எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, February 17, 2019

கிருஷ்ணாபுரம் கோயிலில் நாங்கள்!

அடுத்துச் சென்றது கிருஷ்ணாபுரம் கோயில். அந்தக் கோயிலுக்கெனத் தல வரலாறு குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதும் இல்லை. ஆனால் இது விஜயநகர சாம்ராஜ்யத்து மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. நாயக்கர் காலம் எனவும் சொல்கின்றனர், கோயில் பதினாறாம் நூற்றாண்டைச்சேர்ந்தது என அறிய வருகிறது. விஜயநகர சாம்ராஜ்யத்தைத் தொடர்ந்த நாயக்கர் காலத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் இக்கோயிலில் புனரமைப்புச் செய்யப்பட்டதாகவும் சொல்கின்றனர். அப்படி எனில் கோயில் அதற்கும் முன்னால் இருந்து இருந்திருக்க வேண்டும். நாங்க கோயிலுக்குச் சென்ற சமயம் மாலை  ஆறரை மணிக்கு மேல் ஆகி விட்டது. இருட்டும் சமயம். கோயிலில் வெளியில் யாருமே இல்லை. அங்கே இருந்த கோயில் அலுவலகம் போல் தென்பட்ட இடத்தில் அமர்ந்திருந்தவரிடம் இந்தக் கோயிலில் படங்கள் எடுக்கலாமா, அனுமதி உண்டா எனக் கேட்டோம். அதற்கு அவர் தானும் பெருமாளை வணங்கவே வந்ததாய்ச் சொன்னார்.  சரினு உள்ளே போனோம். அங்கிருந்த மண்டபத்தில் நமக்கு வலப்பக்கம் அந்தப் பிரபலமான சிற்பங்கள்.

"சில்பி" யால் வரையப்பட்டுத் தென்னாட்டுச் செல்வங்கள் என்னும் பெயரில் பிரபலமான சிற்பங்கள். சுற்றும் முற்றும் பார்த்தேன் யாரேனும் இருந்தால் அனுமதி கேட்கலாம் என! யாரையும் காணோம். சரினு காமிராவை எடுத்து அவசரம், அவசரமாகப் படங்கள் எடுக்கத்துவங்கினேன்.


சிற்பங்களைத் தொடாமல் தள்ளி நின்றே பார்க்கச் சொல்லி அறிவிப்புப் பலகை. மொபைல், காமிரா மூலம் படங்கள் எடுக்கக் கூடாது எனவும் அறிவிப்பு. எல்லாச் சிற்பங்களையும் கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்தனர். நம் மக்கள் சிற்பங்கள் சிலவற்றின் கையை, காலைனு உடைச்சு வைச்சதன் மூலம் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.


இன்னும் கொஞ்சம் கிட்டப் போய் எடுக்கலாம் என நினைத்துக்குறவன் ராஜகுமாரியைக் கடத்தும் சிற்பத்தைப் போய் எடுக்கையிலேயே எங்கிருந்தோ வந்தார் ஒருவர். கோயில் ஊழியர் நான் என்றார். படம் எடுக்கக் கூடாது. காமிராவை உள்ளே வைங்க என்று சொல்லிவிட்டார். அங்கேயே நின்று நான் காமிராவை உள்ளே வைக்கும்வரை நின்று பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு பெருமூச்சு விட்டு விட்டு நாங்கள் உள்ளே பெருமாளைப் பார்க்கச் சென்றோம். இந்தக் கோயிலில் குடி இருப்பவர் திருநாமம் வெங்கடாசலபதி! தாயார் பத்மாவதித் தாயார்!  உற்சவரை ஸ்ரீநிவாசப் பெருமாள் என அழைக்கின்றனர். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அவர் வீற்றிருக்கிறார். மூலவர் நின்ற திருக்கோலம். தாயார் சந்நிதி தனியாக இருக்கிறது. பெருமாள் சந்நிதியின் வலப்பக்கம் உள்ளே வெகு தூரம் நடந்து செல்ல வேண்டும்.

நாங்கள் போனபோது மாலைக்கால வழிபாட்டுக்காகப் பெருமாள் காத்திருந்தார். எங்களைக்கண்ட பட்டாசாரியார் தீபாராதனை எடுத்துத் தரிசனம் செய்து வைத்தார்.  நாங்கள் அங்கிருந்து திரும்பும்போதே பிரசாதம் எடுத்துக்கொண்டு ஒருவர் மடப்பள்ளியிலிருந்து வரப் பெருமாள் முன் திரையும் போடப்பட்டது. நல்லவேளை என நினைத்த வண்ணம் வெளியே வந்தோம், தாயார் சந்நிதிக் கதவு சார்த்தப்பட்டிருந்தது. பெருமாளுக்கு வழிபாடு முடிந்து வந்து இங்கே வழிபாடு செய்யும்போது தான் திறப்பார்கள் என்று சொன்னதால் கம்பிக்கதவின் வழியாகத் தாயாரைப் பார்த்துக் கொண்டோம். வண்டி பாக்கேஜ்  மூன்று மணி நேரத்துக்குத் தான் பேசி இருந்தோம். ஆகவே திரும்பணும். செப்பறையில் இரண்டு மணி நேரம் போலக் காத்திருப்பால் ஏற்பட்ட தாமதம்.

புராண காலத்தில் பர்பகுளம் என அழைக்கப்பட்ட இந்த ஊர் இப்போது கிருஷ்ணப்ப நாயக்கன் பெயராலேயே கிருஷ்ணாபுரம் என அழைக்கப்படுகிறது. திருக்கோயிலின் தல விருக்ஷம் புன்னை மரம். தீர்த்தம் கோயிலின் தெப்பக்குளம். திருப்பதி வெங்கடாசலபதிக்கு ஓர் மாற்றாக இவர் கருதப்படுகிறார். அங்கே வேண்டிக்கொண்டு செல்ல முடியாதவர்கள் அந்தப் பிரார்த்தனைகளை இந்தக் கோயிலில் நிறைவேற்றலாம் என்று சொல்கின்றனர். திருப்பதியில் போல் இங்கேயும் பிரம்மோற்சவம் புரட்டாசி மாதம் பதினோரு நாட்கள் கொண்டாடப்படுகிறது. சுமார் ஐந்து லக்ஷம் மக்கள் கூடுவார்கள் என்கின்றனர்.  வைகுண்ட ஏகாதசியும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்தக்கோயிலில் அன்றும் தை மாதம் காணும் பொங்கலன்றும் கூட்டம் தாங்காது என்கின்றனர். வாராவாரம் சனிக்கிழமைகளிலும் கூட்டமாக இருக்கும் என்கின்றனர். இதைத் தவிர்த்து தீபாவளி, பொங்கல், சித்திரை வருஷப்பிறப்பு ஆகிய நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் உண்டு.  இங்குள்ள சிற்பங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை.

