எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, January 06, 2019

கீழே விழுவது மீண்டும் எழுவதற்காகவே!

என்ன ஆச்சுனு தெரிஞ்சுக்க எல்லோரும் ஆவலாக இருக்கீங்க! யாரையேனும் அழைச்சீங்களானும் கேட்டிருக்கீங்க! அங்கே தான் ஓட்டலில் வேலை செய்யும் பெண்மணி பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருந்தாரே! அவர் கூச்சல் போட்டுவிட்டார். நான் கீழே விழுந்த இடம் கழிவறையின் தண்ணீர் வெளியே வரும் இடமாக இருந்து விட்டது. ஆகவே சேறும் சகதியுமாக இருந்தது. நான் நேரிடையாக விழுந்திருந்தேனானால் கட்டாயம் எதிரே இருந்த மரத்தில் மோதிக் கொண்டிருப்பேன். கொஞ்சமானும் ரத்தக்காயம் ஏற்பட்டிருக்கும். மனதிற்கும் வேதனையாகப் போயிருக்கும். ஆனால் உண்மையிலேயே எங்க குலதெய்வத்தின் அருளால் (காமாட்சி அம்மா சொன்னபடியே) நான் விழுந்தது அந்தச் சேறில். அப்படியே மல்லாக்க விழுந்துவிட்டேன். அங்கே ஏதானும் பாறையாகவோ, கல்லாகவோ இருந்திருந்தாலும் பின் மண்டையில் அடிபட்டு இன்று உயிருடன் இருந்திருப்பேனா என்பது சந்தேகமே! ஆனால் விழுந்த இடம் மண்ணாகவும் கொஞ்சம் சேறாகவும் இருந்ததால் கட்டிக் கொண்டிருந்த புடைவை நனைந்து சேறானது.

அதோடு இல்லாமல் வலப்பக்கம் இடுப்பில் நல்ல அடி! அங்கே ஏற்கெனவே நாலைந்து முறை விழுந்து அதே இடத்தில் அடிபட்டுக் கொண்டிருக்கேன். முதல்முறை ஏணியில் இருந்து விழுந்தேன். பின்னர் இருமுறை மாடு முட்டியும், வீட்டில் வழுக்கியும். அதன் பின்னர் கடைசியாகக் கயிலை யாத்திரையில் குதிரையில் இருந்து விழுந்தேன். எல்லா நேரங்களிலும் ஒரே இடத்தில் அடிபட்டு வலப்பக்கம் இடுப்பில் அடிக்கடி இப்போதும் வலி வரும். அதிக நேரம் நிற்க முடியாது! இப்போவும் அங்கேயே அடி பட்டு இருக்கிறது என்றாலும் தாங்கிக்கொள்ள முடிந்தது. இடப்பக்கம் காலில், முழங்காலில் வீக்கம், வலி! ரத்தக்கட்டு! வலக்கையில் முழங்கையில் கொஞ்சம் ரத்தக்கட்டு. வேகமாகக் கையை ஊன்றியதில்!  என்னோட பெருமையையே விவரிக்கிறேன். அப்புறம் நடந்ததைச் சொல்லவே இல்லை.

ஓட்டல் ஊழியப் பெண் கூச்சல் போட்டு ஆட்கள் வருவதற்குள்ளாக நம்மவர் வந்து என்னைத் தூக்கப் பார்த்தார். அவரால் முடியலை. முடியாது என்பதும் தெரியும். ஆகவே நானே மெல்ல நிமிர்ந்து கொண்டு மெல்ல மெல்லத் திரும்பிக் குப்புறப்படுத்துக்கொண்டு முழங்காலிட்டாற்போல் எழுந்து கொண்டு வலக்காலைத் தூக்கி வைத்துக் கொண்டு எழுந்திருக்க முயன்றேன். அதற்குள்ளாக உள்ளே இருந்து ஓட்டல் ஊழியர் ஒருவர் வந்து தூக்கி விட்டார்.

அதற்குள்ளாக அந்தப் பெண்ணும் கைகளைக் கழுவிக்கொண்டு ஓடி வந்து பக்கத்துக் குளியலறையிலேயே என்னைப் பயன்படுத்திக்கச் சொல்ல நான் முதலில் வேண்டாம், போகவே இல்லை என்றே சொன்னேன். அவ்வாறே முடிவும் செய்தேன். முதலிலேயே அனுமதித்திருந்தால் இந்தக் களேபரமே நடந்திருக்காது! ஆகவே வருத்தமும், கோபமும் முட்டிக்கொண்டு வந்தது. எல்லாவற்றையும் விட அவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியையும் விட அடிபடாமல் இருந்த வியப்பும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. ஆகவே போக வேண்டாம்னு தான் நினைச்சேன்.     ஆனால் பின்னால் புடைவை முழுக்கச் சேறு. அதுவும் கழிவறைத் தண்ணீர். இந்தக் கோலத்தோடு கோயிலுக்கு எப்படிப் போவது? அதற்கு முன்னால் எப்படிச் சாப்பிடுவது? ஆகவே அந்தப் பெண்மணி முதலிலேயே அனுமதிக்கவில்லை என்ற கோபம்+வருத்தம் இருந்தாலும் குளியலறை உள்ளே சென்று இயற்கை உபாதையை முடித்துக் கொண்டு புடைவையை நன்கு அலசினேன். கைகளைக் கழுவினாலும் சோப்பெல்லாம் இல்லை. அதுக்குள்ளாக அங்கே ஈரமாக இருக்குனு நம்மவர் அவசரப்படுத்தினார். கோபம் இப்போ அவர் மேல் திரும்பியது. என்றாலும் பொறுத்துக் கொண்டு வெளியே வந்து அந்தப் பெண்ணிடம் இருந்து மேலும் கொஞ்சம் நீர் வாங்கி நன்றாகச் சுத்தம் செய்து கொண்டு சாப்பிடும் இடத்துக்கு வந்தோம்.

