அடுத்து மறுநாள் நாங்க சென்றது குறுக்குத்துறை முருகன் கோயில். போனமுறை வந்தப்போப் பார்க்க நினைச்சுப் போக முடியலை! இந்த முறை வெள்ளம் இல்லாததால் போயிடணும்னு முடிவு செய்து விட்டோம். சிந்துபூந்துறை என்னும் அழகான பெயர் கொண்ட துறைக்கு இது குறுக்கு வழி என்பதாலும் பெரும்பாலும் மக்கள் விரைவில் போக வேண்டி இந்தக் குறுக்கு வழியைப் பயன்படுத்தியதாலும் இதற்குக் குறுக்குத் துறை என்ற பெயர் ஏற்பட்டதாய்ச் சொல்வார்கள்.
இந்தத் துறையில் அநேகமாய்ப் பாறைகள் நிறையக் காணப்படும். இந்தப் பாறைகள் சிற்பங்கள், சிலகள் செய்யப் பயன்படும். ஆகையால் இந்த இடத்தைத் திருவுருவாமலை என்றும் சொல்லுவார்கள். இறைவன் திருவுருவங்களை இந்தப் பாறையில் வடித்திருக்கின்றனர். முக்கியமாய்த் திருச்செந்தூரில் இருக்கும் முருகனின் மூல விக்ரஹம் இந்தப் பாறையில் 1653 ஆம் ஆண்டில் வடிக்கப்பட்டதாய்க் கூறுகின்றனர். அதே சிற்பி இங்கேயும் மற்றொரு முருகன் விக்ரஹத்தைச் செதுக்கினதாகவும் அதுவும் இங்கேயே இருப்பதாகவும் சொல்கின்றனர்.
கோயிலில் நுழைந்ததும்காணப்பட்ட முன் மண்டபம்
இது ஒரு குடவரைக் கோயில். கருவறை, மூலவர், உள் பிரகாரம் ஒரு பகுதி ஆகியன ஒரே பாறையில் குடைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனாலும் இதைத் திருவுருவாமலை என அழைக்கின்றனர். இது தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கிறது எனச்சொல்லப்பட்டாலும் ஆற்றின் உள்ளே காணப்படுகிறது. கரைக்கு அருகே சிறிது தூரத்திலேயே வண்டிகளை நிறுத்திவிட்டு நடந்து போக வேண்டுமாம் முன்னெல்லாம். ஆனால் இப்போது நீர் வடிந்திருப்பதாலும் பாதைகொஞ்சம் போடப் பட்டிருப்பதாலும் கொஞ்ச தூரம் உள்ளேயே சென்று கோயில் வாசலுக்கு அருகிலேயே வண்டியை நிறுத்தினார் ஓட்டுநர். கோயில் வாசலில் கோயிலுக்கு எதிரே தாமிரபரணி! கோயிலைச் சுற்றிலும் தாமிரபரணி.
இது கோயில் பிரகாரத்தில் வெளியே காணப்பட்ட நீராழி மண்டபம்னு நினைக்கிறேன். பலரும் முக்கியமாய்ப் பெண்கள் அதிகம் குளித்துக் கொண்டிருந்தபடியால் அங்கே அருகே சென்று படம் எடுக்க வில்லை. ஆனால் குழந்தைகள், சிறுமிகள் எனப் பலரும் குளித்துக் கொண்டும் நீச்சல் அடித்துக் கொண்டும் நீச்சல் கற்றுக் கொண்டும் இருந்தனர். பார்க்கவே மனதுக்கு ரம்மியமாக இருந்தது. திருநெல்வேலியில் அநேகமாக அனைவருமே ஏதேனும் ஓர் வழியில் தாமிரபரணிக்கு வந்து அங்கே நதியில் குளித்து நீராடித் துவைத்துக் கொண்டு அங்கே கரையிலேயே இருக்கும் பிள்ளையார்/மற்றக் கடவுளரை வணங்கி விட்டு நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டு (ஆண், பெண் அனைவருமே) சுத்தமாகக் காட்சி அளிக்கின்றனர். அதிலும் அதிகாலையிலேயே இதைக் காண முடிகிறது. ஊரிலும் குப்பை அதிகம் இல்லை. நாங்க இருந்த ஓட்டல் சந்துக்குள் என்றாலும் குப்பையைப்பார்க்க முடியலை. ஜங்க்ஷன்பக்கம் மட்டும் கொஞ்சம் கொஞ்சம் குப்பை.
