இந்தப்படத்தில் இருப்பவர்கள் யார்? சொல்லுங்க,பார்ப்போம்!
ஏற்கெனவே இந்தப்படத்தைப் பார்த்தவங்க ஆட்டத்தில் கலந்துக்கக்கூடாது! கீழே இருப்பவர்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களா?
இது தான் சிரிப்பாச் சிரிச்சுடுச்சே நிறையவே!
நேற்றுஅல்லது முந்தாநாள் வீடு பற்றிப் பேச்சு வருகையில் அதிரா அவருடைய இலங்கை வீட்டை நினைவு கூர்ந்திருந்தார். எனக்கும் எங்க அம்பத்தூர் வீடு நினைவில் வந்தது. கீழே வீட்டு வாசலில்தெருவுக்கே நிழல் கொடுத்துக் கொண்டிருந்த வேப்ப மரம். இப்போ இருக்கா இல்லையானு தெரியலை. வெட்ட வேண்டாம் என வேண்டிக் கேட்டுக் கொண்டோம். :(
வீட்டிற்குள் நுழையும் வாயில்.உள்ளே வராந்தா, அடுத்துக்கூடம். முக்கிய நுழைவாயில்க் கதவுக்கும் வராந்தாக் கதவுக்கும் இடையே பத்து அடிக்கும் மேல் இடம் விட்டிருந்தோம்.
மரப்பசுமைக்குப் பின்னர் பச்சையாய்த் தெரிவது மாடியின் மேல் முதல் தளத்தில் போட்டிருந்த ஷெட்!
வீட்டு வாசலில் அமர்ந்து கொள்ள பெஞ்ச் போட்டிருந்தோம். மாலை வேளைகளில் அதில் உட்கார்ந்து புத்தகம் படிக்க, டேப் ரிகார்டர் போட்டுக் கேட்க, அக்கம்பக்கம் உள்ளவர்களோடு அங்கிருந்தபடியே அரட்டை அடிக்க என நினைவுகள், நினைவுகள், நினைவுகள்!
மேலே உள்ள படங்கள் எல்லாம் 2016 ஆம் ஆண்டில் எடுத்தவை. கீழே பார்க்கப் போகும் படங்கள் 2011 ஆம் ஆண்டில் நாங்க வீட்டை விட்டுக் காலிசெய்ய நேர்ந்ததற்கான காரணங்களுடன் கூடிய படங்கள். வீட்டு வாசலில் ஒரு பக்கம் ஜல்லிமலை, இன்னொரு பக்கம் மணல் குன்று. வழியில் எல்லாம் இரும்புக் கம்பிகள். செங்கல்கள்!
இந்த மணல் குன்று கரைந்தால் தான் நாங்க வீட்டுக்குள்ளிருந்து வெளியே வர முடியும். வெளியே இருந்து உள்ளே வர முடியும். இதைக் குவித்திருந்த நாளன்று என் மாமனாரின் ச்ராத்தம். யாருமே வர முடியாமல் பக்கத்துக் குடியிருப்பு வளாகத்தின் வழியாக எங்க சுற்றுச் சுவர் உயரம் கம்மி என்பதால் எல்லோரும் புரோகிதர்கள் உட்பட ஏறிக் குதித்து வந்தார்கள். பால்காரர் இதை எல்லாம் பார்த்து விட்டுப் பாலே கொடுக்கவில்லை.
நாங்க எங்க வீட்டிலிருந்து மண்வெட்டி, பான்டு போன்றவை எடுத்து வந்து வாசல் மணல் மலையைக் கொஞ்சம் நகர்த்திவிட்டுச் சரி செய்து வீட்டுக்குள் ஒரு காலையாவது உள்ளே நுழையும்படி செய்தோம்.
அந்தச்சமயம் வந்த கிருஷ்ணன் பிறப்பின் முதல்நாள் தான் முதல் முறையாகத் தண்ணீர் வீட்டுக்குள் வந்தது. காலை மூன்று முதல் எட்டு மணி வரை தண்ணீரை இறைத்துக் கொட்டி விட்டுப் பின்னர் செய்த பக்ஷணங்கள் இவை. கிருஷ்ணனிடம் உனக்கே இது நியாயமா எனக் கேட்டேன் அன்று.
இடர் விலக வேண்டும் எனக் கிருஷ்ணன் பிறப்புக்குப் பின்னர் வந்த மஹாசங்கடஹர சதுர்த்தி அன்று செய்த கணபதி ஹோமம். இந்த ஹோமம் செய்து சரியாய் ஒரே மாதம் தான் அந்த வீட்டில் இருந்தோம். அதன் பின்னர் அந்த வீட்டைக் காலிசெய்து கொண்டு என் நாத்தனாரின் ஓரகத்தி வீட்டுக்குக் குடித்தனமாகப் போனோம். அடுத்து வந்த மாதங்களில் அம்பேரிக்கா போனதால் அங்கே எடுக்கப்பட்ட முடிவு தான் ஶ்ரீரங்கத்துக்குக் குடித்தனம் வருவது.
அம்பத்தூர் வீட்டுக் கூடத்தில் நடுவில் அமைக்கப்பட்ட சுவாமி அலமாரி. மேல் தட்டில் ராமரும் கீழே மண்டபத்தில் விக்ரஹங்களும் வைத்திருந்தோம். மண்டபத்தை அங்கேயே கொடுத்து விட்டுவந்து விட்டோம்.
இது அம்பத்தூரில் ஒரு கார்த்திகை அன்று எடுத்த படம். 2010 ஆம் வருடம் என நினைக்கிறேன்.
கொல்லைத் தோட்டத்தில் நம்ம செல்லம் படுத்துக் கொண்டிருக்கையில் ஃபில்ம் காமிராவில் எடுத்த பழைய படம்.
வீட்டுக்குள்ளே தண்ணீர் வந்தப்போ மாடிப்படி அடியில் தேங்கி இருந்த தண்ணீரில் காணப்பட்ட நண்டுகள்.
இந்த மீன் கொத்தி நாங்க அந்த வீட்டுக்குப் போனதில் இருந்து எனக்குப் பழக்கம். எங்க கொல்லைக் கிணற்றுக்குள் டைவ் அடித்துப் போகும். ஒருநாள் மதியம் கிணற்றில் இறங்கி விட்டு ஓய்வு எடுத்தபோது எடுத்த படம். இதுவும் 2009 அல்லது 2010இல் இருக்கும்.
இதைத் தான் பாரிஜாதம் என்பார்கள். எல்லோரும் பவளமல்லிப் பூவைப் பாரிஜாதம் என்கின்றனர். ஆனால் இது தான் உண்மையில் பாரிஜாதம். வாசனை அக்கம்பக்கமெல்லாம் பரவும். ஊரைத் தூக்கும்.
ஹாஹாஹா, இதுக்கு முன்னால் தான் ஆறு மாசத்துக்கு ஒரு முறை பிரசவத்துக்கு ஒரு மியாவ் வந்துடும். அதுக்குப் பிரசவம் பார்த்துப் பத்தியம் வடிச்சுப் போட்டுனு எனக்கு ஒரே அலுப்பா இருக்கும். இருந்தாலும் நல்ல பொழுது போக்காத்தான் இருந்தது. அதைத் தான் நாய்கள்........ :( குட்டிகளும் சேர்ந்து அம்மாவுடன் போய்ச் சேர்ந்து விட்டன. இது அதற்கு அப்புறமா வந்ததுனு நினைக்கிறேன். கொல்லைக்கிணற்றடியில் காற்றாடப் படுத்து இருந்தப்போ எடுத்த படம். வட்டமாய்த் தெரிவது கிணறு.
முன்னெல்லாம் கௌதமன் சார் ஞாயிறன்று எங்கள் ப்ளாகில் படங்கள் போடுவார்.அதற்கேற்றாற்போல் போட்டிப் படம் எங்கே இருந்தாவது எடுத்து வந்து போடுவேன். இப்போல்லாம் சுற்றுப்பயணப் படங்கள் வருவதால் போடுவதில்லை. இன்னிக்கு அதுவும் நினைப்பு வந்தது. எல்லோரும் பார்த்து ரசியுங்கள்.
ஏற்கெனவே இந்தப்படத்தைப் பார்த்தவங்க ஆட்டத்தில் கலந்துக்கக்கூடாது! கீழே இருப்பவர்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களா?
இது தான் சிரிப்பாச் சிரிச்சுடுச்சே நிறையவே!