எனக்கு இன்னமும் அதிர்ச்சி விலகவில்லை. ஏதேனும் காயம் பட்டிருந்து மருத்துவமனைக்குச் செல்லும்படி நேர்ந்திருந்தால் கோயிலுக்கே போயிருக்க முடியாது என்பதோடு பையரின் பயணமும் தடைப்பட்டிருக்க நேர்ந்திருக்கும். எல்லாவற்றிலிருந்தும் காப்பாற்றிய மாரியம்மனின் அருளை நினைத்துக் கொண்டிருக்கையில் என்ன சாப்பிடுவது என அப்பா, பிள்ளை இருவரும் கேட்க எனக்கோ உடனே குளித்துப் புடைவை மாற்றினால் பரவாயில்லை போல் இருந்தது. ஒண்ணும் வேண்டாம் என்று சொன்னாலும் இரண்டு பேருமே நான் விழுந்ததால் ஏற்பட்ட கோபத்தில் சொல்லுவதாக நினைத்தார்களே தவிர நிலைமையைப் புரிந்து கொள்ளவில்லை. அதற்குள்ளாகப் பூரி சொல்லிவிட்டார்கள். உள்ளே இறங்கவே இல்லை. அடுத்ததாக தோசையும் சொல்ல, அந்த சர்வர் கல்யாணப் பந்திகளில் பரிமாறி அனுபவப்பட்டவர் போல!

பூரி சாப்பிட்டு முடிவதற்குள்ளாக தோசையைக் கொண்டு வந்ததோடு கேட்கவே கேட்காமல் பூரி கிழங்கின் பக்கத்திலேயே சட்னி, சாம்பாரை ஊற்றித் திரிவேணி சங்கமம் செய்தார். உள்ளே ஒரு கவளம் இறங்கவே இல்லை. ஆனால் சாப்பிடாமல் இருந்தால் இரண்டு பேரும் வருத்தப்படுவார்கள். எப்படியோ முழுங்கினேன். பானகமாக இருந்த காஃபியையும் குடித்துவிட்டு வெளியே வந்து வண்டியில் ஏறியதும் எனக்கு உடனே புடைவை மாற்றினால் தான் கோயிலுக்கே வர முடியும் என்று தைரியமாகச் (!!!!!) சொல்லி விட்டேன். எப்போதும் எங்கே சென்றாலும் கையில் 2 புடைவை எடுத்துச் செல்லுபவள் அன்று கட்டிய புடைவையோடு கிளம்பி இருந்தேன். அந்த நேரம் கடைகள் திறந்திருக்காதே என்பதால் என்ன செய்யலாம் எனக் குழம்பினார்கள். அதற்குள்ளாக அங்கே சென்னை சில்க்ஸ் திறக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கப் பையர் அங்கே போய் விசாரித்தார். அவங்க கடை திறக்க நேரம் ஆகும் என்றும் பேருந்து நிலையம் பக்கம் சிறிய கடைகள் சீக்கிரமே திறப்பாங்க என்றும் சொல்லப் பேருந்து நிலையம் செல்லும் வழியில் வண்டியைத் திருப்பி அங்கே திறந்திருந்த ஓர் கடையில் ஒரு புடைவை வாங்கிக் கொண்டு அங்கேயே பின்னால் இருந்த பெரிய கூடத்தில் போய் மீண்டும் கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு புடைவை மாற்றிக் கொண்டு கடைக்காரருக்கு நன்றி சொல்லிவிட்டு மறுபடி ஊருக்குப் போக வண்டியில் ஏறினோம்.

63 comments:

 1. எல்லாம் நலமாக நிகழ்ததில் மகிழ்ச்சி.
  வாழ்க நலம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, நன்றி.

