எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, March 02, 2019

நான் காற்று வாங்கவில்லை, கணினி கற்கச் சென்றேன்!

 

இப்போல்லாம் நிறையப் பேர் கணினி கத்துக் கொடுக்கறாங்க.  போதாததுக்கு எல்லாப் பத்திரிகைகளும் கணினி அறிவு பற்றிய செய்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.  நமக்கெல்லாம் அப்படி யாரும் கிடைக்கலை.  சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா, ஒரு மெயில் கொடுக்கக் கத்துக்கலாம்னு போனது தான். லோட்டஸ் னா எனக்குத் தாமரைனு தான் அர்த்தம் புரியும்.  ஜாவானா, பைக் நினைப்பிலே வரும். இப்படி இருக்கிறவ கிட்டேப் போய் ஜாவாவும், லோட்டஸும் படின்னா, யார் படிப்பாங்க!  அதானால் நான் ஸ்ட்ரிக்டா ஹிஹிஹி, கவனிக்கவும், ஸ்ட்ரிக்டா என்னோட கணினி ஆசிரியர் கிட்டே என்னோட தேவை என்னனு விளக்கிட்டேன். பையர் பரோடாவிலும், பொண்ணு அமெரிக்காவிலும் இருக்கிறதாலே அவங்களுக்கு ஆத்திர, அவசரத்துக்கு மெயில் கொடுக்கத் தெரிஞ்சாப் போதும்னு சொல்லிட்டேன். நமக்குத் தான் கூச்சமே கிடையாதே!  ஆசிரியர் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்திருப்பார்.  ஆனாலும் காட்டிக்கலை.




தலை எழுத்தை நொந்து கொண்டு அடிப்படை எப்படியும் தெரிஞ்சிருக்கணும்னு சொல்லி, இதான் சிபியுனு சொன்னார். அப்படின்னா? இதாங்க கம்ப்யூட்டரே.  ஓஹோ, அப்படியா? பொட்டி உள்ளே என்னெல்லாம் இருக்கும்?? அவர் மனசுக்குள்ளே இது என்ன துணிமணி வைக்கிற சூட்கேஸா, இல்லை மேக்கப் பொட்டியா, இவங்க கேட்கிறதைப் பார்த்தால் அப்படித் தான் நினைக்கறாங்க போலனு நினைப்பது பளிச்சென எனக்குத் தெரிய, ஹிஹி, இல்லை, அதுக்குள்ளே உள்ள மெகானிசம்னு ஆரம்பிக்க, அதெல்லாம் உங்களுக்கு எதுக்குங்க?  இதோ, இந்த ஸ்விட்சை ஆன் பண்ணினா இங்கே ஹோம் பேஜ் வரும்னு சொன்னார்.  நமக்குத் தான் கூச்ச சுபாவமே கிடையாதுனு உங்களுக்கெல்லாம் நல்லாத் தெரியும்,  ஆகவே,  ஹோம் பேஜ் இப்படித் தான் இருக்கணுமா?  அந்தக் கம்ப்யூட்டரில் வேறே மாதிரி இருக்கே! னு நான் கேட்க, அது எல்லாம் எப்படி வேணா வைச்சுக்கலாம்ங்க.  அவங்க அவங்க விருப்பத்துக்கு ஏத்தாப்போல் மாத்தி அமைச்சுக்கலாம்னு ஆரம்பிச்சார்.  துளிக்கூடக் கூச்ச சுபாவம் இல்லாமல் நான் அப்போ இதை மாத்திக்காட்டுங்களேன்னு நான் சொல்ல, அவரும் தலை எழுத்தை நொந்து கொண்டு டெஸ்க் டாப்பில் தெரிஞ்ச படத்தை மாத்தி வேறே படத்தைக் கொண்டு வந்தார்.  அந்த விளையாட்டு எனக்குப் பிடிச்சுப் போக நானும் விளையாடறேனேனு கேட்க, சரினு சொல்லிக் கணினி பாடு; உன்பாடுனு என்னையும் அதையும் தன்னந்தனியே விட்டுட்டுப் போயிட்டார்.



நானும் இரண்டையும் கொஞ்ச நேரம் மாத்தி, மாத்திப் போட்டுப் பார்த்துட்டு, அலுத்துப் போய், என் ஆசிரியரைக் கூப்பிட்டு, எனக்கு மெயில் கொடுக்கக் கத்துக் கொடுக்கறதாச் சொல்லிட்டுப் போயிட்டீங்களேனு கேட்டேன்.  ஹிஹிஹி, நமக்குத் தான் கூச்ச சுபாவமே கிடையாதே!  திருதிருவென விழித்த அவர், இன்னும் பேசிக்கே நீங்க கத்துக்கலையேனு ஆரம்பிச்சார்.  என்னங்க, நீங்க தானே சொல்லிக் கொடுக்கணும்!  என்னை விட்டுட்டுப் போயிட்டீங்களேனு நான் அவரைத் திருப்ப, பதில் சொல்ல முடியாமல் திணறின மனிதர், இன்னிக்கு ஒரு மணி நேரம் ஆயிடுச்சுங்க, நாளைக்கு வாங்க, பார்க்கலாம்னு சொல்ல, ஒண்ணுமே சொல்லிக் கொடுக்கலை, அதுக்குள்ளே ஒரு மணி நேரம் ஆயிடுச்சா? சரியாப் போச்சு போங்க, இப்படிச் சொல்லிக் கொடுத்தால் நான் எப்படிக் கத்துக்கறதுனு சொல்லிட்டு நாளைக்கு வரேன்னு அவரைப் பயமுறுத்திட்டு நடையைக் கட்டினேன்.  ஹிஹிஹி,இதுவும் கூச்ச சுபாவம் இல்லாமல் தான் சொன்னதாக்கும்.


