எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, March 08, 2019

சிவராத்திரிப் படங்கள் தாமதமாக!

எல்லோரும் சிவராத்திரிப் பதிவுகள் போட்டிருந்தார்கள். நான் சிவராத்திரி பற்றி எல்லாம் எழுதிட்டேன். திரும்ப மீள் பதிவுகள் போடுவதில் விருப்பம் இல்லை. ஆகவே போடுவதில்லை. தவிர்க்க முடியாமல் சிலவற்றைப் போட வேண்டி இருந்தது. அதல்லாமல் எல்லாவற்றையும் மீள் பதிவாகப் போட்டால் புதுசாக எழுத ஒன்றுமே இல்லையா என நினைப்பீங்களே! அதனாலும் போடுவதில்லை. 

சிவராத்திரி அன்றைய தினம் கூட்டம் காரணமாகக் கோயில்களுக்குப் போவது இல்லை. வீடு தான் அன்று கோயில். விரதம் மட்டும் கடைப்பிடிப்போம். ஆகவே தற்காலங்களில் பதிவெல்லாம் போடுவது இல்லை! அதனால் என்ன? என்னைத் தேடிக் கோயில் விசேஷங்களே வந்து விட்டன! கருவிலி பற்றி அடிக்கடி எழுதிட்டு இருக்கேன். அனைவருக்கும் தெரியும்.கோயில் பற்றியும் அனைவரும் அறிவீர்கள் இல்லையா? திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களால் புதுப்பிக்கப்பட்டுக் கும்பாபிஷேஹங்கள் கண்டகோயில். இப்போது இந்தக் கோயிலில் எல்லா நாட்களும் சிறப்பாக எல்லாக் கால வழிபாடுகளும் நடந்து வருகிறது.  இந்த வருஷம் சிவராத்திரி அன்றைய வழிபாட்டுக்கான அழைப்பு வந்தது. ஆனால் போக முடியாது என்பது தெரியும். நான் சிவராத்திரி வழிபாடு ஓரிரு முறை மதுரையில் பார்த்திருக்கேன். சிவராத்திரி வழிபாடு முதல் இரண்டு காலங்களும், ஐப்பசி மாத அன்னாபிஷேஹமும் மதுரையில் பார்த்திருக்கேன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு திருவிழாவுக்கும் கோயிலுக்குப் போவது என்பதே மதுரையோடு போயாச்சு! காலமும், வாழ்க்கையும் வெவ்வேறு திசைகளில் இழுத்துச் சென்று விட்டன.  இம்முறை சிவராத்திரிக்குப் போகவில்லையே தவிர அங்கு நடந்த நிகழ்ச்சிகளின் சில படங்களைத் திரு கிருஷ்ணமூர்த்தியின் சகோதரர் ஆன திரு ஜி. கண்ணன் அவர்கள் அனுப்பி வைத்திருக்கிறார். அவற்றை இங்கே பகிர்கிறேன்.




கோயிலின் இந்த நுழைவாயிலை அனைவரும் பார்த்திருப்பீர்கள் என்றாலும் இது இரவு நேரத்தில் விளக்கு அலங்காரங்களுடன் காணப்படுகிறது.



கருவறைக்கு மேலுள்ள விமானமே உயரமாகக் கட்டப்படும் சோழநாட்டுக் கலைப்படியே இந்தக் கோயிலும் இருந்தது. ஆனால் திரு கிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்ற பின்னர் இங்கே ராஜ கோபுரம் தேவை என உணர்ந்து ராஜகோபுரம் கட்டினார். அந்த ராஜகோபுரம் தான் மேலே காணப்படுவது. இதையும் பார்த்திருப்பீர்கள்.

அர்த்த மண்டபத்துக்கு முன்னே உள்ள மஹா மண்டபம். இங்கே வேதங்கள் ஓதுவோர்களும், தேவார, திருவாசகம் ஓதுவார்களும் ஒருங்கே அமர்ந்து அவரவர் பணியைச் செய்து வருகின்றனர்.


இது எந்தக் கால வழிபாடு எனத் தெரியவில்லை.  ஏதோ ஒரு கால வழிபாடு முடிந்த பின்னர் காட்சி கொடுக்கும் இறைவன்.

நாதஸ்வரம் இப்போது கோயில்களில் இருந்து மறைந்து வருகிறது  என்பது வருந்தத் தக்க செய்தி. ஆனாலும் பழமைப் பெருமை பெற்ற மீனாக்ஷி அம்மன் கோயிலிலும், ஶ்ரீரங்கம் அரங்கன் கோயிலிலும் இன்னமும் ஒவ்வொரு கால வழிபாட்டிலும் நாதஸ்வர இசையால் அம்மையையும், அப்பனையும், அதே போல் அரங்கனையும் நாச்சியாரையும் மகிழ்விக்கின்றனர். எல்லாக் கோயில்களிலும் நாதஸ்வரம் சிறப்புப் பெற வேண்டும். பழைய நிலைமைக்கு மீள வேண்டும். ஆனால் கிராமங்களையும் பழமை வாய்ந்த கோயில்களையும் விட்டு நகரத்துக்குக் குடி பெயர்ந்த பல நாதஸ்வர வித்வான்கள் சொல்லுவது இங்கே விவரிக்க முடியாத வேறு சில காரணங்கள். விரைவில் எல்லாம் மறந்து நாதஸ்வரக்கலை புத்துயிர் பெற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.


திரு கிருஷ்ண மூர்த்தி அவர்களால் நடைபெறும்  வேத பாட சாலையின் மாணாக்கர்கள் இந்த வழிபாட்டில் பங்கு பெற்ற நிகழ்வு படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.




76 comments:

  1. இப்போது இந்தக் கோயிலில் எல்லா நாட்களும் சிறப்பாக எல்லாக் கால வழிபாடுகளும் நடந்து வருகிறது.//

    அட சூப்பர் அப்போ அதுக்கு முன்ன ரெகுலரா இல்லாம இருந்ததோ...உங்களைப் போல வழிபாடுகள் நடத்தும் சமயங்களி மட்டும், விசேஷ நாட்களில் மட்டும் கோயில் திறக்கப்படு பூஜைகள் என்று..

    கோயில் படங்கள் நன்றாக இருக்கின்றன. நுழைவு வாயில் நல்ல பெரிதாக இருக்கிறதே!! கோபுரம் ஜொலிக்கிறது!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, கருவறை விமானத்தை ஒருமுறை எடுத்துப் போடுகிறேன். இப்போக் கோயில் நுழைவாயில் இருக்குமிடம் எல்லாம்புதர்களாக இருக்கும்.கருவறைக்கு அருகே மட்டும் கொஞ்சம்போல சுற்றுப்பாதை இருந்தது.அதுக்கு வெளியே கோயில் கதவு கொஞ்சம் தள்ளி. உள்ளே நுழையவே முடியாது. பரம்பரை குருக்கள் தனக்கு வந்த மானியத்தில் ஒருவேளைக்கு மட்டும் ஏதோ அபிஷேஹம்னு செய்து (சிவன் அபிஷேஹப்பிரியர், விஷ்ணு அலங்காரப்பிரியர்) சாதம் நிவேதனம் செய்து ஒப்பேத்துவார். அன்னிக்கு அவங்க வீட்டிலும் அதான் சாப்பிட! இது எனக்குத் தெரிந்து நான் கல்யாணம் ஆகிப் போனதில் இருந்து 25,27 வருடங்களுக்கு இப்படித் தான் இருந்தது. அந்தக் குருக்கள் போய்ப் பின்னர் அவர் கடைசிப் பிள்ளை இந்தக் கோயில் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சமயம் தான் 90 களில் திரு கிருஷ்ண மூர்த்தி புனர் உத்தாரணம் செய்தார். கோயிலுக்கென நிலங்களும் இருந்தன. ஆனாலும் அதில் பயிர்செய்தவர்கள் எதுவும் கொடுக்கவில்லை. இப்போது தான் எல்லாம் ஒழுங்காக சுமார் 20 வருடங்களாக நடைபெற்று வருகிறது.

      Delete
  2. விஞ்ஞான வளர்ச்சி எலக்ட்ரானிக் கெட்டிமேளம் எல்லா கோவில்களிலும் செட்டிங் ஆகிவிட்டது.

    நாதஸ்வரக்கலையும் அழியும் நிலையில் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, நீங்க சொல்வது சரி தான். இப்போ எல்லாக்கோயில்களிலும் எலக்ட்ரானிக் கெட்டி மேளம் தான்! :(

      Delete
  3. கிருஷ்ண மூர்த்தி அவர்களைப் பற்றி நீங்க இங்கு சொன்னதும், ராயசெல்லப்பா சார் எழுதிய புத்தகத்தின் மூலமும் (அதை நான் இன்னும் ஃபுல்லும் வாசிச்சு முடிக்கலை) தெரிஞுக்க முடிந்தது.. கருவிலி பத்தி நீங்க அப்பப்ப எழுதினதுனால அதுவும்...நினைவிருக்கு. வாயில், அம்மன் படம் நீங்க போட்டிருந்தீங்களே...நீங்க எடுத்திருந்த அம்மன் இன்னும் கொஞ்சம் கிட்ட எடுத்திருந்தீங்க...அந்த அர்த்த மண்டபத்துலருந்துனு நினைக்கிறேன்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, ராய.செல்லப்பாவின் அந்தப் புத்தகத்தைத் தான் நான் விமரிசித்தும், திரு கிருஷ்ணமூர்த்தி பற்றிய தகவல்கள் பரிமாற்றமும் கொடுத்து வந்தேன். செல்லப்பாவிடமும் சொன்னேன்.ஆனால் அவர் வேலை மும்முரமத்தில் கவனிக்கவில்லை என நினைக்கிறேன். அம்மன் தனி சந்நிதி! சிவன் கோயில் பிரகாரத்திலிருந்து ஓர் கதவு வழியாக அம்மன் கோயிலுக்குப்போகலாம். ஆனாலும் வெளியேயும் அம்மன் கோயில் செல்லத் தனி வழி இருக்கிறது. சிவன் கோயிலுக்கு வராமலேயே அம்மனை மட்டும் தரிசித்து விட்டுச் செல்லும்படி இருக்கிறது. இப்போது அந்தக் கதவை நிரந்தரமாக மூடி வைத்திருப்பதால் சிவன் கோயில் பிரகாரம் வழியே உள்ள கதவின் மூலமே அம்மன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். அம்மனை நான் அர்த்தமண்டபத்தில் எடுக்கவில்லை. அதற்குச் செல்லும் படிகளின் கீழே நின்று கொண்டு எடுத்தேன். அந்தப் படிகளில் ஏறினால் வழுக்குகிறது என்பதால் ஏறுவதில்லை.

      Delete
  4. சிவராத்திரி கூடதான் வருஷா வருஷம் வருகிறது... அதை மீள் சிவராத்திரி என்றா சொல்கிறோம்! ஹிஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. ஆமா இல்ல, ஶ்ரீராம், ஹிஹிஹி, ஒரு காலத்தில் மீள் பதிவே கூடாது எனக் கொ"ல்"கை வைத்திருந்தேன். அதை இப்போதெல்லாம் தளர்த்தி விட்டேன். :))))

      Delete
    2. //ஒரு காலத்தில் மீள் பதிவே கூடாது எனக் கொ"ல்"கை வைத்திருந்தேன். அதை இப்போதெல்லாம் தளர்த்தி விட்டேன். :))))//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

      மீள் பதிவெனப் போடும்போது, அப்படியே போஸ்ட்டை மட்டும் கொப்பி பேஸ்ட் பண்ணிப் புதுப் போஸ்ட்டாக்கிடுவீங்களோ?

      Delete
    3. ஆமாம், தீர்க்கதரிசி, படங்கள் போட்டு அவையும் நன்றாக இருந்தால் அவற்றைத் தனியே சேமித்துப் போடுவேன். கமென்ட்ஸை எல்லாம் போட்டதில்லை. வல்லி பழைய பதிவுகளைக் கமென்ட்ஸோடு போடுவாங்க! இப்போ அவங்க ப்ளாக் க்ளோஸ்ட் ப்ளாகாப் பண்ணிட்டாங்க. என்னால் அதில் நுழைய முடியலை. அவங்க கொடுத்த லிங்கும் வேலை செய்யலை! :)))))

      Delete
    4. //இப்போ அவங்க ப்ளாக் க்ளோஸ்ட் ப்ளாகாப் பண்ணிட்டாங்க. என்னால் அதில் நுழைய முடியலை.//

      ஆமாம், எனக்கும் ஒரு மெயில் வந்தது. ஆனால் அதை க்ளிக்கினால் வேலை செய்யவில்லை.

      Delete
    5. அட! அப்படியா?

      Delete
  5. எனக்குத்தெரிந்து மதுரை போல திருவிழாக்களைக் கொண்டாடும் பெரிய ஊர் வேறில்லை!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஶ்ரீராம், மக்கள் ரசனையோடு திருவிழாக்களைக் கொண்டாடுவார்கள். இங்கேயும் இருக்குத்தான். ஆனால் ரங்கனார் எப்போவும் கூட்டத்தின் நடுவிலேயே இருப்பார்! :))))

      Delete
  6. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செல்லும்போது சிலமுறைகள் அங்கே எம் பி என் சேதுராமன்-பொன்னுசாமி நாதஸ்வரம் வாசித்துக்கொண்டு வருவதைப் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. முன்னாடி அதாவது என் கல்யாணம் வரையிலும் மேளக்காரப் பொன்னுத் தாயி தான் நாதஸ்வரம். அவரைத் தவிர்த்துச் சில நாயனக்காரர்களும் உண்டு. ஆடி வீதி திருவுலா, உள்ளேயே ஊஞ்சல், ஒவ்வொரு கால பூஜைக்கு அவர்கள் தான் வாசிப்பார்கள். ஆவணி மூல உற்சவம், சித்திரைத் திருவிழா, அஷ்டமிச் சப்பரம் போன்றவற்றுக்குப் பொன்னுத் தாயி! பின்னால் ரொம்பக் கஷ்டப்பட்டுக் காப்பாற்ற ஆள் இல்லாமல் தவித்தார்.

      Delete
    2. நாதஸ்வரமா, நாகஸ்வரமா என்று எனக்கு முன்னெல்லாம் சந்தேகம் வரும்!

      Delete
    3. அடி வயிற்றில் இருந்து நாதம் ஸ்வரமாகக் கிளம்புவதால் நாதஸ்வரம் எனப் பெயர் என்பதாக ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கேட்டேன் ஶ்ரீராம்!

      Delete
  7. படங்கள் யாவும் அழகாய் இருக்கின்றன. குறிப்பாய் அந்த ராஜகோபுரம் படமும், திருவாசகம் ஓதும் படமும்.

    ReplyDelete
    Replies
    1. ஃபோட்டோகிராஃபர் யாராவது எடுத்திருப்பாங்க! ஹிஹிஹி, நல்லவேளையா நாங்க போகலை! நல்ல படங்களாகக் கிடைச்சிருக்காது! :))))

      Delete
    2. பொய் சொல்லத் தெரியாத இந்த குணம் பாராட்டத் தக்கது கீதா சாம்பசிவம் மேடம்

      Delete
    3. ஹிஹி, நெல்லை, நீங்க பாராட்டறீங்க! ஆனால் எங்க வீட்டில் முக்கியமாப் புக்ககத்தில் என்னோட இந்த குணமே அவங்களுக்கு அலர்ஜி! :)))))))))))

      Delete
    4. கீசா மேடம்... சும்மா கலாய்ப்புதான். உங்களுக்கு நிறைய திறமைகள் உண்டு. எனக்குத் தெரியும். மகளிர் தினத்தில் பாராட்டறேன்.

      Delete
    5. நெல்லைத்தமிழரே, படங்கள் நான் எடுப்பது சுமார் தான் என எனக்கு நன்றாகவே தெரியும். அதைச் சொல்ல வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு. ஆகவே நீங்க ஏதோ தப்பாய்ச் சொல்லிட்டதா நினைச்சுக்க வேண்டாம். சடார்னு ஜகா வாங்கிட்டீங்களே! :))))))) என்னோட குறையைக் கண்டவர்கள் தான் சுட்டிக்காட்ட முடியும்.:))))))

      Delete
    6. //மகளிர் தினத்தில் பாராட்டறேன்.//

      நான் எல்லா தினத்திலும் பாராட்டுறேன்....

      ஹிஹிஹி... நாராயண....

      Delete
    7. ஸ்ரீராம்... சும்மா எல்லா வேளையிலும், எல்லா நாட்களிலும், 'உன் சமையல் அருமை' என்று மனைவிட்ட சொல்லிப் பாருங்க... அவங்க உங்களை நம்ப மாட்டாங்க. முக்கியமான சமையலின்போது அதே வார்த்தையைச் சொன்னா நம்புவாங்க. எல்லாம் ஒரு தெக்கினிக்குதான்.

      Delete
    8. ஶ்ரீராம், உங்க பாஸ் உங்களோட பாராட்டை நம்பறாங்களானு கேட்க வந்தேன். அதையே நெல்லை வேறே விதமாக் கேட்டுட்டார்.

      Delete
    9. //ஃபோட்டோகிராஃபர் யாராவது எடுத்திருப்பாங்க! ஹிஹிஹி, நல்லவேளையா நாங்க போகலை! நல்ல படங்களாகக் கிடைச்சிருக்காது! :))))//

      அப்போ இந்தப் படங்கள் எல்லாம் கீசாக்கா எடுக்கேல்லையோ கர்ர்ர்ர்ர்:) கலர்ஃபுல்லாக படங்கள் ஜொலிக்கும்போதே ஜந்தேகப்பட்டேன்ன்ன்:).. கீசாக்காதான் ஒரே இடத்தில இருந்துகொண்டு ஒம்பேது படமெடுப்பவராச்சே:)) ஹா ஹா ஹா...

      Delete
    10. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நானெல்லாம் அப்போதைய ஃபில்ம் மாற்றும் காமிராவையே அபூர்வமாத் தான் பார்த்திருக்கேன். முன்னெல்லாம் கல்யாணங்களில் ஃபோட்டோ பிடிப்பது அபூர்வம். எப்போவானும் சில கல்யாணங்களில் நடக்கும் ரிசப்ஷன் ஃபோட்டோ அல்லது பெண், மாப்பிள்ளையைத் தனியாய் வைத்து எடுக்கும் ஃபோட்டோ என்றே பார்த்திருக்கேன். என் மாமாக்கள் கல்யாணங்களில் இருந்து தான் எங்க வீடுகளில் கல்யாண ஃபோட்டோக்கள் ஆரம்பித்தன. அறுபதுகளில் இது ஆரம்பித்தது. என் கல்யாணத்திலும் ஃபோட்டோ எடுத்தார்கள். ஆனால் ஆல்பம் போடவில்லை. இப்படி இருக்கையில் எனக்கு ஃபோட்டோ எடுக்கும் வாய்ப்பே கிடையாதே! ஆனால் எங்க பொண்ணு, பையர் எல்லாம் நன்றாகப் படம் எடுப்பார்கள். அதிலும் பொண்ணு ரொம்பவே நன்றாக எடுப்பாள்.

      Delete
  8. எங்க ஊர்ல கோயில்ல ஒவ்வொரு பூஜை முடியும் போதும் நாதஸ்வரம் தவில் வாசிப்பதுண்டு. ராத்திரி 8.30 மணிக்கு சத்தம் கேட்டுச்சுனா ஓகே இன்று குட்னைட் சொல்லிட்டார் நமக்கு..மணி 8.30 நு தெரிஞ்சுரும்.

    அப்புறம் நாதஸ்வரகாரர் என்று இல்லாட்டாலும் ஒரு சின்ன நாதஸ்வரத்தில் ஒத்து ஊத வைச்சுருப்பாங்களே அது வாசிப்பவர் இருந்தார். அவர் வாசிப்பார். இப்பவும் இருக்கும்னு நினைக்கிறேன்.

    நாதஸ்வரக் கலை வளர வேண்டும். அக்கலைஞர்களும் வாழ வேண்டும். கிராமங்கள்ல வாசிக்கப்படனும்.

    இப்பல்லாம் ஒவ்வொரு பூசைக்கும் ஆட்டோமேட்டிக்கா ஒரு ட்ரம் அடிக்குமே அதை இயக்கறாங்க பல கோயில்கள் ல. நாதஸ்வரம் தவில் இருந்தாதான் அழகு! வளரனும் என்று வேண்டுவோம்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, உங்க ஊர் எந்த ஊர்? நீங்க பல ஊர்வாசியாயிற்றே? இங்கே சொல்லி இருப்பது நாரோயிலா, திநேலியா, கேரளமா, இலங்கையா? அல்லது சென்னையா, அல்லது இப்போ இருக்கும் "பெண்"களூரா? இஃகி, இஃகி!

      Delete
    2. கீதா ரங்கன் வேற எந்த ஊரைச் சொல்லியிருப்பாங்க.. திருவண்பரிசாரம்-திருப்பதிசாரமாத்தான் இருக்கும். அந்த காலத்துக்கு அப்புறம் வேற எந்த ஊர்ல கோயிலுக்குப் பக்கத்தில் நாதஸ்வரம் கேட்கும் தூரத்தில் இருந்திருப்பாங்க...

      Delete
    3. இஃகி,இஃஃகி, இஃகி, அப்படியா தி/கீதா?

      Delete
  9. மூலவர் படம் நேர்ல தரிசிக்கற மாதிரி அழகா வந்திருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நேரிலும் மூலவர் அழகாகவே இருப்பார்.

      Delete
  10. சிவராத்திரி மீள் பதிவு சுட்டிகள் தாங்க. கோவில் நடைமுறையைத் தெரிஞ்சுக்கறேன்

    ReplyDelete
    Replies
    1. நான் மீள் பதிவுகளே இப்போ ஐந்தாறு வருஷமாத் தான் போடறேன். போட்டதில்லை. அதிலும் இந்தக் கோயில் சிவராத்திரிப் படங்களே இந்த வருஷம் தான் எங்களுக்கு வந்திருக்கு. பொதுவான சிவன் கோயில் நடைமுறைகளே இந்தக் கோயிலிலும் இருக்கும். ஆகமம் உண்டா எனத் தெரியலை. அடுத்த முறை அதையும் விசாரித்து விடுகிறேன்.

      Delete
    2. நெல்லை, மற்றபடி நான் மீள் பதிவுனு சொன்னது சிவராத்திரிக்காக நான் ஏற்கெனவே எழுதிய சில பதிவுகள். அவற்றை மறுபடி மீள் பதிவாகப் போடுவதில் இஷ்டம் இல்லை என்றேன்.:)))))

      Delete
    3. கீசா மேடம்.. நான் சொன்னது... ஏதோ முதல் கால பூஜை, இரண்டாம் காலம் அப்படிலாம் இரவு முழுதும் விரிவாச் செய்வாங்களாமே

      Delete
    4. முற்காலத்தில் ஆலயங்களில் 12 கால பூஜை கள் நடைபெற்றன. பின்பு அது ஆறு கால பூஜை யாகக் குறுகியுள்ளது. அவை
      1) காலை சந்தி
      2) த்வீதிய கால சந்தி
      3) உச்சிகாலம்
      4) சாயங்காலம்
      5) ராத்திரி சந்தி
      6) அர்த்த ஜாமம். உண்மை நிலை

      விசேஷ நாட்களிலும் மார்கழி மாதத்திலும் உஷத்கால பூஜை, ப்ராதக்கால பூஜை, சிவராத்திரி அன்று பூதராத்திரி, காலராத்திரி, மகாநிசி ஆகிய வேளைகளிலும் சில கோயில்களில் பூஜைகள் நடைபெறுகின்றன.

      Delete
    5. ஓ அதுவா? சிவராத்திரிக்குப் பொதுவாக நான்கு கால பூஜைகள். ஒவ்வொரு காலத்திலும் அபிஷேகத்துக்கு எனத் தனியான பொருட்கள் உண்டு. முதல் காலம் பஞ்ச கவ்யம், தாமரை, வில்வம், தாமரைப் பூக்களால் அலங்காரம், அர்ச்சனை, பச்சைப்பயறில் நிவேதனம் ரிக்வேதப் பாராயணம்

      இரண்டாம் காலம் சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை(கோதுமை ரவை), பஞ்சாமிர்த அபிஷேகம், பன்னீரில் பச்சைக்கற்பூரம் சேர்த்து அரைத்துச் சார்த்துதல். இந்தப் பச்சைக்கற்பூரம் சார்த்துவது காளஹஸ்தியில் பரிகார பூஜைகளில் விசேஷமாகச் சொல்லப்படும்.துளசி அலங்காரம், வில்வார்ச்சனை, பாயசம் நிவேதனம் யஜுர் வேதப் பாராயணம்

      மூன்றாம் காலம் தேன் அபிஷேகம், மறுபடியும் பச்சைக்கற்பூரம் சார்த்துதல்,மல்லிகைப்பூக்களால் அலங்காரம், வில்வார்ச்சனை, எள் அன்னம் நிவேதனம், சாமவேத பாராயணம்

      நான்காம் காலம் கருப்பஞ்சாறு அபிஷேகம், நந்தியாவட்டைப்பூக்கள் விசேஷம், அவற்றால் அலங்காரம், கூடவே அல்லி, நீலோற்பவம், நந்தியாவர்த்தங்களால் அலங்காரம், அர்ச்சனாதிகள், சுத்த அன்னம் நிவேதனம், அதர்வ வேத பாராயணம்

      சிவ பூஜைக்கெனத் தனியான விதி உண்டு. அந்த விதிப்படி பூஜை செய்து ஒவ்வொரு ஜாமத்திற்கும் ஒவ்வொரு முறையில் வழிபாடுகள் நடத்தவேண்டும். பிரளய காலத்தில் ஆலஹால விஷத்தை உண்டு மயங்கிச் சாய்ந்த ஈசனை தேவாதி தேவர்களும் அகிலாண்டேஸ்வரியான அன்னையும் சேர்ந்து பூஜித்த காலத்தையே மஹாசிவராத்திரி என்பார்கள். இந்த இரவில் உலகிலுள்ள அனைத்து லிங்கங்களிலும் ஈசன் லிங்க உருவிலேயே ஆவிர்ப்பவிக்கிறார் ஆகவே நான்கு காலங்களிலும் பூஜைகளை முறைப்படி செய்து வழிபடுகிறோம்.

      Delete
    6. /பூஜைகளை முறைப்படி செய்து வழிபடுகிறோம்.// - அப்போ அன்று வீட்டிலயும் சிவபூஜை இப்படிப் பண்ணுவாங்களா? அன்றைக்கு நீங்க ஏதேனும் கோவிலுக்குப் போயிருந்தீங்களா?

      உங்கள் விளக்கம் எனக்குப் புதிய தகவலைச் சொல்லியது.

      Delete
    7. ஹாஹா, கோயிலில் பூஜைகளை நான்கு காலங்களிலும் முறைப்படி செய்து வழிபடுகிறோம். என எழுதி இருந்ததை நீங்க நாங்க செய்வதாக நினைச்சுட்டீங்க போல! சிவராத்திரிக்கு நான்கு கால பூஜையும் வீட்டில் செய்பவர்களும் உண்டு. பார்த்திருக்கேன். ஆனால் நாங்க பண்ணுவதில்லை.பொதுவான பஞ்சாயதன பூஜையே எடுத்துக்கலை. அப்புறமா விக்ரஹங்களை நிவேதனம் இல்லாமல் வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்புவது முடியாது! அதிலும் தனியாக சிவ பூஜை என எடுத்துக் கொண்டால் சாப்பிடுவது கூடக் கஷ்டம்! நான் இல்லைனா மாமா தானே தனியாகப் பொங்கிக் கொள்ள வேண்டும். வெளி ஊர்கள் போனால் கையோடு சிவ பூஜைக்கான எல்லா சாமக்ரியைகளையும் எடுத்துச் சென்று போகிற இடத்திலும் முறைப்படி பூஜை செய்து தனியாகச் சமைத்த (மனைவி அல்லது தானே சமைத்த) சாப்பாட்டைத் தான் சாப்பிட வேண்டும். வீட்டில் பூட்டி வைத்துவிட்டு வெளியே போக முடியாது! நாங்க எந்த வருஷமும் இம்மாதிரி விசேஷ தினங்களில் கோயில்களுக்குச் செல்லுவதில்லை!

      Delete
  11. கோவிலை இரவில் பார்க்கும்போது லைட் வெளிச்சம் அழகா இருக்குமில்லையா ..
    நாதஸ்வர கலைஞர்கள் பற்றி சொன்னது உண்மையே .அப்பா திருவாரூரில் வேலை செஞ்சப்போ நிறையபேரை சந்திச்சிருக்கார் சில வருஷங்ககள் கழிச்சி அவங்க பிள்ளைங்க நாயனம் ஓதுவதை விட்டு சென்னைக்கு வேலை தேடி வந்தாங்க .அரசாங்கம் தானே கலையை அதுவும் பாரம்பர்ய கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கணும் ?
    ஆலயங்கள்னாலே தவில் நாதஸ்வரம் மிருதங்கம்தான் அந்த கலைஞர்களை வாழ வழி அமைச்சு கொடுக்கணும் .இல்லைன்னா இங்கே இப்போ பல சர்ச்களில் பைப் ஆர்கனை மூடிட்டு ( அதை முறையா வாசிக்க தெரிஞ்ச ஆட்கள் இல்லாததால )எலெக்ட்ரிக் பியானோவுக்கும் கீ போர்ட் கிட்டாருக்கும் மாறின நிலையாகிடும் ,

    ReplyDelete
    Replies
    1. நாட் இரு மாதங்களுக்கு முன்னால் நாச்சியார் கோவில் கல் கருட சேவையின்போது நாதஸ்வரம், தவில் வாசிப்பதைக் கேட்டேன். என்ன திறமை... கொஞ்சம் காணொளி எடுத்தேன். 7 நாதஸ்வரம், 4-5 தவில் ஒரே சமயத்துல. அவங்களோட நின்னுக்கிட்டு கேட்டேன்... அருமையா இருந்தது.

      அவங்களுக்கு வாய்ப்பு ரொம்ப ரொம்பக் கம்மி. வெளில தமிழ் தமிழர்னு பேசுறவங்க, செண்டை மேளத்துக்கு (கேரளா) கொடுக்கற முக்கியத்துவத்தை இந்தக் கலைஞர்களுக்கு கொடுப்பதில்லை.

      Delete
    2. ஏஞ்சல், நீங்க சொல்வதைப் பார்த்தால் இந்தப் பழமையை ஒதுக்குவது என்பது எல்லா இடங்களிலும் இருக்கிறது போல! என்ன சொல்வது? நினைக்கவே மனம் வருந்துகிறது. பாரம்பரியங்கள் முற்றிலும் அழிந்து போவது என்பது நல்லதில்லை. வருங்காலத்தில் மக்கள் இம்மாதிரி வாத்தியங்கள் இருந்ததாகச் சொல்கின்றனர் எனப் புத்தகங்கள் மூலமே அறிந்து கொள்ளப் போகிறார்கள்.

      Delete
    3. கல்யாணங்களில் கூட நாதஸ்வரக்காரர்களை அழைப்பவர்கள் குறைந்து வருகின்றனர். செண்டை மேளம் தான்!

      Delete
  12. கண் நிறைவான சிவதரிசனம்... மகிழ்ச்சி... ல்ந்தத் தடவையாவது கருவிலி சென்று வர வேண்டும்....

    பதிவின் படங்கள் அழகு...
    வாழ்க நலம்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை. போகும்போது சொல்லுங்க. அங்கு இருக்கும் குருக்கள், மற்றும் கோயில் ஊழியர் கார்த்திக் ஆகியோரிடம் சொல்லி வைக்கிறோம். பெரிய உபசாரங்கள் ஏதும் பண்ணாட்டியும் உங்களுக்கு ஏதேனும் விபரங்கள் தேவை எனில் கேட்டுக் கொள்ளலாம். சிதம்பரம் போனாலும் சொல்லுங்க. கருவிலி போனால் பக்கத்தில் எங்க பூர்விகமான பரவாக்கரை, அங்கிருந்து ஒரே கிலோ மேடெர் தூரத்தில் உள்ள கோனேரி ராஜபுரம் ஆகிய ஊர்களுக்கும் சென்று வாருங்கள்.

      Delete
    2. தங்களது அன்புக்கு நெஞ்சார்ந்த நன்றி....90 களில் கருவிலி கோயிலைப் பற்றி மங்கையர் மலரில் செய்தி வெளியானதில் இருந்தே எனக்கும் ஆவல்... நேரம் கூடி வர வேணுமே....

      Delete
  13. கருவிலி இறைவன் தரிசனம் கிடைத்தது . மகிழ்ச்சி, நன்றி.
    படங்கள் எல்லாம் அழகு.
    பழமுதிர்சோலை , அழகர் கோவில், மாயவரம் மாயூர நாதர் கோவில் புனுகீஸ்வரார் கோவில், வண்டி பேட்டை மாரியம்மன் கோவிலில் எல்லாம் நாதஸ்வரம் அந்த அந்த கோவில்களுக்கு தனியாக உண்டு. காலை, மாலை மதியம் , இரவு என்று நான்கு காலத்திற்கும் வாசிப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. கோயிலின் பரம்பரை நாதஸ்வரக் கலைஞர்கள் இருந்தால் பெரும்பாலும் அவர்கள் தங்கள் உரிமையை விட்டுக் கொடுப்பதில்லை. இங்கே ஸ்ரீரங்கம் கோயிலிலும் ஷேக் சின்ன மௌலானா சாஹிபிற்குப் பின்னர் அவர் மகன் காசிம் தான் வாசித்து வருகிறார். அவங்க குடி இருப்பதும் வீதிகளுக்குள்ளே தான். அதே போல் மீனாக்ஷி கோயில் மற்றக் கோயில்களிலும் பரம்பரை நாதஸ்வரக் கலைஞர்கள் இருப்பார்கள்.

      Delete
  14. கோவில் படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன.

    நாதஸ்வர கலைஞர்கள் பாவம். இங்கு கேரளத்தில் கோயில்களில் இருக்கிறது. சண்டை இருந்தாலும் நாதஸ்வரமும் இன்னும் வாசிக்கப்படுகிறது.

    நல்ல தரிசனம்.

    மகளிர் தின வாழ்த்துகள் சகோதரி.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. கேரளக் கோயில்களிலும் நாதஸ்வரம் உண்டு என்பது எனக்குப் புதிய செய்தி துளசிதரன். உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      Delete
  15. வணக்கம் சகோதரி

    சிவராத்திரி பதிவு நன்றாக உள்ளது.
    கோவில் முகப்பு, ராஜ கோபுரமும் அழகாக ஜொலிக்கிறது. சிவராத்திரியன்று, சிவன் கோவில் படங்களும் மூலவரின் படமும் தங்களை தேடி வந்தது மிகவும் சந்தோஷமான நிகழ்வே.! தங்களுக்கு அந்த நேரத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் இல்லையா? கருவிலி மூலவரின் படம் மிகவும் நன்றாக உள்ளது. சிவராத்திரியில் அபிஷேகம் செய்து அலங்கரிக்கப்பட்ட சிவனாரை நானும் தரிசித்துக் கொண்டேன்.

    வேத பாராயணம் செய்யும் படங்களும் நன்றாக உள்ளது. நாதஸ்வர வித்வான்களை ஊக்குவித்தால் அந்த கலை தொய்வடையாமல் இருக்கும். இப்போ எல்லா கோவில்களிலும், எலக்ட்ரானிக்ஸ் முன்னேற்றம் வந்து புராதன இசைகளும் யந்திரமயமாகி விட்டது. (விஞ்ஞான வளர்ச்சி)

    தாமதமானாலும், கண்ணுக்கினிய சிவராத்திரி படங்களுடன் பதிவு அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா, எல்லாப் படங்களையும் ரசித்து ஒவ்வொன்றாகச் சொன்னதுக்கும் உங்கள் கருத்துகளுக்கும் மனமார்ந்த நன்றி.

      Delete
  16. ஆஆவ்வ்வ்வ் இந்தப் போஸ்ட் என் கண்ணுக்குத் தெரியவில்லை கீசாக்கா... நிறையப் புதுப் போஸ்ட் டக்குடக்கென வந்தமையால் இது கீழே போய் விட்டது... பின்பு வாறேன்.

