில், கோவைசரளா. பின்னர் வந்தவர்களில் வடிவேலுவும், பார்த்திபனும் இணைந்து வரும் காமெடிகள் பரவாயில்லை ரகம். அதன் பின்னர் வந்தவை எதுவும் சொல்லிக்கிறாப்போல் இல்லை.  இப்போ விவேக், சந்தானம் ஆகியோர் இருந்தாலும் பெண்களில் நகைச்சுவை நடிகைனு யாரும் இருப்பதாய்த் தெரியலை. அதோடு இப்போதைய காமெடி எல்லாம் ரசிக்கும்படியும் இல்லை. கவுண்டமணி, செந்தில் காலத்திலேயே நிறம், உயரம், பருமன் ஆகியவற்றைக்குறித்துப் பழித்துப் பேசும் சொற்கள், அறச்சொற்கள் வந்துவிட்டன.  இப்போதைய காமெடியில் எப்படி இருக்கோ தெரியலை.

எல்லோரும் நான் ஜினிமாப் பார்க்க மாட்டேன்னு சொல்லிண்டே ஜினிமா பத்தியும் ஜிவாஜி பத்தியும் சொல்றதுக்குக் கிண்டல் பண்ணறாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதுக்காக ஜினிமாவே பார்க்காமலா இருப்பாங்க? எத்தனை விமரிசனம் எழுதிட்டேன்!  ஆனாலும் இந்த நடிகர் தான் ஒசத்தி, நான் அவங்க விசிறி என்பதெல்லாம் இல்லை.  இந்த நடிகர் தான் பிடிக்கும், இவர் பிடிக்காதுனு எல்லாம் இல்லை. நல்ல சினிமாவுக்கு ரசிகையே தவிர்த்து ஆதரிச நடிகர், நடிகைனு யாரும் இல்லை. சிலருக்கு நான் ஜிவாஜியைப் பத்தி விமரிசனம் பண்ணினாக் கோபம் வருது! ஹிஹிஹி, எனக்கு அதைப் பார்த்துச் சிப்புச் சிப்பா வருது! அதே மாதிரி தான் ரஜினி, விஜய் ஆகியோர் படம் வெளிவந்தா கட் அவுட்டுக்குப் பாலபிஷேஹம் என்பதெல்லாம் ரொம்பவே ஓவர்! இதிலே விஜய் ரசிகர்கள் சர்க்கார் படத்திலே இலவசங்களைக் கிண்டல் பண்ணி எடுத்திருப்பதால் இலவசப் பொருட்களை எல்லாம் உடைச்சு படத்துக்குத் தங்கள் மேலான ஆதரவைக் காட்டினாங்க. என்ன கிடைச்சதுனு தெரியலை! அதுக்கு பதிலா விஜய் பெயரில் ஏதேனும் நல்ல விஷயங்களை ஆரம்பிச்சுச் செய்திருக்கலாம்.  இப்போ ஏதோ ஒருபடத்துக்கு ஆரம்பவிழாவன்னிக்கு ரசிகர்கள் எல்லாம் கையில் கற்பூரம் ஏத்தி வரவேற்பதாய்க் காட்டினாங்க முகநூலில்! இதெல்லாம் ரொம்பவே ஓவரா இல்லையோ! எந்த நடிகரும் அவங்க சொத்திலேயோ, வாங்கற பணத்திலேயோ நமக்கு ஏதும் செய்யப் போறதில்லை. நமக்காக அவங்க வாங்கற பணத்தைக் குறைச்சுக்கவும் போறதில்லை. அவங்களை தெய்வமாக் கும்பிடறதிலே நமக்கென்ன லாபம்! ஒண்ணும் புரியலை எனக்கு! படம் நல்லா இருக்கா! ஓகே நல்லா இருக்கு! ஒரு தரம் பார்க்கலாம். அதுக்காக அடிச்சுப் பிடிச்சுண்டு டிக்கெட்டை அதிக விலை கொடுத்துப் பார்ப்பதில் என்ன கிடைக்கும்? அதுக்குனு ஏதாவது அவார்டா தரப் போறாங்க? அல்லது அந்த நடிகர் தான் தன் சம்பளத்தில் ரசிகர்களுக்குப் பங்கு கொடுக்கப் போறாரா? எதுவும் இல்லை!

அப்புறமா ஏன் இப்படி முதல்லேயே பார்க்கணும்னு வெறியோட அலையறாங்கனு எனக்குப் புரியலை!  இப்போல்லாம் நம்ம நாட்டில் சினிமா தியேடரில் சினிமா பார்த்தே எத்தனையோ வருஷங்கள் ஆகிவிட்டன. எப்போவானும் தொலைக்காட்சியில் பார்ப்பது! இல்லைனா அம்பேரிக்கா போனால் அங்கே பார்ப்பது தான்! அங்கே பார்த்தது தான் அதிகம்! அங்கேருந்து வந்தப்புறமா இங்கே எந்தப் படமும் பார்க்கலை. அதிரடி நான் பார்க்காத படம் இருக்கானு கேட்டு இருக்காங்க! இந்த "பா" வரிசை படங்களில் பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், பாவை விளக்கு இதெல்லாம் பார்த்ததில்லை. அதோடு இல்லை. முன்னே வந்த எஸ்.பாலசந்தர் (வீணை) படங்களிலே "பொம்மை" பார்க்கலை. யூ ட்யூபில் தேடினாலும் கிடைக்கலை! நெல்லை அதுக்கு விமரிசனம் எழுதச் சொல்லிக் கேட்டிருந்தார். யாரானும் யூ ட்யூப் லிங்க் அனுப்பி வைங்க! அதிலே ஜேசுதாஸ் முதல் முதலாப் பாடின பாடல் "நீயும் பொம்மை! நானும் பொம்மை!" பாட்டு வருமே! சீக்கிரமா அனுப்பி வைங்க! புண்ணியமாப் போகும்!

111 comments:

 1. எனக்கும் அடித்துப் பிடித்து முதல் நாள், முதல் காட்சி என்றெல்லாம் படங்கள் பார்ப்பது அறவே பிடிக்காது.

  மதுரைல கல்லூரி நண்பர்களோடு உங்கள் தலைவர் கமலஹாசனின் அந்த ஒரு நிமிடம் படம் முதல் நாள் 6 மணி காட்சிக்குப் போய், பாதில எழுந்துவர நினைத்தோம். தியேட்டர்காரன் அனுமதிக்கவில்லை. ரசிகர்கள் கத்துவாங்க, வெளில இருக்கற ரசிகர்கள் கலாட்டா செய்வார்கள்னு சொல்லிட்டார்.

  ReplyDelete
  Replies
  1. நானெல்லாம் முதல்நாள் படம் பார்த்ததே இல்லை. அந்தக் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு திண்டாடுபவர்களையும், முண்டி அடிச்சுண்டு போறவங்களையும் பார்த்தால் மனதை ஏதோ செய்யும். :( உல(க்)கை நாயகன் உங்களுக்குத் தான் தலைவர். எனக்கில்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   Delete
 2. மோகன் எதிலோ மாட்டிக்கிட்டாரா? அது என்ன?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், நூறு நாள் கதாநாயகன் எனக் கொண்டாடப்பட்டவரை வீழ்த்துவதற்காகவே ஏதோ திட்டம் போட்டு அவரைக் கீழிறக்கியதாகச் சொல்லுவது உண்டு. பின்னர் பல வருடங்கள் கழித்து ஏதோ ஓர் படத்தில் வந்தார். சோபிக்கவில்லை.

   Delete
  2. அவர் மைக்கோடு வெறும்ன வந்தாலே படம் ரொம்ப நல்லா ஓட ஆரம்பித்தது. அவருக்கு எல்லாப் படத்திலும் சுரேந்தர்தான் (நடிகர் விஜயின் மாமான்னு நினைக்கறேன்) குரல் கொடுத்தார். ஏதோ காரணத்தால, உன் குரலுக்காக என்னைப் பார்க்க வரலைனு சுரேந்தர்கிட்ட கோபிச்சுக்கிட்டு சொந்தக் குரலில் ஒரு படம் பேசினார். அத்தோடு அவர் கீழிறங்கினீர். வெகு காலம் கழித்து சில வருடங்களுக்கு முன் சொந்தப் படம் எடுத்து காணாமலேயே போயிட்டார் மோகன்

   Delete
  3. மைக் மோகன் திட்டமிட்டுப் பழிவாங்கப்பட்டார் எனக் கேள்வி. :) எஸ்.என்.சுரேந்தர் விஜயின் தாய்மாமா தான்! ரொம்பக் கஷ்டப்படுகிறார் என்றும் முகநூலில் சமீபத்தில் தான் படிச்சேன்.