நேற்றுஅல்லது முந்தாநாள் வீடு பற்றிப் பேச்சு வருகையில் அதிரா அவருடைய இலங்கை வீட்டை நினைவு கூர்ந்திருந்தார். எனக்கும் எங்க அம்பத்தூர் வீடு நினைவில் வந்தது. கீழே வீட்டு வாசலில்தெருவுக்கே நிழல் கொடுத்துக் கொண்டிருந்த வேப்ப மரம். இப்போ இருக்கா இல்லையானு தெரியலை. வெட்ட வேண்டாம் என வேண்டிக் கேட்டுக் கொண்டோம். :(
வீட்டிற்குள் நுழையும் வாயில்.உள்ளே வராந்தா, அடுத்துக்கூடம். முக்கிய நுழைவாயில்க் கதவுக்கும் வராந்தாக் கதவுக்கும் இடையே பத்து அடிக்கும் மேல் இடம் விட்டிருந்தோம்.
மரப்பசுமைக்குப் பின்னர் பச்சையாய்த் தெரிவது மாடியின் மேல் முதல் தளத்தில் போட்டிருந்த ஷெட்!
வீட்டு வாசலில் அமர்ந்து கொள்ள பெஞ்ச் போட்டிருந்தோம். மாலை வேளைகளில் அதில் உட்கார்ந்து புத்தகம் படிக்க, டேப் ரிகார்டர் போட்டுக் கேட்க, அக்கம்பக்கம் உள்ளவர்களோடு அங்கிருந்தபடியே அரட்டை அடிக்க என நினைவுகள், நினைவுகள், நினைவுகள்!
மேலே உள்ள படங்கள் எல்லாம் 2016 ஆம் ஆண்டில் எடுத்தவை. கீழே பார்க்கப் போகும் படங்கள் 2011 ஆம் ஆண்டில் நாங்க வீட்டை விட்டுக் காலிசெய்ய நேர்ந்ததற்கான காரணங்களுடன் கூடிய படங்கள். வீட்டு வாசலில் ஒரு பக்கம் ஜல்லிமலை, இன்னொரு பக்கம் மணல் குன்று. வழியில் எல்லாம் இரும்புக் கம்பிகள். செங்கல்கள்!
இந்த மணல் குன்று கரைந்தால் தான் நாங்க வீட்டுக்குள்ளிருந்து வெளியே வர முடியும். வெளியே இருந்து உள்ளே வர முடியும். இதைக் குவித்திருந்த நாளன்று என் மாமனாரின் ச்ராத்தம். யாருமே வர முடியாமல் பக்கத்துக் குடியிருப்பு வளாகத்தின் வழியாக எங்க சுற்றுச் சுவர் உயரம் கம்மி என்பதால் எல்லோரும் புரோகிதர்கள் உட்பட ஏறிக் குதித்து வந்தார்கள். பால்காரர் இதை எல்லாம் பார்த்து விட்டுப் பாலே கொடுக்கவில்லை.
நாங்க எங்க வீட்டிலிருந்து மண்வெட்டி, பான்டு போன்றவை எடுத்து வந்து வாசல் மணல் மலையைக் கொஞ்சம் நகர்த்திவிட்டுச் சரி செய்து வீட்டுக்குள் ஒரு காலையாவது உள்ளே நுழையும்படி செய்தோம்.
அந்தச்சமயம் வந்த கிருஷ்ணன் பிறப்பின் முதல்நாள் தான் முதல் முறையாகத் தண்ணீர் வீட்டுக்குள் வந்தது. காலை மூன்று முதல் எட்டு மணி வரை தண்ணீரை இறைத்துக் கொட்டி விட்டுப் பின்னர் செய்த பக்ஷணங்கள் இவை. கிருஷ்ணனிடம் உனக்கே இது நியாயமா எனக் கேட்டேன் அன்று.
இடர் விலக வேண்டும் எனக் கிருஷ்ணன் பிறப்புக்குப் பின்னர் வந்த மஹாசங்கடஹர சதுர்த்தி அன்று செய்த கணபதி ஹோமம். இந்த ஹோமம் செய்து சரியாய் ஒரே மாதம் தான் அந்த வீட்டில் இருந்தோம். அதன் பின்னர் அந்த வீட்டைக் காலிசெய்து கொண்டு என் நாத்தனாரின் ஓரகத்தி வீட்டுக்குக் குடித்தனமாகப் போனோம். அடுத்து வந்த மாதங்களில் அம்பேரிக்கா போனதால் அங்கே எடுக்கப்பட்ட முடிவு தான் ஶ்ரீரங்கத்துக்குக் குடித்தனம் வருவது.
அம்பத்தூர் வீட்டுக் கூடத்தில் நடுவில் அமைக்கப்பட்ட சுவாமி அலமாரி. மேல் தட்டில் ராமரும் கீழே மண்டபத்தில் விக்ரஹங்களும் வைத்திருந்தோம். மண்டபத்தை அங்கேயே கொடுத்து விட்டுவந்து விட்டோம்.
இது அம்பத்தூரில் ஒரு கார்த்திகை அன்று எடுத்த படம். 2010 ஆம் வருடம் என நினைக்கிறேன்.
கொல்லைத் தோட்டத்தில் நம்ம செல்லம் படுத்துக் கொண்டிருக்கையில் ஃபில்ம் காமிராவில் எடுத்த பழைய படம்.
வீட்டுக்குள்ளே தண்ணீர் வந்தப்போ மாடிப்படி அடியில் தேங்கி இருந்த தண்ணீரில் காணப்பட்ட நண்டுகள்.
இந்த மீன் கொத்தி நாங்க அந்த வீட்டுக்குப் போனதில் இருந்து எனக்குப் பழக்கம். எங்க கொல்லைக் கிணற்றுக்குள் டைவ் அடித்துப் போகும். ஒருநாள் மதியம் கிணற்றில் இறங்கி விட்டு ஓய்வு எடுத்தபோது எடுத்த படம். இதுவும் 2009 அல்லது 2010இல் இருக்கும்.
இதைத் தான் பாரிஜாதம் என்பார்கள். எல்லோரும் பவளமல்லிப் பூவைப் பாரிஜாதம் என்கின்றனர். ஆனால் இது தான் உண்மையில் பாரிஜாதம். வாசனை அக்கம்பக்கமெல்லாம் பரவும். ஊரைத் தூக்கும்.
ஹாஹாஹா, இதுக்கு முன்னால் தான் ஆறு மாசத்துக்கு ஒரு முறை பிரசவத்துக்கு ஒரு மியாவ் வந்துடும். அதுக்குப் பிரசவம் பார்த்துப் பத்தியம் வடிச்சுப் போட்டுனு எனக்கு ஒரே அலுப்பா இருக்கும். இருந்தாலும் நல்ல பொழுது போக்காத்தான் இருந்தது. அதைத் தான் நாய்கள்........ :( குட்டிகளும் சேர்ந்து அம்மாவுடன் போய்ச் சேர்ந்து விட்டன. இது அதற்கு அப்புறமா வந்ததுனு நினைக்கிறேன். கொல்லைக்கிணற்றடியில் காற்றாடப் படுத்து இருந்தப்போ எடுத்த படம். வட்டமாய்த் தெரிவது கிணறு.
முன்னெல்லாம் கௌதமன் சார் ஞாயிறன்று எங்கள் ப்ளாகில் படங்கள் போடுவார்.அதற்கேற்றாற்போல் போட்டிப் படம் எங்கே இருந்தாவது எடுத்து வந்து போடுவேன். இப்போல்லாம் சுற்றுப்பயணப் படங்கள் வருவதால் போடுவதில்லை. இன்னிக்கு அதுவும் நினைப்பு வந்தது. எல்லோரும் பார்த்து ரசியுங்கள்.
சில துயரங்களுடன் நினைவுகள் இனியவை அம்மா...
ReplyDeleteவாங்க டிடி.நீங்க சொல்வது சரி!
Delete/கீழே இருப்பவர்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களா?// - அதில் அப்பாவியாக இருக்கும் ஆணை எனக்குத் தெரியும் என்றே நினைக்கிறேன்.
ReplyDeleteஹாஹா நெ.த.என் சித்தப்பா(அசோகமித்திரன்)அவர் வீட்டு வாசல் தோட்டத்தில் எடுத்த படம் இது. அன்று தான் நாங்க முதல் முதலாகத் தனிக்குடித்தனம் செய்யக் கிளம்பிட்டு இருந்தோம். கூட வந்தவர்கள் என்மாமியார்,சின்னமைத்துனர்,என் அம்மா,என் சித்தி, சித்தப்பா,குழந்தைகள் மூவர், என் இரண்டாவது நாத்தனார் அவர்கணவர், என்சித்தியின் நாத்தனார்,அவங்க குழந்தைகள் என சுமார் பத்துப் பேருடன் போனோம்.ரங்கநாதன் தெரு ரத்னா ஸ்டோர்ஸில் தான் குடித்தனத்துக்கான ஜாடிகள்,பாத்திரங்கள் அம்மா வாங்கித் தந்தார்.ஒரு ஜாடி இன்னமும் இருக்கு.
