விட்டலனை ஏற்கெனவே பார்த்திருக்கோம். நல்ல தரிசனம் கிடைத்தது. இப்போக் கோயிலை அரசு எடுத்து நடத்துவதாகச் சொன்னார்கள்.அதோடு ஆன்லைனில் தரிசனத்துக்காக முன்பதிவும் செய்துக்கலாம் என்றார்கள். அது தெரிந்ததில் இருந்தே நம்மவர் மூணு மாசம் முன்னாடி இருந்தே என்னை முன்பதிவு செய்யச் சொன்னால் அது ஏற்கவே இல்லை. உன்னோட நேரம் இப்போ வரலைனே சொல்லிட்டு இருந்தது. வழக்கமான குருக்ஷேத்திர யுத்தத்துக்குப் பின்னர் அவர் தம்பியிடம் சொல்லியும், எங்கள் பையரிடம் சொல்லியும் முன்பதிவு செய்யச் சொன்னார். இருவருமே தரிசனத்துக்கான தேதிக்கு ஒரு வாரம் முன்னால் பதிவு செய்ய முடியாது என்று சொன்னதுக்குப் பின்னர் தான் கணினி வாங்கிக் கொடுத்து நாம் மோசம் போகவில்லை என சமாதானம் அடைந்தார். :))))) அதை ஏன் கேட்கறீங்க! இந்த மாதிரி விஷயங்களில் எல்லாம் கணினி என்னைப் போட்டுப் பார்த்துடும். அதிலும் ஐஆர்சிடிசி முன்பதிவுனாலே எனக்கு வயத்தைக் கலக்கும்! :))))
இப்படியாகத் தானே கடைசியில் பண்டர்பூருக்கும் வந்து சேர்ந்தோம். ரயிலில் இருந்து இறங்கி ஆட்டோவில் ஏறினதுமே வழக்கம்போல் ஆட்டோக்காரரிடம் கோயிலுக்கு அருகாமையில் உள்ள லாட்ஜ் எதுக்கானும் கூட்டிப் போகச் சொல்லி எங்கள் முக்கியத் தேவைகளான ஏசி, வெஸ்டர்ன் கழிவறை போன்றதை உறுதியும் செய்தோம். ஆனால் பாருங்க அந்த ஆட்டோக்காரர் இதை எல்லாம் இந்தக் காதில் வாங்கி இன்னொரு காது வழியே விட்டுட்டார். கோயில் அலுவலகத்திலேயே நடத்தும் யாத்ரி நிவாஸுக்குக் கூட்டிப் போகிறேன் என அந்த வழியே செல்ல ஆரம்பித்தார். நான் இங்கே கொஞ்சம் கோபத்துடனேயே அங்கெல்லாம் என்னால் வர முடியாது எனச் சொல்லிக் கொண்டிருக்க அவரோ பண்டர்பூரில் லாட்ஜே இல்லை போலப் பேசினார். கடைசியில் யாத்ரி நிவாஸுக்கு அருகே கொண்டு வந்தும் விட்டார். நாங்க கேட்ட மாதிரி அறைகளும் இருப்பதாகவும் இரண்டாம் மாடி எனவும் ஒரு நாளைக்குத் தானே அங்கேயே இருந்துக்கோங்க என்றும் சொன்னார். அது இருக்கும் இடத்தைப் பார்த்தாலே பிடிக்கலை! சந்து! கழிவு நீர்ச் சாக்கடைகள் ஓடிக் கொண்டிருந்தன. அதோட இரண்டாம் மாடி! படிகள் ஏறி இறங்கணும். என்னால் முடியாது எனப் பிடிவாதமாகச் சொல்லவும் கூட அவர் ஒத்துக்கலை. போய்த் தான் பாருங்க! 500 ரூ தான் வாடகை என்றார். அப்போத் தான் புரிந்தது. இவர் குறைந்த வாடகைக்கு நாங்கள் சம்மதிப்போம் என நினைக்கிறார் என்று. உடனேயே நான் வாடகை பத்திக் கவலை இல்லை; வேறே லாட்ஜுக்குக் கூட்டிப் போங்க! இல்லைனா இங்கேயே விடுங்க, நாங்களே வேறே ஆட்டோ பிடிச்சுப் போய்ப் பார்த்துக்கறோம்னு சொல்லிட்டேன்.