   Delete
 3. நீன் தலைவர் படத்தைப் பார்த்துட்டேன் என்று நண்பர்கள்ட பீத்திக்கத்தான் அடிச்சுப் பிடிச்சு பார்க்கறாங்களோ?

  நம்ம ஊர்ல நிம்மதியா படம் பார்க்கணும்னா இரண்டு வாரங்களுக்கு அப்புறம்தான் தியேட்டருக்குப் போகணும். அவ்வளவு நாள் படம் ஓடாதேன்னு சொன்னீங்கன்னா, உங்களுக்குத்தான், "தொலைக்காட்சியில் முதல் முறையாக"

  ReplyDelete
  Replies
  1. தியேடரில் எல்லாம் பொறுமையா உட்கார்ந்து படம் பார்ப்பது என்பது நேரத்தை வீணடிக்கும் செயல் எனத் தோன்றும். அதோடு இப்போ டிக்கெட் விலையும் அதிகம். தியேடரில் செலவுகளும் அதிகம். ஒருத்தருக்கு ஐநூறு ரூபாய்க்குக் குறையாமல் செலவாகிறதுனு நினைக்கிறேன். அந்தப் பணத்தை உருப்படியா வேறே ஏதேனும் செலவுக்கு வைச்சுக்கலாம்.

   Delete
 4. நல்ல வேளை... நானும் தப்பிச்சேன்!...

  ஓரளவுக்கு ஜிவாஜி ரசிகன்!..
  ( இப்போது சில படங்களை - ஏண்டா.. ரசிச்சோம்..ன்னு தோணும்!..)

  பள்ளி நாட்களில் கீற்றுக் கொட்டகையில் - வால் அறுந்த படங்கள்..

  கல்லூரி முடித்த (!) பிறகு -
  முதல் வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் பார்ப்பது.. அவ்வளவு தான்...

  இப்போது அந்த மனநிலை எல்லாம் மாறிப் போச்சு..

  என்றாலும் - யூ ட்யூப்பில் படங்கள் பார்ப்பதுண்டு.

  ReplyDelete
  Replies
  1. நான் யூ ட்யூபில் எல்லாம் படங்கள் பார்த்ததே இல்லை. அம்பேரிக்காவில் நெட் ஃப்ளிக்ஸில் பார்ப்போம். இங்கே முன்னெல்லாம் சென்னைத் தொலைக்காட்சியில் மட்டும் பார்த்தோம். அப்போல்லாம் தூர்தர்ஷன் மட்டும் தானே. ஆகவே ஒவ்வொரு ஞாயிறும் படம் பார்ப்போம்.

   Delete
  2. முதல் மரியாதை கூட வெளி வந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை தூர்தர்ஷனில் பார்த்தது தான். சில காட்சிகள் வெட்டப்பட்டுக் காண்பிக்கப்பட்டதாகப் பேசிக் கொள்வார்கள். அது மாதிரியே தான் மற்றச் சில ஜிவாஜி படங்களும்!

   Delete
 5. விஜய் சேதுபதி நன்றாகவே செய்கிறார். நான் கூட முதல் நாளே அதிக பணம் கொடுத்து படத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்று எந்தப்படத்துக்கும் போனதில்லை. அண்ணன் ஒரு கோவில் மட்டுமே ரிலீசானநாளில் சென்றிருக்கிறேன் - மாமா உபயத்தில்.

  ReplyDelete
  Replies
  1. விஜய் சேதுபதி, விஜய் ஆன்டனி வித்தியாசமே தெரியலை. அதே போல் சிவ கார்த்திகேயனுக்கும், இன்னொரு நடிகருக்கும் வித்தியாசம் தெரியறதில்லை. :) நடிகைகள் சுத்தம்! ஹிந்தி அனுஷ்காவைத் தெரியும். ஆனால் ஸ்ரீராமின் அபிமான கதாநாயகியைத் தெரியறதில்லை. இப்போ உள்ள நடிகைகளில் யாரையுமே புரியலை!

   Delete
  2. அந்த இன்னொரு நடிகர் உதயநிதி! ஸ்டாலின் பிள்ளையாமே! நம்ம ரங்க்ஸ் சொன்னார். அவருக்குத் தான் இதிலெல்லாம் தேர்ச்சி! :)))) முன்னேயானும் கேபிளில் போடும் படங்கள்னு பார்ப்பேன். இப்போ அதெல்லாம் எதுவுமே இல்லை! :))))

   Delete
  3. //தெரியறதில்லை. :) நடிகைகள் சுத்தம்! // ஐயையோ... நான் உங்களை 50 வயசு ரேஞ்சுன்னு நினைச்சால் நீங்க எதுவுமே சினிமா பத்தி தெரியாது... எனக்குத் தெரிந்ததெல்லாம் எஸ் வி ரங்காராவ்னு சொல்றீங்களே

   Delete
  4. உண்மையாகவே எந்த நடிகையையும் அடையாளம் தெரியவில்லை நெ.த. இதிலே சொல்லுவதற்கு என்ன வெட்கம்? மனதில் நிற்கும்படி யாரானும் நடிச்சிருந்தா ஒருவேளை தெரிஞ்சிருக்கலாம். எல்லோரும் சும்மா வந்துட்டுத் தானே போறாங்க!

   Delete
  5. நெல்லை, எஸ்.வி.ரங்காராவ் அருமையான காமெடியன்! மாயா பஜார் ஒண்ணு போதுமே!

   Delete
  6. கீதாக்ககா வி சேதுபதி, வி ஆண்டனி ரெண்டு பேருமே ரொம்பவே வித்தியாசமா இருப்பாங்களே....

   கீதா

   Delete
  7. யாருனு தெரிஞ்சாத் தானே வித்தியாசம் கண்டு பிடிக்க முடியும்? அவங்கல்லாம் நடிச்ச படங்களே பார்த்தது இல்லை! :))))

   Delete
 6. நான் சிவாஜியை அதிகமாக ரசித்தாலும் எம் ஜி யாரையும் ரசிப்பேன், ஜெய்சங்கரையும் ரசிப்பேன். பிடிக்காதவர் ஏ வி எம் ராஜன்! மோகன் எல்லாம் மாஸ் ஹீரோவாக அறியப்பட்டதே இல்லை - எனக்குத்தெரிந்து! அவர் ஏழைத் தயாரிப்பாளர்களின் கமலஹாசன்!

  ReplyDelete
  Replies
  1. கதைக்கருவும் படமாக்கப்பட்ட விதமும், இயக்கமும் நன்றாக இருந்தால் எந்த நடிகரானாலும் ரசிக்கலாம் தான்! ஆனால் மிகை நடிப்புத் தான் பிடிக்கிறதில்லை. அந்த வகையில் ஜிவாஜி எல்லாப் படங்களிலும் ஓவர் ஆக்டிங் தான். முதல் மரியாதை தவிர்த்து.

   Delete
  2. >>> ஜிவாஜி எல்லாப் படங்களிலும் ஓவர் ஆக்டிங் தான். முதல் மரியாதை தவிர்த்து..<<<

   எனக்கு அவ்வளவாகப் பிடிக்காதது - முதல் மரியாதை...

   உண்மையில் அந்தக்கால டைரடக்கர்ஸ் -
   சிவாஜி அவர்களிடம் அப்படியான நடிப்பையே வாங்கி அவரை அவப்பெயருக்குள்ளாக்கினார்கள்...

   அதிலும் - கடைசியில் ஜிவாஜி வழங்கிய பலவகையான குப்பைகளுக்கும் அவரே பொறுப்பு...
   அந்த லாரி டிரைவர் ராஜாக்கண்ணு !?... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

   Delete
  3. நல்லவேளையா லாரி டிரைவர் ராஜாக்கண்ணுனு படம் வந்தப்போ எல்லாம் நாங்க தமிழகத்திலேயே இல்லைனு நினைக்கிறேன். :)))) முதல் மரியாதையின் கதைக்கருவும் பாடல்களும் பிடிக்கும்.