   Delete
 2. வணக்கம் சகோதரி

  தங்கள் பதிவை (பதிவு என்பதை விட வேதனை தரும் அனுபவங்கள்.) படித்ததும் மிகவும் வருத்தப்பட்டேன். அனைவரும் கீழே விழுவது என்பது தர்ம சங்கடமான விஷயமே. சுற்றி இருக்கும் அனைவரும் புடை சூழ போகிறார்களே என எண்ணம் வேறு விழுந்த கால் நொடியில் நம் மூளைக்குள் உதயமாகிறது. அதன் பின்புதான் எங்கெல்லாம் வலியோ அதன் கோர தாண்டவத்தை உணர்கிறோம். கால் வலிகளுக்கு ஏதாவது மருந்து எடுத்து வாருங்கள். தாங்கள் அதையும் மீறி எதையுமே நகைச்சுவையுடன் எடுத்துக் கொள்வது ஒரு மன மருந்துதான். எனினும் மருந்து எடுத்துக் கொள்ளுங்கள். இது சென்ற பதிவின் தொடர்ச்சியா? நேற்று என்னால் வலைப்பக்கம் வர இயலவில்லை.. (உறவினர் வருகை) இன்று இதை பார்த்ததும் உடன் வந்து விசாரிக்கிறேன். உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள். தங்களுடைய வலிகள் சுலபமாக விரைவில் குணமாகி விட இறைவனை உளமாற பிரார்த்திக்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா,ஆமாம், நேற்றைய பதிவின் தொடர்ச்சி. முடிஞ்சப்போப் படிங்க! எனக்கும் எல்லா நாட்களும் வலைப்பக்கம் வர முடிவதில்லை. இப்போது பரவாயில்லை என்றாலும் sciatica pain இருக்கு. நிற்கும்போது அதிகம் வலி தெரிகிறது. மற்றபடி அனைவரும் பார்த்தாங்க என்பதில் எல்லாம் எனக்கு தர்ம சங்கடம் ஏதும் இல்லை. ஏனெனில் தெருவிலேயே மாடு முட்டி 2 தரம் விழுந்திருக்கேன். :))))) இப்போக் கொஞ்ச நாட்களாக விழுவதை என் கணவர் குத்தகை எடுத்திருந்தார். இப்போ மறுபடி நான் ஆரம்பிச்சிருக்கேன். நல்லவேளையா இத்தோடு போச்சே!

   Delete
 3. இப்படி அடிக்கடி கீழே விழுவதால் தான் ஆனை படுத்திருக்கும் படம் profile படமாக வைத்திருக்கிறீர்களா? ஆனைக்கும் அடி சறுக்கும்!!
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜேகே அண்ணா, எனக்கு ஆனை பிடிக்கும் என்பதால் என் உடன்பிறவாத்தம்பி தி.வா. இதை அனுப்பி வைச்சிருந்தார். அது வரை ப்ரொஃபைலில் படமே இல்லை. இது வந்ததும் இதைச் சேர்த்தேன்.

   Delete
 4. அட சாம்பசிவா. சாக்கிரதை குலதெய்வமே உனைக் கொண்டாடினேன் என்று பாடல் வரி தோன்றியது. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி அம்மா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 5. அப்பப்பா.. என்ன ஒரு அனுபவம்... உண்மையிலே கடவுள் காப்பாற்றியிருக்கிறார். நீங்கள் இன்னும்கொஞ்சம் அதிக கவனமாக இருக்கவேண்டும்.​ ஏற்கெனவே அனுபவங்கள் வேறு இருக்கும்போது ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டாமோ... இப்போது வலி தேவலாமா? மருந்து, மாத்திரை ஏதாவது எடுக்கிறீர்களா?

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், கவனம் இல்லாமல் இல்லை. நான் அந்த உயரத்தைப் பார்த்து சந்தேகப்பட்டு நின்று கொண்டு தான் இருந்தேன். அந்தப் பெண்மணியும் நம்ம ரங்க்ஸும் தான் ஊக்கம் கொடுத்து ஏறச் சொன்னாங்க! :)))) நல்லவேளையா அவரைப் போய்ப் பிடிச்சு ஏத்திவிடுனு அந்த அம்மா சொன்னதைச் சிரமேற்கொண்டு அவர் செய்யலையோ அவர் பிழைச்சார்!இல்லைனா நான் அவரைத் தள்ளிக்கொண்டு அவர் மேல் விழுந்து அவரும் கீழே விழுந்து அடிபட்டுக்கொண்டு நான் அவர் மேல் விழுந்து எந்த அடியும் இல்லாமல் இருந்திருப்பேன்! :)))))

   Delete
  2. ஆமாம் மாமா உங்களைப் பிடித்துக் கொண்டிருந்தால் கஷ்டமாகிப் போயிருக்கும் தான்...

   அவர் மேல் விழுந்து அவரும் கீழே விழுந்து அடிபட்டுக்கொண்டு நான் அவர் மேல் விழுந்து எந்த அடியும் இல்லாமல் இருந்திருப்பேன்! :)))))//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மாமா பாவம்! உங்களுக்கும் கவலையாகியிருக்குமமே அவருக்கு அடி பட்டிருந்தா...

   கீதா

   Delete
  3. வாங்க தி/கீதா, விளையாட்டுக்குச் சொன்னேன். எங்க பையர் தான் உண்மையிலேயே நிலைமையைப் புரிந்து கொள்ளவில்லை. அப்பாவைப் பிடிச்சுக்கச் சொல்லி இருக்கலாம், ஒண்ணும் ஆகி இருக்காதுனு சொல்லிண்டே இருந்தார். ஆனால் அவரால் முடியாதுனு தெரிந்தே தான் நான் கூப்பிடவில்லை. இல்லைனா எக்கச்சக்கமா ஆகி இருக்கும். அவருக்குக் கழுத்து வேறே பிரச்னை! :(

   Delete
 6. அடடா.... கீழே விழுந்து விட்டீர்களா.... பார்த்து கவனமாக இருங்கள்.

  விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கட். பையர் தான் கூட வருவதாக இருந்தார். அவர் தான் வேண்டாம்னு சொல்லிட்டு என்னை அழைத்துச் சென்றார். பையர் வந்திருந்தால் என்னைப் பிடித்து ஏற்றி விட்டு இறக்கியும் விட்டிருப்பார். ஹூஸ்டன் மாலில் இப்படித் தான் என்னுடைய எஸ்கலேட்டர் பயத்தை நீக்கறேன்னு சொல்லிப் பையர் லிஃப்டே இல்லாத ஓர் தளத்துக்கு அழைத்துச் சென்று விட்டார். முதலில் சொல்லவும் இல்லை. நான் லிஃப்டுக்குப் போகலாம் என்றால் லிஃப்டே இங்கே இல்லை. ஏறு எஸ்கலேட்டரில் என்று சொல்ல நான் ஏற, அது நகர, நான் கத்த, சுற்றி இருந்தவர்கள் திகைக்க, என்னுடைய அலறலைக்கேட்ட பையர் பயந்து போய் உடனே எஸ்கலேட்டரில் தானும் ஏறி என்னைப்பிடித்துக் கொண்டே கூட வந்து மேலே ஏறும்வரை கூட இருந்தார். அதன் பின்னர் மறந்தும் எஸ்கலேட்டர் பக்கம் போனதில்லை.

   Delete
 7. இனி மேலும் கவனமாக இருங்கள் அம்மா...

  ReplyDelete
  Replies
  1. நன்றி டிடி. பொதுவாகவே கவனம் அதிகம் தான்! இப்போதும் ஏறும்போதும் சந்தேகம் தான்! மாட்டேன்னு சொல்லி இருந்திருக்கணும்! பின் புத்தி!

   Delete
 8. ஹப்பா கொஞ்சம் பயமான அனுபவம் தான் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சே! பட்ட இடத்திலேயே பட்டு ....அக்கா கொஞ்சம் கவனமாகவே இருங்க...மாமா வாலும் தூக்க முடிஞ்சுருக்காது சொல்லிருக்கீங்க...மீண்டும் வரேன் முழுவதும் படிச்சுட்டு

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தி/கீதா, அந்த அதிர்ச்சியில் இருந்து நான் விடுபடவே அரை நாள் ஆனது. கவனமாகவே இருந்தாலும் எதிர்பாராதது நடந்து விடுகிறதே!

   Delete
 9. எனக்கு இன்னமும் அதிர்ச்சி விலகவில்லை. ஏதேனும் காயம் பட்டிருந்து மருத்துவமனைக்குச் செல்லும்படி நேர்ந்திருந்தால் கோயிலுக்கே போயிருக்க முடியாது என்பதோடு பையரின் பயணமும் தடைப்பட்டிருக்க நேர்ந்திருக்கும். //

  ஆமாம்...எல்லாம் அம்பாளின் அருளால் தலைப்பாகையோடு போச்சு...

  அந்த சர்வர் கல்யாணபந்திகளில் பரிமாறி அனுபவப்பட்டவர் போல!//

  ஹா ஹா ஹா ஹா....இப்படித்தான் அது சரி சாம்பார் சட்னி கிண்ணங்களில் கொடுத்தால் நன்றாக இருந்திருக்கும்....ஆனால் இப்படியான ஹோட்டல்களில் விட்டுச் சாப்பிடுவது நன்றாக இருந்தாலும் திரிவேணி சங்கமம் ஆகாமல் இருந்திருக்குமே...ஹா ஹா...பல ஹோட்டல்களில் இப்படி இலையிலேயே விடுவது சாம்பார் சட்னி எல்லாம் ஒன்றின் மேல் ஒன்றாகவே விடறாங்க...ஸோ அவங்க விட வரும் போதே இலையில் விட வேண்டிய இடத்தில் கை காட்டிவிடுவதுண்டு..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தி/கீதா, கிண்ணங்களில் சாம்பார், சட்னி கொடுக்கும் ஓட்டல்களுக்கு நம்மவர் போகவே மாட்டார். மீறிப் போக நேர்ந்தாலும் ஒரே புலம்பல் மயமாக இருக்கும்! :)))) நானும் கை காட்டும் ரகம் தான். ஆனால் அப்போது தோசை வரும்னு எதிர்பார்க்காததோடு கையிலும் வாயிலும் பூரி! ஒரு பூரி கூடச் சாப்பிடலை. தோசையைக் கொண்டு வந்துட்டார். ஏற்கெனவே வார்த்து வைச்சுடுவாங்க போல! ஆறி இருந்தது. நான் சாப்பிடும்போது ரப்பர் மாதிரி பிய்த்துத் தான் சாப்பிட்டேன், சாம்பாரில் முக்கி!

   Delete
 10. புடைவை மாற்றினால் தான் கோயிலுக்கே வர முடியும் என்று தைரியமாகச் (!!!!!) சொல்லி விட்டேன். //

  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....தையரியமாக!! அக்கா ஏன்? ஓ அதனால் தாமதமாகிடும்னு தயக்கத்திலா?..இல்லை மாற்றுப் புடவை இல்லாததாலோ?. பாத்ரூம் தண்ணி சேறு நமக்கு என்னவோ போல் இருக்குமே...