கோயில் வாசலில்
இது இன்னொரு கோணம்
கோயில் வெளியே
இது கோயிலில் சந்நிதிக்கு நேரே
நாங்க வந்த வண்டி தான் அங்கே நிற்கிறது.
திருச்செந்தூர்க் கோயில் உருவான போதே இந்த மேலக்கோயிலும் தோன்றி இருக்கிறதாய்ச் சொல்கின்றனர். திருச்செந்தூர் முருகன் சிலை உருவாக்கப்பட்டு இங்கிருந்து திருச்செந்தூர் போனதால் இது தான் திருச்செந்தூர் முருகனின் பிறந்தகம் என்போரும் உண்டு. அவரைப் போலவே உள்ள மற்றொரு சிலை தான் இங்கே மேலக்கோயிலில் வைத்து வழிபட்டு வருகின்றனர். நாங்க போனப்போ மேலக் கோயில் திறக்கலை. அல்லது சீக்கிரம் மூடி விட்டார்கள் என எண்ணுகிறேன். இந்தப் பாறையில் முருகன் செதுக்கப்பட்ட வரலாறாகச்சிற்பி செதுக்கிய முருகனை அங்கிருந்து பிரிக்க முடியாததால் முருகன் அப்படியே வெயில், மழை, காற்றில் அடிபட்டுக் கிடந்ததாகச் சொல்கின்றனர். பாதுகாப்பில்லாமல் ஓர் பாறையில் ஆற்றின் நடுவே கிடந்த இந்த முருகனை அந்த நதிக்குத் தினந்தோறும் நீராட வரும் ஓர் பெண்மணி பார்த்திருக்கிறார். அவர் மகன்வடமலையப்ப பிள்ளை என்னும் பெருந்தனக்காரர். அந்தப் பெண்மணி இந்த முருகனைத் தொடர்ந்து வணங்கி வந்துள்ளார். முருகனை வெயில், மழை, காற்றிலிருந்து பாதுகாக்க ஓலைக்கூரை போட்டிருக்கிறார். அதிசயங்கள் நடக்க ஆரம்பிக்க சுப்ரமணியரும் பிரபலம் அடைய ஆரம்பித்தார்.பின்னர் திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் இந்தக் கோயில் வந்ததும் அவர்கள் முறைப்படி அர்த்த மண்டபம், கர்பகிரஹம், முன் மண்டபம், அதை அடுத்த மகா மண்டபம் எனக் கட்டிக் கோயிலுக்குத் திருப்பணி செய்திருக்கின்றனர்.
திருச்செந்தூர் முருகனை டச்சுக்காரர்கள் தூக்கிக்கொண்டு செல்லும்போது கடலில் மூழ்கத் திரும்பவும் வடமலையப்ப பிள்ளை முருகனைப் பிரதிஷ்டை செய்யச் சிலை செய்தார். ஆனால் திருச்செந்தூர் முருகனே தான் இருக்குமிடத்தைத் தெரியப்படுத்தவும், அப்போது செய்யப்பட்ட சிலையும் இந்தக் கோயிலில் தான் உள்ளது. பஞ்ச மூர்த்திகளும் தம் தம் தேவியருடன் காட்சி அளிக்கின்றனர். (வழக்கம் போல் உள்ளே படம் எடுக்கத் தடை) குருக்களைச் சில விஷயங்கள் கேட்டதற்குப் பெரிய அளவில் உதவி செய்யலை. தலையை ஆட்டிவிட்டுப் பேசாமல் இருந்து விட்டார். {எல்லோருக்குமே நெ.த. போல் முகராசி இருக்கணுமே! நமக்கு வீட்டிலேயே கிடையாது! :))))) } கருவறையில் சுயம்புவாக சுப்ரமணியர், வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். தாமிரபரணியில் வெள்ளம் வரும்போதெல்லாம் இவருக்குஅபிஷேஹம் நடப்பதோடு அந்த நீரிலேயே ஆனந்தமாக மூழ்கிக் கிடப்பார் இவர்.
எல்லாத் திருநெல்வேலிக் கோயில்களையும் போல் இங்கேயும் நெல்லையப்பர்,காந்திமதி தவிர மீனாக்ஷி,சொக்கர்சந்ந்திகளும், நடராஜர்,சிவகாமசுந்தரி சந்நிதியும் இருக்கிறது. ஷண்முகரும் ஆறு முகங்களோடு வள்ளி, தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார். உள் சுற்றில் பஞ்ச லிங்கங்கள், அம்பிகையுடன் காட்சி தருகின்றனர். இங்கு வந்து பிரார்த்தித்துக் கொள்பவர்களுக்குத் திருமணத் தடை நீங்கும் எனச்சொல்லப்படுகிறது. குழந்தைகளுக்கு தோஷம் நீங்க இங்கே வந்து குழந்தைகளைக் கருப்பட்டி, தவிடு ஆகியவற்றுக்கு விற்றுவிட்டுப் பின்னர் வாங்கிச் சென்றால் குழந்தைகள் தோஷம் நீங்கி ஆரோக்கியமாக வளருவார்கள் என்பது இங்குள்ள மக்களின் ஐதிகம். கோயில் காலை ஆறு மணியிலிருந்து பனிரண்டு மணி வரை திறந்திருக்கிறது. மாலையில் சீக்கிரமாய் மூடிவிடுவார்களாம். நான்கு மணியில் இருந்து ஏழு மணிக்குள்ளாக வந்து பார்த்துவிட்டுத் திரும்பி விட வேண்டும்.
கோவிலைப் பற்றி என்னே சிறப்பு...!
ReplyDeleteஅந்த "இன்னொரு கோணம்" மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி...
வாங்க டிடி. நன்றி.
Deleteஓ இதானா அது? ரைட்டு!
ReplyDeleteஆமாம் தம்பி! :)
Deleteஒரே இடத்திலிருந்து சிலைகள் செதுக்கப்பட்டாலும். சில தெய்வங்களே பிரபலமாகின்றன...
ReplyDeleteதெய்வ விக்ரஹங்களுக்குக் கூட அதிர்ஷ்டம் வேணுமோ? :)
Deleteபழனி நவபாஷானச் சிலையும், பூம்பாறை/கொடைக்கானல் நவபாஷாணச் சிலையும் போகரால் ஒரே சமயத்தில் செய்யப்பட்டது. பழனி அளவு பூம்பாறை பிரபலப்படவில்லை. அதனால் வந்த அதிர்ஷ்டம், பூம்பாறை நவபாஷாணச் சிலை சேதப்படாமல் இருக்கு. பழனி நவபாஷாணச் சிலை நிறையபேர் தோண்டி எடுத்து கொஞ்சம் சேதமடைந்து இருக்கு.
Deleteகும்பிடுகிற சாமியையே சுரண்டிப் பார்க்கும் குரங்குகள்..
Deleteநெல்லைத் தமிழரே, பூம்பாறைக்கோயில் இப்போ இருக்கிறபடி இருந்தாலே போதும். சிலை காப்பாற்றப்படட்டும்.
Deleteஏகாந்தன், பேராசை தான் காரணம்!
Deleteஏகாந்தன் சார்.. இரவு பழனி முருகன் மார்பில் சந்தனம் வைத்து காலையில் விஐபிக்கு கொடுப்பாரகள் (நவபாஷாணச் சிலையின் மருத்துவ குணம்). ஏதேனும் அல்லக்கையோ இல்லை பட்டர்களோ, சிலையைச் சுரண்டி அதனை உட்கொள்ளும் பிரசாதமாக் கொடுத்திருக்கணும் இல்லை நோய் தீர்க்கும் மருந்தாகச் சென்றிருக்கணும். (நல்லதோர் வீணை செய்தே)
Deleteபழமை வாய்ந்த கோவிலாயினும் அதிகம் கேள்விப்படாத கோவிலாய் இருக்கிறது. திருச்செந்தூர் முருகன் சிற்பம் பற்றிய தகவல் ஆச்சர்யப்பட வைக்கிறது.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், எனக்கு அரசல் புரசலாத் தெரியும். முழுவதும் அங்கே போனதும் ஓட்டுநர் சொன்னதில் இருந்து தெரியவந்தது. மேலக்கோயிலையும் காட்டினார். ஆனால் வெளியே பூட்டி இருந்தது.
Deleteகோவிலைச் சுற்றிலும் தாமிரபரணி! ஆஹா... அளவாய் தண்ணீர் ஓடினால் அழகாய் ரசிக்கலாம்.
ReplyDeleteஆமாம், ஶ்ரீராம், கல்லுக்குள் ஈரம் கதாநாயகன் "ரங்கமணி" இங்கே வந்து தான் தன்னுடைய திட்டங்களைப் பற்றிக் கலந்து ஆலோசிப்பான். :))))
Deleteசின்னப்பழனி அல்லது சின்னத் திருச்செந்தூர் என்று அழைக்கலாம்! திருப்பதி போல இதற்கும் மாற்று ஏற்பாடுகளா?
ReplyDeleteஶ்ரீராம், பல கோயில்களுக்கும் இப்படி ஒரு கதை இருக்கிறது. :)
Deleteஆனா ஸ்ரீராம்..... பஞ்சாம்ருதமோ இல்லை சுக்கு வெல்லமோ கிடைக்காது... ஹா ஹா
Deleteசன்னதிக்கு வெளியே, சன்னதிக்குப் போகும் வழியில் என்றெல்லாம் படம் போட்டிருக்கிறீர்கள்... கோவிலின் மொத்தத் தோற்றம் எப்படி என்று ஒரு படம் காட்டி இருக்கக் கூடாதோ...!
ReplyDeleteஆமா இல்ல! தோணவே இல்லை. அந்தச் சுற்று வட்டாரத்தைப்பார்த்ததுமே எங்கோ காற்றில் மிதக்கிறாப்போல் இருந்தது. இத்தனைக்கும் நல்ல வெயில். திருநெல்வேலியிலேயே நல்ல வெயில் தெரிகிறது. அப்போ ஶ்ரீரங்கத்தில் குறைவாக இருந்தது.
Deleteஆற்றுக்கான பெரிய படுகையில் கோவில் கொஞ்சம் ஆற்றுக்குள் இருப்பதுபோல் இருக்கும்.
Deleteநல்ல காலம் நங்கள் திருச்செந்தூர் ப்ழனி ஆகிய இடங்களுக்குப்போய் இருக்கிறோம் குறுக்குத்துறை கோவில் பார்க்க வில்லை திரு நெல்வேலியில் அதிக இடங்கள் பார்த்ததில்லை
ReplyDeleteவாங்க ஜிஎம்பி ஐயா, இன்னும் பார்க்க நிறைய இடங்கள் இருக்கின்றன. எங்களால் போக முடியலை! வெயில் ஒத்துக்கலை!
Deleteஎப்போதோ சிறிய வயதில் சென்ற ஞாபகம்.... கல்லூரி சமயத்திலும் அங்கு சென்று குளித்திருப்பதாக நினைவு. அடுத்த முறை நினைவு வைத்துக்கொள்ளவேண்டும்.
ReplyDeleteபோயிட்டு வாங்க நெ.த. நாங்க பிரம்ம தேசமும் போகத் திட்டமிட்டுப் போக முடியலை. உடல்நலக்குறைவு ஏற்பட்டு விட்டது! அதோடு சனிக்கிழமை கிளம்பப் பயணச் சீட்டும் வாங்கியாச்சு! நேரமும் இல்லை.
Deleteபிரம்மதேயம் - அற்புதமான கோவில். மிக பிரம்மாண்டம்
Deleteபிரம்மதேயம்? அல்லது பிரம்மதேசம்?
Deleteதேசம், தேயம் - இரண்டும் தமிழில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. பிரம்மதேசம்.
Deleteஅருமையான இடம். பாட்டி இங்கே அழைத்துச் செல்வார். நாங்கள் நாலு பேரும் நீச்சல் பழகுகிறோம் பேர்வழின்னு கடப்பாறை நீச்சல் அடிப்போம். 1954,55,56 அங்கே கோடை விடுமறை.
ReplyDeleteநாட்கள்.
பாட்டிக்கு அந்தப் பிள்ளையாரும் ,முருகனும் மிகவும் பிடிக்கும்.
அரசமரம் ஒன்று இருந்ததாக நினைவு.
அம்மா இங்கே வந்து குளிக்க மாட்டார். சித்தி வருவார்.
மிக அழகான படங்கள் மா. பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை.
முருகன் கதைகள் மிக இனிமை. அவன் அழகு யாருக்கு வரும்.
மிக மிக நன்றி மா.
வாங்க வல்லி, திருநெல்வேலி மாவட்டம், நாகர்கோயில், கன்யாகுமரி மாவட்டகாரர்களில் ஆண்/பெண் இருவருக்குமே நீச்சல் தெரியாமல் இருக்காது.அரசமரம் இப்போ விழுந்து விட்டதோ என்னமோ!
Deleteதாமிரபரணி குளிப்பாட்டும் குமரனைக் காண ஆசை வருகிறது. குடவரைக் கோவில்களுக்கென தனி அழகுண்டு.
ReplyDeleteஆமாம், ஏகாந்தன், போயிட்டு வாங்க. கிளம்ப மனம் வராது.
Deleteநானும் இந்த கோவில் போய் விட்டு வந்து பதிவு போட்டேன் தேடிப்பார்க்க வேண்டும்.
ReplyDeleteஅழகான படங்கள், அருமையான செய்திகள் என்று பதிவு அருமை.
எல்லோரும் குளித்து தலைமுடியை காயவைத்துக் கொண்டு போவதை காலையில் பார்க்கலாம்.
நீங்க போயிட்டு வந்து எழுதின பதிவின் சுட்டியையும் கொடுங்க கோமதி. அநேகமாக நீங்கள் நிறையத் தகவல்கள்/படங்கள்னு கொடுத்திருப்பீங்க! நான் நிறையப் படம் எடுப்பதில்லை. எடுப்பதில் நல்ல படங்களாக மட்டும் இங்கே போடுகிறேன். அதுவே உங்க படங்களை எல்லாம் பார்க்கும்போது சுமார் ரகம் தான்!
Deleteகடைசி வரி அர்த்தம் சொல்ல வந்ததை சரியாச் சொல்லலை
Delete//அதுவே உங்க படங்களை எல்லாம் பார்க்கும்போது சுமார் ரகம் தான்!//சரியாத் தான் சொல்லி இருக்கேன்.கோமதிக்குப் புரிஞ்சிருக்கும்.:))))))
Delete//குழந்தைகளுக்கு தோஷம் நீங்க இங்கே வந்து குழந்தைகளைக் கருப்பட்டி, தவிடு ஆகியவற்றுக்கு விற்றுவிட்டுப் பின்னர் வாங்கிச் சென்றால் குழந்தைகள் தோஷம் நீங்கி ஆரோக்கியமாக வளருவார்கள் என்பது இங்குள்ள மக்களின் ஐதிகம்.//
ReplyDeleteஅதுதான் அந்தக் காலத்தில் தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை என்று சில பேரை சொல்வார்கள்.
ஆமாம், கேள்விப் பட்டிருக்கேன். தவிட்டுக்கு வாங்கினோம்னு சொல்லுவாங்க. விளையாட்டு என நினைத்திருந்தேன் இந்தக் கோயில் விஷயம் தெரியும் வரை!
