அப்போல்லாம் நாம் வேண்டுகிற தளத்தின் விலாசத்தைத் தான் முழுவதுமாகத் தட்டச்சணும். நான் என்ன செய்யறதுனு தெரியாம முழிச்சுட்டு இருந்தேன். அப்போ என்னோட ஆசிரியர் வந்து ப்ரவுஸ் பண்ணப் போறீங்களானு கேட்க, நானும் என்னனு யோசிக்காம, ஆமாம்னு சொல்லிட்டேன். என்ன சைட்னு கேட்டார். சைட்டா? நான் யாரையும் சைட் அடிக்கலையேனு வாயிலே வந்ததை முழுங்கிட்டேன். எனக்குக் கூச்ச சுபாவம் இல்லை; நேரடியாச் சொல்லி இருக்கலாமோ! அதுக்கும் திரு திரு. அப்புறமா அவரே சரினு ஏதோ ஒரு தளத்தைத் திறந்து கொடுத்தார். அதிலே சில முக்கியமான தளங்களின் வெப் அட்ரஸ் இருந்தது. அதிலே இருந்து ஒரு தினசரியின் தளத்தைக் க்ளிக்கிப் பார்க்க முயல, மெளஸ் அந்தக் குறிப்பிட்ட சுட்டியில் நிக்காமல் ஓடிட்டே இருந்தது. பொறி வைச்சுத் தான் பிடிக்கணும் போலிருக்கேனு அலுத்துப் போயிட்டேன். மீண்டும் ஆசிரியர் வருகை. வெண்ணை திருடின கண்ணனாட்டமா நான் முழிக்க, அவருக்குச் சிரிப்பு. நேத்திக்கு நடந்ததை அந்த ஆசிரியர் சொல்லி இருப்பாரோ? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். சே, நேத்திக்கு எவ்வளவு ஜாலியா இருந்தது! நல்லா விளையாட முடிஞ்சதே, இன்னிக்கு என்னன்னா, பாடம் ஆரம்பிச்சு நடத்தறாரே! எனக்குத் தான் கூச்ச சுபாவமே இல்லைனாலும் அந்த ஆசிரியர் கிட்டே இதைச் சொல்ல முடியலை. :P
என்ன ஆச்சு மேடம்னு கேட்க, மெளஸ் ஓடிப் போயிடறதுனு புகார் கொடுத்தேன். நீங்க பிடிச்சுக்கறதிலே இருக்குனு சொன்னார். மெளஸ்னு நினைச்சாலே பிடிக்கவா தோணும்! இதோட பெயரை வேறே ஏதானும் வைச்சிருக்கக் கூடாதோ! யாருங்க அது இதுக்கு மெளஸ்னு பெயர் வைச்சது! னு மனசுக்குள்ளே நொந்து நூலாகிப் போயிட்டேன். அதுக்குள்ளே மெயில் கொடுக்கணுமேனு யோசனை வர, என் பையருக்கும், பொண்ணுக்கும் மெயில் கொடுக்கணும்னு சொன்னேன். அவங்க மெயில் ஐடி தெரியுமானு கேட்டார். எழுதிக் கொண்டு போயிருந்தேன். அதைச் சொல்லவும். என் கிட்டே இருந்து மெளஸை வாங்கி எதையோ க்ளிக்கினார். ஒரு தளம் வந்தது. அதிலே என்னோட பெயர், வயசு எல்லாம் கொடுத்து ஓகே கொடுக்கச் சொல்ல சரினு அவர் சொன்னதெல்லாம் பண்ணி வைச்சேன். பாஸ்வேர்ட்னு ஒண்ணு கொடுக்கணுமே. அப்போல்லாம் யாஹூ தான். யாஹூ.காமில் ஒரு அக்கவுன்ட் க்ரியேட் பண்ணினேன். பாஸ்வேர்ட் கொடுக்கையில் என்ன கொடுக்கிறதுனு புரியலை. ஏதோ ஒரு பூவின் பெயரைக் கொடுத்தேன்னு நினைக்கிறேன். எல்லாம் முடிச்சாச்சு. மெயில் கொடுக்க என்ன செய்யறதுனு புரியாம எதையோ க்ளிக்கினால் தளம் மறைஞ்சே போயிச்சு. ஆஹா, காக்கா தூக்கிண்டு போச்சோனு, உஷ், உஷ்னு கத்தலாம்னு நினைச்சேன். அதுக்குள்ளே கணினியே முழுசா ஆஃப் ஆக என்னமோ தப்பாயிடுச்சுனு புரிஞ்சது.
அதுக்குள்ளே என்னோட மூஞ்சியைப் பார்த்துட்டே அந்த ஆ"சிரி"யர் வந்து சேர்ந்தார். என்னனு கேட்க, வாயே திறக்காமல் கணினியைச் சுட்டிக் காட்டினேன். ஹிஹிஹி, ஷட் டவுன் பண்ணி இருக்கீங்க, எப்படிச் செய்தீங்கனு கேட்டார். நான் எங்கே ஷட் டவுன் பண்ணினேன். மெயில்கொடுக்கணும்னு தான் நினைச்சேன். அது ஒரேயடியா காணாமப் போச்சுனு சொன்னேன். மறுபடியும் ஸ்விட்சைப் போட்டு கணினியைத் திறக்கச் சொன்னார். திறந்து ஸ்டார்ட் பட்டனைக் க்ளிக்கச் சொல்ல ஸ்டார்ட் க்ளிக் பண்ணினேன். டபுள் க்ளிக் என்று சொன்னதாக நினைவு. ஆகவே இன்னொரு தரம் எதிலோ க்ளிக்க, பெயின்ட், ப்ரஷ்னு வந்துடுச்சு. அங்கே பார்த்தால் ஒரு ப்ரஷ் ஒண்ணு ஓரமா இருக்க அதைக்க்ளிக்கினால் சென்டருக்கு வந்தது. மேலும்,மேலும் க்ளிக்கிக் கொண்டே போக விதவிதமான கோடுகள், வளைசல்கள். வட்டங்கள், செவ்வகங்கள்னு தோணினதை எல்லாம் கைக்குக் கிடைச்சபடி போட்டுட்டு இருந்தேன். இது நேத்தை விட இன்னிக்கு இன்னும் ஜாலியாவே இருந்தது. இப்படி எல்லாம் விளையாடலாம்னு யாருமே சொல்லலையே, துரோகிங்கனு பொண்ணையும், பையரையும் திட்டிக் கொண்டேன், மனசுக்குள்ளே தான். பார்த்தார் ஆசிரியர். என்னதான் இவங்களுக்குக் கூச்ச சுபாவம் இல்லைனாலும் இதெல்லாம் டூ மச் இல்லை, ஃபோர் மச்ச்னு தோணிப்போய், என்ன மேடம் மெயில் ஐடி க்ரியேட் பண்ணணும்னு சொல்லிட்டு வரையறீங்களேனு கேட்க, அசடு வழிய நான் ஸ்டார்ட் பட்டனிலே டபுள் க்ளிக் பண்ணினதிலே இது வந்ததுனு சொல்ல, அதெல்லாம் இல்லை, ப்ரொகிராமிலே பெயின்ட், ப்ரஷிலே க்ளிக்கி இருக்கீங்கனு நாலு பேர் முன்னாடி சொல்லி என் மானத்தை(இருக்கா என்ன?) ஒட்ட வாங்கினார். ப்ரொகிராமா அது எங்கே இருக்கு?? ம்ம்ம்ம்?? தனியாக் கேட்டு வைச்சுக்கணும், இல்லைனா இன்னொரு நாள் வந்து கணினியைத் துருவிப்பார்க்கணும்னு நினைச்சுக் கொண்டேன். பின்னர் அங்கே வந்து யாஹூவைத் திறந்து கொடுத்தார்.