ஆனால் அவருக்கு எங்களை விட மனசில்லை. ஏனெனில் அந்தக் கொஞ்ச நேரத்தில் நம்ம உண்மை விளம்பி இருக்காரே அவர் மறுநாள் சோலாப்பூர் போய் அங்கிருந்து உத்யான் எக்ஸ்பிரஸில் நாங்க புனே போகப் போவதையும் இங்கிருந்து சோலாப்பூருக்கு எப்படிச் செல்வது என்பதையும் விசாரித்துக் கொண்டிருந்தார். அந்த ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவிலேயே போயிடலாம் என்றார். எவ்வளவு ஆகும் என்றதற்கு மற்றவர்கள் என்றால் 2000 ரூபாய் வாங்குவதாகவும், எங்களுக்காக 1500க்கு வருவதாகவும் சொன்னார். வேறு அரசாங்கப் பேருந்துகள் இருக்கானு கேட்டதுக்கு அவை எதுவும் சரியில்லை என்றும் நின்று நின்று போகும் எனவும் சொன்னார். கார் ஏதேனும் ஏற்பாடு செய்து கொள்ளலாம், நானே செய்து தரேன் என்றும் சொன்னார். சோலாப்பூரில் இருந்து புனே செல்ல இருவருக்கும் சாதாரண வகுப்புக்கான பயணச்சீட்டுத் தான் எடுத்திருந்தோம். அது 300 ரூபாய்க்கும் கீழே! இங்கே பண்டர்பூரிலிருந்து சோலாப்பூர் போக 45 அல்லது 50 கிலோமீட்டருக்கு 2000 ரூபாயா எனத் திகைத்துப்போய் உட்கார்ந்திருந்தோம். இது ஒரு முடிவுக்கும் அப்போதைக்கு வரவில்லை.
அவர் முணுமுணுத்துக் கொண்டே அந்தச் சந்தில் திரும்பிப் பக்கத்து மெயின் ரோடுக்கு வந்தார். எதிரே ஓர் பெரிய லாட்ஜ் அதை ஒட்டிய ரெஸ்டாரன்ட் இரண்டும் தெரிய இவர் அங்கே போகாமல் வலப்பக்கம் தெரிந்த ஓர் பாதையில் திரும்பி ஆட்டோவை நிறுத்தினார். அங்கே ஒருத்தர் மதியத் தூக்கத்தில் ஆழ்ந்து போயிருந்தார். அவரை எழுப்பி விஷயத்தை சொன்னோம். முதல் மாடியில் ஓர் அறை இருப்பதாகவும் லிஃப்ட் இருப்பதாகவும் சொல்லிவிட்டுப் போய்ப் பார்க்கச் சொன்னார். வாடகை பற்றிக் கேட்டதற்கு 1,800 ரூபாய் என்றார். அறையில் ஏசி இருக்கானு கேட்டதுக்கு இருக்கு என்றார். கழிவறையும் வெஸ்டர்ன் என்றார். நம்மவர் என்னைப் போய்ப் பார்க்கச் சொன்னார். சரினு லிஃப்டைத் தேடினால் இஃகி,இஃகி! ஒரு சின்ன ஜன்னல் தென்பட்டது! அதான் லிஃப்டாம்! அதுக்குள்ளே என்னோட இந்தச்சரீரம் புகுமானு நான் யோசிக்கையில் அந்த லாட்ஜின் ஊழியர் ஒருத்தர் (அங்கே அவர் தான் எல்லா முடிவும் எடுப்பார் போல) லிஃப்டைத் திறந்து தானும் உள்ளே போய் என்னையும் அழைத்தார்! இரண்டு பேரா? இந்த லிஃப்டிலா?ஙே!!!!!!!!!!!!!!!!!!!!! என நான் முழிக்க என் கையைப் பிடித்து இழுத்து உள்ளே தள்ளிக் கொண்டார். லிஃப்ட் இரு கதவுகள் கொண்ட அந்தக் காலத்து லிஃப்ட். மேலே சென்றதும் முதல் தளத்தில் அறையைக் காட்டினார். அறை பெரியது தான்!