 அன்னிக்குப் பூராப் பார்க்கிறவங்க கிட்டே எல்லாம் டிவி பெட்டியைக் காட்டிக் கம்ப்யூடரில் ஸ்க்ரீன் ஒண்ணு  இப்படித் தெரியறது பாருங்க அது ஒண்ணும் கம்ப்யூட்டர் இல்லையாக்கும்.  கீழே செவ்வக வடிவில் ஒரு பெட்டி இருக்குப் பாருங்க அதான் கம்ப்யூட்டர்.  அதை சிபியூனு சொல்லணும்.  அப்படினு சொல்லிட்டு இருந்தேன்.  ரங்க்ஸ் கிட்டேயும் அதே பாடம்.  அவர் சும்மா இருக்காம, சிபியுனா ஃபுல் ஃபார்ம் என்னனு கேட்டு வைக்க, அதைக் கேட்டுக்கலையேனு திகைச்ச நான்,  அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?  நான் தானே கம்ப்யூட்டரைக் கத்துக்கப் போறேன்.  நான் தெரிஞ்சுண்டாப் போதும்னு சொல்லிட்டுக் காஃபியையும், டிஃபனையும் கொடுத்து அவர் வாயைத் தாற்காலிகமா அடைச்சு வைச்சேன்.


மனசுக்குள்ளே நாளைக்கு சிபியூனா என்னனு கேட்டு வைச்சுக்கணும்னு குறிச்சுண்டேன்.  மறுநாளைக்குக் கரெக்டாப் பத்து மணிக்குப் போயிட்டோமுல்ல!  அங்கே போனால் முதல் நாள் இருந்தவர் இல்லை.  அவருக்கு அன்னிக்கு லீவாம். வேறொருத்தர் இருந்தார்.  நானும் கடவுளே, அவர் இல்லையேனு இன்னிக்குப் போயிடலாமானு யோசிக்கிறதுக்குள்ளே புதுசா இருக்கிறவர் என்ன மேடம், எனி ஹெல்ப்னு கேட்க, நானும் நான் காற்று வாங்க வரலை, ஒரு கணினி கற்க வந்தேன்னு சொல்ல, அவர் தன்னைப் பிரகாஷ்னு அறிமுகம் செய்து கொண்டு வாங்க, நேத்து எதிலே பண்ணினீங்க?  சிபியூ, மானிடர், எல்லாம் காட்டியாச்சா? அப்புறமா, எப்படி ஸ்டார்ட் பண்ணணும்னு சொல்லி இருப்பாங்களே, எங்கே ஸ்டார்ட் பண்ணிக் காட்டுங்கனு ஏற்கெனவே ஸ்டார்ட் செய்து வைச்சிருந்த கணினியை ஷட் டவுன் பண்ணிட்டு ஸ்டார்ட் பண்ணச் சொல்லிட்டார்.  இவர் நம்மைவிடக் கூச்ச சுபாவம் இல்லாதவரா இருப்பார் போலிருக்கே! போச்சு, போச்சு, நேத்து விளையாடின விளையாட்டை இன்னிக்கு விளையாட முடியாது போலிருக்கேனு மனசை நொந்து கொண்டு கம்ப்யூட்டரின் ஸ்விட்சை அழுத்தினேன்.  மானிடரில் வெளிச்சம் வர அதிலே ஸ்டார்ட் பட்டனைத் தேடணுமோனு நினைக்கிறதுக்குள்ளே கண்ணெதிரே ஸ்டார்ட் பட்டன் தெரிய ஆஹானு அது கிட்டே மெளசைக் கொண்டு போறதுக்குள்ளே அது என்னமோ நான் பிடிச்சுக் கூண்டில் அடைக்கப் போறேன்னு நினைச்சுட்டுச் சரியா வராமல் ஆரோ மார்க் எங்கெல்லாமோ நடனம் ஆடினது.   என்றாலும் கூச்ச சுபாவம் இல்லைங்கறதையும் நீங்க புரிஞ்சுக்கணும்.



மெளசைப் பிடிக்க வரலையானு பிரகாஷ் கேட்க, மெளசா எங்கேனு நான் துள்ள, அவர் இப்போ ஹிஹிஹிஹி.  நீங்க கையிலே பிடிச்சிருக்கீங்களே அதான் மேடம் மெளஸ்னு சொல்ல, ஒரு நிமிஷம் பயத்திலே கையை உதறப் போன நான் சுதாரிச்சுட்டு அசடு வழிந்தேன்.  ஹிஹி, இதுக்கு மெளஸ்னு பேரா? பொண்ணு இதெல்லாம் சொல்லவே இல்லையே! மெளஸ் இருக்கும்னு!  முன்னாடியே தெரிஞ்சா பயப்படாம இருந்திருக்கலாமேனு பல்லைக் கடிச்சுட்டு, மெளசைக் கெட்டியாப் பிடிக்கலைனா ஓடிடாதோனு கேட்டு வைச்சேன்.  நல்லா ஹாஸ்யம் பண்ணறீங்க மேடம்னு சொல்லிட்டு, (ஹாஸ்யமா அது?  நான் நிஜம்மாத்தான் கேட்டேன்னு தெரியலை அவருக்கு, பாவம்) மெளசை எப்படிப் பிடிக்கணும்னு சொல்லிக் கொடுத்து ஸ்டார்ட் பண்ணச் சொன்னார்.  அப்போத் தான் சிபியூன்னா என்னனு கேட்கவில்லையேனு தோண, அவரிடம் அதைக் கேட்க, என்ன, நேத்திக்கு அப்போ என்ன சொல்லிக் கொடுத்தார் உங்களுக்குனு கேட்க, ஹிஹிஹி, நேத்திக்கு விளையாடிட்டு இருந்தேன்னு சொல்லவா முடியும்.  நான் திருதிரு.  சிபியூன்னா சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் அப்படினு அழுத்தம் திருத்தமாச் சொல்ல மனதுக்குள்ளே நயாகரா.  ஆகா, கம்ப்யூட்டர் பாஷையிலே ஒண்ணு தெரிஞ்சுடுச்சே!  ஹையா, ஜாலி!  அப்புறமா மானிடரைக் காட்டி, இது மானிடர், எல்லாரும் நினைக்கறாப்போல் இது கம்ப்யூட்டர் இல்லைனு சொல்ல, அதான் எனக்குத் தெரியுமேனு சொல்ல வாயைத் திறந்துட்டு அப்புறமா அடக்கிட்டேன்.  இது ஒண்ணும் கூச்ச சுபாவத்தினாலே இல்லையாக்கும்.  ஆசிரியர் எதிரே எதிர்த்துப் பேசக் கூடாதுனு மரியாதை! அவர் கேட்காமலேயே இது மெளஸ்னு சொல்லிட்டு, தட்டச்சற கீ போர்டைத் தான் ஏற்கெனவே டைப்பிங் கத்துண்டப்போ பார்த்திருக்கோமே, இது கீ போர்ட் அப்படினு அவர் கேட்காம நானாச் சொல்லிட்டு இல்லாத காலரைத் தூக்கி விட்டுண்டேன்.