மெயில் கொடுக்க இன்பாக்ஸ் திறந்துடுச்சு. ஆ னு வாயைப் பிளந்தேன். கொடுங்க மேடம்னு சொன்னார். இதிலே ஒருத்தருக்குத் தானே கொடுக்க முடியும்னு சொல்ல, நீங்க மேட்டரை டைப் பண்ணுங்க. இல்லைனா சொல்லுங்க, நான் டைப்பறேன்னு சொல்லவே, அட, இந்த ஆங்கிலம் கூடவா தெரியாதுனு நினைச்சுட்டார்னு கோபம் வர, கிடு கிடு கிடு கிடுனு டைப்பினேன். அவசரத்தில்" கிடுகிடு" "கிடு கிடு" "கிடு கிடு" அப்படின்னே அடிச்சுருக்கப்போறேனேனு பார்த்துக் கொண்டேன். நல்ல வேளையா இல்லை.நான் டைப்பின வேகத்தைப் பார்த்து அசந்துட்டார். என்ன இவ்வளவு வேகமா டைப்பறீங்க! ஒண்ணும் அவசரம் இல்லை. இன்னும் பத்து நிமிஷம் இருக்கு உங்க நேரம் முடிய. அப்புறமாக் கூட ஒரு ஐந்து நிமிஷம் ஆனாப் பரவாயில்லைனு ரொம்பப் பெருந்தன்மையாச் சொல்ல, அலட்சியமா அவரைப் பார்த்த நான். என்னோட டைப்பிங் குறைந்த பட்ச வேகம் இதுனு சொல்லி அவரைத் திரும்ப அசர அடிச்சேன். அப்புறமா அந்த ஐடியை மேலே டைப் பண்ணச் சொன்னார். சென்ட் கொடுக்கச் சொன்னார். நாளைக்கு பதில் என்னோட இந்த ஐடியிலே இருக்கும், வந்து பார்த்துக்குங்கனு சொன்னார். நான் எனக்கு? எனக்கு? னு சுண்டல் கேட்கிறாப்போல் கேட்க, அவரும் இங்கே பக்கத்துப் பிள்ளையார் கோயில்லே தான் தராங்கனு சொல்லிட்டார். பதிலுக்கு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரின நான், அவர் கிட்டே நானே சொந்தமா என்னோட மெயில் ஐடி ஒண்ணு க்ரியேட் பண்ணணும்னு சொல்ல, அதான் மேடம் இதுனு செந்தில்--கவுண்டமணி வாழைப்பழ ஜோக் மாதிரிச் சொல்லிட்டார்.
அப்புறமா அங்கிருந்து பொண்ணுக்குத் தனியா, பிள்ளைக்குத் தனியானு மறுபடி என் முயற்சியாலேயே இன்னொரு மெயில் கொடுத்தேன். அப்பா! இமயமலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினாக் கூட இவ்வளவு சந்தோஷம் வந்திருக்காது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு சந்தோஷமா இருந்தது. போயிருக்குமானு சந்தேகம் வேறே. அன்னிக்கு வீட்டிலே போய் ரங்க்ஸ் கிட்டே இதான் பெருமையாச் சொல்லிட்டு இருந்தேன். பையர் அன்னிக்கு ராத்திரியே ஃபோன் பண்ணி அம்மா மெயில் வந்ததுனு சொல்லிட்டு, என்னோட ஆர்வத்தைப் பொசுக்கிட்டார். "ஏண்டா, சொன்னே! ஒரு மெயில் கொடுக்கக் கூடாதோ! நான் வந்து அப்பா கிட்டே சொல்லுவேனே!" னு சொன்னா. "ஹை டெக் அம்மா" னு கிண்டல் வேறே! இப்போவும் என்னை ஹை டெக் அம்மானு தான் சொல்லுவார். :P:P:P:P
மறுநாளைக்குப் பொண்ணு சமத்தா மெயிலில் பதில் கொடுத்திருந்தாள். ரொம்பவே சந்தோஷமா இருந்தது. அதுக்கப்புறமா ஆரம்பிச்சார் எங்க பையர். அம்மா கணினி எக்ஸ்பெர்ட் ஆயிட்டானு, அவர் அமெரிக்கா போகிறதுக்குண்டான வேலையை எல்லாம் இங்கே என்னைச் செய்ய வைச்சு, அதைக் கணினி மூலமா அப்டேட் செய்யச் சொல்லி இன்னும் பழக்கினார். ஓரளவுக்குக் கணினியைத் திறக்கவும், மூடவும், மெயில் ஐடியைத் திறக்கவும் வந்தது. அப்புறமா முதல்முறை அமெரிக்கா போனப்போ பொண்ணு வீட்டு கணினியிலே தான் முதல்முறையாத் தமிழ் படிச்சேன். அந்தக் கதை தனி. அதை வேறே யாரானும் கேட்டா வைச்சுக்கலாம். மொத்தத்தில் நான் கணினி கற்றுக் கொண்டதுனு பார்த்தா மெயில் கொடுக்க மட்டுமே தெரிந்து கொண்டிருந்தேன். மிச்சம் எல்லாம் அவ்வப்போது செய்த தவறுகளின் மூலமே தெரிந்து கொண்டேன்.
தொழில் நுட்பப் பிரச்னைகள் என வரும்போது நண்பர்கள் உதவி செய்யறாங்க, செய்தாங்க, இன்னும் செய்வாங்க.
நான் அழைக்கும் ஐந்து பேர்
வல்லி சிம்ஹன்
ரஞ்சனி நாராயணன்
வை.கோபாலகிருஷ்ணன்
ஜி.எம்.பி. சார்
ஜீவி அவர்கள்
ரொம்ப யோசிச்சு இவங்களை எல்லாம் யாரும் கூப்பிடலை என்பதை உறுதி செய்து கொண்டு கூப்பிட்டிருக்கேன். பதிவு ரொம்பவே பெரிசா ஆயிடுமோனு இதைக் கொஞ்சம் அவசரமாவே முடிச்சிருக்கேன். மன்னிக்கவும். :))))
இது மீள் பதிவு என்பதால் போனமுறை ஐந்து பேரை அழைக்கணும் என அழைத்திருந்தேன். இதைப் பார்த்து எல்லோரும் பயந்து ஓடிட வேண்டாம். இப்போ நான் யாரையும் அழைக்கலை!சே,பதிவுக்குக் கருத்துச் சொல்லனு நினைச்சுட்டு எங்கே ஓடறீங்க? வந்து கருத்துச் சொல்லிட்டுப் போங்க! நான் சொன்னது யாரும் இதைத் தொடர் பதிவாக நினைத்துக்கொண்டு எழுத வேண்டாம் என்பதே! உங்களுக்கே விருப்பம் இருந்தால் எழுதுங்க! தடுக்க மாட்டேன்! :)))))
என்ன சைட்னு கேட்டார். சைட்டா? நான் யாரையும் சைட் அடிக்கலையேனு வாயிலே வந்ததை முழுங்கிட்டேன். //
ReplyDeleteஹா ஹா ஹா ஹா ஹா...