ஆனால் ஒரு ஷெல்ஃப் கிடையாது. மேஜை, நாற்காலிகள் இல்லை. டெலிஃபோன் இல்லை. எதற்கேனும் வரவேற்பில் உள்ளவர்களைக் கூப்பிடணும்னால் ஒவ்வொரு முறையும் கீழே வரணும். சின்னச் சின்னதாய் இரு அறைகள். ஒன்று கழிவறை, ஒன்று குளியலறை! ஒருத்தர் உள்ளே போவதே சிரமம். எப்படிக் கட்டிட்டு அந்தக் கொத்தனார் வெளியே வந்திருப்பார் என நான் வியந்தேன். அறையில் இரு இரும்புக் கட்டில்கள்! இரும்புச் சட்டங்கள் அடித்து! ஒன்று சுவரை ஒட்டிப் போடப் பட்டிருக்கவே அந்தப் பக்கம் படுப்பவர்கள் எப்படிக் கீழே இறங்குவது எனக் கேட்டதுக்குக் கட்டில்களைத் தனியாய்ப் போட்டால் விழுந்து விடுவீர்கள் என அந்த ஊழியர் பயமுறுத்தினார். ஒரு பக்கம் நிறையப் படுக்கைகள். கம்பளிகள். அவற்றை எடுப்பீங்களா? நாங்க பெட்டியை எல்லாம் வைச்சுக்கணுமே, ஒரு ஷெல்ஃப் கூடக் கிடையாது என்றதுக்கு ஓர் மூலையைக் காட்டி இந்தப் பக்கம் வைங்க என்றார். படுக்கைகளை எடுக்க முடியாது என்றார். கீழே போய் நம்மவரிடம் சொன்னால் அதற்குள்ளாக அந்த ஓட்டல் உரிமையாளர் இவரை எப்படியோ மெஸ்மரைஸ் பண்ணி அறைக்கான ஒரு நாள் வாடகையை வாங்கிக் கொண்டிருந்தார். ஆட்டோக்காரர் திரும்ப வந்து கோயிலுக்குக் கூட்டிப் போவதாகச் சொல்லிவிட்டுப் பணம் வாங்காமலே போயிட்டாராம். அறையைப் பார்த்துட்டு வருவதற்குள்ளாக இங்கே எல்லாம் முடிஞ்சே போச்சு! இனிமேல் அறை வேண்டாம், வேறே இடம் போகலாம்னு எப்படிச் சொல்றது?
அரை மனதோடு கீழே வைக்கப்பட்டிருந்த பெட்டியையும், பையையும் அந்த ஊழியரிடம் மாடியில் அறையில் கொண்டு வைக்கச் சொன்னால், "யே ஹமாரா காம் நஹி! ஆப் லே ஜாவோ!" என்று சொல்லிவிட்டு அவர் மறுபடி உள்ளே போய்ப் படுத்து விட்டார். ரூம் சர்வீஸ் கிடையாதா எனக் கேட்டால் பதிலே இல்லை. இதுக்கு 1,800 ரூபாயா? எனக்கு மயக்கமே வந்தது! அதுக்குள்ளே நம்மவர் அந்தக் குட்டி ஜன்னலில் சாமான்களை வைத்துக் கொண்டு தானும் ஒடுங்கிய வண்ணம் மேலே அறைக்குச் செல்ல ஆயத்தமானார். இருவருமாகச் சேர்ந்து போக முடியாது. ஆகவே என்னிடம் கீழே இதிலேயே ரெஸ்டாரன்ட் இருக்காம்; இங்கேயே சாப்பிட்டுக்கலாம்னு சொல்றார். முதல்லே தேநீர் வாங்கிக் கொண்டு வா எனச் சொல்லி என்னிடம் பணத்தையும் ஃப்ளாஸ்கையும் கொடுத்துவிட்டு அவர் அறைக்குப் போனார். கீழே இருந்த ரெஸ்டாரன்டுக்குப் போய் அங்கிருந்த பெண்மணியிடம் இரண்டு தேநீர் வேண்டும் எனச் சொல்லி ஃப்ளாஸ்கைக் கொடுத்தேன். 30 ரூபாய் என்றார். சரினு பணத்தையும் கொடுத்தேன். தேநீர் போட்டுக் கொடுத்தார். வாங்கிக் கொண்டு மேலே வந்து முதலில் தேநீரைக் குடிப்போம்னு ஃப்ளாஸ்கைத் திறந்தால் உள்ளே தேநீரைத் தேட வேண்டி இருந்தது. மறுபடி ஙே!!!!!!!!!!!!!!!!! கொஞ்சூண்டுக்குத் தேநீர். அதுவும் 30 ரூபாய்.