   Delete
  4. //சிவாஜி அவர்களிடம் அப்படியான நடிப்பையே வாங்கி அவரை அவப்பெயருக்குள்ளாக்கினார்கள்...//

   அவப்பெயர் எல்லாம் அப்புறம்தான். அந்தக் காலத்தில் அப்படிப்பட்ட நடிப்பைதான் ரசித்தார்கள். வீடு கட்டியபின் குறை சொல்வது எளிது.

   Delete
  5. ஶ்ரீராம், ஜிவாஜி தன் வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் நடிச்சிருந்தால் அவப்பெயர் கிடைத்திருக்காதோ? அம்பிகா, ஶ்ரீதேவியோட எல்லாம் ஜோடியா நடிச்சால்? அதுவே ராதாவோட நடிச்சது கதை அமைப்பினாலே நல்ல பெயர் வாங்கித் தந்தது.

   Delete
  6. அன்பின் ஸ்ரீராம்...

   >>> அவப்பெயர் எல்லாம் அப்புறம்தான். அந்தக் காலத்தில் அப்படிப்பட்ட நடிப்பைதான் ரசித்தார்கள். வீடு கட்டியபின் குறை சொல்வது எளிது.. <<<

   அப்படிப்பட்ட நடிப்பைத் தான் ரசித்தார்கள்..// ரசித்தேன் என்பது உண்மை...

   சிவாஜி அவர்கள் வாழுங்காலத்திலேயே அவரது நடிப்பைக் குறை கூறி அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்கள்...- என்று சொல்ல வந்ததை நான் சரியாகச் சொல்லவில்லை என்று நினைக்கின்றேன்...

   80 களில் ஆன்மீகக் களஞ்சியமாக விளங்கிய பெரியவர் ஒருவர் முனியாண்டி விலாஸில் சாப்பிடுவது போலவும் அவரை முருகன் வந்து திருத்துவது போலவும் மிமிக்கிரி செய்து மகிழ்ந்தது தானே இந்தத் தமிழ் கலையுலகம்...

   விடுதலை என்ற படத்தில் சிவாஜி முன் அவரது நடிப்பை ரஜினி கலாய்ப்பது போல காட்சி அமைத்து மகிழ்ச்சி கொண்டார்கள்.. இத்தனைக்கும் அது சிவாஜியின் உயிர்த் தோழரான பாலாஜி அவர்களின் படம்...

   லாரி டிரைவர் ராஜாக்கண்ணு படத்தில் சிவாஜி பேசிய ஒரு வசனத்தால் மனம் நொந்து போன பல்லாயிரம் ரசிகர்களுள் நானும் ஒருவன்...

   லா டி ரா - படத்தை இயக்கியவர் ஏ.சி. திருலோகசந்தர்!...

   தனது ஆளுமையால் - பின்னாளில் சில படங்களை அவர் தவிர்த்திருக்கலாம் என்பதே எனது கருத்து..

   மற்றபடி மாபெரும் கலைஞனான அவரைக் குறை சொல்வதற்கு எனக்குத் தகுதி ஏதும் இல்லை..

   Delete
  7. துரை ஸார்... நான் உங்களைக்குறை சொல்லவில்லை. பொதுவாகச் சொன்னேன். மேலும் பிற்கால சிவாஜி படங்களின் மீது எனக்கும் அதே அபிப்ராயம்தான். நான் கொண்டாடும் பல சிவாஜி படங்களையே நான் பார்த்ததில்லை. ஆனால் எம் ஜி ஆர் கூட ஒன்றில் சிவாஜி குறை கூறி இருக்கிறார். .முன்னர் பகிர்ந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

   Delete
  8. துரை சொல்வதைப் போலத் தான் ஜிவாஜி பத்தி "சோ" தன்னுடைய திரை உலக அனுபவங்கள் கட்டுரைத் தொடரில் பகிர்ந்திருப்பார்.

   Delete
  9. ஸ்ரீராம் நானும் அதே. உங்கள் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன்....

   அக்கா சிவாஜி ஓவர் ஆக்டிங்க் என்று சொல்லப்பட்டாலும் அந்தத் திறமை என்பது அதாவது கேமரா முன் நடிப்பது என்பது ரொம்பவெ கடினம் இங்கு துரை அண்ணா சொல்லப்பட்டது போல் அவரை அப்படி நடிக்கச்சொல்லி இயக்கியும் இருப்பார்கள்தான். அவர் முதலில் நாடகத்தில் நடித்துக் கொண்டு இருந்ததால் நாடகங்களில் நாம் கொஞ்சம் ஓவராகவே உணர்ச்சிகளைக் காட்டத்தான் வேண்டும்.

   நான் பார்த்தவை மிக மிக மிக மிக அபூர்வம். பிறந்த வீட்டில் இருந்தப்ப. அப்புறம் கல்யாணம் ஆன பிறகும் அப்படியே. சென்னையில் மாமியார் மாமனார் வீட்டில் இருந்தப்ப பார்த்ததுதான் அதுவும் டிவியில்.

   எனக்குப் படம் பார்க்க பிடிக்கும் வாய்ப்புகள் மிக மிக மிகக் குறைவு. வாய்ப்பு கிடைத்தால் பார்த்திடுவேன்.

   ஆனால் க்ரேஸ் கிடையாது. நடிகரோ நடிகையோ யார் நன்றாக நடித்தாலும் ரசிப்பதுண்டு.
   சிவாஜியின் திறமை வசனங்களை ஒரு தடவை பார்த்த்தும் அப்படியே சொல்லிடுவாராம். அதுவும் பெரிய பக்க டயலாக் கூட (அதாவது நான் நீயீயீயீயீயீயீயிளமா கதை எழுதற அளவுன்னு வைச்சுக்கங்களேன் ஹா ஹா ஹா ஹா ஹாஹா...

   எனக்கு பார்க்க வாய்ப்பு கிடைபப்தில்லை என்பதாலேயே என் மைத்துனர் எனக்கு அவர் பார்க்கும் நல்ல படங்களை குறிப்பாக த்ரில்லர் நகைச்சுவை படங்களை எனக்கு காப்பி பண்ணித் தருவார். கணினியில் பார்த்துவிட்டு அப்புறம் எடுத்துவிடுவேன். மகனும் எனக்கு பல நல்ல ஆங்கிலப்படங்களையோ இல்லை ஹிந்தி தமிழ்ப் படங்களையோ சஜஸ்ட் செய்வான் ஆனால் அவன் இருந்தால் மட்டுமே பார்ப்பேன் அவனோடு.

   கீதா

   Delete
  10. ஆனாலும் ஜிவாஜிக்கு ஓவராத் தான் சப்போர்ட்டும்! :)))))

   Delete
 7. YGM காமெடியை என்னால் ரசிக்கவே முடியாது. தங்கவேலு, நாகேஷ், ஓரளவுக்கு சுருளி, பின்னர் கவுண்ட்டர், கொஞ்சம் சந்தானம், நிறைய வடிவேலு... என்னால் ரசிக்கவே முடியாத காமெடியன்களில் தம்பி ராமையா, கஞ்சா கருப்பு போன்றோர் அடங்குவர்!

  ReplyDelete
  Replies
  1. என்ன ஸ்ரீராம் இப்படிச் சொல்லிட்டீங்க. எனக்கு கஞ்சா கருப்பின் சில நகைச்சுவைகள் ரொம்பவும் பிடிக்கும். அதுவும் 'வாழவந்தான்' ராம் பட காமெடி. ஆனா இந்த மாதிரி திறமைசாலிகள் உடலில் அக்கறை செலுத்துவதில்லை. அதனால் நீண்ட இன்னிங்ஸ் ஆட முடிவதில்லை. அதிலும் இடையில் அதீத ஆசைப்பட்டு அல்லக்கைகள் சொல்லுவதை நம்பிப் படம் தயாரித்து இண்டஸ்டிரியிலிருந்தே காணாமல் போயிடறாங்க.

