எங்கள் குலதெய்வம் மாரியம்மன். உள்ளே வழிபாடு நடந்து கொண்டிருந்ததால் நேரிடையாகப் படம் எடுக்கவில்லை. படம் எடுக்கும் மனோ நிலையும் இல்லை. என்றாலும் ஓர் அடையாளமாக இந்தப் படத்தை எடுத்துக் கொண்டேன்.
மாரியம்மன் கோயில் பிரகாரத்தில் இந்த மரத்துண்டுகள் எதிலோ ஊறிக்கொண்டிருந்தன. பிரகாரம் சுற்றி வருகையில் அதைப் பார்த்துவிட்டு என்னவெனப் பூசாரியிடம் கேட்டதற்கு, இது வாரை என்றார். கொஞ்சம் புரியலை. பின்னர் சொன்னார். இது ஆலமரத்தின் விழுதாம். இவற்றை வெட்டி எடுத்து வந்து சுவாமி பல்லக்குகளுக்குத் தூக்குக்கட்டைகளாகப் பயன்படுத்துவார்களாம். எல்லாக் கோயில்களிலும் இது தான் வழிமுறை என்றார். புதிய விஷயமாக இருந்தது. இதைச் சரியாக அமைக்கும் முன்னர் இம்மாதிரிக் குழிகளில் விளக்கெண்ணெயை நிறைய ஊற்றி இந்த வாரையை ஊற வைப்பார்களாம். அதற்கும் கணக்கு உண்டு என்றார்.
தமிழ் வாரை யின் அர்த்தம்
வாரை
பெயர்ச்சொல்
1
(பலர் சேர்ந்து தூக்குவதற்கு அல்லது தாங்குவதற்குப் பயன்படும்) உருண்டை வடிவத்தில் நீண்டும் பருத்தும் இருக்கும் மரம்.
‘உற்சவமூர்த்தி இருந்த பீடத்தை வாரையில் வைத்துத் தூக்கிவந்தனர்’
கோயிலுக்கு வெளியில் உள்ள ஆலமரம். பல வருடங்களாக இருந்து வருகிறது. கோயில் குளம் வெளியே இதுவரையிலும் வருகிறது. நீளமும், அகலமும் உள்ள குளம்.
வேறொரு கோணத்தில் குளமும், ஆலமரமும்!
விசாரித்தவர்களின் தகவலுக்காக! :)
சென்னையில் இருந்து கிளம்பும்போதே தாமதமாகக் கிளம்பிய ஜெட் ஏர்வேஸால் தொடர் தாமதம் ஏற்பட்டுப் பையர் நேற்று இரவு இந்திய நேரப்படி ஒன்பது மணிக்குத் தான் ஹூஸ்டன் போய்ச் சேர்ந்தார். சாமான்களும் பத்திரமாக வந்ததாகச் சொன்னார். இறை அருள் துணை நிற்கும், நிற்கிறது.
புடைவை மாற்றிய பின்னர் வண்டியை எங்கும் நிறுத்தாமல் ஊருக்கு விடச் சொன்னோம். முதலில் பெருமாள் கோயிலைப் பார்த்துவிட்டுப் பின்னர் மாரியம்மன் கோயிலுக்குப் போக எண்ணம். அதன்படி முதலில் பெருமாளைத் தரிசனம் செய்து கொண்டோம். நாங்க வரும் தகவல் ஏற்கெனவே அறிவித்த காரணத்தால் அன்றைய தின தனுர்மாச வழிபாட்டை எங்கள் பெயரில் செய்ய ஏற்பாடு செய்திருந்தார் பட்டாசாரியார். ஆகவே எல்லாம் தயாராக இருந்தன. வழிபாடுகள் முடிந்து பிரசாதமாக மஞ்சப் பொஙல் வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி மாரியம்மன் கோயிலை நோக்கி வண்டியை விடச்சொன்னோம்.