  ஆனா நான் கூட அப்படித்தான் தயங்குவேன்.....கோயில் என்றில்லை எங்கு போவதானாலும் இப்படி ஏதாவது நேர்ந்தால் மாற்ற வேண்டும் என்று தோன்றும்...ஆனால் ஜஸ்ட் கேட்டாலே ...அட்ஜஸ்ட் பண்ணி வா டைம் இல்லை நு சொல்லிடுவாங்க...கூடவே அர்ச்சனையும்...ஹா ஹா ஹா....குழுவா போனாலும் சரி...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், தி/கீதா, ஏற்கெனவே அபிஷேஹம் எல்லாம் வைத்துக் கொண்டால் திரும்ப தாமதம் ஆகும் என்று அபிஷேஹத்துக்குச் சொல்லவில்லை. மறுநாள் பையர் கிளம்பணும். பாக்கிங் ஆகி அதை எடை போட்டுனு எத்தனை வேலை! ஆகவே 3மணிக்குள் திரும்ப வேண்டிய நிர்ப்பந்தம். கீழே விழுந்து எழுவதிலேயே அரைமணி தாமதம். புடைவையைத் தேடிச் சென்றதில் மேலும் தாமதம்! :(

   Delete
 11. ஹப்பா புடவை கிடைத்து மாற்றிக் கொள்ள முடிந்ததே!!

  தொடர்கிறோம்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், புடைவை கிடைத்து மாற்றிக்கொண்டேன். உடனே நம்மவர் பிள்ளையிடம் உங்க அம்மா புடைவைக்காகத் தான் விழுந்தா போலனு கிண்டல் செய்ய ஆரம்பிச்சுட்டார்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :))))))

   Delete
 12. ஹும்! வயசாச்சு ஜாக்கிரதையா இருக்கணும்ன்னு சொன்னா எனக்கா? வயசே ஆகவே இல்லையே? இணையத்து குழந்தை நாதான் சொல்ல வேண்டியது. கேட்டாதானே? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

  ReplyDelete
  Replies
  1. ஹா,ஹா, திட்டாதீங்க தம்பி! நான் குழந்தை தான் என்பது இதன் மூலம் உறுதியாகிவிடலையா என்ன? இஃகி, இஃகி! குழந்தை தானே நடக்கும்போதே தத்துப்பித்தென்று நடந்து கீழே விழும்! இது எப்பூடி இருக்கு?

   Delete
 13. விரைவிலேயே உடல் நலம் தேறி மீண்டும் உற்சாகத்துடன் தொடர என் பிரார்த்தனைகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கபீரன்பன், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 14. படிக்கவே நடுக்கமா இருக்கே கீதாமா. என்ன கஷ்டம்டா இது.
  சாமர்த்தியமாக எழுந்துவிட்டீர்களே. தைரிய லக்ஷ்மி எப்பொழுதும் பக்கம் இருக்கட்டும்.
  வலி இப்போ அதிகமாத் தெரியும். மாரியம்மன் தான் கூட இருந்து காப்பாற்றி இருக்கிறாள்.

  பொதுவாக நம் கஷ்டம் பசங்களுக்கோ ,கணவருக்கோ லேசில் புரியாது.
  என்னால் இதைக் கற்பனை செய்யக் கூட முடியவில்லை. உங்களுடைய நல்ல மனசுக்கு இனி விழாமல் இருக்க பகவான் அருளட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரேவதி, வலி கொஞ்சம் கொஞ்சம் இருக்கத் தான் செய்கிறது. வலிக்கான மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறேன். உண்மையில் இரண்டு பேருக்கும் இதன் பாதிப்பு அவ்வளவு புரியலை என்றே சொல்லணும். ரத்தக்காயம் பட்டு அங்கே கும்பகோணத்திலேயே ஆஸ்பத்திரியில் சேர்க்கும்படி ஆகி இருந்தால்? அதோடு நான் கிழக்கு, மேற்காக இருந்த கழிவறையில் அப்படித் தான் ஏறினேன். ஆனால் விழுந்தது தெற்கு வடக்காக! இதை ஏன் சொல்றேன் என்றால் நான் நேராக விழுந்திருக்க வேண்டும். அப்படி விழுந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்னு சொல்ல முடியாது. எப்படித் திரும்பினேன், திரும்பிய வண்ணம் விழுந்தேன் என்பது எனக்கு இப்போதும் புரியலை! கண்ணுக்குத் தெரியாத அந்த சக்திக்குத் தான் என் நன்றியும் வணக்கமும்.

   Delete
  2. அக்கா உண்மையில் பெரும்பாலான ஆண்களுக்கு பெண்களின் பல கஷ்டங்கள் புரிவதேயில்லை ..இது நூற்றுக்கு நூறு உண்மை .
   தடைகள் வந்தாலும் கடவுள் காப்பாற்றி கோயிலுக்கு புது புடவையுடன் சுத்தமா போக வழியமைத்தது மனதுக்கு நிம்மதியா இருக்கு

   Delete
  3. நேற்று இரவு தொலைபேசியில் நலம் விசாரித்தமைக்கு நன்றி ரேவதி!

   Delete
  4. அஞ்சு, உண்மைதான் நீங்க சொல்வது! பையர் விளையாட்டாகவே எடுத்துக் கொண்டார். அவருக்கு நிலைமையின் தீவிரம் புரியவில்லை.

   Delete
 15. ஆஆஆ என்ன கீசாக்கா புதுவருடமும் அதுவுமா விழுந்திட்டீங்களோ?.. நான் படிக்கத் தொடங்கும்போது ஏதோ ஜோக்குக்கு சொல்றீங்க என நினைச்சேன்... சிலசமயம் இப்படித்தான், சிறு வழுக்கல் பெரிதாக விழுத்திப் போடும். ஆனாலும் சின்ன நோ இருப்பினும் ஒருதடவை போய் செக் பண்ணுவது நல்லது, வெளியே தெரியாது, உள்ளே நோதல் ஏற்பட்டிருந்தால் கவனம்.