   Delete
  2. அந்த ஒரு காமெடி எனக்கும் பிடிக்கும். அது மட்டும். அதே போல லிஸ்ட்டில் மறந்த இன்னொரு ப்ளேடு பரோட்டா சூரி. அவரின் அந்த பரோட்டா காமெடி மட்டும் பிடிக்கும்.

   Delete
  3. ஒய்ஜிஎம் காமெடிஎங்கே பண்ணுவார்? ஆனால் காமெடி நடிகர்கள் பட்டியலில் வரார். சுருளிராஜனை மறந்துட்டேன். ஆனாலும் அவ்வளவாப் பிடிக்காது! அதே போல் வெண்ணிற ஆடை மூர்த்தியும்! சகிக்காது! ஓவராக வழிவார்! கஞ்சா கருப்பு என்பவரையோ தம்பி ராமையா என்பவரையோ தெரியாது! ஒரு வேளை பார்த்திருக்கலாம். பெயர் தெரிந்திருக்காது. சூரி என்பவரை ஓரிரண்டு முறை அடையாளம் காட்டினார் ரங்க்ஸ். ஆனால் மனதில் நிற்கலை! :)))) இயக்குநர்கள் சுந்தரராஜன், மனோபாலா போன்றவர்கள் சீரியல்களிலும் வரதால் ஓரளவுக்கு அடையாளம் தெரியும். என்றாலும் அவங்க காமெடி பண்ணறதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியா இருக்கும்.

   Delete
  4. //ஒய்ஜிஎம் காமெடிஎங்கே பண்ணுவார்?//

   கிர்ர்ர்ர்ர்ர்.... நான் எங்கே முதலில் சொன்னேன்? நீங்கதான் உங்க லிஸ்ட்டுல அவர் பெயர் சொல்லி இருக்கீங்க... அதனால்தான் நான் சொன்னேன்.

   Delete
  5. எனக்கும் தம்பி ராமையாவின் கொமெடி பெரிசா பிடிக்காது ஆனா கஞ்சாக் கருப்புவை ரொம்ப பிடிக்கும்... இன்னொருவர் ஓமக்குச்சிபோல ஒல்லியா வருவாரே காஞ்சனாவில் பேய் விரட்ட வருவாரே அவரையும் எப்பவும் பிடிக்கும் மற்றும் திவ்யதர்சினியையும் ரொம்ப பிடிக்கும்... மொட்டை ராஜேந்தரைப் பிடிக்கவே பிடிக்காது... அதெல்லாம் கொமெடியா என்பதுபோல இருக்கும்...

   Delete
  6. கஞ்சாக் கருப்பு யாருனு பார்க்கணும். அதிரடி காஞ்சனாவில் ஒல்லியாக வருபவர் மனோபாலா!அவர் சீரியல்களிலும் வந்திருப்பதால் அடையாளம் தெரியும். திவ்யதர்ஷிணி காமெடி பாத்திரங்களில் நடித்திருப்பது தெரியாது. அநேகமாய் அவர் நிகழ்ச்சிகளின் நடத்துநராகத் தான் வருவார். தேவதர்ஷிணி தான் காஞ்சனாவில் வருவார்னு நினைக்கிறேன். கோவை சரளாவும் அவரும் சேர்ந்து வரும் ஒரு காமெடி காட்சியைத் திரும்பத் திரும்ப சன் தொலைக்காட்சியில் காட்டுவார்கள் விளம்பர இடைவேளைகளில்! அதனால் தெரியும். தேவதர்ஷிணி "மர்மதேசம்" மூலம் அறிமுகம் ஆனாரோனு நினைவு! அவர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை குடும்பத்துப் பேத்தி என்றும் தெரிந்த தமிழ் ஆர்வலர் ஒருத்தர் கூறினார். அது எவ்வளவு தூரம் உண்மைனு தெரியாது.

   Delete
  7. ஸ்ரீராம் ஹைஃபைவ். எனக்கும் வொய்ஜி நகைச்சுவை பிடிக்காது. கக வின் ராம் காமெடி மட்டுமே....த ரா வின் நகைச்சுவையும் பிடிப்பதில்லை.

   வடிவேலுவின் காமெடிகள் பல பிடிக்கும். வடிவேலு பார்த்திபன் சோடி பிடிக்கும்.

   அக்கா அதிரா சொல்லிருப்பது திவ்ய தர்ஷினின்னு பேர் மாத்திட்டார் அது தேவதர்ஷினி அவங்கதான் காமெடில வருவாங்க...நல்ல எக்ஸ்ப்ர்ஷன்ஸ் இருக்கும்...வாட்சப்ல கூட வந்துச்சே அவங்க நடிச்சது ரமணி வெர்சஸ் ரமணின்னு நினைக்கிறேன் ரெண்டு சின்ன வீடியோக்கள் வந்துச்சு...

   கீதா

   Delete
  8. ஆமாம் கீதாக்கா தேவதர்ஷினி மர்மதேசம் மூலம் தான் வந்தார். ஆனால் அதற்கு முன்ன டிவி தொகுப்பாளினியாக இருந்தார்.

   //மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை குடும்பத்துப் பேத்தி// இல்லைக்கா...

   கீதா

   Delete
  9. ரமணி வெர்சஸ் ரமணி முதல் பாகத்தில் துர்காவின் அக்காவும் பப்லுவும் நடிச்சிருந்தாங்க. அது ஒரு மாதிரியா இருக்கும். பாம்பே ஞானம் கூட அதில் வருவாங்க! இது அடுத்த பாகம். பாலாஜியும் தேவதர்ஷிணியும் என நினைக்கிறேன். இது பார்த்திருக்கேன்.

   Delete
 8. சர்கார் ரிலீஸான சில நாட்களிலேயே விஜய் நிறைய பேர்களுக்கு இலவசப் பொருட்கள் வழங்கினார் - .நகைமுரண்!

  ReplyDelete
  Replies
  1. @ஸ்ரீராம், அப்படியா? இது எனக்குப் புதிய செய்தி!

   Delete
 9. நீயும் பொம்மை நானும் பொம்மை பாடல் மட்டும் கிடைக்கிறது.. படம் கிடைக்கவில்லை!
  https://www.youtube.com/watch?v=buQ6KQ0LASw

  அதன் விக்கி பக்கம்
  https://en.wikipedia.org/wiki/Bommai

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், சுமார் 3 வருஷங்களாகத் தேடியும் அதன் அறிமுகப்பக்கம் மட்டும்யூ ட்யூபில் கிடைக்கிறது. படம் கிடைக்கவில்லை.எடுத்து விட்டதாகக் கீழே ஏஞ்சல் சொல்றாங்களே!

   Delete
 10. இன்றைய சமுக இளைஞர் அனைவருமே படித்தவர்களே ஆனால் இந்த கோமாளிகள் பின்னே போவதும் கையில் கற்பூரம் ஏற்றுவதும் படித்தவர்களே...

  நானும் தியேட்டருக்கு போயி இருபது வருடங்களாகி விட்டது 1999-ல் என் மனைவியோடு போனது.

  அபுதாபியில் ஐந்து படங்கள் பார்த்து இருப்பேன்.

  இந்த ரசிகன் என்ற பாமரன் இருக்கும்வரை தமிழகம் முன்னேறாது.

  இவனுகளையெல்லாம் போபால் விஷவாயுவை செலுத்தி கூட்டுக்கொலைகள் செய்தால் அடுத்த சந்ததி நல்ல வாழ்க்கை வாழலாம்.

  இதற்கு யாராவது இதில் உனது மகனும் இருந்தால் ?
  என்று கேட்டால் எனது பதில்.
  அவனைத்தான் முதலில் கொல்லவேண்டும்.

  எனது மகன்மீது உயிரையே வைத்திருக்கிறேன். ஆனால் பொதுநலத்தில் சுயநலம் பார்க்கமாட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி! நாங்க 20 வருடங்களுக்கும் மேலாக ஆகிறது தியேடர்களுக்குச் சென்று. 2007 ஆம் வருஷம் அம்பேரிக்காவில் மெம்பிஸில் இருந்தப்போப் பெண்ணும் மாப்பிள்ளையும், "ஜிவாஜி" படத்துக்கு எங்களை வலுக்கட்டாயமாக அனுப்பி வைச்சார்கள். ஒரு மாறுதலா இருக்கும்னு! அங்கேயும் ரஜினி பெயர் வந்ததும் விசில் சப்தம், கைதட்டல் எல்லாமும் இருந்தது. பெரும்பாலும் தமிழர்கள் தான் பார்த்ததே! குடும்பத்தோடு வந்திருந்தனர்.