மேலே உள்ளது குறத்தி ராஜகுமாரனைக் கடத்தும் சிற்பம் என நினைக்கிறேன். இதை எடுக்கையில் நாங்கள் தரிசனம் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்தோம். எல்லோரும் தாயார் சந்நிதியில் மாலை வழிபாட்டு தீப ஆராதனையில் ஈடுபட்டிருந்தபோது தெரியமால் எடுத்த படம்/ முழுச் சிற்பமும் எடுக்கக் கொஞ்சம் நேரம் தேவை. அதோடு கொஞ்சம் தள்ளி நின்று ஜூம் செய்து எடுக்கணும். அதற்கெல்லாம் நேரம் இல்லை. நம்ம ரங்க்ஸ் காவல் காத்துக் கொண்டிருக்க, நான் கைகால்கள் நடுங்க, வியர்த்துக் கொட்ட அவசரம் அவசரமாக எடுத்த சிற்பத்தின் ஒரு பகுதி. இதை எடுக்கையிலேயே முன்னே வந்த ஊழியரின் குரல் கேட்க வெளியே நடையைக் கட்டினோம்.

காலை ஆறு முதல் பதினொன்றரை வரையிலும், மாலை நாலு முதல் இரவு பதினோரு மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும் என்றனர். உள்ளூர் மக்கள் கோயிலுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.   திருமணம் ஆவதற்காகவும், குழந்தைப் பேறு வேண்டியும் வெங்கடாசலபதியைப் பிரார்த்தித்துக் கொள்பவர்கள் அங்கே செல்ல முடியாவில்லை எனில் இங்கே பிரார்த்தனையை நிறைவேற்றலாம் என்கின்றனர்.

இந்தக் கோயில் சிற்பங்கள் பற்றிய ஒரு செவிவழிக்கதை என்னவெனில் சிற்பி ஒருவன் சிற்பம் செதுக்க வேண்டிக் கற்களைப் பார்வையிடுகிறான். அப்போது அவன் கண்களில் செந்நிற ரேகைகள் ஓடும் செவ்வரி ஓடிய பாறைகள் படுகின்றன. அதைக் கண்ட அவன் சிற்பம் செதுக்க இவை ஏதுவான கற்கள் எனக்கண்டுகொண்டு செதுக்குகின்றான். அவன் கற்பனை சிறகடித்துப் பறக்க அவன் வடிக்கும் வீரன் சிலையின் வடியும் ரத்தப்பெருக்காக அந்தச் சிவப்பு வரிகள் அமைந்து விட சிற்பத்தின் அழகு சொல்ல முடியாத ஒன்று. அந்தச் சிலை வடிவைத் தூணாக நிறுத்துகிறான் சிற்பி. இது தான் சொல்வதும் கேட்டதும். ஆனால் அங்குள்ள தூண்களில் இந்தச் சிற்பங்கள் தனியாகச் செதுக்கப்பட்டுப் பொருத்தப்பட்டவையாகவே எனக்குத் தோன்றின.  அதோடு இல்லாமல் இந்தச் சிற்பங்களைத் தட்டினால் உலோகத்தில் தட்டுவது போல் வெண்கல ஓசை வருமாம். ஆகவே ஆங்காங்கே சிற்பங்களின் மேல் தட்டக் கூடாது என்னும் அறிவிப்பையும் காண முடிந்தது.

பின்னர் அங்கிருந்து திரும்பும்போது தான் பாளையங்கோட்டை வழியாக வந்தோம். கிறித்துவர்கள் அதிகம் அங்கே என்றார்கள். அதற்கேற்பப் பல புராதன சர்ச்சுகள், பள்ளிகள், கல்லூரிகள் காணப்பட்டன. சற்றுத் தூரம் கடந்து வந்த பின்னர் தான் வாமன முதலியார் தெரு என்னும் பெயரிலோ என்னமோ நீண்ட ஓர் கடை வீதி வந்தது. அங்கே தான் நான் முன்னர் சொல்லி இருந்த முறுக்கு, தட்டை, சீடை, மனோகரம் போன்ற பக்ஷணங்களைச் செய்து விற்கும் கடைகள், கடைகள், கடைகள்! அப்போது தான் அந்த வண்டி ஓட்டுநரிடம்  சுலோசன முதலியார் பாலத்தைக் கடந்து தானே நாம் அந்தப்பக்கமாய்த் திருநெல்வேலிக்குப் போகணும் என்று கேட்டேன்! அவர் ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ! கேள்விப்பட்டதே இல்லையாம். எந்தஊர் என்று கேட்டதற்கு இதே ஊர் தான் என்றார். சரிதான். சரித்திர விஷயங்களில் இவ்வளவு ஆர்வம் உள்ளவரா என நினைத்துக் கொண்டேன். சற்று நேரத்திலேயே சுலோசன முதலியார் பாலம் வந்தது. அவரிடம் காட்டி இதான் சுலோசன முதலியார் பாலம் என்றும் சொன்னேன். பின்னர் நம்ம ரங்க்ஸ் ஆணைப்படி சந்திரவிலாஸ் வாசலிலே இறக்கிவிட்டுவிட்டுப் போனார் அவர்.

சந்திரவிலாஸிலே மதியமே சாப்பாடு சுமார் ரகம் கூட இல்லையேனு எனக்குக் கவலை. சரி எப்படி இருந்தாலும் இட்லி, தோசை, என்றால் சாம்பார், சட்னி, காரம்னு இருக்கும். அது வேண்டாம்னு முடிவு செய்து சப்பாத்தி சொன்னேன். சப்பாத்தி பரவாயில்லை ரகம். சூடாக இருந்தது. அதுக்குத் தொட்டுக்கக் கொடுத்தாங்க பாருங்க ஒரு  ஐடம். எங்க இரும்பு வாணலியின் உள் பக்கத்தை விடக் கறுப்பாக ஏதோ! லேகியம் போல்! நான் அதைத் தொடவே இல்லை. சர்வ ஜாக்கிரதையாக வெறும் சப்பாத்தியை மட்டும் உள்ளே தள்ளினேன். நம்ம ரங்க்ஸ் இட்லி, தோசைனு ஆர்டர் பண்ணிட்டு அந்தச் சட்னி ருசியிலும், சாம்பார் ருசியிலும் என்ன செய்யறதுனு புரியாம முழிச்சுட்டு இருந்தார். பின்னர் காஃபி கேட்டதுக்குக் காஃபிப்பொடியே போடாமல் முழுக்க முழுக்கச் சிக்கரியிலேயே போட்ட காஃபி ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார் ஓட்டல் ஊழியர். ஆனால் ரெண்டு பேர் சாப்பிட்டதுக்கும் பில் அறுபது ரூபாய்க்குள் தான்! அதுக்காக வயித்தைக் கெடுத்துக்க முடியுமோ? நாளை இல்லை, இன்னிலே இருந்தே இந்தப்பக்கம் தலை வைச்சுப் படுக்க வேணாம்னு முடிவெடுத்தேன்.

