வைகுண்ட ஏகாதசி 2012 அனுபவம்
இங்கே
ஶ்ரீரங்கம்
கோயிலில்
அனுபவம் இது வரை!
அரையர் சேவை வைகுண்ட ஏகாதசிப் பதிவுகள் இங்கே ஆரம்பிச்சுக் கீழே இவற்றில் முடிவடைகின்றன.
நம்மாழ்வார் மோட்சம்
ஆன்மிகப் பயணம் பக்கத்தில் வைகுண்ட ஏகாதசி குறித்த விபரங்கள் கிடைக்கும். நாங்க போயிட்டு வந்தது 2012 ஆம் ஆண்டில் அது குறித்த விபரங்களையும் கொடுத்திருக்கேன்.
பகல் பத்து ஒன்பதாம் நாள் அலங்காரம், நன்றி ரிஷபன்
இரண்டு நாட்களாக இரவில் அரங்கன் பகல்பத்து உற்சவம் முடிந்து மூலஸ்தானம் எழுந்தருளுவதைப் பார்த்து விட்டே படுத்துக்கப் போகிறேன். முந்தாநாள் ஒன்பதாம் திருநாளன்று அரங்கன் மூலஸ்தானம் போகப் பத்தரை மணி ஆகி விட்டது. மிகப் பொறுமையாகவும் மிக அழகாகவும் பல்லக்குத் தூக்குபவர்கள் (திருப்பாதம் தாங்கிகள்) தங்கள் சேவையைச் செய்கின்றனர். வேறே எங்கும் இத்தனை அழகான நடைமுறைகள் இருக்கானு தெரியலை. இருக்கலாம். எனக்குத் தெரியலை. இங்கேயோ அரங்கன் மேலும் நம்பெருமாள் மேலும் பாசமும், அன்பும் வைத்திருக்கும் மனிதக் கூட்டம். ஆகவே அவனுக்கு உகந்ததை அன்றி வேறே எதுவும் செய்ய மாட்டார்கள். எந்த நேரமும் அவனைப் பத்திரமாய்ப் பாதுகாக்கவேண்டும் என்னும் கவலை.
மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் பழைய படம். முகநூல் பகிர்வு. நேற்றைய அலங்காரத்தில் பட்டுப்புடைவைக்கு ஊதா நிற பார்டரும் தலைப்பும். இது சிவப்பு நிறத்தில் இருக்கு. புதிய படம் கிடைச்சதும் பகிர்கிறேன்.
நேற்று மோகினி அலங்காரம். உண்மையிலேயே நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் மயக்குகிறார். பார்க்கப் பார்க்கப் பரவசம். நேற்று மாலை ஆறு மணிக்கே நேரலை ஒளிபரப்பு ஆரம்பிச்சிருந்தாலும் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு இரவு உணவையும் முடித்துக் கொண்டே உட்கார்ந்தோம். நேற்று கருடமண்டபம் அருகே பெருமாள் வந்து எல்லா ஆழ்வாராதிகளுக்கும் மரியாதை பண்ணி விட்டு ஆர்யபடாள் வாயில் வழியே ஒன்பது மணிக்கெல்லாம் உள்ளே போய்விட்டார். பின்னே! காலம்பர சீக்கிரம் எழுந்திருக்க வேண்டாமா? இன்னிக்குக் காலையில் ஐந்தரை மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு. மூன்றரை மணிக்கே முழிப்பு வந்தாலும் படுத்திருந்தேன். அப்புறமா நாலரை மணிக்கெல்லாம் எழுந்து வாசலில் விளக்கேற்றிக் கோலம் போட்டிக் காஃபி போட்டு வைத்துவிட்டுத் தொலைக்காட்சியில் உட்கார்ந்தேன். பெருமாள் அப்போது சந்தனு மண்டபத்தில் இருந்து இறங்கிப் பிராகாரம் சுற்றி வந்தார். அதன் பின்னர் சரியாக ஐந்தரை மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு. பெருமாள் எக்கச்சக்கமான கூட்டத்தோடு ரத்னாங்கி அணிந்து கொண்டு பாண்டியன் கொண்டை, கிளி மாலையுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வந்தார். ஆயிரக்கால் மண்டபத்தில் போய் இருந்து தரிசனம் கொடுப்பார். ஆனால் இன்னும் அங்கே போகவில்லை. பிரகாரம் சுற்றுகிறார். எக்கச்சக்கமான கூட்டம். நெரிசல் தாங்கலை. பெருமாள் இப்போது ஆயிரக்கால் மண்டபத்துக்கு அருகே வந்திருக்கார். எப்போ உள்ளே நுழைவார்னு தெரியாது.
பெரிய பெருமாள் முத்தங்கி சேவை சாதிப்பார். போய்ப் பார்க்க ஆசை தான். ஆனால் கூட்டம் எப்படினு சொல்ல முடியலை! பார்க்கலாம். அதிர்ஷ்டம் இருந்தால் ரங்கனே அழைப்பான்.
வைகுண்ட ஏகாதசி வாழ்த்துகள்
ReplyDeleteஅனைத்து உயிர்களும் இன்புறட்டும்.
கில்லர்ஜி... வைகுண்ட ஏகாதசினா முழுப் பட்டினி இருக்கணும். கீசா மேடம் பட்டினி (உபவாசம்) இருக்கறதுக்காக வாழ்த்துறீங்களா?
Deleteவாங்க கில்லர்ஜி, விரதம் முடிந்திருக்கும்னு நம்பறேன்.
Deleteநெல்லை, நானெல்லாம் விரதம் இருக்க முடியாது என்பதை ஏற்கெனவே சொல்லி இருக்கேன். நீங்க கவனிக்கலை போல! நேற்று கஞ்சி, சாபுதானா கிச்சடி!
Deleteஅழகான அருமையான நேர்முக வர்ணனை...
ReplyDeleteஅரங்கனின் அன்புக்குப் பாத்திரனாக ஆகவேண்டும்..
அரங்கன் அனைவரையும் காத்தருள்வானாக!..
நீங்க வேறே துரை! எங்கே நேர்முக வர்ணனை கொடுத்திருக்கேன்! இல்லையே! அரங்கனின் அன்புக்கு நாம் எல்லோருமே பாத்திரமானவர்களே! காத்தருள்வான் கண்டிப்பாக!
Deleteதரிசனம் கிடைத்தது அம்மா... நன்றி...
ReplyDeleteநன்றி டிடி!
Deleteநான் பொதிகை தொலைக்காட்சியில் பார்த்தேன்.
ReplyDeleteதிவல்லிக்கேணி , ஸ்ரீரங்கம் இரண்டு ஊரையும் காட்டினார்கள்.
ரங்கன் "நாழி கேட்டான் வாயில் "வழியாக அழகாய் வந்து நின்று நின்று வந்தார்.
அற்புதமாய் காட்டினார்கள். அப்புறம் மும்பை செம்பூர் பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவும் கண்டு மகிழ்ந்தேன்.
சங்கரா தொலைக்காட்சியில் பகல்பத்து உற்சவம் காட்டினார்கள் அதில் பார்த்தேன்.
முத்தங்கி சேவை பார்த்து விட்டு பதிவு போடுங்கள்.
வாங்க கோமதி, பொதிகை, ஜெயா தொலைக்காட்சி, சங்கரா எல்லாத்திலேயும் காட்டினாங்க. ஆனால் நாங்க உள்ளூர் கேபிள் டிவியில் பார்த்தோம். முத்தங்கி சேவைக்குப் போக முடியுமா தெரியலை! கூட்டம் அதிகம். வரிசையில் நின்றால் ஐந்து மணி நேரம் ஆகிறதாம். விசாரித்துவிட்டுப் போகணும்!
Deleteஎன்ன அழகிய காட்சிகள் அவை ..பார்க்க பார்க்க தெவிட்டாதவை ..
ReplyDeleteபோன வியாழன் அன்று அப்பா , அம்மா முத்தங்கி சேவைக்கு போனார்கள் ...பள்ளிலாம் இன்னும் விடுமுறை விடவில்லை அல்லவா ..அதானல் கூட்டம் பரவாயில்லை...நல்ல தரிசனம் கிடைத்தது என்றே சொன்னார்கள் ..
வாங்க அனுராதா, போனவாரம் போயிருக்கணும்! அசட்டுத்தனமா விட்டுட்டோம். இப்போ முடியுமானு பார்க்கலாம்.
Deleteஅழகிய படங்கள் கீதாக்கா. உங்கள் மூலம் தரிசனமும் ஆயிற்று..
ReplyDeleteகீதா
நன்றி தி.கீதா
Delete//இங்கேயோ அரங்கன் மேலும் நம்பெருமாள் மேலும் பாசமும், அன்பும் வைத்திருக்கும் மனிதக் கூட்டம். ஆகவே அவனுக்கு உகந்ததை அன்றி வேறே எதுவும் செய்ய மாட்டார்கள்.// - இந்த மாதிரி பக்தி வருவதற்கு இன்னும் எத்தனை ஜென்மமோ.......
ReplyDeleteஉற்சவ விக்ரஹம், விக்ரஹம் கிடையாது, அது அவனே என்பது தாத்பர்யம். அதனால்தான் அவனுக்கு விசிறி, வெயில் படாமல் மழையில் நனையாமல் பாதுகாக்கிறார்கள்.
வாங்க நெ.த. உண்மையாகவே அரங்கனை, நம்பெருமாளைப் பார்த்தால் நம் வீட்டில் ஒருத்தரைப் பார்ப்பது போல் தான் தோன்றும். அங்கே நடக்கும்/நடந்த அனைத்தையும் அவன் பார்த்து ரசிக்கிறான் என்னும் உணர்வே மேலோங்கும்.