   Delete
  2. அமெரிக்கா போய் விட்டதால் அவனது அறிவு விஸ்தாரமாக வளர்ந்து விட்டதாக நினைக்காதீர்கள்.

   இந்த மாதிரி கூமுட்டைகள் உலகம் முழுவதும் வாழ்கின்றது.

   இவனுகள் தமிழர்கள் அன்றி வேறில்லை.

   Delete
  3. ஆமாம் கில்லர்ஜி, உண்மையில் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. நாங்க அம்பேரிக்காவில் வீட்டில் தான் படங்களே பார்ப்போம். அதுவும் நான் மத்தியான நேரம் தான் பார்ப்பேன். இந்தப் படத்தைத் தியேட்டரில் போய்ப் பார்க்கச் சொல்லிப் பெண் ரொம்பவே சொல்ல போனோம். ம்ஹூம்! எங்களுக்கு ரசிக்கலை!

   Delete
 11. இப்படித்தான் இருக்க வேண்டும் அம்மா...

  ReplyDelete
 12. ஹாஹா பதிவுவந்தாச்சா :) இன்னும் வெளிப்படையாவே கேள்வி கேக்கத்தான் நினைச்சேன் அங்கே அப்புறம் விட்டுட்டேன் .
  எனக்கு ரஜினி ரொம்ப பிடிக்கும் ஸ்கூல் டேஸில் ஆனா படங்கள் எல்லாம் தியேட்டர் போய் பார்க்கும் பொறுமை இல்லையே :)
  இப்போ யாரையும் தனியா விருப்பமில்லை :)

  // இலவசப் பொருட்களை எல்லாம் உடைச்சு படத்துக்குத் தங்கள் மேலான ஆதரவைக் காட்டினாங்க. //

  வேதனையான விஷயம் ..கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாங்களா ..எலக்ட்ரானிக் சாமான்களை தூக்கி ரோட்ல போட்றடாங்க அது எத்தனை கெடுதி சுற்று சூழலுக்கு ..இவங்களுக்கு வேண்டாம்னா இல்லாதவங்களுக்கு கொடுக்க வேண்டியதுதானே ..ஆனா இது தப்புன்னு நடிகர்கள் சினிமாவில் சொன்னால்தான் இவங்களுக்கு உரைக்குமா ?? இவங்களுக்கா இது சரி இது தப்புன்னு தோனவே தோணாதா ?
  பாவம் இவைகளை பெற்றவங்க ..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், இம்மாதிரிப் பல கேள்விகள் கேட்க நினைச்சுநானும் கேட்கலை.சினிமா நடிகர்கள், கிரிக்கெட் நக்ஷத்திரங்கள் மட்டுமில்லை. எழுத்தாளர்களையும் சிலர் ரொம்பவே ஆதரிசமாக நினைக்கிறார்கள். உதாரணமாக இப்போ சமீப காலங்களில் ஜெயமோகன்! இம்மாதிரிப் பித்தைப் பார்க்கையில் யாருக்கும் சுய சிந்தனையே இல்லையோ என்று தோன்றுகிறது. இலவசப் பொருட்களை உடைச்சு அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறாங்களாம். அது எல்லாம் வாங்கப்பட்டது நம்முடைய பணத்தில் தான் என்பது படம் எடுத்தவங்களுக்கும் தெரியலை, உடைச்சவங்களுக்கும் தெரியலை!

   Delete
 13. இந்த பொம்மை படத்தை 1 ,வருஷம் முன்னாடி
  எங்கள் பிளாக் புதன் கேள்வியில் பார்த்து யூ டியூபில் தேடி பார்த்தேன் ,,ஆனா இப்போ ரிமூவ் பண்ணிட்டாங்க ..
  ஆனா இப்போ நீங்க சொன்னதில் திரும்ப அந்த பாட்டை கேட்டேன் ..அற்புதமான வரிகள் மற்றும் தாசேட்டனின் இனிமையான கணீர் குரல்

  ReplyDelete
  Replies
  1. அட? எப்போப் பார்த்தீங்க? எனக்குச் சுமார் 3 வருஷமாக் கிடைக்கலை! நடு இரவில் கிடைக்குது. அது பார்த்தேன்.

   Delete
  2. ஆமாங்க்கா அது டைப்பிங் எர்ரர் ஒரு மூணு வருஷம் முன்னே என்கிறதில் 1 மட்டும் விழுந்திருக்கு ..
   மீண்டும் அதே காணொளியை போன வருஷம் எ .பியில் கேள்வி பக்கம் பார்த்து தேடியப்போ பாட்டு மட்டும் கிடைச்சது ..நல்ல படங்களை விட்டு வைக்கலாம் நமக்காக ..காப்பிரைட் காரணத்துக்கு ரிமூவ் செஞ்சிருக்காங்க ..

   Delete
  3. https://www.youtube.com/watch?v=hEZ3jDj4dYo

   https://www.youtube.com/watch?v=h3KcJkrae7c

   இது பொம்மை கல்யாணம் லிங்க்

   ரெண்டாவது கொஞ்சம் க்ளியரா இருக்கு

   Delete
  4. நானும் பொம்மை படத்தைப் பார்க்கனுன்னு ரொம்ப நாளா தேடிட்டுருக்கேன்....முன்னாடி இருந்துச்சுன்னு நினைக்கிறேன் ஆனா இப்ப வரதில்லை.

   வீணை பாலசந்தரின் படமான அவனா இவன் படமும் பார்க்க ஆசை. யுட்யூபில் இருக்கு இதுவும் த்ரில்லர் என்று தெரிகிறது. பயணம் எல்லாம் முடிஞ்சு வந்து பார்க்கனும்

   கீதா

   Delete
 14. https://www.youtube.com/watch?v=Vu693pTQUnE

  இந்த வீடியோவில் டைரக்டர் நடிச்சவங்களை பங்கேற்றவங்களை கூட அறிமுகம் செய்திருக்கார் ..எவ்ளோ அருமையான விஷயம்

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, இதை நிறையப் பார்த்துட்டேனே! :)))

   Delete
  2. ஏஞ்சல் இது வாட்சப்ல சுத்திக்கிட்டே இருக்கே!!!

   கீதா

   Delete
 15. என்ன இண்டைக்கு கீசாக்கா பக்கம் ஒரே புலம்பல்ஸ் ஆ இருக்கே:).. இப்போ நாங்க என்ன ஜொள்ளோணும்?:)...
  கீசாக்காவுக்கு ஜின்னிமா புய்க்காது ஜிவாசி அங்கிள் புய்க்காது கமேல் அங்கிளையும் புய்க்காது ஆனாஆஆஆ அவ எல்லா ஜின்னிமாவும் பார்ப்பா எனச் சொன்னால் ஓகேயா?:) ஹா ஹா ஹா சரி விடுங்கோ...
  உங்கள் குறிக்கோள்தான் எனக்கும், சினிமா என்பது ஒரு பொழுது போக்கு அவ்வளவே... தியேட்டரில் படம் பார்க்கப் பிடிக்கும் ஆனா நல்ல கதை இல்லாட்டில் மற்றும் சண்டைக் காட்சிகள் எனில் அப்படியே நித்திரையாகிடுவேன் கர்ர்ர்ர்:)..
  வீட்டில் எனில் ஓட விட்டு அல்லது பிரேக் எடுத்துப் பார்க்கலாமெல்லோ...

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஞானி, வீட்டில் இருந்தே படம் பார்க்கலாம் என்பதற்குத் தான் என்னோட ஓட்டும். பிடிக்கலைனா தொலைக்காட்சிப் பெட்டியைஅணைச்சுடலாம் பாருங்க! :)))) இப்போ சமீபத்திய பல படங்கள் நான்பார்த்தது இல்லை ஞானி! :) ஆனாலும் நம்ம ஸ்ரீராம்மாதிரி நான் சினிமாவில் மன்னி இல்லை.