73 comments:

 1. // நான் கைகால்கள் நடுங்க, வியர்த்துக் கொட்ட அவசரம் அவசரமாக எடுத்த //

  ஹா... ஹா... ஹா... எனக்கும் அப்படி இருக்கும். தப்பு என்று தெரிந்தும் நாமே செய்கிறோமே என்கிற குற்ற உணர்ச்சியும், ஆவலும்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு சில சமயங்களில் இந்த உணர்வு வந்திருக்கு. எந்த எந்த சமயங்களில் என்று யோசிக்கிறேன்...

   Delete
  2. ஆமாம், ஶ்ரீராம், தப்புச் செய்தால், அதுவும் தெரிந்தே செய்தால்! :(

   Delete
 2. சுலோச்சனா முதலியார் பாலம் நான் இதில் படித்திருக்கிறேன் என்று யோசித்துப் பார்க்கிறேன்.. ஏதாவது புகழ் பெற்ற கதை/ நாவலில் வருமோ? எப்படி எனக்கு அந்தப் பெயர் இவ்வளவு பரிச்சயமாக இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. ர.சு.நல்லபெருமாளின் "கல்லுக்குள் ஈரம்!" நாவலில் அடிக்கடி வரும்

   Delete
  2. வல்லி சொன்னாப்போல் மற்றவர்கள் நாவல்களிலும் வந்திருக்கலாம் ஸ்ரீராம்.

   Delete
  3. ஆனால் நான் ர சு ந கதை படித்ததில்லை. ம்ம்.....

   Delete
  4. ஓஹோ,அப்போத் தெரியலை ஸ்ரீராம், நீங்க ஜெயமோகனின் சிஷ்யர் தானே! அவர் எழுதியும் படித்திருக்கலாம்! :))))

   Delete
  5. //ஸ்ரீராம், நீங்க ஜெயமோகனின் சிஷ்யர் தானே!// - அப்படியா? அப்படி ஒருவேளை இருந்து ஜெ.மோ எழுதியவைகளை எல்லாமும் ஸ்ரீராம் படிக்க ஆரம்பித்தால், வேலைக்கே போகாம 150 வயது இருந்தாலும் படித்து முடிக்கமுடியாத அளவுன்னா ஜெ.மோ எழுதுவார்..

   Delete
  6. ஹாஹாஹாஹா! நான் ஜெயமோகனின் அறம் மட்டும் படிச்சேன். அப்புறமா ஒன்றிரண்டு சிறுகதைகள்/அதுவே நாவலாட்டமாத் தான் இருந்தது! படிச்சேன். அப்புறமாப் பிடிக்கலை. விட்டுட்டேன்.

   Delete
  7. நானும் ஜெ மோவின் அறம் மட்டும்தான் படித்திருக்கிறேன். அப்புறம் ஒன்றிரண்டு சிறுகதைகள்.

   Delete
 3. ஏனோ நிறைய கடைகளில் உணவு சரியாய் இருப்பதில்லை. தோசை இட்லியாவது ஒப்பேற்றி விடலாம். ஆனால் அது சுவை கூடுவது ஸைட் டிஷ்களினால்தானே... அதை ஏனோ சொதப்புகிறார்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், இப்போல்லாம் இந்த உணவுகளை நினைத்தாலே வெளியூர்ப் பயணம் என்றால் பயம்மாக இருக்கிறது. பத்ரிநாத் போனப்போ பழங்களிலேயே 4 நாட்கள் ஓட்டினேன். திருக்கயிலை யாத்திரையின் போதும் ஹார்லிக்ஸ், கஞ்சி, சூப் போன்ற ஆகாரங்களால் வயிற்றை நிரப்பிக் கொண்டேன். மானசரோவரில் குளித்து முடித்த அன்று பெரிய விருந்து. விதம் விதமாகப் பலகாரங்கள். எதையும் தொடவில்லை. :)

   Delete
  2. ஏன் மானசரோவ்ரில் சாப்பிடலை? ரொம்ப பசி எடுத்திருக்குமே (கஞ்சி போன்றவற்றை மட்டும் சாப்பிட்டு).

   நான் 6 நாட்கள் தாய்வானில் இருந்தபோது வெறும் பழங்களில்தான் (அது அட்டஹாசமான பழங்கள்) மேனேஜ் செய்தேன். பிறகு எங்கள் ஊர் வீட்டுக்கு இரவு 10 மணிக்கு வந்த உடன், சாதம், வெந்தயக் குழம்பு மட்டும் செய்து நிறைய சாப்பிட்டேன். 'சாதம்' மீது அவ்வளவு ஈர்ப்பு அப்போது.

   Delete
  3. நெல்லைத் தமிழரே, ஒரு பெரிய பதிவே எழுதணும். என்றாலும் முக்கியக்காரணம் கழிவறைகள் என்பதே அங்கெல்லாம் நாங்க போனப்போ 2006 ஆம் ஆண்டில் இல்லை. அந்தக்காலத்து எடுப்புக்கழிவறை மாதிரித் தான். அதை நினைத்தாலே சாப்பிடத் தோன்றது. அதோடு சும்மா நாலு நாட்கள் வெளியே போனாலே எனக்கெல்லாம் வயிறு கெட்டு விடும். இது 21 நாட்கள் பயணம். அதிலே உணவு விஷயத்தில் கவனமாக இருந்தால் தான் பிழைத்தோம். பலருக்கும் டயரியா வந்து கீழேயோ அல்லது மேலேயோ எங்கு சீனா ஆஸ்பத்திரி கட்டி இருக்கோ அங்கே சேர்க்கும்படி ஆயிற்று.

   Delete
  4. இறைவன் அருளால் ஏப்ரல் மாதத்தில் ஒரு வடநாட்டுப்பயணம் யோசித்திருக்கிறேன். உங்கள் உணவு பற்றிய தகவல்கள் கவலை அளிக்கின்றன. நான்ஸாப்பாட்டுராமன் வேற... அப்புறம் நான் எதை வைத்து பதிவு எழுதுவது!!!

