ராம பாண்டியனின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசன் ஆன வீரபாண்டியன் செப்பறையில் புதியதோர் விக்கிரஹம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதை அறிகின்றான். தரிசனத்துக்கு வந்த அவன் கண்களிலே நடராஜர் சிலையின் அழகு கவர்கின்றது. மீண்டும், மீண்டும் எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத தித்திக்கும் பேரழகுச் சிற்பம். ஆஹா, இதை வடிவமைத்தவர் யாரோ? கேட்ட வீரபாண்டியனுக்குச் சிற்பியின் அறிமுகம் கிடைத்தது. தன்னுடைய சிற்றரசுக்கு உட்பட்ட கட்டாரி மங்கலம்" என்னும் ஊரிலும், "கரிசூழ்ந்த மங்கலம்" ஊரிலும் உள்ள கோயிலில் இது போன்ற அதி அற்புத ஆடும் கூத்தனைப் பிரதிஷ்டை செய்ய எண்ணினான் வீரபாண்டியன். சிற்பியை அவ்வாறே இரு சிலைகள் செய்யுமாறு ஆணை இட்டான் வீரபாண்டியன். சிற்பியும் அதே போல் இரு அழகிய நடராஜர் சிலைகளை வடிவமைத்தார். அவற்றின் அழகில் மெய்ம்மறந்த வீரபாண்டியன், இனி மற்ற எந்தக் கோயில்களிலும் இது போன்ற சிலைகள் பிரதிஷ்டை செய்யக் கூடாது என எண்ணினான். இந்தச் சிற்பி செதுக்கினால் தானே சிலை? சிற்பியின் கைகளைத் துண்டிக்க ஆணை இட்டான் வீரபாண்டியன். பின்னர் சிற்பியையே கொன்றுவிடும்படியும் ஆணை இட்டான். ஆனால் காவலர்களோ இரக்கம் மீதூறச் சிற்பியின் ஒரு கையை மட்டுமே துண்டித்துவிட்டு உயிரோடு விட்டு விட்டார்கள்.
ராமபாண்டியனுக்கு விஷயம் தெரியவர, வீரபாண்டியன் மேல் கோபம் கொண்ட அவன், வீரபாண்டியனின் இரு கைகளையும் வெட்டி விடுகின்றான். பின்னர் அந்த இரு சிலைகளையும் முறையே கட்டாரிமங்கலத்திலேயும், கரிசூழ்ந்த மங்கலத்திலேயும் பிரதிஷ்டை செய்கின்றான். சிற்பிக்கு மரக்கையையும் பொருத்தித் தர ஆணை இடுகின்றான். மரக்கை பொருத்தப் பட்ட சிற்பி, அந்தக் கைகளோடேயே முன்பை விட அழகான நடராஜர் சிலை ஒன்றைச் செய்கின்றார். இந்த அதி அற்புதச் சிலையின் அழகில் தன்னையே மறந்த அவர், அது சிலை என்பதையும் மறந்து, சிலையின் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ள, என்ன ஆச்சரியம்?? அவர் கிள்ளிய வடு கன்னத்தில் பதிந்தே விட்டது. கிள்ளிய அந்த வடுவுடனேயே அந்தச் சிலை தூத்துக்குடி அருகே உள்ள கருவேலங்குளம் என்னும் ஊரில் பிரதிஷ்டை செய்யப் பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இந்த செப்பறை, கட்டாரி மங்கலம், கரிசூழ்ந்த மங்கலம், கருவேலங்குளம் ஆகிய நான்கு ஊர்களிலுமே திரு ஆதிரைத் திருநாள் மிகச் சிறப்பாய்க் கொண்டாடப் பட்டு வருகின்றது. இந்தக் கோயில்கள் அனைத்துமே சிவாகம முறைப்படி அனைத்து அம்சங்களும் பொருந்தியவையும் கூட. திருவாதிரைத் திருநாள் அன்று இந்த நான்கு கோயில்களும் விடிய விடியத் திறந்தே இருக்கும். அன்று நான்கு நடராஜர்களையும் சேர்த்து வழிபடுவதை மிகச் சிறப்பாகவும் நினக்கின்றனர். முதலில் செப்பறை, அங்கிருந்து கரிசூழ்ந்த மங்கலம், அங்கிருந்து கருவேலங்குளம், கடைசியாகக் கட்டாரிமங்கலம் என்ற முறையில் தரிசித்தால் பயண நேரமும் சரியாக இருக்கும் என்றும் சொல்கின்றனர்.
