எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, February 15, 2019

அழகிய கூத்தனின் தரிசனம்!

இன்னும் சிறிது நேரக்காத்திருப்புக்குப் பின்னர் மறுபடி தொலைபேசிக் கேட்டதில் அவர் மனைவியோ, யாரோ ஒரு பெண்மணி குருக்கள் கோயிலுக்குக் கிளம்பி விட்டதாகச் சொன்னார். அதன் பின்னர் மேலும் இருபது நிமிடங்கள் சென்றன. வரும் வண்டிகள் எல்லாம் கோயில் பக்கமே திரும்பவில்லை.  மீண்டும் சற்று நேரம் கழிந்ததும் குருக்கள் ஓர் கோயில் ஊழியருடன் வந்து சேர்ந்தார். அதற்குள்ளாக மணி ஐந்தரை ஆகி விட்டது. பேசாமல் நாலு மணிக்குக் கிளம்பி வந்திருக்கலாம். பின்னர் ஊழியர் கோயிலைத் திறக்க குருக்கள் முதலில் சென்றார். சற்று நேரக்காத்திருப்புக்குப் பின்னர் நாங்களும் உள்ளே சென்றோம். அதற்குள்ளாக குருக்கள் நாங்கள் எங்கிருந்து வந்தோம் என்றெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவர் பெயர் ராஜாமணி என்றார். சாதாரணமாகக் கூட்டம் இருக்காது என்றாலும் மாசாந்திரத் திருவாதிரை நாட்கள், மற்றும் திருவாதிரை ஆருத்ரா தரிசனம், தைப்பூசம் போன்ற நாட்களில் நல்ல கூட்டம் வரும் என்றார்.

கோயில் தலபுராணம் தெரியுமா எனக் கேட்டதற்குத் தெரியும் என்றோம். இளைஞரான அவருக்கு இந்தக் கோயிலில் ஈசனுக்குத் தொண்டு செய்வதில் பெருமையாக இருந்தது என்பது அவர் பேச்சில் தெரிந்தது. எங்கள் குழந்தைகளைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டவர் அவர்கள் வெளிநாட்டில் இருப்பதற்கு மிகவும் வருந்தினார். என்ன செய்ய முடியும்! அவரவர் வாழ்க்கை அவரவருக்கு என மனசுக்குள் நினைத்துக் கொண்டேன். பின்னர் சபா மண்டபத்தில் ஏறி நடராஜரைக் கிட்டே இருந்து தரிசிக்கலாம் எனில் படிகள் உயரமோ உயரம்! பக்கத்தில் உள்ள திருவாசி போன்ற  செப்புத் தகட்டைப் பிடித்துக் கொண்டு ஏற முயன்றேன். நம்ம ரங்க்ஸ் ஏறிப் போய்விட்டார். குருக்கள் கோயில் ஊழியரிடம் எனக்கு உதவச் சொல்ல அவரும் வந்து கையைப் பிடித்து மேலே தூக்கி விட்டார். அதற்கும் மேல் படிக்கட்டுகளைக் கடந்து ஒருவழியாகத் தாமிரசபையில் போய் நின்றேன்.

செப்பறை க்கான பட முடிவு  à®šà¯†à®ªà¯à®ªà®±à¯ˆ க்கான பட முடிவு

மேலே உள்ள படங்கள் கூகிளார் கொடுத்தவை. என்னைப் படம் எடுக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டார்கள். அதோடு கையில் காமிராவைப் பார்த்ததுமே கோயில் ஊழியர் என்னை விட்டு நகரவே இல்லை. அங்கே நடராஜர் சந்நிதியில் தரிசனம் முடித்துக் கொண்டு பின்னர் அங்கேயே இருக்கும் சிவனையும், அம்பிகையையும் தரிசித்துக் கொண்டோம். இந்த லிங்கம் சுயம்புலிங்கம் எனவும் வேண்ட வேண்ட வளர்ந்ததால் வேண்ட வளர்ந்த நாதர் என்னும் பெயரில் அழைக்கப்படுவதாகவும், இவர் தான் "நெல்லையப்பர்" எனவும் குருக்கள் கூறினார். அம்பிகை பெயர் காந்திமதி! இருவரையும் தரிசித்துக் கொண்டோம். தீப ஆராதனைகள் எடுத்தார்கள். பார்த்துக்கொண்டோம். பின்னர் பிரகாரம் சுற்றி வந்து செப்பறையைப் பார்க்கவேண்டிச் சென்றோம்.


உள்ளே நுழைந்ததும் தெரியும் மண்டபம்


மண்டபத்தின் இன்னொரு பகுதி


நம்ம ஆளு மண்டபத்தின் இரு பக்கங்களிலும் காணப்பட்டார்.தாமிர சபையின் மேல் கூரை. முழுதும் தெரியும் வண்ணம் படம் எடுக்க முடியலை! :(எல்லாம் முடிந்ததும் குருக்களிடம் விடை பெற்றுக்கொண்டு அடுத்த கோயிலான கிருஷ்ணாபுரம் நோக்கிச் சென்றோம். முற்றிலும் இதற்கு எதிர்த்திசையில். போகணும் அதற்கு. அதைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

மூன்று நாட்களாக அடுத்தடுத்து வேலைகள், மைத்துனர் பையர் வருகை என ஒரே வேலை மும்முரம். இதோடு நடுவில் மின்வெட்ட்ட்ட்ட்டு வேறே! காலையிலே கொஞ்ச நேரமாவது உட்காருவேன். இரண்டு நாட்களாக அது முடியலை.  நேற்றுப் பத்து நிமிஷம் உட்கார்ந்துட்டு எழுந்துட்டேன். வேலை இருந்தது. பின்னர் மதியம் தான் சில மணி நேரம் குறைந்தது 3 மணி நேரம் உட்கார முடியும்.  மாலை நேரம் கட்டாயமாய் உட்கார முடிவதில்லை. சனி, ஞாயிறு குஞ்சுலு வரும். அப்போ மட்டும் இரவு ஒன்பது மணி வரை உட்கார்ந்திருப்பேன். சில சமயங்களில் அது வராது! :( அப்போ மறுநாள் காலை வரும்! அன்னிக்கும் பதிவுகளைப் பார்க்க முடியாது.  இஃகி, இஃகி, ரொம்ப ரொம்ப பிசினு சொல்லிக்கத் தான் ஆசை! ஆனால் அது பிடிக்காது. :) அதனால் நான் சொல்ல வந்தது என்னவென்றால் பதில் வரத் தாமதம் ஆனாலோ, பின்னூட்டங்கள் வெளியிடத் தாமதம் ஆனாலோ பொறுத்துக்கொள்ளவும்.

40 comments:

 1. //பதில் வரத் தாமதம் ஆனாலோ, பின்னூட்டங்கள் வெளியிடத் தாமதம் ஆனாலோ// - அதான் தெரியுமே. நீங்கள் 'வயிறு' போலக் கிடையாது (ஒரு நாளைக்கு ஒழி என்றால் ஒழியாய், இரு நாளைக்கு ஏல் என்றால் ஏலாய்..). வந்தா தொடர்ந்து வருவீங்க. இல்லைனா, அப்போ அப்போ பயணம், வேலைனு சொல்லி மூணு நாலு நாட்கள் காணாமப்போயிடுவீங்க. வாங்க மெதுவா.

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத் தமிழரே, ஹிஹிஹி, ஒரு சில புத்தகங்கள் மின்னூலாக வெளிவருவதற்கான தொகுப்பு வேலைகளும் அவ்வப்போது பார்க்கணும்! :)))) முக்கியமாய்த்தாமிரபரணிக் கரையில் நவ திருப்பதி, நவ கைலாயம் போனது பற்றிய பதிவுகள், அஹோபிலம் போனது! எங்கள் கல்யாணக்கதைனு தொகுத்துட்டு இருக்கேன். பையர் பார்த்துட்டு உதவி செய்யறேன்னு சொல்லி இருக்கார். அவருக்குத் தமிழில் "அ" போடக் கூடத் தெரியாது! ஈஸ்வரோ ரக்ஷது! :)))))) என்னோட வயிறு பிரச்னை தனி! அது அடிக்கடி வரும், போகும், வரும் போகும்! இன்னொரு பயணமும் இருக்குத் தான்! :)))

   Delete
 2. செப்பறை-இவ்வளவு பெரிய மண்டபம், கோவில்லாம் பார்த்த ஞாபகம் இல்லை. (அனேகமா சிவன் லாம் அப்போ தரிசித்திருக்கமாட்டோம்... போனது எங்க பெருமாள் கோவிலுக்கு துளசி பறிக்கன்னா). செப்பறை மட்டும் பார்த்த ஞாபகம் (வெளியிலிருந்து?) இருக்கு. கோவில் தரிசனம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. நாங்க இப்போத் தான் முதல் முறை பார்க்கிறோம் என்பதால் உங்களோட கருத்துக்கு பதில் சொல்ல முடியலை! :(

   Delete
 3. நல்ல தரிசனம் கிட்டியது பற்றி சந்தோஷம்.... படத்தில் உள்ளவரையும் பார்த்துக்கொண்டோம்.

  ReplyDelete
  Replies
  1. படத்தில் உள்ளவர் உற்சவ காலங்களில் வெளியே வரச்சே எடுத்த படங்கனு சொன்னாங்க. ஆனால் சிதம்பரத்தில் உற்சவ காலங்களில் நடராஜர் வெளியே வரும்போது படங்களே எடுக்கக் கூடாது, எடுக்கவும் முடியாது! திருவாதிரை சமயம் போனப்போத் தேரைப் படம் எடுக்க முயன்றபோது தேரோடு கூடவே வந்ததீக்ஷிதர்கள் தடுத்துவிட்டனர். நடராஜரை உள்ளே இருந்து வெளியே கொண்டு வந்து தேரில் ஏற்றும்போதும், பின்னர் தேரிலிருந்து உள்ளே கொண்டு செல்லும்போதும் நன்றாகப் பார்க்கலாம். ஆனால் படம் எடுக்கக் கூடாது!

   Delete
 4. தங்களால் நானும் செப்பறைக் கூத்தப் பெருமானைத் தரிசனம் செய்து கொண்டேன்... ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி துரை! இன்னமும் வேலைத் தொந்திரவு இருக்கோ? (

   Delete
 5. பலவருடங்களுக்கு முன் பார்த்திருந்ததால் பசபசப்பாகத்தான் நினைவிருக்கு...இப்போ படங்கள் பார்த்ததும் கொஞ்சம் நினவுக்கு வருது. இருந்தாலும் இப்ப போய்ப் பார்க்கனும்னு தோனுது. அப்ப பார்த்ததுக்கு வித்தியாசம் இருக்காப்ல இருக்கு...

  படிகள் ஏற முடியலைனு நீங்க சொன்னதை வாசித்ததும் உடனே எனக்கு நீங்க விழுந்தது நினைவுக்கு வந்துச்சு..நல்லகாலம் கோயில் ஊழியர் உதவிட நீங்க ஏறி தரிசனம் செய்ய முடிந்ததே!! இறைவன் அருள்!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க தி/கீதா, உள்ளே உள்ள மண்டபத்துக்கும் மேலே சபா மண்டபம். அதிலே தான் படங்கள் சபாமண்டபம் படம் எடுக்கலை! அதோடு நடராஜர் தெற்கைப் பார்த்துக்கொண்டு நேரே நின்றதால் படம் எடுத்தால் அவரும் விழுவார் என்பதாலும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க!

   Delete
 6. பரவால்லக்கா...எப்போ உங்களுக்கு நேரம் கிடைக்குதோ அப்போ நிதானமா பதில் கொடுங்க...பதிவு போடுங்க...நாளை சனி...குஞ்சுலு வருமே!! பார்த்து அதோடு எஞ்சாய் செய்யுங்க..குஞ்சுலு எப்படி இருக்கு இப்போ?!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தி/கீதா, குஞ்சுலு முழிச்சுண்டு இருந்தது. ஆனால் அவங்க அப்பா லேட்டா எழுந்ததாலே நேத்திக்கு நம்ம நேரப்படி பத்து மணிக்குத் தான் வந்தது. ரொம்ப உட்கார முடியலை. இப்போல்லாம் எங்களைப் பார்த்தாலே நோ, நோ னு சொல்லிக் கொண்டு தலையை ஆட்டிக்கொண்டு முகத்தை மூடிக்கொள்கிறது! இது அவங்கப்பா இங்கே வந்துவிட்டுப் போனதிலே இருந்து! :)))) நாங்க தான் அவங்க அப்பாவைக் கூட்டி வந்துட்டோம்னு நினைக்கும் போல! :))))

   Delete
 7. ஆனைகள் அழகா இருக்கு...மண்டபம் படம் அழகா இருக்கு அக்கா...இதை எடுக்க அனுமதித்தாங்களே பரவால்ல....

  முதல் படங்கள்....அனுமதி இல்லைனாலும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எப்படியோ நெட்ல வருதே இறைவன் படங்கள்...நம்மைத்தான் எடுக்க அனுமதிக்க மாட்டேங்கறாங்க போல....அனுமதி இல்லைனா அது எல்லோருக்கும் பொருந்தும்தானே இல்லையோ? புரியலை...

  கீதா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அந்தப்படங்கள் நடராஜர் வீதி உலா வரச்சே எடுத்திருப்பாங்க போல! உள்ளே கர்பகிரஹத்தில் இருக்கும்போது எடுக்காதே என்கிறார்கள்.

   Delete
 8. ஆனை படத்துக்கு மேலே இருக்கும் படத்துல இருக்கறது எல்லாம் புதுசா இருக்காப்ல இருக்கு...அப்ப இது போல பார்த்த நினைவில்லை...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தேவார நால்வர், குருஞானசம்பந்தர், மெய்கண்டார் ஆகியோர் அந்தப் படங்களில் இருப்பவர்கள்.

   Delete
 9. ஏதோ சுவர் எல்லாம் கொஞ்சம் கூடுதலா கட்டியிருக்காப்ல இருக்கு..அந்த கறுப்பா ஏதோ எழுதி சட்டம் போல இருக்கே அதெல்லாம் அப்ப இருந்தா மாதிரி தெரியலை...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அந்தச் சுவர் தான் எனக்கும் கொஞ்சம் தடையாகத் தெரிந்தது. முன்னர் எங்க நண்பர்கள் ஏழு வருஷம் முன்னே போய் வந்தப்போ அந்தச் சுவர் இல்லை. நல்லா நினைவில் இருக்கு. அவங்க கிட்டே இருந்து படம் வாங்கி என்னோட ஒரு பதிவில் கூடப் போட்டேன். இப்போச் சுவர் வந்திருக்கு. எனக்கும் அதைத் தெரிஞ்சுக்க முடிந்தது. சுவற்றில் எழுதி இருப்பது பஞ்ச சபைகள் பெயர் தான்.

   Delete
 10. இளைஞராயிருந்தாலும் கோவில் பணியில் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். பாராட்டப்பட வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ஶ்ரீராம், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார் என்பதோடு தாய் நாட்டுப் பெருமையும் இருக்கு என்பதும் குறிப்பிடத்தக்கது!

   Delete
 11. கிருஷ்ணாபுரம் கோவிலுக்கு கிளம்பும்போதே குருக்களுக்கு தொலைபேசியிருப்பதுதானே...!

  ReplyDelete
  Replies
  1. நாங்க செப்பறையிலிருந்து கிளம்பறச்சேயே ஆறு மணிக்கு மேல் ஆகி விட்டது. கிருஷ்ணாபுரம் கோயிலும் மிகப்பழமையானது தான்! ஆனாலும் அங்கே திறந்திருப்பார்கள் என்னும் நம்பிக்கை இருந்ததால் தொலைபேசிச் சொல்லவில்லை.

   Delete
 12. அவ்வளவு காவல் இருந்தும் ஆங்காங்கே சில புகைப்படங்கள் (வெளியில்தான்) எடுத்துள்ளீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், அதோடு அந்த ஊழியர் எனக்கு உதவி செய்யும் சாக்கில் கூடவே வந்தார்! :)

   Delete
 13. //வெளிநாட்டில் இருப்பதற்கு மிகவும் வருந்தினார். என்ன செய்ய முடியும்! அவரவர் வாழ்க்கை அவரவருக்கு என மனசுக்குள் நினைத்துக் //

  ம்ம் விட்டு விலகி முடியாத அங்கே முழுதா நம்ம ஊருக்கும் வரவும் முடியாத எதோ ஒரு இரும்புத்திரை எங்களை தடுப்பது அவருக்கு புரிந்திருக்கு .


  //கையில் காமிராவைப் பார்த்ததுமே கோயில் ஊழியர் என்னை விட்டு நகரவே இல்லை.//

  அவ்ளோ பயமா அவருக்கு :))))))))
  அந்த தீபாராதனை படத்தை ஜூம் செஞ்சி பார்த்தேன் எவ்ளோ பெரிய விளக்கு !
  என்ஜோய் யுவர் வீக்கெண்ட்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், எங்க பொண்ணும் சரி, பையரும் சரி இந்தியாவை விட்டே போக மாட்டோம்னு சபதம் எடுத்துட்டவங்க தான்! :) பெண் கல்யாணம் ஆகும்போதே மாப்பிள்ளை சொல்லிவிட்டார், அமெரிக்கா போகப் போவதாக! கடைசியில் அங்கேயே குடிமக்களாகவும் ஆகிட்டாங்க! பையர் படிச்சுட்டுத் திரும்பி வருவேன் என்றார். வரலை! இப்போ அவரும் அவர் மனைவியும் அங்கேயே குடிமக்கள்! :) எங்களையும் க்ரீன் கார்ட் வாங்கச் சொல்லிப் பத்து வருஷமாத் தொல்லை. நாங்க தான் மசிஞ்சு கொடுக்கலை!:(
   வீக் என்ட் என்றால் குஞ்சுலு வரும். அதான் ஒரு எதிர்பார்ப்பு! மற்ற நாட்களிலே இரண்டு பேருக்கும் உட்கார முடியாது! வாரக் கடைசியிலும் வேலை வைச்சிருப்பாங்க! வீடு சுத்தம் செய்வது, தோட்டப்பராமரிப்பு, சாமான்கள் வாங்குவது, துணிகள் தோய்த்து இஸ்திரி போட்டு எடுப்பது என! சரியா இருக்கும். ஆனால் காலை நேரம் எங்களுக்காகக் கொஞ்சம் ஒதுக்குவாங்க!

   Delete
 14. தாமிர சபை கண்டோம், மகிழ்ந்தோம். கிருஷ்ணாபுரப் பதிவிற்காகக் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி முனைவர் ஐயா!

   Delete
 15. மனம் லயித்த எழுத்து நேரமில்லாவிட்டாலும்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜிஎம்பி ஐயா!

   Delete
 16. அன்பு கீதா. அழகான படங்கள். தாமிரச் சபை படம் மிக அழகு.
  உங்களுக்குன்னு இப்படிப் பெரிய படிகள் வந்து சேருகிறதே.

  உங்கள் மனத்திடம் தான் எனக்கு மிகப் பெருமையாக
  இருக்கிறது. இன்னும் நிறைய இடங்களுக்குப் போய், அழகாக எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரேவதி, உங்களுக்கு மனோதிடமாகத்தெரிவது பலருக்கும் அடம், பிடிவாதம் என்றே தெரிகிறது! இஃகி, இஃகி! இன்னும் சில இடங்களுக்குத் திருநெல்வேலியிலேயே இம்முறை போக முடியலை. இரண்டு பேருக்கும் முடியாமல் படுத்துட்டோம். சொல்லப் போனால் தூங்கிட்டோம். :))))

   Delete
 17. //உயரமோ உயரம்! பக்கத்தில் உள்ள திருவாசி போன்ற செப்புத் தகட்டைப் பிடித்துக் கொண்டு ஏற முயன்றேன். நம்ம ரங்க்ஸ் ஏறிப் போய்விட்டார். குருக்கள் கோயில் ஊழியரிடம் எனக்கு உதவச் சொல்ல அவரும் வந்து கையைப் பிடித்து மேலே தூக்கி விட்டார்//

  ஆவ்வ்வ் இதென்ன இது கீசாக்காவுக்கு வந்த சோதனை கர்:) ஹா ஹா ஹா.. இதுக்குத்தான் மாமாவோடு மார்கட்டுக்கு நடந்துபோய் வாங்கோ எண்டால், இல்ல போனால் ஸ்கூட்டரிலதான் போவேன் என்றால்.. உடம்பு என்ன ஆகும்:)) ஹா ஹா ஹா சரி சரி நா ஒண்ணும் சொல்லல்ல:))

  ReplyDelete
  Replies
  1. அதிரடி, தமிழ்ப்புலவி, அந்தக்காலங்களில் அதாவது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால் கட்டிய கோயில்களின் படிகள் உயரமாகவே இருக்கும். பல கோயில்களிலும் இப்படித் தான். அலைச்சலைப் பொறுத்துச் சிலவற்றில் எப்படியோ ஏறிடுவேன். சிலவற்றில் ஏற முடியறதில்லை. என்ன செய்யலாம்!:(

   Delete
  2. மாமாவோடு வண்டியில் நானும் வரேன் காய் வாங்கனு தான் சொல்றேன். அவர் தான் கூட்டிச் செல்லுவதில்லை. ஏற்கெனவே வண்டியில் உட்காரும்போது இரண்டு பேருக்கும் எல்லைப் பிரச்னை! இந்தியா, பாகிஸ்தான் பிரச்னையை விட மோசமாக இருக்கும். :)))) நடந்து எங்கே போறது? நான் அப்போத் தான் எங்க குடியிருப்பு வளாகத்தைத் தாண்டுவேன். அவர் தெற்கு கோபுர வாசலில் நின்றுகொண்டு நான் வரேனானு பார்ப்பார். ஒரு காலத்தில் என் மாமனார் எல்லாம் என்னோட நடையை "போட்மெயில் வருது" எனக் கிண்டல் செய்வாங்க! இப்போ இந்த நிலைமை! :)))))

   Delete
 18. காட்டுக்கு நடுவே அதுவும் பாம்புகளுக்கு மத்தியில் என்றதும், சின்னக் கோயிலாக இருக்கும் என நினைச்சேன், மிக அருமையாக இருக்கு, பழைய காலக் கற்கோயில். ஆனா கோயிலுக்குள்ளும் பாம்பு வந்துவிடுமெலோ.. பயமெல்லோ ஆட்கள் குறைவான நேரத்தில்.

  //அதனால் நான் சொல்ல வந்தது என்னவென்றால் பதில் வரத் தாமதம் ஆனாலோ, பின்னூட்டங்கள் வெளியிடத் தாமதம் ஆனாலோ பொறுத்துக்கொள்ளவும்.//
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நெல்லைத்தமிழன் பொறுத்துக் கொள்வார் ஆனா மீக்கு பொறுமை இல்லை பொயிங்கிடுவேனாக்கும்:))

  ReplyDelete
  Replies
  1. கவி அமுதம்,அதிரடி, செஃப், அதிரா, நீங்க பொய்ங்குவீங்கனு தெரியும். நெ.த.வும் எங்கே பொறுத்துக்கறார்! அதெல்லாம் இல்லை. நீங்க பதில் சொல்லி, அதை நான் பார்த்துனு ஆரம்பிச்சுடுவார். :))))

   கோயில் மிகப் பழமையான கோயில் தான். அதுக்காக சுப்புக்குட்டிங்க எல்லாம் உள்ளே வந்ததாய்த் தெரியலை!

   Delete
 19. செப்பறை கோவில் படங்களுடன் பதிவு அருமை.
  குழந்தையின் மூட் பொருத்த விஷயம் பேசுவது.
  அவர்கள் பேசும் போது அனுபவித்து மகிழ்ந்து கொள்ள வேண்டியதுதான்.
  உங்கள் எழுத்துக்கள் மின்நூலாக வரப்போவது மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கோமதி. சில சமயங்களில் அதுவாகவே ஐபாடை வைச்சுக்கொண்டு "தாத்தா, பாட்டி"னு சொல்லுமாம். சரினு போட்டுட்டுப் பிள்ளை கூப்பிட்டால் எங்களைப் பார்த்துட்டு ஓடிடும். :) விளையாட்டு தானே இப்போத் தெரியும்! பிள்ளை தான் மின்னூலாக்குகிறேன் எனச் சொல்லி இருக்கார். அவருக்குத்தமிழே தெரியாது. கூடியவரை நான் எ.பி.க்களைச் சரி செய்திருக்கேன். பார்க்கணும். க்ரியேடிவ் காமன்ஸ் ஶ்ரீநிவாசன் கிட்டே தான் கொடுப்பேன். இப்போ என்னமோ இவர் சொல்றார். பார்க்கலாம். அங்கே எல்லோருக்கும் உடல்நிலை வேறே சரியில்லை. பாக்டிரியல் இன்ஃபெக்‌ஷனாம்! :(

   Delete
 20. தாமிரச் சபை...நல்ல தரிசனம்

  ReplyDelete