   Delete
  5. ஶ்ரீராம், அதெல்லாம் கவலைப்படாமல் போயிட்டு வாங்க! சப்பாத்தி, பராந்தா(புரோட்டா இல்லை, உண்மையான பராத்தா)பூரி போன்றவை சில கடைகளில் காலை உணவுக்குக் கொடுப்பாங்க. அது நீங்க எந்த மாநிலம் போறீங்கங்கறதைப் பொறுத்து இருக்கு. உ.பி., ம.பி., ராஜஸ்தானில் சில இடங்களில் கிடைக்கும். தெருவோரக்கடைகளில் நம்பி வாங்கலாம் என்றாலும் பஜியா,(தூள் பஜ்ஜியை அங்கே பஜியா என்பார்கள். பஜ்ஜியைப் பகோடா என்பார்கள்) போன்றவை, ஆலு போண்டா, சமோசா போன்றவை தைரியமாக வாங்கலாம். அன்னன்னிக்கு மிச்சம் ஆகும் எண்ணெயைத் தெருவில் குழி தோண்டிக் கொட்டிக் கொண்டிருந்தார்கள் முன்னெல்லாம். இப்போத் தெரியலை! தென்னிந்திய ஓட்டல் இருக்கானு பார்க்கணும். அநேகமாய்க் கிடைக்கின்றன. தென்னிந்திய உணவுனு சாம்பார், ரசம் க்குப் பதிலாக தால், சூப்பை ரசம்னு சொல்லிக் கொடுப்பாங்க! சாதம் கொஞ்சம், தயிர், ஊறுகாய், நாலு சப்பாத்தி அல்லது பூரி! தாலி கிடைக்கும். இதிலேயும் பஞ்சாபி தாலி, குஜராத்தி தாலி, ராஜஸ்தானி தாலி என உண்டு. ராஜஸ்தான் கொஞ்சம் காரத்துக்குப் பெயர் போனது. ஃபலூடாவோ, பாதாம் மில்க் ஷேக்கோ சாப்பிட்டால் வடக்கே சாப்பிடுங்க!

   Delete
  6. ஸ்ரீராம்... வட நாட்டில் சாப்பாட்டுக்குப் பிரச்சனையே இல்லை... அளவுக்கு அதிகமான உருளை மட்டும்தான் பிரச்சனை. இனிப்பு வகைகள், லஸ்ஸிலாம் அங்க சாப்பிட்ட பிறகு, நம்ம ஊர்ல சாப்பிடவே பிடிக்காது. இதுதான் சாக்குன்னு நார்த் இண்டியன் உணவு வகைகளை ஒரு கை பாருங்க (சப்பாத்தி.....). அங்க போய், தென்னிந்திய ஹோட்டல், பொங்கல், இட்லினு சாப்பிட்டு நொந்து போகாதீங்க.

   Delete
  7. பொங்கல், கிச்சடி எல்லாம் அங்கே கிடைக்காது. மஹாராஷ்ட்ரா, குஜராத் எனில் ஆலு போவா(அவல் உப்புமா உ.கி. போட்டு) காந்தா போவா(அதே அவல் உப்புமா வெங்காயம் போட்டு) சாபுதானா கிச்சடி எனக் கிடைக்கும். ராஜஸ்தானில் அதிகமா ஜிலேபி, கசோடி வகையறாதான் காலை ஆகாரம். ஆனாலும் சில ஓட்டல்களில் பராந்தா கிடைக்கும். பூரியும் கிடைக்கும். வைஷ்ணவ் போஜன் என்றிருக்கும் ஓட்டல்களை நம்பிப் போகலாம். துளிக்கூட அசைவம் இருக்காது. வெங்காயம், பூண்டு வேண்டாம் எனில் அது இல்லாமலும் செய்து தருவாங்க! குருக்ஷேத்திரத்தில் நாங்க பிரம்ம சரோவரில் அவர் குளித்துப் பிண்ட தர்ப்பணம் செய்து தானமெல்லாம் முடிச்சதும் சாப்பாடு பத்திக் கேட்டதுக்கு ஒரு ஓட்டலைச் சொல்லி அங்கே போங்கனு அனுப்பி வைச்சார் அந்தப் புரோகிதர்! அங்கே பூரி, சப்ஜி, இனிப்பு ஏதோ ஒன்று(இனிப்பு இல்லாமல் இருக்காது) கொடுத்தாங்க. அவரிடம் இந்த மாதிரி இரண்ய ச்ராத்தம் செய்துட்டு வந்திருக்கோம்னு சொன்னதுமே அவர் வெங்காயம், பூண்டு இல்லாமல் தான் இங்கே சப்ஜியே செய்வோம் என்றார்.

   Delete
  8. நல்ல செய்தி. நன்றி. பார்க்கிறேன். என் பணிச்சூழல் இது தடங்கலில்லாமல் சென்றுவர அருளவேண்டும்! (டிசம்பர் மாதமே ரிசர்வ் செய்தாச்சு!)

   Delete
  9. நெல்லைத் தமிழர் பயமுறுத்துகிறார். உ.கி. சப்ஜி நீங்க கேட்டால் தான் செய்து கொடுப்பாங்க. ஆனால் பூரிக்குக் காலையில் உ.கி.வேண்டாம்னா முன்னாடியே சொல்லணும். அநேகமா சனா கொடுப்பாங்க. ஸ்வீட் கட்டாயமாய் உண்டு. ஜிலேபி, பால் கேக் இப்படி ஏதேனும் இருக்கும். அநேகமாச் சுடச்சுட ஜிலேபி தான் என்னோட விருப்பம். :)

   Delete
 4. குறத்தி ராஜகுமாரனைக் கடத்தும் சிற்பம் நெல்லைத்தமிழன் கூட தஞ்சையம்பதியில் வெளியிட்டிருந்தாரே...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், அதற்கும் முன்னரே ஆனந்த விகடனில் சில்பி அவர்களால் வரையப்பட்டுப் பார்த்திருக்கேன்.

   Delete
  2. நீங்க விகடன்ல பார்த்திருக்கீங்களா? அது சென்ற நூற்றாண்டுலனா வெளியிட்டிருப்பாங்க.....