இதுக்குள்ளே கணினி ஸ்டார்ட் ஆகி, இணைய இணைப்புக்குப் பாஸ்வேர்ட் கேட்டது.  அப்போல்லாம் ப்ரவுசிங் சென்டரில் கூட டயல் அப் தான்.  உடனே நம்பர் போடச் சொல்லி ஏதோ வர, இருங்க நான் கனெக்ட் பண்ணித் தரேன்னு சொல்லி அவர் கனெக்ட் பண்ணினார்.  இணையம் விரிந்தது.  கூடவே என் கனவுகளும்.

92 comments:

  1. இன்னிக்கு நான் தான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

    தேம்ஸ்கு கேட்டுச்சோஊஊஊஊஊஊஊ

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தேம்ஸ் தாமதமாத் தான் வரும். ஸ்கொட்டிஷ்காரங்க தான் வந்தா வருவாங்க. வந்திருக்காங்க போல!:))))

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்போ கீதா காட்டில மழை:).. இருங்கோ பூனைக்கொரு காலம் வருமாக்கும்:)

      Delete
  2. லோட்டஸ் னா எனக்குத் தாமரைனு தான் அர்த்தம் புரியும். ஜாவானா, பைக் நினைப்பிலே வரும். இப்படி இருக்கிறவ கிட்டேப் போய் ஜாவாவும், லோட்டஸும் படின்னா, யார் படிப்பாங்க! //

    ஹா ஹா ஹா...மௌஸ் நா சுண்டெலினுதான் தெரியும்....ஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இல்ல! மௌஸ்னு முதல்லே சொன்னதும் கொஞ்சம் தூக்கி வாரித் தான் போட்டுது! :)))))

      Delete
  3. சிபியு//

    அக்கா இந்த சென்ட்ரல் ப்ராஸசிங்க் யூனிட் தான் நம்ம தலைலியே இருக்கே!!! ஹிஹிஹிஹி

    //இது என்ன துணிமணி வைக்கிற சூட்கேஸா, இல்லை மேக்கப் பொட்டியா, இவங்க கேட்கிறதைப் பார்த்தால் அப்படித் தான் நினைக்கறாங்க போலனு நினைப்பது பளிச்சென எனக்குத் தெரிய//

    ஹா ஹா ஆ ஹா....

    எங்க வீட்டுக்கு முதன் முதல்ல டிவி வந்ததே 90க்கு அப்புறம்தான்...அப்ப பாட்டி கேட்டாங்க நான் அதுக்கு பின்னாடி போய் நின்னா தெரிவேனானு...!!!!! ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டிலே சென்னைத் தொலைக்காட்சி ஆரம்பிச்ச ஓரிரு வருடங்களிலேயே வந்து விட்டது. அப்போல்லாம் மலரும் நினைவுகள் எனத் திரைப்படக் கதாநாயக, நாயகர்களின் பேட்டிகள் ஞாயிறு அன்று மட்டும் மத்தியானமா 11 மணியிலே இருந்து 12 மணிக்குள் ஒளிபரப்புவாங்க! காலம்பர எல்லாம் தொலைக்காட்சியே இருக்காது! அப்புறமா சாயந்திரமா ஆறு மணிக்குத் தான்!

      Delete
    2. ஹிஹிஹி, மலரும் நினைவுகள் கணினியிலே இருந்து தொலைக்காட்சிக்குப் போயிடுச்சு! :))))

      Delete
  4. அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? நான் தானே கம்ப்யூட்டரைக் கத்துக்கப் போறேன். நான் தெரிஞ்சுண்டாப் போதும்னு சொல்லிட்டுக் காஃபியையும், டிஃபனையும் கொடுத்து அவர் வாயைத் தாற்காலிகமா அடைச்சு வைச்சேன்.//

    ஹா ஹா ஹா ஹா ஹா சிரிச்சு முடில....நீங்க ரொம்ப புத்திசாலி!! என்று மாமா சொல்லிருப்பாரே!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் இருக்காது தி/கீதா, சரியாக் கேட்டுக்கலைனு நினைச்சிருப்பார். வம்பு எதுக்குனு ஒதுங்கிப் போயிருப்பார்! :)))))

      Delete
    2. கலக்குறீங்க அக்கா..! சூப்பர்!👍😂😂

      Delete
    3. ஹாஹாஹா, பானுமதி, பாராட்டுக்கு நன்னி ஹை! :)

      Delete
  5. வாசிக்க வாசிக்க சுவையாக இருந்தாலும் ...

    இதை விட பல கேள்விகள் என்னிடம் கேட்டார்கள்...

    அப்போது எனது வயது 21. கேட்டவர்களின் வயது அனைவருக்கும் 40-க்கும் மேல்...

    இடம் : பின்னி சென்னை...

    அவர்களால் கற்றுக் கொண்டது தான் அதிகம்... இப்போது வலைத்தளத்தில் கற்றுக் கொண்டது போல...

    நேரம் கிடைத்தால் ஒரு எட்டு இங்கே சென்று வாருங்கள்... (http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Try-Training-Success.html) வீட்டுக் கணினியில் வாசியுங்கள்... கைபேசியில் வேண்டாம்...

    நன்றி அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, நான் கைபேசி உபயோகிப்பது வாட்சப் பார்க்கவும், வெளியே போனால் மொபைல் டாட்டா மூலம் தொடர்பு கொள்ளவும் தான். என்னோடபதிவையே அதில் எல்லாம் பார்க்க மாட்டேன். பார்க்கவும் தெரியாது! :)))) இன்னமும் நான் ஒரு க.கை.நா. :))))) உங்க பதிவைப் போய்ப் பார்த்துட்டு வந்துட்டேன். முன்னாடியும் வந்து கருத்துச் சொல்லி இருந்திருக்கேன். :))))

      Delete
  6. காற்றுவாங்கப் போனவங்க கவிதை வாங்கி வந்தாங்க. நீங்க கணிணி கற்கப் போய் என்ன வாங்கி வந்திருக்கீங்கன்னு படிக்கறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த.கணினி கற்கப் போய் கணினியையே வாங்கி வந்தாச்சு இல்ல!