*********************************************************************************
ஆனால் இங்கெல்லாம் நாங்க போகலை! நேரம் இல்லை என்பதோடு அதிகம் அலையவும் முடியலை! செப்பறைக்கு முக்கியமாப் போயாகணும்! ஆகவே தேநீரைக் கூடத்தியாகம் செய்துட்டு வண்டியில் கிளம்பினோம். அரை மணி நேரத்தில் ராஜவல்லிபுரம் வரவும் ஆங்காங்கே விசாரித்துக்கொண்டும், வழிகாட்டிகளைப் பார்த்துக் கொண்டும் செப்பறை நோக்கிச் சென்றோம். செல்லும் வழியெல்லாம் ஒரே வயல்! பச்சைப்பசேல் வயல்கள். காருக்குள்ளிருந்து படம் எடுக்கும் லாகவம் எனக்குக் கை கூடவில்லை. ஆகவே சும்மாப் பார்த்துக் கொண்டு வந்தோம். செப்பறை எங்கேனு இன்னும் தெரியலை! ஓட்டுநர் வேறே சற்று தூரத்தில் தெரிந்த ஒரு கோயிலைக்காட்டி அது தான் செப்பறையோனு நினைக்கிறேன் என்றார். ஆனால் என் மனம் என்னமோ சமாதானம் ஆகவில்லை. அப்போது வயலில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இருவரைப் பார்த்துக் கேட்டதும் அதே வழியில் நேரே போகச் சொன்னார். சற்று தூரத்தில் தெரிந்த ஒரு கோயில் கோபுரத்தைக் காட்டி அது தான் செப்பறை நடராஜர் இருக்கும் கோயில் என்றும் சொன்னார். வண்டி சிறிது தூரம் நேரே சென்று பின்னர் ஒரு இடத்தில் திரும்பி நின்றது. எதிரே கோயில். பூட்டி இருந்தது. எப்போது திறப்பார்கள் என்பது புரியவில்லை. ஆராயணும். முதலில் சுற்று வட்டாரங்களைப் பார்ப்போம்.
கோயிலைச் சுற்றியும் காடு, காடு, காடு! வயலின் நடுவே ஓர் வனம். வனத்தின் நடுவே தன்னந்தனியாகக் குடி இருக்கிறார் செப்பறை அழகிய கூத்தர். கோயிலின் இடப்பக்கம் தெரியும் வனம்.
வந்த பாதை! முழுக்க முழுக்கக் காடு!
வனத்தின் நடுவே கோயில். எதிரே தெரிகிறது கோயிலின் பிரதான வாயில். வலப்பக்கம் காளி குடி இருக்கும் மண்டபம். பூட்டியே இருக்கு/ திறக்கவில்லை. நாங்க போயும் இதைத் திறக்கவில்லை. குருக்களிடம் இதைப் பற்றிக் கேட்டதற்கும் அவர் சரியாக் காதில் வாங்கலை போல, பதில் சொல்லலை. திருவாதிரை, ஆனித்திருமஞ்சனம் எனச் சிதம்பரத்தில் நடைபெறுவதைப் போல் எல்லாத் திருவிழாக்களும் இங்கேயும் சிறப்பாக நடைபெறும் என்றார். நாங்க போவதற்கு நான்கு நாட்கள் முன்னால் தான் தைப்பூசத் திருவிழாவும் நடந்து முடிந்திருந்தது. நாங்க அப்போத் தான் போகணும்னு முதலில் திட்டம் போட்டிருந்தோம். பின்னர் தைப்பூசத்திற்கு வரும் கூட்டத்தை நினைத்து ஓட்டலில் இருந்து எதிலும் இடம் கிடைப்பது கஷ்டம் என்பதால் பயணத் தேதியை மாற்றினோம்.
ராமபாண்டியனுக்கு விஷயம் தெரியவர, வீரபாண்டியன் மேல் கோபம் கொண்ட அவன், வீரபாண்டியனின் இரு கைகளையும் வெட்டி விடுகின்றான். பின்னர் அந்த இரு சிலைகளையும் முறையே கட்டாரிமங்கலத்திலேயும், கரிசூழ்ந்த மங்கலத்திலேயும் பிரதிஷ்டை செய்கின்றான். சிற்பிக்கு மரக்கையையும் பொருத்தித் தர ஆணை இடுகின்றான். மரக்கை பொருத்தப் பட்ட சிற்பி, அந்தக் கைகளோடேயே முன்பை விட அழகான நடராஜர் சிலை ஒன்றைச் செய்கின்றார். இந்த அதி அற்புதச் சிலையின் அழகில் தன்னையே மறந்த அவர், அது சிலை என்பதையும் மறந்து, சிலையின் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ள, என்ன ஆச்சரியம்?? அவர் கிள்ளிய வடு கன்னத்தில் பதிந்தே விட்டது. கிள்ளிய அந்த வடுவுடனேயே அந்தச் சிலை தூத்துக்குடி அருகே உள்ள கருவேலங்குளம் என்னும் ஊரில் பிரதிஷ்டை செய்யப் பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இந்த செப்பறை, கட்டாரி மங்கலம், கரிசூழ்ந்த மங்கலம், கருவேலங்குளம் ஆகிய நான்கு ஊர்களிலுமே திரு ஆதிரைத் திருநாள் மிகச் சிறப்பாய்க் கொண்டாடப் பட்டு வருகின்றது. இந்தக் கோயில்கள் அனைத்துமே சிவாகம முறைப்படி அனைத்து அம்சங்களும் பொருந்தியவையும் கூட. திருவாதிரைத் திருநாள் அன்று இந்த நான்கு கோயில்களும் விடிய விடியத் திறந்தே இருக்கும். அன்று நான்கு நடராஜர்களையும் சேர்த்து வழிபடுவதை மிகச் சிறப்பாகவும் நினக்கின்றனர். முதலில் செப்பறை, அங்கிருந்து கரிசூழ்ந்த மங்கலம், அங்கிருந்து கருவேலங்குளம், கடைசியாகக் கட்டாரிமங்கலம் என்ற முறையில் தரிசித்தால் பயண நேரமும் சரியாக இருக்கும் என்றும் சொல்கின்றனர்.