அங்கே சாலைச்சீரமைப்பணி நடந்து கொண்டிருந்தது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமத்துச் சாலைகளைச் சீரமைக்க மத்திய அரசு கொடுத்த நிதியில் இருந்து எல்லாக் கிராமச் சாலைகளையும் சீரமைக்கின்றனராம். அதற்காக பெரிய பெரிய ஜல்லிகளைக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருந்தார்கள். சாலை என்னமோ நன்றாகத் தான் இருந்தது. ஆனால் நிதி வந்திருப்பதால் சாலையை இன்னமும் நன்றாகப் போடலாம் என்னும் எண்ணமாக இருக்கும் போல! ஏற்கெனவே மூன்று வண்டிகள் முன்னால் போய் ஜல்லிகளைக் கொட்டிக் கொண்டிருக்கப் பின்னாலும் ஒரு வண்டி வந்து கொண்டிருந்தது. எங்கள் வண்டியால் போக முடியவில்லை. இதற்குள்ளாகக் கோயிலில் இருந்து பூசாரி ஓடி வந்து கொண்டிருந்தார்.
எங்களிடம் வண்டி உள்ளே வரமுடியாது என்பதைச் சொல்லிவிட்டு இருசக்கர வாஹனம் எடுத்து வருவதாகச் சொன்னார். அப்பா, பிள்ளை இருவரும் தாங்கள் நடந்து வருவதாகவும் என்னை இரு சக்கர வாஹனத்தில் வரும்படியும் சொன்னார்கள். அதன்படி பூசாரி போய் வண்டியை எடுத்து வந்தார். ஏறலாம் என்று போனால்! இஃகி, இஃகி! உயரமாக இருந்தது. எங்கானும் படி அருகே கொண்டு வண்டியை நிறுத்தி ஏறலாம் என்றாலும் முடியாத நிலை! ஆகவே நான் வரலைனு சொல்லிட்டேன். கடைசியில் நானும், பிள்ளையும் நடந்தே செல்ல, நம்மவர் மட்டும் வண்டியில் ஏறிக்கொண்டார். கோயிலில் போய் வழிபாட்டை முடித்துக் கொண்டு பிரகாரம் சுற்றி வந்துவிட்டுப் பின்னர் அங்கிருந்து கிளம்பிக் கருவிலி வந்தோம். அங்கே தான் ஏமாற்றம். ஆனால் நான் எதிர்பார்த்திருந்தேன். சொல்லவும் செய்தேன்.
தனுர் மாசம் என்பதால் சீக்கிரம் கோயில் திறப்பதால் சீக்கிரம் நடை அடைத்துவிடுவார்கள் எனச் சொல்லிக் கொண்டே இருந்தேன். அங்கே நாங்கள் தொலைபேசியில் நாங்க வரப்போவதைச் சொல்லி இருந்தால் சந்நிதியை மட்டும் திறந்து வைத்திருப்பார்கள். குருக்கள் மட்டும் வீட்டுக்குப் போயிருப்பார். ஆனால் அவர்களுக்குத் தகவலே தெரிவிக்கவில்லை. ஆகவே ராஜகோபுர வாசலே மூடி இருந்தது. இது எங்க பையருக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான். நான் கீழே விழுந்ததால் ஏற்பட்ட ஒருமணி நேர தாமதத்தினால் இத்தனை அமர்க்களம்!
இப்படி ஆகி விட்டது. ஆனால் வரும்போதே நாங்க கருவிலிக்குப் போய் தரிசனம் செய்துவிட்டுப் பின்னர் பரவாக்கரை போயிருந்தால் கருவிலியில் தரிசனம் ஆகி இருக்கும். ஆனால் பரவாக்கரையில் பட்டாசாரியார் காலையிலிருந்து அங்கேயே காத்துக் கொண்டு இருந்தார். ஆகவே தவிர்க்கமுடியாமல் அங்கே முதலில் போனோம். கருவிலியில் சுவாமியைப் பார்க்க முடியவில்லை என்றதும் நாங்க வண்டியில் இருந்து இறங்காமலேயே அவர் மட்டும் குருக்கள் வீட்டுக்குப் போய் வழிபாட்டுக்காகக் கொண்டு வந்த சாமான்களைக் கொடுத்துவிட்டு மாலை வழிபாட்டில் பயன்படுத்தச் சொல்லிவிட்டு வந்தார். அதன் பின்னர் அங்கே இருந்து கிளம்பி நேரே ஸ்ரீரங்கம் வந்தாச்சு. காலை டிஃபன் சாப்பிட்டதில் எனக்குப் பசியே இல்லை. பையரும் ஒன்றும் வேண்டாம்னு சொல்ல ரங்க்ஸ் மட்டும் மஞ்சப்பொங்கல் கொஞ்சம் சூடு பண்ணிக் கொடுத்ததும் சாப்பிட்டார். இப்படியாக இம்முறைப் பயணம் ஒரு வழியாக முடிந்தது.