//பொறி வைச்சுத் தான் பிடிக்கணும் போலிருக்கேனு அலுத்துப் போயிட்டேன்//
ஹா ஹா ஹா ஹா ஹா...
கீதா
வாங்க தி/கீதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இப்போ விளக்கேற்றப் போயிடுவேன். அதுக்குள்ளே பதில் சொல்லிடலாம்னு வந்தேன். :))))
Deleteயாருங்க அது இதுக்கு மெளஸ்னு பெயர் வைச்சது! //
ReplyDeleteநானும் நினைச்சதுண்டு கீதாக்கா...இப்படி ஏன் இதுக்கு மௌஸ்னு பேர் வந்ததுன்னு..
//மேலும்,மேலும் க்ளிக்கிக் கொண்டே போக விதவிதமான கோடுகள், வளைசல்கள். வட்டங்கள், செவ்வகங்கள்னு தோணினதை எல்லாம் கைக்குக் கிடைச்சபடி போட்டுட்டு இருந்தேன். இது நேத்தை விட இன்னிக்கு இன்னும் ஜாலியாவே இருந்தது. //
நானும் கணினி வந்த புதுசில இப்படி பெயின்டில் நிறைய விளையாடிருக்கேன்...ஆனா ஒழுங்கா வரையத் தெரியாது ஹா ஹா ஹா
கீதா
வாங்க கீதா, நான் கோலமெல்லாம் போட்டுப் பார்த்தேன். கொஞ்சம் வந்தது, நிறைய வரலை. அப்புறமா அலுத்துப் போச்சு!
Deleteஎன்னோட இந்த ஐடியிலே இருக்கும், வந்து பார்த்துக்குங்கனு சொன்னார். நான் எனக்கு? எனக்கு? னு சுண்டல் கேட்கிறாப்போல் கேட்க, அவரும் இங்கே பக்கத்துப் பிள்ளையார் கோயில்லே தான் தராங்கனு சொல்லிட்டார். //
ReplyDeleteஹா ஹா ஹா ஹா...அது சரி அவர் ஏன் என்னோட ஐடி இதுலனு சொன்னார்னு புரியலை....உங்களோட ஐடியும் அதுதான்னு...எனக்கும் அதுதான் இது ந்ற குயப்பம் வந்துச்சே..
பையர் உங்களை ஹைடெக் அம்மானு சொல்லுறது....நமக்கு அம்மாக்களுக்கு நம் பிள்ளைகள் அப்படிச் சொல்லுவது ரொம்பவே சந்தோஷமா இருக்கும் தான்....
ஆமாம் அக்கா நாம தப்பு செய்யச் செய்ய அதிலிருந்து கற்றுக் கொள்ளலாம். இப்பலலம் கூகுள் ல கேட்டுத் தெரிந்து செய்துட முடியுது..
அது சரி தமிழ் படிச்ச கதையையும் சொல்லிடுங்க அக்கா
கீதா
ஹிஹிஹி, அப்போல்லாம் யாருக்குத் தெரியும் அதான் நம்ம ஐடினு! ஏதோ தனியாக் கொடுப்பாங்க போலனு நினைச்சேன். கடைசியிலே பார்த்தால் அதான் இதுனு சொல்லி வெறுப்பேத்திட்டார். இப்போ அந்த ஐடிக்கே போறதில்லை! :)))) நான் கூகிளாரை எல்லாம் ரொம்ப நம்பறதில்லை. எங்க உறவினர்கள் மூலமே பல சந்தேகங்களைக் கேட்டுத் தெரிஞ்சுப்பேன். மருமகளும் சொல்லிக் கொடுப்பாள்.
Deleteபடங்கள் அதிலிருக்கும் கருத்துகள் சூப்பர் அக்கா..பொருத்தமா..
ReplyDeleteகீதா
ஆமாம், அப்போ அந்தப் படங்களுக்காக அலையாய் அலைஞ்சேன்! :))))
Deleteஒரு மெயில் அனுப்புவதற்குள் ஆசிரியரைப் படாத பாடு படுத்தி விட்டீர்கள் போல... பொறுமையானவர் போலும் அவர். நான் டைப்பிங் படிக்கும்போது எழுத்து விசைகளை அடிக்கும்போது சத்தம் அதிகமாகி கேட்டாலே டியூட்டர் ஓடிவந்து விடுவார்... ''மென்மையா அடிங்க... மென்மையா அடிங்க'' என்பார். அதேபோல பக்கம் முடிந்ததும் கேரேஜை தள்ளினாலும் மெதுவாத் தள்ளுங்க என்பார்... டொமென்று சத்தம் கேட்டால் கடுப்பாயிடுவார்.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், நான் பள்ளியில் படிக்கும்போது இருந்தே தட்டச்சுப் பழக ஆரம்பிச்சாச்சு. செக்ரடேரியல் கோர்ஸ் எடுத்திருந்ததால் அதிலே தட்டச்சும் ஒரு பாடம். சுருக்கெழுத்துத் தான் பின்னர் படிச்சேன். தமிழ்த் தட்டச்சும் தெரியும்.
Deleteஅப்போது நீங்கள் அழைத்த ஐந்துபேரும் தொடர்ந்தார்களா? நிச்சயமாக ஜீவி ஸார் தொடர்ந்திருக்க மாட்டார்!
ReplyDeleteஶ்ரீராம், ஜீவி சார் அப்போதைய பின்னூட்டக் கருத்திலேயே மறுப்புத் தெரிவிச்சுட்டார். வைகோ ஏற்கெனவே பலர் அழைத்ததாகச் சொல்லி இருந்தார். வல்லி எழுதினாங்கனு நினைக்கிறேன். ரஞ்சனியும்.
Deleteமெயிலில் பதில் பார்ப்பது அப்போது ஒரு சந்தோஷம்தான். நாங்களும் ஒருகுடும்ப மெயில் க்ரூப் வைத்திருந்தோம். அதில் உரையாடுவது சுவாரஸ்யமாகவே இருந்தது அப்போது. அதிலேயே என் அப்பா மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு எல்லாம் சிறுகதை, கவிதைப் போட்டி எல்லாம் வைத்திருக்கிறார்!
ReplyDeleteநாங்க குடும்ப மெயில் க்ரூப்பெல்லாம் வைச்சுக்கலை! எனக்கு முதல் முதலாகக் குழுமங்கள் அறிமுகம் ஆனதும் முத்தமிழ்க் குழுமத்தில் உரையாடுவதே ரொம்ப ஆச்சரியமாவும், சந்தோஷமாவும் இருந்தது. அது நடந்தது 2005-2006 ஆம் ஆண்டுகளில். அப்போத் தான் ஜிமெயில் அக்கவுன்ட் ஒண்ணே ஒண்ணு ஆரம்பிச்சேன் விளையாட்டா! அதுக்கப்புறமாத் தெரிஞ்சது குழுமங்களில் உறுப்பினர் ஆக ஜிமெயில் அக்கவுன்ட் வேண்டும் என்பது. பின்னர் ஒவ்வொரு குழுமமாகச் சென்று உரையாடிப் பற்பல வேலைகள் செய்து கொடுத்து மரபு விக்கியில் முழு ஈடுபாட்டுடன் பலரின் எழுத்துக்களை இணைத்துப் படங்களை இணைத்து என 2007 ஆம் ஆண்டில் இருந்து சுமார் 8 ஆண்டுகள் வரை ரொம்பவே மும்முரமாக வேலைகளில் ஈடுபட்டிருந்த காலம் அது. பின்னர் படிப்படியாகக் குறைத்துக் கொண்டேன்.
