நேற்றோடு மிக மிக முக்கியமான வேலை முடிந்தது. கொஞ்சம் ஆறுதல் என்றாலும் நீண்ட நாட்களாக வைத்திருந்த மின்னூல்களுக்கான இரு புத்தகங்களை இன்று எடிட் செய்து அனுப்பி வைத்திருக்கிறேன். இன்று முழுவதும் அதில் போய்விட்டது. அதோடு வீட்டிலும் இரு நாட்களாகச் சுத்தம் செய்யும் வேலை. இம்முறை ஆளைக் கூப்பிடாமல் நாங்களே செய்ததால் காலை ஆரம்பித்துப் பின்னர் அது முடிஞ்சு சமைச்சுச் சாப்பிடவே ஒரு மணி ஆகி விடுகிறது. அதன் பின்னர் இணையத்தில் உட்கார்ந்தாலும் உடல் ஓய்வைத் தேடுகிறது. இருந்தாலும் இன்று எப்படியானும் முடிச்சுடணும்னு இரண்டு நூல்களையும் பிழை திருத்தங்கள் சரி பார்த்து விட்டுப் போனதைப் பதிவுகளில் தேடிச் சரி பார்த்து அனுப்பி வைக்க இத்தனை நேரம் ஆகி விட்டது. வெளி வந்ததும் இங்கே சுட்டி கொடுக்கிறேன். இரண்டுமே நீங்கள் அனைவரும் ஏற்கெனவே படித்து ரசித்தது தான்.
இனி நாளை முதல் பண்டரிபுரம் பதிவின் தொடர்ச்சியை எழுதி முடிக்கணும். அதிகம் இல்லை. ஒரு நாளில் முடிந்து விடும் என எண்ணுகிறேன். இன்னும் இரு புத்தகங்கள் தொகுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றையும் விரைவில் அனுப்பி வைக்கும்படி இருக்கும்.ஆகவே கொஞ்சம் அப்படி, இப்படி வருவேன். பொறுத்துக்கொள்ளவும். அல்லது விட்டது தொல்லை என சந்தோஷமும் அடையலாம்! :P :P:P:P:P இப்போக் கடமை ரொம்ப நேரமா அழைப்பதால் போய் வருகிறேன். டாட்டா, பை, பை! இஃகி, இஃகி, நேத்திக்குக் குட்டிக் குஞ்சுலுவுக்கு நல்ல மூட். டாட்டா சொல்லி ஃப்ளையிங் கிஸ்ஸெல்லாம் கொடுத்தது. :))))))
இனி நாளை முதல் பண்டரிபுரம் பதிவின் தொடர்ச்சியை எழுதி முடிக்கணும். அதிகம் இல்லை. ஒரு நாளில் முடிந்து விடும் என எண்ணுகிறேன். இன்னும் இரு புத்தகங்கள் தொகுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றையும் விரைவில் அனுப்பி வைக்கும்படி இருக்கும்.ஆகவே கொஞ்சம் அப்படி, இப்படி வருவேன். பொறுத்துக்கொள்ளவும். அல்லது விட்டது தொல்லை என சந்தோஷமும் அடையலாம்! :P :P:P:P:P இப்போக் கடமை ரொம்ப நேரமா அழைப்பதால் போய் வருகிறேன். டாட்டா, பை, பை! இஃகி, இஃகி, நேத்திக்குக் குட்டிக் குஞ்சுலுவுக்கு நல்ல மூட். டாட்டா சொல்லி ஃப்ளையிங் கிஸ்ஸெல்லாம் கொடுத்தது. :))))))
குஞ்சுலுவை கேட்டதாக சொல்லவும்.
ReplyDeleteகுஞ்சுலு கிட்டேச் சொல்லிடறேன் கில்லர்ஜி.
Deleteஎப்படியோ... தகவலை வைத்து ஒரு பதிவு எனக்கு இப்படி எல்லாம் ஓசனை வரமாட்டுதே...
ReplyDeleteஹா ஹா ஹா இண்டைக்குத்தான் கில்லர்ஜி ஒயுங்கா ஒரு கொஸ்ஸன் கேட்டிட்டார்ர்ர்ர்:)...
Deleteஒரு பதிவல்ல கில்லர்ஜி ரெண்டு:) போன போஸ்ட்டும் இதே:)... ஹையோ மீ வள்ள இந்த வம்புக்கு:)
ஹாஹாஹா, கில்லர்ஜி, நீங்கல்லாம் அர்த்தமுள்ள பதிவுகள் போடறீங்க! அதான் இப்படி எல்லாம் யோசனை தோணுவதில்லை. :)))))
Deleteஅதிரடி, அப்புறமா வைச்சுக்கறேன் உங்களை! :))))
Deleteநேரம் கிடைக்கும் போது தொடருங்கள் அம்மா...
ReplyDeleteநன்றிடிடி.
Deleteரொம்ப பிஸி போலிருக்கு... வேலைகளை முடிச்சுட்டு வாங்க..
ReplyDeleteஇப்போக் கொஞ்சம் பரவாயில்லை. அநேகமாக் குறையும்னு எதிர்பார்க்கிறேன். நன்றி ஶ்ரீராம்.
Deleteமின்னூல்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபேத்தியின் அன்பு முத்தம் பெற்ற பாட்டியின் கால்கள் தரையில் இருக்காதே!
வேலைகள் இனி மிக சுலபமாக முடித்து விடலாம், அன்பு அது தரும் தெம்பு.
வாங்க கோமதி,ஆமாம், குழந்தைகளின் மலர்ந்த முகம் களைப்பைப் போக்கும்.கோடி துக்கம்போகும் குழந்தை முகத்திலே என்பார் என் அம்மா. உண்மையில் அது தான் சோர்வுக்கு மருந்து.
Deleteஎன்ன மின்னூல்னு விவரம் இல்லை.
ReplyDeleteபண்டரீபுரம் இடுகை எதுல நிறுத்தினீங்கன்னே மறந்துபோச்சு. இன்னும் தரிசனம் ஆகலைனு ஞாபகம்.
இன்னும் வேறு என்ன மின்னூல்னு தெரியலை.
என்னவோ மொட்டைத் தாத்தன் குட்டைல விழுந்தான்ற மாதிரி எழுதியிருக்கீங்க.
வேலைகளுக்கு இடையில் பேத்தியின் கொஞ்சலில் சந்தோஷம் அடையறீங்க. எங்களுக்கும் மகிழ்ச்சிதான்
எல்லாம் பதிவுகளில் எழுதினது தான் நெ.த. ஏற்கெனவே சொல்லிக் கொண்டிருந்தேன். மறந்துட்டீங்க. நீங்க ஜோசியம் பத்திக் கேட்கும்போதெல்லாம் அநேகமாச் சொல்லி இருப்பேன். என்னோட கல்யாண நிகழ்வுகள் 2011 ஆம் ஆண்டில் வந்தவை, அப்போ நீங்க படிச்சதாத் தெரியலை! அப்புறமா மார்கழி மாதப் பதிவுகள்.நாலைந்து வருஷங்களாக இது பென்டிங்!
Deleteவேலைகளுக்கு நடுவே பேத்தி தானே உற்சாக ஊற்று.
ஒருவேளை எலெக்ஷன் ரிசல்டுக்கு அப்புறம்தான் புது இடுகைனு வேண்டுதலா?
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர் 4 நெ டமிலன்:)... அப்போ இது என்ன மீள் பதிவோ?:) ஹையோ முடியல்ல முருகா:)..
Deleteநெல்லைத் தமிழரே,தேர்தல் முடிவுகளுக்கும் என்னோட பதிவுகளுக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை.
Deleteஅதிரடி, நெல்லைக்கு வெயிலில் ஒண்ணும்புரியலை.கண்டுக்காதீங்க!
மின்னூல்கள் வந்ததும் சொல்லுங்கள் கீதா மா. மிக மிக மகிழ்ச்சி. எத்தனை திறமை உங்களிடம் இருக்கிறது என்றூ என்னால் யோசிக்கவே முடியவில்லை.
ReplyDeleteஅன்புக் குஞ்சுலுவுக்கு முத்தங்கள்.
இவர்கள் தாம் நம் மகிழ்ச்சிக்கு ஆதாரம்.
அத்தனை வேலைகளையும் நீங்களே செய்ய வேண்டுமா.
உடல் நலம் பேணவும்.
நீங்க வேறே ரேவதி! அதெல்லாம் திறமைகள் ஏதும் இல்லை! :)))) அத்தனை வேலைகள்னு எல்லாம் இல்லை. துணி ஷெல்ஃப், சமையலறை, பீரோ போன்றவை தான் நான் எப்போதும் செய்வது.இம்முறை என்னமோ இழுத்து விட்டது. புத்தக அலமாரியில் 2தரம் உட்கார்ந்துட்டு வேலை முடியவில்லை. :))) படிக்க உட்கார்ந்துடுவேன்.
Deleteஅக்கா சூப்பர் மின்னூல் வெளியீடா!! வாழ்த்துகள்!