*********************************************************************************
ஆனால் இங்கெல்லாம் நாங்க போகலை! நேரம் இல்லை என்பதோடு அதிகம் அலையவும் முடியலை! செப்பறைக்கு முக்கியமாப் போயாகணும்! ஆகவே தேநீரைக் கூடத்தியாகம் செய்துட்டு வண்டியில் கிளம்பினோம். அரை மணி நேரத்தில் ராஜவல்லிபுரம் வரவும் ஆங்காங்கே விசாரித்துக்கொண்டும், வழிகாட்டிகளைப் பார்த்துக் கொண்டும் செப்பறை நோக்கிச் சென்றோம். செல்லும் வழியெல்லாம் ஒரே வயல்! பச்சைப்பசேல் வயல்கள். காருக்குள்ளிருந்து படம் எடுக்கும் லாகவம் எனக்குக் கை கூடவில்லை. ஆகவே சும்மாப் பார்த்துக் கொண்டு வந்தோம். செப்பறை எங்கேனு இன்னும் தெரியலை! ஓட்டுநர் வேறே சற்று தூரத்தில் தெரிந்த ஒரு கோயிலைக்காட்டி அது தான் செப்பறையோனு நினைக்கிறேன் என்றார். ஆனால் என் மனம் என்னமோ சமாதானம் ஆகவில்லை. அப்போது வயலில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இருவரைப் பார்த்துக் கேட்டதும் அதே வழியில் நேரே போகச் சொன்னார். சற்று தூரத்தில் தெரிந்த ஒரு கோயில் கோபுரத்தைக் காட்டி அது தான் செப்பறை நடராஜர் இருக்கும் கோயில் என்றும் சொன்னார். வண்டி சிறிது தூரம் நேரே சென்று பின்னர் ஒரு இடத்தில் திரும்பி நின்றது. எதிரே கோயில். பூட்டி இருந்தது. எப்போது திறப்பார்கள் என்பது புரியவில்லை. ஆராயணும். முதலில் சுற்று வட்டாரங்களைப் பார்ப்போம்.
கோயிலைச் சுற்றியும் காடு, காடு, காடு! வயலின் நடுவே ஓர் வனம். வனத்தின் நடுவே தன்னந்தனியாகக் குடி இருக்கிறார் செப்பறை அழகிய கூத்தர். கோயிலின் இடப்பக்கம் தெரியும் வனம்.
வந்த பாதை! முழுக்க முழுக்கக் காடு!
வனத்தின் நடுவே கோயில். எதிரே தெரிகிறது கோயிலின் பிரதான வாயில். வலப்பக்கம் காளி குடி இருக்கும் மண்டபம். பூட்டியே இருக்கு/ திறக்கவில்லை. நாங்க போயும் இதைத் திறக்கவில்லை. குருக்களிடம் இதைப் பற்றிக் கேட்டதற்கும் அவர் சரியாக் காதில் வாங்கலை போல, பதில் சொல்லலை. திருவாதிரை, ஆனித்திருமஞ்சனம் எனச் சிதம்பரத்தில் நடைபெறுவதைப் போல் எல்லாத் திருவிழாக்களும் இங்கேயும் சிறப்பாக நடைபெறும் என்றார். நாங்க போவதற்கு நான்கு நாட்கள் முன்னால் தான் தைப்பூசத் திருவிழாவும் நடந்து முடிந்திருந்தது. நாங்க அப்போத் தான் போகணும்னு முதலில் திட்டம் போட்டிருந்தோம். பின்னர் தைப்பூசத்திற்கு வரும் கூட்டத்தை நினைத்து ஓட்டலில் இருந்து எதிலும் இடம் கிடைப்பது கஷ்டம் என்பதால் பயணத் தேதியை மாற்றினோம்.
இது காரைக்கால் அம்மையார் மண்டபம் எனப் போட்டிருக்கு. ஆனால் பலரும் காளி மண்டபம் என்கின்றனர். அம்மை எலும்புக்கூடு உருவில் இருப்பதால் அப்படிச் சொல்கிறார்கள் போலும் என எண்ணிக் கொண்டேன்.
எத்தனை மணிக்குப் போய்ச்சேர்ந்தீங்க, எப்போ அர்ச்சகர் வந்தார்.... விவரம் வ ரு மா?
ReplyDelete//மாலை செப்பறை போக வண்டியை புக் செய்யப் பேசினால் செப்பறைன்னா என்ன? எங்கே இருக்குனு கேட்கிறாங்க. // ஏற்கெனவே எழுதி இருந்தேன். தினமலர் பக்கத்தில் மாலை நாலு மணியில் இருந்து எட்டு மணி வரை திறந்திருக்கும்னு போட்டிருக்கவே அதை நம்பிச் சென்றோம். மூன்றரை, நான்கு மணிக்கெல்லாம் போய்ச் சேர்ந்து விட்டோம்.
Deleteநான்கு இடங்களைப் பற்றி இப்போதுதான் அறிகிறேன். நிச்சயம் ஒரு நாள் செல்லும் சந்தர்ப்பம் வரும்.