Delete// அவ்வப்போது செய்த தவறுகளின் மூலமே // பலரும் சொல்ல தயங்குவது... இது தான் முக்கியம்...
ReplyDeleteநாம் எவ்வளவு தவறு செய்கிறமோ அந்தளவு கற்றுக் கொள்வதில் ஆர்வம் நீடிக்கப்படுகிறது என்பதின் அர்த்தம்... "எல்லாம் அவன் பார்த்து கொள்வான்" என்று தனது தேடலில் தோல்வி அடைந்தவர்களும், ஆர்வம் குறைந்தவர்களே... வாழ்விலும் அப்படித்தான்....! என்ன ஒன்றே ஒன்று... தான் செய்த தவறை ஒத்துக்கொள்வதில்லை என்பதே... அப்பேர்ப்பட்டவர்களின் அறிவு, விருத்தி அடையாது என்பதே நிதர்சனம்... அவர்கள் செய்வது என்னவென்றால், "தனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும்" என்கிற நினைப்புடன், பலரும் இறைவனை போற்றி புகழ் பாடும் அனைவரும் அப்படிப்பட்டவர்களே...
என்னங்க அம்மா... இன்னும் ரசிக்கலாம் என்று இருந்தால், அதற்குள் முடித்து விட்டதில் சிறிது வருத்தம்... தமிழ் படிச்ச கதையாவது தொடர வேண்டும் அம்மா...
வாங்க டிடி. வாழ்ச்க்கையில் தவறுகளின் மூலமே பாடம் கற்றுக்கொள்ள முடியும் இல்லையா? நான் பல முறை கணினியில் தவறு செய்திருக்கேன். ஒரு முறை 75 பதிவுகள் அப்படியே காணாமல் போயின! எழுத ஆரம்பித்து 75 பதிவுகள் ஆகி இருந்த நேரம்! பின்னர் என்னவெல்லாமோ செய்து கண்டு பிடித்தேன். மற்ரொரு முறை வேறொருத்தரின் காட்ஜெட் இங்கே போட்டதில் எனக்கு வைரஸ் வந்து கூகிளுடன் நேரடியாகப் பேசி அதை நீக்க வேண்டி வந்தது. அது வரை என்னோட இந்த வலைப்பக்கமே எனக்குத் திறக்காது. மற்றவர்களுக்குத் தெரியும். ஆனால் கருத்துச் சொல்ல முடியாது! நிறையப் பாடுபட்டு ஒன்றரை நாட்கள் முனைந்து பின்னர் அனைத்தையும் மீட்டேன்.
Deleteஹாஹா, தமிழ் எழுதக் கற்றுக்கொண்டதா? பார்க்கலாம் டிடி. நேரம் இருந்தால் முயற்சி செய்யறேன். வீட்டில் கொஞ்சம் வேலைகள்! உறவினர்களுக்கு உதவ வேண்டி இருக்கு! :))))
ஐடியை டைப்பிய பிறகு செண்டு எதற்கு கொடுக்கச் சொன்னார் ?
ReplyDeleteநான் பெரும்பாலும் அத்தர்தான் உபயோகப்படுத்துவேன்.
அதானே கில்லர்ஜி! சென்ட் ஏன் கொடுக்கச் சொன்னார்? புரியலை! :)))))
Deleteரொம்ப வேகமா தட்டச்சினா மெயில் வேகமாப் போகும், மெதுவா டைப் பண்ணினா மெயில் மெதுவாத்தான் போய்ச்சேரும்னு அப்போ (இப்பவும் அப்படித்தான்) நினைச்சீங்களோ?
ReplyDeleteஒருகாலத்துல என் பெரியப்பா குறைந்த இடத்தில் (இன்லேண்டில்) பொடிசு பொடிசாக சின்ன இடம்கூட விடாமல் எழுதி எனக்கு லெட்டர் கிடைக்கும்போது நிறைய போர்ஷன் படிக்காமலே விட்டுவிடுவேன். ரொம்ப வருஷம் கழித்து ஸ்கேன் பண்ணின லெட்டர்களை கணிணியில் பெரிதாக்கிப் படித்துப் புரிந்துகொண்டேன் (அது... அவர் போய் பத்து வருடம் கழித்துத்தான்). இது ஏன் உங்க இடுகை படிக்கும்போது நினைவுக்கு வந்ததுன்னு தெரியலை
வாங்க நெல்லைத் தமிழரே, அப்படி எல்லாம் நினைக்கலை. ஆனால் நான் முதல் முதல் மெயில் கொடுக்கையில் காலை பதினோரு மணி இருக்கும். பையர் அப்போ பரோடாவில் இருந்ததால் அவர் வேணாப் பார்க்கலாம். ஆனால் பெண் அம்பேரிக்காவில் பாஸ்டனில் இருந்தாள். அவளால் நம்ம ராத்திரி தானே பார்க்க முடியும். அதான் நினைச்சேன்.
Deleteநீங்க சொல்றாப்போல் என் பெரிய நாத்தனார் ஒரு போஸ்ட் கார்டிலேயே நுணுக்கி நுணுக்கிப் பொடியாகப் புள்ளி வைத்து வைத்து நிறைய விஷயங்கள் எழுதுவார். கஷ்டப்பட்டேனும் படிச்சு விடுவோம். பதில் போடணுமே! :)))
பதிவு ரொம்ப பெரிசா ஆயிடுமோன்னு - இது மொக்கைக் காரணம். எனக்குத் தோணுது, வயதானால் வரும் மறதினால எல்லாம் நினைவுக்குக் கொண்டுவர முடியலை போலிருக்கு.
ReplyDeleteஎப்படி வேணா நினைச்சுக்குங்க! ஆனால் எனக்குப்போன ஜன்மத்து நினைவுகள் எல்லாம் வருதேனு தான் நம்ம ரங்க்ஸ் கவலைப்பட்டுட்டு இருக்கார். :)))))
Deleteரங்க்ஸ் கவலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் போன ஜென்மத்தில் உங்களுக்கு என்ன என்ன துன்பங்கள் செய்தாரோ... அதுக்குத்தான் இந்த ஜென்மத்தில் தண்டனை என்பது உங்களுக்கும் புரிந்துவிடும் என்பதினாலா (இல்லை... இன்னும் என்ன என்ன பாக்கி இருக்கோ என்ற கலக்கத்தினாலா).
Deleteஅவர்ட்ட இதைச் சொல்லி எங்க நட்பை பணால் ஆக்கிடாதீங்க...
ஹா ஹா ஹா ஹா கீதாக்கா இப்படி மாமாவை ஏன் பயமுறுத்தறீங்க!!!!!!
Deleteகீதா
நீங்கள் கணினி கற்றுக் கொண்ட நினைவுகள் தொடரை விட்டவற்றை வாசித்தேன். நகைச்சுவையாக இருக்கிறது. பெயிண்டில் எல்லாம் விளையாடி இருக்கிறீர்களே!