Deleteஅம்பத்தூரில் கீழ்த்தளத்தில் வெள்ளம் வந்ததால்தான் அந்த ஃபோபியாவில் 65ஆவது மாடியில் வீடு வாங்கிக் குடிபோய்விட்டீர்கள்?
ReplyDeleteஇல்லை, நெ.த.சொல்லப் போனால் வீட்டை இடிச்சுக் கட்டறதாகத் தான் இருந்தார். அதுக்குள்ளே எங்க பையர் தான் இனிசென்னை வேண்டாம், வேறே எங்கேயானும் ஒரு மாறுதலுக்குப் போங்கனு சொன்னார். இங்கே வந்தோம். இங்கேயும் முதலில் இருந்த வீடு அவருக்குப் பிடித்திருந்தாலும் வாடகை ஜாஸ்தி, நாலாவது மாடினு ஒத்துக்கலை. அப்புறமாப் பிள்ளையும், நானுமா எப்படியோ பேசி சமரசம் செய்து ஒத்துக்க வைச்சோம். இப்போ இங்கேயே பிடிச்சுப் போச்சு!
Deleteபெருமாள் கிருபைல, இப்போ இருக்கும் வீடும் நல்லா இருக்கு, இடமும் நல்லா இருக்கு. நலமுடன் இருங்கள்.
Deleteஆமாம், இது பூலோக வைகுண்டம் தான் நிஜம்மாவே. அவன் கடைக்கண் பார்வையில் இருக்கோமே!
Delete/கடைக்கண் பார்வை/ - இதுக்கு என்ன நிஜமான அர்த்தம்? மண்டபத்துல ஏறி பெருமாளை சேவிக்க முடியலை என்பதால் கீழிருந்தே நீங்க சேவிக்கறீங்க. அவன் கடைக்கண்ணால் உங்களைப் பார்க்கிறான்னு எடுத்துக்கவா? ஹா ஹா
Deleteஉங்களுக்குத் தெரியாமல் இருக்காது. தெரியவும் தெரியும். எனினும் எனக்குத் தேர்வு வைப்பதால் சொல்கிறேன்.
Deleteமூன்று கண்கள் இறைவனுக்கு/ இங்கே விஷ்ணுவுக்கும் மூன்று கண்கள் உண்டு என ஐதிகம். ஆகவே நேரடியாகப் பார்வையில் படும்படி நாம் நின்றால் நெற்றிக்கண் பார்வையில் படுவோம். அது அவ்வளவு உகந்தது அல்ல என்பது ஆன்றோர் கருத்து. நன்மை பயக்காது. மற்ற இரு கண்கள் சூரிய, சந்திரர்கள் எனக் கொள்ளப்படும். அவற்றின் நேர் பார்வையும் நமக்கு நன்மை பயக்காது. இரண்டு கண்களின் கடைக்கண் பார்வை தான் நமக்கு வேண்டும். இதைத் தான் கருணா கடாக்ஷம் என்பார்கள். கடைசி அக்ஷத்தின் பார்வை நம் மீது பட வேண்டும். இது தான் கருணை வடிவானது. அருள் பாலிக்கக் கூடியது. அதனால் தான் நேருக்கு நேரே சந்நிதியில் நின்று பார்க்கக் கூடாது என்பார்கள். இந்தக் கடைக்கண் பார்வையே நமக்கு சகலமும் தரக் கூடியது! ஆகவே எப்போது எந்த இறைவன்/இறைவியைத் தரிசித்தாலும் நேருக்கு நேர் நின்று தரிசிக்காமல் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றே தரிசிக்க வேண்டும்.
where is suppu kutti?
ReplyDeleteவாங்க திவாண்ணா, ஹிஹிஹி, ஜாலியா இருக்கு! சுப்புக்குட்டியை எல்லாம் எடுக்கிறதுக்குள்ளே கையும், காலும் நாட்டியம் ஆடாதா?
Deleteஆமாம்... எங்கள் ப்ளாக்கில் முன்னாட்களில் ஞாயிறு படங்கள் ஒற்றையாய் வரும். பின்னர்தான் மாறியது.
ReplyDeleteஆமாம் ஶ்ரீராம். அதான் பழைய பதிவுகளைப் பார்க்கையில் நினைத்தேன்.
Deleteமுதல் படம் நீங்கள், உங்கள் இளைய சகோதரர், மூத்த சகோதரர்...! இரண்டாவது படம் நீங்களும் மாமாவும்! மூன்றாவது படம் பற்றி அப்போது நான் போட்ட கமெண்ட் உங்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது!
ReplyDeleteரைட்டோ ரைட்டு! 100/100. இரண்டாவது ஏற்கெனவே போட்டிருக்கேன். மூன்றாவது போட்டப்போ என்ன கமென்டினீங்கனு நினைவில் இல்லை. அப்பாதுரை கமென்டி இருந்தார். லேசா அது நினைவில் இருக்கு.
Deleteஆஆஆ !! ஸன்டேஸ்ல போஸ்ட் .நான்லாம் லேட்டாதான் வருவேன் ..கர்ர்ர் 4 ஸ்ரீராம் :) நானும் ஈஸியா கண்டுபுடிச்சிட்டேன் :)
Deleteபடங்களைப் போடும்போது உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன், ஏஞ்சல்! ஸ்ரீராம் ஏற்கெனவே பார்த்திருப்பார் என்பதால் சுலபமாகக் கண்டு பிடிக்கலாம். நீங்களும் கண்டு பிடித்ததற்கு மகிழ்ச்சி. கீழே பாருங்க உங்க தலைவி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கண்டு பிடிக்க முடியலையாம். :)))))
Deleteஆமாம் ஏஞ்சல் நேற்று என்னாலும் அப்புறம் வர முடியலை....அதான் கீதாக்கா போஸ்ட் மிஸ் ஆகிப் போச்சு...சந்தைக்குப் போனது....அப்புறம் விட்டுப் போன ப்ளாக்ஸ் ஒன்னுரெண்டு வாசித்து வீட்டு வேலைகள் என்று...
Deleteஏஞ்சல் நானும் ஈசியா கண்டு பிடிச்சிட்டேன்...சத்தியமா!!!!
எனக்கு ரொம்பப் பிடித்த படம் அக்கா கூரைப்புடவையில் அந்த அழகானச் சிரிப்புடன் இருக்கும் படம்...அகத்தின் அழகு முகத்தில் தெரியும் எனும் அழகான படம்!!! இப்போதைய ஜாடை அப்போதைய ஜாடை அதில் அப்படியே
கீதா
//மூன்றாவது போட்டப்போ என்ன கமென்டினீங்கனு நினைவில் இல்லை. //
Deleteதேடிப் பார்த்திருப்பீங்கன்னு நினைச்சேன்!!!
//முதலாவது படம் நீங்கதான்னு நன்றாகத் தெரிகிறது! (வேறு யார் படத்தைப் போடப் போகிறீர்கள் என்ற லாஜிக் மட்டுமில்லை, முகத்தில் இப்போதைய ஜாடையும் தெரிகிறதே...
Deleteஇரண்டாவது படம் நீங்களே சொல்லிட்டீங்க... எல்லோருக்கும் கடைசியா வந்ததால டி என் பி எஸ் சி கொஸ்டின் பேப்பர் மாதிரி ஆகி விட்டது!//
இதான் நீங்க முன்னர் போட்ட கமென்ட். அதோடு என்னை ஏற்கெனவே பார்த்திருப்பதாகவும் சொல்லி இருந்தீங்க! ம்ம்ம்ம்ம்? ஆனால் இந்தப் படம் போட்ட 2012 ஆம் ஆண்டில் உங்களை நான் பார்க்கவே இல்லை. அதுக்கப்புறமாத் தான் பார்த்தேன். உங்களுக்கு மட்டும் எப்படினு அன்னிக்கே கேட்டிருந்தேன். பதில் சொல்லலை. கௌதமன் மட்டும் நீங்க என்னோட படத்தை அனுப்பி இருந்ததாய்ச் சொல்லி இருந்தார். எங்கேனு அவரும் சொல்லலை! :)))
இந்த விபரம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?
கூகுள் ப்ளஸ்ல பார்த்தேன் என்று நினைவு!
Deleteஅம்பத்தூர் வீட்டுக் கஷ்டங்கள் பற்றி நீங்கள் அப்போது எழுதி இருந்தவை நினைவில் இருக்கின்றன. கொடுமை. ஆனால் எங்களுக்கெல்லாம் அம்பத்தூர், ஆவடி என்றாலே அலர்ஜி.... சென்னையிலிருந்து எம்மா..........ந்தூரம் போகணும்...?!!!