  மகன் திரும்பி விட்டாரோ?.

  ReplyDelete
  Replies
  1. நினைத்தன ன் என்றுதானே எழுதுவீங்க அதிரா... எங்கட பாஷை வந்துவிட்டதோ?

   உங்க ஒரிஜினாலிடி போயிடப்போகுது

   Delete
  2. வாங்க அதிரடி, இந்த மட்டும் புது வருஷத்தன்று விழாமல் இருந்தேனே! அதுக்கு நன்றி சொல்ல வேண்டாமா? வலி இருந்தாலும் பயம் எல்லாம் வேண்டாம். பட்ட இடத்திலேயே படுவதால் கொஞ்சம் அதிகம் வலி! அதான் நான் பூப்போன்ற சேற்றில் அல்லவோ விழுந்தேன். நேராக விழுந்திருந்தால் கதையே வேறே! :))))

   Delete
  3. எங்கே! நமக்குத் தான் அதிராவின் பாஷை வருது! அவங்க ஏதோ இங்கே தப்புப் பண்ணிட்டாங்க! இஃகி, இஃகி!

   Delete
 16. //எப்போதும் எங்கே சென்றாலும் கையில் 2 புடைவை எடுத்துச் செல்லுபவள் அன்று கட்டிய புடைவையோடு கிளம்பி இருந்தேன்//

  இதேதான்.. எனக்கும் இப்படித்தான்.. எதுவாயினும் ரெடியாக இருக்கும்போதெல்லாம் எதுவும் ஆகாது, இன்று எதுக்கு என நினைச்சு வழமையாக செய்வதை மாற்றினால்.. அன்று பார்த்து ஏதும் நிகழும்.. இதுவும் இறைவனின் திருவிளையாடல்களில் ஒன்றே.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அதிரடி, இரண்டு புடைவை எடுத்துப் போயிருக்கணும். என்னமோ வேண்டாம்னு தோணிச்சு. ஆனால் என்னவோ நடக்கப் போகுதுங்கற உள்ளுணர்வும் அன்னிக்கு இல்லை! சொல்லப் போனால் இது முற்றிலும் எதிர்பாரா அதிர்ச்சி!

   Delete
 17. கவனமும், பொறுமையும், நிதானமும் என்றும் துணை நிற்க இறைவன் அருள் புரிவான்.

  ReplyDelete
 18. இறைவா... எவ்வளவு மோசமாகப் போயிருக்கும்.. இறைவன் கருணையால் எந்தத் திட்டத்துக்கும் விக்னம் வராமல், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு என்னும்படியாக நடந்துவிட்டது.

  மாமா நிதானமாத்தான் நடப்பதைப் பார்த்திருக்கேன். அது எவ்வளவு முக்கியம் என அன்று நினைத்துக்கொண்டேன்.

  எல்லாம் நல்லபடியா முடிந்ததில் மகிழ்ச்சி.

  பூரி பக்கத்துல தோசை சாம்பாரா? ஹோட்டல் பேரைக் கெடுக்க வந்தவராக இருக்குமோ?

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. உண்மையில் மோசமான தினமாக ஆகி இருக்கணும். அம்பிகை அருளால் நடந்தது நல்லதுக்கே! மாமா நிதானமாக நடந்தாலும் வேகம்! நான் முன்பெல்லாம் எல்லோரும் என்னை "போட் மெயில்" என அழைக்கும் வண்ணம் நடந்தவள்! கீழே எல்லாம் விழுந்ததே இல்லை. இப்போ நடையே கஷ்டமாகப் போனதோடு கீழேயும் விழுகிறேன். :(

   Delete
  2. ஓட்டல் பேரைக் கெடுக்க வந்தாரோ இல்லையோ எனக்குச் சாப்பிடும் ஆசையைக் கெடுத்துட்டார். அதிலும் அந்த ஆறிப்போன தோசையை விண்டு சாப்பிடவே முடியலை!

   Delete
  3. கீசா மேடம்... எனக்கு எங்க ஹாஸ்டல்ல ஞாயிறு காலையில் 5 பெரிய தோசை ஒவ்வொருவருக்கும் போடுவாங்க (ஸ்பெஷல் தோசைன்னு பேரு). நான் ஒரு தோசை, அதன் மேல் கொஞ்சம் சாம்பார், அப்புறம் ஒரு தோசை சாம்பார் என்று 5ஐயும் தட்டில் வாங்கிக்கொண்டு வந்து சாப்பிடுவேன்.

   அதுவும் நல்லாத்தான் இருக்கும்.