      Delete
  7. காபியையும் டிபனையும் கொடுத்தாஅவர் வாயை அடைச்சீங்க? நான் நீங்க மங்களூர் போண்டா கொடுத்துத்தான் அவரை அடுத்த அரை மணி நேரம் பேசவுடாம (போண்டா மென்னைப் பிடித்ததால்) பண்ணினீங்கன்னு நினைத்தேன்

    ReplyDelete
    Replies
    1. ம்ஹூம், அப்போல்லாம் எண்ணெயில் பொரித்த பண்டங்கள் லீவ் நாளில் தான் பண்ணணும் ஒரு எழுதப்படாத144 தடை உத்தரவு உண்டு! அலுவலகம் இருக்கும் நாட்களில் இட்லி, தோசை, உப்புமா, சப்பாத்தி, பூரி, அடை இத்யாதிதான்!

      Delete
  8. இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. அதுக்குள்ள கனவுலகத்துல போக ஆரம்பிச்சாச்சா?

    உங்க கற்கும் ஆர்வத்தைப் பாராட்டறேன். அதுசரி மாமாவும் கத்துண்டாரா இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழரே, கனவுகள் காண எல்லை ஏது? ஏற்கெனவே கொடுத்த கமென்ட் காக்காய் தூக்கிக் கொண்டு போய் விட்டது. எனக்குக் கற்கும் ஆர்வம் அதிகம் தான். ஆனால் அது என்னமோ சரியா வரலை என்பதால் அப்புறமா நிறுத்திக் கொண்டேன்.மாமா இன்னிக்கு வரை கணினியைத் தொட்டதில்லை. அவர் ஏதேனும் பார்க்கணும்னா நான் போட்டுக் கொடுத்துப் பின்னர் பார்ப்பார். அப்போவும் கணினியை ஷட் டவுன்ன் பண்ணறதுனாக் கூட நான் தான்! கணினி என்றாலே ஒரு அவர்ஷன்! நானும் சொல்லிப் பார்த்துட்டேன்.

      Delete
    2. அப்புறம் மாமா எப்படி ரயில் டிக்கட் எல்லாம் புக் செய்கிறார்?

      Delete
    3. ஜேகேஅண்ணா, அவர் எங்கே டிக்கெட் புக் செய்யறார்? எல்லாம் நான் தான் செய்து கொண்டு இருக்கேன்!ஆன்லைன் புக்கிங் எல்லாமும் இன்னும் மற்றச் சிலதும்! :) சில சமயம் நெட் படுத்தலாலும், மற்றக் காரணங்களாலும் சரியா வரலைனா நல்லா வாங்கியும் கட்டிப்பேன். அவரோட பென்ஷன் அக்கவுன்டை ஆன்லைனில் பார்க்கவும் எடுத்துத் தர வேண்டி இருக்கும். இப்போப் பிள்ளை வந்தப்போ ஐபாடில் போட்டுக் கொடுத்திருக்கான். அதிலும் சில சமயம் சரியாத் திறக்காது! அப்போ ஓர் மல்யுத்தம் தான்! :))))))

      Delete
    4. முக்கியமான டாகுமென்டுகளை ஸ்கான் செய்து ப்ரின்ட் அவுட் எடுப்பதில் இருந்து என்னுடைய வேலை தான்! சமயத்தில் சரியா வராது!அப்போ குருக்ஷேத்திரம் நடக்கும்! :))))

      Delete
  9. You were not downloaded, you were born because it was cesarean அப்படி இருக்கணுமோ?

    ReplyDelete
    Replies
    1. இல்லை, நெ.த. இதுவே நல்லா இருக்கு!

      Delete
  10. கூடவே கனவுகளும்!..
    ஆகா.. வண்ண வண்ணக் கனவுகள்!..

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி துரை!

      Delete
  11. திரு.பிரகாஷின் நிலையை நினைத்துப் பார்த்தேன். விதி யாரையும் விடாது என்பது உண்மைதான் போலும்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, கில்லர்ஜி! அதைச் சொல்லுங்க முதல்லே! :)))))

      Delete
  12. //இப்போல்லாம் நிறையப் பேர் கணினி கத்துக் கொடுக்கறாங்க. போதாததுக்கு எல்லாப் பத்திரிகைகளும் கணினி அறிவு பற்றிய செய்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. //
    இங்கே இலவசமாவே சொல்லித்தரங்க இ மெயில் அப்புறம் ஆன்லைன் safety ..
    அதைவிட இன்னும் ரெண்டு வருஷத்தில் உங்க குட்டி குஞ்சுலு கூட எக்ஸ்பெர்ட் ஆகிடுவா :)
    ஹீஹீ எனக்கு லோட்டஸ் என்றால் அது எங்க தேசிய மலர்னும் தெரியுமே :) அதைவிட ஒரு பொண்ணு நான் படிக்கும்போது COBOL அப்படின்னு சும்மா சொல்லிட்டிருப்பாளா நான் யாரது கோபால்ன்னு கேட்டு தொலைச்சிட்டேன் :)
    எரிக்கிறமாதிரி பார்த்தா :) (சாமீ இது நெல்லைத்தமிழன் கண்ணில் மட்டும் பட்டுடக்கூடாது )

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, நெ.த. அப்புறமாப் பார்த்திருப்பார். நானும் கோபல் என்பதை கோபால்னு நினைச்சுட்டு இருந்தேன்.:)))) சும்மா உள உளாக்கட்டிக்கு! குட்டிக் குஞ்சுலு இப்போவே எல்லாம் செய்யறேன்னு தான் சொல்றது! அவ அப்பா, அம்மா தான் விடலை! :))))

      Delete
    2. நான் 87ல் எழுத ஆரம்பித்தது COBOLல்தான். என்னவோ ரொம்பவே ஆர்வமா கத்துக்கொண்டேன். அந்த அனுபவங்களை அப்போ அப்போ சொல்றேன்.

      நான் ஒரு கம்பெனியில் 89ல் வேலைக்குப் போனபோது, ஒரு நாள் மாலை 4 மணிக்கு ஒரு பெரிய ப்ரோக்ராமில் (அது பல வருடங்களாக ஓடிக்கிட்டிருந்த ப்ரோக்ராம்) சில சமயம் தவறுதலான அவுட்புட் வருது, அதையெல்லாம் என்னன்னு பாருங்க என்று என்னிடம் மேனேஜர் கொடுத்தார். அந்த ப்ரோக்ராம் எப்படி ரன் பண்ணறது, எங்க SOURCE என்றெல்லாம் கேட்டுக்கொண்டேன். அப்புறம் 5 மணிக்கு ஆரம்பித்து 6-7 மணில இதை Debug பண்ணுவது கடினம்னு, திரும்ப புதுசா ப்ரோக்ராம் இரவு முழுதும் எழுதி, மறுநாள் காலை 7 மணிக்கு புது ப்ரோக்ராம் கொடுத்தேன்.

