குடியரசு தினத்தன்று ஊரில் இல்லாமல் போனதில் beating retreat என்னிக்குனு மறந்து போச்சு. தற்செயலா முகநூலில் பார்த்தப்போ நண்பர் கிருஷ்ணகுமார் beating retreat பார்த்துக் கொண்டிருப்பதாக ஸ்டேடஸ் போட்டிருக்க உடனே நம்ம ரங்க்ஸைத் தொலைக்காட்சியில் பொதிகை போடச் சொன்னேன். மற்ற சானல்களில் இதெல்லாம் வருமானு சந்தேகம். போட்டால் சுத்தம்! கேபிளே சிறிது நேரம் வரலை. ஸ்க்ராம்பிள் என்று செய்தி வந்து கொண்டிருந்தது. பின்னர் சற்று நேரத்திற்குப் பின்னர் வந்தது. மற்ற சானல்களும் பார்த்ததில் எங்கேயும் வந்ததாய்த் தெரியலை. ஆகவே பொதிகையே போட்டார். கிட்டத்தட்ட முடியும் சமயம். என்றாலும் 2,3 பாடல்கள் கேட்க முடிந்தது.
கொடி இறங்கிய சிறிது நேரத்தில் குடியரசுத் தலைவர் மாளிகை வண்ண விளக்கு அலங்காரங்களால் ஜொலிக்கத் தொடங்கியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இந்த வருடம் எடுத்த எடுப்பில் மூவர்ணக் கொடியின் அமைப்பில் அலங்காரம் அமைந்திருக்க அதைப் படம் எடுக்கும் முன்னர் அடுத்தடுத்து வண்ணங்கள் மாறத் தொடங்க முடிந்த வரை எடுத்தேன்.
பல கோணங்களிலும் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருந்தனர் வல்லுநர்கள். கீழே இந்தியா கேட் மூவர்ணக் கொடி அலங்காரத்தில் காட்சி அளிப்பதைக் காணலாம். வண்ணம் தெளிவாக இல்லை.
குடியரசுத் தலைவர் மாளிகை. குடியரசுத் தலைவர் கொடி இறக்கி முடித்ததும் விடைபெற்றுச் செல்லும் காட்சி. சாரே ஜஹான் ஸே அச்சா பாடல் பின்னணியில் ஒலிக்க மெய் சிலிர்க்க வைக்கும் காட்சிகள். அடுத்துக் கீழே இருக்கும் படங்களில் வண்ணங்கள் மாறி மாறிக் காட்சி அளிக்கும் அழகான காட்சியைக் காணலாம்.
அநேகமாகத் தமிழ்நாட்டில் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் அரிதாகவே இருப்பார்கள். யாருக்கும் இப்படி ஓர் நிகழ்ச்சி இருப்பது தெரிந்திருக்காது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி கொடியேற்றம் நிகழ்ந்ததும் 29 ஆம் தேதி கொடி இறக்கம் குடியரசுத் தலைவரால் நிகழ்த்தப்படும். அதற்கும் அனைவரையும் அழைத்திருப்பார்கள். பொதுமக்களும் கலந்து கொள்வார்கள்.
நிகழ்ச்சி இப்படி ஒன்று இருப்பது தெரியும். முன்னால் ஓரிருமுறை முறை பார்த்திருக்கிறேன். இப்போ பார்க்கலை!
ReplyDeleteஅநேகமாக வருஷா வருஷம் பார்ப்பது தான். இதை விடறதில்லை. ஆனால் கடந்த இரு வருடங்களாக மறந்து போகிறது. போனவருஷம் பாரதிமணி போட்டிருந்தார். இந்த வருஷம் கிருஷ்ணகுமார்! :)))
Delete/
ReplyDeleteஅநேகமாகத் தமிழ்நாட்டில் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் அரிதாகவே இருப்பார்கள். யாருக்கும் இப்படி ஓர் நிகழ்ச்சி இருப்பது தெரிந்திருக்காது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி கொடியேற்றம் நிகழ்ந்ததும் 29 ஆம் தேதி கொடி இறக்கம் குடியரசுத் தலைவரால் நிகழ்த்தப்படும். நான்பல முறை பார்த்திருக்கிறென்
அப்படியா நன்றி ஐயா! பெரும்பாலோர்க்குத் தெரியறதில்லை!
Deleteஎனக்குத் தெரியவில்லை. தெரிந்தால் பார்த்திருப்பேன். பரவாயில்லை, பொதிகைல (நெல்லை) தவறவிட்டதை மதுரைலேர்ந்து காட்டிட்டாங்க.
ReplyDeleteஆச்சரியமா இருக்கு நெ.த. நீங்க விடாமல் பார்ப்பீங்கனு நான் நினைச்சேன். 26 ஆம் தேதியை விட இந்த 29 ஆம் தேதி நிகழ்ச்சி தான் நன்றாக இருக்கும். யூ ட்யூப் சுட்டி கீழே கொடுத்திருக்காங்க பாருங்க, அதிலே போய்ப் பார்க்கலாம்.
Deleteமுன்பு பார்த்து இருக்கிறேன்.
ReplyDeleteபொதிகைதான் இந்த மாதிரி நிகழ்ச்சி எல்லாம் நன்றாக காட்டுவார்கள்.
படங்கள் நன்றாக வந்து இருக்கிறது.
வாங்க கோமதி, பல்வேறு வேலைகளுக்கிடையில் மறந்து தான் போகிறது.
Deleteகொடி இறக்குவது கேட்டதுண்டு இதுவரை கண்டதில்லை.
ReplyDeleteவாங்க கில்லர்ஜி, உங்களுக்கு நேரம் இல்லை. ரொம்பவே பிசியா இருப்பீங்களே! முடிஞ்சால் பின்னாடி யூ ட்யூபிலே பாருங்க!
Deleteyoutubeல கிடைக்குமே!
ReplyDeleteநானும் சிலமுறை பார்த்திருக்கேன்
வாங்க ராஜி, தெரிந்திருப்பதற்கு மகிழ்ச்சி.
Deleteஇந்த Beating Retreat ceremony பற்றி எப்பவோ கேள்விப்படிருக்கிறேன் ஆனா ஒருமுறைகூட பார்த்ததில்லை சந்தர்ப்பமும் சமையலை .நீங்க சொல்லும்போதே அமர்க்களமா இருந்திருக்கும்னு படங்களை பார்த்ததும் தெரிகிறது .இம்மாதிரி நிகழ்ச்சிகளை அப்பா ஊரில் எங்களை கட்டாயப்படுத்தி பார்க்க வைப்பார் குடியரசுதின பரேட் அப்புறம் சுதந்திரதின அலங்கார வண்டிகள் நிகழ்வுகள் எல்லாம் சென்னையோடு போச்சு ..
ReplyDeleteவாங்க ஏஞ்சல், அமர்க்களமா இருக்கும். அதுவும் கடைசியில் ஸாரே ஜஹான்ஸே பாடும்போது என்னோட தேசபக்தி ரத்தம் கொதிக்க ஆரம்பிச்சுடும். :)))) குடியரசு தினத்தன்று காலையில் பார்க்க நேரமே இருக்காது. பார்ப்பதும் இல்லை. எப்போவோ ஒரே ஒரு முறை வேலைகளுக்கு நடு நடுவே வந்து பார்த்தது உண்டு. இது மாலை நேரம் தான் என்பதால் விடறதில்லை.
Deleteஆமாம் அக்கா முன்னாடி இந்த நிகழ்ச்சி பார்த்ததுண்டு. அதெல்லாம் பல வருடங்கள் முன். இப்ப பார்க்கலை. உங்க மூலம் இப்ப படம் பார்த்தாச்சு.
ReplyDeleteநெட்ல இருக்கு 2019....https://www.news18.com/videos/india/watch-republic-day-beating-retreat-ceremony-2019-at-vijay-chowk-2018465.html
கீதா
ஆமாம் தி/கீதா, இன்னும் சிலரும் சொல்லி இருந்தாங்க! இணையத்தில் கிடைக்கிறது.
Deletehttps://www.youtube.com/watch?v=1h3hx5u8bBg
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=U91wJdyRR2g
இவை இரண்டும் பெரிய வீடியோக்கள் கிட்டத்தட்ட முழுவதும்....
நெல்லை இந்தச் சுட்டிகளில் பார்க்கலாம்
கீதா
நன்றி. நெல்லை பார்க்கலைனு நினைக்கிறேன். ரொம்ப பிசினு சொல்லிட்டு இருந்தார்.
Delete///கொடியேற்றம் கண்டிருப்பீர்கள்! கொடி இறக்குவது?///
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் கோயில் கொடியேற்றம் பற்றிப் பேசுறீங்களோ என நினைச்சுட்டேன்ன்.. இதிலும் கொடி இறக்கும் முறையும் உண்டோ....
படங்கள் நன்றாக காட்சி கொடுக்குது..
வாங்க அமுதசுரபி, கவிக்கோ, கவிப்பெருஞ்சுடர், அதிரடி அதிரா, கொடி இறக்குவது கொடி ஏற்றுவதை விட மிகவும் மரியாதையுடன் செய்ய வேண்டியதாயிற்றே! கேள்விப்பட்டதில்லையா? கோயில் கொடி ஏற்றம், கொடி இறக்கமும் அப்படித் தான். :)))) ஒரு சில கோயில்களில் திருவிழாவுக்குக் கொடி ஏற்றிக் காப்புக் கட்டியாச்சுன்னா நாம் அந்த ஊரை விட்டு வெளியே போகக்கூடாது சட்டதிட்டங்கள் உண்டு, தெரியுமோ? அதுவும் மாரியம்மன், முப்பாத்தம்மன், ரேணுகா தேவி போன்ற உம்மாச்சிங்க கோயில்களில் கொடி ஏற்றினால் திருவிழா முடியும் வரை ஊரை விட்டு வெளியேறக் கூடாது. அவசரமாய் ஊருக்குப் போக வேண்டி இருந்துட்டா என்ன பண்ணறது? அதுக்காகக் கொடி ஏற்றுவதற்கு முதல் நாளே அக்கம்பக்கம், அடுத்த ஊர் எனப் போய் ஒரு இரவு தங்கிட்டு வருவாங்க!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteகொடியேற்றம் நிகழ்ச்சிகள் பொதிகை, மற்ற சேனல்களில் என்று பார்த்திருக்கிறேன். உண்மைதான்.! இந்த நிகழ்வு பார்த்ததில்லை. அடுத்த வருடம் முடிந்தால் கண்டிப்பாக பார்க்க முயல்கிறேன். தாங்கள் எடுத்த படங்கள் நன்றாக வந்துள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, இப்போவுமே நீங்க நெரம் கிடைக்கும்போது தி/கீதா அளித்திருக்கும் சுட்டிகளில் பார்க்கலாம். அடுத்த வருஷ அலங்காரம் வேறே மாதிரி இருக்கும். போன வருஷம் வேறே மாதிரி! இந்த வருஷம் பார்க்கையிலேயே மெய் சிலிர்த்தது.
Deleteஎனது பக்கத்தில் முன்பே இதுபற்றி எழுதி இருக்கிறேன். மிகவும் சிறப்பான நிகழ்ச்சி. என் பக்கத்தில் கீழே உள்ள முகவரியில் பார்க்கலாம்.
ReplyDeletehttp://venkatnagaraj.blogspot.com/2012/01/beating-retreat-musical-treat.html?m=1
வாங்க வெங்கட், அநேகமாய் உங்கள் பக்கத்திலும் பார்த்திருப்பேன் என நம்புகிறேன். எதுக்கும் வந்து பார்க்கிறேன்.
Deleteநானும் மறக்காமல் பார்ப்பேன். அப்பா காலத்திலிருந்து செய்யும் கொடி மரியாதை.
ReplyDeleteவெரி இமோஷனல்.
எத்தனை ஒழுங்கு.எத்தனை அமைதி .அற்புதமான இசை.
கடைசியில் இந்தியாவே ஒளிர்வது போல தலை நகர் ஒளிர்விடும்.
மறக்க முடியாத நிகழ்ச்சி.
ஆமாம் ரேவதி. நாங்க தொலைக்காட்சி வந்த காலத்தில் இருந்து விடாமல் பார்ப்போம். மறக்க முடியாத நிகழ்ச்சி தான்.
Deleteஇன்று இந்தப் பதிவில் பார்த்தேன்...!
ReplyDeleteவாங்க டிடி, உண்மையாவா? ஆச்சரியம் தான்!
Deleteபுதிய தகவல். உங்கள் தயவால் தெரிந்து கொண்டேன். இனிமேல் இப்படி அபூர்வ விஷயங்களை பார்கிறீர்கள் என்றால் வாட்ஸாப்பில் ஒரு குறுஞ்செய்தி தட்டி விடுங்கள்.
ReplyDelete@பானுமதி, சரிதான், உங்களுக்குமா தெரியாது? ஆச்சரியமா இருக்கே. நான் செய்தியைத் தட்டி விடுவது இருக்கட்டும். நீங்க தி/கீதாவின் சுட்டிகளிலே போய்ப் பாருங்க!
Deleteஇப்படி ஒரு நிகழ்ச்சி இருப்பதே இப்போது தான் தெரியும்.... பள்ளி நாட்களில் கூட கேள்விப் பட்டதில்லை....
ReplyDeleteஇதைக் காட்டுவதால் ஏனைய ஊடகங்களுக்கு என்ன லாபம்...
இதைப் வெட்டியாகப் பார்க்கும் நேரத்தில் ஆக்..ஆக்..ஆக்.. என்று பெண் குலத் திலகம் சிரித்து மகிழ ஆபாச நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பார்த்தாலும் ஜென்மம் சாபல்யம் அடையும்....
ஹாஹாஹா, துரை, பள்ளி நாட்களில் எல்லாம் எங்களுக்கும் தெரியாது. என்னோட கணவர் ராணுவக் கணக்குத் துறையில் வேலை பார்த்து நாங்களும் ராணுவக் குடியிருப்புக்களில் குடி இருந்து வந்த பழக்கத்தினால் இம்மாதிரி விஷயங்கள் எல்லாம் பரிச்சயம் ஆனது. ராணுவத்திலும் ஒவ்வொரு ரெஜிமென்டின் கொடியும் ஒவ்வொரு நாள் காலையும் தேசியக்கொடியுடன் மரியாதையாக ஏற்றப்பட்டு மாலை அதை விட மரியாதையுடன் கீழே இறக்கப்படும். வாகா பார்டரில் பார்த்திருப்பீங்களே! இது குடியரசு தினக் கொண்டாட்டம் என்பதால் இன்னும் அமோகமாக இருக்கும். குடியரசுத் தலைவர் ஏற்றி வைத்த கொடியை ஆட்டம், பாட்டம்,கொண்டாட்டங்கள் போன்றவற்றோடு சகல மரியாதைகளுடனும் இறக்குவார். கொடியைக் கீழே எல்லாம் தள்ளாமல் வீரர்கள் தங்கள் கைகளில் பிடித்தவண்ணமே மடித்து மரியாதையுடன் எடுத்துச் செல்வார்கள்.
Delete//இதைப் வெட்டியாகப் பார்க்கும் நேரத்தில் ஆக்..ஆக்..ஆக்.. என்று பெண் குலத் திலகம் சிரித்து மகிழ ஆபாச நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பார்த்தாலும் ஜென்மம் சாபல்யம் அடையும்....// இதெல்லாம் எப்போவுமே பார்த்ததில்லை. பொதிகையில் வரும் க்விஸ் நிகழ்ச்சிகள் எப்போதேனும் வாய்ப்புக் கிடைத்தால் பார்ப்பது உண்டு. மக்கள் தொலைக்காட்சியிலும் நன்றாக இருக்கும். அதெல்லாம் டிவி ரிமோட் என் கையில் அகஸ்மாத்தாகக் கிடைக்கும்போது. இல்லைனா ஏதேனும் நியூஸ் சானல் செய்தி ஒளிபரப்பும், வாத, விவாதங்களும் தான்! :)))) விடுமுறை தினச் சிறப்பு நிகழ்ச்சிகள் எனில் அன்னிக்குத் தொலைக்காட்சிப் பெட்டிக்கு ஓய்வு கொடுத்துடுவோம்.
Delete