ReplyDeleteஇல்லை ஶ்ரீராம்,இப்போ பாலங்கள், பெரிய பெரிய இணைப்புச் சாலைகள் வந்ததும் எதுவும் அதிக தூரத்தில் இல்லை. அம்பத்தூரில் இருந்து தாம்பரத்துக்கு நாங்க2010 ஆம் ஆண்டிலேயே முக்கால் மணி நேரத்திற்குள் போயிருக்கோம். காலை ராக்ஃபோர்டில் எழும்பூரில் இறங்கி டாக்சி/ஆட்டோ பிடித்தால் அரை மணி நேரத்தில் அம்பத்தூரில் அண்ணா வீடு. எங்க வீடு இருக்கும் தெருவுக்குப் பின்னால் தான் இருக்கு.
Deleteஆமாம் ஸ்ரீராம் எனக்கும் நினைவு வந்தது படங்களோடு போட்டிருந்தாங்க அக்கா வீட்டின் உள் படங்கள் எல்லாமும் போட்டிருந்தாங்க...
Deleteகீதா
இது நம்ம மனநிலைனு நினைக்கறேன் ஸ்ரீராம். ஒரு காலத்தில் பெருங்களத்தூரிலிருந்து ரெகுலராக தினமும் தி நகர் வரை வந்துகொண்டிருந்தேன். அப்போ, அம்பத்தூர் செல்வது ரொம்பத் தொலைவாத் தோணும் (சரியான பஸ் அமையணும்). இப்போ பெருங்களத்தூர் போவதே எங்கோ அடுத்த நகரத்துக்குப் போவதுபோல் தோணுது.
Deleteநான் என் 8-10ம் வயதுகளில் அம்பத்தூர் சென்றபோது, பொட்டல் காட்டில் ஒரு மரம் இருக்கும் (பஸ் ஸ்டாப்). அங்கு இறங்கி 1 1/2 கிலோமீட்டர் நடந்துபோகணும். அப்புறம் அதன் வளர்ச்சி பிரமிப்பு.
உண்மைதான். தூரம் என்பது மனதைப் பொறுத்தது போலும்!
Deleteஇப்போது என் மகன் சிறுசேரியில் பணியில் இருந்தான் (இப்போது மாறிவிட்டான்!) நான் இருக்கும் இடத்திலிருந்து என்னைப் பொறுத்தவரை அது வெகுதொலைவு. ஆனால் அவன் சாதாரணமாக தினசரி சென்று வந்து கொண்டிருந்தான். காலை எட்டரை மணிக்கு கிளம்புவான். இரவு பத்தரை மன்னிக்குத் திரும்புவான்!
அம்பத்தூரில் எங்க வீட்டிற்கு எதிர் விட்டுப் பொண்ணுக் கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் உண்டு. தினம் தினம் அம்பத்தூரில் இருந்து தரமணி வரை பேருந்தில் பயணிப்பாள். கொட்டும் மழையிலும். அம்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரம் இருக்கும் வீட்டிற்கு நடந்தே வருவாள்.
Deleteமுதல் தளத்தில் ஷெட்டா? சந்திரபாபு வீடு மாதிரி முதல் மாடிக்கு நேராகக் கார் போகுமா?!!!! வீட்டு வாசல் பெஞ்ச் அழகு. நகரத்தை விட்டு வெளியே... பரபரப்பில்லாத சூழல்... நன்றாய் இருந்திருக்கும்.
ReplyDeleteஹிஹிஹி, மொட்டையா ஷெட்டுனு எழுதிட்டேன். துணி உலர்த்தப் போட்ட கூரை அது. முதல் தளத்தில் மேலே கூரை கான்க்ரீட்டில் போடாமல் காற்று வரும்படி ஷெட்டாகப் போட்டிருந்தோம். அதுக்கு மேலே மொட்டை மாடி. அந்த மொட்டை மாடியில் தான் எங்க பையர் உபநயனம்,அவரோட கல்யாண நிச்சயதார்த்தம் எல்லாம் நடந்தது.
Deleteகொல்லைப்புறத்து செல்லம், பூனை படங்கள் முன்னரே பார்த்த நினைவு இருக்கு...
ReplyDeleteஆமாம்,ஶ்ரீராம், பேசும் பொற்சித்திரமே வலைப்பக்கம் பார்த்திருக்கலாம்.படங்களை அங்கேதான் பகிர்ந்து கொண்டு இருந்தேன். அப்புறமா அங்கே யாரும் வரதில்லைனு இதிலேயே போட ஆரம்பிச்சேன்.
Deleteஆமாம்... பவளமல்லி வேற, பாரிஜாதம் வேற... நாங்கள் தஞ்சையில் மருத்துவக்கல்லூரிக் குடியிருப்பில் இருந்த காலத்தில் எங்கள் தெருவில் ஒரு வீட்டில் பவளமல்லி மரம் இருந்தது. அதிகாலை அங்கு உதிர்ந்திருக்கும் மலர்களில் சிலவற்றை எங்கள் வீட்டு பூஜைக்கு எடுத்து வருவோம். தெரு முழுதும் மணக்கும்.
ReplyDeleteஎங்க வீட்டிலும் பவளமல்லி மரம் இருந்தது. வாசலில் முல்லைப் பந்தல் போட்டிருந்தோம். அந்தப் படம் தேடினேன், கிடைக்கலை!
Deleteஆனால் அப்போதும் ஞாயிறு புகைப்படங்கள் 99 சதவிகிதம் கே ஜி எஸ் தான் பொறுப்பு. எப்போதாவது விதிவிலக்குகளில் நாங்கள் பகிர்வோம்.
ReplyDeleteஓஹோ! ஶ்ரீராம், நான் கேஜிஜினு இன்னிக்கு வரை நினைச்சுட்டு இருந்தேன். இருக்கேன்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநல்ல நினைவலைகளுடன் கூடிய பதிவு. போட்டோக்களில் இருப்பவர்கள் (மூன்றிலும்) தாங்கள்தான் மெஜாரிட்டியாக இடம் பெற்றிருக்கிறீர்கள் என ஒரு அனுமானமாக நினைக்கிறேன்.சரியா?(தங்களை இதுவரை பார்த்ததில்லையாகையால் அப்படி நினைக்கிறேன். தவறென்றால் வருந்துகிறேன்.) அனைத்துமே அழகாக இருக்கின்றன.
தங்களது அம்பத்தூர் வீடு முன்புறமும், பூஜையறையும் மிக அழகாய் உள்ளது. வாசலில் நிழல் தரும் வேப்பமரம்... அதை நினைத்தாலே மனதுக்குள் இப்போதும் ஜில்லென்ற காற்று வீசுகிறது. எங்கள் பிறந்த வீட்டிலும் வாசலில் இப்படித்தான் வெட்ட வெளியை ஆக்கிரமித்து கொண்டு பெரிய வேப்பமரம் இருந்தது. மூப்பின் காரணமாக ஒரு பெரிய மழையில் அது விழுந்து விட்டது என நினைக்கிறேன்.
அம்பத்தூரில், அதை வெட்ட யாருக்கு மனசு வரும்? வெட்டியது கார்ப்பரேஷனோ? இல்லை.. தங்களிடமிருந்து வீடு வாங்கியவர்களோ? விபரங்கள் அறிந்ததில்லை.! எதுவாயினும் இதுவரை வெட்டாமல் இருந்தால் நன்றாக இருக்கும். நானும் உங்களுடன் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
தங்கள் செல்லங்கள் படங்கள் அழகாயிருக்கின்றன.பாரிஜாத மலர் மிக அழகு. எல்லா படங்களுமே நன்றாக உள்ளது. நானும் உங்கள் (சற்று புரியாதவிடங்களிலும்,புரிந்து கொண்டவாறு) நினைவலைகளுடன் சேர்ந்து ரசித்தேன். நினைவுகள் என்றுமே மனதிற்குள் இனியதுதானே! அதை பகிரும் போது மகிழ்ச்சி இரட்டிப்பாகும். பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, நீங்க சொல்லுவது சரியே! ஒரு நவராத்திரியின் போது மதுரை டவுன் ஹால் ரோடு கிருஷ்ணா ஸ்டுடியோவில் எடுத்த படம் இது. அப்பாவின் நண்பர். என் கல்யாணத்திலும் அவங்க தான் ஃபோட்டோ! இரண்டாவது நானும் அவரும் கல்யாணம் ஆகி ஒரு மாதத்தில் எடுத்தது. மூன்றாவது படம் என் அண்ணா கல்யாணத்தில் எடுத்தது.அதுவும் என் சித்தப்பா தான் எடுத்தார். நெகடிவ் அவருடன் இருந்தது. இப்போ எங்கேஇருக்கோ? எனக்குக் கல்யாணம் ஆகி 5 வருடங்கள் கழித்து அண்ணா கல்யாணம். அம்பத்தூர் வீடு பார்க்கும் எவருக்கும் உடனேபிடித்து விடும்.வீடு வாங்கியவர்கள் தான் வெட்டி இருப்பார்களோ என நினைக்கிறேன்.
