எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, February 04, 2019

திருநெல்வேலிக்குச் சென்ற கதை!

ஏற்கெனவே பத்து வருடங்கள் முன்னர்  திருநெல்வேலிக்குப் போய்விட்டு வந்திருந்தாலும் அப்போதும் பல கோயில்கள் பார்க்க முடியலை. சரியாகத் திட்டமிடாதது மட்டும் காரணம் இல்லை. அதிகம் அலையவும் முடியலை! ஆகவே இம்முறை மீண்டும் சென்று இன்னும் சில கோயில்கள் பார்த்துவர எண்ணித் திட்டம் போட்டு ஆன்லைனிலேயே முன்பதிவும் செய்தாச்சு. இங்கே குடியிருப்பு வளாகத்தில் உள்ள திருநெல்வேலி நண்பர் குடும்பத்திடம் தேவையான தகவல்களையும் கேட்டுப் பெற்றோம். ஆனால் சென்ற முறை எந்தவிதமான முன்னேற்பாடும் இல்லாமல் சென்றபோது எளிதாக எல்லாம் பார்க்கவும் முடிந்தது, ஓட்டல்களில் இடமும் கிடைத்தது. அதுவும் ஜானகிராமன் ஓட்டலிலேயே இடம் கிடைத்தது. இம்முறை ஆன்லைனில் ஜானகிராமனில் அறை காலி இல்லை எனக் கைவிரிக்க தொலைபேசியிலும் கேட்டதற்கு 3,000 ரூபாய்க்கு உள்ள அறைதான் காலி என்றார்கள். அவ்வளவு எதுக்கு எனச் சும்மா இருந்துட்டோம். நேரில் போனால் யாரானும் காலி செய்வது கிடைக்கலாம் என்னும் எண்ணம்.

 காலை ஏழு மணி ஐந்து நிமிடங்களுக்குக் கிளம்பும் இன்டர்சிடி எக்ஸ்ப்ரஸ். முன்னர் திருநெல்வேலி வரை மட்டுமே போய்க் கொண்டிருந்ததை இப்போது திருவனந்தபுரம் வரை நீட்டித்திருக்கின்றனர். அதில் தான் போக வர முன்பதிவு செய்திருந்தோம். 24 ஆம் தேதி கிளம்பிப் போயிட்டு 28 ஆம் தேதி மதுரை மீனாக்ஷியைப் பார்த்துட்டுத் திரும்பணும்னு ரங்க்ஸோட திட்டம். பார்க்க விட்டுப் போனவற்றை எல்லாம் பார்க்கலாம்னு சொன்னார். ஆனால் எனக்கு என்னமோ அது சரியாப் படலை. ஆகவே 26 ஆம் தேதி காலை மதுரைக்கு வந்து அங்கே மீனாக்ஷியைப் பார்த்துவிட்டு அன்று மாலை ஐந்து மணிக்கு மதுரை வரும் இன்டர்சிடியில் திருச்சி திரும்பத் திட்டம் போட்டு அப்படியே  பயணச்சீட்டும் வாங்கிட்டோம். திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு மட்டும் பயணச் சீட்டு வாங்கலை. அங்கே காலை ஒரு ஃபாஸ்ட் பாசஞ்சர் இருப்பதால் அதில் போகலாம்னு சொன்னார். அதில் முன்பதிவு பார்த்தால் அந்த மாதிரி ஒரு ரயிலே இல்லைனு ஐஆர்சிடிசி சத்தியம் பண்ணிச் சொல்லி விட்டது. உனக்குப் பார்க்கத் தெரியலைனு அவரும், நீங்க தான் பாருங்கனு நானும் குருக்ஷேத்திரம் ஆரம்பிக்கையில் அவர் ஐபாட் மூலம் அந்த வண்டி தவிர்த்து இன்னொன்றும் காலை ஐந்துக்கே கிளம்புவதாகச் சொன்னார். சரிதான்னு மறுபடி போட்டுப் பார்த்தால் எல்லாமே இரண்டாம் வகுப்பு முன் பதிவு தேவையில்லாப் பெட்டிகள். முன் பதிவே செய்ய முடியாது. சரி, அதிலே ஏதேனும் ஒன்றில் கிளம்பி வந்துடலாம்னு தீர்மானித்தோம்/ இல்லை, தீர்மானித்தார்! :))))

ஒரு வழியாத் திருநெல்வேலி கிளம்பும் நாளும் வந்தது. முதல் நாள் காலையான  23 ஆம் தேதியே என் வயிறு கூக்குரலிட்டுத் தான் சரியாக இல்லை என்பதைத் தெரிவித்தது. என்ன வழக்கம் போல் தான்!  ஆகவே அன்று காலையே முன் அறிவிப்புச் செய்துட்டேன், இன்னிக்கு சமையல் உங்களுக்கு மட்டுமே என! நாளை ஊருக்குக் கிளம்பியாகணுமே என அவரும் சரியென ஒத்துக் கொண்டார். காலைக் கஞ்சியும் குடிக்கலை. ஹார்லிக்ஸ், காஃபி வகையறாக்களும் உள்ளே இறக்கலை. சுத்தபத்தமாக இருந்தேன். மத்தியானம் நாரத்தங்காய்த் துணையுடன் ஒரு கைப்பிடி தயிர் சாதம். மாலை கொஞ்சம் போல் தேநீர். இரவு உணவும் அதே தயிர் சாதம். ஆனால் மறுநாள் ஊருக்குக் கிளம்பும்போது கையில் கொண்டு போக வேண்டிய காலை ஆகாரமாக ஏற்கெனவே அரைத்து வைத்திருந்த மாவில் இருந்து இட்லிகள் தயார் செய்து கொண்டேன். எனக்கு மட்டும் ஒரே ஒரு ப.மி. போட்டுச் சட்னி. அவருக்கு மி.பொ. இந்த வண்டியில் வழியில் காஃபி, தேநீர், ஆகார வகைகள் எதுவுமே வராது. முன்னரே பயணித்திருக்கோம். காஃபியும் கையில் எடுத்துக் கொண்டு விட்டோம்.  ஆகவே காலை ஆகாரம் கையில் கொண்டு போனால் மத்தியானம் சாப்பிடத் திருநெல்வேலி போயிடலாம். இரவு சரியான தூக்கம் இல்லைனாலும் வயிறு கொஞ்சம் அமைதி காத்தது.

காலை வழக்கம் போல் மூன்றரைக்கே எழுந்து எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டோம்.கொண்டேன். ஏற்கெனவே முந்தைய நாளே ரெட் டாக்சியில் ஜங்க்ஷன் செல்லப் பதிவு செய்திருந்தோம். சரியான நேரத்துக்கு டாக்சி வந்தது. ஜங்க்‌ஷன் போய்ச் சேர்ந்ததும் தான் நாங்க போக வேண்டிய ரயில் ஆறாம் நடைமேடையிலிருந்து கிளம்புவது தெரிந்தது. என்னடா இது சோதனை? கீழே சுரங்க வழியாவா இறங்கிச் செல்வது? அதிகம் எடை கொண்ட பெட்டி இல்லைனாலும் என்னால் அதைத் தூக்கிக் கொண்டு  கீழே இறங்குவதோ, மேலே ஏறுவதோ இயலாத ஒன்று. ஆகவே விழித்துக்கொண்டு அங்கேயும் இங்கேயுமாகப் போய் வந்தோம். அப்போது பார்த்து பாட்டரி கார் முதல் நடைமேடைக்கே வந்து சேர்ந்தது. நல்லவேளையாப் போச்சுனு நினைச்சு அதில் ஏறிக்கொண்டோம். ஒருத்தருக்கு ரூ.30 கொடுக்கணும்.  நாலாம் நடைமேடையிலிருந்து கிளம்பும் பல்லவனுக்காகப் போக வேண்டிய சிலர் எங்களுடன் ஏறிக்கொண்டனர். அவர்களில் ஒருத்தர் தான் ஏறாமல் சாமான்களை மட்டும் வைக்க ஓட்டுநருக்குக் கோபம் வந்தது. 30 ரூபாய் மிச்சம் பிடிக்க சாமான்களை மட்டும் வைக்கக் கூடாது எனவும் அவரையும் ஏறிக்கொள்ளும்படியும் இல்லையென்றால் சாமான்களை இறக்கும்படியும் சொல்லியும் அவர் கேட்கவே இல்லை. விறுவிறு எனப் போய்விட்டார்.

