எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, March 30, 2019

படம் பாருங்க முதல்லே! சொல்லவா வேண்டாமானு அப்புறமா!


நாட்டின் பிரபலமான கோயில். சக்தி பீடங்களில் ஒன்றுகோயிலின் நான்கு நுழைவாயிலில் ஒன்றுஇது கோட்டைக்கு உள்ளே உள்ள ஒரு கோயில்


கோட்டையின் நிலா முற்றம். எம்புட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டுப் பெரிசு தெரியுமா?


ஏற்கெனவே வைத்தீஸ்வரன் கோயில், மாயவரம், திருஇந்தளூர் போனது சொல்லியே முடிக்கலை! வைத்தீஸ்வரன் கோயிலில் பட்ட அவதியோடு நிறுத்தியாச்சு! அதுவும் பாதி ராத்திரியில்!

இங்கே பாருங்க

அந்தப் பதிவிலேயே எல்லோரும் ரொம்பப் புலம்பலா இருக்குனு சொல்லவே அதை அப்படியே விட்டுட்டேன். அதுக்கு முன்னர் பூம்பாறைப் பதிவும்.

பூம்பாறை இங்கே

பாதியிலே விட்டது தான்! முடிக்கலை! நெ.த. 2,3 தரம் வாட்சப்பில், கருத்துக்களில் எனக் கேட்டுப் பார்த்துட்டு அலுத்துப் போய் விட்டுட்டார். :))))) இப்போவும் அந்த அளவுக்கெல்லாம் சொல்ல முடியாட்டியும் கொஞ்சம் பிரச்னைகள் இருக்கத் தான் செய்தன. ஆனால் எல்லோருக்கும் அது பிடிப்பதில்லை. கூடியவரையில் நடந்ததை நடந்தபடி சொன்னால் அது சரியா வரதில்லை. என்னடா இவ இப்படி அறுத்துத் தள்ளறாளேனு நினைச்சுப்பாங்க! பொதுவாக நிறைகளை விடக் குறைகளே அதிகம் தெரியும் வண்ணம் எழுதுகிறேன் போல!

ஆனால் என்னோட நினைப்பு என்னவெனில் என் பார்வையில் தெரிந்த குற்றம், குறைகள் மற்றவர்கள் பார்வையில் எப்படிப் படுகிறது எனத் தெரிந்து கொள்வதோடு குற்றங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கும்படி பார்த்துக்கலாம் என்னும் எண்ணம். போகிறவங்க இந்தக் குறைகளைக் கூடியவரை தவிர்த்துவிட்டு மாற்று வழியில் செல்லலாமே என்னும் எண்ணம். அதனாலேயே ஊருக்குப் போயிட்டுத் திரும்பி வந்து ஒரு வாரம் ஆகப் போகுது என்னும் போது கூட எழுதலாமா வேண்டாமா! அப்படியே விட்டுடுவோமா என்னும் எண்ணமே கடந்த நான்கைந்து நாட்களாய்.  நாங்க சிரமப்பட்ட விஷயங்களை எழுதாமல் கடந்து விடலாம். ஆனால் என்னமோ அதில் எனக்கு உடன்பாடு இருப்பதில்லை.

பெரிசாய் ஒண்ணும் இல்லை. இரண்டு கோயில்கள் உலா தான்! அதில் ஒன்று ஏற்கெனவே போனது! ஏற்கெனவே எழுதியும் விட்டேன். ஆனால் அப்போப் படங்கள் இல்லை. இப்போவும் படங்கள் இல்லை. காமிரா எடுத்துப் போகவில்லை. அறையிலேயே வைச்சுட்டேன்.  தரிசனங்கள் என்னமோ நல்லாவே கிடைச்சது. திருப்தி தரும் வரை பார்த்தாச்சு! அதில் எந்தக் குறையும் இல்லை. அதோடு நாளைக்கு இன்னும் சில படங்கள் போடுகிறேன். பார்த்துட்டு எந்தக் கோயில்னு சொல்ல முடிகிறதா என்றும் பார்க்கவும்.

60 comments:

 1. எனக்கு எந்தக் கோவில்னே தெரியலை.