Deleteமுதல் படம் மாமாவும் அவருடைய தம்பி, தங்கை ஆகியோரும் என்று நினைக்கிறேன். அது என்ன சாமியார்கள் செய்வது போன்று தலைக்குப் பின்னர் ஒரு ஒளிவட்டம்.
ReplyDeleteJayakumar
மாமாவுக்கும் அவர் தம்பி, தங்கைகளுக்கும் நிறைய வயசு வித்தியாசம்!:) அதோடு எல்லோரும் உயரம். மேலும் அவங்கல்லாம் இருந்தது மின்சாரமே வராத குக்கிராமம். தலைக்குப் பின்னால் எனக்கு ஏதும் ஒளிவட்டம் தெரியலை. ஒருவேளை ஸ்டுடியோ விளக்கின் ஒளியாக இருக்கலாம்.
Deleteமாமா பத்து வயசில் படிக்கச் சிதம்பரம் போனவர் பின்னர் 26 வயசில் தன் கல்யாணத்தின் போது தான் குடும்பத்தோடு சேர்ந்து இருக்க ஆரம்பித்தார். அது வரைக்கும் உறவினர்கள் வீடு தான்! தம்பி, தங்கைகளோடு அதிகம் பழகினதே இல்லை! :)))))) நாங்க தான் அடிச்சுப்போம் மூணு பேரும். அப்பா இல்லைனா ஒரே ரகளை தான்! :)))))
Deleteஜெயக்குமார் சார்.... எப்படி பெண்களின் மனநிலையை கணிப்பதில் கோட்டை விட்டுட்டீங்க? அவங்களுக்கு அவங்க உறவினர்கள்தானே முக்கியம். அதுனால நான் சுலபமா இது கீசா மேடம், அவங்க தம்பி, அண்ணன் இவங்களோட போட்டோன்னு கண்டுபிடித்துவிட்டேன்.
Deleteயாராவது கணவனின் சிறிய வயது குடும்ப போட்டோவை பத்திரமா பாதுகாத்து, அதையும் இணையத்துல வெளியிடுவாங்களா? (பெண்கள்)
நெ.த. பொதுவாகவே ஜேகே அண்ணாவின் கணிப்பு தவறாகவே இருக்கிறது. ஹிஹிஹி, தீபாவளிக்கு வாங்கிய என் புடைவைகளைப் படம் எடுத்துப் போடும்போதும் அவருக்கு எல்லாமும் ஒரே நிறமாகத் தோன்றுகிறது! :))))) அதோட என் கணவரின் தம்பி, தங்கைகள் எல்லாம் முதல் முதல் ஃபோட்டோவுக்கு நின்றதே என் கல்யாணத்தில் தான் இருக்கும்! :)))) அவரோட சிறு வயது ஃபோட்டோவெல்லாம் ஏது? கிராமத்தில் அல்லவோ வளர்ந்தார்! இது என் அண்ணா பெண் தேடிக் கண்டு பிடித்து எனக்கு அனுப்பினாள். அதிலிருந்து போட்டவை! என்னிடமும் இவை இல்லை! :) ஆகவே நான் பத்திரப்படுத்தவில்லை. இதை ஏற்கெனவே போட்டப்போ சொல்லி இருப்பேன்.
Deleteகீதாக்கா நீங்க ரொம்ப பரிச்சயமான முகமா இருக்கீங்க ..அதோட உங்க features அப்படியே இருக்கு மாறவேயில்லை .அதே புன்னகை .
ReplyDeleteஅந்த மடிசார் புடவை என்ன கலர் ???
ஹாஹா, ஏஞ்சல்! அப்போ என்னைப் பார்க்கிறவங்க எல்லோருமே மு.மு. மாதிரி இருக்கிறேன் என்பார்கள். அவங்க நல்ல உயரம். நான் அவ்வளவு உயரம் இல்லை. அண்ணா கல்யாணத்தில் தாலி முடிவதற்காகக் கட்டிக்கொண்ட என்னோட கல்யாணக் கூரைப்புடைவை இது. அரக்கு நிறம். அரக்கு நிற ப்ளவுஸ்.
Deleteமழைக்கு எங்களுக்கு மீன் வந்திருக்கு சென்னையில் ஆனா அஇவ்ளோ பெரிய நண்டா அவ்வ் !!!
ReplyDeleteபெரம்பூர் லோகோ வில்லிவாக்கம் அம்பத்தூரில் எப்பவுமே போட் சவாரி போகுமளவு மழை பெய்யும் .
ஆனா உங்க வீட்டு முன்னாடி கொட்டி வச்சிருக்கிற மணல் ஜல்லி பார்த்தா மயக்கம் வருது .அடுத்தவங்களுக்கு தொல்லை தருமென்ற உணர்வு கூட இல்லை பாருங்க அவர்களுக்கு :( அது முன் கட்டிடம் அபார்ட்மெண்டா ??
ஏஞ்சல், எங்களுக்கு மழை பெய்யும்போது மேலே இருந்து மீன்கள் விழும்.தெருத் தண்ணீர் குளமாகத் தேங்கி இருக்குமா, அதில் மீன்கள் இருக்கும்.வீட்டுக்கு வந்ததில்லை. மற்றபடி சுப்புக்குட்டிகள் விதம் விதமாக வருவாங்க. பயத்தில் படமெல்லாம் எடுக்கத் தோணாது. அபார்ட்மென்ட் எங்க வீட்டுக்குப் பக்கமும், எதிரேயும் ஒரே சமயம் கட்டினாங்க! அதனால் அனுபவித்த தொல்லைகள்.
Deleteமல்லிச்செடி ஒரு வகை குட்டி ரோஜா மாதிரி இருக்குமே அதுவும் மல்லியாக்கா ?
ReplyDeleteஎங்க வீட்டில் ஊசி மல்லி அப்புறம் அந்த ரோஸ் மாதிரி பெரிய மல்லி இருந்தது .நிறைய பூக்கும் ..
கனகாம்பரம் நீலாம்பரம் எல்லாம் இருந்தது .அம்பத்தூர் உங்க பக்கம் குளுமையா இருந்திருக்கும்னு நினைக்கிறேன் .
கவலைப்படாதீங்க மரத்துக்கு ஒன்னும் ஆகாது .
அந்த பூஸார்கள் படம் பார்த்திருக்கேன் ...மரத்துக்குக்கீழே
ரிலாக்ஸ்டாக படுத்திருக்கு பூஸார்
ஏஞ்சல், அடுக்கு மல்லி, குண்டு மல்லி, ஒற்றை மல்லி என விதம் விதமாக இருந்தன. நந்தியாவட்டையும் ஒற்றை, அடுக்கு இரண்டும் இருந்தது. கனகாம்பரம் அவருக்குப் பிடிக்காது என்பதால் வைக்கலை. ஆனால் டிசம்பர்ப் பூக்கள் எனச் சொல்லும் நீலாம்பரம் தானாக வரும். அம்பத்தூர் குளுமையோ இல்லையோ, எங்க வீட்டில் கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்தால் கொல்லைப் பக்கமிருந்து காற்றுத் தவழ்ந்து வரும். :))))
Deleteவீடு கிளி கொஞ்சுகிறது எனப் பேச்சுக்குச் சொல்லுவாங்க. எங்க வீட்டில் 2,3 மாமரங்கள் வேறே, வாசலில் வேப்பமரம் வேறே! ஆகையால் உண்மையிலேயே கிளிகள் கொஞ்சும்.குயில்கள் கூவும்,அடிச்சுக்கும்! காக்கை, குயில் சண்டை அமர்க்களப்படும்.
Deleteபழைய படங்களை பார்க்கும் போது வரும் நினைவுகள்.....
ReplyDeleteஅனைத்தும் ரசித்தேன்.
நன்றி வெங்கட்!
Deleteகீசாக்கா அனைத்துப் படங்களிலும் இருப்பது நீங்க இல்லையோ? எனக்கு அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை..
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,என்ன போங்க , இது கூடக் கண்டுபிடிக்க முடியலையே! எல்லாம் நான், நானே தான். முதல் படம் என் அண்ணா, நான், தம்பி! இரண்டாம் படம் நானும் மாமாவும் கல்யாணம் ஆகி ஒரு மாதத்துக்குள். மூன்றாம் படம் என் அண்ணா கல்யாணத்தில் எடுத்தது.
Deleteஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ் அப்படித்தான் நினைச்சேன் ஆனா நீங்க ஜே கே ஐயாவுக்கு குடுத்த பதிலில் குழம்பிட்டேன்ன்ன்ன்
Deleteஊசிக்குறிப்பு:)
மாமாவுடன் போகும்போது ஹீல்ஸ் போட்டுப் போய் வாங்கோ கீசாக்கா:)
சரியாப் போச்சு போங்க அதிரடி,ஜேகேஅண்ணா அது மாமாவும் அவர் தம்பி, தங்கைனு சொன்னதுக்கு பதிலாக அங்கே குக்கிராமத்தில் எப்படிப் படமெல்லாம் எடுக்க முடியும்னு பதில் கொடுத்தேன். அதோடு மாமா பத்து வயசு வரைக்கும் தான் வீட்டில் அப்பா, அம்மா, அக்காவோடு சேர்ந்திருந்தார். சின்னத்தங்கை பிறந்தப்புறமா அவர் வெளியே தான் வளர்ந்தார். :)))) என்னோட கல்யாணப் பதிவுகளிலே இதைப் பற்றிச் சொல்லி இருப்பேன். நீங்க அந்தப் பதிவுகள் எல்லாம் படிச்சதில்லை. :)
Deleteஅதிரடி, நான் செருப்புப் போட்டுக்கொள்ளுவதே எனக்கெனச் சிறப்புத் தயாரிப்பு. எப்போவுமே ஹீல்ஸ் போட்டது இல்லை. இப்போஎன்ன ஆச்சு? அமிதாப் பச்சன்,ஜெயபாதுரி இல்லையா?அப்படி வைச்சுக்கோங்களேன்.:))))))
Deleteஅம்பத்தூர் வீடு உங்கட சொந்த வீடோ... பின்னர் வித்தாச்சோ...எதுக்கு அப்படி மணல் கொட்டினார்கள். வீடு நல்ல வசதியானதா இருக்கு... வேப்பமரம், பின்னேரங்களில் அரட்டை அடிக்கும் பெஞ் ... என்றெல்லாம் சொல்வதைக் கேட்க எனக்கே கவலை வருது...
ReplyDeleteஅதிரடி, சொந்த வீடு தான். பார்த்துப் பார்த்துக் கட்டினோம் என்றால் பொய்யில்லை. நிஜம்மாவே அந்த வீட்டுக்கு எதிரே ஒரு வீட்டில் குடி இருந்து கொண்டு தினம் தினம் வேலைக்கு ஆள் வரும்போது அன்னிக்கு என்ன வேலைனு கேட்டுத் தெரிந்து கொண்டு நாங்களும் க்யூரிங் செய்யத் தண்ணீர் இறைச்சு ஊற்றினு எல்லாமும் செய்திருக்கோம். அப்போல்லாம் சாரம் கட்டியதில் ஏறிக் கூடத் தண்ணீர் ஊற்றி இருக்கேன். எங்களோடு அப்போ எங்களிடம் இருந்த ப்ரௌனியும் கூடக் கூட வரும். இத்தனைக்கும் அதுக்கு ஒரு கால் போலியோ அட்டாக்! ஆனாலும் நல்லா சுறுசுறுப்பா இருக்கும். தண்ணீர் இறைக்கக் கிணற்றுக்குப் போனால் கூடவே வரும். தண்ணீர் வாளியை எடுத்துக் கொண்டு திரும்பும்போதும் கூடவே வந்து சாரத்தில் ஏறுவதைப் பார்த்துக் கொண்டு வால் ஆட்டிக் கொண்டு நிற்கும்.
Deleteஎப்பவுமே ஒரே ஊரில் ஒரே வீட்டில் வாழ்வோர்தான் கொடுத்து வைத்தவர்களோ...
ReplyDeleteமாடிப்படி வரை நண்டு வந்ததோ அவ்வ்வ்வ்வ்
உண்மை அதிரா. என் அப்பா, அம்மாவை அப்படித் தான் மதுரையை விட்டு வராதீங்கனு எவ்வளவோ சொன்னேன். கேட்கலை. கடைசியில் அப்பா மதுரையில் கட்டிய வீட்டையும் விற்று விட்டு! இப்போ மதுரைனாலே ஏதோ அந்நியமாய்த் தெரியுது! நண்டு வீட்டுக்குள்ளேயே மெல்ல மெல்ல ஊர்ந்து வந்திருக்கு. நாங்க பார்த்துட்டுப் பிடிச்சு வெளியே விடுவோம்.
Deleteகிட்டத்தட்ட ஒரு சின்ன மிருகக்காட்சி சாலை மாதிரித் தான் எங்க வீடு அப்போ இருந்தது. அக்கம்பக்கம் எல்லோருமே சொல்லுவாங்க. உங்க வீட்டில் மட்டும் என்ன இப்படி எல்லாம் நடக்குது என! அதுங்களுக்குத் தெரியும் போல இங்கே வந்தால் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க என்பது!
Deleteநிறைய சுவாமிப் படங்களாக அடுக்கி வச்சிருந்திருக்கிறீங்க.. அதை எல்லாம் விட்டிட்டு வந்திட்டீங்களோ...
ReplyDeleteமரம் கொத்திப் பறவையைப் போலே... கீசாக்காவின் பாரிஜாதத்தைக் கொத்திப்போனவர் யாரோ....
இங்கு எங்களிடம் பாரிஜாதம் இருக்கு.. சமருக்குப் பூப்பா, ஆனா இன்னும் அடர்த்தியா இருக்கும்..
சுவீட்16, சில படங்களை எடுத்துட்டு வந்துட்டோம். ஐயப்பன் படம், மதுரை மீனாக்ஷி படம் இப்படிச் சில முக்கியமான படங்கள். மற்றப் படங்களை அங்கேயே உள்ள பிள்ளையார்/ராகவேந்திரர் கோயிலுக்குக் கொடுத்துட்டோம். மரம் கொத்தி இங்கே அம்பத்தூருக்கு வந்ததில்லை. ராஜஸ்தானில் இருந்தப்போ தினம் தினம் வரும். பெரிய கருவேல மரத்தில் நடுத்தண்டில், (மூன்று, நான்கு பேர் கையை விரித்துக் கட்டும்படி அவ்வளவு பெரிய நடுமரம்) ஓட்டை போடும். சப்தம் ஆசாரி வேலை செய்வது கெட்டது! அவ்வளவு அழகாய்ச் சப்தம் கேட்கும். பாரிஜாதமெல்லாம் எங்கே போனதோ! :(
Deleteசெல்லங்கள் உறங்கும் அழகோ அழகு... அனைத்தையும் மிஸ் பண்ணுவீங்களென நினைக்கிறேன்...
ReplyDeleteஆமாம், இங்கே நாலாம் மாடி. செல்லமெல்லாம் வைச்சுக்க முடியாது! நினைத்துப் பார்ப்பதோடு சரி!
Deleteஎல்லாப் படங்களும் அடையாளம் தெரியும் படி தான் இருக்கின்றன.
ReplyDeleteஅம்பத்தூர் செல்லங்கள் அழகு. சுப்புகுட்டியும் வரும்னு எதிர்பார்த்தேன்.
நீங்கள் இருவரும் ரொம்ப ஸ்மார்ட்.
வீட்டுப் பக்க மணல் குன்றுகள் அனியாயம். எத்தனை மனக்கஷ்டம் பட்டிருப்பீர்கள்.
இப்பொழுதாவது காவேரி கரையோரம் அரங்கண் கோபுரத்தோடு வீடு கிடைத்ததே
அதுவரை அவன் இஷ்டம் பிரகாரம் நல்லதே நடக்கட்டும்.
நீங்க ஏற்கெனவே பார்த்திருக்கலாம் ரேவதி! சுப்புக்குட்டியைப் படம் எடுக்கும் அளவுக்கு தைரியம் எல்லாம் இல்லை.
Deleteவீட்டுப்பக்கம் வேலை நடக்கையில் மனக்கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. இரவு சரியாவே தூக்கம் வராது. ராத்திரி தான் கற்களை உடைக்கிறது, கம்பி அறுப்பது எனச் செய்வார்கள். ஒரே சத்தம்.
பழைய படங்கள் என்றும் பொக்கிசமே ..
ReplyDeleteமுதல் படம் ரொம்ப அழகு ..நானும் அண்ணா களுடன் இப்படி எடுத்த படம் ஒன்று உள்ளது அதில் மீ குட்டி பாப்பா..
பூஜையறை படம் வெகு பக்தி ..
போட்டுட்டுச் சொல்லுங்க அனுராதா. கட்டாயமாய் வந்து பார்க்கிறேன். இன்னும் படங்கள் இருக்கின்றன. தேடணும். ஸ்கான் செய்து போடணும். :))
Deleteநினைவுகளில் இன்பம், துன்பம் இரண்டும் இருக்கு.
ReplyDeleteசிறு வயது படம், உங்கள் கண்வருடன், மடிசார் புடவையில் எல்லாம் நீங்கள்தான்.