      IT Head ரொம்ப இம்ப்ரஸிவாகி, அப்போலேர்ந்து எனக்கு ரொம்ப பெரிய பெயர் அங்க. அவர் என்கிட்ட தனியா சொன்னார், 'யார்ட்டயும் சொல்லாம இரவு முழுவதும் ஆபீஸ்ல இருந்திருக்கயே... செக்யூரிட்டிட்டலாம் சொல்லியிருக்கவேண்டாமா' என்றார். நான் எப்போது அந்த மேனேஜரை பிறகு பார்த்தாலும் (பல வருடங்களுக்குப் பிறகு) எங்கிட்ட அந்த ப்ரோக்ராமைப் பற்றிப் பேசுவார்.

      Delete
    3. ஹையா. நானும் ஒரு கோபால் தாங்க. 72இல் ஆரம்பித்தேன். 2009இல் விடமுடியாமல் பிரியாவிடை கொடுத்தேன்.
      Jayakumar​​

      Delete
    4. வாவ்வ்வ்வ் எல்லோரும் ஆண்டுகளைச் சொல்லிட்டினம்:) விழுவதை எல்லாம் பொறுக்குவதுதானே என் வேலை:)) ஹா ஹா ஹா

      Delete
    5. நீங்க ஆண்டு எதுனு சொல்லலை அதிரடி! ஸ்வீட் 16 னு போட்டுஇ கொண்டதையே இன்னும் நினைச்சிட்டு இருந்தால் எப்பூடி?

      Delete
    6. 2019 - 16 = athira பிறந்த ஆண்டு:).

      உது இருக்கட்டும்:), வெங்கட் நாகராஜ் இன் இன்றைய போஸ்ட் 04/03/19 பாருங்கோ... உங்களைப்பற்றி நானும் ஜே கே ஐயாவும் எதுவுமே பேசல்ல:)..

      Delete
    7. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரடி, முதல்லே அதைத் தானே போய்ப் பார்த்தேன். ஒரு நாள் கொஞ்சம் எட்டிப்பார்க்கலைனா இப்படியா கவுத்து விடறது? :)))))))

      Delete
  13. // காஃபியையும், டிஃபனையும் கொடுத்து அவர் வாயைத் தாற்காலிகமா அடைச்சு வைச்சேன்.//

    ஹாஹா ஆமாக்கா இதை மட்டும் அதாவது நம்மை எதிர் கேள்வி மட்டும் கேக்கவே விடக்கூடாது :)
    ஹீஹீ முழுசா படிச்சிட்டு கமெண்ட் போட நினைச்சாலும் கையும் வாயும் துறுதுறுங்குது :)

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, இல்லாட்டிச் சும்மாச் சும்மாக் கேள்வி கேட்பாங்க இல்ல! அதைச் சமாளிக்க வேண்டாமா?

      Delete
  14. இங்கே எசென்ஷியல் கணினி ஸ்கில்ஸ் இது போதுமே ..மெயில் அனுப்பறது .மெயில் திறப்பது அது மேனேஜ் செய்ய கற்றுகிட்டா லே நாமே ஒவ்வொண்ணா அப்படியே கத்துக்கலாம் .
    //பதில் சொல்ல முடியாமல் திணறின மனிதர், இன்னிக்கு ஒரு மணி நேரம் ஆயிடுச்சுங்க, நாளைக்கு வாங்க, பார்க்கலாம்னு சொல்ல, ஒண்ணுமே சொல்லிக் கொடுக்கலை, அதுக்குள்ளே ஒரு மணி நேரம் ஆயிடுச்சா//
    அது சரி அப்ப 1 மணி நேரம் என்ன செஞ்சேங்க :)

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, ஒரு மணி நேரம் விளையாட்டுத் தான்! வேறே என்ன செய்வேனாம்? நடு நடுவே அந்த பிரகாஷ்வந்தால் ஏதோ மும்முரமாப் படிக்கிறாப்போல் பாவனை! :)))))

      Delete
  15. //அங்கே போனால் முதல் நாள் இருந்தவர் இல்லை. அவருக்கு அன்னிக்கு லீவாம். வேறொருத்தர் இருந்தார்//
    ஹாஹய்யோ :) பாவம்க்கா ரொம்ப பயமுறுத்திட்டிங்களோ :)

    ஹாஹாஹா :) CPU ..இது பத்தி ஒன்னு சொல்லணும் ..எனக்கு சின்ன வயதில் இருந்து இந்த ABBREVIATION தெரிஞ்சிக்கறதில் அவ்ளோ ஆர்வம் :) அதனால் எந்த புக் வாங்கினாலும் க்ளாஸரி படிச்சிடுவேன் அதனால் .RAM ROM எல்லாம் தெரிஞ்சிருந்தது :)

    ReplyDelete
    Replies
    1. //பாவம்க்கா ரொம்ப பயமுறுத்திட்டிங்களோ :) // இது ஒண்ணுமே இல்லை! நான் கத்துண்டு வந்தப்புறமா அந்தக் கம்ப்யூட்டர் ஆசிரியர் இரண்டு பேருக்கும் தரமணியிலே வேலை கிடைச்சு இந்த ப்ரவுசிங் சென்டரையே மூடிட்டாங்கன்னா பார்த்துக்குங்க! :)))))

      பின்னால் நானும் இந்தக் கணினி வார்த்தைகள் சுருக்கினதின் விரிவாக்கம் உள்ள புத்தகம் எல்லாம் வாங்கினேன். 4, 5 புத்தகங்கள் இன்னமும் இருக்கு! :))))

      Delete
  16. மெளசைக் கெட்டியாப் பிடிக்கலைனா ஓடிடாதோனு கேட்டு வைச்சேன்//

    ஹா ஹா ஹா ஹா ஹா...அடுத்த லைன் ஹாஸ்யமா அது...ஹா ஹா ஹா ஹா ஹா...

    இப்ப அது ஹாஸ்யம்தானே நாங்க சிரிக்கறோமே....ஹிஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பின்னே? தி/கீதா! மௌஸை ஓட விட்டுடலாமோ? அந்தக் கணினி ஆசிரியருக்கு ஹாஸ்யமே புரியாதோனு இப்போத் தோணுது!

      Delete
  17. பாதி வாசித்துக் கருத்து சொல்லிட்டுருக்கும் போது சந்தைக்குப் போகும்படி ஆகிடுச்சு...ஸோ இப்பத்தான்..

    // நேத்திக்கு விளையாடிட்டு இருந்தேன்னு சொல்லவா முடியும். //

    அதானே....கீதாக்காவே குயந்தைதானே! குழந்தை பின்ன என்ன பண்ணும் விளையாடத்தான் செய்யும்!!!!!! ஹிஹிஹிஹி....

    செமையா ரசிச்சுட்டுருக்கேன்...இருங்க மீதியும் வாசிச்சுட்டு வரேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, சின்ன வயசில் ஜாஸ்தி விளையாட விடலை எங்கப்பா! அதனால் வாய்ப்புக் கிடைக்கும்போது விளையாடினா என்ன தப்புங்கறேன்? :)))))

      Delete
  18. நானும் அந்த காலத்தில் கோபால், லோட்டஸ்.டீபேஸ் போன்றவைகளை கற்றுக் கொடுத்தேன் ஆனால் அப்ப நானே ததிங்கனத்தோம் என்று ஆடிக் கொண்டிருந்தேன் அப்போது உங்களை போல உள்ள மாணவர்கள் அதிக கேள்விகள் கேட்டால் அவர்கள் எழுதிய புரோகிராமை ரொம்ப பாஸ்டாக டெலீட் செய்துவிட்டு அந்த புரோகராம் கரப்ட் ஆகிவிட்டது அதனால் மீண்டு அதை எழுது என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவேன் அவன் அதை மீண்டும் டைப் பண்ணி முடிப்பதற்குள் அவனுக்கு ஒதுக்கிய டைம் முடிந்துவிடும் இரவு நேரங்களில் வரும்மாணவர்கலுக்கு பிசிமேண் கேம் போட்டு விளையாடுங்கள் என்று சொல்லிவிட்டு போய்விடுவேன் இப்படித்தான் நான் அந்த காலத்தில் சொல்லிக் கொடுத்தேன்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, வாங்க மதுரைத் தமிழரே, நல்லா ரசித்தேன் நீங்க சொன்னதை! ஆனால் ஒண்ணு! நீங்க ததிங்கிணத்தோம் ஆடினதை கடைசி வரை ரகசியமா வைச்சிருந்திருக்கீங்களே! அங்கே தான் நீங்க நிக்கறீங்க! :)))))

      Delete
  19. ஆசிரியர் எதிரே எதிர்த்துப் பேசக் கூடாதுனு மரியாதை!//

    ஆமாம் ஆமாம் அப்பப்ப குழந்தை குறும்பு பண்ணாம க்ளாஸ்ல நல்ல பிள்ளையா இருக்கனுமில்ல!!!!! ஹிஹிஹிஹி...

    //இணையம் விரிந்தது கூடவே என் கனவுகளும்///

    ஆஹா!!! அக்கா பின்னால யாரும் வெள்ளை கவுன் போட்டுட்டு லல்லாலலலா லுலுலுல்ய்ல்ய்லு தேவதைகள் வந்தாங்களா?!!!! ஹிஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, இது என்ன டூயட்டா பாடிக் கொண்டு கனவு கண்டேன்! எல்லாம் கணினி பற்றிய கனவுகளாக்கும். எனக்கு அங்கே வேலை கிடைக்குது! இங்கே போறேன்! நீ தான் இதை முடிச்சுக் கொடுக்கணும்னு சொல்றாங்க! இப்படியான கற்பனைகளுக்கா பஞ்சம்! :))))

      Delete
  20. //
    நான் காற்று வாங்கவில்லை, கணினி கற்கச் சென்றேன்!//

    அப்போ கணிணி கற்கப் போய், என்ன வாங்கி வந்தீங்க?:)

    ReplyDelete
    Replies
    1. தீர்க்கதரிசி, கணினி கற்கப் போய் கணினியையே பின்னர் வாங்கினோம்.

      Delete
  21. காலம் எவ்ளோ மாறிவிட்டது பாருங்கோ... இப்போ கொம்பியூட்டர் தெரியாவிட்டால், எந்த வேலையும் கிடைக்காது எனும் நிலைமை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இங்கேயும் கணினி அறிவு இருப்பவர்களுக்கு நல்ல தேவை இருக்கிறது. அதிலும் சில மருத்துவமனைகளில். நினைச்சுப்பேன், போயிடலாமானு! ஆனால் குடும்பம் இழுக்கும்!

      Delete
  22. //அவர் சும்மா இருக்காம, சிபியுனா ஃபுல் ஃபார்ம் என்னனு கேட்டு வைக்க, அதைக் கேட்டுக்கலையேனு திகைச்ச நான், . //

    ஹா ஹா ஹா சூப்பர்... அப்பவும் சரி இப்பவும் சரி, கீசாக்கா என்னதான் வாய் காட்டி ஓவரா பில்டப்பூக் குடுத்தாலும், மாமாவை வெல்ல முடியாமல்தான் அவதிப்படுறா புவஹா புவஹா...:))

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எனக்கு துரோகி பக்கத்திலேயே தான்! தீர்க்கதரிசி, அதிரடி, பூசார், செஃப், புலவர், ஞானி, ஸ்வீட் 16 எனப் பொய் சொல்லிக் கொண்டு இருக்கும் அதிரடி தான்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))))

      Delete
    2. நோஓஓஓஓஓ ஐ ஆம் யுவ ஃபிரெண்ட் கீசாக்காஆஆஆஆஆஆஆஆ:) ஹா ஹா ஹா:)..

