எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 16, 2019

பொங்கலோ பொங்கல் 3 அண்ணன்மாரே, தம்பிமாரே எல்லோரும் கணுச் சீர் சீ(ற)ர வாங்க! :)

எல்லார் வீட்டிலும் அவரவர் வழக்கப்படி பொங்கல் கொண்டாடி இருப்பீங்க.  இந்தப் பொங்கல் திருநாளில் இருந்து அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சியும் பொங்க வேண்டும் என வேண்டிக் கொண்டு அடுத்த பதிவை ஆரம்பிக்கலாமா? பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் எனச் சொல்லப்படும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விழா.  பாகவதத்தில் ஸ்ரீகிருஷ்ணன் ஆடு, மாடுகளை மேய்த்தான் என்பது தெரியும். அதனாலும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்துகிறோம்.  மேலும் இந்திரனுக்கும், வருணனுக்கும் உரிய திருநாளாக போகியைக் கொண்டாடுகிறோம்.  மழைக்கு தெய்வம் இந்திரன்.  ஆகவே நல்ல மழை வேண்டி இந்திரனையும்,  நீர் வளம் வேண்டி வருணனையும் வழிபடுகிறோம்.  அடுத்து பயிர்களின் விளைச்சலுக்கு வெப்பமும் வேண்டும் என்பதால் சூரியனை வழிபடுகிறோம்.  காச்யபர் என்னும் ரிஷியின் மகன் ஆன சூரியன் அவருடைய இன்னொரு மனைவியின் மகன் ஆன அருணன் உதவியோடு தன் பயணத்தைத் தினம் தொடங்குகிறான். இந்த சூரியன் தினம் தினம் தோன்றுவதும் மறைவதும் போல் தெரிகிறதே தவிர அது உண்மையில் தோன்றவும் இல்லை.  மறையவும் இல்லை. சூர்ய சதகம் என்னும் ஸ்லோகத்தில் 18 மற்றும் 97 ஆவது ஸ்லோகத்தில் இது குறித்துக் கூறி இருப்பதாய் அறிகிறோம்.  ஸ்லோகம் எடுக்க கூகிளாரின் உதவியை நாடினால் மற்ற மொழிகளில் வருகிறது.  தமிழில் வரலை. :( ஆனால் சூரியன் உதயமோ அஸ்தமனமோ இல்லாதவன் என்றும் அவன் ஒளி பரவினால் அந்த இடத்தில் அப்போது பகல் எனவும் ஒளி பரவாத திசை இரவு எனவும் கூறுவதாய் அறிகிறோம்.  ஒரு கண்டத்தில் சூரியன் ஒளி வீசிப் பிரகாசிக்கும்போது இன்னொரு கண்டத்தில் நிலவு பிரகாசிக்கிறது என்பதையும் அந்தக் காலத்திலேயே அந்த ஸ்லோகத்தில் கூறியுள்ளனர். அறிவியல் ரீதியாக இது நிரூபிக்கப் படும் முன்னரே நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது.

நந்தி தேவருக்கு ஈசன் கொடுத்த சாபத்தினாலேயே மாட்டுப் பொங்கல் ஏற்பட்டதாய்க் கூறினாலும் விவசாயத்துக்குப் பெரும்  உதவி செய்யும் கால்நடைகளை வழிபடுவதே மாட்டுப் பொங்கல் ஆகும்.  முன்பெல்லாம் மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணமெல்லாம் தீட்டுவார்கள்.  இப்போதெல்லாம் அதைப் பார்க்க முடிவதில்லை. பொதுவாகவே மக்கள் மனதில் பண்டிகையின் உற்சாகம் குறைந்தே வருகிறது.  என்றாலும் இளைய தலைமுறை எப்படி அறிந்து கொள்வார்கள் என்பதினாலேயே இதை எல்லாம் எழுதியானும் வைக்கலாம் என்பது முக்கிய எண்ணம்.  மாடுகளைக் காலை வேளையில் மேய்ச்சலுக்கு இட்டுச் செல்வார்கள்,  மாலையானதும் அவை வீடு திரும்பும் நேரம் விளக்கு வைக்கும் நேரமாய் இருக்கும்.  அப்போது எழும்பும் தூசியை கோ தூளிகா மண்டலம் எனப்படும்.  இது உடலில் படுவதால் நன்மை பயக்கும் என்று நம் முன்னோர்களின் நம்பிக்கை.  கிராமத்துத் திண்ணைகளில் குழந்தைகளோடு இந்தக் காற்றுப் படுவதற்காக மக்கள் அமர்ந்து காத்திருப்பார்களாம்.  இதைப் போலவே மாட்டுப் பொங்கல் அன்றும் கோதூளிகா மண்டலம் ஏற்படும் வண்ணம் தெப்பம் அமைப்பார்கள் என்று அறிகிறோம்.