ReplyDeleteசெப்பறை நான் 9ம் வகுப்பு படிக்கும்போது போனது. எங்க ஊருக்கும் அதுக்கும் 4-5 கிலோமீட்டர்களாவது இருக்கணும் (அல்லது குறைவாகவும் இருக்கலாம்). வனத்தின் வழியாக துளசி பறித்துக்கொண்டே சென்றோம்.
இந்த நான்கையும் பற்றிச் சிதம்பர ரகசியம் முடிக்கும் சமயம் நான் எழுதி இருந்ததைப் படித்துவிட்டுப் பலரும் போயிட்டு வந்துட்டாங்க! எங்களைத் தவிர்த்து! சிதம்பரம் தீக்ஷிதர் ஒருத்தருமே போயிட்டு வந்தார். எங்களுக்கு இன்னமும் கொடுத்து வைக்கலை!
Deleteஇங்க உள்ளது சிதம்பரத்தில் இருந்த நடராஜர் சிலையா? (செப்பறையில்)
ReplyDeleteசிதம்பரத்தில் வைக்கப்பட வேண்டிய நடராஜர் சிலை! ஆனால் இங்கே வைக்கப்பட்டது, சிதம்பரம் நடராஜர் உருவத்தில் இன்னும் பெரியவர். இவர் சின்னஞ்சிறுக அழகாக நிஜமாகவே அழகிய கூத்தனாகக் காட்சி தருகிறார். எழில் அதிகம், நளினம் அதிகம். அவர் ஆடுவது தாண்டவமா, லாஸ்யமா என்னும் சந்தேகம் வரும்! :))))
Deleteஆமாம் அக்கா கோயில் வயல்கள் தாண்டி காட்டிற்குள் தான் இருக்கும். நான் சென்றிருந்த போதும் அடர்ந்த காடு. நான் சொல்லுவது 27 வருடங்களுக்கு முன்...என் ஒன்றுவிட்ட அத்தை அப்போது காரக்குறிச்சியில் அப்புறம் டவுன் என்று இருந்தார். டவுனில் ஒன்றுவிட்ட சித்தப்பா இருந்தார். அப்போது சென்றோம். அப்போதெல்லாம் டவுன் எக்ஸ்டென்ட் ஆகவில்லையாதலால் ரொம்பவே போகும் வழி எல்லாம் காடுதான். இப்போது அதன் அருகில் சங்கர் நகர் வந்திருப்பதாக அறிந்தேன். அப்போதெல்லாம் இல்லை. ஆள் அரவமற்று இருந்தது. தாமிரபரணி ஆறு கரை என்று அழகான இடம்.
ReplyDeleteஇப்போது பேருந்துகள் கூட இருக்கிறது என்றும் கேள்விப்பட்டேன். ஆனால் நாங்கள் சென்றிருந்த போது பழமையாக இருந்ததாக நினைவு.
உங்கள் படங்கள் பார்த்ததும் மீண்டும் செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. பசுமையை அனுபவிக்கவும்.
கீதா
வாங்க தி/கீதா, பத்து வருடங்கள் முன்னர் இந்தக் கோயில்களை நாங்க கண்டு பிடித்தப்போப் போயிருந்தாலும் காடு அதிகம் இருந்திருக்கும். இப்போக் குறைஞ்சிருக்கு என்றே சொன்னார்கள். ஆனாலும் இயற்கையில் எழில் கொஞ்சம் கொஞ்சம் மிச்சம் இருக்கு! வயதானாலும் அழகின் மிச்சம் இருக்கும் முதியோர்களைப் போல்
Deleteபயண விளக்கம் பலருக்கும் உதவும் அம்மா...
ReplyDeleteநன்றி டிடி. சிலருக்காவது பயன்பட்டால் நல்லது தானே!
Delete//முதலில் செப்பறை, அங்கிருந்து கரிசூழ்ந்த மங்கலம், அங்கிருந்து கருவேலங்குளம், கடைசியாகக் கட்டாரிமங்கலம் என்ற முறையில் தரிசித்தால் பயண நேரமும் சரியாக இருக்கும் என்றும் சொல்கின்றனர்.//
ReplyDeleteமற்ற இடங்களை விட சிறப்பாக செப்பறையில் மட்டும் தான் திருவாதிரைக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது என்றார்கள்.
வாங்க கோமதி! ஆமாம், செப்பறை மட்டும் இப்போதைக்குப் பிரபலமாக ஆகிக் கொண்டு வருகிறது. மற்றவையும் சீக்கிரம் ஆகலாம்.
Deleteகோயில் பற்றிய தகவல்களும் தெரிந்து கொண்டேன் அக்கா...
ReplyDeleteதாமிரபரணி ஆறு பாத்தீங்களா? அதைக் கடந்து தானே போயிருப்பீங்க இல்லையா? ஆறு படம் எடுத்தீங்களா
கீதா
கீதா ரங்கன்- இதை நினைவுபடுத்தாதீங்க... எங்க ஊர் ஆற்றின் படம் வெளியாகும்போது பார்த்துக்கோங்க. ஆற்று மணலைத் திருடி பணக்காரனானவர்கள் குடும்பம் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது.
Deleteதி/கீதா, தாமிரபரணிக்கரையோடு போனோம். ஆற்றைக் கடந்ததாக நினைவில் இல்லை.
Deleteசெப்பறை கோவில் சில தூண்கள் செப்பறை கோவிலுக்கு சற்று மேற்கில் உள்ள மணிமூர்த்தீஸ்வரம் என்ற கோயிலிருந்து வெள்ளத்தில் அடித்து வரபட்டவை, அவற்றை எடுத்து வைத்து கட்டி இருக்கிறார்கள்.
ReplyDeleteநீங்கள் சொல்வது போல் காரைக்கால் அம்மையார் மண்டபம் என்று போட்டு இருக்கும் மண்டபம் தான் காளி கோவில். அன்னபூரணி என்ற காளி கோவில் என்று குறிப்பிடுகிறார்கள். அம்மன் வெகு அழகாய் இருக்கும் எனேஉ தலவரலாறு சொல்கிறது.
நாங்கள் போனபோதும் திறந்து பூஜை செய்து காட்டவில்லை.
அந்த திண்ணியில் உடகார்ந்து தான் காற்றின் ஒலியை கேட்டோம். காற்று அடிக்கும் போது பனை மரத்தின் சல சலப்பு, மரங்களின் ஆட்டத்தில் ஏற்படும் உராயும் சத்தம் எல்லாம். அமைதியாக கோவில் கூட்டம் இல்லாமல் இருந்தது வெளிபக்கம்.
கோமதி அரசு, நாங்களும் அந்தத் திண்ணையில் அமர்ந்த வண்ணம் மயில்களின் ஆட்டத்தையும், குயில்களின் இன்னிசையையும் கேட்டுக் கொண்டிருந்தோம். படம் எடுக்கனு போனால் மயில்கள் ஓடி மறைந்து கொண்டன. இயற்கையான, அமைதிச் சூழலில் மனம் பரபரப்பு இல்லாமல் காத்திருக்கோமே என்னும் நினைப்புக் கூட இல்லாமல் உட்கார்ந்திருந்தோம்.
Deleteஅது காளி மண்டபம் தான்!
Deleteவீர பாண்டியன், நடராஜர் சிலை, செப்பறை, கரி சூழ்ந்த மங்கலம், கருவேலங்குளம,கட்டாரி மங்கலம் கதை போலவே சிக்கல், எண்கண், எட்டுக்குடி கோவில்களைப் பற்றியும் வரலாறு உண்டு இல்லையா?
ReplyDeleteவாங்க பானுமதி, அவற்றையும் எழுதி இருக்கேன். எட்டுக்குடியில் தான் நம்ம ரங்க்ஸ் கீழே விழுந்து பயணத்தைப் பாதியில் முடித்துக்கொண்டு திரும்பி விட்டோம். http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_07.html
Deletehttp://sivamgss.blogspot.com/2008/11/blog-post_08.html
http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_09.html
http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_8297.html
இந்தச் சுட்டிகளில் இந்தக் கோயில்களின் முருகன் வடிக்கப்பட்ட விதம் குறித்துக் காணலாம். இதன் பின்னரே 2009 ஆம் வருஷம் எட்டுக்குடி சென்று பாதியிலேயே திரும்பினோம்.
//சிற்பிக்கு மரக்கையையும் பொருத்தித் தர ஆணை இடுகின்றான். மரக்கை பொருத்தப் பட்ட சிற்பி, அந்தக் கைகளோடேயே முன்பை விட அழகான நடராஜர் சிலை ஒன்றைச் செய்கின்றார். //
ReplyDeleteஇந்த காலத்திலும் ஒருவருக்கு கை பொருத்தப்பட்டு இருக்கு. தொலைக்காட்சி செய்தியில் காட்டிய செய்தி.
இரண்டு நாட்களுக்கு முன் மின்சாரஊழியருக்கு பணி செய்யும் போது கைகள் மின்சாரம் தாக்கி கருகி போய் விட்டது என்றும் அவர் உயிரை காப்பாற்ற கைகளை வெட்டியதாகவும், ஊழியர் கதறி அழுததால் மருத்துவர் உனக்கு கொடையாளி யாரும் கிடைத்தால் மாற்று கை பொருத்துவதாக சொல்லி , கொடையாளி கிடைத்து அவருக்கு கைபொருத்தபட்டதை காட்டினார்கள். கைகளை அழகாய் இயக்க முடிகிறது. அவருக்கு அரசாங்க பணி கிடைத்து இருக்கிறது.
புதிய செய்தி கோமதி அரசு. நல்லபடியாக அவர் வாழ்க்கை நடக்கப் பிரார்த்திப்போம். அரசாங்கப் பணியைச் செவ்வனே செய்து வரவும் வாழ்த்துவோம்.
Deleteதங்களுடன் நானும் பயணிப்பதைப் போல் இருக்கிறது...
ReplyDeleteராஜ கோபுர தரிசனம் இல்லையா?...
வாங்க துரை, அங்கே ராஜகோபுரமே இல்லை. கொஞ்சம் கேரளப்பாணிக் கட்டடக்கலை.
Deleteஅது என்ன கரங்களை வெட்டும் கலை. அனியாயமாக இருக்கிறதே. இதே போலத்தான் எட்டுக்குடி
ReplyDeleteமுருகனைச் செதுக்கிய சிற்பி
கண்கள் பறிக்கப் பின்னும் அத்ற்குப் பின்னும் இன்னும் இரண்டு செய்தாராம்.