சிறு வயதில் நீங்கள் இருவரும் இருக்கும் படம் இப்போதுதான் பார்க்கிறேன் . பொட்டு மட்டும் போட்டோ ஸ்டியோ வில் எனக்கு வைத்து விட்ட மாதிரி இருக்கு கோபி பொட்டு பெரிதாக.
நாங்கள் ஸ்டியோவில் சின்ன் அவயதில் எடுத்தோம் கோவையில் ,அப்போது சின்னதாக வட்ட பொட்டு வைத்து இருந்தேன் , படம் பார்க்கும் போது என்ன இது இவ்வளவு பெரிய கோபி பொட்டு எப்படி வந்தது? என்று கேட்டால் நான் தான் பளிச் என்று இருக்கட்டும் வைத்தேன் என்றார்.
உங்கள் வீட்டில் போனமுறை மழை வெள்ளம் வந்த படங்கள் பகிர்ந்த நினைவு இருக்கு.நீங்கள் அங்கு இருக்கும் போதும் தண்ணீர் வந்ததா? நண்டு பயமுறுத்துகிறது.
வளர்ப்பு செல்லம் படம் மனதை வருந்த வைக்கிறது. வளர்த்த செல்லம் பிரிவு மிகவும் கொடுமை.
பூனைக்குட்டி, வேப்பமரம் எல்லாம் அழகு.
நான் தான் கோமதி. சிறு வயதில் எங்கள் படம் முன்னால் போட்டிருக்கேன். 2007/2008 அல்லது 2009 ஆம் வருஷத்தில் இருக்கலாம். பொட்டு நான் கோபி மாதிரித் தான் வைச்சுப்பேன். ஃபோட்டோவில் பொட்டு விழவில்லை என என் கணவரின் நண்பரும் உறவினருமான ஒரு அண்ணா சிவப்புப் பேனாவால் வைத்து விட்டார். ஸ்டுடியோவில் எல்லாம் போய்ப் படம் எடுத்ததே இல்லை. சின்ன வயது ஃபோட்டோ அப்பாவின் நண்பர் எடுத்த முதல் படம் தவிர! பின்னர் ஒரு முறை எங்க பெண்ணுக்குப் பூத்தைத்து விட்டு ஸ்டுடியோவில் படம் எடுத்தோம். போனமுறை வெள்ளம், மழை வந்தது 2015--16 ஆம் வருடங்களில். தண்ணீர் வந்த படங்களும் போட்டிருக்கேன். 2011 ஆம் வருஷப் பதிவுகளில் இருக்கும். பார்க்கிறேன். வளர்ப்புச் செல்லங்களைப் பிரிவது என்பது ரொம்பக் கஷ்டத்தைக் கொடுக்கிறது. எங்க மோதி போன பின்னால் நான் சாப்பாடு கூடச் சரியாச் சாப்பிடாமல் இருக்கவும் அவருக்குக் கொஞ்சம் பயமா இருந்ததாம். அதான் அதுக்கு அப்புறமா செல்லங்களே வேண்டாம்னு வைச்சுட்டோம்.
Deleteபாரிஜாதபூ அழகு.மாயவரத்தில் பவளமல்லி வைத்து இருந்தேன் பெரிய சிமெண்ட் தொட்டியில்
ReplyDeleteஇப்போது ரங்கனையும், காவேரிக்கரையையும் பார்த்துக் கொண்டு இருக்க முடிவது மகிழ்ச்சி.
ஆமாம் கோமதி. அரங்கனின் கடைக்கண் பார்வையில் இருக்கும்படி அவனே அழைத்துக் கொண்டு வைத்திருக்கிறான். ஆகவே மகிழ்ச்சி தான். அவன் அருள் இருந்தால் போதுமானது.
Deleteகீதாக்கா நீங்களும் மாமாவும்...நன்றாகத் தெரிகிறது...சத்தியமா இந்த ஃபோட்டோஸை முன்னாடி பார்த்ததில்லை...சிரிப்பா சிரிச்ச ஃபோட்டோவையும் பார்த்ததில்லை...இப்ப மேலே உள்ள கமென்ட்ஸையும் பார்க்காமத்தான் இங்க கருத்து சொல்லறேன்.....என்பதை என்பதை என்பதை .ம்ம்ம்ம்ம்யார் மேல சத்தியம் அடிக்கலாம்னு பார்க்கறேன்.....ஹா ஹா ஹா
ReplyDeleteகீதா
ஹாஹாஹா, எங்களை நேரிலே பார்த்தவங்க எல்லாம் ஆட்டத்திலே இல்லை! ஜூட்! :))))) ஆனால் நீங்க எந்த ஃபோட்டோவும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. நாங்க மூணு பேரும் இருக்கும் படம் முகநூலில் போட்டிருக்கேன். நீங்க தான் முகநூலில் இல்லையே! மற்ற இரு படங்களும் பதிவுகளில் போட்டிருக்கேன். ஆனால் அப்போல்லாம் நீங்க பதிவே எழுத ஆரம்பிச்சிருக்க மாட்டீங்க! :))))
Deleteமுதல் படம் நீங்களும் உங்கள் சகோதரர்களும்...
ReplyDeleteகீதா
ஆமாம்கீதா
Deleteஅது கூரைப்புடவைதானே அந்த 9 கஜம்....? செம செம...ஹையோ அழகான சிரிப்பு அக்கா ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க...இப்பவும் அப்படித்தானே!! நான் தான் நேர்ல பார்த்தேனே!!! ..லவ்லியா இருக்கீங்க அக்கா..இதுக்கு ஏன் சிரிப்பா சிரிச்சதுனு தலைப்பு??!!! .ஜாடை நல்லா தெரியுது நேர்ல பார்த்திருப்பதால் டக்குனு தெரிஞ்சுருச்சு...
ReplyDeleteஅப்புறம் மாமாவின் ஜாடை நன்றாகத் தெரிகிறது....
கீதா
வீட்டிற்குள் நுழையும் வாயில்.உள்ளே வராந்தா, அடுத்துக்கூடம். முக்கிய நுழைவாயில்க் கதவுக்கும் வராந்தாக் கதவுக்கும் இடையே பத்து அடிக்கும் மேல் இடம் விட்டிருந்தோம்.//
ReplyDeleteஇந்தப் படம் நீங்க ஏற்கனவே போட்டிருந்ததுனால உங்க அம்பத்தூர் வீடுனு நீங்க சொன்னீங்கனா எனக்கு இந்தப் படம் வீட்டின் முகப்புதான் நினைவுக்கு வரும்....(ஸ்ரீராமின் கவித கவித!!!!!!)
கீதா
ஹாஹா, நானும் அதைத் தான் நினைச்சேன். அதே போல் அதிராவும் எழுதவே என் நினைவலைகள் மீட்டப்பட்டன! (கவுஜமாதிரி இருக்கா?) :))))
Deleteஎங்கள் மாமியார் வீட்டிலும் இப்படி திண்ணை போன்ற பெஞ்ச் உண்டு வாசலில். நாங்கள் எல்லோரும் கூடும் போது அங்குதான் உட்கார்வது வழக்கம்...ரொம்ப அழகா இருக்கும்...வீட்டு முன் கார்டன் என்று..
ReplyDeleteஇந்தப் படமும் அழகு..பெஞ்சு போட்டு...சூப்பர்
கீதா
இங்கேயும் இரண்டு பக்கமும் சின்னப் பூந்தோட்டம் உண்டு. இடப்பக்கம் வ்ருக்ஷி, பவளமல்லி, அரளி, செம்பருத்தி போன்ற மரவகைப் பூக்கள். இடப்பக்கம் முல்லை, மல்லி, போன்ற வாசனைப்பூக்கள். பெரிய படுக்கை அறை ஜன்னலுக்குக் கீழே ரோஜா, கொடி ரோஜா இருந்தது. கொல்லையிலும் சந்தனமுல்லை, அரளி, தங்க அரளி, மல்லிகை ஒற்றை போன்றவையும் மாமரங்கள், நாரத்தை மரங்கள் என உண்டு. ஒரு பக்கம் மேற்குப் பகுதியில் நான்கு தென்னை மரங்கள். என்ன செய்தாங்கனு தெரியலை. முதல் மரத்துத் தேங்காயும் இளநீரும் அவ்வளவு ருசியாக இருக்கும்.
Deleteசெல்லங்கள் அனைத்தும் அழகு!!! அந்தப் பூஸார் அழகா இருக்கார்..என்ன ரிலாக்ஸ்ட் படுக்கை...பின்ன வீட்டுல ஒருத்தங்க நம்மள பாத்துக்கறதுக்கு இருக்காங்கனா சந்தோஷமா ரிலாக்ஸ்டா நாம் இருப்பது போல அதுக்கும் கீதாக்கா இருக்காங்கனு தோனிருக்கும்...அதான்....அதுக்கு பிறந்தவீடு நீங்கதான்!!!!
