எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, May 11, 2019

ஜெய ஜெய விட்டல! பாண்டுரங்க விட்டல!

இந்தப் பண்டரிநாதன் எளியோருக்கு எளியவன். இவனை அதிகம் தரிசிக்க வருபவர்கள் அக்கம்பக்கம் ஊர்களில் உள்ள எளிய கிராம மக்களே. ஆகவே தான் அவர்கள் வந்து தங்குவதற்கு ஏற்றாற்போல் ஓட்டல் அறைகள் இருப்பதாகச் சொன்னார் நாங்கள் தங்கி இருந்த ஓட்டல் முதலாளி. ஒரு அறையில் குறைந்த பட்சமாக நாலைந்து பேர் தங்குவார்களாம். கட்டிலில் படுத்தால் 500 ரூபாயும் கீழே படுக்கிறவர்கள் 300 ரூபாய் எனவும் பணம் வாங்குவார்களாம். கீழே நாலு பேர் படுத்தால் 1200 ரூ ஆகிவிடுகிறது. இரண்டு கட்டில்களில் படுப்பவர்கள் மூலம் ஆயிரம் ரூபாய்! ஆக மொத்தம் ஒரு நாளைக்கு 2,200 ரூக்குக் குறையாமல் வசூல் ஆகுமாம். அப்படிக் கொடுக்கப்படும் அறையில் நாங்கள் இரண்டு பேர் மட்டும் தங்குவது என்பதை அவர்களால் சகிக்க முடியவில்லை. இரண்டு பேருமே வயதில் பெரியவங்க என்பதால் அறையைக் கொடுத்திருக்கோம். மற்றபடி இங்கே நாங்க சேவை எதுவும் செய்ய மாட்டோம். நீங்களே பார்த்துக்க வேண்டியது தான் எனத் திட்டவட்டமாக ஓட்டல் முதலாளி கூறி இருந்தார்.

அதோடு அங்கே வெளி வாசலில் போட்டிருந்த சில நாற்காலிகள் அவங்க மட்டும் உட்காருவதற்காகப் போல! தெரியாமல் அதில் உட்கார்ந்துவிட்டு! போதும், போதும்னு ஆயிடுத்து! இதிலே நாளைக்காலை வரை இருக்கணும். அதோடு இன்னொரு முறை தரிசனமும் பண்ணணும்னு நம்ம ரங்க்ஸ் ஆவல்! எட்டரைக்குத் தான் பார்க்க முடியுமாம். எட்டரைக்கு நாங்க கிளம்பினாலே சோலாப்பூர் போகப் பதினோரு மணி ஆயிடும் என்கிறார்கள். 11-20க்கு உத்யான் எக்ஸ்பிரஸ் அங்கிருந்து புனே செல்கிறது. புனேக்கு 3-45க்குப் போயிடும். ஆனால் போய் 20 நிமிஷத்தில் ரயிலைப் பிடிக்கணும். எந்த நடைமேடைனு எல்லாம் தெரியாது. அங்கே போய்த் தான் பார்க்கணும். 2,3,4 ஆம் நடைமேடைகள் எனில் படிகள் வழியே மேலே ஏறுவது எனில் சிரமம்! மண்டையை உடைத்துக் கொண்டே ஆட்டோவில் பயணித்துக் கொண்டு கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தோம். மிகப் பழமையான ஊர். இன்னமும் முழுக்க முழுக்க "ந"ர"க மயம் ஆகவில்லை.  ஆட்டோ ஓட்டுநர் நாங்க பேசினதைக் கேட்டுவிட்டு இந்த ஆட்டோவில் எல்லாம் நீங்க சோலாப்பூர் வரை பயணிக்க முடியாது. கஷ்டம், அதுவும் அம்மா ரொம்ப சிரமப்படுவாங்க என்றார்.

அப்போ நம்மவர் தனியார் பேருந்துகள் இருக்கானு கேட்டார். அதோடு ஏதோ ஓர் ட்ராவல்ஸ் பெயர் சொல்லி அவங்க பேருந்து புனேக்கு இருக்கானும் கேட்டார். அந்த ஓட்டுநர் தரிசனம் முடிச்சுட்டு வாங்க! நான் கூட்டிப் போகிறேன். அப்படியே சாப்பாடுக்கும் குஜராத்தி தாலி மீல்ஸுக்குக் கூட்டிச் செல்கிறேன். என்றார். சரி எனச் சம்மதித்தோம். கோயில் நெருங்கியாச்சா எனக் கேட்டதுக்கு எதிரே இருந்த சுமார் 20,25 படிகளைக் காட்டி இந்தப் படிகளில் ஏறி அந்தப்பக்கம் சென்றால் கோயில் வாசல் வரும் என்றார். ஙே!! படிகள்,எங்கே போனாலும் படிகள்! ஆனால் விட்டலனைப் பார்த்தாகணும்! ஆட்டோவை அங்கேயே நிறுத்திவிட்டு எங்களைப் படிகளில் ஏற்றிவிட ஆட்டோ ஓட்டுநரும் கூட வந்தார். எங்கள் தரிசனத்துக்கான முன்பதிவுச் சீட்டுக்களில் அங்கே ஓர் மடத்தில் போய் முத்திரை வைச்சுக்கணும். இருவருமாகச் சென்று அதை முடித்துக் கொண்டு வந்தனர். அது இல்லைனாலும் பார்க்கலாம். கூட்டம் எல்லாம் இப்போ அதிகம் இருக்காது என்றார் ஓட்டுநர். நாங்க போனது தான் முக்கிய வாயில் என நினைக்கிறேன். கோபுர வாயிலில் இருந்து தெருப்பூராவும் அடைத்துப் பந்தல் போட்டிருந்ததால் கோபுரம் தெரியவே இல்லை. 

இரு பக்கங்களிலும் நிறையக் கடைகள். நாங்க ஓர் கடையில் துளசி மாலைகள் மட்டும் வாங்கிக் கொண்டோம். மற்றவற்றை அப்படியே தூக்கி எறிவாங்க! அந்தக் கடையிலேயே செருப்பை விட்டுவிட்டுக் கோயில் முக்கிய வாயிலுக்குள் நுழைய முடியுமானு பார்த்தால் பக்கவாட்டில் கம்பித் தடுப்புப் போட்டு முன்னர் மேலே ஏறிப் போன மாதிரியான வாயிலில் கொண்டு விட்டது. என்னடா இது மேலே ஏறணுமோனு நினைச்சு அங்கே இருந்த பக்தர் ஒருத்தரைக் கேட்டதுக்கு ஏற வேண்டாம், நேரே போங்க, பெரிய மண்டபம் வரும் என்றார்.  சரினு நேரே உள்ளே போனோம். பெரிய மண்டபம் வந்தது. அங்கே பலரும் தரிசனத்துக்கான வரிசையில் நின்றிருந்தனர். சிலர் ஒரு கூட்டமாக நின்றிருந்தனர். இன்னொரு வரிசை வேறொரு வாயில் வழியாகச் சென்று கொண்டிருந்தது. அதற்குள்ளாக மாலை வழிபாட்டுக்கான நேரம் வரவே திரை போட்டார்கள். விட்டலனுக்கும் ரெகுமாயி என அழைக்கப்படும் ருக்மிணிக்கும் ஆராதனைகள் முடிந்த பின்னரே திரை திறக்கப்பட்டு பக்தர்கள் உள்ளே நுழையலாம் என்றார்கள். காத்திருந்தோம்.

பாண்டுரங்கன் கோயில்/பண்டரிபுரம் க்கான பட முடிவு 

படத்துக்கு நன்றி விக்கிபீடியாபாண்டுரங்கன் கோயில்/பண்டரிபுரம் க்கான பட முடிவு


படத்துக்கு நன்றி கூகிளார். 

37 comments:

 1. ஆஹா! இன்னும் விட்டலனை தரிசிக்கவில்லையா? நாங்களும் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. பானுமதி, பயணம்? கோலாப்பூர்? அப்போப்பக்கத்திலே உள்ள சதாராவை மறக்காதீங்க! நம்மவர் அதைப் பற்றிச் சொல்லாமல் மௌனமாக இருந்துட்டார். மஹாராஷ்ட்ராவின் பூகோளம் தெரியாமல் நான் அது தூரக்க இருக்குனு நினைச்சுட்டுப் பேசாமல் இருந்துட்டேன். :( கட்டாயம் மேலைச் சிதம்பரம் போயிட்டு வாங்க!

   Delete
 2. மகிழ்ச்சி தொடர்கிறேன் பதிவில் ஹாஸ்யம் குறைவு

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, ஹாஸ்யம் இல்லையா? ம்ம்ம்ம்ம்? அந்த நேரத்துக்கு ஏற்பட்ட நினைவுகளில் ஹாஸ்யத்துக்கு இடம் இருக்கலை போல!

   Delete
 3. //மற்றவற்றை அப்படியே தூக்கி எறிவாங்க! // - இதுக்கு என்ன அர்த்தம்?

  ReplyDelete
  Replies
  1. பழம், வெற்றிலை, பாக்கு, மலர்மாலைகள்,தேங்காய் போன்றவை! துளசியை மட்டும் பாதத்திலானும் வைக்கிறார்கள். இங்கேயும் பல கோயில்களில் பார்த்திருக்கலாம்.

   Delete
 4. நீங்க இன்னு முந்தின நாள் தரிசனத்துலதான் (அதாவது முதல் தரிசனத்துலதான்) இருக்கீங்க. நாளை திரும்பவும் தரிசனம் செய்யலாம் என்பது உங்கள் திட்டம். அது சரியா முதலில் புரியலை.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, சரியாத் தான் எழுதி இருக்கேன். செய்தி வாசிக்கையில் நிகழ்வை முதலில் சொல்லிட்டுப் பின்னர் "முன்னதாக" என ஆரம்பிப்பார்கள் பார்த்ததில்லை?/கேட்டதில்லை? அது போலத் தான் இதுவும்.

   Delete
 5. //அவங்க மட்டும் உட்காருவதற்காகப் போல! // - அதாவது ஹோட்டல் முதலாளி குடும்பம்? ஏசியில் தங்கிச் செல்லும் எளிய பிரயாணிகள் (நாலைந்து பேராக) இருக்கிறார்களா?

  இந்தப் பண்டரீநாதனைப் பற்றி (பாகா நதி?) எத்தனை படித்திருக்கிறேன், ஸ்ரீமஹா பக்த விஜயம் என்ற புத்தகத்தில். சிறு வயதில் எல்லாப் பெரியவர்களையும் பற்றிப் படித்தது. நீங்கள் அந்த ஊருக்கே போயிருக்கீங்களே....

  ReplyDelete
  Replies
  1. அவங்களுக்கு ஏ.சி. வேண்டாம்னா போட மாட்டாங்க! கன்ட்ரோல் ஸ்விட்ச் அவங்களிடம் தான்! நாங்க கோயிலுக்குச் செல்லும் அந்தக் கொஞ்ச நேரம் அணைத்து வைத்துவிட்டு நாங்க திரும்பி வந்து மாடி ஏற லிஃப்டுக்குப் போகையில் போட்டாங்க! ஆகவே இதிலே நீங்க குற்றம் கண்டுபிடிக்க ஏதும் இல்லை.

   Delete
  2. பீமா நதி என்னும் பெயர். இங்கே அர்த்த சந்திர வடிவில் வளைவதால் சந்திரபாகா நதி. மஹா பக்த விஜயம் லிஃப்கோ பதிப்பு என்னிடமும் 40 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறது. அவ்வப்போது எடுத்துப் படித்து ரிவிஷன் செய்துப்பேன்.

   Delete
 6. விட்டலனை காண வந்துவிட்டோம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மாதேவி, தொடர்ந்து வாங்க!

   Delete
 7. ஸ்ரீ மஹா பக்தவிஜயத்தில் படித்தது பாண்டு ரங்கனின் பெருமைகளை.
  ஸ்ரீ நாமதேவர், ஸ்ரீ,துக்காராம் , ஸ்ரீ கபீர் தாஸர், ஸ்ரீ. துளசி தாஸர் தரிசனம் செய்து பரவசமானவிட்டலை கண்டது மிகவும் மகிழ்ச்சி.

  //இரண்டு பேருமே வயதில் பெரியவங்க என்பதால் அறையைக் கொடுத்திருக்கோம். மற்றபடி இங்கே நாங்க சேவை எதுவும் செய்ய மாட்டோம். நீங்களே பார்த்துக்க வேண்டியது தான் எனத் திட்டவட்டமாக ஓட்டல் முதலாளி கூறி இருந்தார்.//

  அறையை கொடுத்ததே பெரிய சேவைதான்.
  எளியவருக்கு எளியவன் பாண்டு ரங்க விட்டலை நன்கு தரிசனம் செய்து இருப்பீர்கள் அதை காண வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, விட்டலன் தரிசனம் நன்றாகவே கிடைத்தது. மற்றபடி அங்கே எல்லோருக்குமாக வைத்திருக்கும் நினைவுச் சிலைகள், தூண்கள் இவற்றையும் பார்க்க முடிந்தது.

   Delete
 8. ஆடுதுறைக்கு பக்கம் இருக்கும் விட்டல் சுவாமிகள் கட்டி இருக்கும் தக்ஷிண பாண்டு ரங்கனை அடிக்கடி பார்ப்போம்.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு மேடம்... இப்போ தென்னாங்கூர் என்ற இடத்திலும் பாண்டுரங்கன் கோவில் இருக்கு. அந்தப் பெருமாளுக்கு, வித விதமான அலங்காரங்கள் (ஏழுமலையான் மாதிரி என்பதுபோல) செய்து படங்களை வாட்சப்பில் அடிக்கடி பார்க்கிறேன்.

   பொதுவா நான், பாரம்பர்யக் கோவில்களைத்தான் முன்னுரிமை கொடுத்து தரிசனம் செய்வேன். அதன் காரணம், பழமையான கோவில்களுக்கு நிறையபேர் செல்வதன் மூலம், அந்தக் கோவில்கள் தொடர்ந்து நல்லபடியா நடக்கும் என்ற எண்ணம்தான். அதனால்தான் கும்பகோண பயணத்தின்போது, அதிக நேரம் கிடைக்காததால், விட்டலன் கோவிலுக்குச் செல்லவில்லை.

   Delete
  2. கோவிந்தபுரம் பாண்டுரங்கன் கோயிலைச்சொல்றீங்கனு நினைக்கிறேன் கோமதி!அது ஆரம்பத்தில் சின்னதாக இருந்த நாளில் இருந்து போயிருக்கோம். இப்போ இரண்டு வருஷங்கள் முன்னர் பையர், மனைவி, குழந்தையுடன் வந்தப்போக் கூடப் போனோம். தென்னாங்கூரும் போயிருக்கோம். முரளீதர ஸ்வாமிகளால் கட்டப்பட்டது. அதைக் குறித்து எழுதியும் இருக்கேன்.

   http://aanmiga-payanam.blogspot.com/2011/03/blog-post_06.html அதற்கான சுட்டி இங்கே!

   Delete
 9. ரொம்பவும் சிரமப்பட்டுள்ளீர்கள்...

  ReplyDelete
  Replies
  1. கஷ்டப்பட்டுக் கிடைக்கும் பலன் மகிழ்ச்சியைத் தரும் அல்லவா?

   Delete
 10. ஓட்டல் முதலாளி சொன்ன விஷயம் யோசிக்க வைக்கிறது. வந்து தாங்கும் கிராம மக்களைப் பொறுத்தவரை அது சீப்பான செலவு. ஆனால் நம்மைப்போன்றவர்கள் சென்று தங்கும்போது அவர்களுக்கு நஷ்டம் என்று கருதுகிறார்கள். சேவை சட்டென வியாபாரம் ஆகி விடுகிறது!

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், இதுக்கு முன்னால் நாங்க 2008 அல்லது 2009 ஆம் ஆண்டு ட்ராவல் டைம்ஸ் மூலம் போனப்போ எல்லாம் ஊர் இத்தனை பெரிதாகவோ நல்ல ஓட்டல்களோ இல்லை. அங்கே உள்ள ஒரு பிரபல சத்திரத்தில் தான் எங்களுக்குத் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். எங்களைப் போல் சிலர் அங்கே அறை கேட்டு வாங்கிக் கொண்டார்கள். காலையிலேயே போய் பீமா நதியில் நீராடிப் பாண்டுரங்கனைத் தரிசிக்க வரிசையில் நின்று படிகள் மேலே ஏறித் திருப்பதியில் போறாப்போல் எல்லாம் போய்ப் பின்னரே பாண்டுரங்கனைப் பார்த்தோம். இரண்டாம் முறை போகலாம் என்றால் நேரமில்லை. அன்றே மாலை மூன்று மணிக்கு ரயில் கிளம்பிடும் என்றார்கள். எங்களுக்காகச் சிறப்பாகப் பண்டரிபுரத்தில் ரயிலை நிறுத்த அனுமதி வாங்கி இருந்தார்கள். பண்டரிபுரம் முடிந்ததும் அங்கிருந்து நேரே சென்னை தான்! ரயில் நிலையம் இரண்டே நடைமேடைகளோடு சின்னதாக இருந்தது. இப்போப் பார்த்தால் ஆறு, ஏழு நடைமேடைகளுடன் நீள, அகலமாகப்பிரம்மாண்டமாக இருக்கிறது.

   Delete
 11. அதென்ன அவங்க மட்டும் உட்காரும் வகையினாலான நாற்காலி? அபுரி! ஆட்டோவிலேயே அவ்வளவு தூரம் போவதை எப்படி கற்பனை செய்தீர்கள்? ஆச்சர்யம். அதுவும் வெய்யில் வேறு.

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம்,ஆடாத உறுதியான மர நாற்காலிகள் அவங்க உட்காருவதற்கு. ப்ளாஸ்டிக் நாற்காலிகள் வருபவர்கள் உட்கார! அது கொஞ்சம் இல்லை, நிறையவே ஆடும். என் போன்றவர் உட்கார்ந்தால் கீழே விழும் வாய்ப்பு அதிகம். ஆட்டோவிலேயே சோலாப்பூர் வரைப் போவதைக் கற்பனை செய்தது நான் இல்லை! நம்ம ரங்க்ஸ் தான். திருப்பதியிலிருந்து காளஹஸ்திக்கு ஆட்டோவில் போயிருக்கோம் 2,3 முறை. அந்த நினைவு! :))) ஆனால் அதுஎல்லாம் 10 வருஷங்கள் முன்னர். இப்போ நிலைமை வேறே!

   Delete
  2. ஶ்ரீராம்,ஏப்ரல் 20 தேதி வரைக்கும் வட மாநிலங்களில் வெயில் தெரியாது. அதுவும் கோலாப்பூர் போன்ற பூமி மட்டத்தை விட உயரமான பிரதேசங்கள் குளிர்ச்சியாகவே இருக்கும். ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாபில் எல்லாம் குளிர்காற்றே இருக்கும்.

   Delete
 12. அங்கிருக்கும் கடைகளில் எதை வாங்குவது, எதை விடுவது என்றும் புரியாது. நான் எங்கள் அனுபவத்தைச் சொல்கிறேன். உங்களுக்கு முன்னரே சென்று வந்ததால் பழகி இருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், நான் பொதுவாக இங்கெல்லாம் எதுவும் வாங்குவதில்லை. போன முறை வந்தப்போ எல்லோரும் புடைவைகள் எடுத்தனர். அங்கெல்லாம் சிந்தடிக் புடைவைகள் மிகவும் மலிவாகக் கிடைக்கும். 60 ரூ, 75 ரூபாய்க்கெல்லாம் நல்ல புடைவைகள் கிடைத்தன.கூட வந்தவர்களில் ஹிந்தி புரியாத/தெரியாதவர்களுக்காகப் பேசி உதவி செய்தோம். அப்போவும் நாங்க வாங்கலை! கோலாப்பூரில் தான் கைத்தறி என்பதால் புடைவை எடுத்தேன்.

   Delete
 13. அக்கா சோலாப்பூர் ரயில் அப்புறம் பூனே ரயில் எல்லாம் பிடிக்கற அவசரமோ...ஹா ஹா ஹா ஹா ஹா.பதிவுல என்னமோ கொஞ்சம் குழப்புதே. சரி பரவால்ல மீண்டும் வாசித்துப் புரிந்துகொண்டால் போச்சு!! முதல் நாள் தரிசனம் இல்லையா?

  ஏன் நாற்காலிகளில் உட்காரக் கூடாது? இப்படி எல்லாமுமா சொல்வாங்க ஓனருடையதாகவே இருந்தாலும்?

  பண்டரிப்பூர் அனுபவங்கள் கோல்ஹாப்பூர்ர் போல இல்லைனு தோன்றுது ரைட்டா?

  தொடர்கிறேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க தி/கீதா, நெ/த/வுக்குச் சொல்லி இருக்கும் பதிலைப் படியுங்கள்/ அதான் உங்களுக்கும் பதில். சரியாத் தான் எழுதறேன். ஹிஹிஹி, செய்தி வாசிக்கும் பாணியில் இருப்பதால் புரிஞ்சுக்கலை! :))))தரிசனத்துக்குப் போனதே ஒரே நாள் தான். பண்டரிபுரத்தில் போய் இறங்கின அன்னிக்குத் தான்.

   Delete
 14. //கட்டிலில் படுத்தால் 500 ரூபாயும் கீழே படுக்கிறவர்கள் 300 ரூபாய் எனவும் பணம் வாங்குவார்களாம். //

  ஹா ஹா ஹா எப்படியெல்லாம் உழைக்கிறார்கள்.. இனி கீழே பாயில் படுத்தால் ஒரு ரேட்ட்.. வெறும் தரையில் எனில் இன்னொரு ரேட் வரக்கூடும்.

  கீசாக்காவின் கோயில் தரிசனம்.. வேர்க் இண்டவியூவை விடக் கொடுமையாக இருக்கே:))

  ReplyDelete
  Replies
  1. அதிரடி, காசி டூர் ஆர்கனைசர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தாச்சா? எப்போ? அங்கெல்லாம் இப்படித் தான். இதை விடச் சித்ரகூடத்தில் இன்னும் மோசம்!

   Delete
 15. //படத்துக்கு நன்றி விக்கிபீடியா//

  //படத்துக்கு நன்றி கூகிளார். //

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* 38765498

  ReplyDelete
  Replies
  1. படம் எடுக்க முடியாது! அதோடு நான் அலைபேசியோ காமிராவோ எடுத்துப் போகலை. மறந்து போய்ப் பெட்டியில் வைத்துப் பூட்டினதை எடுக்கவே இல்லை.

   Delete
 16. எத்தனை சிரமங்கள் கீதா மா. விட்டலன் கருணையோடு தரிசனம் கொடுத்திருப்பான்.
  எப்படி ஏறினீர்களோ.
  இப்போது கேட்கவே சிரமமாக இருக்கிறது.

  பாண்டுரங்கா விட்டலா காப்பாற்று.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, கோயிலிலும் படிகள் தான்! :)))) எப்படியோ போயிட்டு வந்தாச்சு!

   Delete
 17. வணக்கம் சகோதரி

  அழகான பாண்டுரங்கன் தரிசனம். தங்கும் அறைகள் கிடைக்க மிகவும் சிரம பட்டுள்ளீர்கள். ஆனாலும் பாண்டுரங்கன் தரிசிக்கும் நொடியில் அத்தனை சிரமங்களும் மறந்து விடும் இல்லையா?

  /விட்டலனுக்கும் ரெகுமாயி என அழைக்கப்படும் ருக்மிணிக்கும் ஆராதனைகள் முடிந்த பின்னரே திரை திறக்கப்பட்டு பக்தர்கள் உள்ளே நுழையலாம் என்றார்கள். காத்திருந்தோம்./

  நாங்களும் காத்திருக்கிறோம் . உங்களுடன் விட்டலவனை தரிசிக்க வேண்டி... பாண்டுரங்கனை நாம் ஆரத்தழுவி நம் மன விசாரங்களை அவன் பாதத்தில் வைக்கலாமன்றோ.! "எல்லாவற்றையும் அவன் பார்த்துப்பான்" என்ற அந்த நொடியில் நம் கவலைகள் அகலுமில்லையா? பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆமாம், இங்கே விட்டலனைப் பாதம் தொட்டு வணங்கி மகிழலாம். அதே போல் காசி விஸ்வநாதரையும் நாமே அபிஷேஹம் செய்து மகிழலாம். இப்போ எப்படினு தெரியலை.

   Delete