நான் எனக்கு அக்கி வந்ததில் இருந்தே மாரியம்மன் கோயிலுக்குப் போகணும்னு சொல்லிட்டு இருந்தேன். போக முடியலை! அம்மன் இப்போது வரவைச்சதோடு கொஞ்ச தூரம் நடந்தே வந்து தரிசனம் செய்யணும் என்றும் சொல்லி விட்டாள்.
தரிசனப்பயணங்கள் சிறப்புடன் நடந்ததில் மகிழ்ச்சி.
ReplyDeleteவாங்க கில்லர்ஜி! நன்றி.
Deleteகிராமத்தில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருவதில் மகிழ்ச்சி. நல்ல தரிசனம் எங்களுக்கும். கருவிலி கோவில் மூடியிருந்தது ஏமாற்றம் தான். அவ்வளவு தூரம் பயணித்து கோவில் பார்க்க முடியாமல் போனால் கஷ்டமாக இருந்திருக்கும். எல்லாம் அவன் செயல் தானே....
ReplyDeleteவாங்க வெங்கட், அநேகமாக எல்லாக்கிராமங்களிலும் சாலைகள் சீரமைக்கப்படுகின்றன. மேலும் நாங்க போன ஊர்களில் எங்கேயும் கஜா புயலின் பாதிப்புத் தெரியவில்லை. இன்னும் கிழக்கே போகணும்னு நினைக்கிறேன்.
Deleteவாரை புதிய செய்தி...
ReplyDeleteஇறை அருள் என்றும் துணை இருக்கட்டும் ..
நன்றி அனுராதா!
Deleteவிழுந்தது, புடைவை மாற்ற வைத்தது, பிரயாணம் லேட்டானது, சாலை தடங்கல், நடை அடைத்திருந்தது என்று பல தடங்கல்கள். இவை எல்லாம் பையருடைய பிராயணத் தடங்கல்களுக்கு முன்னறிவிப்பாகவே தோன்றுகிறது. அதே சமயம் மாரியம்மன் கோயில் பூஜை சிறப்பாக நடந்தது தடங்கல் இருந்தாலும் நான் காப்பேன் என்று அம்மன் வரம் கொடுத்தது போல் இருந்தது.
ReplyDeleteaceclofenac, diclofenac, nimisulide, woveran, proxyvon போன்ற ஸ்டெராய்டு மாத்திரைகளை அதிகம் விழுங்காதீர்கள். கிட்னி (இடுப்பிலுள்ள கிட்னி) பழுதுபடும்.
Jayakumar
வாங்க ஜேகே அண்ணா! ம்ம்ம்ம்ம்? உண்மையில் சென்னை விமானம் அவ்வளவு தாமதம் இல்லை. பாரிஸுக்குச் சரியான நேரமே போயிருக்கு! ஹூஸ்டன் விமானத்தையும் பிடிச்சிருக்கலாம். ஆனால் என்ன காரணத்தினாலோ பயணிகளுக்குத் தவறான தகவல்கள் தரப்பட்டு சுமார் 30, 40 பேருக்குப் பிரச்னை! அதில் எங்க பையரும் ஒருத்தர்! :)))) எப்படியோ சௌகரியமாப் போயாச்சு!
Delete//aceclofenac, diclofenac, nimisulide, woveran, proxyvon போன்ற ஸ்டெராய்டு மாத்திரைகளை அதிகம் விழுங்காதீர்கள். கிட்னி (இடுப்பிலுள்ள கிட்னி) பழுதுபடும். // ஜேகே அண்ணா, முதல்லே மருத்துவ ஆலோசனை இல்லாமல் எந்த அலோபதி மருந்தும் எடுத்துக்கறதில்லை.இப்போ எடுத்துக்கும் வலி நிவாரணி மிகவும் மைல்ட் ஆனது. அதையே அவசியம் இருந்தால் தவிர எடுத்துக்கக் கூடாதுனு மருத்துவர் சொல்லி இருக்கார். நீங்க சொல்லி இருக்கும் பெயர்களில் உள்ள மாத்திரைகள் பற்றிய என் அறிவு பூஜ்யம்! அதோடு தேவையில்லாமல் மாத்திரைகளை விழுங்கும் பழக்கமே என்னிடம் இல்லை. ஆஸ்த்மா பிரச்னைக்கே இப்போல்லாம் ஸ்டீராய்ட் எடுத்துக்கொள்ளுவதில்லை.
Deleteஇதெல்லாம் ஸ்டீராய்ட் இல்லே.
Deleteநன்னி தம்பி! உங்களுக்குத் தெரியாததா? ஜேகே அண்ணா இப்படித்தான் பல சமயங்களிலும் நான் அறியாத, எனக்குப் புரியாத பல மருந்துகளின் பெயர்களைச் சொல்லிச் சாப்பிடாதீங்கனு சொல்லுவார். நான் எங்க குடும்ப மருத்துவரைக் கேட்காமல் எதுவும் எடுத்துக்க மாட்டேன்.
Deleteஉம்!
ReplyDeleteம்ம்ம்ம்ம்ம்?????? :)
Deleteஎவ்ளோ கருத்தாழ மிக்க கமெண்ட் போட்டிருக்கேன்? ச்சும்ம இப்படி பதில் சொன்னா எப்படி? :P
Deleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteஎப்படியோ எல்லாம் நல்லபடியாக நடந்தது குறித்தும், உங்கள் மகர் சௌகரியமாக ஊர் போய் சேர்ந்தது குறித்தும் மகிழ்ச்சி. டாக்டரை பார்த்தீர்களா இல்லையா?
ReplyDeleteவாங்க பானுமதி, பார்த்தோம். மருந்து எடுத்துக்கறேன். நேற்றிரவு ஹூஸ்டனுக்குப்பையர் போய்ச் சேர்ந்தார்.
Deleteவாரைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteபழமுதிர்சோலையில் ஆலமரத்தில் விழுதுகளுடன் உருண்டையாக நீண்ட கம்பும் தொங்க்கியது சிறுவர்கள் அதில் ஊஞ்சல் ஆடிக் கொண்டு இருந்தார்கள், சார் கார் ஓட்டும் பக்கம் வந்ததால் நான் படம் எடுக்க முடியவில்லை.
வேர் முடிச்சுகள் இல்லாமல் உருண்டை கம்பாக தொங்கியது, அதை வெட்டிவந்து விளக்கெண்ணெயில் ஊற போட்டவுடன் வழ வழ என்று வந்து விடும் போல் !
உற்சவமூர்த்திகள் பீடத்தின் அடியில் இருக்கும் துவாரத்திற்கு ஏற்றார் போல் கம்புகளை தயார் செய்வார்கள் போலும் அருமையான செய்தி.
குலதெய்வம் கோவில் குளம், மரம் எல்லாம் அழகு.
தூரத்தில் அம்மனும் தெரிகிறார்கள் கோவிலுக்குள் எடுத்த படத்தில்.
விவரமாய் நடவற்றை அப்படியே பகிர்ந்து கொண்டீர்கள்.
வலி எப்படி இருக்கிறது? டாகடரிடம் போனீர்களா?
வாங்க கோமதி! வாரை பற்றிய செய்தி எனக்கும் புதுசு! ஊஞ்சல் ஆடுவதை நானும் பார்த்திருக்கேன். வடக்கே நிறையப் பார்க்கலாம். பெரிய ஆலமரங்களும், அரசமரங்களும் அங்கே அதிகம்.
Deleteவலி அவ்வப்போது இருக்கத் தான் செய்கிறது. அதிகம் நின்றால் நடந்தால் தெரிகிறது. வலப்பக்கம் படுத்தால் வலி தெரியும்.
கூட நடந்தவாறே கேட்டிருந்தேன்!
ReplyDeleteஉங்கள் கால் வலி சரியாகி விட்டதா? முந்தைய பதிவுகளில் படித்தது வருத்தமாயிருந்தது. நானும் அடிக்கடி விழுந்து கொண்டிருந்தவள் தான் - தற்சமயம் தடுக்கிக் கொள்வதோடு நின்றிருக்கிறது கடவுள் கிருபையால்!
வாரை - சொல்லும் பயனும் தெரிந்து கொண்டேன், நன்றி
வாங்க மிகிமா! வலி பரவாயில்லை. நான் அடிக்கடி கால் பாதத்தில் சுண்டுவிரலில் அடிபட்டுக்கொள்வேன். வீங்கி நடக்க முடியாமல் போகும். இத்தனைக்கும் சுவற்றில் மோதிக்கொள்வது தான்! அதுக்கே வீங்கிடும். :)))) ஏதோ ஒண்ணு! :))))
Deleteகடந்த இரு பதிவுகளிலும் என்னால் கருத்துரை எழுத முடியவில்லை...
ReplyDeleteஇருக்கிறது எல்லாம் போதாது என்று
சில தினங்களுக்கு முன் முக்குக் கண்ணாடி இரு துண்டுகளாகக் கழன்று போனது...
ஒரு சில தளங்கள் திறக்கவில்லை...
திறந்த தளங்களில் ஒவ்வொன்றும் நான்கு பதிவுகளாக எழுத்துக்களின் கும்மாளம்..
ஒன்னரை கண்ணாடியால் படித்தால் வேறு எப்படி இருக்கும்!...
எனது பதிவுகளையும் ஒன்னரைக் கண்ணாடியை வைத்துக் கொண்டு தான் தட்டினேன்...
நேற்று இரவு கண்ணாடி சரி செய்யப்பட்டு விட்டது...
தங்களது கஷ்டத்தினை அறிந்து மிகவும் வருந்தினேன்...
தங்களது நலத்திற்கு பிரார்த்தித்தேன்...
தாங்களும் கொஞ்சம் கவனமாக இருங்கள்...
எல்லாம் வியாபாரமாகிப் போன உலகில் பிறர் நலம் கருதி எதையும் செய்வோர் மிகக் குறைந்து விட்டனர்...
அம்பாள் காப்பாற்றினாள் எனக் கொள்ளுங்கள்...
வாழ்க நலம்..
துரை, உங்கள் பிரச்னைகள் அனைத்தும் விரைவில் தீர்ந்து மன அமைதி பெறப் பிரார்த்தனைகள். உண்மையில் அம்பிகை அருளால் தான் இந்த மட்டும் ரத்தக்காயம் ஏதும் இல்லாமல் பிழைத்து வந்துள்ளேன்.
Deleteஅப்படி இப்படி நடந்திருந்தாலும்
ReplyDeleteமாரியம்மன் அற்புத தரிசனம் அளித்திருக்கிறாள்...
மாதா அவள்...
மக்களை ஒருபோதும் தவிக்க விட மாட்டாள்...
ஆமாம், மாரியம்மன் தரிசனம் இனிதே நிறைவுற்றதில் எங்களுக்கும் மகிழ்ச்சி.
Deleteஅக்கா தாமதம் ஆனாலும் நல்லபடியாகக் கோயில் சென்று, கருவிலி கோயில் தரிசனம் செய்ய முடியாவிட்டாலும் பரவாக்கரை முடிந்ததே...இப்படித்தான் அமையனுன்னு இப்ப இறைவன் சித்தம் இருக்க நாம என்ன செய்ய முடியும்?!! நல்லபடியாக மகர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தது மகிழ்ச்சி.
ReplyDeleteகோயில் படங்கள் அருமை. வாரை பற்றி தகவல்கள் அறிய முடிந்தது அக்கா. சிறப்பான தகவலும்..
ஆலமரமும் குளமும் அந்த இரு படங்களுமே ரொம்ப அழகாக இருக்கின்றன...கவர்கின்றது...
தரிசனம் முடிந்து நலமுடன் வந்தமையும் மகிழ்ச்சி!
ரோடு நன்றாக இருக்கு மீண்டும் ரோடு இப்படிப் போடுவதில் சுருட்டல்களும் இருக்குமோ?!! மனசு பாருங்க எப்படி எல்லாம் யோசிக்குது தமிழ்நாட்டு ஊழலைக் கேட்டு கேட்டு....
கீதா
வாங்க கீதா, நான் நிதானத்தில் இருந்திருந்தால் கும்பகோணத்தில் இருந்து கிளம்பும்போதே முதலில் கருவிலி போகணும் எனச் சொல்லி இருப்பேன். ஏனெனில் இம்மாதிரிப் பல முறைகள் நடந்திருக்கிறது. முதலில் எதுவும் தோன்றவே இல்லை. பரவாக்கரையில் முடித்துக்கொண்டு கருவிலி போறச்சே தான் நினைவே வந்தது. என்றாலும் நம்மவர் அப்படி எல்லாம் இல்லை என நம்பினார். :(
Deleteநீங்கள் சொல்வது போலத் தான் நன்றாக இருக்கும் சாலையை மறுபடி போடுவது குறித்து இப்போது எனக்கும் தோன்றுகிறது. எல்லாம் அவன் செயல்! ஆனால் அந்தப் பக்கங்களில் பயணம் செய்யும்போது அடிக்கடி இப்படிச் சாலையை வெட்டிப் போட்டு விடுவார்கள். அப்படி இருந்தும் மக்கள் சாலை வசதி இல்லை என்கின்றனர். ஒண்ணுமே புரியலை தான்!
Deleteவாரை தகவல் புதிது எதுவும் கடந்து போகும்
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteவாரை ..புதிய தகவல் ..
ReplyDelete// வேறொரு கோணத்தில் க//
அட்டகாசமான க்ளிக் ..படம் அழகா வந்திருக்கு .
தரிசனம் நல்லபடியா முடிந்ததில் சந்தோஷம் .உங்களை சாமீ நடக்க வைத்ததுக்கும் ஒரு காரணம் இருக்கும் .விழுந்து அடிபட்டு உள்வலியுடன் அப்படியே உட்கார்ந்து இருந்தாலும் சரியில்லைன்னுதான் என்று நினைக்கிறேன் .இரு சக்கர வாகனம் ??
வாங்க ஏஞ்சல், நீங்க சொல்வது சரி தான். என்னுடைய நடையினால் கொஞ்சம் கால் இறுக்கம் தளர்ந்தது. அதனாலும் அம்பிகை நடக்க வைத்திருப்பாள். மோட்டார் பைக்கை இரு சக்கர வாகனம் என்றேன். :)))) எங்கே நம்ம தமிழ்ப்புலவி தமிழிலே "டி" வாங்கின அதிரடி அமுதசுரபி அதிரா?
Deleteஅன்பு கீதா, உரிய நேரத்தில் காப்பாற்றினாள். அப்பொழுதே உங்கள் அருகில் வந்துவிட்டாள் அம்மா. உடம்பு சரியானதும் போய்த் தரிசனம் செய்து வாருங்கள் கீதா. பையர் பத்ரமாக வந்தது சந்தோஷம்,.
ReplyDeleteபயத்தைக் கொடுத்துப் பயத்தைப் போக்குபவனும் அவனே.
வாரை பற்றிய செய்தி மிக்க ஆனந்தம்.
இதை நாங்கள் அறிந்து கொள்வதற்காகவே நீங்கள் நிறையப் பயணம் செய்யணும்மா. உடல் திறம் இறைவன் கொடுப்பான்.
உங்களுக்கும் சாருக்கும் மகர சங்கராந்தி சிறக்கட்டும்.என்றும்
சிறப்பு கூடட்டும்.
வாங்க ரேவதி, உங்கள் வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகி வருகிறது. உங்கள் தொலைபேசி அழைப்புக்கும் நன்றி. எப்படியும் தை மாதம் மாவிளக்குப் போடப் போகணுமே கோயிலுக்கு.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஎல்லா கோவில் தரிசனமும் சிறப்பாக அமைய பெற்று நலமுடன் ஊர் திரும்பியதற்கு மகிழ்ச்சி. கருவிலி கோவிலில்தான் நடை சாத்தி விட்டதினால் வருத்தமாக இருந்தது என அறிந்தேன். சில சமயம் தொடர்ச்சியாக கோவில் தரிசனம் மேற்கொள்ளும் போது இப்படி ஆகி விடுகிறது. அதுவும் தாங்கள் கீழே விழுந்து நல்லபடியாக எழுந்து விட்டாலும், அந்த பதற்றத்தின் ஊடேயே மற்ற இரு கோவில்கள் தரிசனம் முடித்திருக்கிறீர்கள் இல்லையா? அந்த ஒரு நல்ல விஷயத்திற்கு கடவுளுக்கு நன்றி சொல்லலாம்.. மற்றொரு முறை விரைவிலேயே கருவிலியில் நல்லபடியாக தரிசனம் கிடைக்க அவன் அருளுவான்.
இப்போது கால் வலி எப்படி இருக்கிறது? விழுந்த வலி முழுமையாக குணமாகி வருகிறதா? உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்.
தங்கள் பையர் நல்லபடியாக ஊர் சென்று சேர்ந்தது குறித்து மகிழ்ச்சி. இப்போது தங்கள் குட்டி குஞ்சுலு தன் அப்பாவை பார்த்து மிகவும் சந்தோஷம் அடைந்திருப்பார்.
வாரை பற்றிய தகவல்கள் புதியது. நல்ல உரமாக சேர்ந்து பிணைப்புடன் வளரும் ஆலம் விழுதுகள் நல்லதொரு புண்ணிய காரியங்களுக்கு துணையாக இருக்கின்றதே.!விழுதுகளின் பெருமையை நினைத்து மனது மகிழ்வடைகிறது. தகவல்களுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா சகோதரி, நீங்கள் சொல்வது சரி தான். மார்கழி மாதப் பிரயாணங்களில் இப்படிப் பலமுறை நடந்துள்ளது. ஒரு சமயம் ஸ்ரீரங்கம் தரிசனத்துக்கு வந்தப்போ ரங்கநாதரையும் தரிசிக்க முடியலை! ஆகவே இது ஓரளவு நான் எதிர்பார்த்த ஒன்றே. கால் வலி கொஞ்சம் கொஞ்சம் குறைந்து வருகிறது. உங்களுக்கும் நீங்கள் கீழே விழுந்து கால் பாதம் வீங்கியதிலிருந்து நிவாரணம் கிடைத்து வரும் என நம்புகிறேன். இந்த வாரம் கீழே விழும் வாரமாக ஆகி விட்டது போலும்!
Deleteஆலமரத்தின் விழுதுகளுக்கு இப்படியொரு பெயரா? பயன் பற்றிய தகவல் புதிது,
ReplyDeleteபையர் பத்திரமாக ஊர் சென்று அடைந்தது நிம்மதி. குளக்கரையில் ஆலமரம் அபாரம். அழகு.
சுருக்கமான கருத்துக்கு நன்றி ஸ்ரீராம். வாரை தகவல் எனக்கும் புதிது.
Deleteவாரை பற்றிய தகவல் மிகுந்த சுவாரஸ்யம்!
ReplyDeleteநான் இன்றைக்குத்தான் நெடு நாட்களுக்குப்பின் வலைத்தளங்களுக்கு வர முடிந்தது. பதிவைப்படிக்கையில் நீங்கள் கீழே விழுந்த தகவலைப்படித்ததும் கடந்த பதிவிற்குச் சென்று முழுவதுமாகப்படித்தேன். மிக மிக வருத்தமாக இருந்தது. உங்களுக்கு எந்த அளவு மன வலியும் உடல் வலியும் இருந்திருக்குமென்று புரிகிறது. மன தைரியம் இருந்தால் மட்டுமே இந்த வேதனைகளை சமாளித்து மீண்டு வர முடியும். அது உங்களுக்கு இருக்கிறது. இருந்தாலும் அலட்சியமாக இருந்து விடாமல் மருத்துவரிடம் சென்று வந்ததில் மகிழ்ச்சி! இந்த மாதிரி சற்றும் எதிர்பாராத விதத்தில் விழும்போது ஒரு கணம் பொறி பறப்பது போலிருக்கும். இருந்தாலும் விழுவது நம் மூளைக்குப்புரிந்தாலும் நம்மால் நம்மைக் கட்டுக்குள் கொன்டு வர முடியாது. சமீபத்தில் எனக்கும் இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது. விழுந்த இடம் பாறைகள் இருந்தாலும் தலை, முகம் பாதிக்காமல் கால் கட்டை விரல் சேதத்துடன் தப்பித்தேன்!
வாங்க மனோ, நீங்களும் கீழே விழுந்து அடிபட்டுக்கொண்டதில் வருத்தம். உண்மையில் மயிரிழையில் தப்பி இருக்கீங்க. பிரார்த்தனைகள். உங்கள் தாத்தா பற்றிய தகவல்களைப் படித்தேன், உங்கள் தாயாரையும் படத்தில் கண்டு மகிழ்ந்தேன். அவருக்கு எங்கள் நமஸ்காரங்கள். என் உணர்வுகளைப் புரிந்து கொண்டதற்கு நன்றி.
Delete