   Delete
  4. சின்ன வயசிலே உள்ள ருசி, விருப்பம் எல்லாம் நாளாக ஆக மாறிவிடுகிறதே நெ.த. எனக்கும் சின்ன வயசிலே தோசை மேல் சாம்பார், சட்னி, மி.பொடி போட்டுச் சாப்பிடப் பிடிக்கும்தான். இப்போல்லாம் பிடிக்கிறதில்லை. மி.பொடி ஒத்துக்கொள்வதே இல்லை. சனிக்கிழமை அன்று இட்லிக்குச் சட்னி அரைக்கச் சோம்பல் பட்டுக்கொண்டு மி.பொடி போட்டுச் சாப்பிட்டுவிட்டு இரவெல்லாம் அவதி! வயிற்றில் அடுப்பை மூட்டினால் போல் இருந்தது. :(

   Delete
  5. //மி.பொடி ஒத்துக்கொள்வதே இல்லை//

   உண்மைதான். இரவு ஏழரை முதல் எட்டு மணிக்குள் இரவு உணவை முடித்து விடுவேன் நான். மிளகாய்ப்பொடி, குருமா எல்லாம் இரவில் சேர்த்தால் சரியாக இரவு ஒன்றேகால் மணிக்கு எழுப்பி விட்டு விடுகிறது. நெஞ்செரிச்சல், எதுக்களித்துக்கொண்டு வரும். தண்ணீர் குடித்து மெல்ல சரி செய்துகொள்வேன்!!!

   Delete
  6. வாங்க ஶ்ரீராம், நாங்களும் ஏழரைக்குள் இரவு உணவை முடிச்சுடுவோம். ஆனாலும் இரவு நேரத்தில் குருமா எல்லாம் பண்ணுவதில்லை. தாளிப்பில் ஏலக்காய், எப்போதேனும் கிராம்பு சேர்ப்பேன். இல்லைனா தேஜ்பத்தா, லவங்கப்பட்டை, சோம்பு சேர்ப்பேன். கரம் மசாலாவெல்லாம் சேர்ப்பதில்லை. பெரும்பாலும் தாளிதம் தான்! குருமா செய்தால் அதில் சர்க்கரையும் வெண்ணெயும் கொஞ்சம் கட்டாயமாய்ச் சேர்த்தல் நல்லது. சனா செய்தால் நீர்க்கப் புளிவிட்டு வெல்லம் போட்டு ஜீரகப் பொடியும் சேர்க்கணும். (வெல்லம் பிடிக்காதுனு எல்லாம் சொல்லக் கூடாது! )

   Delete
 19. எப்படியோ இறை அருளால் அதிகம் படாமல்தப்பி எழுந்து கோயிலுக்கும் சென்று வந்துவிட்டீர்கள். பட்ட இடத்திலேயே படுவதால் வலி அவ்வப்போது வருகிறது போலும். இருந்தாலும் மருத்துவரைச் சென்று உள் காயம் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வது நலம். முழுமையாகச் சரியாகிடப் பிரார்த்தனைகள் சகோதரி. மகன் நலமாக ஊருக்குச் சென்று சேர்ந்திருப்பார் என்று நினைக்கிறோம்.

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசிதரன், அன்பான கனிவான விசாரணைக்கு நன்றி. உள்காயம் ஏதும் இல்லை! என்றாலும் வலி மட்டும் இருக்கு. மருந்து எடுத்துக் கொள்கிறேன். மகன் யு.எஸ். போயாச்சு என்றாலும் இன்னமும் ஹூஸ்டன் போய்ச் சேரவில்லை. அநேகமாக இன்றிரவு போய் விடுவார் என நினைக்கிறேன்.

   Delete
 20. பதிவை படித்தவுடன் மிகவும் வருத்தம் அடைந்தேன், ஆனால் இறைவன் அருளால் தப்பித்தற்கு அவருக்கு நன்றி.
  விழுந்த அன்றவுடன் அப்புறம் தான் வலிக்கும்.
  மாயவரத்தில் இருக்கும் போது அடிக்கடி விழுந்து அதன் பாதிப்பால் இப்போது அவதி படுகிறேன்.இடது இடுப்பும் இடது கால், இடது கணுக்கால் என்று வ்லி உள்ளது. முன்பு விழுந்த விழுப்புண்களின் பாதிப்பு என்கிறார்கள்.
  கீழே விழுவது மட்டும் இல்லாமல் மற்றவர்கள் கேட்கும் கேள்விகணைகளால் ஏற்படும் வலி அதிகம் பட்டவள்.

  கீழே பார்த்து நடக்க மாட்டாயா? இந்தனை வயதிலும் கவனம் வேண்டாமா? எப்படி இப்படி கீஃஜே விழுந்தீர்கள்?
  புதையல் எடுத்தீர்களா? என்று கேள்விகளால் வெட்கமும், வேதனைகளும் தொடரும்.

  கீதா, எனக்கும் உங்களுக்கும் நிறைய பொருந்தங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தேன் விழுவதிலும் ஒற்றுமையா என்று வியக்கிறேன்.

  அடிக்கடி விழுந்து விழுந்து எழுந்து கொள்வேன்.

  கீழே விழுவது மீண்டும் எழுவதற்காகவே! தலைப்பு படி எழுந்து கொள்வோம்.
  இனி விழாமல் இருக்க இறைவனை வேண்டிக் கொள்வோம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, முன்னெல்லாம் விழுந்தாலும் சட்டென எந்த உதவியும் இல்லாமல் எழுந்திருக்க முடிந்தது. இப்போது உதவி தேவை! என்றாலும் எழுந்துக்க முடிகிறதே! அன்று எழுந்து நிற்க முடியுமா என்றே சந்தேகமாக இருந்தது. நிற்கையில் கால்கள் எல்லாம் நடுக்கம், எனக்கு மட்டுமே தெரியும்! ஒரு வழியாச் சமாளித்துக் கொண்டேன்.

   Delete
 21. இப்போது வலி இருக்கா?
  எட்டிவிதை என்று மருத்து கடையில் கிடைக்கும் அதை வாங்கி எலிமிச்சை சாறில் உரைத்து அதனுடன் மஞ்சள்பொடி சேர்த்து வலி உள்ள இடத்தில் தேய்த்தால் இரத்தகட்டு தசைநார் விரிவு எல்லாம் சரியாகும் என்றார் ஒருவர். அவ்ர் கொடுத்த எட்டி விதையை தேய்த்து கால் பெருவிரலில் அடிபட்ட வலியை போக்கினேன் முன்பு.

  இப்போது மீண்டும் கோவையில் வாங்கி வந்து இருக்கிறேன் எட்டிவிதை, கணுக்கால் மற்றும் பாதத்தின் மேல்புறம் வலிக்கும் வலிக்கு. எக்ஸ்ரே, பிஸியோதெரபி , மருந்து மாத்திரை என்று போயும் சரியாகாமல் இருக்கும் வலிக்கு எட்டிவிதையை தேய்த்துப் பார்க்க போகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கோமதி, வலி நிவாரணி ஆயின்ட்மென்ட் எதுவும் ஒத்துக்கொள்ளாது. உடலில் தடவும்போதே எரியும். அதே போல் வலிக்கு ஒத்தடம் கொடுக்கும் சாதனங்களும் ஒத்துக்கொள்வதில்லை. ஆகவே அந்தப் பக்கமே போவதில்லை. உள்ளுக்குச் சாப்பிடும் மாத்திரைகள் தான் ஒரே நிவாரணி.

   Delete
  2. எனக்கு இந்த விக்ஸ், டைகர் பாம், ஜன்டு பாம், வோலினி, ஐயோடெக்ஸ், அமிர்தாஞ்சன் போன்ற வலிநிவாரண ஆயின்ட்மென்ட்கள் தடவினாலே அலர்ஜி ஆகி விடும். நாராயணத் தைலம் அல்லது பிண்டத்தைலம் தடவிப்பேன். இப்போ இரண்டும் கைவசம் இல்லை. என்ன கடுமையான வலி என்றாலும் இவை எதையும் தடவிக்கொள்வதில்லை.

   Delete
 22. நீங்க எழுதியதை படிக்கும்போது எனக்கே விழுந்து அடிபட்ட மாதிரி இருக்கு ..நானும் அடிக்கடி விழுந்து எழும்பியிருக்கேன் ..எதிர்பாரமா நடந்து உடம்பெல்லாம் வலி வந்திடும் .. கடவுள் தான் காப்பாற்றி இருக்கார் உங்களை .
  நீங்க பெயின் கில்லர்ஸ் ஏதும் எடுத்தீங்களா ? இல்லைனாலும் பால் குடிக்கும் வழக்கமிருந்தா சூடான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிங்க .இது இயற்கை வலி நிவாரணி ..ஹாட் வாட்டர் பேக் இருந்தாலும் வலி ஏற்பட்ட இடத்தில வைங்க ..ஆனா மறக்காம ஒருமுறை டாக்டர் கிட்ட போய்ட்டு வந்துடுங்க . நல்லவேளை உங்களுக்கென ஒரு கடை திறந்து வைத்திருந்தது . கடவுளுக்கு நன்றி சொல்லணும் .டேக் கேர் அக்கா .

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல். வலி குறைந்திருக்கிறது. என்றாலும் தொடர்ந்து அடிபடுவதால் இன்னமும் நடக்க, நிற்க சிரமம் தான். போகப் போகச் சரியாகும் என நினைக்கிறேன். இந்த மாதம் அடுத்தடுத்துப் பயணங்கள் வேறே இருக்கு. அதுக்குள்ளே சரியாகணும். :( எல்லாம் முன்கூட்டித் திட்டமிடப்பட்டவை. தவிர்க்க முடியாது.

   Delete
 23. இப்ப பரவாயில்லையா பார்த்துக்கோங்க.
  அன்புடன் கலா

  ReplyDelete
  Replies
  1. நன்றி புதுகைத் தென்றல்

   Delete
 24. அடடா! படிக்கும்பொழுதே கஷ்டமாக இருக்கிறதே? ஊருக்கு திரும்பியதும் டாக்டரிடம் காண்பித்தீர்களா? தயவு செய்து மருத்துவரை கன்சல்ட் செய்யவும்.
  கொஞ்ச நாட்களாக எனக்கு பதிவு எதையும் படிக்கும் மூடு இல்லை. எ.பி.க்கு மட்டும் வந்து பின்னூட்டமிட்டு சென்று கொண்டிருந்தேன். இன்றுதான் உங்களுடைய பதிவுகளை படித்தேன். Take care.

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி,உங்கள் மனச்சோர்வு அகலப் பிரார்த்திக்கிறேன். இப்போப் பரவாயில்லை. வருகைக்கும் கனிவான விசாரணைக்கும் நன்றி.

   Delete
 25. மனதிற்கு கஷ்டமா இருந்தாலும் ..

  ஏதோ இதோடு போயிட்டதே ன்னு நினைக்க வேண்டியது தான் மா..

  உடம்பை பார்த்துகோங்க மா...பெரிய கஷ்டம் வராம இறை அருளால் சின்னதா போச்சு ன்னு நன்றி சொல்லிக்குவோம் அவனுக்கு ...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், அனுராதா, மிக்க நன்றி.

   Delete