Deleteதிருநெல்வேலியில் நண்பர் இருக்கிறார். அவர் வீட்டுக்குச் சென்றபோது நெல்லையப்பர் கோவில் மற்றும் வேறு ஒரு மலைக் கோவில் மட்டும் சென்று வர முடிந்தது. நிறைய இடங்கள் அங்கே பார்க்க உண்டு என்றாலும், இன்னும் வாய்ப்பு அமையவில்லை. அங்கே சென்று வரத் தோன்றுகிறது. நேரம் அமையவேண்டுமே.
ReplyDeleteபோயிட்டு வாங்க வெங்கட், நீங்கல்லாம்போனால் இன்னமும் தகவல்கள் எளிதாகத் திரட்டலாம். நிறைய இடங்கள்/படங்கள் எனக் களை கட்டும் பதிவுகள் போடலாம். உங்களுக்கு நேரம் அமையப் பிரார்த்திக்கிறேன். அறை எல்லாம் முன் பதிவு செய்து கொண்டு விடுங்கள்!
Deleteபத்து வருடங்களுக்கு மேலாக திருச்செந்தூர், திருநெல்வேலி தலங்களுக்கு வழக்கமாகச் சென்றாலும்
ReplyDeleteஇன்னும் குறுக்குத் துறை குமரனைத் தரிசிக்கும் பாக்கியம் கூடி வரவில்லை....
முருகன் அருள் முன்னின்று காக்கும்...
ஆமாம் துரை, திருச்செந்தூருக்கே நாங்க 2,3 முறை போனோம்.அப்போல்லாமும் இங்கே எல்லாம் போகத் தோன்றவில்லை.
Delete1653 ல் முருகன் சிலை வடிக்கப்பட்டது என்றும் கருவறையில் சுயம்புவாக சுப்ரமணியர் என்றும் பதிவில் வருகிறதே..
ReplyDeleteதினமலர் பாணியில் எல்லா சிவ லிங்கங்களுமே சுயம்பு என்றான மாதிரி....
அவசியம் தரிசிக்க வேண்டிய திருக்கோயில்...
குறுக்குத் துறையின் முருகையா..
குறைகள் அனைத்தையும் தீரய்யா!...
துரை, கருவறையில் ஒரே பாறையில் செதுக்கப்பட்ட சுப்ரமணியர் வள்ளி, தெய்வானையுடன். தனியாகச் செதுக்கப்பட்ட முருகன் சிலை மேலக்கோயிலில் இருப்பதாகவும், இந்தக் குறுக்குத்துறை சுப்ரமணியர் கோயில் உற்சவ விக்ரகங்கள் வெள்ளம் வரும்போது மேலக்கோயிலில் வைப்பார்கள் எனவும் சொன்னார்கள். இன்னொரு சிலை தான் வடமலையப்ப பிள்ளையால் மறுபடி செய்யப்பட்டது இந்தக் கோயிலிலேயே இருப்பதாகச் சொன்னார்கள். குருக்களுக்குத் தெரியவில்லை. :(
Deleteசுயம்புவெல்லாம் இல்லைதுரை! வடிக்கப்பட்டதாகத் தான் இருக்கும்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteகுறுக்குத்துறை முருகன் கோவில் தரிசனம் அழகான படங்களுடன் மிகச் சிறப்பாக கிடைத்தது. அனைத்து விஷயங்களையும் அறிந்து கொண்டேன். அருகிலேயே இருந்தும் இதெல்லாம் நான் பார்த்ததில்லை வெள்ளம் வந்தால் கோவில் முழ்கி விடுமென கேள்விப் பட்டுள்ளேன். எங்கள் அம்மா, அப்பாவெல்லாம் நான் சிறுவயதாயிருக்கும் போது சென்றிருக்கிறார்கள் என சொல்லக் கேள்வி. அப்பா சிந்துபூந்துறைக்கு நீத்தார் கடன் செலுத்த சென்று வருவார். அப்போதெல்லாம் பஸ் வசதியெல்லாம் கிடையாது. எங்கு சென்றாலும், நடராஜா சர்விஸ்தான். என்னை அழைத்துப் போனதில்லை. அவ்வளவு அன்பான கட்டுப்பாடுடன் வளர்ந்திருக்கிறேன். 19ல் திருமணம் ஆகி சென்னை வந்தவுடன்,மறுபடியும் பிறந்த வீட்டுக்கு போகும் போது என் கணவருடன் முதன்முதலாக திருச்செந்தூர் சென்றிருக்கிறேன். அப்போதுதான் முதல் தடவையாக சமுத்திரத்தை, அதன் அழகை, அலைகளை, என்று என் கண்ணோடு கற்பனையில் அல்லாது சந்தித்தேன். அப்புறம் மெரினாவில். அதற்கே வீட்டு பெரியவர்களின் கட்டளைப்படி.(திருமணமாகி ஒருவருடம் வரை கடல், நதிபோன்ற நீர்நிலைகளுக்கு செல்லக் கூடாது.) அலைகளை தூர நின்று ரசித்து விட்டு வந்தேன்.
இன்னமும் குறுக்குத்துறைக்கு செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. தங்கள் பதிவின் மூலம் அனைத்தும் அறிகிறேன். அடுத்த தடவை பிழைத்து கிடந்தால் தி. லி செல்லும் போது போகாத கோவிலுக்கெல்லாம் சென்று வர வேண்டுமென தங்கள் பதிவை பார்த்ததும் ஆசை வருகிறது. பார்க்கலாம்.. எதுவும் தெய்வச் செயல் அல்லவா.! பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, உடல் நலம் தேவலையா?பதிவுஒண்ணும் போடவில்லையா?நீங்கள் எல்லாம் திருநெல்வேலியிலேயே இருந்தும் இந்தக் கோயில் எல்லாம் போகவில்லை என்பது என்னைப் பொறுத்தவரை அதிசயமோ/ஆச்சரியமோ இல்லை. மதுரையிலேயே பிறந்து வளர்ந்து பதினைந்து, பதினாறு வயது வரை திருப்பரங்குன்றம் போனதில்லை. அழகர்கோயிலுக்குக் கல்யாணம் ஆகிக் கணவரோடு தான் போனேன்.:))))
Deleteதிருமணம் ஆன வருடம் கடல்,நதிக்கரைக்குப் போகக் கூடாது என்பது எனக்குப் புது விஷயம். மாசமாக இருந்தால் தான் கடற்கரைக்கோயில்கள்,மலைக்கோயில்களுக்குப்போகக் கூடாது என்பார்கள்.
உடம்பை அசைக்காமல் ஒரே இடத்திலேயே இருந்துகொண்டு ஒம்பேதூஊஊ படம் எடுத்துப் போட்டிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா ..
ReplyDeleteஅதிரா....whatsup ல் வாயில் கை வைத்திருக்கும் smily போடும் எண்ணம் வருது
Deleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்வீட்61 என்ன, பிறந்த நாள் பார்ட்டி மயக்கம் இன்னும் தீரலை போல! :))))
Deleteஅனுராதா, :))))))
அல்லோஓ கீசாக்கா....:)
Deletehttps://goo.gl/images/AGXi3M
பார்த்தேன் மியாவ், கோபமாப் பார்க்கறீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!:)
Deleteஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் அது தாமிரபரணியோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. எனக்கு ஆறுகள், மற்றும் அதன் தமிழ்ப்பெயர் கேட்டாலே ஏனோ தெரியாது ஒரு பயங்கர லவ் வந்துவிடும் அவற்றில்... மண்டபத்தோடயே ஆறு போகுதே சூப்பர், ஆனா ஆற்றுத்தண்ணி ஏன் பச்சையாக இருக்கு...
ReplyDeleteஸ்வீட் 61 அதிரா, சில நீர்நிலைகள் பச்சையாகத் தான் காண்கிறேன்.முக்கியமாய்க் குளங்கள், ஏரிகள். சில ஏரிகள் நீல நிறமாயும் இருக்கும்! இங்கே தாமிரபரணி பச்சையம்மாளாகத் தான் இருந்தாள்.
Deleteகோயிலில் சிறப்பு, அது உருவான கதையை எல்லாம் நெல்லைத்தமிழன் படிப்பாருக்கும்:), நாங்க ஆற்றையும் கோயிலின் அழகையும் சுவாமியையும் ரசிக்கிறேன்ன்:)).. ஏனெனில் அவர்தான் இப்பொ சுற்றுலாக் கிங்:)..
ReplyDeleteநீங்க மட்டும்தான் காரில் போயிருக்கிறீங்கபோல இருக்கு.. கீசாக்கா ஆற்றில் இறங்கவில்லையோ? மாமா முறைச்சிருப்பார்.. :) அதனால பேசாமல் மண்டபத்திலேயே இருந்துகொண்டு படமெடுத்து வந்திருக்கிறீங்க ஹா ஹா ஹா..
சுவீட் 61, அதிரடி, அதிரா, உண்மையிலேயே மாமாவுக்குப் பசி வந்துவிட்டது!:)))) போதும், போதும்னு சொல்லிட்டு இருந்தார் தான்! :))) நெல்லைத் தமிழர் நிறையப் படங்கள் எடுக்கிறார். வெங்கட் நிறையப் படங்கள் எடுக்கிறார்.ஆனால் அவங்களை மாதிரிப் படங்கள் எடுக்கவோ, கோயில்களில் நேரம் செலவு செய்யவோ என்னால் முடியாது! ஓரளவுக்குத் தான்முடியும்! :))))
Deleteவந்தாச்சு இதோ பார்த்துட்டு வரேன்...ஹையோ அக்கா இந்தக் கோயிலை நான் மிஸ் பண்ணிட்டேன். பொதுவாகவே எனக்கு மலை, ஆறு இவற்றில் இருக்கும் கோயில்கள் என்னை மிகவும் ஈர்க்கும்...இயற்கைச் சூழல்...பண்டு நாங்கள் திருநெல்வேலி அருவிகளில் எல்லாம் குளித்துவிட்டு இதர்கும் செல்ல நினைத்தாலும் இக்கோயில் மிஸ் ஆனதுக்குக் காரணம் தண்ணீர் இருந்ததால்...இப்ப வண்டி எல்லாம் போகுது போல...
ReplyDeleteஅழகா இருக்கு அக்கா படங்கள் ....
இதோ வரேன் எல்லார் வீட்டிலும் கால் வைத்துக் கொண்டிருக்கேன் தாவிக் கொண்டு ஹா ஹா ஹா ஹா
கீதா
தி/கீதா, மெதுவா வாங்க. படுக்கப் போறேன்.முடியலை. கண் எரிச்சல்! அதோடு இன்னிக்கு என் அம்மாவின் ச்ராத்தம் வேறே. காலையில் இருந்து பட்டினி! அம்பத்தூரில் அண்ணா வீட்டில் இருந்து ச்ராத்தம் முடிந்த செய்தி வந்தபின்னர் சாப்பிட்டேன். காக்கைக்குச் சாதம் வைக்கையில் இன்று பார்த்து அந்தக் குஞ்சுக்காக்காக் காத்திருந்து வந்து கொத்தியது. சுடப் போறது, ஜாக்கிரதைனு எச்சரிக்கை பண்ணிட்டு வந்தேன். நம்ம ரங்க்ஸ் கேட்டுட்டு உங்க அம்மா தான் வந்திருக்கார் என்றார்!:))))
Deleteபார்த்தீங்களா. மாமா கூட உங்க நிறத்தை கேலி பன்றார்.
DeleteJayakumar
//நம்ம ரங்க்ஸ் கேட்டுட்டு "உங்க அம்மா தான்" வந்திருக்கார் என்றார்!//
Delete:)))பித்ரு ரூபத்தில் என் அம்மா வந்ததாய்ச் சொன்னார். சாதாரணமாகச் சாதம் வைத்ததும் காக்கை வருவதில்லை. நேற்றுக் காத்திருந்து வைத்ததுமே கொத்தியது! :)
குறுக்குத்துறை முருகன் கோயிலில்...ஆஹா என்ன ஒரு அழகிய இடம்
ReplyDeleteபார்க்கும் போதே கண்ணுக்கு குளிச்சியா இருக்கு மா...தகவல்களும் அருமை
வாங்க அனுராதா, ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி.
Delete