   Delete
  2. //ஆனாலும் நம்ம ஸ்ரீராம்மாதிரி நான் சினிமாவில் மன்னி இல்லை.//

   கிர்ர்ர்ர்ர்... நான் தியேட்டருக்குப்போய் பதினான்கு வருடங்கள் ஆகிறது.

   Delete
  3. ஹையோஒ பச்சைப்பொய் சொல்றாரே போனவருடம்தானே குடும்பத்தோடு போய் அனுக்கா படம் பார்த்தேன் என புளொக்கில சொன்னாரே அதுக்குள் மறந்திட்டாரே த்றீராம் கர்ர்ர்ர்ர்ர்ர்:)...

   Delete
  4. ஆமாம், அந்த ஒரு படம் மட்டும் தியேட்டரில் பார்த்தேன். அது அனுஷ்க்காக இல்லை.படத்தின் ப்ரம்மாண்டத்துக்காக!

   Delete
  5. பாகுபலியா? அதன் முதல் பகுதி தொலைக்காட்சியில் வந்தப்போ பார்க்கணும் என்பதற்காகவே பார்த்தேன். தொலைக்காட்சியில் அதன் பிரம்மாண்டம் எதுவும் உணரமுடியலை. இரண்டாம் பாகம் பார்க்க முடியலை! :)))) அது தொலைக்காட்சியில் வரச்சே எல்லாம் வேறே ஏதேனும் வேலை இருக்கும்.

   Delete
 16. உண்மைதான் பணக்காரர்கள் பெரும்பாலும் வீட்டிலேயே ஹோம் தியேட்டர் வைத்துப் பார்த்திடலாம், பெரும்பாலும் முண்டியடித்துத் தியேட்டர் போவோர் சமைக்க பணமில்லாத குடும்பத்து மக்கள்தான் அதிகம், அந்தப் பணத்தை மிச்சப் படுத்தினால் வாழ்க்கைக்கு உதவுமே...

  ReplyDelete
  Replies
  1. ஞானி, ஏழை மக்களுக்கு சந்தோஷமே இதில் தான் என்கிறார்கள். வயிறைக்காயப் போட்டுப் படம் பார்ப்பது ஒரு சந்தோஷமா?

   Delete
  2. இதை நான் “சொல்வதெல்லாம் உண்மை” யில் பார்த்தே தெரிஞ்சேன், மனைவி சொல்கிறா, அவரின் அபிமான நடிகரின் படமெனில் முதல் ஷோவில் இருந்து திரும்ப திரும்ப பார்ப்பாராம், வீட்டில் சமைக்க அர்சி கிடையாதாம், தான் குழந்தைகளுக்காக கடன் பட்டே சமைப்பாவாம்.. இவர்களை எல்லாம் நடு ரோட்டில் நிக்க வச்சுச் சுடோணும்:)..

   Delete
  3. இப்படியான பைத்தியங்கள் தமிழ்நாட்டிலே நிறைய உண்டு. எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி புதுசா எந்தத் திரைப்படம் வந்தாலும் வீட்டுக்கு அருகே உள்ள தியேடரில் காலை பதினோரு மணி காட்சிக்குப் போய்விடுவார். அவ்வளவு வெறி.

   Delete
 17. ///எந்த நடிகரும் அவங்க சொத்திலேயோ, வாங்கற பணத்திலேயோ நமக்கு ஏதும் செய்யப் போறதில்லை. நமக்காக அவங்க வாங்கற பணத்தைக் குறைச்சுக்கவும் போறதில்லை. அவங்களை தெய்வமாக் கும்பிடறதிலே நமக்கென்ன லாபம்! ஒண்ணும் புரியலை எனக்கு! ///

  இதையேதான் நானும் கேட்பேன்... ஏழைகள் பணத்திலதான் உண்மையில் சினிமாக் காரர்கள் வாழ்கிறார்கள்..

  ReplyDelete
  Replies
  1. உண்மை அதிரடி, எந்த சினிமாக்காரங்களும் ஏழைகளுக்கு உதவுவதாகத் தெரியலை! அவங்க சம்பளத்தைக் கூடக் குறைச்சுக் கொண்டது இல்லை!

   Delete
 18. இப்போஎனக்கும் பாலசந்தர் படம் என்றாலே பயங்கர ஆர்வமா பார்க்கிறேன்.. குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை அவரது படங்கள்...
  பொம்மையா? எங்காவது கடைகளில் டிவிடி கிடைக்கலாம்.. வாங்கிப் பார்த்திட்டு எனக்கு கொப்பி பண்ணி அனுப்பி விடுங்கோ:)

  ReplyDelete
  Replies
  1. அதி... இது கே பாலச்சந்தர் இல்லை. வீணை எஸ். பாலச்சந்தர்!

   Delete
  2. அதிரடி, நான் சொல்லும் பாலசந்தர் வீணை பாலசந்தர். எஸ்.பாலசந்தர். கே. பாலசந்தரால் தான் தமிழ் சினிமாவின் போக்கு மாறி விபரீதமான உறவுகள், முரணான முற்றிலும் தேவையற்ற காதல்கள் போன்றவை அறிவு ஜீவி, மற்றும் பெண் சுதந்திரம் என்னும் பெயரில் காட்டப்பட்டு சமூகம் சீரழிக்கப்பட்டது என்று என் கருத்து. கள்ளக்காதலையும் அங்கீகரித்திருப்பார். அதே போல் மகள் வயதுப் பெண்ணோடு காதல் கொள்ளும் ஆண் என்றும் காட்டுவார்! இவங்கல்லாம் அவரைப் பொறுத்தவரை அறிவு ஜீவிகள்!

   Delete
  3. அக்கா, அதிரா ஏதோ பார்த்துவிட்டு போகிறார், நீங்கள் ஏன் அவரை ப்ரைன் வாஷ் செய்கிறீர்கள்?

   Delete
  4. ஆவ்வ்வ்வ்வ் பாலசந்தர்லயே இருவரோ எனக்கு தெரியாதே... எனக்கு தெரிந்தது ஷோபாவின் பாலசந்தரைத்தான் ஹா ஹா ஹா...
   ஏன் த்ர்ரியுமோ படிக்கும்போது ஒரு பேப்பர் தொகுப் பில் கட்டிய புத்தகம் கிடைச்சது பெயர் “ ஷோபாவும் நானும்” படிச்சதும் அப்படியே உருகிப்போயிட்டேன் அப்படி ஒரு லவ்:).. அதனாலதான் தெரியும் அவரை...

   Delete
  5. ஹா ஹா ஹா அதானே அப்படிச் சொல்லுங்கோ பானுமதி அக்கா... பலதும் பத்தும் பார்த்தால்தானே நல்லது கெட்டது புரியும்:)..

   Delete
  6. என் முந்தின கொமெண்டில் பாலுமகெந்திராவையும் பாலசதரையும் குழப்பி எழுதிட்டேன் ஷோபாவோடு ஹையோ ஹையோ:) எல்லாம் கீசாக்காவாலதான் ஹாஹா ஹா:)

   Delete
  7. இன்னொரு விடயம் சொல்லியே ஆகோணும் கீசாக்கா, பாலசந்தர்தான் உறவுமுறைகளை எல்லாம் குழப்பிட்டார், விபரீதமான உறவுமுறைகளை அறிமுகப்படுத்தினார் எனச் சொல்றீங்களே.... அவர் ஒன்றும் இல்லாததைச் சொல்லவில்லையே.. நான் படிச்சிருக்கிறேன் இந்தியாவில் எங்கோ மே பா சூரியன் கோயில் இருக்கிறதாம், அதில் இருக்கும் சிலைகளில் எவ்வளவோ தகாத உறவு முறைகளையும் ஏன் விலங்குகளோடுகூட உறவு கொள்வது போலவெல்லாம் சிற்பங்கள் இருக்கிறதாம், அப்போ அது எத்தனை வருடத்துக்கு முந்தைய சிற்பங்கள்... அதை எல்லாம் விட்டுப் போட்டு அப்பாவிப் பாலசந்தர் அங்கிளைக் குறை சொல்லலாமோ?:)... ஆஆஆஆவ்வ்வ். கஞ்சி ஆத்தாமலே கீசாக்கா கலைக்கிறாஆஆஆஆ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:)..