மறுபடி கீழே இறங்கி அந்த அம்மாவிடம் கேட்டால் குழந்தைகளுக்குப் பால் புகட்டும் பாலாடை அளவுக்கு ஒரு கிண்ணத்தைக் காட்டி இதில் தான் தருவோம் என்றார்கள். நான் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனப் பல்லைக் கடித்துக் கொண்டு மறுபடி இதே போல் நான்கு தேநீர் போட்டுத் தரச்சொன்னேன். அப்போக் கூட அரைக் கப் தான் வரும்! ஆனால் அறுபது ரூபாய்க்குத் தேநீருக்குச் செலவழிக்கணுமானு மனசு வருந்தியது. மேலே போய்த் தேநீரைக் குடித்துவிட்டுக் கைகால் கழுவிக் கொண்டு கோயிலுக்குச் செல்லத் தயாரானோம். இதற்குள்ளாக நம்ம ரங்க்ஸ் கட்டில்களைப் பிரித்து ஏறி, இறங்க வசதியாகப் போட்டிருந்தார். பின்னர் கீழே வந்து ஆட்டோக்காரருக்குத் தொலைபேசிச் சொல்லிட்டுக் காத்திருந்தோம். அங்கேயும் அந்த ரெஸ்டாரன்ட் அம்மா, இங்கே உட்காராதே!அங்கே உட்காராதே! எனச்சொல்லிக் கொண்டிருந்தார். எரிச்சல் தாங்கலை.
பின்னர் ஓர் ஆட்டோ வந்தது. இது எதுவானாலும் ஏறிப் போயிடலாம்னு நான் சொல்லுவதற்குள்ளாக அந்த ஆட்டோவை ஓட்டி வந்த பையரே ஸ்டேஷனில் இருந்து எங்களை அழைத்து வந்தவரின் தம்பி எனச்சொல்லிவிட்டு அண்ணன் வேறே சவாரிக்குப் போயிருப்பதாகச் சொல்லிவிட்டு எங்களை அழைத்துச் செல்லும்படி அண்ணன் கூறி இருப்பதாகச்சொன்னார். சரினு அவருடன் கோயிலுக்குக் கிளம்பினோம்.

//எப்படிக் கட்டிட்டு அந்தக் கொத்தனார் வெளியே வந்திருப்பார் // - மைலாப்பூரில் ஒரு ஃப்ளாட் வாங்க 6 வருடங்களுக்கு முன்பு போனோம். ரோடுலாம் அகலம். ஃப்ளாட் ஓகே. அப்போ இருந்த மனநிலையில் எனக்கு பெரிய ஃப்ளாட் வாங்கணும்னு. ஆனால் அவர் காண்பித்த ஒரே ஒரு ஃப்ளாட்ல, டாய்லெட் பாத்ரூம் ரொம்பச் சிறியது. அதை எப்படி உபயோகப்படுத்துவாங்கன்னு எனக்கு ஆச்சர்யம். உங்க எழுத்தைப் படித்தவுடன் இதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது.
ReplyDeleteவாங்க நெல்லை. சில இடங்களைப்பார்க்கையில் எனக்கு இந்த பயம்/கவலைவரும்! :)))) எங்களால் எல்லாம் மைலாப்பூர், தி.நகர், மாம்பலம், அடையாறு போன்ற இடங்களில் குடித்தனம் இருப்பதை நினைத்துக் கூடப்பார்க்க முடியாது! நீங்கல்லாம் எப்படி இருக்கீங்களோ என என் தம்பி வீட்டுக்குப் போகையில் நினைச்சுப்பேன். அங்கே இப்போதைக்கு நல்லா இருப்பது மஹாதேவன் தெருவில் உள்ள காமாட்சி மெஸ் தான். உண்மையிலேயே நல்ல தரமான உணவு வகைகள்.