ஓட்டுநர் ஒருவழியாக வண்டியைக் கிளப்பி நாலாம் நடைமேடையில் அந்தப் பெண்கள் இறங்க வேண்டிய பெட்டிக்கருகே கொண்டு விட்டார். சாமான்களை வைத்திருந்த மனிதரும் வந்து சாமானை எடுக்க அவரிடம் பணம் கொடுத்தே ஆகவேண்டும் எனக் கறாராகச் சொல்லிப் பணத்தைப் பெற்றுக் கொண்டார். பின்னர் எங்களை ஆறாம் நடைமேடையில் ஏசி பெட்டிக்கு அருகே இறக்கிவிட்டார். நாங்களும் உள்ளே போய் எங்கள் இடத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்தோம். ரயிலும் சரியான நேரத்தில் கிளம்பி விட்டது. டிடி ஈ வந்து பயணச்சீட்டைச் சரி பார்த்ததும் நாங்க சாப்பிட்டுவிட்டுக் கொஞ்சம் தூங்கி விட்டோம். எனக்கு முதல்நாள் பட்டினி, கண் விழிப்பு ஆகியவற்றால் கொஞ்சம் மயக்க நிலையிலேயே இருந்தது. தூங்கியதும் தான் சரியானது. தூங்கி விழிக்கையில் மதுரை நெருங்கி விட்டது. அவ்வளவு அசதி! அதன் பின்னர் கோவில்பட்டியில் வழக்கம் போல் கடலைமிட்டாய்ப் பாக்கெட் வாங்கிக் கொண்டோம். அவரே ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா பாக்கெட்டும் கொடுத்தார். அவற்றை வாங்கிக் கொண்டு உள்ளே வைத்துவிட்டோம். அங்கே போய்ப் பார்த்துக்கலாம்.

வண்டி சரியான நேரத்துக்குத் திருநெல்வேலி வந்து சேர்ந்தது. நாங்களும் இறங்கினோம். இறங்கிய இடம் பிரதான வாயில் அருகே இல்லை. முன்பதிவு பயணச்சீட்டு வாங்கும் கவுன்டர் அருகே இறங்க வேண்டி இருந்தது என்றாலும் அந்த வழியாகவும் வெளியே போகலாம். ஆட்டோக்கள் இருந்தன. ஆகவே கவலைப்படாமல் இறங்கி பெட்டியைத் தள்ளிக்கொண்டு வெளியே வந்தோம். சுமார் பத்து ஆட்டோக்கள் இருந்தன. ஆட்டோக்களைப் பார்த்தால் அவற்றில் ஏறி மாடியில் உட்காரணும்! அத்தனை உயரம் ஆட்டோவின் படிகள். எல்லாமே ஷேர் ஆட்டோக்கள் வேறே. என்றாலும் எங்களுக்குத் தனியாக வருவதற்குச் சம்மதித்தார்கள். ஆனால் என்னால் எந்த ஆட்டோவிலும் ஏறவே முடியலை. ஏறினால் கும்பகோணத்தில் ஓட்டல் கழிவறையில் நேர்ந்தமாதிரி மல்லாக்க அடிச்சு விழணும். நான் ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை. கடைசியில் சுற்றும் முற்றும் பார்த்ததில் ஒரே ஒரு பஜாஜ் ஆட்டோ நின்றிருந்தது. அதன் அருகே சென்று கேட்டதற்கு அந்த ஆட்டோ ஓட்டுநர் ஜானகிராமன் ஓட்டலுக்கு வரமாட்டேன் எனச் சொல்லிவிட்டார். பக்கத்தில் இருக்கும் எந்த ஓட்டலுக்கும் கூட்டிப் போக மாட்டாராம். அவராகப் பார்த்து எங்கே கூட்டிச் செல்கிறாரோ அங்கே தங்கணும்!

என்னடா இதுனு பார்த்தா வர ஆட்டோக்கள் எல்லாமே உயரமான படிகளைக் கொண்ட ஆட்டோக்கள். முதலில் ஒரு ஒன்றரை அடி உயரத்தில் உள்ள படியில் ஏறிப் பின்னர் அதற்கும் மேல் இன்னொரு படியில் ஏறிப் பின்னால் உள்ள சீட்டுக்கு உள்ள படியில் ஏறிக்காலை வைத்துக் கொண்டு உட்காரணும். கடவுளே! நொந்து போயிட்டோம். வேறே வழியில்லாமல் இருந்த அந்த ஒரே பஜாஜ் ஆட்டோவில் உட்கார்ந்து ஆரியாஸ் ஓட்டலுக்காவது விடுங்கனு சொன்னால் ஆட்டோக்காரர் பிடிவாதமாக மறுத்தார். அதுக்குள்ளே இன்னொரு ஆட்டோக்காரர் ஓடி வந்து ஒரு ஓட்டலின் பெயரைச் சொல்லி அங்கே கூட்டிப் போகச் சொல்ல ஆட்டோ எங்களைக் கேட்காமலேயே விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரெனக் கிளம்பி விட்டது. பணமும் பேசவில்லை. ஜானகிராமன் ஓட்டலுக்கு அறுபது ரூபாய் கேட்டிருந்தார். அதுவே கிட்டக்கத் தான் இருக்கு. சாமான்கள் இல்லைனா நடக்கும் தூரம் தான். அல்லது சாமான்களோடு நடக்க முடிந்தாலும் நடந்து போயிடலாம்.

கடைசியில் அவர் போனதும் ஜானகிராமன் ஓட்டலுக்கு அடுத்த தெரு தான். சிந்துபூந்துறை சாலை ரோடில் குறுக்கே சென்ற வடக்குத் தெரு என்னும் சந்தில் உள்ள ஓர் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். அதற்குள்ளாக மணி ஒன்றரையை நெருங்கிக் கொண்டிருந்ததால் வேறு வழியில்லாமல் அங்கே அந்த ஓட்டலிலேயே மாடி வேண்டாம்னு சொல்லிட்டு, (லிஃப்ட் இல்லை) கீழேயே அறை கேட்டோம். அறையைப் போய்ப் பார்த்துட்டு வந்தேன். பரவாயில்லை ரகம். வேறே ஓட்டலுக்கு அழைத்துப் போ என்றால் அந்த ஆட்டோ ஓட்டுநர் சண்டைக்கு வருவார் போல் இருந்தது. அதோடு அதிகப் பணமும் கேட்பார். எனவே வாக்குவாதம் வேண்டாம்னு அந்த ஓட்டலிலேயே அறையைப் பதிவு செய்து கொண்டோம். அறை சுத்தம் பரவாயில்லை என்றாலும் ரொம்பச் சின்னது.  கட்டிலை வேறே சுவற்றை ஒட்டிப் போட்டிருந்தார்கள். அந்தப்பக்கம் படுப்பவர்கள் ஏறி இறங்கக் கஷ்டம், ஏறவும் கஷ்டம். ஆனால் சாமானைத் தூக்கிக் கொண்டு எங்கே போவது? அறைக்குப் போனோம். ஆட்டோ ஓட்டுநரைப் பணம் கொடுத்து அனுப்பலாம்னு பார்த்தால் சுமார் அரை கிமீ கூட இல்லாத தூரத்துக்கு 90 ரூபாயில் இருந்து ஆரம்பித்துக் கடைசியில் 75 ரூ வாங்கிக் கொண்டு தான் விட்டார்.  அதைத் தவிர ஓட்டல்காரங்க கொடுக்கும் கமிஷன் ஒருத்தருக்கு 100 ரூ. எனச் சொன்னார்கள். ஆக மொத்தம் 200 ரூ.கமிஷன்.