Deleteஇப்பதிவு வாசித்த போது எனக்கு என் நினைவுகள் வந்தது. 10, 12 வருடங்கள் முன் அப்போது பள்ளியில் ஆசிரியர்கள் எல்லோரும் கணினி கற்க வேண்டும் என்று சொல்லி நானும் கற்றேன். அப்போதுதான் கணினி பற்றிய அறிமுகம். பார்த்திருக்கிறேன் ஆனால் அதைப் பற்றி ஒன்றும் தெரியாது. முதலில் எல்லாமே க்ரீக் லேட்டின் ஆகத்தான் இருந்தது. என்றாலும் ஆசிரியனாகிய நான் நோட்ஸ் எடுக்காமல் கற்க முடியுமா? எனவே நோட்ஸ் எல்லாம் எடுத்துக் கற்றேன். அது பயிற்சி ஆனதால் ஒன் டு ஒன் போல அல்லாமல் வகுப்பாகவே இருக்கும். போர்டில் எல்லாம் எழுதிக் காட்டிக் கற்றுக் கொடுத்தார்கள். பேஸிக்ஸ் தெரிந்தது என்றாலும் சில வருடங்களுக்கு முன் ஒரு மேசைக் கணினி வைத்திருந்தேன் என்றாலும் அதிலும் அதிகம் உள் நுழையப் பயம் தோன்றும் ஏதேனும் தப்பாகி கணினி வேலை செய்யாமல் ஆகிவிடுமோ என்று. மின்அஞ்சல், முகநூல் என்று அப்போதுதான் பயன் செய்யத் தொடங்கினேன். இணையம் இருந்தது. இப்போது இல்லை. எனவே மகனுக்கு அப்ளிக்கேஷன் எல்லாம் நெட் செண்டரில் தான். இப்போதும் கூட அதிகம் டெக்னாலஜி அறியும் விருப்பமும் இல்லை. நான் மொபைல் வழி மட்டுமே அதுவும் வேண்டியது மட்டுமே பார்க்கிறேன்.
தொடர்கிறேன்.
துளசிதரன்
நெல்லைத் தமிழரே, உங்களைப் போல் எல்லோரையும் நினைச்சுக்கலாமா?இஃகி,இஃகி, இஃகி!
Deleteநான் ஒண்ணும் பயமுறுத்தலை தி/கீதா, பழசை எல்லாம் நினைவு வைச்சுட்டு இருக்கிறதைப் பார்த்துட்டு அவரே சொல்லுவார்! :)))))
Deleteவாங்க துளசிதரன், உங்க கருத்து இங்கே வந்ததால் முதலில் கவனிக்கலை. இப்போத் தான் பார்க்கிறேன். நீங்க கணினியே வைச்சுக்கலை என்பதே ஆச்சரியம் தான். அதைவிட ஆச்சரியம் மொபைல் வழி மட்டுமே பார்ப்பது. எனக்கு மொபைல் மற்றவருடன் தொடர்பு கொள்ளவும் குழந்தைகளை அவசியம், அவசரத்தில் வாட்சப் மூலம் தொடர்பு கொள்ளவும் மட்டுமே! மற்ற எதற்கும் நான் மொபைலைப் பயன்படுத்துவது இல்லை.
Deleteரொம்ப ரசனையா எழுதியிருக்கீங்க... இன்னும் நீளமாவே எழுதியிருக்கலாம்.... நான் எப்போ மெயில்லாம் கத்துக்கிட்டேன்னு உங்களை மாதிரி அழகா எழுத வராது.
ReplyDeleteநெல்லைத் தமிழரே, ரொம்பவும் நீளமாப் போனாலும் போர் அடிச்சுடும். ஒரு கட்டத்தில் சட்டுனு நிறுத்திடணும்! :))))) உங்களுக்கும் நன்றாகவே எழுத வருகிறது! என்ன ஒரு விஷயம்னா முன்னால் எல்லாம் நகைச்சுவை அதிகமாகவே இருக்கும். பின்னர் அதைக் குறைத்துக் கொண்டேன். ஒரே மொக்கை போட்டாலும் தாங்காது இல்லையா?
Deleteஅப்போ தமிழ்நாட்டுல (இல்லை வேற இடமா.. சந்தேகம்), ஒரு தளம் இருந்தது. அதுக்கு மெயல் போட்டா, அவங்க பிரின்ட் அவுட் எடுத்து போஸ்ட்ல வீட்டுக்கு அனுப்புவாங்க. அதைக்கூட நான் ஓரிரு முறை உபயோகப்படுத்தியிருக்கேன். அப்படி இல்லைனா, கடிதம் எழுதி, கவர்ல ஒட்டி அட்ரஸ் எழுதி, இந்தியன் ஸ்டாம்ப் ஒட்டி, நாங்க சாப்பிடற ஹோட்டல் கவுன்டர்ல கொடுத்துடுவோம். யார் இந்தியா போறாங்களோ அவங்க இதை எடுத,து இந்தியாவில் ரீச் ஆனபின் பக்கத்து போஸ்ட் பாக்ஸ்ல போட்டுடுவாங்க... இப்படியெல்லாம் கம்யூனிகேட் பண்ணியிருக்கோம் துபாய்லேர்ந்து.
ReplyDeleteநாங்க யு.எஸ்ஸில் இருந்து அந்த மாதிரிக் கடிதங்கள் நண்பர்கள் கொடுப்பதை வாங்கி இந்தியாவில் நுழைந்ததுமே தபால் பெட்டியில் போட்டு உதவி இருக்கோம். துபாய் போக வாய்ப்பு வந்தும் போகலை. போக முடியலை! :)))) ஐரோப்பா டூர் கூடப் போக ஆசைதான்! :))))
Deleteஉங்ககிட்ட கேட்கணும்னு நினைத்தேன்... கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது உண்டோ?
ReplyDeleteஎனக்குப் பிடிக்காதது, யாராகிலும் கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவதுதான்.
முதல்லே அம்மாதிரி விளையாட்டுகளுக்கெல்லாம் போக நேரம் இல்லை. அதோடு அதில் எல்லாம் விருப்பமும் இல்லை. உள்ள வேலைகளைச் செய்யவே நேரம்போதலை! காலை எழுந்தால் வீட்டு வேலைகள் முடிந்தால் தான் கணினியில் உட்காருவேன். இல்லைனா வேலைகள் எல்லாம்முடிந்த பின்னர்தான். மத்தியானம் தான் அதிகம் உட்காருவேன். அப்போப் பதிவு எழுதவும், கருத்துகள் கொடுக்கவும்,பதில் சொல்லவுமே நேரம்போதவில்லை.
Deleteபடுத்துவதும் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது குறிப்பாக கார்ட்டூன் செம ரகளை
ReplyDeleteவிஸ்வநாதன்
ரசித்தமைக்கு மிக்க நன்றி விஸ்வா! அடிக்கடி வாங்க! :))))
Delete//மிச்சம் எல்லாம் அவ்வப்போது செய்த தவறுகளின் மூலமே தெரிந்து கொண்டேன்.//
ReplyDeleteஒவ்வொன்றும் அப்படித்தான். கீழே விழுந்தால்தான் சைக்கிள் கற்றுக் கொள்ள முடியும்.தவறு செய்யாமல் சரியானதை எப்படி செய்ய முடியும்?