Delete//இவரை எப்படியோ மெஸ்மரைஸ் பண்ணி // - பின்ன என்ன... நீங்க என்னவோ அந்த அறையை விலைக்கு வாங்கப் போற மாதிரி, ஏகப்பட்ட கேள்வியைக் கேட்டுக்கிட்டு இருந்திருந்தீங்கன்னா, அவர் எவ்வளவு நேரம் கீழ காத்திருக்கமுடியும்?
ReplyDeleteநெல்லைத்தமிழரே, சௌகரியத்துக்காகத் தான் அறை எடுத்துத் தங்குவது! அது சரியா இல்லைனா அப்புறம் அடுத்தடுத்துப் பயணங்களிலே அதன் பாதிப்பு இருக்கும்.
Delete//"யே ஹமாரா காம் நஹி! ஆப் லே ஜாவோ!"// - ஹாஹாஹாஹா....... நான் பெட்டியை யாரையும் எடுத்துக்கொண்டுவரச் சொல்லமாட்டேன். எவ்வளவு பெரிய ஹோட்டல்ல தங்கினாலும், அவங்க வந்து எடுத்துக்கொண்டுவர்றேன்னு சொன்னாலும், நான் அதுக்கு ஒத்துக்கமாட்டேன். (எதுக்கு வெட்டிச் செலவு..அவனுக்கு ஏதேனும் கொடுக்கணும். அதைத் தவிர்க்கவும்தான்)
ReplyDeleteஇங்கே லிஃப்ட் இருந்ததால் நாங்க எடுத்துச் சென்றோம். லிஃப்ட் இல்லைனால் திண்டாட்டம் தான். இந்த ஏறி இறங்குவதைத் தவிர்க்கவே நாங்க பல்லவன், ராக்ஃபோர்ட் எதிலே சென்னைக்குப் போனாலும் எழும்பூரிலேயே இறங்கறோம். எழும்பூரில் லிஃப்ட் இருக்கு இரண்டாம் நடைமேடையில் எஸ்கலேட்டர் பக்கம். ஆனால் அதனால் பயன் இல்லை!
Delete"யே ஹமாரா காம் நஹி! ஆப் லே ஜாவோ!" //
Deleteஆத்தா நான் ஹிந்தில பாசாயிட்டேன் அப்படினு நெல்லை ஓடி வரும் சீன் மனக்கண்ணில் ஹா ஹா ஹா ஹா.... கீதாக்கா நெல்லைக்கு ஹிந்தில எல்கேஜி டெஸ்ட் வைச்சுருக்காங்க!!
கீதாக்கா அடுத்த பதிவுல கொஞ்சம் கஷ்டமான சென்டென்ஸ் அவங்க பேசினதுல போடுங்க...ஹிஹிஹி
கீதா
//ஃப்ளாஸ்கைக் கொடுத்தேன். // - நீங்க எழுதியிருக்கறதைப் பார்த்தால், அந்த ஃப்ளாஸ்க், இரண்டு அடி உயரமாவது இருக்கும் போலிருக்கே...ஹாஹா. On a serious note, எல்லாம் ஆர்கனைஸ்டா பண்ணியிருக்கீங்க.
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 150+150 முந்நூறு பிடிக்கும் ஃப்ளாஸ்க் அது! ஃப்ளாஸ்க், தம்பளர், வட்டை, ஸ்பூன், தட்டுகள் எல்லாம் எப்போவுமே கொண்டு போயிடுவோம்.சில இடங்களில் தட்டு இருக்காது; இலையும் இருக்காது. அப்போ என்ன செய்யறது?
Delete//அதை ஏன் கேட்கறீங்க! இந்த மாதிரி விஷயங்களில் எல்லாம் கணினி என்னைப் போட்டுப் பார்த்துடும்.// ஹாஹா! வீட்டுக்கு வீடு வாசப்படிதானா? எங்கள் வீட்டில் உனக்கு ப்ளாக் எழுதுவதில் இருக்கும் இண்ட்ரெஸ்ட் இதில் கிடையாது என்று வேறு சேர்த்துக் கொள்வார்.
