எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, March 15, 2019

பழசு தான், ஆனாலும் சாப்பிடலாம்! :)

இன்னிக்குக் காரடையான் நோன்பு என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இது முன்னர் எப்போதோ நோன்பின் போது எடுத்த படம். இந்த வருஷப் படம் இல்லை. ஆனால் எப்போதும் போல் கொஞ்சமாகத் தான் கொழுக்கட்டை செய்தேன். காலை ஐந்தே முக்காலுக்குள்ளாகச் சரடு கட்டிக் கொண்டாகி விட்டது.  இந்த வருஷம் அதிசயமா எங்க குடும்பப் புரோகிதரின் உதவியாளர் வந்து நோன்புச் சரடு கொடுத்தாரே என அதை எடுத்தால் கையில் கூடக் கட்டிக்கொள்ள முடியாது! அவ்வளவு குறைந்த நீளம். ஏதோ கொடுத்தேன் எனப் பெயர் பண்ணிட்டார். வருஷா வருஷம் விலைக்குத் தான் வாங்குவோம். அது போல வாங்கி இருந்திருப்போம். நல்லவேளையாப் போன வருஷச் சரடுகளை பத்திரமாக வைத்திருந்ததால் அதைத் தேடி எடுத்துக் கட்டிக் கொண்டேன். நல்லபடியா நோன்பு முடிஞ்சது.

இன்று மாலை பல்லவனில் என் தம்பியும் அவன் மனைவி, பெரிய மகன் ஆகியோர் வருவதால் இன்றும் நாளையும் கொஞ்சம் வேலை! வெளியே போக வேண்டியது என இருப்பதால் நாளைக்கு வர மாட்டேன். அதிரடி, சொல்லாமல் போயிட்டேன்னு சொல்லக் கூடாது! நெல்லைத் தமிழரே! எப்போவானும் பதிவு போடுகிறேன் எனக் குற்றம் சொல்லாதீங்க! முடிஞ்சால் பழைய பதிவுகளைப் போய்ப் படிங்க! வந்ததும் தேர்வு வைப்பேன். :)))) அஞ்சு, இரண்டு நாளும் நீங்க பிசியா இருப்பீங்க! முடிஞ்சப்போ வாங்க! அதிரடி கிட்டே சொல்ல வேண்டாம்!

54 comments:

  1. காரடையாந் நோன்பு வைத்த கையோடு எல்லாருக்கும் பரிட்சையா?...

    ஹூம்... நாம பெஞ்சு மேல நிக்க வேண்டியது தான்....

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா துரை, படிச்சு வைங்க! சமயத்தில் நல்லாவும் எழுதி இருப்பேன். ஆரம்ப காலங்களில் மக்களைக் கவர்வதற்காகக் கொஞ்சம் மொக்கை தான் இருக்கும். பின்னர் சூடு பிடிச்சதும் பதிவுகள் ஓரளவு பரவாயில்லை ரகம். எனினும் அந்த வாசனை அவ்வப்போது வந்துடும்! :)))) உடன் பிறந்தே கொல்லும் வியாதி! :))))

      Delete
    2. ஹா ஹா ஹா துரை அண்ணா டெஸ்ட் நெல்லைக்குத்தான்...நமக்கு இல்லை நாம தப்பிச்சோம்!!! ஹிஹிஹி...

      இருந்தாலும் பழசை வாசிக்கலாமே...நெல்லை கீழ சொல்லிருக்கறது போல் அம்பி, கொத்தனார் எல்லாம் அப்ப கல்லகியிருப்பாங்க...நான் கொஞ்சம் முன்ன வாசிச்சுருக்கேன் தான்...

      கீதா

      Delete
    3. தி/கீதா, தேர்வு எல்லோருக்கும் உண்டு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இன்னும் பாருங்க எஸ்கே எம் னு ஒரு பெண்மணி கருத்துக்களில் கலக்கி இருப்பாங்க! அதெல்லாம் ஒரு காலம். ஆனால் எல்லோருமாகச் சேர்ந்து கொண்டால் என்னைக்கலாய்ப்பதே அவங்களுக்குப் பிடிக்கும். :))))

      Delete
  2. Replies
    1. ஹாஹாஹா, அனுராதா, இல்லையே! :))))

      Delete
  3. நோன்பு கொழுக்கட்டை ..ஆஹா எனக்கு பக்கத்து வீட்டு மாமி தருவாங்க..

    எல்லாரும் ஒன்று சேரும் போது அது மகிழ்ச்சியான நேரங்கள் ...உங்க தம்பி குடும்பத்துடன் என்ஜாய் பண்ணுங்க

    ReplyDelete
    Replies
    1. அனுராதா, அண்ணனும் வரதாத் தான் இருந்தது. அப்புறமா அவங்க வரலைனுட்டாங்க! :( தம்பி போன மாசமே வந்திருக்கணும். பிள்ளைகள் இருவருக்கும் அம்மன் விளையாடியதால் வர முடியலை!

      Delete
  4. சொந்தங்களோடு சந்தோசம் பெருகட்டும் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி டிடி. முன்னெல்லாம் நாங்க 3 மாசத்துக்கு ஒரு தரம் சென்னை போவோம். இப்போ மருத்துவரை இங்கேயே பிடிச்சுட்டதால் போறதில்லை! :) அதனால் யாரேனும் வந்தால் சந்தோஷம் பொயிங்கும்! :))))

      Delete
  5. படங்கள் நல்லாவே வந்திருக்கு. வெல்ல நோன்பு அடை மஞ்சளா வந்திருக்கு. எப்படி இருந்தது என்று சாப்பிட்டவரைக் கேட்கலாம்னு பார்த்தா, அவர், விடை தெரிந்த கேள்விகளை தன்கிட்ட எப்போதும் கேட்கக் கூடாதுன்னு சொல்லிட்டார்

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. அதெல்லாம் காமிராவில் எடுத்த படங்கள்! வெல்லக் கொழுக்கட்டையையும், உப்புக் கொழுக்கட்டையையும் கீழே இலை போட்டு வைச்சிருக்கேன். இலையோட மஞ்சள் உங்களுக்கு அப்படித் தெரியுது. :)

      Delete
    2. நான் இதுவரை உப்புக் கொழுக்கட்டை சாப்பிட்ட ஞாபகமே இல்லை (காரடையான் நோன்பின்போது).

      Delete
    3. நெ.த. என் அம்மாவும் உப்புக் கொழுக்கட்டை எனக்குத் தெரிஞ்சு பண்ணினதே இல்லை. ஆனால் ஆசைப்படுவா பண்ணணும்னு! அப்பா அனுமதி கிடைக்காமல் பண்ணமுடியாது. பெரியப்பா வீட்டில் பண்ணுவாங்க!

      Delete
  6. பழைய பதிவுகளைப் படிக்காலாம்னு ஆரம்பித்தால், பதிவுகளைவிட கழுவிப் கழுவி ஊற்றிய அம்பி, இலவசக் கொத்தனார் போன்றவங்கதான் நினைவுக்கு வர்றாங்க

    ReplyDelete
    Replies
    1. வந்தால் என்ன நெ.த.??? அம்பி ஜி+இல் மட்டும் வந்துட்டு இருக்கார். அதை மூடினதும் என்ன செய்வாரோ? கொத்தனார் முகநூலில் இருந்தாலும் ட்விட்டரில் தான் பிசியோ பிசி! அவர் வைக்கும் குறுக்கெழுத்துப் போட்டி எல்லாம் அருமையா இருக்கும். கலந்துக்கலைனா "என்ன செய்யறீங்க?"னு மிரட்டுவார். கலந்துக்க வைப்பார்! :))))

      Delete
    2. Ambi is incomparable! :))))) ரெண்டு பேருக்கும் ஒரே நக்ஷத்திரம் என்பதாலோ என்னமோ ஒத்துப் போகும். சண்டையும் பிடிச்சுப்போம். அவர் டாம் எனில் நான் ஜெரி! ஆனால் அவரைக்கேட்டால் என்னைத் தான் டாம் என்பார். அதெல்லாம் இல்லை! அவர் தான் டாம்! :)))))

      Delete
  7. நோன்புச் சரடு, பூணூல் போன்றவை பல சமயங்களில் ரொம்பக் குட்டையாச் செய்திடறாங்க. யார் அளவுக்குச் செய்யறாங்கன்னே தெரியறதில்லை

    ReplyDelete
    Replies
    1. இது சாமவேதிகள் ஆவணி அவிட்டத்தின் போது கையில் கட்டிக்கொள்ளும் கங்கணம் என நம்ம ரங்க்ஸ் சொன்னார். நல்லவேளையாப் பழசை வைச்சிருப்பேன் எப்போதுமே!

      Delete
    2. குட்டையா...


      ஆமாம். ஆமாம்.

      Delete
    3. முன்னெல்லாம் தக்ளியில் நூல் நூற்றுப் பூணூல், திருமங்கலியச் சரடு செய்வாங்க. இப்போதைய புரோகிதர்களுக்குத் தக்ளினாலே தெரியுமா, சந்தேகமே! :( எல்லாம் முன்னேற்றம்!

      Delete
  8. அத்தனை வேலைகளுக்கு இடையிலும் பதிவு வெளியிடறது, பின்னூட்டம் போடறதுன்னு பிஸியாவே செயல்படறீங்க. பாராட்டறேன்.

    நன்னி ஹை இக்கி இக்க. (இந்த பதிலை எழுதக்கூட வாய்ப்பு கொடுக்கலை)

    ReplyDelete
    Replies
    1. இதை விட பிசியா எல்லாம் இருந்திருக்கேன். கொஞ்ச நாட்கள் லினக்ஸ் மொழி பெயர்ப்பு அப்புறமா நண்பர் ஒருவர் மூலமா தினத்தந்தி நூற்றாண்டு மலர் வேலைனு செய்து கொடுத்துட்டு இருந்தேன். 2015வரைக்கும் அதெல்லாம்! இப்போ யாரும் கேட்பதும் இல்லை! நானும் செய்வதும் இல்லை! :)))) 2016 ஆம் வருஷத்தில் இருந்தே பிரச்னைகள் பெருகி விட்டன! :)))) அதோடு மல்லுக்கு நிற்க வேண்டி இருக்கு!

      Delete
  9. ஹை ப்ழகா இருந்தாலும் நல்லாருக்கே கீதாக்கா

    இங்கும் ஆயிற்று காலையில்...அதான் லேட்டு இன்னும் ப்ளாக் போனும் ஒவ்வொன்னா விட்டது எல்லாம் பார்த்துட்டு வரேன்..

    இனிதான் நம்ம ஏரியா, நம்ம வீடு, தில்லி எல்லாம் போனும்...எப்படியும் லேட்டுதான் ஸோ லேட்டாவே போவோம்னு..ஹா ஹா ஹா

    தம்பி குடும்பம் வருவது செம ஜாலிதான் எஞ்சாய் அக்கா!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, காமிராவில் எடுத்த படம் அல்லவோ! அதான்! மெதுவா எல்லா இடமும் போயிட்டு வாங்க!

      Delete
  10. இன்னிக்கான கொழுக்கட்டை படம் வந்திருக்கும்னு நினைச்சேன் பரவால்ல பழசை போட்டுட்டீங்க...

    ஸோ பிஸி டேய்ஸ் நாளை எல்லாம்..இல்லையா..சரி சரி இந்த ரகசியத்த அதிரடிகிட்ட சொல்லவே மாட்டோமாக்கும்!!

    இருக்கு பாருங்க பழைய கொழுக்கட்டைக்கு ஒரு ஆட்டம் போடப் போறாங்க ஹா ஹாஅ ஹா ஹாஹ்...

    நான் ஏஞ்சல் ஸ்ரீராம் நெல்லை எல்லாரும் சாப்பிட்டுவிட்டாங்க அதுவும் ஏஞ்சல் முந்திக்கிட்டாங்கனு.. ரகசியமாவே இருக்கட்டும்!! )..அதான் கீசாக்கா பழகை வெச்சுட்டா எனக்கு என்று சொல்லி குதிக்கப் போறாங்க தேம்ஸ்ல!! ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இன்னிக்குக் கொழுக்கட்டை என்னமோ ரொம்பக்கம்மியாப் போச்சு! அதனாலேயே எடுக்கலை! இத்தனைக்கும் எப்போவும் போடும் அரிசி போட்டிருந்தேன்! அதிரடி வந்தா இதைச் சாப்பிட்டால் சாப்பிடட்டும். இல்லைனா நாமே தேம்ஸில் பிடிச்சுத் தள்ளிடலாம்! :))))

      Delete
    2. ரெண்டுமே ஒண்ணுனு சொல்லவர்றீங்களா கீசா மேடம் (சாப்பிடுவது, தேம்ஸில் விழுவது). எனக்கு அப்படித் தோணலை. நல்லாவே வந்திருக்கு.

      Delete
    3. கீதா ரெங்கன்... நான் போன வருஷம் சாப்பிட்டது!! படத்தில்தான்!

      Delete
    4. ஹாஹா, நெல்லைத் தமிழரே, நீங்க வந்தால் உங்களைக் காவிரியில் எல்லாம் பிடிச்சுத் தள்ள மாட்டேன். அதனால் தைரியமாச் சொல்லுங்க! அவ்வளவு மோசமாவா இருக்கும் நான் பண்ணும் கொழுக்கட்டை? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    5. ஸ்ரீராம், உங்க பாஸ் தான் எல்லாம் நல்லாச் செய்வாங்களே, அப்புறமும் ஏன் கிடைப்பதில்லை?

      Delete
  11. புது கொழுகட்டை கொடுக்காமல், பழசுதான் ஆனாலும் சாப்பிடலாம் என்று சொல்கிறீர்கள்.
    தம்பி குடும்பத்தினர் வருவதால் மகிழ்ச்சியாக பொழுதுகள் வேகமாய் ஓடும்.
    காரடையான் நோன்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா கோமதி! இன்னிக்கு எண்ணிக்கைஅளவில் கொழுக்கட்டை! அதான் படம் எடுக்கலை. போடலை!

      Delete
  12. Enjoy your weekend akkaa :)

    நாங்களும் வெளில போறோம் மண்டே தான் வலைப்பக்கம் வருவேன் ..
    வெல்ல கொழுக்கட்டையும் உப்பு கொழுக்கட்டையும் வாழை இலையில் ஸ்டீம் செஞ்சதா ..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஏஞ்சல்! ஆமாம், நான் எந்த ஸ்டீமிங்கானாலும் சரி வாழை இலை தான்! சென்னை, அம்பத்தூரில் இருந்தவரை வீட்டிலேயே வாழை மரம் இருக்கும். பிரச்னை இல்லை. இங்கே சாப்பாடு சாப்பிடவே வாழை இலை தான் என்பதால் இங்கேயும் கிடைச்சுடும். வாரக் கடைசி நாளை நன்றாக அனுபவித்துக் கழித்து விட்டு வாருங்கள். புத்துணர்ச்சியோடு!

      Delete
  13. இந்த நோன்பு சமாச்சாரங்கள் அனைத்தையும்பெண்க்சள் மட்டுமே செய்கிறார்கள்ஆண்கள்பட்சணம்திங்க மட்டும்தானா

    ReplyDelete
    Replies
    1. ஆண்களுக்குப் பொறுமை இருப்பதில்லை என்பதாலோ!

      Delete
    2. பெண், ஆணை சார்ந்து இருந்த அந்த காலத்தில் ஆண்களின் நலமும், ஆயுள் விருத்தியும் முக்கியமாக கருதப்பட்டன. குடும்பத்தலைவனான ஆண் நலமாக இருந்தால்தானே, அவனை சார்ந்திருக்கும் பெண் நலமாக இருக்க முடியும்? அதனால்தான் இது போன்ற சில விரதங்களையும், நோன்புகளை பெண் நோற்கிறாள்.
      ஏகாதசி விரதம், நவராத்திரி, சிவராத்திரி வ,கோகுலாஷ்டமி,ராம நவமி போன்ற நாட்களில் அனுசரிக்கப்படும் விரதங்கள் எல்லோருக்கும் பொதுவானவை.
      கணவனின் நலத்திற்காக மனைவி அனுசரிக்கும் 'கர்வா சவுத்' என்னும் நோன்பை தன மனைவியின் நலனுக்காக தானும் அனுஷ்டிக்ப் போவதாக சேத்தன் பகத் அறிவித்தார். செய்தாரா என்று தெரியாது.
      சேத்தன் பகத் ஆங்கிலத்தில் எழுதும் பஞ்சாபி எழுத்தாளர். இவர் மணந்து கொண்டிருப்பது தென்னிந்திய பிராமணப் பெண்.

      Delete
    3. பெண்கள் சரடு கட்டிக்கொள்வார்கள். ஆண்கள் சரடு விடுவார்கள்!!!!

      Delete
    4. ஜிஎம்பி ஐயா கேட்டது குறித்து எழுத ஆரம்பித்தால் பதில் பெரிசா ஆயிடும். ஆகையால் சுருக்கமாகச் சொன்னேன். பொதுவாக ஆண்களும், சரி, பெண்களும் சரி குடும்பத்திற்காக அதன் நலனைப் பேணுவதற்காகவே இத்தகைய பூஜைகள், வழிபாடுகள் செய்கின்றனர். மேலும் பித்ரு காரியங்களை ஆண் தான் நேரடியாகப் பண்ணுவான்; பண்ணி வருகிறான். அதுவும் குடும்ப நலனுக்காகவே! அதே போல் தெய்வ காரியங்களில் பெண்ணுக்கு முன்னுரிமை! அவள் பங்கு அதில் அதிகம் இருக்கும். இரண்டுமே முக்கியம் தான்! கணவன் நலமுடன் இருந்தால் தானே குடும்ப வண்டி தடையின்றி ஓடும். ஆகவே கணவனுக்காகச் சிறப்பாகப் பிரார்த்தனைகள் செய்வாள்.

      Delete
  14. வணக்கம் சகோதரி

    காரடையான் நோன்பு வாழ்த்துக்கள். பழசானாலும், தங்கள் சொல்படி கொழுக்கட்டைகளை டேஸ்ட் செய்தேன். நன்றாக இருந்தது. உறவுகள் வருகை என்றுமே மகிழ்ச்சி தரும். அவர்களுடன் நன்றாக என்ஜாய் பண்ணுங்கள். அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா. நீங்களும் ஓய்வு எடுத்துக்கொண்டு வலைப்பக்கம் வாருங்கள். நன்றி.

      Delete
  15. //நல்லவேளையாப் போன வருஷச் சரடுகளை பத்திரமாக வைத்திருந்ததால் அதைத் தேடி எடுத்துக் கட்டிக் கொண்டேன்//

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பழசைத்திரும்பக் கட்டலாமோ?:).

    ReplyDelete
    Replies
    1. தீர்க்கதரிசியாலேயே கண்டு பிடிக்க முடியலை! க்ர்ர்ர்ர்ர்ர் பழசுன்னா கட்டினது இல்லை. ஒவ்வொரு வருஷமும் நான்கு சரடு கொடுப்பாங்க! அதில் உம்மாச்சிக்கு ஒண்ணு, எனக்கு ஒண்ணு போக இரண்டு மிஞ்சும். அதைச் சேர்த்து வைத்திருப்பேன்/வைத்திருக்கிறேன்.அதிலே இருந்து எடுத்துக் கொண்டேன். :)))))

      Delete
  16. // ஆனால் எப்போதும் போல் கொஞ்சமாகத் தான் கொழுக்கட்டை செய்தேன்.//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வடைபோல தட்டிப்போட்டுக் கொலு:) க்கட்டையாமே:) என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஊ:).. கொழுக்கட்டை எங்கேஏஏஏஏஏஏ?:)..

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, தீர்க்கு! எங்க வீட்டிலே கொழுக்கட்டை என்போம். மாமியார் வீட்டிலே அடை என்பார்கள். எல்லாம் ஒண்ணு தானே! வயித்துக்குள் தானே போகப் போகுது! அப்பாடா பதில் கொடுத்துட்டேன். இனிமேல் நாளைக்குத் தான்!

      Delete
  17. //அதிரடி, சொல்லாமல் போயிட்டேன்னு சொல்லக் கூடாது//

    முந்தநாள்தான் ஜொன்னீங்க ரெண்டு நாள் வரமாட்டேன் அன:).. திரும்ப இண்டைக்கு வந்து .. ரெண்டு நாள் வரமாட்டேன் என்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. யாரும் தட்டிக் கேய்க்க மாட்டாங்க எனும் தெகிறியம் போல:) அதிரா இருக்கேன்ன்ன் தட்டித்தட்டிக் கேய்ப்பேன்ன் கீசாக்கா செய்த கொழுக்கட்டைபோல:)).. ஹா ஹா ஹா...

    நன்கு பொழுதைக் கழிச்சு சந்தோசமாக வாங்கோ கீசாக்கா.. எனக்கும் இவ்வாரம் முழுக்க கொஞ்சம் பிஸியாகவே ஓடுது.. அதனாலதான் புதுப்போஸ்ட் போடும் எண்ணமும் இன்னும் இல்லை.. இனி நெக்ஸ்ட் வீக்கும் கொஞ்சம் பிசியாகவே இருப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா அதிரடி, நீங்களும் பிசியா? எப்போப் பார்த்தாலும் பிசி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :))))))

      Delete
  18. காரடையான் நோன்பு வாழ்த்துகள்


    அடை நல்லா வந்திருக்கு போல!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜி, இந்த அடை/கொழுக்கட்டை பண்ணுவதெல்லாம் எளிதான வேலையே! ஆகவே யாரும் செய்துடலாம். நன்றாகவே வரும்.

      Delete
  19. காரடையான் நோன்பு நல்லபடி நிறைவு பெற்றதா? காலை ஐந்தேகால் மணிக்கே சரடு கட்டிக்கொள்ளவேண்டும் என்று சொல்லி இருந்தார்கள்.

    கொழுக்கட்டை... ம்ம்ம்... நமக்கு எல்லாம் படத்தில்தான் கிடைக்கும்!

    ReplyDelete
    Replies
    1. நல்லபடி முடிந்தது ஸ்ரீராம். தம்பி வீட்டிலும் வந்து விட்டுப் போய் விட்டார்கள். வீடு வெறிச்சோடி விட்டது! குஞ்சுலு கூட நேத்திக்கு எங்களைப் பார்க்க மாட்டேன்னு முகத்தை மூடிக் கொண்டு விட்டது! :)))))

      Delete
  20. காரடையான் நோம்புக்கான அடை - ஆஹா... ரொம்ப வருடம் ஆகிவிட்டது இவற்றைச் சுவைத்து. அதுவும் வெண்ணையோடு இதனைச் சுவைப்பது மகிழ்ச்சியான விஷயம். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும் என்பதால் சுவை அதிகம் தான் இதில்....

    வெல்ல அடை எனக்கு பிடிக்கும் இரண்டில்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட்,ஸ்ரீரங்கம் வந்தால் ஒரு நாள் டிஃபனுக்கு ஆதியைப் பண்ணித் தரச் சொல்லிச் சாப்பிடுங்க. எங்க வீடுகளில் அப்படியும் பண்ணுவோம். ஆனால் இது பிடிக்கும்னு சாப்பிடுபவர்கள் குறைவு!

      Delete