எனக்கு நிறைய சந்தேகம் வரும் என் கணவரிடம் கேட்டால் குடைந்து கொண்டே இரு பதில் வரும். எதையாவது செய் என்பார்கள் கணினி அறிவு கடல் போன்றது அதில் காலை நனைத்துக் கொண்டு இருக்கிறேன். ஏதாவது கற்றுக் கொண்டே இருக்கிற மாதிரிதான் இருக்கிறது.
முன்பு எல்லாம் இப்போது வாட்ஸ் அப் வசதி இருக்கா போனில் என்று கேட்பது போல் மெயில் ஐ.டி கேட்பார்கள்.
படங்கள் அனுப்ப, கடிதம் எழுத என்று.
இப்போது நிறைய வசதிகள் வந்தபின் குழந்தைகளுடன் உரையாட , அவர்களைப் பார்க்க என்று கணினி அறிவு கண்டிப்பாய் தேவை என்றாகி விட்டது.
நானும் தட்டச்சு, ஆங்கிலம், தமிழ் கற்றுக் கொண்டாலும் முற்றிலும் மாறுபட்டது கணினி அறிவு.
தமிழ் கற்றுக் கொண்டது அது தனிக்கதை. மகிழ்ச்சியை ஏற்படுத்திய பொழுதுகள்.
கணினி கற்றுக் கொண்ட அனுபவங்களை சொல்ல அழகான தலைப்புகள் வைத்து அசத்தி விட்டீர்கள்.
அருமையான பகிர்வு.
ஆமாம் கோமதி, வாட்சப் என ஒன்று இருக்குனே ரொம்ப நாட்கள் தெரியாது. பின்னர் தெரிந்தப்போ எங்களிடம் அன்ட்ராய்ட் ஃபோனோ, ஐஃபோனோ கிடையாது. ஸ்மார்ட்ஃபோன் எனப்படுவதும் இல்லை. பல மாதங்கள் கழித்து எங்க பொண்ணு ரொம்பத் தொந்திரவு செய்து அவங்க அப்பாவை வாங்க வைச்சா! அவருக்கு அதில் தான் நேரடியாக எதுவும் செய்ய முடியாதே என யோசனை. அவருடைய சாதாரண செல்ஃபோனில் கூட மெசேஜ் வந்தாலோ, வேறே ஏதும் பார்க்கணும்னாலோ, யாருக்கானும் ஃபோன்புக் மூலம் அழைக்கணும்னாலோ நான் தான் போட வேண்டி இருக்கு! பலமுறை சொல்லிப் பார்த்துட்டேன். இப்போல்லாம் கொஞ்சம்கொஞ்சம் அன்ட்ராயிடைத் திறக்கக் கத்துட்டு இருக்கார். ஆனாலும் அதன் மூலம் ஃபோன் செய்யவோ மெசேஜ் அனுப்பவோ, வாட்சப் பார்க்கவோ முகநூல் பார்க்கவோ தெரியாது.முகநூல் மட்டும் மொபைல் மூலம்பார்ப்பேன்.மற்ற எந்தவிதமான பரிமாற்றங்களும் மொபைல் மூலம் செய்வதே இல்லை.இணையம் எல்லாம் கணினி மூலம் தான்!
Deletewhatsapp ஐ காட்டிலும் google hangout உபயோகியுங்கள். laptop மூலமாகவே வீடியோ கால் பேசலாம். இணைய இணைப்பில் டேட்டா பிளானில் அக்கௌன்ட் செலவாகும். skype தற்போது அவ்வளவாக நன்றாக இல்லை.
DeleteJayakumar
வாங்க ஜேகே அண்ணா, மொபைல் டாட்டவை நான் பயன்படுத்துவது வெளியே செல்லும்போது அல்லது வீட்டில் மின்சார விநியோகம் வெட்டு செய்யும் நாள் அன்று. வெளியே செல்லும்போது கோயில்கள் எனில் மொபைல் எடுத்துச் செல்ல முடியாது. ஆகவே வீட்டிலேயே விட்டுடுவேன். மற்றபடி ஊர்கள் செல்கையில் மொபைல் எடுத்துச் சென்றாலும் நான் பார்ப்பது அப்போது வாட்சப் மட்டுமே. வாட்சப் மூலம் பிள்ளை, பெண்ணிடமிருந்து செய்தி பெறவும் கொடுக்கவும் மட்டுமே. எப்போதேனும் முகநூலில் அதிகம் செய்திகள் வந்திருப்பதைக் காட்டினால் பார்ப்பேன். அதுவும் ஒரு 5 நிமிடங்களுக்குள் முடிந்து விடும். சமீபத்திய திருநெல்வேலிப் பயணத்தில் கூகிள் செர்ச் மூலம் தான் செப்பறை, குருக்கள் நம்பர் எல்லாம் எடுத்தேன். இம்மாதிரி அவசியத்துக்கு மட்டுமே மொபைல் பயன்பாடு! டாடா ப்ளான் எல்லாம் வீட்டில் இருக்கையில் பயன்படுத்துவதே இல்லை! வைஃபை தான்! அதுவும் அன்லிமிடெட் என்றாலும் நான் எனக்குள்ளே ஒரு லிமிட் வைத்துக் கொண்டு தான் கணினியில், இணையத்தில் உட்கார்ந்து வேலை செய்வது! எனக்கு நானே கட்டுப்பாடுகள் அதிகம் விதித்துக்கொண்டு இருக்கிறேன். அதில் இருந்து என்னை யாராலும் அவ்வளவு எளிதில் மாற்ற முடியாது! :)))))
Deleteநான் சொன்னது google hangout கூகிள் அக்கௌன்ட் மூலமாகவோ அல்லது ஜிமெயில் வழியாகவோ sign in செய்யலாம். hangout பற்றி கூகிள் செய்து பாருங்கள். வாட்ஸாப் நிறைய வைரஸ் கொண்டு வருகிறது.
DeleteJayakumar
Yes, I know about it long time ago. But we are not using it. Thank you for the suggestion. :))))
Deleteவாட்சப்பை செய்திப் பரிமாற்றத்துக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். மொபைல் மூலம் எஸ்.எம்.எஸ். யு.எஸ்ஸுக்குக் கொடுத்தால் ஒரு வாக்கியத்துக்கு 5 ரூ முதல் ஏழு ரூவரை ஆகிறது. ஆகவே வாட்சப்! ஜியோ மூலம் உள்நாட்டு எஸ் எம் எஸ் மட்டுமே இலவசம். இப்போ ஏதோ குறைந்த கட்டணத்துக்கு வெளிநாட்டுக்குச் செய்தி அனுப்பலாம்னு, தொலைபேசியிலும் பேசலாம்னு சொல்றாங்க. அது பற்றி இன்னும் விசாரிக்கலை.
Deleteஎன்னுடைய பெட்டெர் ஹால்ப் லெப்டோப்பில் தினமும் மாலை 5 மணிக்கு hangout வழியாக அமெரிக்கவில் இருக்கும் பையருடன் 15 நிமிடம் வீடியோ காலில் பேசுகிறார்.
DeleteJayakumar
ஸ்வாரஸ்யம். கணினி பயன்படுத்த ஆரம்பித்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டது சிறப்பு. மீள் பதிவாக இருந்தாலும் ரசித்தேன்.
ReplyDeleteவாங்க வெங்கட், நீங்களும் போன முறை எழுதி இருந்தீங்க. நினைவு இருக்கு. இம்முறையும் என்னோட மூன்று பதிவுகளையும் பகிர்ந்திருந்தேன். நீங்க பார்த்திருப்பது இது தான் என நினைக்கிறேன்.
Deleteநான் கம்ப்யூட்டர் இயக்க கற்றுக்கொண்ட புதிதில் எக்ஸெல் ப்ரோக்ராமையே டெலீட் செய்து விட்டேன். பின்னர் டெக்னீஷியனை அழைத்து அவர் மீண்டும் இன்ஸ்டால் செய்து கொடுத்தார்.
ReplyDeleteஎன் வீட்டில் கூட என்னை 'டெக் சவி' என்பார்கள். காரணம் கணினியை இயக்க கற்றுக் கொண்ட முதல் பெண் நான்தான். மேலும் ஆர்குட், முகநூல் போன்றவற்றில் எங்கள் குடும்பத்து இளைய தலைமுறையினரோடு இணைந்தது நான் மட்டும்தான். ஸ்மார்ட் போன் உதவியால் இப்போது எல்லோரும் நெட்டில் இணைந்திருக்கிறார்கள்.
ஆனாலும், ட்ரெயின் டிக்கெட் புக்கிங் போன்றவற்றை என் கணவர்தான் செய்கிறார்.
வாங்க பானுமதி, ஹாஹா, எக்செல்லே போயிடுத்தா? எக்செல் மூலம் தான் நான் முதலில் வாங்கிய கணினியில் டெலிஃபோன் டைரக்டரி இன்னும் மற்ற ஸ்டேட்மென்ட்கள் எல்லாம் தயாரித்து வைத்திருந்தேன். தேவைப்படும் சமயம் அவற்றை அப்படியே சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பிவிடலாம். மின் தமிழ்க் குழுமத்திற்காக சுமார் ஒருவருஷம் எக்செல்லில் தன்னார்வலராக வேலை செய்திருக்கேன்.
Deleteட்ரெயின் டிக்கெட் புக் செய்வதெல்லாம் நான் தான், ரயில்வே வெயிட்டிங் ரூம் புக்கிங்க் எல்லாமும் நான் தான். இப்படித் தான் ஆன்லைனிலே மதுரையிலே தானப்பமுதலி அக்ரஹாரத்தில் "கதிர்" என்னும் ஓட்டல் 3 ஸ்டார் எனக் கொடுத்திருந்ததால் புக் செய்துட்டு அங்கே போனால் ஜன்னலே இல்லாமல் பத்துக்குப் பத்தடி அறை கொடுத்தாங்க! ஒரே நாளில் அவருக்கு அந்த ஏசி ஒத்துக்காமல் போகத்திரும்பிட்டோம். அதுக்கப்புறமாக் கும்பகோணம் ராயாஸ் தவிர்த்து மற்ற ஓட்டல்களில் ஆன்லைனில் புக் செய்வதில்லை. திருநெல்வேலி எனில் ஜானகிராமனோ, பரணி ஓட்டலோ, ஆர்யாஸிலோ புக் செய்யலாம் தைரியமாக. :))))
Deleteகீசாக்காவும் இப்போ கோட் தேடிப்போடப் பழகிட்டா:).. என்னாது தொடர் பதிவோ? இதில வல்லிம்மா மட்டும்தான் தொடருவா என நினைக்கிறேன் ஹா ஹா ஹா.
ReplyDeleteவாங்க தீர்க்கதரிசி, முன்னெல்லாம் நிறையப் போட்டிருப்பேன்.போட்டிருந்தேன். இப்போல்லாம் தேடி எடுக்க ஓர் அலுப்பு! அதிகம் தேடுவதில்லை. இது தொடர் பதிவெல்லாம் இல்லை. நான்கு, ஐந்து வருஷங்கள் முன்னர் போட்ட தொடர்பதிவின் மீள் பதிவு என்பதால் அப்படியே காப்பி, பேஸ்ட் பண்ணினேன். வல்லி எழுதினாங்கனு தான் நினைக்கிறேன்.
Deleteஇருந்தாலும் விடாமுயற்சிபண்ணி, கொம்பியூட்டர் படிச்சதால இப்போ உங்கள் பொழுது எவ்ளோ ஈசியாக கழியுது... ரொம்ப ரயேட்டா இருக்கு கீசாக்கா.. பின்பு வரப்பார்க்கிறேன்.
ReplyDeleteதீர்க்கதரிசி, வேலை அதிகமோ? ஏன் ரயேட்டா இருக்கு? நல்லாத் தூங்கிட்டு வாங்க. உங்க "செக்" மறுபடி அலர்ஜியால் அவஸ்தைப் படறாங்க போல! ஆளே காணோம்!:(
Delete//நான் 1972 முதல் கணினியில் (mainframe) வேலை பார்த்தாலும் இணையம் மற்றும் இணைய மெயில் பக்கம் வந்தது 2009இல் retire ஆனதுக்கு அப்புறம் தான். ஏன் எனில் ISRO வில் 1994 இல் நம்பி நாராயணன் ஸ்பை கேசில் கைது செய்யப்பட்டார். இதன் காரணம் ISRO வில் வேலை பார்த்தவர் இணையத்தில் இருந்து ஒதுங்கியே இருந்தனர். வேலை பார்ப்பவர்களிலும் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு இணைய இணைப்புகள் கொடுக்கப்படவில்லை. தற்போது அவ்வகை கடுமையான தடைகள் இல்லை.
ReplyDeleteநான் PC யை பார்த்தது 1982 இல் தான். 5.25"" பிளாப்பி தான் OS disk. CPM/DOS தான் OS. விலை 1 லட்சம். முதன் முதலில் வீட்டில் பையருக்கு படிக்க ஒரு HCL Busybee 32 Mb ram, intel 386 processor, 16GB HDD 45000 ரூபாய்க்கு 1998 இல வாங்கினோம்.
தற்போது desktop ஒன்றும் இல்லை. உபயோகிப்பது laptop மற்றும் fire டேப்லெட், மொபைல்.// மெயில் மூலம் ஜேகே அண்ணா கொடுத்திருக்கும் கருத்து. நாங்க முதல் முதல் கணினி வாங்கறச்சேயும் சுமார் 30,000 ரூபாய்கள். பையர் ஒவ்வொன்றும் தனித்தனியாக வாங்கி அவரே அசெம்பிள் செய்து கொடுத்தார். அப்போ வின்டோஸ் ஒரிஜினல் சிடி போட்டிருந்ததை பின்னர் வந்த ஒரு மெகானிக் எங்களுக்குத் தெரியாமலேயே எடுத்துக் கொண்டு போய்த் தானே வைத்துக்கொண்டு விட்டார். அதிலிருந்து காப்பி எடுத்து 2000, 30000 எனக் காசு பார்த்தார். இதை எல்லாம் சொல்லப் போனால் பல பதிவுகள் வரும்! அம்புட்டு இருக்கு! என்ன வேடிக்கைனா எங்க வின்டோஸில் இருந்து காப்பி செய்ததை எங்களுக்கே விற்றது தான். இதிலே எங்களுக்காக கன்செஷன் எனச் சொல்லி 2000 ரூபாய்க்குப் பதிலாக 1500 ரூபாய் வாங்கிக் கொண்டார்!:(
கம்ப்யூட்டர் என்றாலே வேப்பை இலையை வாயில் திணிச்சிண்டமாதிரி முகத்தை சுளிக்கிற பெரிசுகள் நாட்டுல நெறய இருக்குங்க இன்னும். ’ஹால்டா, ரெமிங்க்டன் மைண்ட்செட்’ மனிதர்கள்! ஸ்மார்ட் ஃபோனைத் தொடவே தயங்கும் பிரகஸ்பதிகள். ஆனால், பேசச் சொன்னால் வாய்கிழிய பேசிக்கொண்டே இருக்கும்கள்..