  கோவில் உலாவில், என்னைப் பொறுத்தவரையில் 10%க்கு மேல 'புராணக் கதைகளை' எழுதக்கூடாது. அதுவே ஜாஸ்தி. நீங்க என்ன பார்த்தீங்க, போட்டோக்கள், அங்க இருந்த நல்லன கெட்டவை, பிரசாதம்/உணவுக்கு என்ன பண்ணினீங்க இதுமாதிரியான விஷயங்கள்தான் ஆர்வமாகப் படிப்பேன். போன/போகாத கோவில் என்பது பிரச்சனை இல்லை. போன கோவில்னா, எதை பார்க்க விட்டுப்போச்சுன்னு பார்ப்பேன். போகாத கோவில்னா, தோன்றினா குறிச்சுவச்சுப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு ஏற்கெனவே கருத்துச் சொல்லி இருந்தேனே! எங்கே போச்சு? !!!!!!!!!!!!!!!!!!!!!!! கோயில் பற்றிய தலபுராணம் சொல்லாமல் விட்டால் எப்பூடி நெ.த? என்னோட ஆன்மிகப் பயணம் பக்கம் போய்ப் பாருங்க! எத்தனை கோயில்கள் பற்றிய தகவல்கள் வந்திருக்கும்னு புரியும். இப்போ அங்கே அந்த வலைப்பக்கம் ஸ்ரீரங்கப் பதிவுகள் வருவதால் அங்கே எழுத முடியலை. பயணத்துக்கென ஒரு தனி வலைப்பக்கம் ஆரம்பிச்சேன்! அது ரொம்ப தூரமா இருக்குனோ என்னமோ யாருமே வரதில்லை. சரினு இங்கேயே போட ஆரம்பிச்சேன். இந்தப் பதிவில் போட நினைச்சிருந்த பதிவுகளையே இப்போப் போடறதில்லை! :)))))

   Delete
  2. நான் பொதுவாகப் பிரசாதங்களில் கவனம் செலுத்துவதில்லை. அநேகமான பெருமாள் கோயில்களில் பிரசாதங்கள் கிடைக்கும் தான்! ஆனால் பெரும்பாலும் கவனம் அதில் செல்லுவதில்லை. ஸ்ரீரங்கத்தில் இப்போது கிளிமண்டபத்துக்குள்ளே கொடுத்து வந்த பிரசாதங்கள் கொடுப்பதில்லை. அதற்கு வெளியே கிடைப்பது பிரசாதமும் இல்லை.

   Delete
 2. ஒடிசா மாநிலத்தின் தாரா தாரிணி சக்தி பீட கோவிலா?

  ReplyDelete
  Replies
  1. ஐந்து நாட்கள் விடுமுறை. சினிமா, தொலைக்காட்சி நடிகைகளைப் பார்த்தீங்க.... என்ன கோவிலா இருக்கும்? ஒருவேளை ஏவிஎம் ஸ்டூடியோ பிள்ளையார் கோவிலா இருக்குமோ?

   Delete
  2. நான் பார்க்கலை நெல்லை. நம்ம ரங்க்ஸ் பார்த்துட்டு அடையாளம் கண்டுகொண்டு எனக்குக் காட்டினார். இஃகி, இஃகி, அவங்க மேக்கப்போட இருந்தாலே என்னால் கண்டு பிடிக்க முடியாது! இதிலே மேக்கப் இல்லாமல் வந்திருக்கிறச்சே எப்படிக் கண்டு பிடிப்பேன்! :))))))

   Delete
 3. நீங்க நிறைய ஆரம்பிக்கிறீங்களோ இல்லை, பல்வேறு இடுகைகளை எழுதறீங்களோ - இதுதான் காரணம் ஒவ்வொண்ணும் பாதில நிற்பதற்கு. இப்போ பூம்பாறை கோவில்ல ஸ்டாப் பண்ணி ரொம்ப மாதங்களாகிட்டது. அப்போ அந்தத் தொடர்ச்சி கிடைப்பதில்லை. இது, நிறைய தொடர்கள் ஒரு பத்திரிகையில் எழுத ஆரம்பித்து, பாதியில் அம்போன்னு விடுவதுபோல இருக்கு. சமையல் குறிப்பு, திருவரங்கக் கதை, ஆன்மீக விசிட், அப்போதைய முக்கிய டாபிக் என்று நிறைய எழுதுவதால், பல தொடர்கள் ரொம்ப டிலே ஆகுது. இதுலவேற குறிப்பிட்ட நேரம்தான் கணிணில இருக்கீங்க, மற்ற தளங்களுக்கும் செல்லணும். அந்தத் தளங்களில், 'அருமை, நன்றி, படித்து ரசித்தேன்'அப்படீன்னு எழுதாம விளக்கமா, அப்புறம் அதுக்கு வரும் மறுமொழிக்கு பதில் எழுதறதுன்னு இருக்கறதுனால உங்களுக்கு நேரம் கிடைப்பது கஷ்டம் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நெ.த. ஒரு கால கட்டத்தில் என்னோட சொந்த வலைப்பக்கங்களே ஐந்து, ஆறு எழுதி இருக்கேன். அதைத் தவிர்த்து ப்ளாகர்ஸ் யூனியன் வலைப்பக்கம், மதுரைமாநகரம் வலைப்பக்கம். ஆசார்ய ஹ்ருதயம் வலைப்பக்கம் எனக் குழுவாக எழுதி இருக்கோம். அப்போ இருந்த ஆர்வம் இப்போ எனக்கு மட்டுமே இருக்கு! அப்போ எழுதினவங்க யாருமே இப்போ எழுதுவதும் இல்லை. பலர் தொடர்பிலும் இல்லை.

   Delete
  2. படிக்கிறவங்களுக்கு விருப்பம் இல்லை என்பது தெரிந்தே நான் பூம்பாறைப் பதிவுகள், மற்றும் வைத்தீசுவரன் கோயில் பதிவுகளை நிறுத்தினேன். மற்ற வேறே எதையும் பாதியில் நிறுத்தியதில்லை!. இன்னொரு வலைப்பக்கம் ஓர் நெடுந்தொடர் எழுத ஆரம்பிச்சு அதைப் பின்னர் வேண்டாம்னு நிறுத்தினேன். மற்றபடி சமூகப் பிரச்னைகள், பெண்கள் பிரச்னைகள், ஒழுக்கம் சம்பந்தப்பட்ட பதிவுகள், வேறே பதிவுகள் என எழுதுவதை நானாக வேண்டாம்னு யோசித்து நிறுத்திவிட்டேன். அதனால் தான் சமீபத்திய பல நிகழ்வுகள் குறித்து ஏதும் எழுதவில்லை. நானாக இது போதும் என நினைத்து முடித்துக் கொண்டது தான்! மற்றபடி நீங்கள் நினைக்கிறாப்போல் ஒரே நேரத்தில் பல பதிவுகளைத் தொடங்கி விட்டு முழிக்கவில்லை! :))))) யோசித்து இதை எழுதலாமா வேண்டாமா என முடிவு செய்து பின்னரே எழுதுகிறேன். அதனால் தான் ஒரு பதிவுக்கும் இன்னொன்றுக்கும் நடுவில் பெரிய இடைவெளி! :)))) தொடர்னு ஆரம்பிச்சு முடிக்காமல் எதையும் விடவில்லை. வைத்தீஸ்வரன் கோயில், பூம்பாறைப் பதிவுகள் தவிர்த்து! :))))

   Delete
 4. படங்கள் அருமை இதயகோவிலாக இருக்குமோ ?

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா... ஹா... கில்லர்ஜி... படித்ததும் சட்டென சிரித்து விட்டேன்.

   Delete
 5. பயணங்களில் சிரமங்கள் இருக்கும் தான். திருநெல்வேலியிலிருந்து மதுரை வருவதற்கு
  ஜபல்பூர் ரயிலில் டிக்கட் எடுத்து இருந்தோம் , 4மணிக்கு ரயில் .

  குலதெய்வம் கோவிலில் அபிஷேகம், அர்ச்சனை முடிய 3.30 ஆகி விட்டது, அப்புறம் அங்கிருந்து திருநெல்வேலி வரவே 4.30 ஆகி விட்டது ரயிலை தவற விட்டோம். பணமும் திரும்பபெற முடியவில்லை, இருவருக்கும் டிக்கட் 800 ரூபாய் . முன்பதிவு செய்யும் போதே வேண்டாம் என்றேன் படுத்துக் கொண்டு வசதியாக வரலாம் என்று செய்தார்கள்.

  அந்தியோதையா என்ற புது ரயில் ( 5 மணிக்கு) தாம்பரம் செல்லும் ரயில் அதில் டிக்கட் எடுத்து வந்து சேர்ந்தோம்.
  புது ரயில் வசதியாக இருந்தது கூட்டம் இல்லை படுத்துக் கொண்டே வந்து சேர்ந்தோம் இரவு 8.30 ஆச்சு.

  சில இடர்களும், சில அனுகூலங்களும் ஏற்படும் தான்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், கோமதி! இம்மாதிரி எங்களுக்கும் நேர்ந்தது உண்டு. ஆனால் அதைச் சொன்னால் பலரும் புரிஞ்சுக்கறது இல்லை. பிரயாணம் திட்டமிடவில்லை என்கிறார்கள். :)))) திட்டமிட்டுச் சென்றாலும் அதிலும் ஒரு சில பிரச்னைகள் வரத்தான் செய்யும். இல்லையா? சமீப காலங்களில் இணையம் மூலம் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்வதிலேயே எனக்குக் கொஞ்சம் குழப்பம் நேரிட்டுத் தேதியை மாற்றிப் போட்டுப் பின்னர் அவற்றை ரத்து செய்துவிட்டுப் பணத்தை இழக்கும்படி நேர்ந்திருக்கிறது. :))))) அதே கவுன்டரில் வாங்கினால் இந்தப் பிரச்னை வராது! ரயில்வே ஊழியர் ஒரு முறைக்கு இரு முறை நம்மிடம் கேட்டு உறுதி செய்து கொண்டு பின்னர் பயணச்சீட்டை உறுதி செய்வார். ஆனால் அலையணும். என்றாலும் இணையம் மூலமே பயணச்சீட்டு வாங்கிட்டு இருக்கோம். :))))

   Delete
 6. ஏதோ பூர் என்று முடியும் சக்தி பீடமா?
  பார்த்து போல் தெரியவில்லை.
  நீங்களே சொல்லி விடுங்கள்.
  படங்கள் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, இந்தக் கோயிலைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு எல்லோருக்கும் பிடிச்சிருக்கு போல! பின்னர் சொல்றேன் கோமதி!

   Delete
 7. நெல்லைத்தமிழனுக்கே இந்தக் கோவில் என்று தெரியவில்லை என்றால் நானெல்லாம் எம்மாத்திரம்? ஆனால் படங்கள் அருமையா எடுத்திருக்கீங்க.. விவரங்கள் சொல்லாமலா இருக்கப் போறீங்க...!!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம், நெல்லை அங்கெல்லாம் போயிருப்பார்னு நினைக்கறீங்க? ம்ஹூம், வாய்ப்பே இல்லை! தி/கீதா, துளசி கோபால் போன்றவர்கள் போயிருக்கலாமோ என்னமோ! தெரியலை! விபரங்கள் மெதுவா வரும். அதுக்குள்ளே இன்னொரு பயணம் வந்துடும்! :))) ஆனால் சுற்றுப் பயணம் இல்லை!

   Delete
 8. கீதாக்கா அப்போவே வாசிச்சாச்சு...அங்க சாப்பிட வாங்கவுலும்....ஆனால் மின்சாரம் (தமிழ் தமிழ்!!!!!) போய் போய் வந்தது..
  இப்பக் கூட கருத்து போடும் போது மின்சார வெட்டு!!!

  படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன. கோட்டைனு சொல்லிருக்கறதுனால ராஜஸ்தானில் இருக்கும் சக்தி பீடமோனு தோன்றுது. சரி எப்படியும் நீங்க சொல்லிடப் போறீங்க...ஹிஹிஹி இல்லைனா நாளைய படங்கள் பார்த்து சொல்ல முடியுதானு பார்க்கிறேன். ஆனா நாளைக்கும் நீங்க விடை சொல்லக் கூடாது....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இன்னைக்குப் போடப் போற படங்களுக்குக் கூட்டம் கூடும்னு நினைக்கிறேன் தி/கீதா! பொறுத்திருந்து பாருங்க! சாயங்காலமாப் போடறேன். :))) முக்கியமா ஜேகே அண்ணா வந்து கருத்துச் சொல்லுவார்! இஃகி,இஃகி, இல்லை, இல்லை, நல்லாவே இல்லைனு சொல்லப் போறார்! :))))

   Delete
 9. ஆமாம் கீதாக்கா... நீங்கள் பல வலைத்தளப் பக்கங்கள் வைத்துக் கொண்டு கலக்கிய காலம் எனக்கும் நினைவுக்கு வருகிறது. இது தாற்காலிகம்தான். சமயங்களில் இப்படியொரு அலுப்பு இருக்கும். சீக்கிரம் சரியாகிவிடும்.

  ReplyDelete
  Replies
  1. அட ஸ்ரீராம், உங்களுக்குத் தெரியுமா? ஆச்சரியம் தான்! ஆனாலும் இப்போ மட்டுமில்லை, எப்போவுமே அலுப்பு இல்லை. வேண்டுமென்றே தான் குறைத்துக் கொண்டு இருக்கிறேன். என்றாலும் இணையத்துக்கு வராமல் முடியாது. சொந்த வேலைகளும் இருக்கின்றனவே! மனச்சோர்வு இருந்தால் கட்டாயமாய் இணையத்துக்கு வந்தால் கொஞ்சம் வடிகால் இருக்கும்.

   Delete
 10. வணக்கம் சகோதரி

  படங்கள் அருமையாக இருக்கின்றன. கோபுரங்களை பார்க்கும் போது வடக்கு பாணிகளாகத்தான் தெரிகிறது. கர்நாடகா மூகாம்பிகை கோவிலாக இருக்குமோ என நினைத்தேன். ஆனால் எல்லாவிடங்களிலும் புரியாத மொழிகள் புலப்படுகின்றன. (ஹிந்தி மாதிரி) எனவே நீங்கள்தான் எந்த கொவிலென சொல்லவேண்டும். இல்லை நாளை வெளியிடும் படங்களில் கண்டு பிடிக்கிற மாதிரி தெரியவேண்டும். (அது கண்டிப்பாக நடக்கப் போவதில்லை என எனக்குத் தெரியும். என்றாலும், சும்மாவேனும் சொல்லி வைக்கிறேன். ஹா ஹா ஹா.) பதிவில் நீங்கள் சொன்ன கருத்துக்கள் சரிதான்.. உங்களை மாதிரி சென்றவிடங்களைப் பற்றி விலாவாரியாக எழுதுவது எங்களைப் போன்றவர்களுக்கு படித்து குறை நிறைகளை தெரிந்து கொள்ள செளகரியமாகத்தான் உள்ளது. தொடரட்டும் தங்கள் பணி.இணைய சேவை என்றும் கூறலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, கமலா! கண்டுபிடிக்க முயன்று கிட்டத்தட்ட வந்துட்டீங்க! ஆனால் புரியலை! இல்லையா? சரி, பொறுத்திருந்து பாருங்கள். முகாம்பிகை கோயில் இல்லை. கர்நாடகாவும் இல்லை.

   Delete
 11. ///படம் பாருங்க முதல்லே! சொல்லவா வேண்டாமானு அப்புறமா!///

  ம்ஹூம்ம்ம்ம் :))

  ReplyDelete
  Replies
  1. என்ன தீர்க்கி? என்ன ம்ஹூம்? என்ன அர்த்தமாம் இதுக்கு?

   Delete
 12. எனக்குத் தெரிஞ்சு இது சீக்ஸ் கோயிலாகத்தான் இருக்கும்.. அவர்களின் கோயில்கள்தான் கோபுரம் வெள்ளையாக இருக்கும்... இதிலயும் வெள்ளைக் கோபுரம்ம்ம்ம்ம்:))

  ReplyDelete
  Replies
  1. அதிரடி, தப்பு, தவளை, தஞ்சாவூரு மாப்பிள்ளை!

   Delete
  2. இல்லையே எனக்கு கிடைச்சிருப்பது திருநெல்வேலி மாப்பிள்ளையாக்கும் ஹா ஹா ஹா இது இலங்கைத் திருநெல்வேலி:)...

   இப்போ கீசாக்காதான் டப்பு புரொக்:)... ஹா ஹா ஹா:)

   Delete
  3. ஹாஹாஹா, அது என்னமோ உண்மைதான் தீர்க்கி! மாமா தஞ்சாவூர் மாப்பிள்ளை தான்! :))))))

   Delete
 13. ஒவ்வொருவரின் எழுத்துக்கும் ஒவ்வொரு பாணி இருக்கும் கீசாக்கா.. அதனை மாற்ற யாரும் சொல்லவும் மாட்டார்கள்.. மாற்ரவும் முடியாது, மாற்றினால் நாம் எழுதுவதுபொல இல்லாமல் செயற்கையாக இருக்கும்.. அதனால உங்கள் எழுத்துப் படியே எழுதுங்கோ..

  என் கொள்கை.. பிடித்தவர்கள் வந்து படிப்பார்கள் கொமெண்ட் போடுவார்கள்.. பிடிக்காதோர் ஒதுங்குவார்கள்.. அவ்வளவே...

  ReplyDelete
  Replies
  1. தீர்க்கி, பதிவை ஒழுங்காய்ப் படியுங்க! என்னோட எழுத்தின் பாணியைப் பற்றி யாரும் எதுவும் சொல்லலை. பயணங்களில் ஏற்படும் குறைகளை, அநேகமாய்ப் பட்ட கஷ்டங்களை விவரித்தால் சிலருக்குப் புலம்பலாகத் தெரிகிறது. அதைத் தான் சொன்னேன். இது அநேகமாய் ஒவ்வொரு பயணங்களிலும் இருக்கத் தான் செய்யும். நான் அவற்றைத் தள்ளிக் கொண்டு போய் எழுதப் பழகணும்னு நினைக்கிறேன். மற்றபடி ராமாயணம், கண்ணன் கதைகள் எல்லாம் எழுதுகையில் கருத்துக்களே வராமல் பல பதிவுகள் வந்திருக்கின்றன. யாரும் கருத்துச் சொல்லுவார்கள் என எதிர்பார்த்துப் பதிவுகளைப் போடுவதில்லை. பலருக்கும் போய்ச் சேர்கிறது என்பது தெரியும். அவ்வளவு தான்!

   Delete
 14. கோயிலும் அதுபற்றிய விளக்கமும் போட்டால் எல்லோருக்கும் அது மனதைக் கவராது கீசாக்கா.. நெல்லைத்தமிழன் போன்ற வயசானோருக்கு மட்டுமே பிடிக்கும்:)) ஹையோ என் வாய் தேன் நேக்கு எடிரி:))..

  அதுபற்றி யோசிக்காமல் உங்களுக்கு என்ன எழுத வருகுதோ அதை எழுதுங்கோ..

  இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?:))[பாட்டுத்தெரியுமோ?:)]

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, அதிரடி, நெல்லைக்குப் பிரசாதம் தான் முக்கியம். ஆனால் எல்லாக் கோயில்களிலும் கொடுப்பதில்லையே! அதான் வருத்தம்!

   Delete
 15. //ஆனால் அப்போப் படங்கள் இல்லை. இப்போவும் படங்கள் இல்லை//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், அதிரடி, அங்கே படங்கள் எடுக்க முடியலை. வெளியே கோபுரத்தை எடுக்க முயன்றால் தெரு முழுக்க அடைத்துப் பந்தல். கோபுரமே தெரியவில்லை! சும்மாக் கடைகளை எடுத்து என்ன பண்ணுவது? அதோடு காமிரா, அலைபேசியை அறையிலேயே வைச்சிருந்தோம்.

   Delete
 16. அன்பு கீதா, உங்களை மாதிரி ஈடுபாடு யாருக்கு உண்டு., அயராது உழைப்பவர் நீங்கள்.
  அதுவும் என்னால் எந்த ஊருக்கும் போக முடியாமல் இருக்கும் போது ,நீங்கள் ,மற்றும் கோமதி, துரை செல்வராஜு, முனைவர் ஜம்புலிங்கம் சார் பதிவுகளில் எத்தனையோ தெரிய வருகிறது.

  படங்கள் ,கோட்டை என்று குறிப்பிட்டதால் ராஜஸ்தான் என்று தோன்றுகிறது.
  இல்லையானால் கோல்ஹாபூரா. லக்ஷ்மி கோவில் இல்லையோ அது. நீங்களே எழுதுங்கள்.
  படங்கள் க்ளிப்தமாக இருக்கின்றன. மிக அழகு.நன்றி மா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, முனைவர் பதிவுகள் எல்லாம் ஆராய்ச்சிக்கு உட்பட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளோடு கூடிய பதிவுகள். துரையின் பதிவுகள் எல்லாம் ஆத்மார்த்தமான பக்தியோடு வருபவை! கோமதியும் வரலாற்றுச் சின்னங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் கோயில்களாகச் சென்று பயனுள்ள பல தகவல்களைத் தருகிறார். அவற்றுக்கு முன்னர் என்னோடதெல்லாம் ஒன்றுமே இல்லை. அதுவும் படங்கள் கோமதி பல கோணங்களிலும் ஒன்று விடாமல் எடுக்கிறாப்போலோ, துரை எடுக்கிறாப்போலோ வருவதில்லை. ஆனால் இதற்கும் பாராட்டுக்கள் கிடைஅப்பது மனதுக்கு மகிழ்ச்சியையே தருகிறது.

   Delete
  2. சரியாய்ச் சொன்னதில் நீங்க தான் முதல் வல்லி. இருந்தாலும் புடைவைகளையும் சரியாய்ச் சொன்னதால் ஏஞ்சல் முதலிடத்திற்கு முந்தி விட்டார்! :))))))))

   Delete
 17. பதிவுகள் பெறும் வரவேற்பு பற்றியெல்லாம் கவலை வேண்டாம்! :) தொடர்ந்து எழுதுங்கள்.

  செல்லும் இடங்களில் இருக்கும் நல்லது கெட்டது என இரண்டையும் எழுதுவதுதானே சரியாக இருக்கும். நல்லதை மட்டுமே சொன்னால் சரியல்லவே!

  பலகையில் ஹிந்தியில் எழுதி இருப்பதைப் பார்த்தால் வட இந்திய கோவில் எனத் தெரிகிறது. எந்தக் கோவில் எனத் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், வரவேற்பைப் பற்றிய கவலை இல்லை. புலம்பல்னு சொல்வது தான் கொஞ்சம் யோசனை.நாம் இங்கே வருவதே நாமும் சிரித்து மற்றவரையும் சிரிக்க வைக்கத் தானே! அதிலே நம்ம புலம்பலால் அவங்களுக்குக் கஷ்டமா இருந்ததுன்னா? அதான் யோசித்தேன். :))))))

   Delete
 18. என்ன எங்கே போனாலும் எல்லோரும் புதி போடுகிறீர்கள்? ஏதோ வட இந்திய கோவிலாக தெரிகிறது. கோலாப்பூர் மஹாலக்ஷ்மி கோவிலா?

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி! ஆடிக்கொரு நாள், அமாவாசைக்கொரு நாள் வரீங்க! இதிலே உங்களுக்குப் புதிர் தான் பிடிக்குமே! கலந்துக்கோங்க! விடை பின்னர் வரும்!

   Delete
  2. நீங்க ரெண்டு. ஆனால் புடைவைப் பதிவுக்கு வரலைங்கறதாலே மதிப்பெண்கள் குறைக்கப்பட்டன! :)))) மூன்றாவது இடத்துக்குச் சென்று விட்டீர்கள்.:)))))

   Delete
  3. //மதிப்பெண்கள் குறைக்கப்பட்டன! :)))) //
   முடியாது, முடியாது, ஒத்துக்கவே முடியாது. இது மோடியின் சதி.