அறைக்குப் போய்க் கை, கால் சுத்தம் செய்து கொண்டு எல்லோரும் ரொம்பச் சொல்லிக் கொண்டு இருந்த சந்திரவிலாஸ் ஓட்டலுக்குச் சாப்பிடப் போகலாம்னு ரிசப்ஷனில் விசாரித்ததற்குப் பக்கத்தில் தான் இருக்கு என்றாலும் 50 ரூ கொடுத்து ஆட்டோவில் போங்க. இருந்து கூட்டி வரதுன்னா 100 ரூ கேட்பாங்க என்று சொல்லவே அப்படியே ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு சந்திரவிலாஸ் சென்றோம். சாப்பாடு வேளை கிட்டத்தட்ட முடியும் சமயம். என்றாலும் பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்க தாமதமாய்ப் போனதில் பச்சரிசிச் சாதம் இல்லையாம். புழுங்கல் அரிசி தான்! சௌசௌ கறி, கத்திரிக்காய்க் கூட்டு, தக்காளி, காரட் கூட்டு(போர்டில் போட்டிருந்தது. கூட்டில் தக்காளியையும் காணலை, காரட்டையும் காணோம்) என்னமோ சாம்பார், ரசம், மோர், மோருக்குக் கொத்துமல்லி இஞ்சி அரைச்சு விட்டிருந்தாங்க. அதையும் சேர்த்து எல்லாமும் காரமோ காரம். புழுங்கலரிசிச் சாதம் முழுங்கவே முடியலை. நாங்களும் புழுங்கலரிசி வாங்கினாலும் சமைத்தால் மிருதுவாக இருக்கும். ஆனால் சாப்பாடு விலை 50 ரூ தான். ஜிஎஸ்டி எல்லாம் இல்லை. அதனாலோ என்னமோ தரமும் அப்படியே தான் இருந்தது. வேறே வழி இல்லையே சாப்பிட்டோம். அறைக்கு வந்து ஓய்வு எடுத்துக் கொண்டோம்.

மாலை செப்பறை போக வண்டியை புக் செய்யப் பேசினால் செப்பறைன்னா என்ன? எங்கே இருக்குனு கேட்கிறாங்க. ராஜவல்லிபுரம் அருகே என நான் சொன்னேன்.இருந்தாலும் ஓட்டுநருக்குப் புரியலை. எங்களையே சரியா விசாரிச்சு வைக்கும்படி சொல்லிவிட்டுத் தான் சிறிது நேரத்தில் வருவதாகச் சொன்னார். உடனே அவசரம் அவசரமாக முகநூலில் உள்ள திருநெல்வேலி நண்பர்களை விசாரித்தேன். அனைவருமே ராஜவல்லிபுரம் என்பதை உறுதி செய்தனர். அதற்குள்ளாகத் தேநீருக்குச் சொல்லிட்டுக் காத்திருந்தால் ஆளே வரலை. வண்டி வந்துவிட்டது. தேநீரைத் தியாகம் செய்துட்டுக் கிளம்பினோம்.  வரும் வழியில் கிருஷ்ணாபுரமும் பார்த்துக் கொண்டு வருவதாகத் திட்டம்.

81 comments:

 1. இப்படியா திட்டமே போடாமல் பயணம் செய்வீங்க? படிக்கவே கஷ்டமா இருக்கே

  பண்ணறதைப் பண்ணிட்டு ஊருக் குறை சொல்லலாமா?

  ReplyDelete
  Replies
  1. //ஆகவே இம்முறை மீண்டும் சென்று இன்னும் சில கோயில்கள் பார்த்துவர எண்ணித் திட்டம் போட்டு ஆன்லைனிலேயே முன்பதிவும் செய்தாச்சு. இங்கே குடியிருப்பு வளாகத்தில் உள்ள திருநெல்வேலி நண்பர் குடும்பத்திடம் தேவையான தகவல்களையும் கேட்டுப் பெற்றோம். ஆனால் சென்ற முறை எந்தவிதமான முன்னேற்பாடும் இல்லாமல் சென்றபோது எளிதாக எல்லாம் பார்க்கவும் முடிந்தது, ஓட்டல்களில் இடமும் கிடைத்தது. அதுவும் ஜானகிராமன் ஓட்டலிலேயே இடம் கிடைத்தது. இம்முறை ஆன்லைனில் ஜானகிராமனில் அறை காலி இல்லை எனக் கைவிரிக்க தொலைபேசியிலும் கேட்டதற்கு 3,000 ரூபாய்க்கு உள்ள அறைதான் காலி என்றார்கள். அவ்வளவு எதுக்கு எனச் சும்மா இருந்துட்டோம். நேரில் போனால் யாரானும் காலி செய்வது கிடைக்கலாம் என்னும் எண்ணம்.// என்னைப் பொறுத்தவரையில் இவை எல்லாம் திட்டம் போடுதலோடு சேர்த்தி. அறை தான் முன்பதிவு செய்யவில்லை. போய்ப் பார்த்துக்கலாம். இப்போ சீசன் இல்லை என்பதால்! அதே போல் வேறே ஓட்டல்களில் கிடைத்தும் இருக்கும். ஆட்டோக்காரர் அடாவடியால் போக முடியலை. இதுக்கு ஊரைத்தான் குற்றம் சொல்லணும். சொல்லியாகணும்.

   Delete
  2. இருந்தாலும் திருநெல்வேலியை குறை சொன்னால் பஹ்ரைனில் இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும்.

   Delete
  3. ஹாஹாஹா, கில்லர்ஜி! :))))

   Delete
  4. நெல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....அக்கா கரெக்ட்டா ப்ளான் பண்ணித்தானே டிக்கெட் எல்லாம் ரிசர்வ் செஞ்சுருக்காங்க தின்னவேலிலருந்து மதுரைக்கு ட்ரெயின் எல்லாம் பார்த்து வைச்சுத்தானெ கிளம்பிருக்காங்க....அப்புறம் என்ன இப்படி ஒரு கேள்வி ஹா ஹா ஹா ஹா..

   அப்புறம் அந்த ஆட்டோக்காரர் செஞ்சது தப்புதானே அவருக்குக் கமிஷன் கிடைக்கும்னு தான் சொல்ற ஓட்டலுக்குத்தான் கூட்டுப் போவேன் என்பது அடாவடிதானே. கஸ்டமர் சொல்லும் ஹோட்ட்டலுக்குத்தானே கூட்டிப் போகனும். மற்ற ஆட்டோவில் அக்காவுக்கு ஏறவும் முடியாதே...

   கொஞ்சம் கூட கருணை இல்லாத அடாவடி ஆட்டோகாரராக இருக்கார் அவர்.

   அக்கா இப்போது திருநெல்வேலி முன்பு போல எல்லாம் இல்லை அக்கா...இன்னும் நாகர்கோவில் போய்ப்பார்க்கலை....போனால்தான் தெரியும் எப்படினு..

   கீதா

   Delete
  5. தி/கீதா, இது போல் நிறைய நடக்கிறது. எங்களுக்குத் தெரிந்து அஹமதாபாதிலும் (அதுவும் குஜராத்தில் தான் இருக்கு) ஹிஹிஹி, நாங்க ஏற்பாடு செய்திருந்த வண்டி ஓட்டுநர் நல்லா ஏமாற்றினார். எங்களுக்குப் புரிந்து நாங்க சண்டை போட்டும் சற்றும் விட்டுக் கொடுக்கவில்லை. சித்திரகூடத்தில் ஆட்டோக்காரர்கள் அநேகமாய்ச் சுற்றுலாப் பயணிகளையே ஏமாத்தறாங்க. ஆகவே தங்கும் ஓட்டல் மூலம் வண்டி ஏற்பாடு செய்து கொண்டு அங்கெல்லாம் போகணும். ஆட்டோக்காரர்கள் ஓட்டலுக்குக் கீழ் வருவதால் ஏமாற்ற முடியாது. திருநெல்வேலியில் அந்த ஆட்டோக்காரர் வழியில் கூடப் பெரிசாச் சண்டை பொட்டார் எதிரே வந்த கார் ஓட்டுநரோடு. வாய் திறக்கக் கூடாதுனு அப்போவே முடிவு செய்துட்டோம். :(

   Delete
 2. நெல்லை இரயில் நிலைய ஆட்டோக்கள் பெரியவை. எங்களுக்கு சௌகரியமா இருந்தது. கொஞ்சம் வயதானால் கஷ்டம் என்பதை இப்போ புரிந்துகொண்டேன்.