பசுஞ்சாணத்தினால் தோட்டம் அல்லது மாட்டுத் தொழுவத்தில் தரைப்பகுதியில் தண்ணீர் கசியா வண்ணம் பூமியுடன் ஒட்டிய வண்னம் தெப்பம் அமைப்பார்களாம்.  தெப்பச் சுவர் அரைசாணாவது இருக்க வேண்டும்.  என்றால் சாணம் எவ்வளவு எனக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.  இந்தத் தெப்பத்தில் நவதானியங்கள், மஞ்சள், பூக்கள், இவற்றைப் போட்டு நீர் நிரப்புவார்கள். தெப்பத்தின் நான்கு பக்கமும் திருநீறு, குங்குமம் அல்லது சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்க வேண்டும்.  பின்னர் பொங்கல் செய்து படைத்து வழிபட்டு, மாடுகளுக்கும் குளிப்பாட்டி அலங்கரித்து, அவற்றுக்கும் தூபம், தீபம் காட்டி அவற்றோடு இந்தத் தெப்பத்தை மும்முறை வலம் வருவார்கள்.  அப்போது கிளம்பும் கோ தூளிகாவின் மகிமையை மிகவும் சிறப்பாகச் சொல்கின்றனர்.  பின்னர் முடியும் நேரம் கால்நடைகளின் கால்களை தெப்பத்தின் மீது வைத்து தெப்பநீர் மதில் தாண்டி வெளிப்படச் செய்வார்கள். இது மிகவும் சிலாக்கியமான ஒரு வழக்கமாக அந்நாட்களில் இருந்து வந்ததாய்த் தெரிய வருகிறது.

பொங்கல் முடிந்த மறுநாள் கணுப்பண்டிகையாகவும் கொண்டாடுவார்கள்.  முதல்நாள் பொங்கல் பானையில் கட்டிய மஞ்சளோடு சேர்த்து மிச்சம் பசும் மஞ்சளையும் அம்மியில் அரைத்துச் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் கொடுப்பார்கள். அந்த மஞ்சள் கொத்தில் இருந்து ஒரு துண்டு மஞ்சளை எடுத்து வீட்டிலுள்ள பெரியவர்களிடம் கொடுத்து நெற்றியில் மஞ்சளைக் கீறிவிடச் சொல்வார்கள்.  மஞ்சள் கீறுகையில் சொல்லும் ஆசீர்வாத வாழ்த்துப் பாடல் கீழ்க்கண்டவாறு.  இதில் வரும் சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டு, பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்து என்பதின் அர்த்தம்  விபரமாகப் பகிர்கிறேன்.  அந்தக் காலங்களில் பெண்களை ஐந்திலிருந்து ஏழு வயதுக்குள்ளாகத் திருமணம் செய்து வைப்பார்கள்.  அதில் வயதில் குறைந்த மாப்பிள்ளைகளும் அமையலாம்.  வயது முதிர்ந்த மாப்பிள்ளைகளுக்கும் கொடுப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.  அப்படியான பெண்கள் பால்யத்திலேயே விதவையாகவும் ஆகி இருக்கிறார்கள்.  ஆகவே அது எல்லாம் நடக்கக் கூடாது என்பதாலேயே சிறு வயதுப் பிள்ளையாக உனக்கு ஈடாக இருக்கக் கூடியவனைத் திருமணம் செய்து கொண்டு அவன் வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனிடம் குடும்பம் நடத்திக் குழந்தைகள் பெற்றுச் சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்தும் பாடலே இது.

தாயோடும் தந்தையோடும் சீரோடும் சிறப்போடும்
பேரோடும் புகழோடும் பெருமையோடும் கீர்த்தியோடும்
சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டு
பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துக்
கொண்டவன் மனம் மகிழத் தையல் நாயகி போலத்
தொங்கத் தொங்கத் தாலி கட்டித் தொட்டிலும் பிள்ளையுமாக
மாமியார் மாமனார் மெச்ச நாத்தியும் மதனியும் போற்றப்
பிறந்தகத்தோர் பெருமை விளங்கப் பெற்ற பிள்ளைகள் ஆயுள் ஓங்க
உற்றார் உறவினரோடு புத்தாடை புதுமலர் சூடி
புது மாப்பிள்ளை மருமகளோடு புதுப் புது சந்தோஷம் பெருகி
ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி என்றென்றும் வாழணும்
எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கணும்!

கனுப்பிடி வைக்க மஞ்சள் கீறிக்கொள்ளப் போகையில் கூறும் இந்த  வாழ்த்துச் சொல்லைப் பற்றி ஒரு சிலருக்குச் சரியான புரிதல் இல்லை எனத் தெரிய வந்தது. அதற்காகவே இந்தப் பதிவு. சின்ன வயசில் கனுவுக்கு மஞ்சள் கீறிக்கொள்ளப் போகையிலே என் பாட்டி, பெரியம்மாக்கள் எல்லாம், மஞ்சளைக் கீறிக்கொண்டே,

சின்ன ஆம்படையானுக்கு வாக்கப் பட்டுப்
பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துச்
சீரோடும், சிறப்போடும், காக்காய்க் கூட்டம் போல்
ஒற்றுமையாச் சேர்ந்து வாழணும்னு "

சொல்லித் தான் மஞ்சளைக் கீறி விடுவாங்க. சின்ன வயசில் அர்த்தம் புரியாமல் இருக்கையில் இதைக் கேட்டுச் சிரித்த நாங்கள் அர்த்தம் புரிய ஆரம்பிக்கையில் குழப்பமும், கோபமுமே வந்தது. ஒரு சமயம் என் அப்பாவின் சித்தி அடிக்கடி எங்க வீட்டில் வந்து தங்குவார். ஒரு கனுவின்போது அவர் மஞ்சள் கீறியபோது இப்படிச் சொல்லவே, நான் துடுக்குத் தனமாய், " ஏன் சித்தி, சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டுப் பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துனு சொல்றயே? இப்படிச் சொல்லாதே. ரொம்பக் கஷ்டமாவும் வெட்கமாவும் இருக்கு. என் சிநேகிதிகள் எல்லாரும் கேலி செய்யறாங்க." என்று சொன்னேன்.

அதற்கு அவர்கள் கொடுத்த விளக்கம்:"போடி அசடு! அந்தக் காலங்களில் பெண்ணிற்கு ஏதேனும் ஆபத்து வந்துடும்; நம்ம பழக்கத்தை விட்டுட்டு மாறிடுவானு சில வீடுகளில் படிக்க வைக்க யோசிப்பாங்க; சில வீடுகளில் அதனால் அவசரம் அவ்சரமாக் கிடைச்ச மாப்பிள்ளைக்குக் கல்யாணம் செய்துடுவாங்க. பெண்ணிற்கு ஐந்து, ஆறு வயசுக்கெல்லாம் கல்யாணம் ஆகும். பிள்ளைக்கு 20, 22 கூட இருக்கும். வெகு சிலருக்கே அவங்க வயசுக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைப்பான். அப்போதெல்லாம் பெண்களை வயசு வித்தியாசம் பார்க்காமல் குலம்,கோத்திரம் மட்டும் பார்த்து இரண்டாவது, மூன்றாவதுனு கொடுப்பதும் உண்டு. அதிர்ஷ்டம் இருந்தால் அந்தப் பெண்களின் வாழ்க்கை நன்றாக அமையும்; இல்லை எனில் பால்யவிதவையாகி விடுவாள். அதனால் தான் அவள் வயசுக்கேற்ற கணவனாகச் சிறு பிள்ளையாகக் கிடைக்க வேண்டும், என்றும் அவனோடு நன்றாக வாழவேண்டும் என்பதற்கு வாழ்த்துவதே,
"சின்னாம்படையானுக்கு வாழ்க்கைப் பட்டு" என்ற சொற்றொடர் என்றும், அவ்வளவு சின்ன வயசில் கல்யாணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது தகுந்த பிராயம் வரவேண்டும் இருவருக்குமே என்பதால், அந்தப் பையனுக்கும் தக்க பருவம் இருக்க வேண்டும் என்றே அவனைப் பெரியாம்படையான் என்று சொல்வது. அவன் வளர்ந்து உரிய பருவம் வந்ததும் இருவருக்கும் குழந்தை பிறக்கும் தகுதி கிடைக்கும் அல்லவா? அதன் காரணமாகவே சின்ன வயசிலேயே கல்யாணம் செய்து கொண்டாலும் தக்க பருவத்தில் உரிய நேரத்தில் குழந்தை பிறக்கவேண்டியுமே, "பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்து" என்று வாழ்த்துவது இது என எடுத்துச் சொன்னார்கள்.

தற்காலங்களுக்குப் பொருந்தாது என்றாலும் பெரியவர்கள் சொன்னதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்து என்பது இல்லை எனப் புரிந்து கொண்டேன். நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.



அண்ணன்மார்களே, தம்பிமார்களே,  எல்லோருக்காகவும் காக்காய்ப்பிடி, கனுப்பிடி வைச்சாச்சு.  வஸ்த்ரகலா கொடுப்பவங்க வஸ்த்ரகலாவும், பரம்பரா கொடுக்கப் போறவங்க பரம்பராவும், சாமுத்ரிகா கொடுக்கப் போறவங்க சாமுத்ரிகாவும், இல்லை, பிரைடல் செவன் தான் கொடுப்பேன்னு பிடிவாதம் பிடிக்கிறவங்க அதுவும், ரெயின்போ கலர்ஸ்னு சொன்னால் அதுவும் எதுவானாலும் ஓகேப்பா.  நேத்திக்கு நிறையப் பேர் வந்து பொங்கல் சாப்பிட்டிருப்பதும் தெரிஞ்சது.  இப்படி எல்லாம் மொக்கைப் பதிவு போட்டால் தான் மக்கள் வருவாங்க போல!  :P

    


    

தங்கம், வெள்ளி, பிளாட்டினம் எதுவானாலும் ஓகே தான்! :)))))) எடைக்கு எடைன்னா டபுள் ஓகே! :)))))))

48 comments:

  1. சூரியன் பற்றிய உண்மைத்தகவல் சொன்னதில் நாம் முன்னோடி என்பதில் ஒரு பெருமைதான்!

    ReplyDelete
    Replies
    1. பெருமை தான்...

      ஆனாலும் இப்படியான செய்திகளை பள்ளிகளில் சொல்லிக் கொடுக்க வேண்டாமா...

      அப்படியே சொல்லிக் கொடுக்க முயன்றாலும் அதை எதிர்ப்பதற்கும் தடை வாங்குவதற்கும் நம் நாட்டில் வசதி வாய்ப்புகள் ஆயிரம்...

      ஆண்டாள் அருளிய ஆழி மழைக் கண்ணா.. எனும் திருப்பாடலை ஒத்துக் கொண்டார்களா...

      வியாழம் உறங்கி வெள்ளி எழுந்தது என்பதை கிழமைகள் என்கிறார்களே...

      Delete
    2. பெருமை தான் ஸ்ரீராம், ஆனால் துரை சொல்லுவது போல் திட்டமிட்டு அதை ஒன்றுமில்லாமல் செய்யப் பார்க்கின்றனர். :( மக்களுக்கு விழிப்புணர்வு வரணும். பிரார்த்திக்கலாம். :( வேறே என்ன செய்யமுடியும்!

      Delete
  2. கோதூளிகா மண்டலம் தகவல் புதுசு. கேள்விப்பட்டதில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், இது பத்தி அடிக்கடி சொல்லுவாங்க எங்க வீட்டில்! முன்னெல்லாம் வரலக்ஷ்மி விரதம் இம்மாதிரி மாடு மேய்ச்சல் முடிந்து திரும்பும் கோதூளிகா நேரத்திலேயே செய்வார்களாம். ஆகவே இந்த வார்த்தை கேட்டு இருக்கேன். விபரங்கள் பின்னர் தான் தெரிந்து கொண்டேன்.

      Delete
    2. கோதூளிகா மண்டலம்...

      15 முதல் 25 வயது வரையில் பசுக்களோடும் தொழுவத்தோடும் தான் வாழ்க்கை...

      எனவே கோதூளிகா மண்டலம் சித்தி ஆயிற்று...

      மாட்டுப் பொங்கல் அன்று பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் கற்பூர ஆரத்தி செய்த பின்

      எங்கள் தந்தையார் சாஷ்டாங்கமாக வணங்கி எழுவார்...

      அவரைப் பின்பற்றி பிள்ளைகள் நாங்களும் விழுந்து வணங்குவோம்...

      இன்றைக்கும் நான் அவர் நினைவில் தான்...

      கண்ணும் நெஞ்சும் கலங்குகின்றன..

      Delete
    3. வாங்க துரை. மீள் வரவுக்கு நன்றி. நீங்க எழுதியதைப் படிக்கையில் என் புக்ககத்து மாட்டுப்பொங்கல் நினைவில் வந்தது. அங்கேயும் மாட்டுக்கொட்டிலில் பசுக்கள் இரண்டு, எருமை இரண்டு, வண்டிமாடுகள் இரு ஜோடிகள், உழவு மாடுகள் என அத்தனையும் இருந்தன. காலப்போக்கில் உழவு மாடுகள் விற்கும்படி ஆகி விட்டது. வாடகைக்கு மாடுகளை வாங்கி உழவு வேலை நடக்கும்!இப்படி ஒவ்வொன்றாகக் குறைந்து போனது! :(

      Delete
  3. பாடலின் அர்த்தம் புரிந்துகொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. பாடல் அர்த்தம் அநேகமாகப் பத்து வருஷங்களாகத் தொடர்ந்து போடறேன் என நினைக்கிறேன். :) இஃகி, இஃகி

      Delete
  4. அக்காவுக்கு ஆயிரம் பொற்காசுகள் மானசீகமாக அனுப்பி உள்ளேன். ஆசீர்வாதங்களை அனுப்புங்கள்!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் திருவிளையாடல் படக் காலத்திலிருந்து வெளில வரலையா?

      Delete
    2. ஸ்ரீராம் கொடுத்த பொற்காசுகளை என்னோட ஸ்விஸ் அக்கவுன்டில் பணமாக மாத்திப் போட்டு வைத்துவிட்டேன். :)))))

      Delete
  5. இன்று எங்கள் வீட்டுக்கு என் மூத்த சகோதரியும், இளைய சகோதரியும் வருவார்கள். நாங்கள் சீர் செய்வோம்.

    ReplyDelete
    Replies
    1. @ஸ்ரீராம், செய்ங்க, செய்ங்க, செய்துட்டே இருங்க! :)))) நானும் இன்று அம்பத்தூர் நினைவுகளில் இருந்தேன். அங்கே இருந்தவரை என் பிறந்த வீட்டில் இருந்து மன்னி சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பார். நான் சமைத்ததே இல்லை. அங்கே போய்ச் சாப்பிடத் தான் அழைப்பார்கள். ஆனால் ஒவ்வொரு வருஷமும் போக வெட்கமாக இருக்கும். அம்மா இருக்கும்போது போக முடிந்ததில்லை! :( என்றாலும் விடாமல் என் மன்னியும் சாப்பாடு செய்து கொடுத்துடுவார்.

      Delete
  6. அன்பின் சகோதரிகள் அனைவரும்
    அனைத்து நலன்களையும் பெற்று
    பல்லாண்டு பல்லாண்டு வாழ்தற்கு
    பிரார்த்திக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை, கணுப்பிடி வைக்கையில் இணைய நண்பர்கள் அனைவரையும் என் சகோதரர்களோடு சேர்த்து நினைத்துக் கொண்டேன். விரைவில் உங்கள் பிரச்னை சரியாகும். வாழ்த்துகள்.

      Delete
    2. மிக்க நன்றி.. மிக்க நன்றி..

      Delete
  7. நல் வாழ்த்துகள் கீதா சாம்பசிவம் மேடம். உங்களை 'அக்கா' என்று கூப்பிடுபவர்கள் எவ்வளவு சீர் செஞ்சாங்க என்பதற்கு ஒரு பதிவு போடுங்க.

    பொங்கல் பண்ணும்போது மட்டும் சிறிய பாத்திரத்தில் பண்ணிவிட்டு, சீர் என்பதற்கு மட்டும் ஏகப்பட்ட ஐட்டங்களை இடுகையில் போட்டிருக்கீங்களே.. இது நியாயமா?

    ReplyDelete
    Replies
    1. என்னை "அக்கா" என்று கூப்பிடும் என் சொந்தத் தம்பி பாங்க் அக்கவுன்ட் மூலம் பணத்தை அனுப்பிட்டார். :))))) இஃகி, இஃகி!

      சர்க்கரைப் பொங்கலுக்கு நான் அரிசியும், பருப்புமாகச் சேர்த்து 100 கிராம் தான் போட்டேன். அதுவே இன்று வரை வந்தது! அதிகம் வைத்தால் யார் சாப்பிடுவது? நேற்றுத் தர்ப்பணம் என்பதால் கொடுக்கவும் முடியாத சூழ்நிலை! :( அதோடு எல்லோரும் பொங்கல் செய்வதால் வாங்கிச் செல்ல ஆளும் இல்லை.

      Delete
    2. கீதாக்கா இப்ப தெரியுது....நெல்லை உங்களை ஏன் மேடம்னு கூப்பிடறார்னு...ஹா ஹா ஹா ஹா

      மட்டுமில்ல என்னை அக்கா அக்கானு (சும்மா ஒரு நிமிஷம் பிந்திப் பொறந்துட்டாராம்!!!!) வம்புக்கிழுப்பவரிடமிருந்து சீர் வரவே இல்லையாக்கும் ஹா ஹா ஹா ஹா ஹா....

      (சூட்டோடு சூடா இழுக்க முடியலைனாலும் ஆறிப் போயாவது...ஹப்பா நெல்லைய வம்புக்கிழுத்தாச்சு...)

      கீதா

      Delete
  8. விளக்கம் நன்று வாழ்த்துகள்.
    சேலைக்கடை விளம்பரத்தில் நல்ல லாபம் கிடைக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா கில்லர்ஜி! நல்லாத் தப்பிக்கப் பார்க்கறீங்களே! :)

      Delete
  9. //தற்காலங்களுக்குப் பொருந்தாது என்றாலும்// - என் நண்பன் அவர்களின் வீட்டுக்கு 89ல் கூட்டிச் சென்றிருந்தான். அவனுடைய அண்ணனுக்கு பால்ய பெண்ணைத் திருமணம் செய்துவித்து புகுந்த வீட்டிலேயே அந்தப் பெண் இருந்தாள். அவர்கள் தீட்சிதர்கள். பிறகு ஒருநாள் அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது, அந்தப் பெண் பெரியவளானாள் என்றும் சொன்னான். அவர்கள் தினமும் அக்னி வழிபாடு செய்பவர்கள்.

    வெகு சிலர் சாஸ்திர சம்ப்ரதாயம் என்று தற்போதும் கடைபிடிக்கிறார்கள் என்பதற்காகச் சொன்னேன்.

    ReplyDelete
    Replies
    1. தீட்சிதர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்குப்போய் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் என்பதால் அவர்களுக்கு பால்ய விவாக தடைச்சட்டம் பொருந்தாது என்று விலக்கு வாங்கி இருக்கிறார்கள்.

      Delete
    2. நெ.த. தீக்ஷிதர்கள் என நீங்க யாரைச் சொல்றீங்கனு தெரியலை! ஏனெனில் வேதம் படித்த வைதிகர்களில் சிலரின் தகுதிக்காக தீக்ஷிதர்கள் எனப்படுவார்கள் என்று கேள்வி. சரியா தப்பானு தெரியலை. ஆனால் சிதம்பரம் தீக்ஷிதர்களைச் சொல்கிறீர்கள் எனில் அவங்க இப்போவும்/அப்போவும்/எப்போவும் பால்ய வயதிலேயே திருமணம் செய்து விடுவார்கள். பெண் பிறந்த வீட்டில் தான் இருப்பாள். வயதுக்கு வரும்வரை புகுந்த வீட்டுக்குப் போவதும் வருவதுமாக இருப்பாள். இரவு தங்க மாட்டாள். வயதுக்கு வந்ததும் அதைப் பெரிய வைபவமாகக் கொண்டாடிப் பின்னர் புகுந்த வீட்டில் கொண்டு விடுவார்கள்.அதன் பின்னரே சாந்தி முகூர்த்தம் எல்லாம்.

      Delete
    3. //வெகு சிலர் சாஸ்திர சம்ப்ரதாயம் என்று தற்போதும் கடைபிடிக்கிறார்கள் என்பதற்காகச் சொன்னேன்.//
      எங்க குடும்பத்திலேயே உதாரணங்கள் உண்டு. என் மாமனார் ஊரான கருவிலிக்கு அருகிலுள்ள விஷ்ணுபுரம் என்னும் ஊரில் சிறு வயதிலேயே திருமணம் செய்விப்பது ஊர் வழக்கம் என்பார்கள். எங்க மாமியாரின் சொந்தக்காரப் பையர் ஒருத்தருக்கு அவர் மாமன் மகளோடு பனிரண்டு வயதிலே திருமணம். அந்தப் பெண்ணிற்கு அப்போது எட்டு, ஒன்பது வயது இருக்கும். அவங்க இரண்டு பேரும் பின்னர் குடித்தனம் நடத்தும்போது அந்தப் பெண்ணிற்குப் பதினைந்து வயதுக்குள் தான் இருக்கும்.. இதைத் தவிர்த்து எங்க தாயாதி ஒருத்தர் "ஏகநாத ஐயர்" என்பவர் காஞ்சியில் இருந்தார். அவர் தன் மகன் வயிற்றுப் பேத்திக்கு ஒன்பது வயதில் மஹாபெரியவரின் மேற்பார்வையில் திருமணம் நடத்தினார். அந்தப் பெண்ணிற்கு இப்போது தான் 45 வயதுக்குள் ஆகிறது. ஆனால் கொள்ளுப் பேத்தி எடுத்து விட்டாள். அவள் கணவர் கும்பகோணம் சோலைஅப்பன் தெருவில் வேத பாடசாலை வைத்திருக்கார்.

      Delete
    4. தீக்ஷிதர்கள் கோர்ட்டுக்குச் சென்று அவர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வாங்கிய விஷயம் குறித்து எங்க கட்டளை தீக்ஷிதர் மூலம் நாங்களும் அறிந்திருக்கிறொம். அதைக் குறித்து ஏற்கெனவே சொன்ன நினைவும் இருக்கு. ஆனால் இங்கே நெ.த. தீக்ஷிதர்கள் என யாரைக் குறிப்பிடுகிறார் என்பது புரியலை.

      Delete
    5. தில்லை தீக்‌ஷிதர்கள் ஒரு பக்கம். சோம யாகம் செய்து அக்னிஹோத்திரம் செபவர்கள் நயம் ஒரிஜினல் தீக்‌ஷிதர்கள். இதெல்லாம் இல்லாமல் ஸாமவேதிகளையும் ச்ரௌதிகள் என்று சொல்வதுண்டு. நெ.த தினமும் அக்னி வழிபாடு என்று சொல்வதால் சோமயாஜிகளாக இருக்கலாம். ஆனால் சிதம்பர தீக்‌ஷிதர்களிலும் ஔபாசனம் வைத்துக்கொண்டு இருப்பவர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கே தெர்ரியும்.

      Delete
    6. ஆமாம் வாசுதேவன் திருமூர்த்தி சார். இந்த விஷயம் எனக்குத் தெரியும். இவர்களும் சிதம்பரத்தைச் சேர்ந்த தீட்சிதர்களோ (அல்லது கோவில் பாத்தியதை இல்லாத தீட்சிதர்களோ) என்பது நினைவிலில்லை. ஆனால், அந்தப் பையன் எனது குவாலிட்டி அறிந்துதான் அவன் வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப்போனானன் (அப்போ அந்த வயசுல, என்னைக் கூட்டிக்கிட்டுப் போனா, அவங்க அப்பா, நம்ம பையன் இப்படிப்பட்ட பையன்களோடுதான் பழகறானா என்று சந்தோஷமடைவார்கள் என்று நினைத்து நிறையபேர் என்னை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்... ஹா ஹா)

      Delete
  10. //சூர்ய சதகம் என்னும் ஸ்லோகத்தில் 18 மற்றும் 97 ஆவது ஸ்லோகத்தில் இது குறித்துக் கூறி இருப்பதாய் அறிகிறோம். ஸ்லோகம் எடுக்க கூகிளாரின் உதவியை நாடினால் மற்ற மொழிகளில் வருகிறது. தமிழில் வரலை.//
    http://stotram.co.in/surya-shatakam-by-mayura-kavi/

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி பாபு அவர்களே! முன்னே வந்திருக்கீங்களா?

      Delete
    2. நீங்க கொடுத்திருக்கும் சுட்டி பயனுள்ளது. மிக்க நன்றி.

      Delete
  11. போகிக்கு வருணன் வழிபாடு எங்கே விதிச்சிருக்குன்னு சொன்னா தேவலை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க தம்பி, கேள்வி கேட்கனே வந்திருக்கீங்க போல! பழைஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇய பதிவின் மீள் பதிவு. அம்பத்தூரில் இருந்த கணினியில் இதற்கான குறிப்புகள் இருக்கும்./இருக்க வேண்டும். ஆகவே எனக்கு இப்போ நினைவில் இல்லைனு தான் சொல்லணும். எப்படியும் இதற்கான ஆதாரங்களைத் தேடிக் கண்டு பிடிக்கிறேன். அது வரைக்கும் மழைக்கு அதிபதி வருணன் என்பதால் சொல்லி இருக்கலாம் என்னும் என் கருத்தை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். முன்னெல்லாம் ரிஷிகள் முதலில் வருணனைத் தானே கும்பிட்டு எல்லாமும் ஆரம்பிப்பார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கேன்/படித்திருக்கிறேன். அது சரி இல்லையா?

      Delete
  12. நா அனுப்பின புடவை எல்லாத்தையும் நீங்க கட்டிக்காம வேற யார்கிட்டேயோ ஏன் கொடுத்தீங்க? படம் வேற போட்டு இருக்கீங்க?

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அநியாயமா இல்லையோ? :)))))))))

      Delete
  13. மழைக்கு அதிபதி இந்திரன்தான். வருணன் முக்கியமா ஜலத்துக்குத்தான் அதிபதி.

    ReplyDelete
    Replies
    1. ஓகே தம்பி, நீங்க சொன்னால் சரியாகத் தான் இருக்கும். பதிவில் மாத்தி விடுகிறேன். நன்னி ஹை!

      Delete
  14. இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.

    //இந்த சூரியன் தினம் தினம் தோன்றுவதும் மறைவதும் போல் தெரிகிறதே தவிர அது உண்மையில் தோன்றவும் இல்லை. மறையவும் இல்லை. //

    என்ன கீசாக்கா குழந்தைப்பிள்ளைகளுக்கு கதை சொல்வதுபோல சொல்றீங்க.. பூமி சுற்ருவதாலதான் இரவு பகல் உண்டாகிறது... சூரியன் நெருப்புப் பிளம்பாச்சே...

    ReplyDelete
    Replies
    1. வாங்க அமுதசுரபி அமுதா! பொதுவா சூரியன் உதிக்கிறான், மறைகிறான் என்று தானே சொல்லிட்டு இருக்கோம். அதனால் சொன்னேன். :)))))

      Delete
  15. மஞ்சள் பொங்கல் பானையில் கட்டும் முறை அறிஞ்சேன்.. நாங்கள் பொதுவாக மாவிலைதான் கட்டுவதாக நினைவெனக்கு.

    அந்த நகாசு சாறி எனக்குத்தான்.. யாரும் டோண்ட் டச்சூஊஊஊஊஊ:))

    ReplyDelete
    Replies
    1. அமுதசுரபி, பொங்கல் சாப்பிடும் மயக்கத்தில் பானையில் கட்டுவது மஞ்சள் கொத்துத் தான் என்பது கூடத் தெரியலை போல! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நகாசு சாரி (சாறி இல்லை, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) நீங்களே வைச்சுக்குங்க. எனக்கு அந்தக் கலர் அவ்வளவாப் பிடிக்கலை! ))))

      Delete
  16. பசுஞ்சாணத்தினால் தோட்டம் அல்லது மாட்டுத் தொழுவத்தில் தரைப்பகுதியில் தண்ணீர் கசியா வண்ணம் பூமியுடன் ஒட்டிய வண்னம் தெப்பம் அமைப்பார்களாம்.//

    மாயவரத்தில் புனுகீஸ்வரர் கோவிலில் மாட்டுப்பொங்கல் அன்று பார்த்து இருக்கிறேன்.
    மாலையில் பிள்ளைகள் மாட்டு வண்டிகளில் ஏறிக் கொண்டு மாட்டை விரட்டி செல்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நானும் கிராமங்களில் பார்த்திருக்கேன். இப்போல்லாம் நடப்பதாகத் தெரியலை பலருக்கும் பழக்கங்கள் விட்டுப் போய்விட்டன. எடுத்துச் சொல்லும் பெரியவர்களும் இப்போ இல்லை.

      Delete
  17. கோதூளிகாவுக்கு இப்போது மிகவும் பட்டிகாடக பார்த்துதான் போக வேண்டும்.
    இப்போது மாடு மேய்ப்போர்களை பார்ப்பது கஷ்டம், அதிலும் தார் ரோட்டில்?
    பொங்கல் அன்று புதுபுடவை தம்பி கொடுத்தான் ஆனால் அது அவன் பெண் கல்யாணத்திற்கு.
    எப்படியோ பொங்கல் சமயம் புதுபுடவை வந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. கோதூளிகானா என்னன்னே இப்போல்லாம் தெரியாது. எனக்குப் பிறந்த வீட்டில் இருந்து நவராத்திரி, தீபாவளிக்குப் புடைவை வரும். இப்போல்லாம் பணமாக அனுப்பறாங்க. பொங்கலுக்கு வீட்டில் இருக்கும் புடைவை ஒன்றையே கணு அன்று குளித்துவிட்டு வந்து கட்டிக்கொள்வேன். அம்மா வீட்டில் எல்லாம் பொங்கல் அன்றே கட்டிக்கொள்ளச் சொல்வார்கள். இங்கே மாமியார் வீட்டில் கணு அன்று.

      Delete
  18. இவை எல்லாமே எனக்குப் புதிய தகவல்கள். பொங்கல் அன்று பொங்கல் வைத்துக் கொண்டாடுவது மட்டுமே தெரியும். மாட்டுப் பொங்கல் தெரியும் தமிழ்நாட்டில் கிராமத்தில் இருந்ததால். மற்றபடி இப்படியான தகவல்கள் அனைத்தும் புதிது எனக்கு. நன்றி சகோதரி.

    துளசிதரன்

    ReplyDelete
  19. பசுஞ்சாணத்தினால் தோட்டம் அல்லது மாட்டுத் தொழுவத்தில் தரைப்பகுதியில் தண்ணீர் கசியா வண்ணம் பூமியுடன் ஒட்டிய வண்னம் தெப்பம் அமைப்பார்களாம்.//

    இதுவும் கோதூளிகா உட்பட அனைத்துமே இப்பத்தான் தெரியும்...சூரியனின் அப்பா...அருணன் உதவியுடன் சூரியனின் பயணம் எல்லாமே புதிய தகவல் அக்கா...

    கீதா

    ReplyDelete