   Delete
  3. இல்லை. நான் ஆரம்பக் கால விகடன்களில் பார்த்திருக்கேன். அப்போல்லாம் அப்பா விகடன் வாங்குவார். 2 அணாவில் இருந்து பைசா வந்தவுடன் 20 பைசா ஆனது, பின்னர் 25 காசு ஆனது. அப்போ நிறுத்திட்டார். இந்தப் படங்களை எல்லாம் சேகரம் செய்தும் வைச்சிருந்தேன்.என்னமோ ஒரு மோகம். சில்பி மதுரைக்கு வந்தப்போ நான் கர்ப்பமாக இருந்ததால் நாள் ஆயிடுச்சு, அலையக் கூடாதுனு சொல்லிக் கூட்டிப் போகலை. இரண்டு, மூன்று முறை வந்திருக்கார். அவர் வரைந்த மீனாக்ஷி கூட எங்களிடம் இருக்காள்.

   Delete
 5. சிற்பங்கள் மிகவும் அழகு! பயணக்கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மனோ! ஆரம்பத்தில் இருந்து படித்தீர்களா?

   Delete
 6. எனக்கென்னவோ நீங்க ராஜகுமாரியைக் கடத்தற சிற்பத்தை போட்டோ எடுக்கப் போறவங்க மாதிரி போயிருக்கமாட்டீங்க. ரெண்டு பக்கமும் பார்த்துக்கிட்டு கைக்குள்ள மோபைல் வச்சிக்கிட்டு, பத்தாத்துக்கு அப்போ அப்போ மாமாவையும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றிருப்பீர்கள். பார்க்கறவங்களுக்கு நீங்க சிலை எடுத்துட்டுப் போக வந்தமாதிரி தெரிந்திருக்கும்.. ஹா ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத் தமிழரே! இந்தப்படங்கள் மொபைல் மூலம் எடுக்கலை. காமிரா கொண்டு போயிருந்தேன். மொபைலில் சில சமயங்களில் செட்டிங்க்ஸில் பிரச்னை வருது! செல்ஃபி மோடுக்குப்போனால் திரும்ப அடம்!

   Delete
  2. ஹா ஹா ஹா ஹா ஹா....

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை பாவம் கீதாக்கா நமக்கு எல்லாம் காட்டணுன்னு கஷ்டப்பட்டு அவசர அவசரமா எடுத்துப் போட்டுருக்காங்க...கலாய்க்கறீங்களே!!!!! ஹா ஹா ஹா

   கீதா

   Delete
  3. நானும் கேமராவில் நிறைய போட்டோ எடுப்பவன், ஆனால் அதில் ரெடி பண்ணி போட்டோ எடுக்கறதுக்குள்ள 'கூடாது'ன்னு சொல்ல ஆட்கள் வந்துடும். செல்ஃபோன்ல டக்கு பக்குன்னு நாலஞ்சு தடவை அமுக்கினோம்னா, 2 படமாவது சிறப்பா வந்துடும். நாம செல்போனைப் பார்க்கிறோமா இல்லை படம் எடுக்கிறோமான்னு தெரிஞ்சுக்கறதுக்குள்ள படம் எடுத்திடலாம்.

   நீங்கள் போட்டுள்ள படத்தில் முதலில் தெளிவாக வந்துள்ளது குறத்தி ராஜகுமாரனைக் கடத்துவது. இரண்டாவது தெளிவில்லாத படம் (அப்போ காமராவை அசைச்சிருப்பீங்க), குறவன் ராஜகுமாரனைக் கடத்துவது.

   Delete
  4. பயத்தில் உடம்பே நடுங்கிட்டு இருந்தப்போக் காமிரா மட்டும் ஆடாதா என்ன? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   Delete
  5. //பயத்தில் உடம்பே நடுங்கிட்டு இருந்தப்போக் காமிரா மட்டும் ஆடாதா என்ன? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

   ஹா... ஹா... ஹா... அதானே...

   அப்படிச் சமாளிங்க கீதாக்கா...

   Delete
  6. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நிஜம்மாவே பயம் தான். ரெண்டு பேருக்கும்! அப்புறமாச் சத்தம் போட்டுட்டாங்கன்னா நினைச்சு நினைச்சு வருந்தணும்! :(

   Delete
 7. நிறைய வெங்கடாசலபதி கோவில்கள்ல நீங்க சொல்றா மாதிரி, இங்கயே ப்ரார்த்தனையை நிறைவேற்றலாம் என்கிறார்கள். அது எப்படி என என் மனசுக்குப் புரிவதில்லை

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், நெ.த. உப்பிலியப்பன் கோயிலும் அப்படித் தான் சொல்வாங்க. அதே போல் எங்க ஊரான பரவாக்கரைப் பெருமாள் கோயிலிலும் (நாங்க முனைந்து கும்பாபிஷேஹம் ஏற்பாடு செய்தோம்) வேங்கடநாதன் என்னும் பெயர் பெருமாளுக்கு. அவரையும் திருப்பதி போகலைனா இவரைத் தரிசித்தால் போதும் என்கின்றனர்.

   Delete
 8. குற்றம் என்பதைதெரிந்தே செய்தால் கைகால்கள் நடுங்கும் குற்ற உணர்ச்சி இருப்பவர்களுக்கு

  ReplyDelete
 9. பார்த்துட்டேன் வரேன் பதிவு வாசித்துவிட்டு

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க, வாங்க, இன்னும் பத்து நிமிஷம். அப்புறமாச் சாப்பாடு பண்ணப் போகணும்! :))))

   Delete
 10. சுற்றும் முற்றும் பார்த்தேன் யாரேனும் இருந்தால் அனுமதி கேட்கலாம் என! யாரையும் காணோம். சரினு காமிராவை எடுத்து அவசரம், அவசரமாகப் படங்கள் எடுக்கத்துவங்கினேன்.//

  ஹா ஹா ஹா கீதாக்கா நானும் அப்படித்தான்....யாரும் இல்லை என்றால் அவசர அவசரமாக எடுப்பேன் ஆனால் கண்ணில் அறிவிப்பு பலகை தென்பட்டால் உடனே உள்ளே வைத்துவிடுவேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தி/கீதா, படம் எடுக்க ஆரம்பிச்சதும் மனசு அலை பாய்வதைத் தடுக்க முடியலை! ஆனால் பல சமயங்களில் முடியவில்லை!

   Delete
 11. சிற்பங்கள் மிக அழகு கீதாமா. அந்த ஊழியர் கொஞ்ச தாமதமாக வந்திருக்கக் கூடாதோ.
  அதென்ன படம் எடுக்கக் கூடாதுன்னு சட்டம். போக முடியாத கிழங்கள் என்ன செய்யறது.
  இந்தச் சாப்பாட்டுப் பிரச்சினையை நினத்தால் நடுக்கம் தான்.