   Delete
  8. கஜூராஹோவைச் சொல்றீங்களோ? அதைத் தனியா வைச்சுக்கலாம்.

   Delete
  9. பானுமதி, திரைப்படங்களில் புரட்சிகரமான கருத்துகள் கொண்டு வந்தவர் என்னும் முறையில் ஸ்ரீதருக்கும் பாலசந்தருக்கும் நிறையவே வித்தியாசங்கள். ஸ்ரீதர் படங்கள் மூலம் நல்ல கருத்துகள் பரவின என்றால் பாலசந்தர்! :(

   Delete
  10. அதிரா... ஷோபா வுடன் நீங்கள் சொல்ல நினைப்பது பாலு மஹேந்திரா.

   Delete
  11. அதிரடியே அதைச் சொல்லிட்டார் ஶ்ரீராம்.

   Delete
  12. அதிரா உங்க கஜுரா கருத்தோடு நான் ஹைஃபைவ்! எனக்கும் உங்கள் கருத்து உண்டு...

   கீதா

   Delete
 19. ///
  எல்லோரும் நான் ஜினிமாப் பார்க்க மாட்டேன்னு சொல்லிண்டே ஜினிமா பத்தியும் ஜிவாஜி பத்தியும் சொல்றதுக்குக் கிண்டல் பண்ணறாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!///

  இனிமேல்,
  நான் ஜின்னிமா பார்ப்பேன் ஆனாபைத்தியமாக எல்லாம் இல்லை ...
  அப்பூடிச் ஜொள்ளோணும் கீசாக்கா ஓகே?:).. அதை விட்டுப்போட்டு எனக்கு ஜினிமாபிடிக்காது நான் பார்ப்பதில்லை எனச் சொன்னால் ஒரு பெரிய ஜக்க்க்க்க்கரைப் பூசணியை, நெ தமிழன் பிளேட்டில் போட்டுச் சாப்பிடுமளவு ஜாஆஆதத்தில் புதைத்தது போலாகும்:)..ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ் மீ எஸ்கேஏஏஏஏப்ப்ப்ப்ப்ப்ப்:).

  ReplyDelete
  Replies
  1. அதிரடி, நானும் அப்படித் தான் ஜொள்ளிட்டு இருக்கேன். ஜினிமாப் பைத்தியம் இல்லைனு! ஆனாலும் இப்போதைய ஜினிமாவெல்லாம் பார்க்கலை,பார்ப்பதில்லை! பார்த்தே நாளாச்சு!

   Delete
  2. இல்ல பாருங்கோ கீசாக்கா , நல்ல படங்களும் வருது

   Delete
 20. தேடினால் 1958 இல் வெளிவந்த “பொம்மை கல்யாணம்” மூவிதான் வருது சிவாஜி அங்கிள் நடிச்சதாம்..

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர் அதிரடி, எனக்கு அது கூட வரலை! :(

   Delete
  2. கீசாக்கா நம் நாட்டு யூ ரியூப்பில் பல பழைய படங்கள் ஏச் டி ல மாத்தி நிறைய கியூவில வந்து நிக்குது... மற்று பல புதுப்படங்களும் சூப்பர் தெளிவா வருது, ஆனா இந்த உங்கட மோடி அங்கிள் சுத்த மோசமாம்... அவர் வந்த பிறகு நிறையவே இந்தியாவில புளொக் பண்ணிட்டாராம், இப்போ நாங்க இங்கு யூ ரியூப்பில் பார்க்கும் லிங் உங்களுக்கு தந்தால் அங்கு அது பலது வேலை செய்யாது புளொக் பண்ணப்பட்டிருக்கும்.
   இதுக்குத்தான் சொல்றது பிறந்தா பிறக்கோணும் ஸ்கொட்லாந்தில ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)

   Delete
  3. இந்தத் தடை மோதி அங்கிள் வரும் முன்னரே இருந்து உண்டு அதிரடி. ட்ராயால் அனுமதிக்கப்பட்டவை என இருப்பனவற்றை மட்டுமே பார்க்கலாம். பல யூ ட்யூப் லிங்குகளும் முக்கியமாகத் திரைப்படங்கள் இங்கே வேலை செய்யாது. ஏனெனில் இங்கே தியேடர்காரங்களுக்கும் வருமானம் வேணுமே! அங்கே தடுக்க முடியாது. இங்கே அப்படி இல்லை. அரசே தடுத்து விடுகிறது. ஏழாவது அறிவுனு ஒரு படம் வந்தப்போ அது இந்தியாவில் வெளியிடும் முன்னரே அம்பேரிக்காவில் பலரும் யூ ட்யூப் மூலம் பார்த்தாச்சு!

   Delete
  4. அதிரா வெளிநாட்டில் பல படங்கள் ரொம்ப நல்லாவே யுட்யூப்ல வருதுன்னு சொன்னாங்க.

   ஆமாம் கீதாக்கா சில படங்கள் இங்க வரதுக்கு முன்னாலேயே வெளிநாட்டு வியாபாரம் நடந்துவிடுவதால் அங்கு யுட்யூபில் பார்த்துடறாங்க மக்கள். அங்கு சிடியும் போயிடுமாமே..முதலில் வெளிநாட்டு வியாபாரம் அப்புறம் தான் உள்நாட்டில்....முதல்லேயே அங்கு வியாபாரம் பேசிடறாங்க...படம் தொடங்கும் போதே...குறிப்பிட்ட நடிகர்கள் என்றால் வியாபாரம் செமயா இருக்குமாம்...மார்க்கெட் பொருத்து

   கீதா

   Delete
 21. நாங்கள் இருந்த ஊர்களில் சினிமா பார்ப்பது ஆடிக்கொருதரம் .அமாவாசைக்கு ஒரு தரம்.அ துவும் அப்பா அப்ரூவ் செய்தால் மட்டுமே.
  புகுந்த வீட்டிலும் ,
  தமிழ்ப் படங்களுக்கு அவ்வளவு ஆதரவு கிடையாது.
  இப்பொழுது பார்ப்பதேலாம் யூ டியூபில்.
  வேண்டும் போது நிறுத்தி விடலாம்.

  ReplyDelete
  Replies
  1. யூ ட்யூபில் எல்லாம் பார்ப்பதில்லை. என்னோட மொபைலிலேயே நான் படங்கள் எல்லாம் தரவிறக்கிப் பார்ப்பதுனு வைச்சுக்கலை. சும்மாப் பேசவும், வாட்சப்பார்க்கவும் எப்போவானும் வெளியே போனாலோ அல்லது கணினியைத் திறக்கலைனாலோ முகநூல் பார்க்கவும் தான் மொபைல். இணையம் அதில் பயன்படுத்துவதே இல்லை.

   Delete
 22. ஜினிமா பத்தி எழுதி இருக்கேன்னதும் எல்லோரும் ஓடோடி வந்து ஆதரவு தெரிவிச்சுட்டாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :))))))

  ReplyDelete
 23. எந்த விஷயமானாலும் அது பற்றி தெரிந்து பேசுவதுஅவசியம்நமக்குப்பிடிக்காதத் இன்னொருவருக்குப் பிடிக்கலாம் நானும் அந்த ரகம்தான் சினிமா செட்ய்திகளை விரல்நுனியில்வைத்துக் கொண்டு எதுவும் பிடிக்காது என்றுசொல்வதுஎனக்கு உடன் பாடு இல்லை நமக்குப் பிடிக்காததை நாம் பர்க்க வேண்டாம் பார்ப்பவர்களப் பார்த்துசிரிக்க வேண்டாமே

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி ஐயா. நான் எந்த விஷயத்திலும் அரைகுறை! இப்போதைய சினிமா பத்தி எதுவும் தெரியாதுனு தான் பல வருடங்களாகச் சொல்றேன். எனக்கு ஜிவாஜியைப் பிடிக்காது என்பதை வைச்சே நண்பர்கள் என்னைக் கிண்டல் செய்வதும் நான் திரும்பக் கிண்டல் செய்வதும் எங்களுக்குள் உள்ள புரிதலால் தான். இதில் தவறாக எதுவும் இல்லை. யாரும் தவறாய் எடுத்துக்கவும் இல்லை; சொல்லவும் இல்லை! சும்மாஒரு ஜாலிக்குத் தானே!

   Delete
 24. வழக்கம்போல் கடைசியாக வருகிறேன். எங்கள் வீட்டில் சினிமாவுக்கு செல்ல அனுமதி வாங்குவது கிட்டத்தட்ட சாமி கிட்ட வரம் வாங்குவதை போல கடினம். இவ்வளவு கஷ்டப்பட்டு பர்மிஷன் வாங்கி சினிமாவுக்குச் செல்ல வேண்டுமா என்று நான் அப்பா,அம்மாவிடம் பர்மிஷன் கேட்க மாட்டேன். என் அக்காதான் கேட்பாள். என் அக்கா, "நீ ஒரு தடவை கூட பர்மிஷன் கேட்க மாட்டேன் என்கிறாய்" என்றால், "உனக்குத்தான் சினிமா பார்க்க வேண்டும், நான் உன்னோடு வருகிறேன்" என்பேன். ஆனால் என் அக்காக்கள் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பதை நிறுத்தி விட்டார்கள். நான் இன்னும் திரையரங்கிற்குச் சென்று படம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். காரணம் நல்ல சினிமாக்கள் எனக்குப் பிடிக்கும். புத்தகம் அளிக்கும் சந்தோஷத்தை, கச்சேரி அளிக்கும் சந்தோஷத்தை நல்ல திரைப்படமும் எனக்கு அளிக்கிறது. நல்ல திரைப்படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. எனக்கென்னவோ யூ ட்யூபில் படம் பார்ப்பது அத்தனை பிடித்தமாக இல்லை. அமேசான் ப்ரைம் பரவாயில்லை.

  அதற்காக முதல் நாள் முதல் ஷோவெல்லாம் கிடையாது. ஹிந்து விமர்சனம், நீலச்சட்டை விமர்சனம் இவைகளை படித்து, கேட்டு முடிவு செய்வேன்,செய்வோம். 2.0 படம் நீலச்சட்டை விமர்சனத்தில் பாஸ் பண்ணவில்லை. அதனால் அரைகுறை மனதோடுதான் சென்றோம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி! எங்க வீட்டிலும் அனுமதி எல்லாம் அவ்வளவு எளிதில் கிடைக்காது. சொல்லப் போனால் அப்பாவுக்கு மனநிலை எப்படி இருக்கோனு பயந்துண்டே தான் கேட்போம். பல சமயங்களிலும் பாஸ் கிடைத்தால் கூட அக்கம்பக்கம் யாருக்கானும் கொடுப்பார், இல்லைனா கிழிச்சுப் போட்டுடுவார். நான் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி சினிமாவுக்குப் போனது என்பது எங்க சித்தி வீட்டில் (அசோகமித்திரன்) சித்தி பணம் கொடுத்துப் போயிட்டு வானு அனுப்பித் தான்! இல்லைனா சித்தியோட நாத்தனார் கூட்டிச் செல்வாங்க! இதெல்லாம் அப்பா வரை போகாமல் பார்த்துப்போம். தெரிஞ்சா சித்தி வீட்டுக்கே அனுப்ப மாட்டார்! :)

   Delete
  2. ஒரு இருபது, இருபத்தைந்து வருடங்கள் முன்னர் புத்தகங்கள் வாங்கிக்கொண்டிருந்தவரை விமரிசனங்களை விடாமல் படிப்பேன். சினிமா என்னமோ பார்க்க மாட்டோம் தான். ஆனால் விமரிசனம் படிக்கப் பிடிக்கும். இப்போல்லாம் நண்பர்கள் பார்த்துட்டு முகநூலிலும் வலைப்பக்கங்களிலும் போடுவதைப் படிப்பது தான்! நீங்க சொல்லும் நீலச்சட்டை பத்தி எல்லாம் தெரியவே தெரியாது! அதே போல் இப்போதைய நடிகைகள் பெயர் தெரிந்த அளவுக்கு அவங்க யார், யார்னு அடையாளம் தெரியாது. டூத் பேஸ்ட் விளம்பரத்தில் வரும் காஜல் அகர்வால் தவிர்த்து. இப்போ அவங்களும் அந்த விளம்பரத்தில் வருவதில்லை. வேறே யாரோ வராங்க!

   Delete
 25. //அவங்களை தெய்வமாக் கும்பிடறதிலே நமக்கென்ன லாபம்!//
  இப்படிப்பட்ட வெறி பிடித்த ரசிகர்கள்தான் சிவாஜியை ஓவர் ஆக்டிங் செய்ய வைத்தார்கள். ரஜினி என்னும் நல்ல நடிகனை ஸ்டைலுக்குள் முடக்கினார்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஒரு விதத்தில் நீங்கள் சொல்வது சரியென்றாலும் நடிகர்களும் அந்த முகஸ்துதிக்கு மயங்கித்தானே செய்கின்றனர். கொஞ்சமானும் சிந்திக்கலாம் இல்லையா?

   Delete
  2. இந்த விஷயத்தில் எனக்கு அமிதாப் பச்சன் நடிக்கத்தேர்ந்தெடுக்கும் படங்கள் பிடிக்கும். ஶ்ரீதேவியோடு நடிச்சார்தான்! ஆனால் அது மோசமான தோல்வி! அதுக்குப் பின்னர் சுதாரிச்சுண்டார்னு நினைக்கிறேன். அவர் வயதுக்கு ஏற்ற படங்களாகத் தான் நடிக்கிறார்.

   Delete
  3. அக்கா அமிதாப்பின் சமீபத்திய படம் நான் பாதிதான் பார்த்தேன் முழுசும் இல்லை ஆனால் செம காமெடி மூவி கருத்துகளும் இருக்கு...

   102 நாட் அவுட்...ஹிந்தி படம்

   கீதா

   Delete
  4. நான் பார்த்து ரசித்தேன். பார்க்கலாம்.

   Delete
 26. நான் முதல் நாள் இரண்டாவது ஷோ பார்த்த படம் ஒன்று உண்டு. அது கமலின் தசாவதாரம். அப்போது மஸ்கட்டில் இருந்தேன். அங்கு *வியாழன், வெள்ளிதான் வீக் எண்ட் என்பதால், வியாழக் கிழமை புதுப்படங்கள் வெளியாகிவிடும். நம் ஊரில் வெள்ளியன்றுதான் வெளியாகும். நம் ஊரில் வெளியாகும் முன்பே அங்கு படத்தை பார்த்து விட்டேன்.
  * இப்போது வெள்ளி, சனி வீக் எண்ட் ஆகி விட்டது.

  ReplyDelete
  Replies
  1. இந்த "தசாவதாரம்" படத்தின் ட்ரெயிலர்களையும் முக்கியமான காட்சிகளையும் பார்த்த போதே எனக்குச் சிரிப்பு வந்தது. அதிலும் அந்த விக்ரஹத்தைத் தூக்கிக் கொண்டு சுகன்யா (?) ஓடுவது! வாய்ப்பே இல்லை! இதுக்கு சுஜாதா வசனங்கள்னு வேறே சொன்னாங்க!

   Delete
 27. மேலே, BV-யின் கருத்தில் அர்த்தமுள்ளது !

  ReplyDelete
  Replies
  1. இருக்கலாம் ஏகாந்தன். ஆனால் நடிகர்களாவது இதை உணர்ந்திருக்கலாம் அல்லவா?

   Delete
 28. நானும் படங்கள் பார்த்ததுண்டு அதுவும் பாலக்காட்டில் இருந்தப்ப. ஆனால் பல படங்களின் பெயர்கள், நடிகர்கள் எதுவும் நினைவு இருப்பதில்லை. இப்போது ஊரில் வேலையில் இருப்பதால் அவ்வளவாகப் பார்க்க முடியவில்லை. டிவியில் ஏதேனும் பார்த்தால் உண்டு. நடிப்பு, இயக்கம் கதை என்று டெக்னிக்கல் விஷயங்களைத்தான் பார்ப்பேன்...மற்றபடி வேறு எதுவும் நினைவில் இருப்பதில்லை..

  துளசிதரன்

  ReplyDelete