தம்பி குடும்பம் வந்திருந்த போது இங்கே அருகே உள்ள சாமவேதீஸ்வரர் தரிசனத்துக்குச் சென்றோம். அந்தக் கோயில் கோபுரம் மேலே! கீழே நுழைவாயில். இரு படங்களை இணைக்க முயன்றேன். அதனால் இப்படி வந்திருக்கு.
சாமவேதீஸ்வரர். விபரங்கள் பின்னால். நாளைக்குப் பதிவு வந்தாலும் வரலாம். அப்புறமா 5 நாளைக்கு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட விடுமுறை! எஞ்சாய்!
உள்ளே நுழைந்ததும் உள்ள முன் மண்டபம்
கொடிமரம் அருகே நம்மாளு ஜம்முனு உட்கார்ந்திருக்கார். சாதாரணமாக் கொடிமரம் அருகே காணப்பட மாட்டார். இந்தக் கோயிலில் வித்தியாசமாக
உலகநாயகி! கருவறையில். ஜூமெல்லாம் செய்யலை. படம் எடுத்ததே அதிகம்னு விட்டுட்டேன்.
காலபூஜைக்கான வாத்தியங்கள் வாசிப்பவர். இவரும் தவில்காரரும் மட்டும் வந்தார்கள். நாதஸ்வரக்காரரை எங்கேனு கேட்டதுக்குப் பக்கத்து ஊர்க்கோயில் திருவிழாவுக்கு வாசிக்கப் போயிட்டார் என்றனர். ஏன் இங்கே வாசிக்கலையா என்று கேட்டேன். இங்கே நேரம் ஆவதால் அங்கே வாசிக்க முன்னுரிமை கொடுத்துட்டாராம். மனசுக்குக் கஷ்டமாக இருந்தது.
நான் தான் முதலோ?!!!
ReplyDeleteதம்பி குடும்பத்தோடு கோயில் எல்லாம் போயி சூப்பர்....நல்ல மகிழ்ச்சியான நேரமா இருந்திருக்கும்...
மெமொரபிள் மொமென்ட்ஸ் இல்லையா கீதா அக்கா
கீதா
வாங்க தி/கீதா. நீங்க தான் ஃபர்ஷ்ட்ட்ட்டு! :) தம்பினு இல்லை, வீட்டுக்கு யார் வந்தாலும் மகிழ்ச்சி தான். கூட்டுக் குடும்பமாக இருந்தே பழக்கம்! :))))
Deleteகோயிலில் தவில் மட்டுமா? ஓ! புதுசா இருக்கிறதே..
ReplyDeleteஅப்புறம் நீண்ட விடுமுறை வேறா....ஹோம்வொர்க் எதுவும் இருக்காதுல்ல?!!!!! ஹா ஹா ஹா ஹா அப்படியே கொடுத்தாலும் நெல்லைக்குத்தானே கொடுப்பீங்க ஹிஹிஹி
எஞ்சாய் உங்க விடுமுறையை...உங்களுக்கு நாங்க எஞ்சாய் சொல்ல நீங்க எங்களுக்கு எஞ்சாய்னு...ஹா ஹா ஹா
கீதா
தி/கீதா, நாதஸ்வரம் இருக்கு! ஆனால் வாசிக்கிறவர் தான் இல்லை. திருவிழாவில் வாசிக்கப் போயிட்டார். ஹிஹிஹி, விடுமுறை ஐந்து நாட்கள்! திங்கக்கிழமை கரெக்டா "திங்க" வந்துட மாட்டோம். அதுக்குள்ளே பழசெல்லாம் படிச்சு வைங்க. உங்களுக்கும் தேர்வெல்லாம் உண்டு! ஏமாத்த முடியாது! :))))
Deleteபடங்கள் நல்லாருக்கு உலகநாயகி தெரியாவிட்டாலும்..
ReplyDeleteநம்ம தோஸ்த் எங்கயுமே அழகுதான்...
கீதா
ஐந்து, ஆறு படிகள் மேலே ஏறி அர்த்தமண்டபம் போகணும்! அதனால் கீழே இருந்தே எடுத்தேன். கொஞ்சம் தூரக்கத் தான் சந்நிதி. தெரிந்தவரை போதும்னு விட்டுட்டேன். மறுபடி முயற்சிக்கலை!
Deleteநீங்கள் விடுமுறை எடுத்தால் நாங்கள் எஞ்சாய் செய்ய முடியுமா ?
ReplyDeleteவாங்க கில்லர்ஜி, என்னோட தொந்திரவு இருக்காதே! அதான் சொன்னேன். மற்றபடி உங்களுக்கும் தேர்வு எழுத விருப்பம் இருந்தால் படிச்சு வைங்க! வந்து தேர்வு. இப்போச் சாப்பிட்டுட்டு வரேன்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஇன்றைய பிரதோஷமன்று நல்ல சிவ தரிசனம் கண்டு மகிழ்ந்தேன். முன்மண்டபம் அழகாய் உள்ளது. படங்கள், விபரங்கள் அருமை. மேலும் தகவல்களுக்கு அறிய ஆவலுடன் உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, விரிவான தகவல்களை மறுபடி 5 நாட்கள் விடுமுறைக்குப் பின்னரே தொடரணும்! :)))))
Deleteசாம வேதீஸ்வரர் தரிசனம் நன்று...
ReplyDeleteகொடி மரத்தின் அருகில் விநாயகர் இருப்பது அபூர்வமானது தான்....
மகிழ்ச்சி .. வாழ்க நலம்...
ஆமாம், துரை, எனக்குத் தெரிந்து கொடிமரத்தினருகே நம்மாள் உட்கார்ந்து இந்தக் கோயில் தான் முதல் முதலாகப் பார்த்த நினைவு. கீழே ஶ்ரீராம் திருமணஞ்சேரியிலேயும் இருப்பதைச் சொல்லி இருக்கார். எனக்கு நினைவில் இல்லை. பார்த்துப் பல வருடங்கள்!
Deleteவெரிகுட். நல்லா படங்கள் எடுத்துப்போட்டிருக்கீங்க. இன்னும் கோவில் நாதஸ்வர கோஷ்டி இருப்பதே ஆச்சர்யமா இருக்கு.
ReplyDeleteபழமையான எல்லாக் கோயில்களிலும் நாதஸ்வர கோஷ்டி கோவிலுக்கென நியமிக்கப்பட்ட பரம்பரை வித்வான்கள் இருப்பார்கள். இந்தக் கோயிலுக்கு 300 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்காம்! :(
Deleteவிடுமுறை இப்போ எடுத்ததனால் வந்த சோர்வினால் அடுத்த ஒரு வார விடுமுறையா? பலே பலே
ReplyDeleteஎப்படி வேணா வைச்சுக்குங்க நெல்லைத் தமிழரே! அடுத்த ஐந்து நாட்கள் விடுமுறை!
Deleteஉடனே சலிச்சுக்காதீங்க கீசா மேடம்... சும்மா கலாய்ப்புதானே. நான் ஒரு இடுகை எழுதறதுக்குள்ள அவ்வளவு கஷ்டமாகிடுது. நீங்க சுறுசுறுப்பா நிறைய இடுகைகள் எழுதறீங்க, அத்தனை வேலைகளுக்கிடையிலும்.
Deleteஆனா எங்க பிரயாணம் அல்லது என்ன விசேஷம் என்பதெல்லாம் ரகசியமா வச்சுக்கறீங்க.
கொஞ்சமானும் எதிர்பார்ப்பு வேண்டாமா நெ.த.? அப்போத் தானே என்ன, என்னனு உங்க மண்டை குடையும்! இஃகி,இஃகி!
Deleteபிரதோஷத்துக்கக் கோவில் போயாச்சு. நந்திகேஸ்வரருக்குப் பிடித்த தவில்காரர் மட்டும் இருக்கார். படங்களைக் கூர்ந்து பார்த்தால் மனதில் பிம்பம் விழுகிறது. நன்றி கீதா.
ReplyDeleteவாங்க வல்லி, சனிக்கிழமையே போயிட்டு வந்துட்டேன். நேத்தித் திங்கள் கிழமை தானே பிரதோஷம்! :)))) கோவில் பெரிய கோவிலாக இருக்கு வல்லி!
Deleteஎங்கள் பெரிய மாமிக்கு திருமங்கலம்தான் பிறந்த ஊர். நான் சிறு வயதில் சென்றிருக்கிறேன். ஆனால் கோவிலுக்குச் சென்ற நினைவில்லை. இந்த ஊர் கோவிலின் சிறப்பு பற்றி ஏதோ ஒரு பத்திரிகையில் வந்திருந்தது.
ReplyDeleteவாங்க பானுமதி, நாங்க இதற்கு முன்னால் 2013 ஆம் ஆண்டில் இங்கே போக நினைத்துச் சென்றபோது கோவில் நடை சார்த்திக் குருக்கள் எதிரே வந்து கொண்டிருந்தார். பின்னர் திரும்பி விட்டோம். அப்போ லால்குடி, அன்பில் எல்லாமும் போனோம்னு நினைக்கிறேன். ஆனால் அவை மனதில் நிற்காத பயணம்!
Deleteகுடந்தை திருமணஞ்சேரி கோவிலில் கூட கொடிமரம் அருகேதான் நம்மாள் இருக்கார்!
ReplyDeleteநாதஸ்வரக்காரர் என்ன செய்வார் பாவம்... பிலிப்பையும், வருமானத்தையும் கவனிக்கணுமே...
வாங்க ஶ்ரீராம், சாம்பார் சாப்பிட வரலை! பிடிக்காதோ என்னை மாதிரி! :)))) அதென்ன "பிலிப்பையும்" பார்க்கணும்! புரியலை! நாதஸ்வரக் காரர் வந்துடுவார், வந்துடுவார்னே சொல்லிட்டு இருந்தாங்க. கடைசியில் பார்த்தால் தவில் மட்டும் முழங்கியது. கூடவே இப்போதெல்லாம் நடைமுறையில் இருக்கும் எலக்ட்ரானிக் வாத்திய முழக்கங்கள்! :( நான் அறுபதுகளில் சென்னை வந்தப்போ தியாகராய நகர் அகத்தியர் கோயிலில் தான் அதை முதல் முதல் கேட்டேன்! அப்போல்லாம் ஆச்சரியமாக இருந்தது.
Deleteபிழைப்பையும்-அதுதான் தவறுதலாக பிலிப்பையும் என்று வந்திருக்கு.
Deleteஉங்களுக்குத் தெரியுமா... திருப்பதி கோவிலிலும் எலெக்டிரானிக் முரசு ஒரு காலத்தில் வைத்திருந்தார்கள்.
திருப்பதி கோயில் தகவல் புதுசு நெ.த.
Deleteதிருக்கடவூரிலும் இப்படித்தான் என்று ஜீவி ஸார் பதிவு படித்தபோது தெரிந்தது.
Deleteவிடுமுறையா? என்ஜாய்! கொஞ்சம் பொறாமையாய்த்தான் இருக்கிறது. எனக்கு அடுத்த இரண்டு மாதங்கள் பயங்கர டிடியஸ்!
ReplyDeleteநீங்க வேறே ஶ்ரீராம். போவதற்கு முன்னும், போயிட்டு வந்தப்புறமும் வேலை வாங்கும்! அதோட இப்போல்லாம் அலைய முடியலை! ஆனால் இது திட்டம் போட்டு நான்கு மாதங்கள் ஆகின்றன!
Deleteவாழ்த்தியதுக்கு நன்றி.
Deleteஎன்னாது... ஸ்ரீராம் வாழ்த்தினாரா? அவருக்கு 'வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்' என்று சொல்லும் வயதுதானே..
Deleteநெ.த. வயதுக்கும் வாழ்த்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அரசியல்வாதிகளால் கொண்டுவரப்பட்டது அது. ஆனானப்பட்ட ஈசனையே முன்னைப்பழம்பொருளுக்கும் பழம்பரம்பொருளையே வாழ்த்தித் தான் வணங்கறோம்.ஆகவே யாரும் எல்லோருக்கும் எப்போதும் வாழ்த்துச் சொல்லலாம். தப்பே இல்லை!
Deleteவாழ்த்துவதற்கு வயது தேவையில்லை. மனம் இருந்தால் போதும்.
Delete:)))))
கோவில் அழகாக இருக்கிறது. லால்குடியில் இரண்டு மூன்று சிறப்பான சிவஸ்தலங்கள் உண்டு. ஒரு கோவிலுக்கு மட்டும் சென்றிருக்கிறேன்.
ReplyDeleteவிடுமுறை - எஞ்சாய்...
வாங்க வெங்கட், லால்குடியில் சில கோயில்கள் போனோம். சரியாக நினைவில் இல்லை! விடுமுறையில் நல்லபடியாகப் போகணும்னு வேண்டிக் கொண்டிருக்கேன். :)))) உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
Deleteகோவில் தரிசனம் செய்தேன்.
ReplyDeleteபடங்கள் நன்றாக வந்து இருக்கிறது.
கோவில் தரிசனங்கள் என்று நினைக்கிறேன், பதிவுகள் வரும் அப்போது தெரிந்து கொள்கிறோம்.
காமிராவில் எடுத்த படங்கள். அதனால் நன்றாக வந்திருக்கின்றன கோமதி! செல்ஃபோனில் இப்போதெல்லாம் எடுப்பதில்லை. சரியாய் வரதில்லை. பதிவு மெதுவாத் தான் எழுதணும்.
Deleteஉலகநாயகி உடனுறை சாம வேதீஸ்வரர் கோயில்...அழகிய திருத்தலம் ...
ReplyDeleteதரிசித்துக் கொண்டேன் ...
வாங்க அனுராதா, நன்றிம்மா.
Deleteஒரு சந்தேகம்மேடம் சாம வேதீஸ்வரர் கோவில் --இதுவேதங்களைக் குறிப்பிட்டு சாம வேதீஸ் வரர் என்று சொல்கிறார்களோ
ReplyDeleteவாங்க ஜிஎம்பி ஐயா, சாமவேதத்திற்கென உலகிலேயே உள்ள ஒரே கோயில் என்றார்கள்.
Deleteஎன்னாதூஊஊ கீசாக்கா பிறீயாகிட்டாவோ:) கர்ர்ர்ர்ர்ர்:) இது நாட்டுக்கு நல்லதில்லையே:)...
ReplyDeleteநான் போயிட்டு அப்புறமா வாறேன்ன்ன்ன்ன்....
தீர்க்கதரிசி, ஃப்ரீஎல்லாம் ஆகலை! வேலை நெட்டி வாங்குது! :)
Deleteஇதுவரை செல்லாத கோயிலுக்கு அழைத்துச் சென்றுவந்தமைக்கு நன்றி, பதிவு மூலமாக. எங்களது கோயில் உலா பட்டியலில் சேர்த்துவிட்டேன். விரைவில் செல்வேன்.
ReplyDeleteவாங்க முனைவர் ஐயா, நீங்க போனால் இன்னும் புதிய வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கும். காத்திருக்கேன்.
Deleteகீசாக்காவை காணமே என இங்கு வந்தேன்ன்.. ரெண்டு நாட்கள் இப்போ அஞ்சு நாட்களாச்சு கர்ர்ர்ர்ர்ர்:))..
ReplyDelete//அப்புறமா 5 நாளைக்கு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட விடுமுறை! எஞ்சாய்!//
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் ஆரம்பத்திலேயே அஞ்சு நாள் லீவுனு சொல்லிட்டேனே!
Deleteகோயில் படங்கள் அழகு... ஆர்உங்கட வீட்டுக்கு வந்தாலும் கோயிலுக்குத்தான் கூட்டிப் போவீங்களோ.... நான் வந்தால் நல்ல ரெஸ்டோரண்ட்டுக்குத்தான் கூட்டிப் போகோணும் :))
ReplyDeleteஆமாம், அதிரடி, திருச்சியைச் சுற்றி நிறையக் கோயில்கள் தானே இருக்கின்றன. அதான் அங்கே கூட்டிப் போகிறோம். நீங்க ரெஸ்டாரன்டிலே சாப்பிடறதுக்கு நானே சமைச்சு நல்ல சாப்பாடாப் போடுவேன் உங்களுக்கு! வாங்க சீக்கிரமாய்! :)
Delete