  உங்களுக்குத் தொந்தரவில்லாமல் இருந்திருக்கப் பிரார்த்தனைகள். சுலோச்சன் முதலியார் பாலம், நாஞ்சில் நாடன், சுகா,ஜெமோ எல்லார் பதிவிலும் அடிக்கடி வருமே ஸ்ரீராம்.
  அப்பாவும் சொல்லி இருக்கிறார்.
  தம்பி அதற்காகவே போய்ப் பார்த்து விட்டு வந்தான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி. அந்த வண்டி ஓட்டுநருக்கு நாங்க சொன்ன கோயில்களே புதுசா இருந்தது! என்னத்தைச் சொல்ல! வாடிக்கையாளர்கள் சொல்லும் இடத்துக்கு ஓட்டிப் போவேன், அதோடு சரி, மற்றபடி எதுவும் கேட்டுக்க மாட்டேன் என்றார். ஆனாலும் சுலோசன முதலியார் பாலம் கூடத் தெரியலை!

   Delete
 12. படம் எடுக்கக் கூடாது. காமிராவை உள்ளே வைங்க என்று சொல்லிவிட்டார். அங்கேயே நின்று நான் காமிராவை உள்ளே வைக்கும்வரை நின்று பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு பெருமூச்சு விட்டு விட்டு//

  அதே அதே..அக்கா .நானும் பெருமூச்சுடன் கூடவே வீட்டினரிடம் திட்டும் வாங்கிக் கட்டிக் கொள்வேன்.

  படம் எடுக்கலாம் எனும் அனுமதி உள்ள இடத்தில் கூட உடன் வருபவர்கள் நல்ல ரசனைமிக்கவர்களாக இருந்தால் மட்டுமே என்னால் எடுக்க முடியும். அல்லாமால் சும்மா போனோம் கும்பிட்டோம் அல்லது பார்த்தோம் என்று மின்னல் வேகத்தில் போய்வருபவர்கள் கூட இருந்தால் நான் கேமாரவையோ மொபைலையோ எடுத்தாலே ...நேரமாகுது நேரமில்லைனு சொல்லி திட்டுகளுடன் என்னைத் தள்ளிக் கொண்டு வந்துவிடுவார்கள். ஹா ஹா ஹா

  அதனால் இப்போது நான் தளத்தில் பதிவு போட்டிருக்கேனே அந்தக் குழு என்றால் எனக்கு செம ஜாலி. ரொம்ப நிதானமாக ரசித்துக் கொண்டு என் அலைவரிசையில் உள்ள குழு!!!! நன்றாகப் படம் எடுக்கலாம்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், படம் எடுக்கவும் கூட வரும் ஆட்கள் சரியா இருக்கணும்/அமையணும்.அதுவும் இருக்கு.

   Delete
 13. சிற்பங்கள் அனைத்தும் அழகு அம்மா...

  ReplyDelete
 14. தங்களது பதிவு பற்பல நினைவுகளை எழுப்பியது. . நெல்லையப்பர் கோயில் பிரகாரத்தில் நநி மண்டபத்தில் படம் எடுக்க அனுமதி கேட்டபோது அங்கு நின்று கொண்டிருந்த ரெண்டி ஐயர்களும் கோயில் பணியாளர் ஒருவரும் ஏளனமாகச் சிரித்ததை இன்னும் மறக்கமுடியவில்லை...ஆனால் கோயில் விசேஷங்களின் போது ஸ்வாமி அம்பாள் திருவிக்ரக அபிஷேகத்தைப் படமெடுத்து fb ல் போடுகிறார்கள்... அது எப்படி சாத்தியம் என்றால் பாதுகாப்புக்கு என்று மழுப்புகிறார்கள்...

  பெரிய கோயிலில் கர்ப்பகிரகத்தில் எடுக்கும் படங்கள் எல்லாம் தினத்தந்தி தினமலர் இவற்றில் வருகின்றன.. நாம் செல்போனை எடுத்தால் பிடுங்குவதற்கு ஓடி வருகிறார்கள்... இதெல்லாம் என்ன நியாயம் என்று புரியவில்லை....

  இருந்தாலும் நீங்கள் அவர்களுக்கு கடுக்காய் கொடுத்திருக்கிறீர்கள்...

  வாழ்க நலம்....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் துரை. இதே தான் எங்களுக்குப் பல கோயில்களிலும் நடந்திருக்கிறது. முக்கியமாய்த் தஞ்சைப் பெரிய கோயிலில்! எனக்கும் நீங்க சொல்றாப்போல் தோணும்! இவங்களுக்கு மட்டும் எப்படி அனுமதி கிட்டுகிறது என்பது. உதாரணமாகச் சிதம்பரத்தில் தேரை நான் படம் எடுக்கக் கூடாதுனு தீக்ஷிதர்கள் சொன்னாலும் தொலைக்காட்சி சானல்களில் சிதம்பரம் தேரோட்டம் எனக் காட்டுகிறார்கள்! :(

   Delete
  2. ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக கோவில் பொறுப்பாளர்கள் நடந்து கொள்ளும் தன்மை ஜீரணிக்க முடியாத்தாக இருக்கிறது. அடையாறு அனந்த பத்மனாபன் கோவிலில் எனக்கு இதுபோன்ற அனுபவங்கள். கோவில் விளக்கில் எண்ணெய் சேர்ப்பதற்கு (அனுமன் சன்னிதியில்), ஒவ்வொரு அர்ச்சகரும் ஒவ்வொரு ரூல் போடுவது மட்டுமல்ல, அந்த அர்ச்சகர் செய்தது தவறு, நாங்கள் ஸ்தானீகர்கள் என்று சொல்லும் அலட்சியம். கடவுள் சன்னிதியில் பணிபுரிகிறோம், கடவுள் அனைவருக்குமானவர் என்ற சிந்தனையே இல்லாது கோவிலில் பணிபுரிபவர்களுக்கும் சாதாரண சம்பளத்துக்கு வேலை செய்யும் ஊழியருக்கும் எனக்கு வித,தியாசம் தெரிவதில்லை.

   Delete
  3. எங்களுக்குப் பல கோயில்களிலும் இந்த அனுபவம் உண்டு. கொஞ்சம் டிப்டாப்பாக உயர்ந்த ஆடைகள் அணிந்து கொண்டு மதிப்பாகப் போனால் விட்டுடுவாங்க போல! நான் எப்போதும் போல் பருத்திப் புடைவைகளையே கட்டிக் கொண்டு போவதாலும், அவர் வேஷ்டியோடு வருவதாலும் மதிப்பதில்லையோனு எனக்குத் தோணும். :)))))))

   Delete
  4. துரை அண்ணா எனக்கும் நீங்கள் சொல்லியிருப்பது போன்ற கேள்விகள் எழுவதுண்டு. கீதாக்கா சொல்லிருக்காங்களே அதுக்கும் நான் சொன்ன நினைவு...நம்மள எடுக்க விடறதில்லை ஆனா எப்படி நெட்டில் தேடினால் பல கோயில்களின் மூலவர் வரை கிடைக்கிறதே...பல சிற்பங்கள்...எல்ல்லாம் வருதே...

   கீதாக்கா சொல்லிருக்காப்ல டிப்டாப் பேர்வழிகளுக்குத்தான் மவுசு போலும்...நானும் மிக மிகச் சாதாரணமாகத்தான் போவேன்...நம் வீட்டினரும் தான்...

   அவங்களுக்கு மட்டும் இறைவன் ஸ்பெஷலோ?!!!

   எபியில் வந்த வியாழன் பதிவில் சொன்னது நினைவுக்கு வருது...

   கீதா

   Delete
 15. என்ன, குறவன் ராஜகுமாரியைக் கடத்துகிறானா! என்ன துணிச்சல்.. அப்போதிருந்தே நம் தமிழ்நாட்டில் பெண்களுக்கு ஏகப்பட்ட மரியாதைதான் போலும்.
  எதிரே சிலையிருந்தும், பையில் கேமரா இருந்தும் நினைத்தபடி எடுக்கவில்லையே.. முடியவில்லையே..!


  அழகானவற்றைக் கண்டால், அது சிலையாயினும் மனிதராயினும் அழிப்பது சிதைப்பது என எப்போதும் சில மூடர்கள் -may be vested interests அலைகிறார்கள். சமீபத்தில் கர்னாடகாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஹம்பியில் சில மூடர்கள் அங்குள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தூண்களை இடித்து அழித்திருக்கிறார்கள். ஹம்பி ஒரு UN declared World Heritage Centre. அதற்கே இப்படி கதி. கோவில் சிலைகளைக் கூண்டுக்குள் வைத்துவிட வேண்டியதுதான். ஆனால் சாவியைத் திருடரிடம் கொடுத்துவிடக்கூடாது!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏகாந்தன், ஒரு பக்கம் குறவன் ராஜகுமாரியைக் கடத்தினால் அதற்கு நேர் மறுபக்கம் குறத்தி ராஜகுமாரனைக் கடத்துகிறாள் . குறத்தியை விட வலுக்குறைந்த ராஜகுமாரன் போல! :) என்றாலும் சிற்பங்களின் அழகு மனதைக் கவர்கிறது. ஹம்பியில் நடந்த மூடத்தனம் பற்றி நானும் படிச்சேன். நம்மால் ஆக்க முடியாது, அழிக்கத் தான் முடியும் என்பதை இப்போதைய தலைமுறையினர் நிரூபிக்கின்றனர் போலும். :(

   Delete
 16. கீதாக்கா ஒரே ஒரு படத்தைத் தவிர மத்ததெல்லாம் நல்லா வந்துர்க்கு....சிற்பங்கள் ரொம்ப அழகா இருக்கே...இந்தக் கோயில் சென்றதில்லை....

  அழகான விவரணம், கதை...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹிஹி, கைகள் நடுங்கினால் எப்படிப் படம் எடுக்க முடியும்? முடிஞ்சாப் போயிட்டு நீங்களும் படம் எடுத்துப் போடுங்க.

   Delete
 17. கோயில் தகவல்கள், படங்கள், சிற்பங்கள் அனைத்தும் சிறப்பு.

  நாங்களும் வெளியில் செல்லும் போது கூடியவரை சாப்பாடு எடுத்துச் சென்று விடுவதுண்டு. இப்படியான பயணங்களில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. நான் தமிழ்நாட்டில் இருந்தப்ப திருநெல்வேலி மதுரை எல்லாம் சாப்பாடு நன்றாக இருந்தது போன்று இருந்தது. இரு வருடங்களுக்கு முன்பு மதுரைக்குச் சென்ற போது சாப்பாடு ஏனோ பண்டு போல் இல்லை என்று தோன்றியது.

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. இப்போதெல்லாம் ரொம்ப யோசிக்க வேண்டி இருக்கு துளசிதரன். தரம் என்பதே எங்கும் இல்லாமல் போய் விட்டது. கொஞ்சம் உப்பும், காரமும் சேர்த்தாலே சமையல் தெரியும் எனச் சமைக்க வருகின்றனர். அவர்கள் சமையலைத் தான் இப்போதெல்லாம் சாப்பிட வேண்டி இருக்கு! பாரம்பரியச் சமையலே இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை.

   Delete
 18. கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் ஒரு வகையில் பேரூர் (கோயம்புத்தூர் அருகேயுள்ள) பட்டீஸ்வரர் கோயிலை நினைவூட்டும். தமிழகத்தில் பார்க்கவேண்டியஇடங்களில் இதுவும் ஒன்று. நான் பார்க்க ஆசைப்பட்டு, இதுவரை பார்க்கவில்லை. காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க முனைவர் ஐயா. பேரூர் போகணும்னு எனக்கும் ஆசை தான். ஆனால் இங்கே பக்கத்தில் இருக்கும் ஆவுடையார் கோயிலுக்கே இன்னமும் போக முடியலை! எப்போக் கூப்பிடுவாரோ? மணிவாசகரை அழைத்தாற்போல் எங்களுக்கும் அழைப்பு வரணும் போல! :))))

   Delete
 19. செல்லவேண்டிய கோயில்கள் பட்டியலில் எங்கள் கடலூர் திருவஹீந்திரபுரம் (திருவந்திபுரம்) தேவநாத பெருமாள், பாடலீஸ்வரர், ஆற்றங்கரை ஆஞ்சநேயர் ஆகியோரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. திருவஹீந்திபுரம் 2006 அல்லது 2007 ஆம் ஆண்டிலேயே போயிட்டு வந்தாச்சு. பாடலீஸ்வரரை 2012 ஆம் ஆண்டிலே போய்ப் பார்த்து விசாரிச்சுட்டு வந்தோம். மற்றவர்கள் தரிசனமும் ஆகி விட்டது.சுட்டி பார்த்து எடுத்துத் தரேன்.

   Delete
  2. http://sivamgss.blogspot.com/2007/02/blog-post_03.html
   http://sivamgss.blogspot.com/2007/02/201.html
   http://sivamgss.blogspot.com/2007/02/203-3.html இந்தப் பதிவுகளில் திருமாணிக்குழி பற்றிக் காணலாம். திருவஹீந்திபுரம் சென்றதும், பாடலீஸ்வரர் கோயில் சென்றதும் தேடுகிறேன். :(

   Delete
  3. திருமாணிக்குழி பற்றிய தகவல் எனக்கும் புதிது.
   ​சென்றதில்லை. இனி செல்லப்போவதுமில்லை. கேப்பர் குவாரி என்ற கேப்பர் மலையில் ​கடலூர் ஜெயில் இருக்கிறது. அங்கு சென்றிருக்கிறேன். தவறாக எண்ணவேண்டாம். என்னுடைய பெரியப்பா அங்கு சுப்பரின்டென்டென்ட் ஆகா இருந்தார்.

   Delete
 20. கிருஷ்ணாபுரம் சென்று வந்த விவரம், படம் எடுத்த, எடுக்க முடியாமல் போன விவரங்களுடன் பதிவு அருமை.
  பேரூர் கோவில் சிற்பங்கள் மிக அழகாய் இருக்கும் . அதை முழுவதுமாய் கம்பி கூண்டுக்குள் வைத்து இருக்கிறார்கள். யாரும் அதை தொட முடியாது. படம் எடுக்க அனுமதி கிடையாது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, பேரூர் எல்லாம் போனதில்லை. இப்போத் தான் குளித்தலைப்பக்கம் போகலாமோனு யோசிக்கிறோம். இன்னும் கரூர்ப்பக்கம் கோயில் எல்லாம் போகலை! பார்ப்போம் எப்படி நடக்குதோ என்பதை! அவன் அருள் இருந்தால் கிடைக்கும்.

   Delete
 21. ஒரு படத்தை நிம்மதியா எடுக்க விட்டாரா அக்காவை அந்த ஊழியர் :)
  அது என்னன்னா நாம இப்படி செய்யும்போது நம்ம பாடி லேங்வேஜ் அசைவு இதுக்கெல்லாம் மேலே நம்ம முகம் கண்ணு எல்லாம் ஒட்டுமொத்தமா காட்டிக்கொடுத்துடும் :)
  உங்களுக்காவது காவல் துணைக்கு நிற்கிறார் .ஆனா எங்க வீட்ல ரெண்டு பக்கமும் என் கையை அசைக்கவிடாம பிடிப்பாங்க அதுவும் பொண்ணுக்கு சுத்தமா பிடிக்காது சரியான ரூல்ஸ் ராமானுஜி
  சுலோச்சனா முதலியார் பாலம் பற்றி படித்திருக்கிறேன் .எங்க லண்டன் தேம்ஸ் ரிவர் பாலத்தின் வடிவத்தில் இருக்குமாம் .

  அந்த கருப்பு ஐட்டம் சப்பாத்திக்கு கொடுத்தது என்னவாகா இருக்கும்னு கியூரியசா இருக்கு !!
  சுலோசனா முதலியார் பாலத்துக்கு அவர் பெயர் காரணம் அது மாதிரி வாமன முதலியார் தெருவுக்கு என்ன காரணமாயிருக்கும் ? உயரம் ?

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், எங்க குழந்தைங்க வந்திருந்தாலும் இப்படித் தான் எடுக்கக் கூடாதுனா எடுக்கக் கூடாதுனு தடுப்பாங்க! :) நாம் தான் தமிழ்நாட்டு புத்தி ஆச்சே! அதான்! சப்பாத்திக்கு அது என்னனு நான் பார்க்கவே இல்லையே! எப்படியோ வெறும் சப்பாத்தியைச் சாப்பிட்டு வைச்சேன். அந்தத் தெரு வாமன முதலியார் தெருதானா என்ன என்பதை கோமதி அரசோ, தி/கீதாவோ அல்லது வேறே யாரானும் திருநெல்வேலிக்காரங்களோ தான் சொல்லணும். தெருப்பெயரைச் சரியாக் கவனிக்கலை. :)

   Delete
 22. வணக்கம் சகோதரி

  அழகான வேங்கடபதியின் கோவில். சிற்பங்களின் அழகு மிகவும் நன்றாக உள்ளது. நிறைய வேங்கடவன் கோவில்களில் இப்படித்தான் சொல்கிறார்கள். திருப்பதி போக முடியாதவர்கள் இந்த கோவில்களிலேயே பிரார்த்தனை செலுத்திக் கொள்ளலாமென...இதன் முந்தைய பகுதி செப்பறை கோவில் தரிசனம் நன்றாக கிடைத்திருக்குமென நினைக்கிறேன். அதையும் படிக்கிறேன். இரண்டு நாட்களாய் வலைப்பக்கம் வர இயலவில்லை. அதனால் தாமதம்.

  ஒரே நாளில் பல கோவில்கள் என பார்வைக்கு வைத்துக்கொண்டால் இப்படித்தான் அரக்க பரக்க ஓடி வர வேண்டியுள்ளது. ஆனால் நாம் அப்படித்தானே பிளான் போட்டு போக வேண்டியதுள்ளது. நானும் திருமங்கலத்தில் உள்ள போது உறவுகளுடன் ஒரே நாளில், இராமேஸ்வரம் பார்த்து விட்டு அப்படியே பல கோவில்கள் தரிசித்து வந்தோம். இப்போது எந்தெந்த கோவில்கள் என நினைவிலேயே இல்லை. தங்கள் தயவில் கிருஷ்ணாபுரம் கோவிலை தரிசனம் செய்தாகி விட்டது. மிகவும் அழகான சிற்பங்கள். எனக்கும் கோவில்களில் புகைப்படம் எடுக்க சற்று தயக்கமாகத்தான் இருக்கும். யாராவது வந்து ஏதாவது சொல்லிவிட்டால், தரிசனம் செய்த நிம்மதி கூட பறி போய் விடுமே என கலக்கமாக இருக்கும். நாளை முந்தைய பதிவை படிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. உங்களைக் காணோமேனு நினைச்சேன் கமலா. உடம்பு எல்லாம் தேவலை தானே? மெதுவா வாங்க, வந்து படித்துக் கருத்துச் சொல்லுங்க! அவசரமே இல்லை. குடும்பம், குடும்பத்திற்கான தேவைகள் முதலிலே! எனக்கும் அப்படித் தான். ஆகவே சில/பல சமயம் சரியாய் வர முடியாது!

   Delete
 23. அழகான கோவில் ...சிற்பங்கள் வெகு அழகு ..

  நேரில் பார்க்கும் போது இன்னும் அழகா இருக்கும் ல மா..

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனுராதா, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete