எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, March 13, 2019

இன்றைய எண்ணங்கள்! ஒரு தேவையான மொக்கை!

சனிக்கிழமையில் இருந்தே வேலை அதிகம் ஆகி விட்டது. வீடு சுத்தம் செய்யும் வேலை ஆரம்பித்தோம். எப்போதும் போல் ஆட்களை இம்முறை அழைக்க முடியவில்லை. இரண்டு இரண்டு அறையாகச் சுத்தம் செய்யலாம் என ஆரம்பித்து விட்டோம். முதல் நாள் சமையலறையும் ஒரு படுக்கை அறையும் மட்டும் முடிந்தது. அடுத்த இரண்டு நாட்களில் மற்ற இடங்களைச் சுத்தம் செய்து விட்டு நிமிர்ந்தால் நேற்றிலிருந்து யாரானும் வருகை தந்து கொண்டே இருக்கின்றனர். பேச்சிலே பொழுது கழிந்து விடுகிறது. இன்று முக்கியமான விருந்த்னர். அவங்களுக்காக சிற்றுண்டி தயாரிப்பு பின்னர் பேச்சு என மதியம் 2 மணி வரை சரியாப் போய் விட்டது. பதிவுகள் போடவோ யார் பதிவுக்கும் வரவோ கிடைக்கும் நேரத்தில் தான் முடியுது! ஆகவே இன்னும் 2,3 நாட்களுக்கு நான் வரலைன்னாத் தேடாதீங்க! நாளைக்கும் மத்தியானத்துக்கு மேல் தான் வருவேன்.

சென்னையிலிருந்து மதுரைக்கும், மதுரையிலிருந்து சென்னைக்கும் "தேஜஸ் எக்ஸ்பிரஸ்" என்னும் புதிய ரயில் வண்டி விட்டிருக்கின்றனர். முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டது. தானியங்கிக் கதவுகள். இதில் ஏறினால் எல்லா வண்டிகளிலும் நாம் அடிக்கடி இறங்கி இறங்கி ஏறுவது போல் முடியாது. ஏனெனில் ரயில் கிளம்ப ஐந்து நிமிஷம் இருக்கையில் வண்டிக்கதவுகள் தானாக மூடிக்கொள்ளும். பின்னர் திறக்க இயலாது. பாஸ்வேர்ட் இருக்குனு சொல்றாங்க. ஆனாலும் பாஸ்வேர்ட் போட்டாலும் திறந்துக்கறதில்லையோனு நினைக்கிறேன். ஏனெனில் 2 நாட்கள் முன்னர் சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பிய ஒரு தகப்பன், மகள் இருவரில் மகளை இருக்கையில் அமர வைத்துவிட்டுத் தந்தை கீழே குடிநீர் வாங்கப் போயிருக்கார். ரயிலிலேயே வாங்கி இருந்திருக்கலாம். என்னமோ போறத நேரம். அவர் கீழே இறங்கியதுமே வண்டி கிளம்ப 5 நிமிடமே இருந்ததால் தானியங்கிக் கதவுகள் மூடிக்கொள்ளக் குடிநீர் பாட்டிலோடு வந்த தந்தை ரயில் நிலைய நடைமேடையில் செய்வதறியாது விழிக்க, யாராலும் கதவைத் திறக்க முடியவில்லை. ஊழியர்களாலும் முடியவில்லை போலும். வண்டி அடுத்த ஸ்டேஷனில் நிற்கையில் தான் கதவு திறக்கும் என்று சொல்லி இருக்கின்றனர். தகப்பனார் திகைத்துப் போய் வண்டியில் இருக்கும் மகளிடம் தன்னுடைய கைபேசி மூலம் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்லிவிட்டுப் பின்னல் கிளம்பிய குருவாயூரில் பயணம் செய்து மகளை மதுரையில் போய்ப் பிடித்திருக்கிறார்.தேஜஸ் காலை ஆறு மணிக்கு எழும்பூரில் இருந்து கிளம்புகிறது. இது சமீபத்தில் ஒருத்தருக்கு ஏற்பட்ட அனுபவம்.

இன்னொருத்தர் தன் மனைவியையோ, அம்மாவையோ ஏற்றி விட வந்தவர் இறங்குவதற்குள்ளாக வண்டிக்கதவுகள் மூடிக்கொள்ள அவர் திருச்சி வரை அந்த வண்டியில் பயணம் செய்யும்படி ஆகிவிட்டது என்கிறார்கள். இது எவ்வளவு நிஜம் எனத் தெரியவில்லை. ஆனால் இந்தக் கதவுகள் தானாக மூடிக் கொண்டாலும் பாஸ்வேர்ட் போட்டுத் திறக்கும்படியான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதோடு பயணிகளுக்கு இவற்றை எல்லாம் பயணச் சீட்டிலேயே அச்சடித்துக் கொடுக்க வேண்டும். ரயில் நிலையத்திலும் வண்டி கிளம்பும் சமயம் வரை அறிவிப்புச் செய்து கொண்டே இருக்க வேண்டும். எனக்கு இன்னமும் தேஜஸ் எக்ஸ்பிரஸில் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டவில்லை. கிட்டினால் படம் எடுத்துப் போடறேன். (யாரு அங்கே கிழிச்சேனு கூவறது?) இப்போல்லாம் காமிரா எடுத்துட்டுப் போறோமாக்கும்! 

102 comments:

 1. ஆஆஆஆஆஆஆஅ மீதான் 2ஸ்ட்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊ:)).. இல்லை எனில்.. எல்லோரையும் தேம்ஸ்ல தள்ளிடுவேன்ன்.. இன்குளூடிங் கீசாக்காஆஆஆஆஆ:))

  ReplyDelete
  Replies
  1. முதல்லே காவிரியிலே உங்களைப் பிடிச்சுத் தள்ளணும்! இஃகி,இஃகி, தண்ணியே இல்லையா, மணல் ஜூடா இருக்கும், பரவாயில்லையா?

   Delete
  2. ஹா ஹா ஹா நான் குரங்குக் குட்டி மாதிரியாக்கும்:)).. தள்ளுபவரை இறுக்கிப் பிடிப்பேன்ன்:). அப்போ கீசாக்காவும் மீயும் காவேரில குளிக்கலாம்:)).. ஹா ஹா ஹா..

   கீசாக்கா.. காவெரியில் இப்பவும் தண்ணி ஓடுது.. கல்யாணவீட்டில் காட்டுறார்கள்.. அது பழசில்லை.. இப்போ இப்போதான் எடுக்கிறார்கள்.. ரஜனி அங்கிளின் பட ரிலீஸ் எல்லாம் காட்டினாங்க. அப்பவும் தண்ணி நிரம்பி ஓடுது..

   Delete
  3. தீர்க்கதரிசி, கல்யாண வீட்டில் காட்டுவது கல்லணைப்பக்கம் என நினைக்கிறேன். திருவையாறுப்பக்கம் போன மாசம் போனப்போக் கூடத் தண்ணீர் இல்லை! போய்ப் பார்க்கணும். ஆனால் கல்லணைப் பக்கம் தண்ணீர் இருக்கு! அங்கே தான் எங்கேயோ எடுத்திருக்காங்கனு நினைக்கறேன். உங்க ரஜினி அங்கிளை எல்லாம் நான் சும்மாவே பார்க்க மாட்டேன். இப்போ எதுக்குப் பார்க்கணுமாம்?

   Delete
  4. அது திருவையாறு எனப் பொதுவாப் பேசுகிறார்கள்.. அம்மா மண்டபமும் அங்கிருக்குது.. சரியா இடப்பெயர் காணவில்லை, எங்காவது போர்ட் பார்த்தால் சொல்கிறேன்.. கொஞ்சம் நல்ல கிராமப் பகமாகத்தான் இருக்குது.

   ரஜனி அங்கிள் படம் மீயும் பார்க்கல்லே.. ஆனா கீசாக்கா அதில அவ்ர்.. கீசாக்காவை விட ச்ச்ச்சோ யங்காக இருக்கிறாராம்:).. ஹா ஹா ஹா.

   Delete
  5. அம்மாமண்டபம் அங்கே இல்லை, இல்லை, இல்லவே இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வேறே ஏதோ கிராமம் தான்! அது சரி ரஜினி அங்கிள் யங்கா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   Delete
  6. யாராவது ஒருத்தராவது உங்க பின்னூட்டம் படிப்பாங்களான்னு பார்த்தா... ஒருத்தரும் படிக்கலை. 1ஸ்டூ என்று எழுதத் தெரியாம 2ஸ்டூன்னு எழுதியிருக்கீங்களே இணையதள குமாரசாமி அதிரா அவர்களே

   Delete
  7. ஹலோவ் யார் கல்யாண வீடு யாருக்கு கல்யாணம் ????

   Delete
  8. ///ஒருத்தரும் படிக்கலை. 1ஸ்டூ என்று எழுதத் தெரியாம 2ஸ்டூன்னு எழுதியிருக்கீங்களே //

   ஆவ்வ்வ்வ்வ் சத்தியமா நெ.தமிழன்.. நீங்க சொன்னதும்தான் பார்க்கிறேன்ன்...

   விதி செய்த சதியோ அதிரா:)..
   விதி இல்லாமல் வாழ அதிரா...
   ஹா ஹா ஹா பாருங்கோ பாட்டுக்கூட சதி செய்யுது:).. வரிகள் வருகுதில்லை:))

   அஞ்சூஊஊஊ அதுவா.. நான் பல வருட இடைவெளிக்குப் பின்பு பார்க்கும் நாடகம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. அம்மா நின்றபோது அவவுக்கு கொம்பனி கொடுப்பதற்காகப் பார்க்கத் தொடங்கி, அம்மா போன பின் கைவிட்டேன்.. பின்பு பார்த்தால் காவேரியில தண்ணி பொங்கி ஓடத்தொடங்கிச்சுதா.. அப்போ தொடங்கி மீண்டும் பார்க்கிறேன்ன்.. காவிரி ஆற்ற்ரில போய் உடுப்பு தொய்க்கிறார்கள், பாத்திரம் கழுவுகிறார்கள்.. ஆசையா இருக்கு பார்க்க..

   Delete
  9. //இணையதள குமாரசாமி அதிரா அவர்களே//

   ஹ்ஹஹ்ஹா :) இப்போ பூனை கண்ணை உருட்டி விழிக்கிறது எனக்கு தெரியுதே :) மீக்கு தெரியும் குமாரசாமி யார்னு ஆனா பூனைக்கு தெற்ற்றறியாது

   Delete
  10. இந்தமாதிரி 2ஸ்டூ மாதிரி எக்கச்சக்கமா பார்த்துட்டோம் :) போனபோதுன்னு விட்டேன்

   Delete
  11. ஹாஹா அதிரடி, இதுக்குத் தான் நாங்கல்லாம் ஃபர்ஷ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூனு கத்திச் சொல்லுவோம். இப்போப் பாருங்க ஆனைக்கு அடி சறுக்கிடுச்சு! :)

   Delete
  12. யாரங்கே காவிரியில் தண்ணி இல்லைன்னா என்ன ஒரு ஹெலிகாப்டரில் அதிரா குண்டு கட்டா தூக்கிகிட்டு போய் தள்ளிவிடுறதுதானே அல்லது காவிரியில் ஒரு கிணறு வெட்டினால் அதில் நிச்சயம் தண்ணி இருக்கும் அதிராவை நினைச்சாலே இப்படி பல ஐடியாக்கள் தன்னாலே வருகிறது

   Delete
  13. ஹாஹாஹா, மதுரைத் தமிழரே! காவிரியில் தடுப்பணையில் தண்ணீர் இருக்கு! மியாவை அதிலே தள்ளிட்டாப் போச்சு! :))))

   Delete
  14. ஏஞ்சல், கல்யாண வீடுனு ஒரு நெடுந்தொடர் சன் தொலைக்காட்சியில் வருது. அதிரடி அதைப் பார்த்துட்டுச் சொல்றாங்க. திருவையாறு, தஞ்சாவூர், திருச்சி கதைக்களம்.

   Delete
 2. //ஒரு தேவையான மொக்கை!//
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இது மொக்கை இல்லை புலம்பல்ஸ்ஸ்ஸ் ஆக்கும்:))..

  அதுசரி உஞ்களுக்குத்தான் டஸ்ட் ஒத்துக் கொள்ளாதே.. எதுக்கு துப்பரவாக்க வெளிக்கிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்:))..

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எங்கே புலம்பி இருக்கேன்? இது ஒண்ணும் புலம்பல் இல்லை. 2,3 நாள் வர முடியாதுனு அறிவிப்பு! :)))))

   நான் எங்கே துப்புரவு செய்ய வெளிக்கிட்டேன்? மாமா தான் செய்தார். நான் மேற்பார்வை பார்த்தேன். அவர் சமையலறையில் செய்தால் இன்னொரு படுக்கை அறை இல்லைனா கணினி அறைக்குப் போனேன். அவர் வெளியே வந்ததும் உள்ளே போய் மூக்கையும் வாயையும் இறுக்கமாகத் துணியால் கட்டிக் கொண்டு பெருக்கினேன். வழக்கமா வரும் ஆட்கள் ரொம்ப பிசி! ஏதோ புதுக்கட்டிடத்தில் வேலை செய்யறாங்க. சாவி கொடுக்கணும் போல! அதனால் கூப்பிட முடியலை!

   Delete
 3. // பதிவுகள் போடவோ யார் பதிவுக்கும் வரவோ கிடைக்கும் நேரத்தில் தான் முடியுது! //

  அல்லோஓஓஓஓஓஓஓஒ கீசாக்கா.. இப்போ நீங்க போஸ்ட் போடல்லியே என ஆரும் ஓஓஓஓஓவென அழேல்லையாக்கும் ஹா ஹா ஹா.. அது இருக்கட்டும் நீங்க ஜாட்டுச் சொல்லாமல் ஓடி ஓடி எல்லோருக்கும் கொமெண்ட் போடுங்கோ:)).. ஹையோ எதுக்கு இப்போ தூசு தட்டும் தடியை என்பக்கம் திருப்புறா கீசாக்கா:).. அப்பூடி என்ன ஜொள்ளிட்டேன்ன்ன்:))

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உங்களை யார் சொன்னது? அஞ்சு கேட்பாங்க, தி/கீதா கேட்பாங்க! இன்னும் துரை கேட்பாங்க! நெ.த. கேட்பார்! ஹிஹி ட்ரம்ப் அங்கிள் கேட்பாஹ! உங்க ராணியம்மா கேட்பாஹ!

   Delete
  2. நான் எப்போ வரணுமோ அப்போ வந்து கரெக்டாக் கமென்டுவேன்!

   Delete
  3. அப்போ ரஜனி அங்கிளைப்போல எனச் சொல்றீங்க ஹா ஹா ஹா..:))

   Delete
  4. ஹாஹாஹா உங்க ரஜினி அங்கிளுக்கு நாங்க சொல்லிக் கொடுப்போம்! :P:P:P:P

   Delete
  5. யெஸ் கீதாக்கா நேத்து உங்களை காணோமேனு எபியில் கேக்க நினைச்சிட்டு வந்தேன் உங்க கமெண்ட் பார்த்து விட்டேன் :) ஒரு நாள் நீங்க சொல்லாம காணாமப்போனாலும் குண்டு பூனை தவிர நாங்கெல்லாம் தேடுவோம்

   Delete
  6. அதிரா... நான் கேட்டிருப்பேன் ஏன் பதிவு எழுதலைனு. பாருங்க ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை மூணு வாரம் லீவு கேட்கிற பதிவர், பதிவுலகத்துலயே கீதா சாம்பசிவம் மேடம் மட்டும்தான்

   Delete
  7. ///பாருங்க ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை மூணு வாரம் லீவு கேட்கிற பதிவர், பதிவுலகத்துலயே கீதா சாம்பசிவம் மேடம் மட்டும்தான்///

   ஹா ஹா ஹா இதெல்லாம் ஒரு பப்புளிக்குட்டிக்காகத்தான்:) பண்ணுறா போல கீசாக்கா:))

   Delete
  8. அதானே அஞ்சு, எனக்குத் தெரியும் மியாவ் பத்தி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதான் தன் வாயாலேயே சொல்லிடுச்சே, தேட மாட்டேன்னு! :)))))

   Delete
  9. நெல்லைத் தமிழரே, இது வரைக்கும் 2500க்கு மேல் பப்ளிஷ் ஆகி இருக்கு பதிவுகள். ஒரு காலத்தில் ஒரு நாளைக்கு 2 கூடப் போட்டிருக்கேன். இப்போல்லாம் குறைச்சுட்டு வரேன் என்றாலும் முக்கியக் காரணம் அதிக நேரம் இணையத்தில் உட்கார முடிவதில்லை. ஏதேனும் வேலை, அல்லது யாரேனும் வராங்க! :))))

   Delete
  10. அதிரடி, நீங்க என்னமோ என்னைக் காணோம்னு தேடப் போறதில்லை. அப்புறமா நான் எப்போ வந்தா என்னவாம்? :)))))

   Delete
 4. //ஆகவே இன்னும் 2,3 நாட்களுக்கு நான் வரலைன்னாத் தேடாதீங்க!///
  ம்ஹூம்ம்.. ஒரு கிழமை வரேல்லை எண்டாலே தேட மாட்டோம்ம்:) இதில ரெண்டு நாளாம்.. ஹா ஹா ஹா ஹையோ எனக்கு இண்டைக்கு என்னமோ ஆச்சூஊஊஊ:)).. புதன் கிழமை வந்தாலே எனக்கு ஓவர் புழுக்ஸ் வந்திடுது.. பிக்க்க்கோஸ்.. திங்க/ள் செவ்வாய் மட்டும்தேன் வேர்க் பண்றேனாக்கும்:))


  ///நாளைக்கும் மத்தியானத்துக்கு மேல் தான் வருவேன்.//

  சும்மா நாள்ளலே மத்தியானத்துகு மேல வரமாட்டா:).. இப்போ போய் பெரிசாச் சொல்லிக்கொண்டு.. முதல்ல என் கொமெண்ட்ஸ் ஐப் பப்ளிஸ் பண்ணுங்கோ:))

  ReplyDelete
  Replies
  1. உங்களை மாதிரி சமையல் பண்ணறேன் பேர்வழினு சொல்லிட்டுச் சும்மா ஏதோ குழைசாதமா பண்ணிட்டு இருக்கேன்? இஃகி,இஃகி,இஃகி! சாயந்திரம் சமையல் வேலை இருக்காதா? ராத்திரி ஆச்சுன்னா கணினியிலே உட்காராதேனு என்னோட கண் மருத்துவர் கட்டளை! அதனால் உட்காருவதில்லை! உங்க கமென்ட்ஸை பப்ளிஷ் மட்டும் பண்ணலை. பதிலும் கொடுத்துட்டேனே! இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க?

   Delete
  2. கீசா மேடம்... நீங்க சொல்றதைப் பார்த்தா குழை சாதம் நல்லாருக்காதா? நாளை பண்ணிப்பார்க்கலாம்னு நினைத்தேனே

   Delete
  3. //நாளை பண்ணிப்பார்க்கலாம்னு நினைத்தேனே///

   இது நெல்லைத்தமிழனுக்கு இல்லை:) குழைஜாதத்துக்கு ஹா ஹா ஹா

   https://media.tenor.com/images/155727b57089276d53bf72312629ab84/tenor.gif

   Delete
  4. வேண்டாம், வேண்டாம், அதிரடி சொல்லறதை வைச்சு ரிஸ்க் எடுக்காதீங்க நெல்லைத் தமிழரே!

   Delete
 5. //ஏனெனில் ரயில் கிளம்ப ஐந்து நிமிஷம் இருக்கையில் வண்டிக்கதவுகள் தானாக மூடிக்கொள்ளும். பின்னர் திறக்க இயலாது. //
  இப்படித்தானே கீசாக்கா வெளிநாட்டு ரெயின்கள்.. ஓட்டமெட்டிக் டோர். எனக்கும் இதில் பயணம் செய்யும்போது ஏறி இறங்கப் பயம்.. அப்படியே கூட்டமாக எலோரையும் பிடிச்சபடி இறங்குவோம் முன்பு குழந்தைகளாக இருக்கும்போது...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், நாங்க ஜெர்மனியிலேயும் ஷிகாகோவிலும் பார்த்தோம். அம்பேரிக்காவில் டெனிசியில் இன்க்ளைன்ட் ரயில் கூட ஆட்டோமாடிக் கதவு தான்னு நினைக்கிறேன். ஆனால் அங்கெல்லாம் பயமாக இல்லை.

   Delete
 6. //தேஜஸ் காலை ஆறு மணிக்கு எழும்பூரில் இருந்து கிளம்புகிறது. இது சமீபத்தில் ஒருத்தருக்கு ஏற்பட்ட அனுபவம்.//

  நான் தேஜா.. காஜா எனப் பெயர் சூட்டினேன்ன்..அ தை டக்குப் பக்கென மோடி அங்கிள் எடுத்து ரெயினுக்கு சூட்டிட்டார்போல:).. அநேகமா ட்றம்ப் அங்கிள் சொல்லி இருப்பார்:)).. பிக்கோஸ் மீ றம்ப் அங்கிளின் பேர்சனல் செக்கரெட்டரி அல்லோ:)) ஹா ஹா ஹா..

  ReplyDelete
  Replies
  1. இது அதிவேக விரைவு ரயில். காலை ஆறுமணிக்கு எழும்பூரில் இருந்து கிளம்பினால் சரியாப் பத்தரைக்குத் திருச்சி பின்னர் இரண்டு மணி நேரத்தில் மதுரை! தேஜஸ் என்னும் சொல்லுக்கு அதிவேகம், விரைவு என்னும் பொருளும் வரும். ஒளி பொருந்தியதுனும் சொல்லுவாங்க. காரமான சமையலுக்கும் தேஜ் என்பார்கள். உங்க ட்ரம்ப் அங்கிள் கிட்டேச் சொல்லிப் பெயரை வேணா மாத்துங்க! :P

   Delete
 7. //ஆனால் இந்தக் கதவுகள் தானாக மூடிக் கொண்டாலும் பாஸ்வேர்ட் போட்டுத் திறக்கும்படியான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்படி சரிவராது, அது சேஃப்ரி இருக்காது... போகப் போக மக்கள் பழகிடுவார்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஒரு அவசரத்துக்குப் பாஸ்வேர்ட் ரயில்வே ஊழியருக்கானும் தெரிந்திருக்க வேண்டாமா? ம்ம்ம்ம்? ஒரு பக்கம் நீங்க சொல்வது சரியாத் தான் தெரியுது!

   Delete
  2. இந்தியாவைப்பற்றித் தெரிஞ்சுகொண்டோ இப்பூடிச் சொல்றீங்க.. ஊழியருக்கு ஆயிரம் ரூபா நோட்டைக் குடுத்துப் பாஸ் வேர்ட்டை வாங்கிடுவினம் ஹா ஹா ஹா:)..

   இந்த ரெயினில ஒரு நன்மை, ஆரும் களவெடுத்துக்கொண்டு குதிக்க முடியாது:)..

   Delete
  3. தீர்க்கதரிசி, உண்மையிலேயே நீங்க தீர்க்கதரிசி தான். இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் இப்படி நடக்கும். :( வெட்கத்தோடு ஒப்புக் கொள்கிறேன்.

   Delete
 8. வணக்கம் சகோதரி

  சுவையான ரயில் பற்றிய தகவல்கள். இதுவரை அறியவில்லை. கொஞ்சம் பய பத்திரமாகத்தான் இந்த வண்டியில் பயணம் செய்யவேண்டும் போலிருக்கிறது.!பொதுவாக கடவுளிடமும், மனசாட்சியிடமும், பவ்யமுடன் நடந்து கொண்டால்தானே நல்லது. ஏனென்றால் இது "தேஜஸ்" அல்லவா? "தேஜஸ்" என்றால் ஒளி பொருந்தியவன், கடவுள் என்றுதானே பொருள்."அவன்" விருப்படிதானே இந்த மனித கூடுகளிலும் "உயிர்" என்ற பயணிகளுமாய் நாம் ஏறி இறங்குகிறோம். இறங்கியவரை அவனும் ஏற்றுவதில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா, வாங்க கமலா, வாங்க, நல்ல அருமையான விளக்கம். அதுவும் இறங்கினால் ஏற முடியாது என்பதற்குப் பொருத்தமாச் சொல்லிட்டீங்க. இந்தக் கோணத்தில் எனக்கு யோசிக்கத் தெரியலை!

   Delete
  2. அதான் சொன்னேனே.. கலக்கல் கமலா அக்காதான்!

   Delete
 9. ///இப்போல்லாம் காமிரா எடுத்துட்டுப் போறோமாக்கும்! //

  ஹையொ கீசாக்கா தேஜஸ் டோர் பூட்டமுன்பு கமெராவையும் உள்ளே இழுத்திடுங்கோ ஹா ஹா ஹா.. ஓகே மீ பின்பு வாறேன்ன்ன்:))

  ReplyDelete
  Replies
  1. இதுக்குக் கொடுத்த கருத்தைக் காக்கா தூக்கிட்டுப் போய்க் கீழே போட்டுடுச்சு! :))))))

   Delete
  2. எனக்கும் என் கேமரா நாளைக்கு ரிப்பேர் ஆகி வந்துடுமே ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ...இனி நிறைய படங்கள் எடுக்கலாமே ஏஏஏஏஏஏஏஏஏஏ....

   என் மகன் செட்டில் ஆனதும் எனக்கு நல்ல கேமரா வாங்கித் தரேன் என்று சொல்லிருக்காரேஏஏஏஏஏஏஏஏஏ!!!! இப்ப இந்த கேமராவும் அவன் யூஸ் செஞ்சதுதான். என்னிடம் கொடுத்துவிட்டான். அவனுக்கு இப்போது சுத்தமாக நேரமெ இல்லாததால். க்ளினிக், ரூம் என்று மட்டுமே இருப்பதால்.

   கீதா

   Delete
  3. வாங்க தி/கீதா, எனக்கு என்னமோ செல்லில் எதுவும் சரியா வரதில்லை. அதனால் காமிரா!

   Delete
 10. தேஜஸ் பற்றி அனைவரும் அறிய வேண்டிய ஒன்று... WhatsApp-ல் எனது நண்பர் ஒருவர் இதைப் பற்றி தெரிவித்து இருந்தார்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி, ஆமாம், அநேகமா இப்போ முகநூல், வாட்சப்பில் தேஜஸ் குறித்த தகவல்கள் தான் அதிகம் வருகின்றன.

   Delete
 11. ஹாஹாஹா, அதிரடி, எங்களை யாருனு நினைச்சீங்க! ரயில் கிளம்பறதுக்கு ஒரு மணி நேரம் முன்னாலேயே போயிடுவோம். ரயிலுக்குள்ளே அரை மணி முன்னாடி உட்கார்ந்திட மாட்டோமா என்ன? வாங்க, வாங்க மெதுவா வாங்க, ஒரு கை இல்லை இரண்டு கையாலும் பார்த்துடறேன். :)

  ReplyDelete
 12. தேஜஸ் விவரங்கள் படு ஜோர்.
  அவசியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது.
  முக்கியப் பட்டவர்கள் வருகிறார்களா. மாமாவுக்கு என் பாராட்டுகள்.

  அரட்டைக் கச்சேரி கலகலப்பு கூடுகிறது.
  தூசி படாமல் பத்திரமாக இருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, உங்க கருத்தை நேத்து ராத்திரியே வெளியிட்டேன். ஆனால் என்னமோ தெரியலை. இருந்த இடத்தை விட்டு நகராமல் இருந்திருக்கு. காலம்பரயும்2 தரம் வெளியிட்டதும் தான் வந்தது! :)))))

   Delete
 13. தேஜஸ் போலவே விறுவிறுப்பான பதிவு..

  நவீன வசதிகளுக்கு மக்கள் பழகிக் கொள்ள வேணும்.. சற்று நாளாகலாம்...

  வாழ்க நலம்....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் துரை. மக்களுக்குப் பழகணும். பழகும் வரை கஷ்டம் தான். தில்லியில் மெட்ரோ ரயில் சேவையில் இப்படித் தான் தானியங்கிக் கதவுகள் எனச் சொல்கின்றனர். நான் அந்த ரயிலில் ஏறியதே இல்லை. மக்கள் அதிலேயே பழகி விட்டார்கள் என்னும்போது இதில் பழகக் கஷ்டம் இருக்காது. விரைவில் பழகி விடும்.

   Delete
 14. /// சிற்றுண்டி தயாரிப்பு பின்னர்//
  அந்த சிற்றுண்டியை இங்கே தட்டில் வைங்க நாங்க கொறிச்சுட்டு இருக்கோம் நீங்க வரவரைக்கும் :)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, ஏஞ்சல், நான் தயாரிக்கும்போதே விருந்தினர் வந்துட்டாங்க. அப்புறம் ஏற்பட்ட மும்முரத்தில் படம் எடுக்கலை. மசால் வடை, கேசரி, காஃபி! முன்னெல்லாம் இளைய நண்பர் அம்பிக்குக் கேசரி பிடிக்கும் என்பதால் கேசரி பண்ணும்போதெல்லாம் படம் எடுத்துப் போட்டு வெறுப்பேத்துவேன்! :)))) நேற்றும் அவரை நினைத்துக் கொண்டேன்.

   Delete
  2. மசால் வடை, கேசரி, காஃபி!//

   ஓ இதான் நேற்றைய எபிய்ல் போட்டிருந்தீங்களா...ஆஹா...வந்திருக்கனும்...மீக்கும் கேசரி ரொம்பப் பிடிக்கும் ஆனால் நாமதான் ஸ்வீட்டோ ஸ்வீட்டாச்சே!!

   கீதா

   Delete
  3. தி/கீதா, சர்க்கரை நோய் என்பதற்காக அவ்வப்போது இனிப்பு எடுத்துக்காமல் இருக்கலாமா? என்னோட முறைப்படி செய்தீர்களானால் சர்க்கரையும் குறையும். இனிப்பும் அவ்வப்போது சாப்பிடலாம். காலையில் நெல்லிக்காய்+பாவக்காய் ஜூஸ் வெறும் வயிற்றில் ஒவ்வொரு சாப்பாடு நேரத்தின் முன்னும் ஒரு டீஸ்பூன் முளைக்கட்டிய வெந்தயம், கடித்துச் சாப்பிடணும். வெந்தயத்தை சுமார் பனிரண்டு மணி நேரமாவது ஊற வைச்சுப் பின்னர் முளைக்கட்டி ஒரு பாட்டிலில் போட்டுக் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சுக்குங்க. சாப்பாடுக்கு முன்னர் ஒரு டீஸ்பூன் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

   Delete
 15. இங்கே லண்டன் ஜெர்மனில இப்படிதான்க்கா .நம்மூரில் தேஜஸ் ட்ரெயின் ஸ்டார்ட் பண்ணுமுன்ன கட்டாயம் ரெயில்வே ஊழியர்கள் இருக்கணும் அப்போதான் அவங்க பாஸ் வொர்ட் போட்டு உதவ முடியும் பிறகு நேரத்துக்கு ஏற இறங்க பழகிடுவாங்க நம்மூர் மக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஏஞ்சல், விஷயம் தெரிந்த ஊழியர் ஒருவர் கதவுக்கு அருகில் இருந்து கொண்டு பயணிகளுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும்.

   Delete
 16. தேஜஸ் இல் ஏறும் பயணிகளுக்கு பாஸ் ஒர்ட் கொடுக்க அவசியமில்லை ஆனால் கட்டாயம் ஒரு ஊழியர் கதவு திறக்குமிடத்தில் இருப்பது அத்தியாவசியம் இப்போல்லாம் பல தகா விஷயங்கள் கேள்விப்படறோம் செக்யூரிட்டி போல் ஒருவர் ரெயில்களில் இருப்பது நல்லது .

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் ரயிலில் ஏறி உட்கார்ந்த பின்னர் கீழே இறங்கக் கூடாது என்பதையும் அறிவுறுத்த வேண்டும்.

   Delete
 17. தேஜஸ் பற்றிய தகவல் நானும் பார்த்தேன்.

  வேலைகள் - அவ்வப்போது இப்படி இணையம் பக்கம் வர முடியாமல் போகிறது எனக்கும்!

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் தலையைத் தின்னும் வேலைகள்... ஏற்கெனவே சொல்லிப்புலம்பியும் இருக்கிறேன்!!

   Delete
  2. வாங்க வெங்கட், நீங்க கூட வந்துட்டீங்க! ஸ்ரீராம் இன்னமும் பிசி போல! எட்டிப் பார்க்கலை! எனக்கும் இப்போதெல்லாம் நேரத்தைச் சரிக்கட்டிக்கொண்டு வருவது என்பது இயலாமல் போகிறது.

   Delete
  3. சொல்லிட்டிருக்கும்போதே ஶ்ரீராம் வந்துட்டார்!

   Delete
 18. Replies
  1. அம்மா.. நீங்கள் பதிவுகள் போட்டுக் கொண்டிருக்கிறீர்களா? ஏன் எங்களுக்குத் தெரிவதில்லை? அஸ்வின் ஜி சொன்ன செட்டிங்ஸ் மாற்றங்கள் செய்துள்ளீர்களோ? எனக்கு ஒரு மெயில் வந்தது - உங்கள் தலை இன்வைட். ஆனால் அதைக் க்ளிக்கி ஒன்றும் ஆகவில்லை.

   Delete
  2. போட்டுட்டேன் வல்லி! :))))

   Delete
  3. எனக்கும் வல்லியின் பதிவுகள் வரவில்லை. அவங்க கொடுத்த சுட்டியின் மூலம் உள் நுழைய முடியலை! அவங்களிடமும் சொன்னேன். :(

   Delete
  4. எனக்கும் வல்லிம்மாவின் பதிவுகள் வரவில்லை...தளம் போனால் ஒன்றுமே வரவில்லை...

   கீதா

   Delete
  5. வல்லிம்மா தளம் போனால் இப்படித்தான் செய்தி வருது...

   This blog is open to invited readers only
   http://naachiyaar.blogspot.com/
   It doesn't look like you have been invited to read this blog. If you think this is a mistake, you might want to contact the blog author and request an invitation.

   You're signed in as thulasithillaiakathu@gmail.com - Sign in with a different account

   கீதா

   Delete
  6. ஆமாம், இப்படித் தான் செய்தி வருகிறது!

   Delete
 19. காரடையான் நோன்புக்குத் தயாராகிறீர்களோ! அதுதான் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பிஸி வேலைகளோ! கடந்த இரு வருடங்களாக எனக்கு நோன்புக் கொழுக்கட்டைக்கு கிடைப்பதில்லை!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, நோன்புக்குனு எல்லாம் இல்லை. வழக்கமான சுத்தம் செய்யும் வேலை தான். 3 மாசத்துக்கு ஒரு தரம் வீடு மொத்தமும் சுத்தம் செய்வோம். இம்முறை கொஞ்சம் தாமதம்! நோன்பு வேலைகள் கொஞ்சம் இன்னிக்கு இருக்கு!

   Delete
 20. தேஜஸ் வண்டி அனுபவம் எனக்கும் வாட்ஸாப்பில் க்ரூப் க்ரூப்பாக வந்தது. படித்துத் தெரிந்துகொண்டேன். தேஜஸ் ரொம்ப பாஸ்ட் என்று சொன்னாலும் அதன் வேகத்துக்கும் வைகையின் வேகத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை என்றே தோன்றுகிறது. ஆனாலும் மதுரை சென்னை இடையே ஒரு கூடுதல் ரயில் வண்டி விடப்பட்டிருப்பது வசதிதான். விலைதான் அதிகம்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், அநேகமாக எல்லோருக்குமே வந்திருக்கும் போல! விலை ரொம்பவே அதிகம். சாப்பாடு நன்றாக இல்லைனும் சொல்றாங்க. ஆனால் பயணச்சீட்டு வாங்கும்போது கேட்பார்கள் என நினைக்கிறேன். சாப்பாடு வேண்டாம் எனில் பயணச்சீட்டு விலை குறைவாக இருக்கலாம். தேஜஸில் சென்னை-திருச்சி-மதுரை! இவை மூன்று தான். வைகை அப்படி இல்லையே!

   Delete
  2. எனக்கு வாட்சப்பில் வரவில்லை...ஆனால் தேஜஸ் வந்திருக்கு என்று மதுரையில் இருக்கும் உறவினர் மூலம் அறிந்தேன்...அவர்கள் ஆசைப்பட்டு ஒரே ஒரு முறை போகலாம் என்று போனார்களாம் ..விலை ரொம்ப அதிகம் என்றார்கள். சாப்பாடு சுத்தமாக நன்றாக இல்லைனு சொன்னாங்க...
   ஓ சாப்பாடு இல்லைனா விலை குறைவுதானா...

   கீதா

   Delete
  3. சாப்பாடு பத்தித் தனியாக் கேட்பதால் அதற்கும் சேர்த்து விலை என நானாக நினைத்துக் கொண்டேன். அதே போல் மூத்த குடிமக்களுக்கான சலுகையும் இல்லைனு நினைக்கிறேன், விசாரிக்கணும்.

   Delete
  4. தேஜஸில் மூத்த குடிமக்களுக்கான சலுகை விலை இருக்கு! பார்த்துட்டேன்.

   Delete
 21. நான் உள்ளூர் மெட்ரோ ரயிலிலேயே இதுவரை ஒரே முறைதான் பயணித்திருக்கிறேன். அதன் நடைமுறைகளே எனக்கு இன்னும் பழகவில்லை!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம் நான் சென்னையில் சென்றதில்லை ஆனால் தில்லியில், இங்கு பங்களூரில் நிறைய போயாச்சு...ஆனாலும் இங்கு பங்களூரில் ஸ்டேஷன் உள்ளே சென்றதும் கொஞ்சம் நன்றாக வாசித்து எந்த ரயிலில் நாம் செல்ல வேண்டும் என்பதை இரு முறை செக் செய்துகொண்டு டைரக்ஷன் எல்லாம் பார்த்துதான் போவேன்...ஹிஹி

   கீதா

   Delete
  2. ஓ, இங்கு சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களிலும் இப்படித்தான் தானியங்கிக் கதவுகளா?

   Delete
 22. உங்களைக் காணோமேனு சொல்லி இருந்தேன். அதுக்குள்ளே உங்க கருத்துகள் எல்லாம் வந்திருக்கு. நானும் சென்னை மெட்ரோவில் சென்ட்ரலில் இருந்து தரமணி வரை ஒரு தரம், ஒரே ஒருதரம் போயிருக்கேன். அதுவும் ஏழு, எட்டு வருடங்கள் முன்னால்!

  ReplyDelete
  Replies
  1. கீதாக்கா ஸ்ரீராம் சொல்லிருப்பது சமீபத்திய மெட்ரோ ரயில்....சப் அர்ப் ரயில் இல்லைனு நினைக்கிறேன். மெட்ரோ தானே கிட்டத்தட்ட தேஜஸ் போல!!!

   கீதா

   Delete
  2. ஓஹோ, நான் முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னர் வந்த சபர்ப் ரயில் பத்திச் சொல்றார்னே நினைச்சேன். அதையும் மெட்ரோ எனச் சொன்னார்கள்.

   Delete
 23. மொக்கைனு சொல்லிட்டு நல்ல தகவல் கொடுத்து பதிவு போடுவதே கீதாக்காவின் வழக்கமா போச்சு ஹா ஹா ஹா ஹா ஹா

  செம கும்மி போல!!! கொஞ்சம் உடம்பு முடியாமப் போச்சு..மிஸ் பண்ணிட்டேன்...இப்பா ஆறிப் போச்சே...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தகவல் பயனுள்ளதாய் இருந்தால் நல்லது தானே தி/கீதா1

   Delete
 24. தேஜஸ் தகவல் பலருக்கும் பலன் தரும் செய்தி

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, கல்யாண அலுப்பு இன்னமும் தீரலையா?

   Delete
 25. தேஜஸ் ல் கதவு மூடல் எல்லாம் ஒரு விதத்தில் நல்லதுதான்...சில சமயம் ஏற்றி விட வருபவர்கள் ஏற்றிவிட்டு வெளியில் வந்து நின்று கொண்டு பேசாமல் சீட்டிலேயெ அமர்ந்து பேசிவிட்டு ரயில் கிளம்பும் சமயம் ஏறுபவர்க்ளுக்கு இடைஞ்சலாக வெளியே வருவதும் நடக்கும்...பலரும் இப்படி வெளியே வரும் போது ரயிலில் பயணம் செய்ய ஏறுபவர்களுக்கு லக்கேஜுடன் ஏறுவதும் சிரமம் இன்னும் சற்று நேரத்தில் ரயில் கிளம்பும் டென்ஷன் வேறு இருக்கும்...

  ஆனால் மக்கள் இந்த சிஸ்டத்திற்குப் பழகிக் கொள்ள வேண்டும்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தி.கீதா. இம்முறையில் முன்னை மாதிரி எல்லாம் செய்ய முடியாது! ஆகவே அதிகக் கவனம் தேவை தான்!

   Delete
 26. இதில் வெளியில் இறங்கினால் கதவு மூடிக் கொண்டதால் ஏற் முடியாமல் போனது கொஞ்சம் சங்கடமான விஷயம் என்றாலும் சிலர் நார்மல் ரயில்களில் கூட சிலர் இறங்கி விட்டு ரயில் கிளம்பும் சமயம் ஏறுவார்கள் அதுவும் ஆபத்துதான்...சில ரயிலைத் தவற விடுவதும் உண்டு...இந்த சிஸ்டம் நல்லதுதான்..

  பாஸ்வேர்ட் சரியாக வேலை செய்தால் நல்லது..பழக நாள் எடுக்கும் தான்...

  ஆனால் குழந்தை ரயிலில் அப்பா வெளியில் என்பது சம்பவம் கஷ்டமாகிப் போச்சு...பாஸ்வேர்ட் இல்லை என்றால் நம் பயணச் சீட்டை அதாவது அன்றைய அந்த ரயிலின் பயணச் சீட்டை கதவில் ஒரு இடத்தில் வைத்தால் கதவு திறக்கும் என்ற படியும் அமைக்கலாம் இல்லையா?

  கீதா

  ReplyDelete
  Replies
  1. சாதாரண ரயிலில் கிளம்புகையில் ஏறுபவர்கள் தங்கள் சாகசத்தைக் காட்டுவதற்காகச் செய்கின்றனர். நீங்க சொல்ற மாதிரி பயணச்சீட்டைக் கதவில் வைத்தால் திறக்க வேண்டும் என்று செய்யலாம்.

   Delete
 27. எனக்கும் வீடு சுத்தம் செய்யும் வேலைகள் இருக்கு அக்கா.. இங்கு தூசி ரொம்பவே படிகிறது..ரொம்ப அதுவும் வலை வலையாகப் படிகிறது...தினமுமே அடித்துப் பெருக்க வேண்டும் இல்லை என்றால் ஒரு லேயர் தூசி...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தினமும் நான் தானே பெருக்கித் துடைக்கிறேன். ஆகவே அவ்வப்போது கண்ணில் படுவதை எடுத்து விடுவேன். ஆனால் 3 மாசத்துக்கு ஒரு தரம் எல்லா அறைகளும் சுத்தம் செய்து தான் ஆக வேண்டி இருக்கு!

   Delete
 28. தினமும் வீட்டைப்பெருக்கி துடைத்தவந்தால் இந்த தொந்தரவு இருக்காது எப்போதாவது ஒட்டடை அடித்தால் போதுமே

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி ஐயா, தினம் தினம் வீட்டைப் பெருக்கித்துடைக்கிறேன் எனச் சொல்லி இருக்கேன். அப்படியும் 3 மாசத்துக்கு ஒருதரமாவது சுத்தம் செய்ய வேண்டாமா? அதைத் தான் இங்கே குறிப்பிட்டேன். :))))

   Delete
 29. தேஜஸ் பற்றி வாட்ஸாப்பில் வந்தது. ரயில்வே ஊழியர்களுக்கு மட்டும் அந்த கடவுச்சொல் தெரியுமாம்.
  அந்த தேஜஸ் வண்டியில் திருச்சி கோட்டா எண்பது இருக்கைகளாம், ஆனால் அனைத்தும் புக் ஆகி விட்டதாம். திருச்சியிலிருந்து சென்னை செல்ல ரூ.இரண்டாயிரம் ஆகிறதாம், பயண நேரம் நான்கு மணி நேரம்தான். சீனியர் சிட்டிசென்களுக்கு கன்சஷன் உண்டா என்று தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி. சிவராத்திரி தரிசனத்துக்கு வர முடியலை போல! பரவாயில்லை. தேஜஸில் பயணச்சீட்டு எடுப்பதில் சிரமம் ஒண்ணும் இல்லை என்கின்றனர். விலை அதிகம் அல்லவா? அநேகமாக அனைவரும் பல்லவனையே விரும்புவதாகச் சொல்கின்றனர். மூத்த குடிமக்களுக்குச் சலுகை விலையில் பயணச்சீட்டு உண்டு.

   Delete