ReplyDeleteஹாஹா,வாங்க ஏகாந்தன். என்றாலும் பலரும் இப்போதெல்லாம் ஹை டெக் ஆட்களாகவே இருக்கின்றனர். ஆவல் என்பதை விட நிர்ப்பந்தம் எனலாமோ?
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதாங்கள் கணினி கற்ற அனுபவங்களை வேடிக்கையாகவும், சுவாரஸ்யமாகவும் எழுதி இருக்கிறீர்கள். நடுநடுவே ஹாஸ்யங்கள் வேறு இடைச் செருகலாக பதிவு ரொம்பவே சுவையாக இருந்தது. நானும் தங்கள் மூலம் சில சொற்கள் கண்டு கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, வேளைப்பளு குறைந்ததா? பதிவை ரசித்தமைக்கு நன்றி. இதெல்லாம் எழுதி சுமார் ஆறு, ஏழு வருடம் இருக்கும். ஆனாலும் இப்போவும் இது பொருந்தி வருகிறது அல்லவா!:))))
Deleteஉங்கள் அந்தப்பதிவில் கண்டபடி நான் என் அனுபவ்ங்களைஎழுதி இருந்தேனா நினைவுக்கு வர வில்லை
ReplyDeleteவாங்க ஜிஎம்பி ஐயா. சுட்டி கேட்ட நினைவு. பார்க்கிறேன்.
Deleteஆஆவ் வந்துட்டேன் கீதாக்கா ,,விசாரித்ததுக்கு தாங்க்ஸ் :) லென்ட் துவங்கியதால் ஆலயத்தில் இருந்தேன் மொத்தமா க்ளீன் பண்ணும்போது என் திங்க்ஸை தூக்கி தேவையற்றதுன்னு நினைச்சி வெளியில் அடிச்சிடுவார் ஒருத்தர் கொஞ்சம் வெள்ளந்தி டைப் அதனால் பக்கத்தில் இருந்து கவனிச்சிட்டிருந்தேன் :)
ReplyDeleteவாங்க, வாங்க, வாங்க, வரலையேனு கவலையா இருந்தது. இந்தப் பூஸார் கண்டுக்கவே இல்லையாக்கும்! (மெல்லசந்தடி சாக்கில் போட்டுக் கொடுத்தால் தான் உண்டு.) நல்ல வேளையா நல்ல வேலைகளைச் செய்துட்டு இருந்திருக்கீங்க!
Deleteநானும் கணவரும் கூட கணினி 2002 இல் வாங்கின புதிதில் முதலில் வைத்திருந்தது யாஹூ மெயில் ஐடிதான் :)
ReplyDeleteபிறகுதான் கூகிள் வந்தது .
நாங்களும் பெயிண்ட் விளையாடுவோம் :) அப்புறம் நாம் டைப் செஞ்சா அது வாசிக்கும் அந்த விளையாட்டும் விளையாடுவோம் :)
ஆனா அப்போல்லாம் என்னன்னு தெரியாதது சும்மாவே கணினி தனே ஷட்டவுன் ஆகிடும் இப்போ ரொம்பவே அட்வான்ஸ்ட்
2002 ஆம் ஆண்டில் தான் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம் பெண்களுக்கெனச் சிறப்புக் கணினிப் பயிற்சி துவங்கியது! அதில் சேர்ந்து 2 மாசம் போனேன். மூன்றாவது மாசம் நம்ம ரங்க்ஸுக்கு ஊட்டிக்கு மாற்றலாகி விட்டது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))) இப்படி எல்லாமே அரைகுறை தான்!
Deleteமுந்தி ஒரு கம்பியூட்டரில் இருந்து மற்றொரு கணினிக்கு LAN மூலமா மெசேஜ் அனுப்புவது கூட ஒருவர சொல்லிக்கொடுத்தார் அப்பா ப்ரண்டு ஆபீசில் :) இப்போதான் வைபரிலும் வாட்சாப்பிலும் அனுப்பறோமே :)
ReplyDeleteஎன் பொண்ணு எனக்கு மெசேஜ் அனுப்பி டீ இல்லைனா ஹாட் சாக்லேட் கொண்டுவரச்சொல்வா அவ ரூமுக்கு :) சும்மா விளையாட்டுக்கு :)
அப்படியா, அஞ்சு, இந்த லான் மூலமா மெசேஜ் அனுப்புவது கேள்வி ஞானம் தான். எப்படினு எல்லாம் தெரியாது. எங்க வீட்டிலேயும் அம்பேரிக்காவுக்கு நாங்க போனால் சின்னப் பேத்தி அப்பு, எனக்கு வீட்டுக்குள் இருந்து கொண்டே வாட்சப் மெசேஜ் அனுப்பி பாட்டி முறுகலா தோசை வார்த்துக் கொடுங்கனு கேட்பா! :)))
Delete/ மறுநாளைக்குப் பொண்ணு சமத்தா மெயிலில் பதில் கொடுத்திருந்தாள். ரொம்பவே சந்தோஷமா இருந்தது.//
ReplyDeleteபார்த்திங்களா மகள்களுக்குத்தான் அம்மாவை முழுசா புரிஞ்சிக்கும் தன்மை அதிகம் :) எதை எப்படி செஞ்சா அம்மா ஹாப்பி ஆவாங்கன்னு பொறுமையா செஞ்சிருக்காங்க :)
நானும் தட்டுத்தடுமாறி ஒவ்வொண்ணா தேடி தேடி படிச்சேன் ஆனா இங்கே ஸ்கூலில் அறிவியல் பாடத்தை எடுத்திருந்தாலும் என் மகளுக்கு அக்கவுன்டிங் எக்ஸல் எல்லாம் அத்துப்படி :) என்ன குடுகுடுன்னு வேகமா தட்டிட்டு போவா என்ன செஞ்சா எப்படி வந்ததுன்னு தவிச்சிடுவேன் அவ்ளோ வேகம் :)
அருமையான நினைவுகளக்கா ,அப்படியே அந்த தமிழ் படிச்ச விஷயத்தையும் எழுதிடுங்க :)
ஏஞ்சல், அறிவியலை விட இந்த அக்கவுன்டிங் பாடம் சுலபம் தானே! அதிலும் உங்க பொண்ணு சின்னப் பொண்ணு தானே! சீக்கிரம் கத்துப்பா!
Deleteஹிஹிஹி, தமிழ் படிச்ச விஷயம் எழுதினா ரொம்பக் கேவலமா இருக்கும்! அப்போவும் எல்லோரும் கேட்டிருந்தாங்கனு நினைக்கிறேன். வருகைக்கும் தொடர் கருத்துகளுக்கும் நன்றி, நன்றி, நன்றி.
நீங்கள் மிகவும் நகைச்சுவையாக எழுதியிருக்கிறீர்கள்...அருமையாக இருக்கிறது...வாழ்த்துக்கள்..தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDelete