ஏற்கெனவே இந்தத் தலைப்பில் ஒரு பதிவு ஒரு தீபாவளி சமயம் போட்டிருக்கேன். கொஞ்சம் மாற்றி இந்தத் தலைப்புக் கொடுத்து மறுபடி போட்டிருக்கேன். இங்கே மூன்று புடைவைகள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு புத்தம்புதிது. ஒன்று கட்டிக் கொண்டது. அதுவும் கீழே விழுந்தப்போ வாங்கிக் கட்டிக் கொண்டது. புடைவைகள் புதிது இரண்டும் எங்கே எடுத்திருப்பேன் என யாருக்கானும் யூகம் செய்ய முடியுதா? பார்க்கலாம்!
மேலே உள்ள படத்தில் புடைவைகள் நிறம் சரியாத் தெரியலைனு கீழே உள்ள படம் மறுபடி வேறே கோணத்தில் எடுத்தேன். ஜேகே அண்ணா இவற்றைப் பார்த்துட்டு என்ன கலர்னு சொல்லப் போறார்னு நினச்சுட்டு இருக்கேன். ஹிஹிஹி, இஃகி,இஃகி, அவருக்குனு தனியா ஏதேனும் நிறம் தோணும் பாருங்க! கீழே விழுந்த புடைவை எதுனு தெரியுதா? ஏதேனும் யூகம் செய்ய முடியுதா?
இப்போ மறுபடி கோயில் படங்கள்! :)
இது நேற்றுப் போட்ட படம் தான்
கோட்டையின் நுழைவாயில்
அப்பாடா! இந்த முற்றம் தான் எவ்வளவு பெரிது?
இந்த உப்பரிகைகளில் அமர்ந்த வண்ணம் ராணிகளும் இளவரசிகளும் கீழே நடப்பதைப் பார்த்துக் கொண்டு இருந்திருப்பார்கள் இல்லையா?
இந்த உப்பரிகையைப் பார்த்தால் இது தான் ராணிகள் அமரும் வண்ணம் அலங்காரமாக இருக்கிறாப்போல் இருக்கு. அப்போ எதிரே உள்ளதில் மற்றப் பெண்கள் அமர்ந்திருக்கலாம். அந்த வாசல் உள்ளே எங்கே போகிறது? தெரியலை!
கோயில் தான்! ஆனால் உள்ளே சந்நிதியைப் படம் எடுக்கக் கூடாதாம். அர்ச்சகர்கள் கடுமையாக மறுப்புத் தெரிவிக்கின்றனர். கோயிலின் உள்ளே விசாலமான கூடம்!
இப்போதைக்கு இந்தப் படங்களைப் பாருங்க. மற்றவை பின்னர்! :)))))
நீங்கள் சொல்லித்தான் கோயில் என்று தெரிகிறது அம்மா...!
ReplyDeleteஹாஹா, டிடி, வடக்கே அரண்மனைகளுக்கு உள்ளே உள்ள தனிக் கோயில்கள் இப்படித் தான் காணப்படும்.
Deleteதிருச்சி தாய்மானவர் கோவிலின் முகப்பையும்பலரும்கண்டு கொள்வதில்லை புடவைகள் பெண்டுகள் சாமாச் சாரம் நமக்கு அல்ல
ReplyDelete//திருச்சி தாய்மானவர் கோவிலின் முகப்பையும்பலரும்கண்டு கொள்வதில்லை// புரியலை ஐயா!
Delete/நடுக்கூடத்தின் மேல் கூரையின் அழகான சித்திர விசித்திர வேலைப்பாடுகள் கண்களையும் மனதையும் கவர்கின்றன. பலருக்கும் மேலே இப்படி ஒன்று இருப்பது தெரியவில்லை. அவங்க பாட்டுக்கு வந்து உம்மாச்சியைப் பார்த்துட்டுப் போயிட்டே இருக்காங்க. நமக்குத் தான் ஆஹா! இதெல்லாம் வரலாற்றுப் புகழ் பெற்ற இடமாயிற்றே! இங்கே அவர் நின்றிருப்பாரோ, அங்கே அவர் நின்றிருப்பாரோ என்றெல்லாம் தோணுது!/ இப்போது புரிகிறதா பாருங்கள்
Deleteஎன்ன சொல்ல வரீங்கனே தெரியலை. திருச்சி தாயுமானவர் கோயில் கோபுரம் எங்க குடியிருப்பு மாடியில் இருந்து பார்த்தாலேயே நன்றாய்த் தெரியும். கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது!
Deleteநன்று...
ReplyDeleteஹாஹா, புடைவை பத்திக் கருத்து வேண்டாம். படங்கள்? இந்த ஊர் எந்த ஊர்? ம்ஹூம்! :)))))
Deleteஉப்பரிகையைப் பற்றி எழுதியிருக்கீங்க. அது வேற, பார்வையாளர் மாடம் என்பது வேற.
ReplyDeleteநாகர்கோவிலின் அருகில் கேரள அரண்மணை இருக்கு. அங்கு நாட்டிய கூடத்தில், பெண்கள் பகுதின்னு இருக்கு. அது முழுத் தடுப்பில் (செங்கலோ இல்லை மரவேளைப்பாடோ) சிறு சிறு துளைகள் கொண்டு இருக்கும். அதன் பின்னால் அரசு மகளிர் உட்கார்ந்துகொண்டு நாட்டியத்தை ரசிப்பார்கள். அந்தத் தடுப்புக்குப் பின்னால் யாரேனும் இருக்கிறார்களா என்பது பார்வையாளர்களுக்குத் தெரியாது.
https://sivamgss.blogspot.com/2015/08/blog-post_31.html நீங்கள் சொன்ன அரண்மனை குறித்து எழுதியது!
Deletehttps://sivamgss.blogspot.com/2015/09/blog-post.html
Deleteஎன்ன... ஒண்ணுமே எழுதலையே.... நானும் போயிருந்தேன். அங்கு, ஆங்கிலேயர்கள்/வெளிநாட்டவரை தங்கச் செய்யும் அறைகள், சமையலறை எல்லாவற்றையும் பார்த்தேன். படங்கள் எடுத்தேன்.....
Deleteஇதெல்லாம் சொன்னா, குறை சொல்றேன்னு கோச்சுக்கப்போறீங்க...
நீங்கள் மகாராஷ்டிரா சென்றிருந்தீர்களா? சத்ரபதி சிவாஜி, சாஹூ இடங்களுக்கு?
Deleteநெல்லை அந்த தக்கலை அரண்மனைதான் மணிச்சித்திரதாழ் படத்தில் வரும் நீங்க சொல்ற அந்த இடமும் தான்..கடைசி க்ளைமேக்ஸ் டான்ஸ் பகுதியில் வரும்
Deleteகீதா
//நீங்கள் மகாராஷ்டிரா சென்றிருந்தீர்களா? சத்ரபதி சிவாஜி, சாஹூ இடங்களுக்கு?// கொஞ்சம் சரி!
Deleteமறுபடியும் புதிரா?...
ReplyDeleteநமக்குத் தெரீலிங்கோ!....
ஹாஹாஹா, விரைவில் விடுபடும். :))))எழுதக் கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது. ஆகவே இப்படிக் கதை பண்ணிட்டு இருக்கேன். :))))
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபுடவை கலர்கள் அபாரம். அந்த கத்திரி பூ கலரா? அதையும் தங்கள் பதிவில் பார்த்துள்ளேன். கோ.ஆப்டெக்ஸில்தான் தாங்கள் புடவைகள் எடுப்பதாய் குறிப்பிட்டிருந்தீர்களே.! ஆமாம்.கீழே விழும் போது கட்டியிருந்த புடவையா? இல்லை, ஈரத்தில் விழுந்து நனைந்தினால், வேறு புடவைக்கடை தேடி வாங்கி கட்டிக் கொண்ட புடவையா? எதை யூகம் செய்ய சொல்லியுள்ளீர்கள் சற்று குழப்பமாக இருந்தது அதனால்தான் கேட்டேன்.. அந்த பதிவு என் மனதில் நன்றாகப்பதிந்து விட்டது. (ஏனென்றால் நானும் அப்போது கீழே விழுந்து அடி வாங்கியிருந்தேன். அச்சமயம் பரஸ்பர அடிகள், வலிகள், வருத்தங்கள்..பதிவுகள் இத்யாதி. இத்யாதி.. ஹா ஹா ஹா.) அந்த கலரான புடவையா? அப்படி யென்றால், பாக்கியிருக்கும் இரண்டும் புதியதுதான்.( புதன் புதிர் தோற்றது போங்கள்.. ஹா ஹா ஹா.)
கோவில்களின் படங்கள் அருமை. ஒருவேளை தாங்கள் சென்ற இரு கோவில் உலாவில், ஒன்று, (கோபுரங்கள் சார்ந்தது) மும்பை மஹாலட்சுமி ஆலயமாக இருக்கும் என நினைக்கிறேன். மற்றொன்று மாட மாளிகைகள் சம்பந்தபட்ட இடமாகிய.. மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில், இரண்டு படங்களையும் இணைத்து போடுகிறீர்களோ?
எதுவாயினும் தாங்கள் சொன்னால்தான் தெரியும். அதுவரை பொறுமையின்றி நாங்களும் இப்படி கற்பனையை தட்டி விடுகிறோம்.
நேற்று சகோதரர் கில்லர்ஜி அவர்கள் இதயக் கோவில் என்றது போல், இன்று கலைநயத்துடன் மின்னும் படங்களைப் பார்த்ததும் "கலைக்கோவில்" எனச் சொல்லத் தோன்றுகிறது. ஹா ஹா ஹா படங்கள் அந்த அளவுக்கு கைவண்ணம் திகழ மிக நன்றாக உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க விதான மேற் கூரையும் அழகாக உள்ளது. விரைவில் எந்த கோவில்கள் என்றறிய ஆவலாக உள்ளேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரி
Deleteஏன் நான் வந்ததை கவனியாது சென்று விட்டீர்களே சகோதரி. நான் சொன்னது ஏதேனும் தவறுதலாக இருந்தால் வருந்துகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்களுக்கு பதில் கொடுத்திருந்தேன் கமலா! :((((((( அது என்ன காரணமோ வெளியாகவில்லை. தவறாக நினைக்க என்ன இருக்கிறது? ஆனாலும் உங்களை வருத்தமடையச் செய்ததுக்கு வருந்துகிறேன். என்னோட அந்தக் கருத்தைத் தேடினேன். அகப்படவில்லை. மீண்டும் கருத்திடுகிறேன்.
Deleteகமலா, முந்தைய கருத்தில் வேறே ஏதோ சொல்லி இருந்தேன். நேற்றிரவு என்பதால் நினைவில் வரலை. ஆனால் புடைவை நிறங்களைச் சரியாகச் சொல்லி இருக்கீங்க! ஜேகே அண்ணாவுக்கு மட்டும் என்னமோ மஞ்சள் கலராகத் தெரிகிறது. இஃகி, இஃகி, ரொம்பவே எல்லோரையும் படுத்தாமல் இன்னிக்கு எங்கே போனோம் என்பதையும் போய் வந்த விபரங்களையும் எழுத முயற்சி செய்யறேன். உங்கள் கருத்துக்கு உடனடியாய் பதில் சொல்லியும் அது வராமல் போயிருக்கிறது. இணையம் பிரச்னையாக இருந்திருக்கலாம். சில சமயங்கள் இரு முறை வரும்! சில சமயங்கள் கொடுக்கும் கருத்து காணாமல் போகும்! :)))))))
Deleteஇந்தப் புடைவைகள் எதுவுமே கோ ஆப்டெக்ஸில் எடுக்கப்பட்டவை அல்ல.
Deleteவணக்கம் சகோதரி
Deleteநான் தங்களை கருத்துரையில் வருத்தப்பட வைத்து விட்டேனோ என்றுதான் வருந்தினேன். மற்றபடி தங்கள் பதிலில் விடுபட்டதின் காரணம் இணையத்தின் கோளாறு என தெரிந்து கொண்டேன். எனக்காக மறுபடி பதிலளித்திருப்பதற்கு நன்றி.
/இந்தப் புடைவைகள் எதுவுமே கோ ஆப்டெக்ஸில் எடுக்கப்பட்டவை அல்ல /
அப்படியானால், இப்போது சென்ற விடத்தில் எடுத்திருக்கிறீர்களா? நான் பத்தொன்பது வயதிலிருந்து புடவை தான் கட்டுகிறேன். எல்லாம் பூனம், பாலியஸ்டர், இந்தமாதிரிதான. இப்போதுதான் காட்டனுக்கு வந்திருக்கிறேன். ஆனால், காட்டன் புடவைகளில் விதவிதமாக வரும் பெயர்கள் அவ்வளவாகத் தெரியாது. ஒருவேளை தங்களுடையது மைசூர் சில்க் காட்டனோ?
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மீள் வரவுக்கு நன்றி கமலா! நீங்க 19 வயசில் இருந்து புடைவைனு சொல்றீங்க! நான் 15 வயது நிறைவதற்குள்ளாகவே புடைவை தான் கட்ட வேண்டி இருந்தது. அப்போத் தான் எஸ்.எஸ்.எல்.சி. பரிட்சை முடிஞ்சிருந்தது. அப்பா இனிமேல் புடைவை தான் கட்டணும் எனச் சொல்ல அம்மாவும், நானும் இருக்கிற பாவாடை, தாவணிகள் கிழியும் வரை கட்டிக்கொள்ளறேன் என நானும், கட்டிக்கொள்ளட்டும் என அம்மாவும் சொல்லி இருக்க அப்பா எங்களிடம் சொல்லாமலேயே என்னோட அனைத்துப் பாவாடை,
Deleteதாவணிகளையும் தெரிந்தவர்கள் பெண்களுக்குக் கொடுத்துட்டார்! நான் அப்போ கிளாஸுக்குப் போயிட்டேன். அம்மாவும் வீட்டில் இல்லை! இருந்தாலும் ஒண்ணும் பண்ணி இருக்க முடியாது! :))))) அன்னிக்குக் கட்டி இருந்த பாவாடை, தாவணி தான்! மறுநாளில் இருந்து கட்டாயமாய்ப் புடைவை! உழக்குக்குப் புடைவை சுற்றினாற்போல் என எல்லோரும் கேலி செய்வார்கள்! :)))))))) பழகி விட்டது! இது மைசூர் சில்க்கும் இல்லை, காட்டன் தான்! ஆனால் சில்க் காட்டன் இல்லை!
அந்த பச்சைக்கலரு புடவை அழகோ அழகு
ReplyDelete@ராஜி, அதைப் பிரிச்சுப் படம் எடுத்துப் போடறேன். :))))
Delete// அதுவும் கீழே விழுந்தப்போ வாங்கிக் கட்டிக் கொண்டது. //
ReplyDeleteயார்கிட்ட... மாமா கிட்டயா வாங்கி கட்டிக்கிட்டீங்க? அவ்வளவு கோபக்காரரா அவர்?!!
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கும்பகோணத்தில் கீழே விழுந்தப்போ நனைந்த புடைவைக்கு மாற்றாக வாங்கிக் கட்டிக் கொண்டது. கமலா பாருங்க கரெக்டாச் சொல்லி இருக்கார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்
Delete/புடைவைகள் புதிது இரண்டும் எங்கே எடுத்திருப்பேன் என யாருக்கானும் யூகம் செய்ய முடியுதா? பார்க்கலாம்!//
ReplyDeleteமுடியுமே... புடைவைக்கடையில்தான்!
இஃகி,இஃகி,இஃகி! கடை தான்! சரியான பதில்! :P:P:P:P
Deleteகோவிலும் உப்பரிகையும் எங்கே என்று தெரியவில்லை. ஆனால் நீலச்சட்டையில் மாமா மட்டும் தெரியறார்!
ReplyDeleteகோட்டையைச் சார்ந்திருக்கும் கோயில்கள் இப்படித் தான் இருக்கும். கிட்டத்தட்ட வீடு போலவே இருக்கும்! நம்ம ஊர்க் கோயிலைப் பார்த்துட்டு இது கொஞ்சம் அதிசயமாத் தெரியும்.
Deleteகோயில்தான்ங்கறீங்க... ஆனால் மியூசியமாட்டம் இருக்கு!
ReplyDeleteம்யூசியமும் போனோம். ஆனால் அங்கே படம் எடுக்க 144 தடை உத்தரவு. உண்மையில் அங்கே தான் பல விஷயங்கள்!
Delete// ஜேகே அண்ணா இவற்றைப் பார்த்துட்டு என்ன கலர்னு சொல்லப் போறார்னு நினச்சுட்டு இருக்கேன். //
ReplyDeleteபுடவை வித்தகர் டி டி அவர்களே ஒன்றும் சொல்லாத போது நான் என்ன சொல்லுவது. என்றாலும் எனக்கு தோன்றிய கலர்கள் இதுதான். டீத்தூள், பசுமஞ்சள், இலை பச்சை.. பச்சை கலர் புடவை ஒரு தடவை கட்டியது. புடவைகள் அநேகமாக நீங்கள் கோ-ஆப்-டெக்ஸ் இல் தான் வாங்குவீர்கள். பச்சை புடவை அங்கெ வாங்கியது இல்லை.
Jayakumar
இதுக்குத் தான் உங்களைக் கேட்டதே! முதல்லே அங்கே மஞ்சள் நிறப்புடைவையே இல்லை. டீத்தூள் கலரிலும் எந்தப் புடைவையும் இல்லை. :))) உங்களால் நிறங்களைக் கண்டுபிடிக்கவே முடியறதில்லை. எப்போவும் தப்பாவே சொல்லுவீங்க! :)))))) பச்சை நிறம் ஓரளவுக்குச் சரி! ஆனால் ஒன்று வித்தியாசமான பச்சை நிறம். அதோடு இவை எதுவும் கோ ஆப்டெக்ஸில் வாங்கலை! :)))))
Deleteகொள்ளேகாலில் எடுத்த சேலையா?
ReplyDeleteசின்ன வயசு ஞாபகங்கள் வந்து விட்டன கோமதி. கொள்ளேகால் பட்டில் நிறையப் பாவாடைகள் கட்டி இருக்கேன். சேலை எடுத்ததில்லை. கொள்ளேகால் போனதும் இல்லை. இவை பருத்திச் சேலைகள். கைத்தறி.
Deleteபெல்காம் சேலை என்று நினைக்கிறேன்.
ReplyDeleteபடங்கள் எல்லாம் வெளிச்சமாய் நன்றாக இருக்கிறது.
சார் இரண்டு படத்தில் தெரிகிறார்.
மேல் கூரை படம் அழகு.
கிட்டத்தட்ட வந்துட்டீங்க என்றாலும் பதில் வேறே. மேல் கூரையை முழுதும் கவர் பண்ணத் தெரியவில்லை. ஆகவே வந்த வரைக்கும் போட்டிருக்கேன். :))))
Deleteகீதாக்கா புடவை பத்தி எல்லாம் எனக்கு நோ ஐடியா! ஹிஹிஹிஹி..
ReplyDeleteநான் வாங்கி பல வருடங்கள் ஆச்சு. அதுவும் ஜிம்பிள் பருத்திப் புடவை மட்டும்தான். ஓசியில் வந்தாலும் என்னைத் தெரிஞ்ச என் தங்கைகள் (கஸின்ஸ்) எனக்கு பருத்திப் புடவை அல்லது பருத்தி சல்வார் தான் வாங்கித் தருவாங்க...
அதனால சொல்லத் தெரியலை. எங்க எடுத்தது...
ஆனா எல்லாமே ரொம்ப நல்லாருக்கு. கலர் கோம்போ எல்லாம் அழகா இருக்கு அந்த பச்சை வித் இளம் பச்சை கரை டிசைன் இருக்கே அதான் நீங்க கீழ விழுந்தப்ப உடுத்தியிருந்த புடவையோ...
கீதா
வாங்க தி/கீதா, நானும் சுமார் 30 வருடங்களுக்கு மேலாகப் பருத்திச் சேலைகள். அதுவும் அதிகமாகக் கைத்தறிச் சேலைகள் தான் கட்டறேன். அந்தப் பச்சை நிறச் சேலை, இளம்பச்சைத் தலைப்புடன் உள்ளது தான் கீழே விழுந்த சேலைக்கு மாற்றாகப் பையர் வாங்கினார். அதை அன்று ஒரு தரம் கட்டிக் கொண்டது தான்! மற்ற இரண்டும் புதுசு! தினம் தினம்பருத்திச் சேலைகள் என்பதால் விரைவில் சேலைகள் வாங்கும்படி ஆகிறது. இதுவே சிந்தடிக் எனில் குறையும். ஒரு சேலை 5, 10 வருடங்கள் வரும். என்னிடம் அப்படிச் சில சேலைகள் இருக்கின்றன. :)))))
Deleteதூக்கம் கண்ணை சொக்குது...தினமும் 9. 930க்குத் தூங்கிடுவேன்...இன்று திருப்பதிக்குப் போனவர் இன்னும் வந்து சேரலை. அதான் முழிப்பு...
ReplyDeleteகோயில் படங்கள் கோட்டை உள் படங்கள் எலலம் அழகா இருக்கு. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பெரிசு போல...நிறைய சுத்தறதுக்கே இருக்கு போல உள்ள
கீதா
ஆமாம், சுத்துவதற்கு நிறைய இருக்கு என்றாலும் நாங்க குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே சென்றோம். அதுவும் கோயில்கள் மட்டுமே! காட்டுக்கெல்லாம் போகலை. போனால் ஓரிரு நாட்கள் கூடத் தங்கணும்! :) நமக்கோ எங்கே போனாலும் மம்மம் சாப்பிடுவதில் பிரச்னை வந்துடும்! :))))))
Deleteகீதாம்மா எங்கே வாங்கியது என்று கேட்டிருந்தால் க்ரெக்ட்டா சொல்லி இருப்பேன் ஆனால் நீங்க எங்கே எடுத்தது என்று கேட்டதால் எல்லா போலீஸ் ஸ்டேஷனிலும் விசாரித்தேன் அதற்கு அவர்கள் புடவை தொலைந்து போனதெற்கல்லாம் யாரும் ரிப்போர்ட் பண்ண மாட்டார்கள் என்று சொல்லியதால் நான் இப்போது விடை தெரியாமல் முழிக்கிறேன்
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், மதுரைத் தமிழரே! நல்ல பதில்! இங்கே யாருக்கானும் இப்படி எல்லாம் ஜிந்திக்கத் தெரியலை பாருங்க! :)))))))
DeleteP:P:P:P இதுவா புதிரோட விடை ?
ReplyDeleteஹாஹாஹா, கில்லர்ஜி!
Deleteவிழுந்தது கும்பகோணம் பக்கம். புடவை எடுத்தது பஸ் ஸ்டாண்ட் கடை ஒன்றில். சரியா கீதாமா. அரண்மனையும் கோவில் வாசலும் சூப்பர்.
ReplyDeleteஹாஹாஹா, வல்லி! ஒரு புடைவைக்கு நீங்க சொன்னது சரி! மற்றவை? அரண்மனைன்னா முழு அரண்மனை இல்லை. அது வேறே இடத்தில் இருந்தது. இப்போ ம்யூசியம்! ஆனால் அங்கே படம் எடுக்கக் கடுமையான தடை உத்தரவு! :(
Deleteநானும் பட்டு கட்டுவது இல்லை.
ReplyDeleteவாங்கி தருபவர்கள் பட்டு இல்லை என்று பட்டு மாதிரி ஏதாவது வாங்கி கொடுத்து விடுகிறார்கள்/ எனக்கு கைத்தறி சேலைதான் பிடிக்கும்.
மீள் வருகைக்கு நன்றி கோமதி! எனக்கும் வாங்கித் தரவங்க கொடுத்துத் தான் இந்த சிந்தடிக் சேலைகளே! நான் கட்டுவதில்லை என்றாலும் கொடுத்துடுவாங்க! ஒரு சில சில்க் காட்டனும் ஓசியில் வந்தவை உண்டு! நல்ல கைத்தறிப்பட்டு எனக்குப் பிடிக்கும். முன்னெல்லாம் நிறையக் கட்டியும் இருக்கேன். இப்போது 4,5 கைத்தறிப்பட்டுச் சேலைகளே அதுவும் 20 வருஷத்துக்கு முந்தையவை இருக்கின்றன. மற்றவை எல்லாம் இப்போதுள்ள பட்டு ரகம்! அதைப் பட்டுன்னே சொல்ல முடியாது!ஆனால் எதுவும் நாங்க வாங்கவில்லை. கல்யாணங்களில் வந்தவை!
Deleteஅது தில்லையாடி வள்ளியம்மையை எடுத்தது :) ஹாஹாஹா கீதாக்கா நான்புடவை கட்றதையே மறந்துட்டேன் :)
ReplyDeleteஇங்கே நேத்து எங்க தெருதாண்டி ஒரு பெரிய ஹாலில் எதோ பங்க்ஷன் நடக்குது அதுக்கு இலங்கை பெண்கள் வரிசையா காரில் இறங்கி பட்டுப்புடவை பூ சகிதமா போனாங்க :) பார்க்க ஆசையா இருந்தது ..மற்றபடி புடவைக்கும் எனக்கும் ரொம்ப தூரம் :)
மாந்தளிர் நிறம்தான் அந்த புடவை
தில்லையாடி வள்ளியம்மை கோலாப்பூர் கோயில் கண்டுபிடிக்குமுன்னே நினைச்சது ஆனா இப்போ நீங்க அங்கே கோயிலுக்கு போய் அந்தூரில்தான் அந்த சாரீஸ் எடுத்திருக்கிங்க :)
Deleteவாங்க ஏஞ்சல், எங்க பெண், மாட்டுப்பெண் இருவரும் கூட அதிகம் புடைவை கட்டுவதில்லை. மாட்டுப்பெண்ணாவது கோயிலுக்குப் போறச்சே கட்டிப்பா. பெண் அது கூடக் கட்டுவதில்லை! ஒண்ணும் சொல்ல முடியலை! முடியாது! :)))) கடைசியிலே ஒரு வழியாக் கண்டு பிடிச்சுட்டீங்க! நீங்க சொல்வது தான் சரி! இவை கோலாப்பூர்ப் புடைவைகள் தான்! கைத்தறிப் பருத்திச் சேலைகள், தலைப்பும், பார்டரும் கோர்த்து வாங்கி இருக்கும்! :))) இம்மாதிரித் தான் பட்டுப்புடைவைகள் முன்னர் வந்து கொண்டிருந்தன. இப்போல்லாம்!:(((((
Deleteகோலாப்பூர் தான் போயிட்டு வந்தோம்.
Deleteபுடவை கட்டாத ஏஞ்சல் தமிழின துரோகி
ReplyDeletegarrrrrr :)))
Deleteஹாஹாஹா, மதுரைத் தமிழரே, தமிழ் நாட்டின் பாதிப் பெண்கள் தமிழினத் துரோகியாத் தான் இருக்காங்க. ஏதோ ஓர் தமிழ்த் தொலைக்காட்சிச் சானலில் செய்தி வாசிக்கும் பெண், அறிவிப்பாளராக இருக்கும் பெண் ஆகியோர் ஆண்கள் அணியும் பான்ட், ஷர்ட் அணிந்து தலையையும் அப்படியே க்ராப் செய்து கொண்டு வருகின்றனர். எந்த சானல்னு நினைவில் இல்லை.
Delete