    ReplyDelete
    Replies
    1. அது எப்படித் தெரியும் அதிரடி? பிள்ளையாரைத் திட்டினீங்க இல்லை? அதான் உங்க கண்களை மறைச்சுட்டாராக்கும்! மெதுவா வாங்க. ஒண்ணும் அவசரம் இல்லை. :))))))

      Delete
    2. என்ன, அதிரா பிள்ளையாரைத் திட்டினாரா? எங்கே? ஏன்? எதற்கு? எப்போது?

      ஹா... ஹா... ஹா...

      Delete
    3. //பிள்ளையாரைத் திட்டினீங்க இல்லை? அதான் உங்க கண்களை மறைச்சுட்டாராக்கும்! //

      ஹா ஹா ஹா நான் எங்கே திட்டினேன்:) நீங்களே மாட்டி விட்டிடுவீங்கபோலிருக்கே:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. பிள்ளையார் ரொம்ப ஸ்லோ என உண்மையை விளம்பினேன்:) ஜி எம் பி ஐயாவைப்போல அது டப்பா?:)) ஹா ஹா ஹா...

      Delete
    4. //ஸ்ரீராம்.09 March, 2019
      என்ன, அதிரா பிள்ளையாரைத் திட்டினாரா? எங்கே? ஏன்? எதற்கு? எப்போது?

      ஹா... ஹா... ஹா...//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா என்னா ஒரு ஆர்வம்:)))

      Delete
    5. அதிரடி, பிள்ளையாரை குண்டு உடம்பு, ரொம்ப ஸ்லோனு எல்லாம் சொன்னீங்க இல்லையா! அதான்!

      ஸ்ரீராம், உங்களோட ஒரு பதிவில் தான் அதிரடி சொல்லி இருந்த நினைவு. சமீபத்திய பதிவுனு நினைக்கிறேன்.

      Delete
    6. //ஸ்ரீராம், உங்களோட ஒரு பதிவில் தான் அதிரடி சொல்லி இருந்த நினைவு. சமீபத்திய பதிவுனு நினைக்கிறேன்.//

      ஆமாம்... நல்லா நினைவிருக்கு... வியாழன் பதிவு.. சும்மா கேட்டேன்!

      Delete
  17. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தமாதிரி பதிவின் படங்கள் அருமை

    ReplyDelete
  18. மிக அருமையான கருவிலி இறைவன் தரிசனமும் , கோபுர தரிசனமும் ...

    ReplyDelete
  19. அலங்கார கோலத்தில் சிவன் தரிசனம் சிறப்பு.

    படங்கள் சிறப்பாக வந்திருக்கிறது!

    ReplyDelete
  20. இவ்ளோ அழகிய படங்களை கீசாக்காவோ எடுத்தா என மெய் சிலிர்த்து:) மெய் மறந்து:) கொமெண்ட் போட வந்தவேளைதான் பார்த்தேன்.. அது கீசாக்கா எடுக்கல்லியாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

    சரி எடுத்தவர் ஆரோ.. ரொம்ப அழகாக இருக்கு கோபுரமும் சிவனும்...

    ReplyDelete
    Replies
    1. grrrrrrrrrrrrrrrr நானும் அழகான படங்களை எடுப்பேனாக்கும்! :))))))

      Delete
  21. பஜனை பாடும் குழந்தைகள் அழகு, ஆனா விடிய விடிய பஜனை பாடினாலும் போறிங்காக இருக்கும், நித்திரைதான் வரும் எனக்கு பஜனை பாடினாலும் சரி, கேட்டாலும் சரி.

    ReplyDelete
    Replies
    1. தீர்க்கதரிசி, ஒரு காலத்தில் இரவு பனிரண்டு மணி வரை பஜனைகளில் கலந்து கொண்டு பின்னர் வீட்டுக்கு வந்து தூங்கிட்டுக் காலை எழுந்து பள்ளிக்குப் போயிருக்கேன். அதுவும் ஏழரைக்கே கிளம்பணும். :)))) இப்போல்லாம் நினைச்சே பார்க்க முடியாது!

      Delete
  22. அன்பு கீதா,
    அருமையான படங்களை அனுப்பியவருக்கு மிக நன்றி.
    உங்கள் பரிபூரண ஈடுபாடு,
    உங்கள் எழுத்துகளில் பளிச்சிடுகிறது.
    அதுவும் சிவராத்திரி அன்று செய்யும் பூஜை வழிபாடுகள்

    விவரமாகக் கொடுத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
    சகலகலாவல்லின்னால் நீங்கதான்.

    கருவிலி சிவபெருமானுக்கு மனப்பூர்வ நமஸ்காரங்கள்.
    ஓம் நமசிவாய.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. மறுபடி மறுபடி முயற்சித்தேன், உங்கள் வலைப்பக்கம் வர முடியலை. நீங்க கொடுத்த சுட்டியும் வேலை செய்யலை.

      மற்றபடி சிவராத்திரி வழிபாடுகள் எல்லாம் நான் சேமித்து வைத்திருக்கும் குறிப்புக்களைப் பார்த்தே எழுதினேன். சிவனுக்கு எனத் தனியாக, விஷ்ணுவுக்கு எனத் தனியாக இருக்கின்றன. வழிபாட்டு முறைகளில் ஈடுபாடு அதிகம் என்பதால் கண்ணில் கிடைத்தவற்றைச் சேமித்து வைக்கிறேன். அவ்வளவே! இதில் என் திறமை என ஏதும் இல்லை.

      Delete