எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, January 05, 2019

ஆகாயத்தில் பறந்தேனோ?

பையர் இன்னிக்கு ஊருக்குக் கிளம்பி விட்டார்.. இன்றிரவு (ஆங்கிலத்தேதி ஞாயிறு 6) காலை ஒன்றே முக்கால் மணிக்கு விமானம். ஞாயிறன்று மாலை அம்பேரிக்கா போய்ச் சேருவார். குட்டிக் குஞ்சுலுவை பையர் இருந்த நாட்களில் தினம் தினம் பார்க்க நேர்ந்தது. அதுக்கு அவங்க அப்பா விட்டுட்டுப் போயிட்டது குறித்துக் கோபம்! நோ, நோ, நோ எனக் கத்திக் கொண்டு முகத்தை மூடிக் கொண்டு பார்க்க மாட்டேன் போ எனக் கோபத்தில் சொன்னது. பின்னர் கொஞ்சம் போல் கைகளை நீக்கிப் பார்த்துவிட்டுக் கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் வெட்கம்! பின்னர் கொஞ்ச நேரம் அப்பாவைப் பார்த்தது. எங்களையும் பார்த்தது! பின்னர் பை சொல்லி விட்டுப் போய் விட்டது! ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விளையாட்டு! சில நாட்கள் தாத்தா, பாட்டி எங்கே என எங்களை விசாரிக்கும்!  ஆயிற்று. பத்து நாட்கள் ஓடியே போய் விட்டன!

அடுத்தடுத்து உறவினர்கள் வருவதும், போவதுமாக இருந்ததாலும் நடுவில் மாமியார் ச்ராத்தம் வேறே வந்ததாலும் ஒரே ஓட்டம் தான்! காலை எழுந்து ஆரம்பிக்கும் வேலை மதியம் சாப்பாட்டுடன் ஓர் இரண்டு மணி ஓய்வில் முடியும். பின்னர் திரும்ப மூன்று மணிக்கு ஆரம்பித்தால் இரவு படுக்கப் போகையில் ஒன்பதரை ஆகி விடும். நடுவில் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் கணினியைப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை.  அதோடு ஒரே களைப்பாக வேறே இருக்கும். இதுக்கு நடுவில் சபரிமலையில் நடந்த அமர்க்களத்தைப் பார்த்துவிட்டு எங்க உறவினர்கள் பயந்து போய்ப் பையர் மலையிலிருந்து இறங்கியாச்சா எனத் தொலைபேசி விசாரித்தனர்.

நல்லவேளையாக சபரிமலையில் அமர்க்களம் நடக்கும் முன்னரே எங்க பையர் மலை ஏறிவிட்டு இறங்கி விட்டார். அதை எல்லாம் பார்க்கையில் கடவுள் தான் காப்பாற்றினார் என்பது மேலும் உறுதி ஆனது. கஷ்ட காலத்திலும் ஒரு நல்லகாலம் என்பது போல் இருந்தது. நேற்று குலதெய்வம் கோயிலுக்குப் போகணும்னு பையர் சொன்னதால் காலை ஆறு மணிக்கெல்லாம் திடீர்ப்பயணமாகக்  கிளம்பிச் சென்றோம். முதல் நாள் ச்ராத்தம் முடிந்து சாப்பிட 2 மணி ஆகிவிட்டது. கொஞ்சம் அலுப்புத் தான் என்றாலும் எனக்கு அக்கி வந்து விட்டுச் சென்றதில் இருந்தே ஒரு முறை கோயிலுக்குப் போகணும்னு ஆசை இருந்தது. ஆனால் இப்போ வேண்டாம். கொஞ்ச நாட்கள் கழிந்து போகலாம் என்று ரங்க்ஸ் சொல்லிவிட்டதால் சரினு பேசாமல் இருந்து விட்டேன். இப்போப் பையர் கேட்டதும் ஊருக்குப்போகும் ஆசை வந்து விட்டது!  காலை ஆறு மணிக்குக் கிளம்பிப் போயிட்டு பரவாக்கரை, கருவிலி இரண்டு ஊரிலும் ஸ்வாமி தரிசனம் செய்து விட்டு மத்தியானத்துக்குள் திரும்பணும்னு திட்டம்.