ReplyDeleteநானே நினைச்சுட்டுருந்தேன் கோலாப்பூர் பண்டரிபூர் போனீங்க...லாட்ஜ் கஷ்டம் பற்றி எழுதினீங்க..ரயில பிடிக்கணும்னு இன்னும் அடுத்து எழுதலியேனு...நாளை வருமா..
குட்டிக் குஞ்சுலுவுக்கு விஷ்ஷஸ். அன்பு!
கீதா
இன்னிக்கு எழுதிடணும்! பார்க்கலாம் தி/கீதா! குட்டிக் குஞ்சுலு இந்தத் தரம் கொஞ்சம் எங்களோடும் விளையாடியது. இல்லைனா அதோட விஷமங்களிலே பிசியாக இருக்கும். வீட்டில் கால் வைச்சு நடக்க முடியாது! :))))
Deleteநானும் ஒரு மின்னூலுக்கு தயார் செய்து வைத்திருக்கிறேன். இனிமேல்தான் அனுப்ப வேண்டும்.
ReplyDeleteரெண்டு தரம் வந்திருக்குப் போல!
Deleteமெதுவா வேலை எல்லாம் முடிச்சுட்டு வாங்க கீதாக்கா..
ReplyDeleteகீதா
ஆமாம், ரொம்ப நெருக்கி அடிக்குது நேரம்! இதிலே வெயில் வேறே! :(
Deleteநானும் ஒரு மின்னூலுக்கு தயார் செய்து வைத்திருக்கிறேன். இனிமேல்தான் அனுப்ப வேண்டும்.
ReplyDeleteவாழ்த்துகள். விரைவில் எதிர்பார்க்கிறேன்.
Deleteமின் நூல் வாழ்துகள்.
ReplyDelete////வந்து கொண்டே இருக்கேன்!///
ReplyDeleteஎங்க???? தேம்ஸ்க்கோ??? எனக்கு பருப்புவடை சுட்டுக்கொண்டு வாங்கோ கீசாக்கா:)
ஹாஹா, பருப்பு வடை தானே! சீக்கிரம் செய்து அனுப்பறேன். :))))
Delete////ஆறுதல் என்றாலும் நீண்ட நாட்களாக வைத்திருந்த மின்னூல்களுக்கான இரு புத்தகங்களை இன்று எடிட் செய்து அனுப்பி வைத்திருக்கிறேன்///
ReplyDeleteஅதுதானே பார்த்தேன்:)... இன்னும் உடல்நலமாகவில்லையோ கீசாக்காவுக்கு என நினைச்சு வைரவைக் கும்பிட்டிட்டு வாறேன்ன்:).. இங்க என்னெண்டால் புத்தக வெளியீடாமே கர்ர்ர்ர்ர்:)...
நான் ஒன்லைனில் புக் வாசிக்க தொடங்கியதிலிருந்து அமேஷனில் கீசாக்காவின் பெயரில் புத்தகம் பார்த்தேன்ன்ன்:)...
வாழ்த்துக்கள்....
பட்டுக்குஞ்சலுவிடமிருந்து பிளையிங் கிஸ்ஸோ அவ்வ்வ்வ் ...
http://freetamilebooks.com/ அதிரடி, இந்தச் சுட்டியில் பாருங்க! விலை கொடுத்தெல்லாம் வாங்க வேண்டாம். எல்லாம் இலவசமே! :))))))
Deleteஆமாம்,குஞ்சுலு மூட் இருந்ததுன்னா ஃப்ளையிங் கிஸ் கொடுத்து டாட்டா, பை எல்லாம் சொல்லும். இல்லாட்டி நோ எனச் சொல்லிட்டுக் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு விரல் இடுக்கு வழியே பார்த்துச் சிரிக்கும்.
Deleteநான்கு மின்னூல்கள் புஸ்தகாவில் பதித்தேன் பின் ஏனோ மனம் செல்லவில்லை மார்கெடிங் செய்ய வேண்டும் போல் இருக்கிறது
ReplyDeleteவாங்க ஐயா, உங்களை இப்போதெல்லாம் என்னோட பதிவுகளில் அதிகம் பார்க்க முடிவதில்லை. உடல் நலம் தானே! உடல் நலம் பேணுங்கள். நான் புஸ்தகாவுக்கு எல்லாம் போவதில்லை. ஃப்ரீதமிழ் ஈ புக்ஸ்.காம் தான்! https://freetamilebooks.com/
Deleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்களிடமிருந்து சுறுசுறுப்பை கற்க வேண்டும்! (இனிமேல் ரெகுலராக வரப் பார்க்கிறேன்) :))