  ஆட்டோ காரங்க 50 ரூபாய்க்கு ஹோட்டல்ல விடுவாங்க. நானும் அந்த ரோட்டில் இருக்கும் முதல் லாட்ஜில் தங்கினேன். அங்கு சரவணபவா உணவகம் நல்லா இருந்தது. ஜானகிராமன் ஹோட்டல் உணவும் ஒரு தடவை சாப்பிட்டோம். குறையில்லை

  ReplyDelete
  Replies
  1. 50 ரூபாய்க்கு எந்த ஆட்டோவும் வரலை! குறைந்த பட்சமாக 75 ரூ. அதிலும் எங்களைப் போல் ஏமாளினு முகத்திலே முத்திரை குத்தி இருந்தால் யார் வருவாங்க?சரவணபவா உணவகம் பரணி ஓட்டல்காரங்க நடத்துவது. நாங்களும் சாப்பிட்டிருக்கோம். இம்முறையும் ஒரு வேளை சாப்பிட்டோம். ஆனால் நெல்லையப்பர் கோயில் முன்னர் இருப்பதில்! அவங்களோடது தான் அங்கேயும் இருக்கு. ஜானகிராமனில் டிஃபன் சாப்பிடலாம்,தங்கலாம், சாப்பாடு சாப்பிடக் கூடாது! போனமுறையும் அனுபவம் அப்படித் தான்! இம்முறையும் பார்த்தோம். எதுவும் முன்னேற்றம் இல்லை.

   Delete
 3. சந்திரவிலாஸ் 1970கள்ல நல்லா இருக்கும்(னு எங்க அம்மா ஆத்துல சொல்வாங்க. அவங்க வீடு அங்கிருந்து நடக்கும் தூரம்தான் (எங்க அப்பா வீட்ல வெளி உணவு கிடையாது).

  நான் இதை நம்பி இரண்டு டிரிப்களில் அந்த ஹோட்டலில் தனியா சாப்பிட்டிருக்கேன். மனைவியை கூடக் கூப்பிட்டுப் போயிருந்தால் எனக்கு அர்ச்சனை நிச்சயம். சுத்தமில்லாத ருசி குறைஆன ஹோட்டல்னா அவளுக்குப் பிடிக்காது

  ReplyDelete
  Replies
  1. சந்திரவிலாஸ் எனக்கும் அவ்வளவு பிடித்தம் இல்லை தான். ஆனால் நம்மவருக்கு இம்மாதிரி மெஸ் போல் நடக்கும் ஓட்டல்கள் எனில் சாப்பாடு அருமையா இருக்கும் என்னும் உணர்வு. ரொம்ப ரசிப்பார்! எனக்கெல்லாம் சும்மாவே இறங்காது! அன்னிக்குக் கொஞ்சம் அரை வயிறு சாப்பிட்டால் போதும்னு இருந்தது வேறே. காரம் வாயில் வைக்க முடியலை! கும்பகோணத்திலும் இம்மாதிரி ஒரு மெஸ்ஸைத் தேடிக்கொண்டு போய்த் தான் அங்கே உள்ள கழிவறையில் ஏறப்போய் விழுந்தேன்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :(

   Delete
  2. கீதாக்கா எனக்கும் கூட மாமா மாதிரி எண்ணம் உண்டு. மெஸ் என்றால் ரொம்ப நல்லாருக்கும்னு..ஹிஹிஹி...

   கீதா

   Delete
  3. தி/கீதா, இம்மாதிரி இடங்கள் எல்லாமும் சுத்தம் இருப்பதில்லை. இலையை நாமே எடுக்கணும் என்பாங்க! இலைகளைப் போடும் இடங்களைப் பார்த்தால் குமட்டிக்கொண்டு வந்துடும். இதுக்காகவே ஶ்ரீரங்கத்தில் இம்மாதிரி ஓட்டல்களுக்கு நான் போவதே இல்லை. சந்திரவிலாஸில் இலையை எடுக்கச் சொல்லலை நல்லவேளையா!

   Delete
  4. கீசா மேடம்... ஆண்டவர் அல்வா கடைல, அங்க உட்கார்ந்து சாப்பிட்டால், நாமதான் நம் இலையை எடுத்துப் போடணும். ஒருவேளை இது தஞ்சாவூர் ஸ்டைலா இருக்குமோ?

   Delete
  5. இங்கேயும் கோபால ஐயங்கார் கடையில் இலையை எடுக்கணும். அம்பத்தூரிலும் கணேஷ் பவன் என்னும் கடை ரயில் நிலையம் அருகே (எனக்குத் தெரிந்து 40 வருடங்களுக்கும் மேல் இருக்கு) இருக்கு. அதிலும் இலை எடுக்கணும். ஆனால் டிஃபன் நன்றாக இருக்கும் அந்த மாமி வந்து செய்தால். இல்லைனா சொதப்பல் தான்! ஆண்டவர் கடைக்குள்ளே எல்லாம் நாங்க போய்ப் பார்த்தது இல்லை. காரிலேயே உட்கார்ந்திருந்தோம். ஓட்டுநர் போய் வாங்கிட்டு வந்தார். கறிகாய் வாங்கறதுன்னாத் தான் காரில் இருந்து இறங்குவார்/வோம்.

   Delete
 4. அந்த ஹோட்டலில் சாப்பிட்டதற்குப் பதில் அதன் எதிரே உள்ள புராதான லாலா கடையில் அல்வா சாப்பிட்டிருக்கலாம்.

  நெல்லையில், இருட்டுகடை, சாந்தி ஸ்வீட்ஸ், அப்புறம் இந்தக் கடை, பாளை தெற்கு பஜாரில் உள்ள ஶ்ரீராம் ஸ்வீட்ஷ் இந்த நாலு மட்டும்தான் அல்வாக்கான புராதான பெருமயும் பாரம்பர்யமும் உள்ள கடைகள்

  ReplyDelete
  Replies
  1. அங்கேயே வேறே ஒரு புராதன ஓட்டலும் இருந்தது தான். ஆனால் இந்தச் சந்திரவிலாஸ் பத்தி எனக்குத் தெரிஞ்சு ஒரு ஐம்பது பேராவது பெருமையாச் சொல்லி இருப்பாங்க! அதான் தேடிக்கொண்டு போனோம். லாலாகடையும் பார்த்தோம். எவ்வளவு அல்வா வாங்க முடியும்? வாங்கினதே அதிகம்!

   Delete
  2. கீசா மேடம்... உண்மையாச் சொல்றேன்... சந்திரவிலாஸ் பற்றி பெருமையாச் சொன்னவங்க யாருமே கடந்த 10 வருஷத்துல அந்தப் பக்கத்தையே பார்த்திருக்கமாட்டாங்க.

   நானும் சின்னவனா இருந்தபோது, எங்க ஜங்ஷன் வீட்டுல, எப்போவாச்சும் பேப்பர் ரோஸ்ட் (அப்போல்லாம் தோசை, நியூஸ் பேப்பர் மேல வாழை இலைவைத்து அதில் தோசை வைத்து சுருட்டி, நீள குழல் மாதிரி தருவாங்க) வாங்கிட்டு வருவாங்க.

   இப்போ சுத்தம் இல்லை, சுவை இல்லவே இல்லை.

   நாங்கள் சமீபத்துல போயிருந்தபோது இந்த மாதிரி ஃபேமஸ் அல்வா ஷாப்புல, 10 ரூபாய்க்கு வாழை இலைல 50 கிராம் + கொஞ்சம் மிக்சர் தருவாங்க, சாப்பிட்டோம். எங்களுக்கு வாங்கிக்கொண்டு வரலை.