      Delete
    3. ஹாஹஹா! அதிரடி, நல்லா மாட்டிக்கொண்டீங்க! :))))

      Delete
  23. mouse missing என்ற மெசேஜ் பார்த்தவுடன் நீங்கள் dell கம்ப்யூட்டரில் mouse வேலை செய்யாதது பற்றி ஒரு பதிவு எழுதியது நினைவில் வந்தது. மாமா இடையிலே இடையிலே நல்லாத்தான் ஆடிட் பன்றார்.
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. மௌஸின் ரிசீவர் மாறிப் போயிருந்திருக்கு! அதனால் அப்போப் பிரச்னை கொடுத்திருக்கு. பின்னர் மாற்றியவுடன் சரியாகிவிட்டது. அதோடு புது மௌஸும் வாங்கினேன். மாமாவோட வேலையே ஆடிட் தானே! அதைத் தானே செய்தாகணும்! :))))

      Delete
  24. இதையே மெகா சீரியல் பதிவாக்குங்கள் சுஜாதா பாஷையில் ஜல்லி அடிப்பது போல

    விஸ்வா

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, விஸ்வா, அப்போ அப்போ வந்து தலையைக் காட்டிட்டுப் போறீங்க. நன்றி.

      Delete
  25. தலைப்பு அருமை.
    நான் "கற்கை நன்றே "என்ற தலைப்பில் எழுதினேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி! அப்படியா? படிச்சிருப்பேனானு நினைவில் இல்லை.

      Delete
  26. ” கற்றல் நன்றே கற்றல் நன்றே
    வலைக் கல்வி கற்றல் நன்றே”

    நானும் வலைக் கல்வி கற்றுக்கொள்கிறேன். முதல்குரு என் பேத்தி. விளம்பரத்தில்
    ’மெளசைப்பிடி பாட்டி’ என்று பேத்தி சொல்வதும், பாட்டி ’எலியையா?’ என்று பயந்து, பின்
    சிரிப்பது போல் வரும். அது மாதிரி நானும் என் பேத்தியிடம கணிப்பொறி விளையாட்டு,
    ஒவியங்களுக்கு கலர் கொடுத்தல் எல்லாம் கற்றுக் கொண்டேன்.

    பின் மகள், மகன், மருமகள் இவர்களிடம் கற்றுக் கொண்டேன்.
    சார் கணினியை உங்களை போல் வகுப்புக்கு சென்று மூன்று மாதம் கற்றுக் கொண்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நமக்கு நாமே தான் குரு! எங்க வீட்டில் பையருக்கோ, மகளுக்கோ இதெல்லாம் சொல்லிக் கொடுக்கும் அளவுக்குப் பொறுமை கிடையாது. மாப்பிள்ளையை எப்போவானும் கேட்பேன். அப்புவுக்குச் சொல்லிக் கொடுக்க ரொம்பப் பிடிக்கும். தாத்தாவுக்கு ஐபாட் பயன்படுத்த அது தான் சொல்லிக் கொடுத்தது!

      Delete
  27. //நேத்து விளையாடின விளையாட்டை இன்னிக்கு விளையாட முடியாது போலிருக்கேனு மனசை நொந்து கொண்டு கம்ப்யூட்டரின் ஸ்விட்சை அழுத்தினேன்.//
    அனுபவம் மிக அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அரசு, ஹாஹா, கணினி வாங்கிய புதுசில் விளையாட்டுத் தான் அதிகம்! அப்புறம் மெல்ல மெல்லப் பதிவுகளைப் படிக்க ஆரம்பிச்சு வலைப்பக்கம் ஆரம்பிச்சு ஆங்கிலத்தில் எழுதலாமானு ஆரம்பிச்சுப் பின்னர் தமிழுக்கு வந்தேன்.

      Delete
  28. நான் பேசிக் கற்றுக் கொண்ட காலத்தில் என் தோழி ஒருத்தி தன் அலுவலக நண்பரிடம் "இவள் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் படிக்கிறாள்" என்று அறிமுகப்படுத்தினாள்.அவர் "என்ன லாங்குவேஜ்?" என்று கேட்க, நான் "இங்கிலீஷ்தான்" என்று சொன்னதை ஏதோ ஜோக் அடிக்கிறேன் என்று நினைத்து கொண்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, நாமளும் அப்படிச் சொல்லி இருக்கோமுல்ல! என்ன லாங்வேஜ்னு எதிர்வீட்டுப் பெண் கேட்க,
      "ஏன், இங்கிலீஷ் தான்! வேறே லாங்க்வேஜிலும் படிக்கலாமா!" னு கேட்ட அறிவாளியாக்கும் நாங்க!

      Delete
  29. முதன் முதலில் என் மூத்தமகன் கணினி பயிற்சி கற்றுக் கொடுக்கும் computer point ல் மார்கெட்டிங் ஆஃபிசராகத்தான் இருந்தான்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா!அப்படியா?

      Delete
  30. நான் நானாக கணினி இயக்கியதே வலை ஆரம்பித்தபிறகுதான் 2010 ல் சரிதானே

    ReplyDelete
    Replies
    1. ஐயா, நான் 2000 ஆம் ஆண்டிலேயே கணினி கற்க ஆரம்பித்துப் பின்னர் ப்ரவுசிங் சென்டருக்கு அடிக்கடிபோய்ப் பையர், பெண்ணுடன் கணினி மூலம் மெயில் எல்லாம் கொடுத்து அதுக்கு பதில் வந்ததும் அடைந்த ஆனந்தம் இருக்கே! அதுக்கு ஈடு, இணை இல்லை!அப்புறமாப் பையர் படிக்க அம்பேரிக்கா போகப்போறேன்னு சொன்னதும் அவருக்குத் தேவையான ஏற்பாடுகளை எல்லாம் கணினி மூலமாவே முடிச்சுக் கொடுத்தேன். இத்தனைக்கும் அப்போ வீட்டில் கணினி இல்லை!

      Delete
  31. உங்களுக்கு ஒரு செய்தி கணினியில் என்னவெல்லாம் செய்யலாமென்னும் அறிவு கொண்டே நான் திருச்சியில் கம்ப்யூட்டர் மாணவர்களுக்கு கைடாக இருந்ருக்கிறேன் அது குறித்து ஒரு பதிவும் வெளியிட்டிருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? சுட்டி கொடுங்க ஐயா, படிக்கிறேன்.

      Delete
    2. புதுப் பதிவா கீதா. நகைச்சுவை துள்ளி ஓடுகிறதே.
      வெகு வெகு சுவாரஸ்யம். என் கணினிப் போராட்டம் 1997இல் ஆரம்பித்தது.