வெகு அழகான இயற்கைச் சூழ்லில் அமைந்த கோவில்.
மிக மிக நன்றி கீதாமா.
ஆமாம், ரேவதி. அவற்றைக் குறித்தும் எழுதி இருக்கேன். மேலே பானுமதிக்குக் கொடுத்த பதிலிலே சுட்டிகள் கொடுத்திருக்கேன். முடிஞ்சால் நேரம் இருந்தால் போய்ப் பாருங்க!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteசெப்பறை கோவிலைப் பற்றிய விபரங்கள் அழகாக விளக்கியுள்ளீர்கள். என்னதான் மன்னர்கள் என்றாலும், பக்தி பரவசத்தில் திளைத்தாலும், தன்னிடம் இருப்பது போல் இனி அடுத்தவரிடம் இருக்க கூடாது என்பதற்காக, கலையம்சம் அழகாய் வரப்பெற்ற சிற்பியை கொல்லும் அளவிற்கு சுயநலமான எண்ணம் எப்படி வந்தது? அந்த காவலர்கள் மட்டும் மனது இரங்கவில்லை யென்றால், அந்த ஐந்தாவது சிலை எவ்வாறு உருப்பெற்றிருக்க முடியும்? இதுவும் ஈசனின் திருவிளையாடல்களில் ஒன்றுதான். வரலாற்று கதைகள் சுவாரஸ்யமானதுதான். அதை அறியும் போது மனதுக்குள் கஸ்டமாகத்தான் உள்ளது.
செப்பறை கோவிலுக்கு செல்லும் வழி மிகவும் பசுமையாக உள்ளது. இது பற்றி இந்த கதைகள் பற்றி விபரங்கள் சிறிதளவு நான் அறிந்திருப்பினும், விபரமாக தங்கள் மூலம் நிறையவே தெரிந்து கொண்டேன். அருமையாக விபரங்களை சேகரித்து தந்திருக்கிறீர்கள். எனக்கு திருமணமாகி வந்த பின் பிறந்த வீட்டுக்கு செல்லும் சமயங்களில் இந்த கோவில்களுக்கு செல்லும் சந்தர்ப்பங்கள் அமையவில்லை. ஆனால் நெல்லையப்பரை ஒரு தடவையாவது பார்க்காமல் வந்ததில்லை. சென்ற வருடம் சென்ற போதும், கோவிலுக்குச் சென்று தரிசித்து கொண்டுதான் வந்தேன்.
தாங்கள் விபரமாக சென்றவிடங்களைப் பற்றி கூறிவருவது எனக்கும் தங்களுடன் பயணித்த நிறைவைத் தருகிறது. படங்கள் அனைத்தும் பச்சை பசேலென்று கண்ணுக்கு இனிதாக இருக்கின்றன. அடுத்து அழகிய கூத்தனை தாங்கள் தரிசித்த பதிவைக் கண்டு நானும் தரிசிக்க ஆவலாயுள்ளேன். தங்கள் சொல்படி அடுத்த முறை தி.லிக்கு பயணிக்கும் போது இந்த கோவில்களை தரிசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கட்டும்.
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நானும் முன்னெல்லாம் மதுரைக்குப் போனால் மீனாக்ஷியைப் பார்க்காமல் வரமாட்டேன் கமலா. ஆனால் இப்போவெல்லாம் கோயிலின் கெடுபிடிகளையும் கோயிலைச் சுற்றி ஏற்பட்டிருக்கும் பல்வேறு மாற்றங்களாலும் கோயிலுக்குச் செல்லவே மனம் வரவில்லை. :( இப்போக் கூடப் போக நினைச்சுத் தான் இருந்தோம். ஆனால் போகலை! அதில் அவருக்கு இன்னமும் வருத்தம் தான்!
Deleteவீரபாண்டியனின் கதை வியக்க வைக்கிறது, மரக்கைகளால் வடிவமைத்த சிலையைக் கிள்ளியதும் கன்னத்தில் குழியோ? அவ்வ்வ்வ்வ் இப்பவும் காண முடியுதோ அந்தக் குழியைக் கீசாக்கா?..
ReplyDeleteஆமாம், அதிரா, காணமுடியும் என்கின்றனர். நான் தான் இன்னமும் பார்க்கவே இல்லையே! ஆனால் இதை எழுதினதும் எத்தனை பேர் என்னைக் கேலி செய்திருக்காங்க தெரியுமா? ரொம்பவே கிண்டல் செய்வார்கள். சொல்றவங்க என்ன வேணாச் சொல்லட்டும்னு இருந்துட்டேன். இத்தனைக்கும் அவங்கல்லாமும் அந்தப் பக்கத்து ஊர்க்காரங்க தான்! :( அவங்களுக்கே இந்த விஷயம் நான் சொன்னப்புறமாத் தான் தெரிஞ்சது! அதனால் ஒத்துக்க முடியலை!
Deleteஇதேமாதிரி, அந்த கர்ணனின் காலில் வண்டு துளையிட்டதுகூட இருக்காமே ...
Deleteஅது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது கீசாக்கா.. நம்பியவருக்கு கல்லும் கடவுள்.. நம்பாதவருக்கு.. அது கல்லுத்தான், அது பற்றி நாம் கவலைப்படக்கூடாது... அதை நிரூபிக்க முயற்சிக்கக்கூடாது, சிரித்துவிட்டுப் போயிடோணும்:)
நாம் படிக்கும்போது, என் நண்பி ஒருவரிடம் ஒரு கிறிஸ்தவ அக்கா, அவ புதுசா ஒரு குரூப் வேதத்தில் இணைஞ்சாவாம், அதில் சத்தமாக கத்தினால் கடவுளுக்கு கேட்கும் என்பது அவர்கள் நம்பிக்கை, அவ வந்து என் நண்பியிடம் சொன்னாவாம்.. ஒன்பது கல்லை அடுக்கிப்போட்டு நவக்கிரகம் எனக் கும்பிடுறீங்களே அது வெறும் பைத்தியக்காரத்தனமாக இல்லையோ என..
என் நண்பி சண்டை போடவில்லை, ஆனா அப்படியே கொதிச்சுப்போய் என்னிடம் வந்து கத்தினா, அப்பவே நான் அப்படியாக்கும்:)) ஹா ஹா ஹா அவவுக்கும் இதையே சொன்னேன், இதை எல்லாம் பெரிசா எடுக்கக்கூடாது.. அது அவரவர் அறிவுக்கு எட்டியதைப் பொறுத்தது.. காகம் திட்டி மாடு சாகப்போவதில்லை கூலாக இரு என்றேன்:).
அவரவர் கருத்து அவரவருக்கு!
Delete// ஆகவே தேநீரைக் கூடத்தியாகம் செய்துட்டு வண்டியில் கிளம்பினோம். //
ReplyDeleteஆஆஆஆஆ மீ ஃபுல்ல்லாஆஆஆஆஆஅரிச்சுட்டேன்ன்ன்ன் இதைப் பார்த்து:)..
ஹாஹாஹா, அதிரடி, பின்னே இத்தனை காடாக இருந்தால் புல்லும், புதருமாக இருந்தால் அரிக்கத்தானே செய்யும்! :))))
Delete//வந்த பாதை! முழுக்க முழுக்கக் காடு!///
ReplyDeleteபாதையைப் பார்க்க பயமாகவே இருக்கே.. தனியே எப்படிப் போனீஇங்க? காட்டுயானை ஏதாவது வழி மறிச்சால்ல்ல்?
ஆனால் கோயில் ரொம்ப அழகாக மெயிண்டைன் பண்ணுகிறார்கள் போல தெரியுது, அழகிய மணல் மண் ஏரியா...
இலங்கை கிழக்கு பகுதியிலும் சில காளி கோயில்கள் இப்படி இருக்கிறது, வருடத்தில் ஒரு தடவை மட்டுமே கோயில் திறந்து 10-15 நாட்கள் பெரிய கோலாகலமாக.. கடைகள் என்ன, மேடை நாடகங்கள் என்ன.. சொல்ல முடியாமல் கொண்டாட்டம் நடக்கும், முடிவில் தீ மிதிப்பு நடைபெற்று அடுத்த நாள் கோயிலை மூடி விடுவார்கள், பின்பு அடுத்த வருடம்தான் திறக்கும்.
அதிரடி, அதெல்லாம் ஒண்ணும் பயமில்லை. கார், பேருந்து போன்ற வாகனங்கள் செல்லவில்லை. ஆனால் இருசக்கர வாகனங்கள் நிறையச் சென்றன. அந்தக் கோயிலின் பாதையைத் தாண்டிக் கொஞ்ச தூரத்தில் இதற்குச் சரியாக இன்னொரு பாதை வேறொரு கிராமத்துக்குச் சென்றது. அந்த வழியாக நிறைய இரு சக்கர வாகங்கள், ஆட்டோக்கள் சென்றன. இங்கே வரவில்லை.
Deleteகாரைக்கால் அம்மையாருக்கு ராஜவல்லி புரத்தில என்ன வேலையாம்?:).. ஹா ஹா ஹா மண்டபம் அழகாக பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்கு.
ReplyDeleteஅதிரடி அது காளி மண்டபம் தான். காரைக்கால் அம்மையாருக்கு இங்கே வேலை ஒண்ணும் இல்லையே! தப்பாய்ப் போட்டிருக்காங்க.
Deleteஆவ்வ்வ்வ்வ்வ் அப்போ மீ சும்மா சொன்னது கரெக்ட்டா இருக்கே:)
Deleteஅழகான இடம் எனத் தெரிகிறது. எப்போது இங்கே செல்ல வாய்ப்பு அமையுமோ?
ReplyDeleteநீங்க இன்னமும் தென் தமிழ்நாட்டுப்பக்கம் போனதாய்த் தெரியலையே வெங்கட். விரைவில் போய்ப் பாருங்க!
Deleteராமபாண்டியன், வீரபாண்டியன் கதைகள் சுவாரஸ்யம். என்ன மாறுபட்ட குணங்கள் கொண்ட மன்னர்கள்!
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், எல்லோருமே ஒரே மாதிரி குணங்களோடு இருப்பதில்லையே! :)
Deleteநெல்லைத்தமிழன், கீதா ரெங்கன், கோமதி அக்கா இவர்களெல்லாம் இந்தக் கோவிலுக்குச் சென்றிருக்கிறார்கள் என்பது பொறாமை கலந்த ஆச்சர்யம்! எவ்ளவு விவரம் சொல்கிறீர்கள்... பார்க்கும் ஆவல் வருகிறது. ஆங்காங்கே படிக்கும் இது போன்ற விவரங்களை அடுத்த விவரம் படித்த உடன் மறந்து விடுகிறேன்...
ReplyDeleteஎப்போது போய், எப்போது பார்க்க...!
அவங்க எல்லோரும் இந்தத் திருநெல்வேலியை அடிப்படையாய்க் கொண்டவர்கள். அதனால் போயிருக்காங்க. ஆனால் எனக்குத் தெரிந்து அங்கே திருநெல்வேலியிலேயே பலருக்கு இந்தக் கோயில் பற்றி இன்னமும் தெரியவில்லை. நாங்க தங்கின ஓட்டல் ரிசப்ஷனிஸ்டைக் கேட்டப்போ திருதிரு! கார்க்காரர் அதைவிடத் திருதிரு. எங்களை விசாரிச்சுட்டு வரச் சொல்லிட்டார். அவருக்கு சுலோசன முதலியார் பாலம்னாலே புரியலை. புதுசாச் சொல்றீங்களே அம்மா என்றார்! :( இளைஞர்கள் சரித்திரங்களிலும் முன்னோர் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வதிலும் இவ்வளவு ஆர்வமாய் இருக்கிறார்கள்! என்னத்தைச் சொல்ல! :(
Deleteஅந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கு அங்குள்ளவை எல்லாம் தெரிந்திருக்கணும்னு அவசியமில்லை (இது அவங்களோட இண்டெரெஸ்டைப் பொறுத்து இருக்கு. டூரிஸ்ட் பிஸினஸில் உள்ளவங்க கண்டிப்பா தெரிஞ்சு வச்சிருக்கணும்). கும்பகோணத்தில் நாங்கள் ஏற்பாடு செய்த டாக்சி, ஆட்டோ டிரைவர்களுக்கு 'பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை' தெரியலை. நான் வழி சொல்லி போனப்பறம், அட, இது தெரியுமே என்று சொன்னாங்க.
Deleteஆனாலும் 'சுலோசனா முதலியார்' பாலம் தெரியாதவங்க, நெல்லையைச் சேர்ந்தவங்களா இருக்கவே வாய்ப்பில்லை. ஹா ஹா
நெல்லைத் தமிழரே, யாருக்குத் தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும் ஓட்டல்காரங்களுக்குக் கட்டாயமாய்த் தெரியணும்! எங்கே! :( இதே நாங்க ஜானகிராமன் ஓட்டலில் தங்கினப்போ நவ கைலாயம், நவ திருப்பதி போகணும்னு சொன்னதும் ஒரு சார்ட் கொடுத்துப் பார்க்க வேண்டிய இடங்கள், தூரம், கோயில் திறக்கும்/மூடும் நேரம்னு எல்லாம் இருந்தது. காரும் அவங்களே ஏற்பாடு செய்து கொடுத்தாங்க! என்ன ஒண்ணுன்னா அந்த ஓட்டுநர் சாப்பிட அழைத்துச் சென்ற இடங்கள் தான் சரியா இல்லை! :( சுலோசன முதலியார் பாலம் பத்தி நான் சின்ன வயசிலேயே கேள்விப் பட்டிருக்கேன். இந்த வண்டி ஓட்டுநர் அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்துட்டு சுற்றுவட்டார ஊர்கள் மட்டும் தெரியலை என்பதோடு சுலோசன முதலியார் பாலத்துக்கும் தெரியாது என்றார். வாடிக்கையாளர் போகச் சொல்லும் இடங்களுக்குப் போவதோடு சரி, அதைப் பற்றி எல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்வதில்லை என்றார்.
Deleteகோவிலின் தோற்றம் வித்தியாசமாய் இருக்கிறது. சேர நாட்டுக்கோவில் பாணியில் இருக்கிறதோ... கோபுர அமைப்பில் இல்லாமல் வேறு மாதிரியாய்...
ReplyDeleteஆமாம், ஶ்ரீராம், வித்தியாசமான அமைப்புத் தான். கோபுரம் எல்லாம் இல்லை.
Deleteதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இந்த செப்பறை, கட்டாரி மங்கலம், கரிசூழ்ந்த மங்கலம், கருவேலங்குளம் ஆகிய நான்கு ஊர்களிலுமே திரு ஆதிரைத் திருநாள் மிகச் சிறப்பாய்க் கொண்டாடப்பட்டு வருவதை இப்போதுதான் அறிகிறேன். எங்களது கோயில் உலாவின்போக இவ்விடங்களுக்கும் செல்லும் ஆவலை ஏற்படுத்தியுள்ளீர்கள்.
ReplyDeleteவாங்க முனைவரே, நீண்ட நாட்கள் கழிச்சு வருகை தந்தமைக்கு நன்றி. நீங்களும் இந்த ஊர்க்கோயில்கள் போயிட்டு வந்து எழுதுங்க!
Delete