பொங்கலோ பொங்கல்
தைப்பொங்கலுக்கும் கிருஷ்ணருக்கும் சம்பந்தம் உண்டா என்றால் உண்டு. கிருஷ்ணரின் மகன் ஆன சாம்பன் என்பவன் துர்வாச மஹரிஷி வந்தபோது அவரைக் கேலி பேசியதால் அவன் உடல் நலம் கெட்டுப் போய் தோல் நோயால் பீடிக்கப் பட சாபம் கிடைத்தது. அந்த சாபத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தால் கிருஷ்ணரும், துர்வாசரும், அவனை சூரியனைப் பூஜிக்கச் சொல்கின்றனர். சந்திரபாகா நதிக்கரையில் சூரியனைப் பூஜிக்கின்றான் சாம்பன் அந்த நாள் தான் மகர சங்கராந்தி எனச் சொல்லப் படுகின்றது. முனிவர்களின் பத்தினிகள் அங்கே நதிக்கரையில் ஒன்று கூடி சூரிய பகவானை வேண்டி விரதம் இருந்து பொங்கல் வைத்து வழிபட்டு வந்தார்கள். சாபம் நீங்க நதிக்கரைக்குச் சென்ற சாம்பன் தானும் அதுபோல் விரதம் இருந்து சூரிய வழிபாடு செய்கின்றான். அதுவே மகர சங்கராந்தி எனச் சொல்லப் படுகின்றது.
இந்தப் பண்டிகை இந்தியா பூராவும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப் படுகின்றது. அஸ்ஸாம்,மணிப்பூர் போன்ற இடங்களில் "போகாலி பிகு" என்ற பெயரில் இந்த விழா அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப் படுகின்றது. பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் "லோகிரி" என்று அழைக்கப் படுகின்றது. குஜராத், மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் "மகர சங்கராந்தி" என்ற பெயரில் அழைக்கப் படுவதுடன் அன்று எள்ளுடன் சேர்த்த இனிப்புகளையும் பரிமாறிக் கொள்வார்கள். பஞ்சாப், ஹரியானாவில் சோளப்பொரி, அரிசி போன்றவற்றில் இனிப்புச் சேர்த்து நெருப்பில் இட்டு ஆடிப் பாடுவார்கள். காஷ்மீரத்தில் இந்நாளில் பருப்பு, அரிசி, நெய் கலந்த கிச்சடி செய்து அனைவருக்கும் விநியோகித்துக் கொண்டாடுகின்றனர்.
இலங்கையில் மார்கழிமாதம் முழுதும் வீட்டில் கோலம் போடும்போது சாணப் பிள்ளையார் பிடித்து வைத்து, அவை மொத்தத்தையும் சேர்த்து பொங்கலுக்கு மறுநாள் பிள்ளையாரை வழிபட்டுப் பிள்ளையார் பொங்கல் எனக் கொண்டாடுவார்கள் எனத் தெரிய வருகின்றது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சங்கராந்தி அன்று புண்ணிய கால ஸ்நானம் என்னும் வழிபாடு முக்கியமாய்க் கருதப் படுகின்றது. அன்று கங்கை, யமுனை, நர்மதை போன்ற புண்ணிய நதிகளில் நீராடுவதைச் சிறப்பாய்க் கருதுகின்றனர். நம் மாட்டுப் பொங்கல் போன்று அங்கேயும் கோபூஜை செய்வதுண்டு. அவ்வளவு ஏன்?? அமெரிக்கா என்ற பொதுவான பெயரில் அழைக்கப் படும் யு.எஸ்.ஸிலும் நவம்பர் மாதம் அறுவடை முடியும் நேரம், அந்த வருஷத்து விளையும் காய், கனிகளை வைத்து "Thanks Giving Day" என்று கொண்டாடுகின்றனர்.
கிருஷ்ணாவதாரத்தில் சூரிய வழிபாடு நதிக்கரையில் செய்யப் பட்டதாய்ச் சொல்லப் பட்டாலும், அதற்கும் முன்னரே ராமாயண காலத்தில் ஸ்ரீராமர், ராவணனை வெல்வதற்காக அகத்தியரின் அறிவுரைப்படி ஆதித்ய ஹ்ருதயம் படித்து சூரியனுக்காக விரதம் இருந்து, பின்னர் போருக்குப் புறப்பட்டதாய் வால்மீகி சொல்கின்றார். சூரியனை வழிபடுவது என்பது தொன்று தொட்டு இருந்து வந்திருக்கும் ஒரு வழிபாடு ஆகும். நம் கண்ணுக்கு அன்றாடம் தெரியும் நிதரிசனக் கடவுள் சூரியனே ஆகும். தென் திசையில் பயணித்துக் கொண்டிருந்த சூரியன் தன் பயணத்தை வடதிசைக்கு மாற்றும் நாளே உத்தராயன புண்ணியகாலம் என்றழைக்கப் படுகின்றது. இந்த வடதிசைக்கு சூரியன் மாறும் நாளே தை மாதம் முதல் தேதியன்று நம் தமிழ்நாட்டில் பொங்கலாகக் கொண்டாடப் படுகின்றது. சூரியன் இல்லையேல் மழையும் இல்லை, மண் வளமும் இல்லை, தட்பமும், வெப்பமும் இணைந்த சூழலில் தான், பயிர், பச்சைகள் செழிப்பாய் வளரவும் முடியும். ஆகவே விஞ்ஞான ரீதியாகவும் சூரிய ஒளி இன்றி எதுவும் செய்ய முடியாதல்லவா? அதற்கான நன்றி நவிலலே பொங்கல் என்றும் கூறலாம்.
போகி அன்று பழையன கழித்து, புதியன வாங்குவதையும், வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்தும் கொண்டாடுகின்றோம். இந்தப் பொருட்களை எரிக்கும்போது சிறு குழந்தைகள் "போகி மேளம்" என்றதொரு சிறு கருவியால் கொட்டி ஆடிப் பாடிக் குதிப்பார்கள். எங்க தெருவிலே இன்னிக்குக் காலை 3 மணியிலிருந்தே போகி கொட்ட ஆரம்பிச்சு, ஒருவழியா ஆறு மணியோட முடிஞ்சது. இதற்கான காரணம் என்ன என்று சொல்லுவதென்றால் அதற்கும் கண்ணனே வந்துடறான் முந்திக் கொண்டு. இந்திரனுக்கு மற்றொரு பெயர் போகி என்பதாகும். மழையைப் பொழிய வைக்க இந்திரனை வணங்குவதுண்டு. மழை பொழிய வைக்கும் இந்திரனுக்கு நன்றியாகவே தை முதல்நாள் அறுவடை ஆகும் பயிர்களை படையலாக வைத்து வணங்கும் வழக்கம் இருந்து வந்ததாய்த் தெரிய வருகின்றது. ஸ்ரீ கிருஷ்ணர் கோகுலத்தில் வளர்ந்து வந்தபோது இம்மாதிரி தை மாதம் இந்திரனுக்கு விழா எடுக்கும் நாள் வந்தபோது கிருஷ்ணர் கோகுலத்து மக்களை இந்த வழிபாட்டை நியாயமாய் கோவர்த்தனகிரிக்கும், அவற்றை எல்லாம் படைத்துக் காத்து ரட்சிக்கும் வாசுதேவன் ஆகிய ஸ்ரீமந்நாராயணனுக்கே செய்யவேண்டும் என்றும், ஆகையால் அவனின் அம்சம் ஆன சூரியநாராயணனுக்கு இந்த வழிபாட்டைச் செய்யும்படிக்கும் மாற்றத்தைக் கொண்டு வந்தார்.
ஆத்திரம் அடைந்த இந்திரன் கோகுலத்திலும், சுற்று வட்டாரத்தில் இதுவரை காணாத அளவுக்குப் பேய் மழையாகப் பொழிய, கோகுலமே நிலை குலைந்தது. கண்ணனோ சற்றும் கலங்காமல் கோவர்த்தனகிரியைக் குடையாய்ப் பிடித்து மக்களைக் காப்பாற்றினார். கோகுலத்தின் ஒரு ஈ, எறும்புக்குக் கூட துன்பம் நேராமல் பாதுகாத்தார். (இது பற்றி பின்னர் விரிவாய்ப் பார்ப்போம்). இந்திரன் வெட்கம் கொண்டு ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைய அவர் சங்கராந்திக்கு முதல்நாளை இந்திரன் பெயரால் போகிப் பண்டிகை எனக் கொண்டாடுவார்கள் என அவனை சமாதானம் செய்தாராம்.காளிங்க மடுவில் குதித்துக் கண்ணன் காளிங்கனை வதம் செய்தபோதும் இந்த மாதிரி ஒரு போகி நாள் என்றும், அன்று கண்ணனுக்குக் காளிங்கனின் விஷம் ஏறாதபடிக்கு ஆயர்பாடிச் சிறுவர்கள் தீ மூட்டி, பறை கொட்டி இரவு முழுதும் தாங்களும் விழித்திருந்து, கண்ணனும் தூங்காமல் விழித்திருக்கும்படிச் செய்தனர் என்றும் அதன் காரணமாகவே போகியன்று பறை கொட்டும் வழக்கம் ஏற்பட்டதாயும் தெரிய வருகின்றது.
இனி பொங்கல் பற்றிய விபரங்களை நாளை பார்ப்போம்!
நிறைய விடயங்கள் பொங்கல் குறித்து அறிய நாளை வருகிறேன்.
ReplyDeleteவாங்க கில்லர்ஜி, முக்கியமா நாளைக்கு வாங்க! :))))
Deleteமுதலில் சைன் வச்சிடறேன் :) இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் அக்கா குடும்பத்தாருக்கு
ReplyDeleteஹாஅ ஹா ஹா அல்லோ இது முதல் இல்லையாக்கும்:)... சே சே அஞ்சுவுக்கு ஏன் இப்பூடி ஆகுது:).. ராகு கேது மாற்றமோ:)..
Deleteபவ்வால்ல :) தேவகோட்டையும் உத்தமபாளையமும் கிட்டக்கத்தான் :) ஸ்கொட்லாந்து வரலையே அது தான் முக்கியம்
Deleteஹாஹாஹா, இதிலே ஒரு சந்தோஷமா பூஸாருக்கு? எப்படியும் அஞ்சு பூசாருக்கு முன்னாடி வந்தாச்சே!
Deleteஅதானே ஸ்கொட்லாந்து வரலை இல்லையோ! அதை விட என்ன வேணும்! :)
Deleteபொங்கல் கோலம் செம அழகு எவ்ளோ நுணுக்கமா போட்டிருக்காங்க .
ReplyDeleteநான் இன்னும் 90 கிட்ஸ் நினைப்பில் இருக்கேன் :) 14 தான் எப்பவுமே எனக்கு பொங்கல்னு மனசில் பதிஞ்சிடுச்சி :)
சரி பதிவுக்கு செல்கின்றேன்
இப்படிச் சில வருடங்கள் மார்கழி 30 தேதி வருவதுண்டு ஏஞ்சல்! எப்போதும் மார்கழி 29 தேதி தான் இருக்கும். அன்றே கடைசி இரண்டு பாடல்களும் பாடி முடிப்பார்கள். இந்த வருஷம் மார்கழி முழுக்க முழுக்க 30 நாள்.
Deleteமகர சங்கராந்தி விவரங்கள் நிறைய புதிது ..அறிந்துகொண்டேன் ..இந்த நன்றி நவிலல் லண்டன் ஐரோப்பாவில் செப்டெம்பர் நடக்குது .எல்லா காய் வகைகளையும் போட்டு வெஜ் சூப் செய்து அதை பிரெட்டுடன் சாப்பிடுவாங்க ஜெர்மனியிலும் .
ReplyDeleteஎல்லா நாட்டுக்காரங்களும் இறைவனுக்கு நன்றி சொல்ர ஒரு வைபவம் இது
ஏஞ்சல், ஜெர்மனி விஷயம் நானும் படிச்சிருக்கேன். எங்க மின் தமிழ்க்குழும நிறுவனர்களில் ஒருவரான சுபாஷிணி அங்கே தான் ஸ்டுட்கார்டில் இருக்காங்க! :)))) அவங்க அடிக்கடி எழுதுவாங்க! உலகம் பூராவும் மக்கள் மனம் மாறாமல் அவரவர் பகுதியின் விளைச்சலைக் கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றனர்.
Deleteஹீ ஹீ நான் கூட ஸ்கூல்; படிக்கும்போது போகி மேளம் தட்டி இருக்கேன் :) அன்னிக்கு மேகமெலாம் புகை மூட்டமா யிருக்கும் ..
ReplyDeleteஇப்போல்லாம் சென்னை முற்றிலுமா மாறிடுச்சே ..எங்க ஏரியாவில் முழுக்க அபார்ட்மெண்ட்ஸாம் ..எங்கே இதுக்கெல்லாம் இடமும் கிடைக்குமா தெரில .
தொடருங்கள் நாளைக்கு வரேன் :)
ஏஞ்சலின் - என் பெண் இதனைப் பற்றி நேற்று கம்ப்ளெயிண்ட் செய்தாள். வண்டி ஓட்ட முடியாத அளவு புகை, ரோடெல்லாம் என்று...
Deleteசென்னையில் தான் அதிகப் புகை ஏஞ்சல்! எங்க பக்கமெல்லாம் இது மாதிரி நான் பார்த்ததே இல்லை. அதுவும் கல்யாணம் ஆகி வந்த புதுசுலே எல்லாம் இப்படி இல்லை. ஒரு பத்துப் பதினைந்து வருஷங்கள் வெளிமாநில வாசத்தின் பின்னர் மறுபடி சென்னை வந்தா எல்லாம் முற்றிலும் மாறி இருக்கு.
Deleteநெல்லைத் தமிழரின் பெண்ணைப் போல் பல நண்பர்களும் புகை மூட்டம் பற்றிப் புகார் செய்ததோடு ஓலா, உபேர் போன்ற வாடகை வண்டி ஓட்டுநர்கள் வர மறுத்தும் விட்டார்களாம்.
Deleteபொங்கலோ பொங்கல்! கோலம் செமையா இருக்கு அக்கா...கண் கவர்கிறது..அதுவும் நீலம்...
ReplyDeleteகீதா
கோலம் யார் போட்டதோ தி/கீதா! :)
Deleteசகோதரி தங்களுக்கும் தங்கள் சுற்றத்தார் அனைவருக்கும் இனிய உழவர்திருநாள் வாழ்த்துகள். தமிழ்நாட்டில் இருந்தவரை பொங்கல் பண்டிகை பார்த்துக் களித்ததுண்டு. பொங்கல் குறித்த தகவல்கள் அறிந்தோம்.
ReplyDeleteஎங்கள் பகுதியில் உள்ள கோயிலில் இன்றிலிருந்து வெள்ளி வரை திருவிழா. நான் இம்முறை பொறுப்பாளராக இருப்பதால் நன்கொடை கலெக்ஷன் என்று பிஸி. வெள்ளி வரை பிசிதான். வெள்ளி என்று மகள் கோயிலில் ஓட்டம் துள்ளல் நடனம் ஆடுகிறாள். நிறைய நிகழ்ச்சிகள் இடம் பெறும். கோயில் பணிகள் கல்லூரி வீட்டு பணிகள் என்று அதனால்தான் பதிவுகள் வாசிக்க நேரம் இல்லாமல் போயிற்று.
துளசிதரன்
மெதுவா வாங்க துளசிதரன். உங்கள் பகுதிக் கோயிலின் திருவிழா சிறப்பாகவும் செம்மையாகவும் நடக்கவும் நீங்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்பை வெற்றிகரமாக முடிக்கவும் வாழ்த்துகள். உங்கள் மகளின் நடனம் சிறப்பாக அமையவும் பிரார்த்தனைகள்.
Deleteஅக்கா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல்/உழவர்திருநாள், கனு/மாட்டுப் பொங்கல் நல் வாழ்த்துகள்!
ReplyDeleteபோகி,இக்கதை இப்பத்தான் அறியறேன் கீதாக்கா...
நாளை பொங்கல் தகவல் என்னவாக இருக்கும்னு யோசனி..
கீதா
இன்னிக்குப் பொங்கல் தகவலுக்கு 2,3 தேர்வு செய்து அதில் ஒன்றைப் போட்டிருக்கேன். முடிஞ்சப்போ வந்து பாருங்க!
Deleteபோகிப்பண்டிகை எனில் வீட்டில் இருக்கும் வயதானோரை( அஞ்சு போன்ற) ஆச்சிரமத்துக்கு அனுப்பிப்போட்டு புதிய இளையவர்களை(அதிரா போன்ற) உள்ளே கூப்பிடோணுமாம்:)... ஹையோ மீக்க்கு பெல் அடிக்குதூஊஊஊஊ:)... மீ ரன்னிங்:)..
ReplyDeleteஅதிரா... ஏஞ்சலின் - உங்க இரண்டுபேரையும்தான் கீதா ரங்கன் 'அக்காஸ்' என்று குறிப்பிட்டுள்ளார் இன்றைக்கு, என நான் நினைக்கிறேன். இப்படிக்கு 'தம்பீஸ்'ஸில் ஒருவன்.
Deleteஅதிரடி, அதானே, உங்களுக்குத் தான் கொ.பா. வயசாகுது! எங்களுக்கெல்லாம் இல்லை.
Deleteஇந்திரன் அவர்களுக்கும் ஷை வந்திருக்கு அதிராவைப்போலவேதேன்ன்ன்ன்ன்:)...
ReplyDeleteஅதிரடி, இந்திரன் எப்போவும் இப்படித்தான் எக்குத்தப்பாய் ஏதேனும் செய்துட்டே இருப்பான்.
Deleteசுவாரஸ்யமான தகவல்கள்.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம்.
Deleteமகர சங்கராந்தி கதை மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தது படிக்க!
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
நன்றி மனோ சாமிநாதன்
Deleteதகவல்கள் அனைத்தும் புதுமை. நடமாடும் விக்கிபீடியா கீதாமா.
ReplyDeleteஇங்கே வந்திருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
நன்றி கீதா.
நன்றி ரேவதி!
Deleteபொங்கலோ பொங்கல் என்று தான் என் பழைய பதிவுகள் முழுவதும் , அதனால் இந்த முறை பொங்கல் வாழ்த்துக்கள் என்று போட்டேன்.
ReplyDeleteஅனைத்து விவரங்களும் மிக அருமை.
பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும்.
வேலை அதிகம் முடியவில்லை. நாளை விருந்தாளிகள் வருகிறார்கள். முடிந்தால் நாளை படிக்கிறேன்.
வாங்க கோமதி! நானும் இந்தத் தலைப்பில் பல பதிவுகள் எழுதிட்டேன். ஆனாலும் என்னமோ மாத்தலை. மெதுவா வந்து படிங்க!
Deleteஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி மதுரைத் தமிழரே!
Deleteஇனிய தமிழ்த் திருநாள் வாழ்த்துகள்...
ReplyDeleteஅழகான தகவல்களுடன் இனிய பதிவு...
ReplyDeleteகிருஷ்ண புராணம் அறிந்தது என்றாலும் தங்களது பதிவின் வாயிலாகப் படிப்பதில் மகிழ்ச்சி...
நன்றி துரை!
Deleteதங்கள் அனைவருக்கும்
ReplyDeleteஅன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...
நெஞ்சார்ந்த பிரார்த்தனைகளுடன்...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் துரை!
Deleteவீட்டிலுள்ள பழைய பொருட்களை எரிப்பது - இது மிகவும் அநியாயம் இல்லையோ?
ReplyDeleteஉ.வெ.சா அவர்கள், இந்த மாதிரி போகியில் மூடநம்பிக்கையால் மக்கள் எரித்த ஓலைச்சுவடிகள் ஏராளம் என்று விசனப்பட்டிருந்தாரே...
சுற்றுச்சூழலுக்கும் இது கேடு இல்லையோ?
ஆற்றில் பழைய துணியைப் போடுவது, ரோடுகளில் எரிப்பது என்று நம் சமீபத்தைய பழக்கவழக்கங்கள் நல்லதுதானா?
நெ.த. முன்னெல்லாம் பாய் இயற்கையான முறையில் தாவர நார்களால் பின்னுவார்கள். வெகுகாலம் வைத்துக்கொள்ள முடியாது! ஆகவே அதை எரிப்பார்கள் நியாயமே. அதே போல் மண் சட்டிகளும். ஆனால் இப்போல்லாம் ப்ளாஸ்டிக் பொருட்கள், டயர் போன்றவற்றை அல்லவோ எரிக்கின்றனர்! இந்தப் பழக்க வழக்கங்கள் நல்லதுனு யார் சொன்னாங்க! ஒவ்வொரு வருஷமும் காவல்துறை அறிவிப்புச் செய்து வருகிறது. கேட்பவர்கள் யார்?
Deleteஆற்றில் பழைய துணிகளைப் போதுவது, ரோடுகளில் எரிப்பது எல்லாம் மகா பாவம்...
ReplyDeleteஇப்படி எல்லாம் சிறு வயதில் கண்டதே இல்லை...
ஊடகங்கள் தான் சென்னையில் இப்படி/ அப்படி என்று செல்கிறார்கள்...
சென்னையில் எப்படியோ!..
ஊரெங்கும் பரவி விட்டது போலும்...
கவியரசர் தெரியாமலா சொன்னார்...
ஊரு கெட்டுப் போனதுக்கு
மூரு மார்க்கெட்டு அடையாளம்...
நாடு கெட்டுப் போனதுக்கு
மெட்ராசு நாகரிகம் அடையாளம்...
நம்மிடம் உள்ள பழைய கிழியாத துணிகளை நம்மிலும் ஏழைகளுக்குக் கொடுக்கலாம்....
மனம் இருக்க வேண்டும்...
பழைய டயர்களை எதற்காக கொளுத்துகிறார்கள் - மூடர்கள்!?...
துரை, இங்கெல்லாம் எரிப்பது இல்லை. மக்கள் இன்னும் அந்த அளவுக்குப் போகலை! எனக்குத் தெரிந்து சென்னை அதன் சுற்று வட்டாரங்கள் மட்டுமே!
Delete