   Delete
  4. //மதிப்பெண்கள் குறைக்கப்பட்டன! :)))) //
   முடியாது, முடியாது, ஒத்துக்கவே முடியாது. இது மோடியின் சதி.

   Delete
 19. நீங்க ஊரெல்லாம் சுத்தி எங்கயாவது உள்ள கோயில் எல்லாம் சும்மா பிடிச்சு போட்டு 12ஆம் வகுப்பு ஜியோகிராபி கேள்வி போல போட்டு விடுவீர்கள், நாங்க கண்டுபிடிக்கணும்.வேறே வேலை இல்லை.
  அது சரி ஒன்று குஜராத் மாநிலத்திலும் மற்றொன்று ராஜஸ்தான் மாநிலத்திலும் உள்ளது போல் தோன்றுகிறது,

  51 சக்தி பீடங்களை பற்றி எழுதிய மஞ்சுளா ரமேஷ் உங்களுக்கு உறவினரோ?

  சுட்டி பாருங்கள்.

  http://vedarahasya.net/shakti.htm

  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. ஜேகே அண்ணா, நான் என்ன படம் எல்லாம் போட்டு ஊர் எங்கே இருக்கு, குறிங்கனா கேட்டிருக்கேன். மஞ்சுளா ரமேஷ் முகநூல் நண்பர் அவ்வளவு தான். அவங்களைப் பற்றி ஏதும் தெரியாது. எனக்குத் தெரிந்து சக்தி பீடங்கள் பற்றி "சக்தி விகடன்" புத்தகத்தில் சுமார் 20 ஆண்டுகள் முன்னரே ஜபல்பூர் நாகராஜ சர்மா என்பவர் எழுதி வந்தார். சேர்த்து வைச்சிருந்தேன். தொலைந்து விட்டது. பின்னர் அதூ புத்தகமாக வெளி வந்ததும் உறவினர் ஒருத்தர் பரிசாய்க் கொடுத்தார். வைச்சிருக்கேன். நீங்க சொல்லி இருப்பது குறித்துத் தெரியாது!

   Delete
 20. 51 சக்தி பீடங்கள்ல் ஒன்று என்றுசொல்லி விட்டீர்கள் எல்லா இடங்களுக்கும் யாரும் போயிருக்கும் வாய்ப்பு உண்டா

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பிஐயா, இந்தக் கோயில் தொலைக்காட்சிகளில் காட்டப்படுகிறது! :)

   Delete
 21. வடதேசத்துக் கோயில்கள் என்றால் திருப்பதியைக் கடந்து ஆலய தரிசனம் செய்ததில்லை...

  தலைநகர் தில்லி வரை சென்றிருக்கிறேன்...

  இந்தக் கோயிலைப் பற்றி எதுவும் தெரியவில்லை....

  சிவ சிவ..

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை,தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். தில்லி எல்லாம் இல்லை! :)

   Delete
 22. ஸ்ஸ்ஸ்ஸ் யாரும் கண்டுபிடிக்கல்லியே :)
  எதுக்கும் நானா சொல்லிடறேன் இது புனே மஹாலக்ஷ்மி கோயில்

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, ஏஞ்சல், பாதி தப்பு! பாதி ரைட்டு!

   Delete
  2. கோலாப்பூர்
   Jayakumar

   Delete
  3. ஏஞ்சல் பிட்டுப் பிட்டு வைச்சப்புறம் சொன்னதாலே உங்களைக் கணக்கிலேயே எடுத்துக்க முடியாது ஜேகே அண்ணா! அடுத்த முறை முயற்சி செய்யவும்! :)))))

   Delete
 23. புனே மஹாலக்ஷ்மி கோயிலா ...good...

  ReplyDelete
  Replies
  1. இல்லை உங்க ஜட்ஜ்மென்ட் தப்பு சிவா! :))))

   Delete
 24. புனே அல்ல , கொல்ஹாபூர் மஹாலட்சுமி

  ReplyDelete
 25. கோல்ஹாபூர் மஹாலட்சுமி

  ReplyDelete