ReplyDeleteஅம்பத்தூர் பக்கம் த்ண்ணீர் தேங்கும் என்று தெரியும்....யம்மாடியோவ் இவ்வளவு பெரிய நண்டா....
வீடு ரொம்ப அழகான வீடுதான் இருந்தாலும் இப்படி மணல் கல்லு என்று எப்படி ஒரு வீட்டுக்கு இடைஞ்சலாகக் கொட்டறாங்க...மனுஷங்க ஹூம்...அப்புறம் தண்ணீ வேற உள்ள வருது...மாற்றியது நல்லதுதான் அக்கா. இப்ப பாருங்க சின்ன ரங்கு பெரிய ரங்குனு...காவிரி ஆத்துக் காத்துல நல்லதாப்போச்சு...
கீதா
ஆமாம், நிம்மதியாப் படுத்துக்கொண்டு இருப்பதைப் பார்த்தால் கொஞ்சம் பொறாமையாக் கூட இருக்கும்.மேடான பகுதியும் இருக்குத் தான். ஆனால் நாங்க வீடு கட்டின பகுதியில் எங்க வீடுகளுக்குப் பின்னால் தான் கொரட்டூர் ஏரிக்கு நீர் செல்லும் வாய்க்கால். அதை ஆக்கிரமித்துப் பலரும் வீடு கட்டவே எங்கள் பகுதியில் நீர் தேங்க ஆரம்பித்துப் பின்னர் இரு பக்கங்களிலும் அடுக்குமாடி வரவும் மோசமாகி விட்டது. இப்போத் தான் நீர் தேங்கினால் அபராதம்னு போட ஆரம்பிச்சிருக்காங்க.
Deleteநடப்பது எல்லாம் நன்மைக்கே!!!
ReplyDelete//இதைத் தான் பாரிஜாதம் என்பார்கள். எல்லோரும் பவளமல்லிப் பூவைப் பாரிஜாதம் என்கின்றனர். ஆனால் இது தான் உண்மையில் பாரிஜாதம். வாசனை அக்கம்பக்கமெல்லாம் பரவும். ஊரைத் தூக்கும்.//
அதே அதே பவள மல்லியைப் போய் பாரிஜாதம்னு ஏன் சொல்றாங்கனு தெரியலை...
அழகா இருக்குக்கா...அதே போல மீன் கொத்தி ஆமாம் அதுக்குத் தண்ணி இருந்தா போதும் வந்துரும்...கோடம்பாக்கம் வீட்டுக்கு மீன் கொத்தி வரும் அங்கு கிணறு உண்டு....இப்ப தண்ணி சுத்தமா இல்லை சென்னையே வறண்டு இருக்கு...அப்புறம் மரங்கொத்தி வரும்...கிளி வரும்...மாமரம், சப்போட்டா, கொய்யா என்று இருப்பதால்...
படம் எடுத்து வைச்சுருக்கேன் போடுறேன்...
சாமி ரூம் செமையா இருக்கு அக்கா அதுவும் கீழ கோலம் விளக்கு என்று அம்சமா அழகா இருக்கு அக்கா...
இப்ப இருக்கற வீட்டு சாமி ரூமும் அழகுதான்...
எல்லாப் படங்களையும் மிகவும் ரசித்தோம் அக்கா
கீதா
ஆம், நடப்பது/நடந்தது/நடக்கப் போவது எல்லாமும் நன்மைக்கே. வீட்டுக்கு வரும் எல்லோரையும் அந்த ஸ்வாமி அலமாரி மிகவும் கவரும்.
Deleteசொல்ல விட்டுப் போனது வேப்பமரம் செம அழகு!! என்ன நிழல்! நல்ல வேப்பங்காற்று வந்திருக்கும் அதுவும் திண்ணை பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் போது இல்லையா...அக்கா வேப்பம் பூ நிறைய சேகரிச்சிரிப்பீங்களே அப்போது...இல்லையா?!! நான் வேப்பம்பூ பைத்தியம்...எனக்கு மிகவும் பிடிக்கும் ....என் மாமியார் வீட்டிலும் வேப்ப மரம் உண்டு...நிறைய பூ கிடைக்கும்...
ReplyDeleteகீதா
வேப்பமரம் இருக்கா இல்லையானே தெரியலை. அங்கிருந்து கொண்டு வந்த வேப்பம்பூ தான் இன்னமும் அங்காயப்பொடி, ரசம் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தறேன்.
Deleteகீதா அக்கா நாங்கள் உங்கள் அளவு புத்திசாலியாக இல்லாமல் இருக்கலாம், அதற்காக எட்டு கால் பூச்சிக்கு எத்தனை கால் என்று கேட்பதைப் போல நீங்கள் புதிர் போட்டிருக்க வேண்டாம்.அம்பத்தூர் வீட்டைப் பற்றியும் நீங்கள் முன்பு ஒரு முறை எழுதியிருக்கிறீர்களோ?
ReplyDeleteஆரம்பத்திலேயே இது பார்க்காதவங்களுக்காக. பார்த்தவங்க ஆட்டத்திலே இல்லைனு சொல்லிட்டேனே. அம்பத்தூர் வீடு இடிச்சாச்சுனு தகவல் கிடைக்கவும் ஸ்ரீராமின் கவிதை, அதிராவின் நினைவுனு வரவும் என் நினைவுகளும் வந்தன. அதற்காக இந்தப் பகிர்வு. பார்க்காதவர்களுக்காக.
Deleteஅம்பத்தூர் வீடு வெள்ளத்தால் போயிற்று அம்பேரிக்கா பையரால் ஸ்ரீரங்க வீடுஅமைந்தது இப்போது நீக்கள் நெஸ்டில் இல்லையா
ReplyDeleteவாங்க ஜிஎம்பி ஐயா, இப்போவும் ஸ்ரீரங்கத்தில் நீங்க உங்க மனைவி, மகனோடு வந்த அதே வீட்டில் தான் இருக்கோம். அம்பத்தூர் வீடு வெள்ளத்தால் போகவில்லை. வீடு நல்லாத் தான் இருந்தது. நாங்க தான் அம்பத்தூரே வேண்டாம்னு வந்துட்டோம்.
Deleteபழைய நினைவுகளை நினைத்து பார்ப்பது சந்தோஷமான விடயமே...
ReplyDeleteவாங்க கில்லர்ஜி, இன்னும் வேலை மும்முரங்களில் இருந்து விடுபடவில்லையா? வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிங்க.
DeleteFb ல் சொல்லிய ஒன்றை இங்கே சொல்லியிருந்தேன்..எங்கே போனதோ தெரியலை...
ReplyDeleteஎன்னிடமும் பழைய படங்கள் சில ... அவை தம்பி வீட்டில்.. இப்போது என்ன ஆயிற்றோ.. தெரியவில்லை....
நேரம் கிடைக்கட்டும்..தேடிப் பார்க்கலாம்..
உங்க இந்தக் கருத்தைப் பார்த்துட்டுத் தேடிப் பார்த்தேன் துரை. ஸ்பாமில் கூட இல்லை. இது மட்டும் தான் வந்திருக்கு!
Deleteபோனாப் போவுது விடுங்க...
Deleteஇணையம் குதிக்கிறபோது இப்படி ஆகக் கூடும்....
ஆஆஆஆஆஆஆஅ மீ 96:)
ReplyDeleteஹிஹிஹி, இப்போத் தான் ஒன்று முதல் 100 வரை எண்ணக் கத்துக்கிட்டு இருக்கீங்க போல! இஃகி, இஃகி!
Deleteஅவ்வ்வ்வ் மீதான் 97:)
ReplyDeleteயெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸு
Deleteஹா ஹா ஹா இது 98 ஆவது:)
ReplyDeleteசரி, சரி!
Deleteவாவ்வ்வ்வ்வ் இது தொண்ணூத்து ஒம்பேது:)).. நான் கீசாக்காவின் வயசைச் சொல்லல்லே:)..
ReplyDeleteஹாஹா அது தெரியுமே, கீழே உங்க வயசைக் கரெக்ட்டாச் சொல்லி இருக்கறச்சேயே நினைச்சேன். என் வய்சைச் சொல்லலைனு! :)))))
Deleteஆவ்வ்வ்வ்வ் இது 100 ஊஊஊஊஊஊஊ:)..
ReplyDeletehttps://amazinganimalphotos.com/wp-content/uploads/2014/10/Cute-Cat-Wiggles-Like-Shaquille-O-Neal.gif
ஆமாம், இது நூறு, உங்க வயசும் நூறு! :)))) சுட்டியைப் பின்னர் வந்து பார்க்கிறேன். ரொம்பக் களைப்பா இருக்கிறதாலே இன்னிக்குக் கொஞ்ச நேரம் தான் கணினி!
Delete