இங்கே திருச்சியில் ரெட் டாக்சி என்னும் கால் டாக்சி அறிமுகம் செய்திருக்காங்க. முதலில் கோவையில் ஆரம்பித்து அங்கே வெற்றிகரமாக நடத்திப் பெயர் வாங்கினதும், மதுரையில் ஆரம்பிச்சிருக்காங்க. இப்போச் சில மாதங்களாகத் திருச்சிக்கு வந்திருக்கு.  இப்போது அது தான் பயன்படுத்துகிறோம். ஆகவே அது சொன்னால் உடனே வந்துவிடுவதோடு சரியான நேரமும் வந்து விடுகிறார்கள். ஆகவே முதல்நாள் இரவே காலை கிளம்பணும்னு முடிவானதும் ரெட் டாக்சியைக் கூப்பிட்டு முன் பதிவு செய்து கொண்டோம்.

அதன்படி கிளம்பிச் சென்றோம்.  காலை சீக்கிரமாகவே கும்பகோணம் வந்தாச்சு. அங்கே பூஜைக்கு வேண்டிய சாமான்கள் வாங்கிக் கொண்டு அப்படியே காலை ஆகாரமும் செய்துட்டுக் கிளம்பலாம்னு ஒரு திட்டம். அதன்படி பெரிய கடைத்தெருவுக்குப் போவோம்னு நினைச்சுட்டு இருந்தால் வண்டி காமாட்சி ஜோசியர் தெருவழியே மடத்துத் தெருவுக்குச் சென்றது. அங்கே முரளீ"ஸ் கஃபே என்னும் ஓட்டல் ஒன்று இருக்கிறது. இதைப் பற்றிக் கேள்விப் பட்டதில் இருந்தே நம்மவருக்கு அங்கே போய்ச் சாப்பிடணும் எண்ணம். ஆகவே அங்கே போகவேண்டி வண்டி முன்னாலேயே திரும்பி இருக்கு. எனக்கு இது புரியாமல் கழிவறைக்குப் போகணும்னு சொல்ல அங்கே பக்கத்தில் எதுவும் இல்லை என்பதால் ஓட்டலில் விசாரித்து விட்டு அங்கேயே போகலாம்னு என்னைக் கூட்டிப் போனார்.

பையரை உட்கார்ந்து உணவு ஆர்டர் கொடுக்கச் சொல்லிட்டு நாங்க ரெண்டு பேரும் கழிவறை எங்கே இருக்கு எனக் கேட்டுக் கொண்டு உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே சென்றோம்.  சுமார் ஒரு மைல் உள்ள்ள்ளே சென்றபின்னர் கொல்லைப்பக்கம் வந்தது. அங்கே ஓர் ஓரமாகக் கழிவறை இருந்தது. அப்போது உள்ளே யாரோ இருப்பதாகச் சொல்லவும் காத்திருந்தோம். காத்திருந்தப்போ பக்கத்தில் இருந்த ஓர் அறையைப் பார்த்துவிட்டு நான் அங்கே சென்றுவிட்டு வந்து விடுகிறேன் என ஓட்டல் ஊழியர் பெண்மணியிடம் கேட்டப்போ அங்கே போகக் கூடாது எனச் சொல்லிவிட்டார். அது குளிக்கும் அறை என்றார். சுமார் பத்து நிமிடக் காத்திருப்பின் பின்னர் திரும்பி விடலாமா என நினைக்கையில் உள்ளே இருந்த மனிதர் வந்தார். அதற்குள்ளாகக் கழிவறை வாயிலில் இருந்து ஏகப்பட்ட நீர் வெளியே வந்து விழுந்தது. கால் கழுவி இருப்பார் போல. உள்ளே நுழையவே எனக்கு யோசனை! ஆனால் இத்தனை நேரம் காத்திருந்ததால் போயிட்டு வருவோம், செருப்புத் தான் போட்டிருக்கோமே எனச் சென்றால் கழிவறை வாயில் மலை உச்சியில் இருந்தது.

திகைத்துப் போனேன். இவ்வளவு உயரத்திலா வாசல்படியை வைப்பார்கள்? சுற்றும் முற்றும் பார்த்துப் பிடிமானத்துக்கு எதுவும் கிட்டவில்லை. வலப்பக்கம் சுவரில் கழிவறைக் கதவு. அதைப் பிடித்தால் தகரக்கதவு. கையோடு வந்துடும் போல! அதுக்குச் சட்டமோ நிலையோ இல்லை. கதவில் சட்டத்தை அடித்துவிட்டுக் கீல் வைத்துச் சுவற்றில் பொருத்தி இருந்தாங்க. பிடிமானத்துக்கு இடப்பக்கமும் எதுவும் கிட்டவில்லை. மெல்ல முயன்று வலக்காலை எடுத்து முதலில் உள்ளே வைத்துக் கொண்டு நல்ல சகுனம் தானே என நினைத்தவண்ணம் முழங்காலில் கையை ஊன்றிக்கொண்டு இடக்காலை எடுத்து மேலே வைக்க எம்பினேன். அவ்வளவு தான் தெரியும். அடுத்த கணம் நான் பறந்து கொண்டிருந்தேன்.

37 comments:

 1. பறந்தவர் தற்போது நேரே ஆகாயத்தில் இருந்தா இன்டர்நெட்டில் எழுதுகிறீர்கள்? இஃகி இஃகி இஃகி.
  Jayakumar

  ReplyDelete
 2. சுவாரஸ்யமாக படிக்கும்போது...
  ஐயய்யோ முடிவில் என்னவாயிற்று ?

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி! வரும், வரும்!

   Delete
 3. அந்தக் குலதெய்வம் வந்து காப்பாற்றி இருக்கும். நல்லதையே நினைப்போம். அன்படன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க அம்மா, உங்களைப் பார்த்தது மகிழ்ச்சி. நீங்க சொல்வது போலத் தான் நடந்தது.

   Delete
 4. சில நடப்புகளை விவரிப்பது சுவாரசியம் கழிவறை உயரத்தில் இருந்தால்வயதானவர்களுக்கு சிரமம்தான் விழுந்துஅடி கிடி பட்டு விட்டதா குரல் கொடுத்தீர்களா யாராவது உதவிக்கு வந்தார்களா உங்கள் அனுபவம் பலருக்கும் ஒரு அனுபவமாயிருக்கும்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி ஐயா! உயரமான இடத்தில் இருந்தாலும் கையில் பிடித்துக்கொண்டு ஏறப் பிடிமானம் இருந்திருந்தால் பிரச்னை இல்லை.

   Delete
 5. அடக் கஷ்ட காலமே.... உங்க விவரிப்பு, நேபாளத்தில் ஒரு தெருவில் நிறுத்தி எல்லாரையும் அங்கிருந்த வீடுகளில் (வீட்டில்) ரெஸ்ட் ரூம் உபயோகப்படுத்தச் சொன்னது ஞாபகம் வந்தது.

  அதுசரி.. கும்பகோணம் ஓட்டல் விவரம் சொல்லுங்க. இரண்இடு நாள்ன்று கழித்து என்றால் அங்கேயே சந்தித்திருக்கலாம்.

  இராமகிருஷ்ணா லஞ்ச் ஹோமில் மதிய உணவு. நன்றாகவே இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. நாங்க நேபாளம் போயிருந்தப்போ இந்தப் பிரச்னை எல்லாம் இல்லை சௌகரியமாகவே அமைந்தது பிரயாணம். ஓட்டலில் டிஃபன் பரவாயில்லை ரகம். மடத்துத் தெருவில் இருக்கு இந்த ஓட்டல். அங்கே நகராட்சியால் நிர்வகிக்கப்படும் கட்டணக்கழிவறைகள் இல்லை என்பதால் வந்த வினைதான். மற்றபடி சென்னை ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம் அதே தரத்தைக் கடைப்பிடிப்பதில் ஆச்சரியம்.

   Delete
 6. என்ன ஆச்சு? இந்த இடத்தில நிறுத்தி விட்டீர்களே... ஏதோ கணினிக்கு வந்து டைப் அடிக்கும் அளவில் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று ஆறுதல் கொள்கிறேன். அவ்வளவு அபாயமான இடம் என்று தெரிந்தும் அங்கு கால் வைக்கலாமா?

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம், வலி தவிர்த்து மற்றப் பிரச்னைகள் ஏதும் இல்லாதது அந்தக் குலதெய்வத்தின் அருளாலே தான். கால் வைக்க யோசனை தான்! ஆனாலும் சமாளிக்கலாம் என நினைத்தேன். முடியலை!

   Delete
 7. என்னாச்சுமா. பத்திரமாக வந்துவிட்டீர்கள்.
  அதற்கு பகவானை நமஸ்காரம் செய்கிறேன்.

  என்ன அடி பட்டதோ. கவலையாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, கடவுள் அனுகிரஹத்தால் நல்லபடியாக ஆயிருக்கு. இல்லை எனில்! நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை!

   Delete
 8. இன்று உங்க பதிவு எதிர்பார்த்தேன் கீதாக்கா...நேத்தே போட்டுட்டுட்டீங்க போல்...நான் நேற்று காலையில் வந்து அப்புறம் மதியம் மேல் வரவே இல்லை வலைப்பக்கம்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நேற்று மத்தியானத்தில் இருந்தே எனக்கு ஃப்ரீ தான் தி.கீதா. உடம்பு தான் கொஞ்சம் முடியலை என்பதால் அதிகம் இணையத்தில் இருக்கலை!

   Delete
 9. குட்டி குஞ்சுலு செம க்யூட்! நீங்க எழுதியிருப்பதை வாசித்தே நினைத்துப் பார்த்து ரசித்தேன் அக்கா..குழந்தையை காட் ப்ளெஸ்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், கீதா, பார்க்கவே ரொம்ப அழகா இருந்தது. அதுக்கு இப்போ சரியில்லாமல் அவ அம்மா டாக்டரிடம் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறாள். திரும்பி வந்து தகவல் தெரிவித்ததும் தான் எப்படி இருக்கு குஞ்சுலுனு தெரியும். இதுக்கு நடுவில் பையர் ஃப்ளைட் வேறே ஒன்றரை மணி நேரம் தாமதம். அதன் தொடர்பாக அவர் பாரிஸில் பிடிக்க வேண்டிய இணைப்பு விமானம் பிடிக்க முடியாமல் அட்லான்டா வழியாக அனுப்புகின்றனர். இதனால் பனிரண்டு மணி நேரம் தாமதமாக ஹூஸ்டன் போய்ச் சேருவார். அது வேறே புதுக்கவலை இப்போ! :(

   Delete
  2. Did he(Paiyar) search for tickets in Emirates airlines. Emirates has Dubai as hub to All American cities and these flights start from Dubai in the morning. Flights from India to Dubai are scheduled such as they reach just about 1 to 2 hours before American flights. Since Dubai Houston Chennai, Trivandrum Mumbai etc. are all weather airports flights may not get delayed due to weather.

   I would like to know whether you sent any gift to Trump uncle through paiyar? If so what?
   Jayakumar

   Delete
  3. வாங்க ஜேகே அண்ணா, டிக்கெட் விலை எமிரேட்ஸில் அதிகம். அதோடு இது திடீர்ப்பயணம். திட்டமிடவில்லை. திட்டமிட்டிருந்தால் எல்லோருமே வந்திருப்பாங்களே! நாங்க போனப்போ எமிரேட்ஸில் போயிருக்கோம். அவங்களும் கத்தார், எமிரேட்ஸ் ஆகியவற்றில் வந்திருக்காங்க. எங்கே விலை குறைவோ அங்கே! ட்ரம்ப் தான் எனக்குப் பரிசு அனுப்பணும். நான் ஏன் அனுப்பப் போறேன். அவர் ஒண்ணும் கொடுக்கலை! அதனாலே நானும் ஒண்ணும் தரலை! :P :P :P

   Delete
  4. ஜேகே அண்ணா ட்ரம்ப் அங்கிளுக்கு கீதாக்கா அனுப்பனுமா என்ன அதெல்லாம் பூசாரின் வேலை...அவங்கதான் ட்ரம்ப் அங்கிளூக்கு பெர்சனல் செக்!!!!!!!

   அடடா பையர் ஃப்ளைட் டிலேயா...நல்லபடியா போய்ச் சேர்வார் அக்கா..குஞ்சுலுவும் சரியாகிடுவாள்...பிரார்த்திப்போம்

   கீதா

   Delete
  5. என்னவோ தெரியலை. இங்கேருந்து கிளம்பும் ஜெட் ஏர்வேஸ் தான் தாமதம்னா பாரிஸில் இருந்து அட்லான்டா வழியாகச் செல்ல இருந்ததும் ஒன்றரை மணி நேரம் தாமதம்! இன்று காலை இந்திய நேரப்படி பத்துமணிக்குத் தான் அட்லான்டா போய்ச் சேர்ந்திருக்கார். அங்கே இருந்து மறுநாள் (அம்பேரிக்காவில் திங்கள் காலை) தான் விமானம். அதில் தான் ஹூஸ்டன் செல்லணும்! :(

   Delete
 10. ஹையோ அக்கா என்ன ஆச்சு. அக்கா எப்படி இருக்கீங்க இப்ப? இப்படி அப்ருப்டா விட்டுட்டுப் போயிட்டீங்க...சரி பதிவு வந்திருக்கு என்பதால் ஒன்றும் ஆகியிருக்காது என்று நினைக்கத் தோன்றினாலும் பறந்தேன் என்றால். கவலையா இருக்கு...தலையில் அடி எதுவும் படவில்லை என்றும் பெரிதாக இல்லை என்றும் இறைவன் அருளால் நலமுடன் இருக்கீங்கன்னும் நம்புறோம்....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நேத்திக்கு முதலில் இதை எல்லாம் எழுத வேண்டாம்னு தான் இருந்தேன் திகீதா! அப்புறமா என்னமோ தோணி எழுதினேன். இன்னிக்கு முடிச்சுடுவேன். இத்தனை நேரம் கொஞ்சம் தொலைபேசி அழைப்புக்களில் மும்முரம்!

   Delete
 11. vaiko saar commenttai kanavillai. aathira engeyo marunthu vaanga poyittaar. seekiram vango.

  ReplyDelete
  Replies
  1. வைகோவிடமிருந்து எனக்கு எந்தவிதமான கருத்துப் பதிவும் வரலை. அதிரா, ஏஞ்சலின் எல்லாம் சனி, ஞாயிறில் ரொம்பவே வேலை மும்முரம். ஏஞ்சலின் நாளைக்குப் பள்ளி திறக்கப் போறதாச் சொன்னார். ஆகவே அவரும் வேலை மும்முரம்.

   Delete
  2. இதோ வந்துட்டேன்க்கா ..போனில் படிச்சேன் சனிக்கிழமை .ஆனாலும் லாப்டாப்பில் படிச்சி நிதானமா கமெண்ட் போடறதில்தான் எனக்கு சந்தோஷம் :)

   Delete
  3. வாங்க வாங்க, அஞ்சு, வருகைக்கு நன்றி.

   Delete
 12. போன இடத்தில் இப்படியாகிப் போனது. அப்புறம் கோயிலுக்கு எப்படிச் சென்றீர்கள்? முடிந்ததா? இப்போது எப்படி இருக்கிறீர்கள் சகோதரி?

  பிரார்த்தனைகள்

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசிதரன், ரொம்ப நாளைக்குப் பின்னர் பார்க்கிறேன். கனிவான விசாரணைக்கு நன்றி. கோயிலுக்குப் போன விபரம் நாளை! :)

   Delete
 13. அடடா... கீழே விழுந்து விட்டீர்களா.... கவனமாக இருங்கள் கீதாம்மா....

  ReplyDelete
 14. குட்டி குஞ்சுலு ஸ்வீட் .இந்த பொண்ணுங்க எல்லாம் அப்பா செல்லங்கள்தான்க்கா :) என்னதான் அம்மாங்க நாம் போட்டு உருகி கவனிச்சாலும் அப்பாவதான் தேடுவாங்க :)
  மகன் பத்திரமா சபரி மலை பிரயாணத்தை முடிந்து வந்ததில் சந்தோஷம் .இங்கேயும் வெள்ளிக்கிழமை கேரளாக்காரங்க கடைகளில் பேசிக்கொண்டிருந்தாங்க அங்குள்ள பிரச்சினைகளை பற்றி அவர்களுக்கு மிகுந்த வருத்தம் அங்கு நடக்கும் வீண் சர்ச்சைகளால் :( கடவுள்தான் எல்லாத்துக்கும் நல்ல வழி காட்டணும் .
  அந்த ஹோட்டல் wc :( நம்ம நாட்டில் இன்னமும் இது தீரா பிரச்சினை அரசாங்கம் முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இந்த ரெஸ்ட் ரூம்க்குதான் .இங்கே ட்ரெயினில் ஏறணும்னா கூட கால் வலி உள்ளவங்க முதியோருக்கு வசதியா படி போன்ற அமைப்பு எக்ஸ்டென்சன் போல வரும் ..இதெல்லாம் அத்தியாவசியமான ஒன்று கட்டாயமான ஒன்றும் கூட .
  அடுத்த பதிவுக்கு செல்கிறேன் .

  ReplyDelete
  Replies
  1. வாங்க அஞ்சு, குட்டிக்குஞ்சுலு மட்டுமில்லை அவ அத்தையும் அப்பா பெண் தான். நம்மவர் என்னைச் சீண்டுவதற்காகவே அவர் அலுவலகம் போறச்சே விளையாடிட்டு இருக்கும் குழந்தையைக் கூப்பிட்டு டாடா சொல்லி அழ வைச்சுப் பார்த்துட்டுக் கிளம்புவார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நல்லவேளையாப் பையர் காலையில் குஞ்சுலு தூங்கும்போதே அலுவலகம் கிளம்பிடுவார். :)))))) என்றாலும் அது வார நாட்களையும், விடுமுறை நாட்களையும் எப்படியோ புரிஞ்சுக்கறது என்பார் பையர்.

   Delete
 15. நம் ஊர் ஓட்டல்களில் கழிவரை வசதிகள் சில இடங்களில் தான் சரியாக பராமரிக்கிறார்கள்.
  சில போகவே பிடிக்காது அப்படி இருக்கும் போகும் வழி.
  ஏஞ்சல் சொல்வது போல் ரெஸ்ட் ரூம் வசதியாக இருக்கும் வெளிநாட்டில் இங்கும் எல்லா ஓட்டல்களில் கடைபிடித்தால் நலம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, இப்போதைய மத்திய அரசு நெடுஞ்சாலைகளின் பெட்ரோல் நிலையங்கள் மற்றும் ஓட்டல்கள் எல்லாவற்றிலும் கழிவறை வசதியைக் கட்டாயப்படுத்தி இருக்கிறது. அதை விரைவில் செயலாற்றும்படியும் அந்தந்த மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. என்றாலும் இன்னமும் கழிவறைகளுக்குப் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. இங்கே திருச்சியில் அப்படி இல்லை. கட்டணக்கழிவறைகள், இலவசக்கழிவறைகள், நடமாடும் கழிவறைகள்னு நிறையவே வசதி!

   Delete
 16. அவ்வளவு தான் தெரியும். அடுத்த கணம் நான் பறந்து கொண்டிருந்தேன்....


  அச்சோ ..என்னமா இது..

  எவ்வொலோ கவனமா இருந்தாலும் இப்படியும் சில நேரங்களில் ஆகிடுது ...

  ReplyDelete