Deleteபடங்கள் அருமை. இன்று சிறிய கோவில் முதல் பெரிய கோவில் வரை அனைத்திலும் கூட்டம்.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், நன்றி.
Deleteநிறைவான தரிசனம். நன்றி கீதா. எங்களுடைய நேற்று சாயந்திரமே
ReplyDeleteலைவ் ரிலே கிடைத்தது எல்லாம் அவன் கிருபைதான்.
குழந்தைகள் என்னை விட்டால்,ஸ்ரீரங்கன் அருளும் இருந்தால்
வாடகைக்காவது வீடு எடுத்து அங்கே வசிக்க வேண்டும்.
ஏதோ கதை போல நினைத்துக் கொள்கிறேன்.
வாங்க ரேவதி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Delete//வாடகைக்காவது வீடு எடுத்து அங்கே வசிக்க வேண்டும்.// - வல்லிம்மா... நானும் கீசா மேடம் வீட்டிற்குச் சென்ற பிறகு, இப்படித்தான் நினைத்துக்கொண்டேன் (வீடு வாங்கவேண்டும் என்று). நிறைய ஊர்களுக்கு (கும்பகோணம் போன்று) போகும்போது மனது இப்படித்தான் நினைக்கும். அதிலும் ஸ்ரீரங்கம் என் மனதில் தங்கிவிட்டது.
Deleteநெல்லை... ஸ்ரீரங்கத்தில் கூட்டம் அதிகமாகி விட்டது என்று வெங்கட் எழுதி இருந்தார்... நீங்களும் அங்கே செல்லப் போகிறீர்களா!!!
Deleteஸ்ரீராம்... மனசளவுல எனக்கு பெங்களூர் பிடிக்கலை. அங்கதான் வீடு இருக்கு. சென்னைல ஓஎம்.ஆர் லதான் வீடு. அங்க இருக்க விருப்பம் இல்லை. பேசாம ஸ்ரீரங்கத்துக்குப் போலாம்னு (கீசா மேடம் வீடுகளைப் பார்த்தப்பிறகு, அந்த மாதிரி பில்டிங்ல) மனசுல தோணுது. மனைவி, பசங்க செட்டில் ஆனப்பறம் யோசிப்போம் என்று சொல்றா. ஆனா ப்ராப்தம் எங்க இருக்குன்னு தெரியலை.
Deleteஇன்றைக்கு இங்கேயும் சொர்க்க வாசல்.... மாலை அலுவலகத்திலிருந்து வந்த பிறகு சென்றேன் - நல்ல கும்பல். உற்சவ மூர்த்தி தரிசனம் கிடைத்தது. கூடவே கதம்ப சாதம் பிரசாதமும்! :)
ReplyDeleteவாங்க வெங்கட், கதம்பசாதம் என்பது கிட்டத்தட்ட சாம்பார் சாதம் தானே!
Deleteகீசா மேடம்.... வாழ்க்கையில் முதல் முறையாக திருப்பதி பெருமாள் 'சாத்துமுறை' தரிசனத்தில், 'கதம்ப சாதம்' பிரசாதமாக இரு முறை (அந்த சேவைக்கு மட்டும் உண்டு) கொடுத்தார்கள். சொல்லக்கூடாது, நன்றாக இல்லை. சாம்பார் சாதம்தான், ஆனால் கொஞ்சம் அதிகமாக கொத்தமல்லி விரை அரைத்திருந்தார்கள் மற்றும் மிக அதிக நெய் என்று தோன்றியது.
Deleteஆஆஆஆஆஆ நானும் வைகுண்ட ஏகாதசி விரதம் பிடிக்கிறேன்ன்.. சொர்க்கம் தூரத்தில தெரியுதூஊஊஊஊ:)
ReplyDeleteஆ ஆ ஆ அதிரடி, திடீர்னு அப்பாவியா ஆயாச்சா? விரதம் பிடிங்க, பிடிங்க, விட்டுடாதீங்க! சொர்க்கம் பக்கத்தில்! நம் மனதில்!
Deleteகீதாக்கா உங்க பதில் சூப்பர் மிகவும் பிடித்தது...சொர்கம் மனதில்!!! எஸ் எஸ் எஸு...நான் அடிக்கடி சொல்லுவது....
Deleteகீதா
நன்றி தி/கீதா, ஆனால் யாருமே நான் கொடுத்திருக்கும் சுட்டிகளுக்குச் சென்று படித்ததாகத் தெரியலை. எல்லோருமே பிசி போல!:))))))
Deleteஇருபது ஆண்டுகளுக்கும் மேலாக்ச திருச்சியில் இருந்தாலும் ஒரே ஒரு முறைதான் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல்வழியெ சென்றோம்
ReplyDeleteநாங்களும் 2012 ஆம் ஆண்டில் சென்றோம்.
Delete