      நீங்கள் பொறுமையாக எல்லாவற்றையும் கற்றிருக்கிறீர்கள்.
      இப்பொழுது நல்ல கில்லாடி எழுதுவதில். நீங்களே எல்லாம் சொல்லிக் கொடுக்கலாம். உங்களை நினைக்கும் போது மிகப் பெருமையாக இருக்கிறது மா.



      Delete
    3. நீங்க வேறே வல்லி.பழைய பதிவு! தூசு தட்டி எடுத்துப் போட்டிருக்கேன்.நீங்களும் பழைய பதிவுகளில் கருத்துச் சொல்லி இருக்கீங்க! தொடர் பதிவும் எழுதி இருக்கீங்க! உங்களாட்டமா நான் 97 இல் எல்லாம் ஆரம்பிக்கலை! 2000 ஆம் ஆண்டு!

      Delete
  32. வணக்கம் சகோதரி

    கணினி பற்றி நன்றாக ரசித்து எழுதியிருக்கிறீர்கள். சில இடங்களில் வாய் விட்டு சிரிக்கும்படியும் எழுதி உள்ளீர்கள். ரசித்தேன். ஆனாலும் தைரியமாக கற்றுத் தந்த ஆசிரியரை கலாய்த்து இருக்கிறீர்கள்.தங்களது கணினி கற்ற பதிவு மிகவும் நகைச்சுவையாக உள்ளது. தொடர்ந்து வாசிக்க ஆவலாக உள்ளேன்.

    எங்கள் வீட்டில் என் இளைய மகன் எமசிஏ படிக்கும் போதுதான் கணினி வாங்கினோம். (அவர் படிப்பின் தேவைக்காக) அது வந்த புதிதில் அதை தொடவே எனக்கு பயம். எதையாவது தொட்டு ரிப்பேர் ஆகி விட்டால் என்ன செய்வது என்ற பயம்.. அதன் பின் அவர்தான் எனக்கு குரு. எப்படி பயன்படுத்துவது எனக்கற்று தந்தவர். முதலில் நானும் எலியை கையாண்டு கேம்ஸ் விளையாடி, கதைகள் படித்து, பின் எழுத கற்று, என என்னை பதிவுலகத்திற்கு அறிமுக படுத்தியவர் அவர்தான்.

    அப்புறம் அவர் வாங்கிய மடிக்கணினியும் பழகினேன். அதற்கு எலி இல்லை. கைவிரல்கள் சிறிது தவறிழைத்து விட்டாலும் எழுத்துக்கள் காணாமல் போய் விடும். எனக்கு அது சரியாக வரவில்லை.

    இப்போது இரண்டு வருடமாக, அதற்கு வாய்ப்பளிக்காமல், வேறு வழியுமின்றி, டேப்பிலும் கைபேசியிலும், எழுதி, படித்து வருகிறேன். சிரமமாக இருந்தாலும் ஆர்வத்தினால்,பழகி விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  33. நான் கணினி கற்றுக்கொள்ள எனும் செல்லவில்லை.

    எல்லாம் கேஜி!

    சொல்லி இருக்கேன் ஆல்ரெடி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஶ்ரீராம்,உங்க பதிவின் சுட்டி கொடுத்திருக்கேன். அதில் சொல்லி இருக்கீங்க!

      Delete
  34. சிபியு பத்தில்லாம் நான் அப்போ கவலைப்பட்டதே இல்லை! மானிட்டர்... மானிட்டர்.... மானிட்டர்! அதில்தான் எல்லாம்...

    ReplyDelete
    Replies
    1. @ஶ்ரீராம், ஹாஹாஹா, ஒரு காலத்தில் மானிடரைத் தான் கம்ப்யூட்டர்னு நினைச்சதெல்லாம் உண்டு.அப்புறமா அ.வ.சி. தான்.

      Delete
  35. //இவர் நம்மைவிடக் கூச்ச சுபாவம் இல்லாதவரா இருப்பார் போலிருக்கே!//

    ஹா... ஹா.. ஹா... சொன்னாலும் சொன்னேன்.. அதற்காக இப்படியா! நான் சொன்னதற்கு காரணம் அப்போது சீனு! சீனு ஞாபகம் இருக்கா?

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், நல்லா நினைவு இருக்கு! சீனு, ஸ்கூல் பையர், ஆவி, கணேஷ் பாலா எல்லாம் கலக்குவாங்க! சீனு வெளிநாடு போனதும் அதிகம் எழுதறதில்லைபோல!

      Delete
  36. நான் கம்பியூட்டர் கற்றுக்கொள்ளும் நேரம். (அல்லது அதில் விளையாடும் விஷயம்) பற்றி எல்லாம் கற்றுக்கொண்டவை பற்றி அவசரப்பட்டு அலுவலகத்தில் மற்றும் வெளியே எங்கேயும் மூச்சு விடவில்லை... இதற்கு என் கூச்ச சுபாவம் மட்டும் காரணம் இல்லை, ஜாக்கிரதை உணர்வும்தான்!

    ReplyDelete
    Replies
    1. ஏன்? வெளியே தெரிஞ்சா என்னவாம்? ஏதேனும் கட்டுப்பாடு உண்டோ?

      Delete
    2. உண்டு. கட்டுப்பாடுண்டு.

      கட்டுப்பாடு எனக்குதான்! அனாவசியக் கிண்டலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்கிற கட்டுப்பாடு!

      Delete
    3. pacman மற்றும் space invaders, prince of persia போன்ற விளையாட்டுகள் விளையாடினீர்களா?
      Jayakumar

      Delete
    4. அந்த மாதிரி விளையாட்டெல்லாம் கணினி, மொபைலில் இருக்குன்னே தெரியாது! அந்தப் பக்கமெல்லாம் போனதே இல்லை. என்னோடது குழந்தைகள் விளையாட்டு. பெயின்ட், ப்ரஷ் வைத்துக்கொண்டு வரைந்தோ கோலம் போட்டோ பார்ப்பேன். அவ்வளவு தான்! இந்த கணினி விளையாட்டுகள் பக்கமே தலை வைச்சுக்கூடப் படுப்பதில்லை.

      Delete
  37. //அந்த மாதிரி விளையாட்டெல்லாம் கணினி, மொபைலில் இருக்குன்னே தெரியாது!// எங்கே இருக்குன்னே தெரியாது என வந்திருக்கணும். அந்த வார்த்தை விடுபட்டு விட்டது. :(

    ReplyDelete