   Delete
  3. இங்கே எங்க குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் மாமா, மாமி அநேகமாய் மாசம் ஒருதரம் திருநெல்வேலி போறாங்க. சந்திரவிலாஸ் தான் அவங்களுக்கு வாடிக்கை. தாமிரபரணி புஷ்கரம் நடந்தப்போ மாமா திருநெல்வேலி போய்ச் சந்திரவிலாஸ்காரங்களுக்குக் கல்லாப்பெட்டியில் உட்கார்ந்து கணக்குப் பார்த்து ஒத்தாசை செய்திருக்கிறார். அவங்க ரொம்பச் சொன்னதால் தான் போனோம். இன்னும் சில இணைய நண்பர்கள், திருநெல்வேலி நண்பர்கள் சொன்னாங்க. எல்லாம் பெருங்காயம் வைச்ச டப்பா தான்!

   Delete
 5. சந்திரவிலாஸுக்கு இரு பில்டில் முன்னால் புகழ் பெற்ற சாலைக் குமரன் (முருகன்) கோவில் இருக்கு.

  நீங்க தங்கி இடத்தின் அருகே உள்ள ஜானகிராம் ஹோட்டல், இல்லைனா சரவணா பவன் (நெல்லை பிராண்ட். இது நெல்லையப்பர் கோவில் முன்பும் உள்ளது) இதுல சாப்பிடாம, 1750ல் கேள்விப்பட்ட சந்திரவிலாஸைத் தேடிப் போயிருக்கீங்களே

  ReplyDelete
  Replies
  1. சாலைக்குமரன் கோயில் பார்த்தேன். கல்லுக்குள் ஈரம் நாவலில் வரும். சரவணபவன் நெல்லையிலும் சாப்பிட்டோம். ஜானகிராம் ஓட்டலிலும் சாப்பிட்டோம். ஒரு வேளைக்கு ஒரு இடம்னு சாப்பிட்டோம். இதிலே ஜானகிராமில் டிஃபன் வரை சரி!தங்கவும் நல்லா இருக்கும். ஏற்கெனவே தங்கி இருக்கோம்.

   Delete
 6. செப்பறை சென்ற வழியை டீடெயிலா எழுதுங்க. நான் போகணும் அடுத்தமுறை. படமும் போடுங்க (கடலைமிட்டாய், பால்கோவா படங்கள் அல்ல). கிருஷ்ணாபுரத்தில் படம் எடுத்திருக்கலைனா நாளை நான் எடுத்த அட்டகாசமான படங்கள் அனுப்பறேன். பூம்பாறை மாதிஇ ம்பென்டிங்ல வைக்காதீங்க

  ReplyDelete
  Replies
  1. நீங்க எதிர்பார்க்கிற மாதிரி எல்லாம் எழுத வராது. எனக்குத் தெரிஞ்ச அளவிலே எழுதறேன். படங்கள் எடுக்க எல்லாம் அனுமதி இல்லை. கோயில் ஊழியர் கையில் காமிராவை எடுத்ததுமே பக்கத்தில் வந்து நின்று விட்டார். அதுவும் அது தாமிரசபை. சபாநாயகராக அழகிய கூத்தர்! எடுக்கணும்னு எனக்கே தோணலை!

   Delete
 7. ஏன் அவசர அவசரமாப் போனீங்கன்னு எழுதலை. அர்ஜென்் ப்ரார்த்தனையா

  ReplyDelete
  Replies
  1. அவசரமாய் எல்லாம் போனால் ரயிலில் முன்பதிவு அதுவும் இருக்கும் ஒரே ஒரு ஏசி சேர்காரில் முன் பதிவு கிடைத்திருக்காது. போக வர இரண்டுக்கும் ஒரு மாதம் முன்னாடியே/அதுக்கும் முன்னாலே முன் பதிவு செய்தாச்சு. ஐஆர்சிடிசி மூலம் அறை முன்பதிவு செய்யப் பார்த்தால் ரயில்வேயில் ஸ்லாட் 25,26 தேதிக்குத் தான். குடியரசு தின விடுமுறை சேர்ந்து கொண்டதால் எங்கும் இடம் கிடைக்கவில்லை. டார்மிடரி தான் ரயில்வேயில் கிடைக்கிறது. அது கொஞ்ச நேரம் எனில் இருக்கலாம். நாள் கணக்கில் தங்க சரியா வராது. ஐஆர்டிசி மூலம் ஓட்டல்களிலும் அறை காலி இல்லை. அதோடு இருந்தவையும் ஜங்க்ஷன் பக்கம் இல்லை. ரொம்ப தூரம்!

   Delete
  2. இம்முறை நல்லா அலசி ஆராய்ந்து தான் போனோம்!

   Delete
  3. தெரியாத ஓட்டல்களில் ஆன்லைனில் புக் செய்யவும் யோசனை. மதுரையில் கதிர் ஓட்டல் தானப்ப முதலி அக்ரஹாரத்தில் 3 ஸ்டார் ஓட்டல்னு ஆன்லைனில் பார்த்து புக் செய்தோம். அங்கே போனால் ஒரே ஏமாற்றம். ஜன்னலே இல்லை. ஏசிமட்டும் தான். சின்ன அறை. கட்டில் போட்டிருந்ததில் கீழே இறங்கவும் கஷ்டம், ஏறவும் கஷ்டம்! உடம்புக்கே வந்துவிட்டது. அதே கும்பகோணம் "ராயாஸ்" ஓட்டலில் ஆன்லைன் புக்கிங் தான். நன்றாக இருந்தது என்பதோடு பின்னால் சத்தார் ரெஸ்டாரன்டில் சாப்பாடும் சூப்பர்.

   Delete
  4. ராயாஸில் காஃபி, தேநீர் போன்றவை அறையிலேயே வைத்திருந்தார்கள் தமிழ்நாட்டின் பெரும்பாலான ஓட்டல்களில் இந்த வசதி இல்லை. வாடகை மட்டும் நிறைய! அதே போல் காலை உணவு ஃப்ரீயாவும் கொடுப்பதில்லை. இப்போ இங்கே ஶ்ரீரங்கத்தில் எங்க வளாகத்துக்கு எதிரே இருக்கும் கேவிஎம் ஓட்டலில் காலை உணவுஃப்ரீனு சொன்னாங்க.

   Delete
  5. நாம் கொடுக்கும் அறை வாடகைக்குக் கொஞ்சமானும் நியாயம் இருக்க வேண்டாமா?

   Delete
 8. வணக்கம் சகோதரி

  திருநெல்வேலி சென்ற கதை சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால், ரயிலில் இருந்தே கொஞ்சம் கஷ்டமாக பயணித்திருக்கிறீர்கள் போலும். ஆட்டோ எங்கு சென்றாலும், நாம் வெளியூர் என்று தெரிந்து விட்டால் பிரச்சனைதான். அவர்களில் நேர்மையாய் உள்ளவர்கள் இருக்கிறார்கள். நம் நேரம் அப்படி கிடைக்க வேண்டும். அவ்வளவுதான்.
  நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களை நான் பார்த்ததில்லை. உங்கள் பதிவின் மூலம் வாசிக்கிறேன். அடுத்து எங்கெல்லாம் சென்றீர்கள் என அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, கஷ்டம் எல்லாம் ஒண்ணுமே இல்லை. நாங்க ரயிலில் 3 நாட்கள், 4 நாட்கள் என்றெல்லாம் பயணித்திருக்கோம். முதல் வகுப்பு ரிசர்வ் செய்துட்டு வண்டியே போகாமல் முன்பதிவு செய்யாத பெட்டியில் கழிவறைப்பக்கம் பெட்டிகள் மேல் எல்லாம் உட்கார்ந்து பயணித்திருக்கோம். இம்முறை முதல்நாள் கொஞ்சம் உடல்நிலை சரியாக இல்லாததால் சாப்பிடவில்லை. அசதி! அதான் தூக்கம்! ஆட்டோக்காரர்கள் "பெண்"களூரிலும், குஜராத், மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தானிலும் பரவாயில்லை. அதிலும் மஹாராஷ்ட்ரா, குஜராத்தில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஒரு ரூபாய் அதிகம் வாங்க மாட்டாங்க!

   Delete

  2. எங்க திருவனந்தபுரத்தில் 20 ரூபாய்க்கு ஆட்டோவில் போனதை வீட்டுடீங்களே! இப்போ 25 ரூபாய் தான்.
   Jayakumar

   Delete
  3. https://sivamgss.blogspot.com/2015/07/blog-post_11.html ஜேகே அண்ணா, இங்கே போய்ப் பாருங்க உங்க ஊர் ஆட்டோக்காரங்க கேட்டதை. விலாவரியா எழுதி இருக்கேன். 30 ரூக்குப் போக வேண்டிய இடத்துக்கு 70 ரூ கேட்டுப் பின்னர் 40 ரூக்குக்கூட்டிப் போனார்கள். எங்கேயும் ஆட்டோக்காரங்க இப்படித் தான். இப்போ இங்கே ஶ்ரீரங்கத்திலும் 50 ரூக்குப் போன ஸ்டெஷனுக்கு 70, 90 எனக் கேட்கின்றனர்.

   Delete
  4. //நம்ம மூஞ்சியில் ஏமாளினு எழுதி ஒட்டி இருக்கோ? ஆமாம், அப்படித் தான் இருக்கணும்.//

   Delete
  5. ஆட்டோ ஓட்டுநர்கள் எங்களை மட்டுமில்லாமல் பலரையும் ஏமாற்றுகின்றனர். நாங்க/நான் சொல்லிவிடுகிறேன்/றோம்.மத்தவங்க சொல்லுவதில்லை. அதான் வித்தியாசம்! :))))

   Delete
  6. நேற்று பெங்களூரில், ஓலா டிரைவர், நேரம் அதிகமாகிவிட்டதால் (5:35 ஆயிடுத்து, ரொம்ப டிராபிக் னால. 5:30க்கு நான் அந்த ஸ்டாப்பில் ஏறியிருக்கணும். அப்புறம் பஸ்காரர் போன் செய்து, நாங்கள் சென்றுகொண்டிருந்த இடத்தின் வலதுபக்கத்திலேயே வெயிட் பண்ணச் சொன்னார். பஸ் அந்த வழியாத்தான் வருதுன்னு), நான் இருந்த அவசரத்துல 35 ரூபாய் அதிகம் கேட்டார். கொடுத்தேன். நம் அவசரத்தையும் நிலையையும் ஆட்டோகாரர்கள் சுலபமா அவதானித்துவிடுவார்கள். இதுல 'ஏமாளி'ன்னு நினைத்துக்கொள்ளவேண்டியதில்லை.

   Delete
  7. எங்களுக்கு அவசரம் ஏதும் இல்லையே? மணியோ பனிரண்டுக்கு மேல் ஆகி விட்டது. எங்கேயும் போக முடியாது. அறைக்குப் போய்ச் சாப்பிட்டுப் படுக்கணும். ஆகவே அவசரம் எல்லாம் இல்லை. இதுக்கே எங்களுக்கு அரை மணி ஆகி விட்டது. எங்களோடு இறங்கியவங்க எல்லாரும் போயிட்டாங்க!

   Delete
 9. எனது மச்சினன் - இவனுக்குதான் இன்னமும் பெண் அமையவில்லை, வயது ஏறிக்கொண்டிருக்கிறது - சென்ற வாரம் திருநெல்வேலி சென்று நெல்லையப்பபிறையும் காந்திமதித்தாயாரையும் சேவித்துத் திரும்பினான். (அதனால்தான் இருட்டுக்கடை அல்வா எனக்கு(ம்) லபித்தது!)

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம், பாபநாசம் கோயிலுக்கு இல்லையோ போகணும்? அங்கே தானே கருவறைக்குப் பின்னே அம்பிகையும் அப்பனும் திருமணக்கோலத்தில் காட்சி தராங்க! மஞ்சள் வேறே இடிச்சுப் பிரசாதம் தருவாங்க. கல்யாண நேர்த்திக்கடனுக்கு அங்கே தான் போகணும்னு சொல்வாங்க.

   Delete

  2. ​மாயவரம் பக்கம் திருமணஞ்சேரியும் திருச்சி த்திருப்பைநீலி.

   கல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி
   இங்கே, வாழை மரமே ஸ்தல விருட்சம். இங்கு, வாழைக்கு தாலி கட்டி, பரிகாரம் செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்! தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கல்யாண வரம், நீண்ட ஆயுள் ஆகியவற்றை வழங்கி, எம பயத்தையும் போக்கி அருள்கிறார் ஸ்ரீஞீலிவனநாதர். அம்பாள் : ஸ்ரீநீள்நெடுங்கண்ணி. அதாவது ஸ்ரீவிசாலாட்சி அம்பாள்

   இவை இரண்டும் இன்றும் பிரபலம்.

   Delete
  3. ஜேகே அண்ணா, திருமணஞ்சேரி, திருப்பைஞ்ஞீலி எல்லாம் போய்ப்பரிகாரம் செய்தும் கல்யாணம் ஆகாமல் இருக்கிறவங்களும் இருக்காங்க! என்ன செய்ய முடியும்? பெண் வீட்டுக்காரர்கள் மனசு வைச்சால் தான் நடக்கும்.

   Delete
 10. // தீர்மானித்தோம்/ இல்லை, தீர்மானித்தார்...//

  ஹா... ஹா... ஹா... தப்பே இல்லக்கா!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், தீர்மானிப்பது அவர் தானே! எனக்குச் சும்மாத் தலையை மேலும் கீழும் ஆட்டுவது தான் ஒரே வேலை!

   Delete
 11. நான் நெல்லையப்பர் கோவில் சென்றதே இல்லை. பெரிய கோவில் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சீக்கிரமே செல்ல ஆசை.

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், கோயில் ரொம்பப் பெரிசு. அம்மன் சந்நிதிக்கு ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப தூரம் நடந்து போகணும். நெல்லையப்பரைப் பார்க்கவே ஒன்றரை அடி உயரப் படிகளில் ஏறிப் போகணும். நம்மால் முடியலை! :( முன்னர் பார்த்தோம். காந்திமதி சந்நிதிக்கு அங்கிருந்து சுமார் ஒரு கிமீ தூரமாவது நடந்து போகணும். தெப்பக்குளமெல்லாம் தாண்டிப் போகணும்.

   Delete
  2. அழகான கோயில் ஸ்ரீராம். பழமையான கோயில். இன்னும் மெயிண்டைன் செய்யலாம் தான்....இப்போதைய நிலை தெரியலை...

   கீதா

   Delete
  3. தி/கீதா, கோயில் பராமரிப்பெல்லாம் சுத்தமாகத் தான் இருக்கு! பொதுவாகவே தென்மாவட்டக் கோயில்கள் பராமரிப்புச் சுத்தம் மட்டுமின்றி சிறப்புக்கட்டணம் எல்லாம் இருக்காது. இதைச் சில முறை சுசீந்திரம், கன்யாகுமரி போனதில் கவனிச்சேன். இங்கேயும் சிறப்புக் கட்டணம் இல்லை. இத்தனைக்கும் தை வெள்ளிக்கிழமை! இதே திருச்செந்தூர் எனில் கூட்டம் தாங்காது.

   Delete
  4. செல்லுங்கள் ஸ்ரீராம். நெல்லையப்பர் சன்னிதிக்கு முன்பு ஏழு ஸ்வரத் தூணையும் பாருங்க. நெல்லையப்பருக்கு (நாம அவரைப் பார்க்கும்போது) வலது பக்கத்துல ஒரு அறை (சன்னிதி)யில், ரங்கநாதர் போன்று பெரிய உருவத்தில் பெருமாள் துயின்றுகொண்டிருக்கிறார். அதையும் சேவியுங்கள்.

   Delete
  5. போனமுறை போனப்போ எல்லாமும் நன்றாய்ப் பார்த்தோம். இம்முறை முடியலை! உடல் அசதி, சோர்வு அதிகம்.

   Delete
 12. பயணம் கிளம்பவேண்டும் என்றாலே உங்களுக்கு மனதளவில் ஒரு அலர்ஜி வந்து விடும் என்று தோன்றுகிறது!! என் மாமியாரும் அவர் தங்கையும் வெளியில் கிளம்பும்போதெல்லாம் பாதிவழி சென்று விட்டு எல்லாம் வந்து இயற்கை உபாதையை முடித்துவிட்டுக் கிளம்புவார்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், அப்படி இல்லை! நான் பயணம் கிளம்புவது எனில் இரண்டு நாட்கள் முன்னிருந்தே என் வயிறைத் தயார் செய்து கொள்வேன். இம்முறை கொஞ்சம் அலட்சியமாக இருந்துட்டேன். அதோடு இரண்டு பேருக்குத் தான் சமைக்க வேண்டி இருக்கா! எனக்கு எதுவும் வேண்டாம்னா அவருக்குக் கோபம்/கஷ்டமாக இருக்கு! எனக்கும் வேண்டாம் என்பார்! அதனாலேயே சில சமயங்கள் சொல்லுவதில்லை. அது வயிறுக்குத் தெரியாதே! கோவித்துக் கொள்ளும். மற்றபடி பாதி வழியில் திரும்பி வராப்போல் இருந்தால் நான் வீட்டை விட்டே கிளம்ப மாட்டேன். கிளம்பும் நாள் அநேகமாய் லங்கணம் தான்! காஃபி கூட யோசித்துத் தான் குடிப்பேன். வழியில் இளநீர் கிடைத்தாலோ புதிதாகப் போடும் பழச்சாறு என்றாலோ ஓகே!

   Delete
  2. பிள்ளையார் சதுர்த்தியை முடிச்சுட்டுக் கொழுக்கட்டை, வடை, அதிரசம் எல்லாம் பண்ணி எடுத்துக்கொண்டு பூம்பாறை போனோமே! அப்போல்லாம் எந்தப் பிரச்னையும் இல்லை! :) சில சமயங்கள் இப்படி ஆகும்.

   Delete
 13. அங்கங்கே 'இப்படி ஆகி விட்டதே' எனத் தோன்றியது அம்மா...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், அனுபவங்களை எழுதினால் தானே என்னைப் போல் உடல்/வயிறு தொந்திரவு இருக்கிறவங்க கவனமாக இருக்கலாம்! :)))

   Delete
 14. ராஜவல்லிபுரம் விடயங்கள் அறிய ஆவல்.

  ReplyDelete
  Replies
  1. மெல்ல வரும் கில்லர்ஜி! ராஜவல்லிபுரத்தில் எதுவும் இல்லை.

   Delete
 15. Replies
  1. நீங்களாவது ரசித்தமைக்கு நன்றி ஐயா! :))))

   Delete
 16. இறங்கிய இடம் பிரதான வாயில் அருகே இல்லை. முன்பதிவு பயணச்சீட்டு வாங்கும் கவுன்டர் அருகே இறங்க வேண்டி இருந்தது என்றாலும் அந்த வழியாகவும் வெளியே போகலாம். //

  ஆமாம் அக்கா அங்கு அந்த வழியில் சென்றால் மெயின் என்ட்ரன்சுக்கு கொஞ்ச தூரம் நடக்கனுமே...சில சமயம் அங்கு ஆட்டோ இருக்கும்....வியக்காலையில் சென்றால் இருக்காது..

  சில வரிகளை வாசித்து சிரிச்சுட்டேன்...//தீர்மானித்தோம்/ இல்லை, தீர்மானித்தார்// இப்படியான வரிகள்....

  செப்பறை அருமையான கோயில் அக்கா. எத்தனையோ வருடங்களுக்கு முன் பார்த்தது. சமீபத்தில் பார்க்கவில்லை. தாமிரபரணி ஆறு கரையில்...படம் எடுத்திருப்பீங்களே க்கா...போடுங்க நான் பார்க்கனும்..

  சமீபத்தில் திருநெல்வேலி அவசரமாக ஒன்றுவிட்ட அத்தை இறந்த துக்கத்துக்குச ஒரே நாளாகச் சென்றதால் வேறு எங்கும் போக முடியாதே...அதற்கு முன்பு நான் சென்னையிலிருந்தப்ப, அந்த அத்தை ரொம்ப உடம்புக்கு முடியாமல் இருந்தப்பவும் ஒரே நாள் பார்க்கப் போயிருந்ததால் எதையும் பார்க்க முடியவில்லை.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தி/கீதா, கோயில் இருக்கும் இடம் அழகாக இருக்கு. சுற்றுவட்டாரங்களைப் படம் பிடிக்கலாம். கோயில் கோபுரத்தைப் படம் எடுக்க முடியலை! பிரகாரத்தில் செப்பறையை மட்டும் படம் எடுத்தேன். மயில்கள் ஆடிக்கொண்டும், குயில்கள் பாடிக்கொண்டும் இருந்தன. படம் எடுக்கப் போனால் காட்டுக்குள் ஓடி மறைகின்றன. :)

   Delete
 17. ஆமாம் அக்கா அங்கு ஆட்டோக்கள் ரொம்பப் பெரிசு. பெரும்பாலும் ஷேர் ஆட்டோ போலத்தான்...உங்கள் கஷ்டம் புரிந்தது...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. சென்னையிலும் ஷேர் ஆட்டோ உண்டு தி/கீதா. அதைத் தவிர்த்து டாடா டாக்சியும் உண்டு. டாடா டாக்சியிலும் காலை இரண்டு அடியாவது மேலே தூக்கி வைச்சு ஏறணும். ஷேர் ஆட்டோ அதை விட மோசம். ஆட்டோவில் ஏற ஒன்றரை அடின்னா உள்ளே உட்கார இன்னும் முக்கால் அடி! வெறுத்துப் போச்சு! எங்க பையர் திட்டினார். திருச்சியிலிருந்து காரிலேயே போயிருக்கலாமேனு. ஆனால் அவரிடம் இந்த ஓட்டல் தகராறெல்லாம் சொல்லலை. சொன்னால் இன்னும் டோஸ் கிடைக்கும்.

   Delete
 18. ஓ இந்தப் பயணம் தொடங்கும் முன்னும் வயிறு பிரச்சனை வந்துவிட்டதா..

  அக்கா நானுமே பிரயாணம் என்றால் கவனமாகவே இருப்பேன். ஓமவாட்டர் கையிலிருக்கும்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அது சங்கராந்தி/பொங்கலில் ஆரம்பிச்ச வயிற்றுக்கோளாறு. சரியாகவே இல்லை. நானும் கவனம் இல்லாமல் இருந்துட்டேன். அதான் போட்டு வாங்கிடுச்சு! :))))

   Delete
 19. அக்கா பாசஞ்சர், ஃபாஸ்ட் பாசஞ்சர் இதுக்கெல்லாம் பதிவு கிடையாதே. பெரும்பாலும் அன்ரிசர்வ்ட் தானே அங்கு சென்றுதான் டிக்கெட் வாங்கிக்கனும். சீட்டும் பிடிக்கனும்...கூட்டம் இருந்தால் கஷ்டம்தான்...சீட்டு கிடைப்பது.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. திருவனந்தபுரத்திலிருந்து அல்லது திருநெல்வேலியிலிருந்து ஈரோடுக்கு ஒரு வண்டி காலை ஐந்தரைக்கு இருந்தது. அதில் முன்பதிவு செய்துக்கலாம். ஆனால் அந்த வண்டியை தென்னக ரயில்வே தாற்காலிகமாக (நாங்க போகப் போறோம்னு தெரிஞ்சு) நிறுத்திட்டாங்க. தொலைக்காட்சிச் செய்தியில் பார்த்தோம். அதான் ஃபாஸ்ட் பாசஞ்சரில் முன்பதிவு செய்ய வசதி இருக்கானு பார்த்தேன்.

   Delete
 20. நீங்கள் என்னவோ உங்கள் சிரமங்களைத்தான் சொல்கிறீர்கள், எங்களுக்கு என்னவோ கேட்க சுவாரஸ்யமாக இருக்கிறதே? இது உங்கள் எழுத்துத் திறமையா? மேலும் விவரங்களுக்கு காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, பானுமதி, ஒரு திறமையும் இல்லை. சிரமங்களை ஏன் எழுதறேன் என்றால் இதைப் படிச்சுட்டுப் போறவங்க அந்தச் சிரமம் படாமல் இருக்கட்டுமே என்னும் எண்ணம் தான். மற்றபடி உங்கள் பாராட்டுக்கு நன்றி.

   Delete
 21. என் மச்சினன் ஒரு திருமணத்துக்கு நெல்லை சென்றுஇன்றுதான் வந்தான் கோவிலில் கூட்டமோ கூட்டமாம் அதாவது சனிப்பிரதோஷ அன்று அடுத்தநாளும்போனானாம் கோவிலில் ஈ காக்கா கூட இல்லையாம் அதென்னவோ தெரியலை விசேஷநாட்கள்லில் மட்டும் கோவிலில் கூட்டமதிகம் நீங்கள் இன்னும் கோவில் பற்றி எழுத வில்லையே

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி ஐயா. விசேஷ நாட்களில் கோயிலில்/கோயில்களில் கூட்டம் அதிகமாய்த் தான் இருக்கும். நாங்க விசேஷ நாட்களில் கோயில்கள் பக்கமே எட்டிக் கூடப் பார்க்க மாட்டோம். நெல்லையப்பர் கோயிலுக்குப் போனோம். ஆனால் அவர் மட்டும் தான் உள்ளே போய்ப் பார்த்தார். எனக்குக் கால்வலி அதிகமாய் இருந்ததால் நடக்க வேண்டாம்னு நான் போகலை. வெளியே பிரகாரத்திலேயே இருந்தேன்.

   Delete
 22. உங்கள் பயணத்தில் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் ஒரு பக்கம் என்றாலும் பயணத்தை ரசித்து அனுபவித்திருப்பீர்கள் என்று நினைக்கிறோம். நீங்கள் சொல்லியிருக்கும் கோயில் சென்றதில்லை. படங்களுடன் காண ஆவல். தொடர்கிறோம்

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசிதரன். ரொம்ப நாட்கள் ஆச்சு பார்த்து. பயணமே ரசனையான அனுபவங்கள் தானே! இப்போ உடல் ரீதியாகக் கொஞ்சம் பலவீனம் அதிகம் இருப்பதால் பயணங்களில் சிரமமாக இருக்கு! செப்பறையும், கிருஷ்ணாபுரமும் ஒரு சில படங்களுடன் வரும்.

   Delete
 23. எவ்வளவு கஷ்டங்கள் ! , திருமண முகூர்த்த நாளா நீங்கள் போன போது ? ஜானகி ராம் ஓட்டலில் ரூம் இல்லை என்றால் எதிர் பக்கத்தில் கொஞ்சம் தள்ளி ஆரியாஸ் இருக்குமே ! அங்கு கூட்டி போகும் ஆட்டோவிற்கு வெயிட் செய்து இருக்கலாம் நீங்கள்.
  எல்லா ஊர்களிலும் இப்போது ஷேர் ஆட்டோகள்தான் நிறைய ஓடுகிறது.
  குழந்தைகளிடம் சொன்னால் திட்டதான் செய்வார்கள் யாருக்கு காசு சேர்த்து வைக்கிறீர்கள் வசதியாக போய் வரவேண்டியது தானே என்பார்கள்.
  அடுத்து செப்பறை கோவில் பதிவு படிக்க வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, ஆமாம், நல்ல முஹூர்த்தநாள் தான்! ஆரியாஸில் இருக்கும்னு தெரியும். கூட்டியும் போகச்சொன்னோம். ஆனால் அந்த ஆட்டோ ஓட்டுநர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். எவ்வளவு நேரம் காத்திருப்பது? அவங்க எல்லோருமே ஒரே மாதிரிப் பேசி வைச்சுக்கறாங்களே! ஒருத்தர் மறுத்தா எல்லோரும் மறுக்கிறாங்க. வெளியே இருந்து வரும் ஆட்டோவில் ஏற விட மாட்டாங்க! அங்கே ஸ்டான்டிலே இருக்கும் ஆட்டோவில் தான் ஏறிப் போகலாம்.

   Delete
 24. ஆகா.. நெல்லை மகாத்மியம் வாசித்தேன்.. தன்யன் ஆனேன்...
  மீண்டும் வருகிறேன்.. கட்டை விரலால் தட்டுவது சிரமமாக இருக்கிறது....

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை, கைவலி சரியான பின்னர் வாங்க. மெதுவாப் படிங்க ஒண்ணும் அவசரம் இல்லை. உங்களுக்குக் கைவலின்னா எனக்குக் கால்வலி! :)))) அதோடு தான் எல்லா இடங்களுக்கும் விடாமல்/விடக்கூடாதுனு போயிட்டு வரேன். :))))

   Delete
 25. ஆஆஆஆஆ திருநெல்வேலிப் பயணம் எனில்.. முதலில் நெலைத்தமிழனுக்கு வட்சப்பில ஒரு கோல் போட்டு விசயம் எல்லாம் தெரிஞ்சிருக்கக்கூடாதோ?:).. சே..சே.. ரொம்ப மோசமான ஊர் போல இருக்கே இல்லையா கீசாக்கா?:) நான் திருநெல்வேலியைச் சொன்னேன்:)).. ஹா ஹா ஹா.

  அதுசரி போன இடத்திலயும் பச்சரிசிச் சாதம் கேய்க்குதோ கர்ர்ர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. வாங்க அதிரடி,இங்கேயே திருநெல்வேலிக்காரங்க, இன்னமும் அங்கே குடித்தனம் செய்துட்டு இருப்பவங்க இருக்காங்க! இங்கே கொஞ்சம் நாட்கள், அங்கே கொஞ்சம் நாட்கள்னு இருப்பாங்க! அவங்க சொல்லாததையா எப்போவோ திருநெல்வேலி போகும் நெ.த. சொல்லிடப் போறார். இப்போல்லாம் தமிழ்நாட்டிலே எல்லா ஊர்களுமே மோசம் தான். மாமாவின் சொந்த ஊரான கும்பகோணத்திலேயே அவரையே ஏமாற்றி இருக்காங்க!
   அது சரி, பச்சரிசிச்சாதம் கேட்டதிலே உங்களுக்கு என்னவாம்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ற்ற்ற்ற் :))) புழுங்கலரிசி ஓட்டல்களில் சமைப்பதை முழுங்க முடியாது!

   Delete
 26. .திருநெல்வேலி பிரயாணமா .. சமீபத்தில் சென்று வந்துதானே ..எனக்கு எப்பவும் புழுங்கல் அரிசி பிடிக்காது :) அதென்னமோ பச்சரிசியின் வாசனை நல்லா இருக்கும் அது புழுங்களில் மிஸ்ஸிங் .
  நீங்க எழுதியிருக்கிறதை படிக்கும்போது இப்படி நானும் குடும்பமா போக நம்ம ஊரில் போயிட்டு இப்படி ஹோட்டலில் தங்கி என்று ஆசை விரிகிறது ..

  ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் ஹோட்டல் ஓனர்களுக்கும் எழுதப்பட ஒப்பந்தமோ ? இங்கே வர மாட்டேன் அங்கே வர மாட்டேன்னு :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், நல்லாக் காது ரெண்டிலேயும் விழறாப்போல் சொல்லுங்க உங்க தலைவிகிட்டே. எப்படித்தான் குப்பை கொட்டறீங்களோ!சம்பளமாவது ஒழுங்காக் கொடுக்கிறாங்களா அதுவும் இல்லையா? :)))

   ஆமாம், ஆமாம், நீங்கசொல்றாப்போல் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் ஓட்டல் காரங்களுக்கும் இம்மாதிரி ஒப்பந்தம் உண்டு. இதைப் பல முறை பார்த்திருக்கோம்.

   Delete
  2. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍

   Delete
  3. இஃகி, இஃகி, இஃகி, கவி அமுதம்! நல்லா வேணும்! வேணுங்கட்டைக்கு வேணும், வெங்கலங்கட்டைக்கு வேணும்! :))))))

   Delete