ReplyDeleteவாங்க பானுமதி! மனசுக்கு ஆறுதலா இருக்கு! எங்க வீட்டிலேயும் அந்தக் குறை உண்டு! அதைச் சொல்லலை, அவ்வளவு தான்! மற்றபடி இந்தக்கணினி தேவையான சமயங்களில் துரோகியாக ஆயிடும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteஆம், இப்போதெல்லாம் தேநீர் கொஞ்சூண்டு கொடுத்துட்டு ஏகப்பட்ட காசு வாங்கிக்கறாங்க... கொத்தனார் எப்படி வெளியே வந்தார் ஆச்சர்யம் சிரிப்பு வந்தது!
ReplyDeleteஶ்ரீராம், அட, அங்கேயுமா? காசியிலுமா? அங்கெல்லாம் அப்படிக் கொடுக்க மாட்டாங்களே! குஜராத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் தேநீர் நிறையக் கொடுப்பாங்க! குஜராத்தில் ஒரு ஸ்பூன்! ஆனால் சுவை அபாரமா இருக்கும்!
Deleteஇந்த ஊர் ஆட்டோக்காரர் மற்ற ஊர் நல்ல ஆட்டோக்காரர்களுக்கும் சேர்த்து பழிவாங்கி விட்டாரோ!
ReplyDeleteஇல்லை, பழி வாங்கலை. யாத்ரி நிவாஸ் அழைத்துச் சென்றால் கமிஷன் கூட இருந்திருக்கும். அதோடு அது வாடகை கம்மினு நாங்க விரும்புவோம்னு நினைச்சிருக்கார் போல!
Deleteநாங்கள் சென்ற இடங்களிலும் லிப்ட் அளவு சிறிதாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் வரவேற்பிலிருந்து பார்த்துக்கொண்டே இருந்து இரண்டு பேர்கள் அதிகமாவே அடன்ஹால் கூட ஒரே திட்டு...
ReplyDelete//அடன்ஹால் கூட ஒரே திட்டு...// ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! காசியிலுமா? லிஃப்ட் எல்லாம் இருக்கா? நாங்க வீட்டில் தங்கி இருந்தோம். ஒரு வீடு முழுவதும் எங்களுக்குனு கொடுத்துட்டாங்க! யாரும் போட்டிக்கு வரலை! இப்போ அங்கே லாட்ஜ் வந்திருக்குனு போனவங்க சொன்னாங்க.
Deleteஅடப் பாண்டுரங்கா. என்னப்பா கீதா, இத்தனை கஷ்டப் பட்டிருக்கிறீர்கள்.அந்த ஆட்டோக்காரர் நல்லவரா இருந்ததுக்கு இவர் திருஷ்டிப் பரிகாரமா.
ReplyDeleteமெத்தை போட்டுக்காமல் இரும்புக் கட்டிலில் எப்படிப்
படுத்துக் கொள்வது. படிக்கும்போதே சங்கடமாக இருக்கிறது.
வாங்க வல்லி, கஷ்டமும், அதிர்ஷ்டமும் மாறி மாறித் தானே வரும். மெத்தை என்னும் பெயரில் ஓர் மரக்கட்டை கொடுத்தாங்க! என் அதிர்ஷ்டம் என்னோட சையாடிகா(sciatica) வலி அதில் படுத்ததும் சரியாச்சு! :)))))
Deleteஸ்ரீசலைத்தில் நீங்கள் சொல்வது போல் தான் டீ கப்.
ReplyDeleteசின்ன கிண்ணம் அளவு பேப்பர் கப் ஒரு மடக்கு கூட இருக்காது.
ஒரு பெரிய பிளாஸ்கில் போட்டு எடுத்து வந்து விடுகிறார்கள், ஒரு கூடையில் பேப்பர் கப்க்கள் வைத்து இருக்கிறார்கள். தொண்டை நனையாத டீதான்.
வாங்க கோமதி! ஆந்திராவிலுமா? இப்போல்லாம் எல்லோருடைய மனசும் குறுகி வருவதற்கு இது ஓர் அடையாளமோ?என்னவோ போங்க!
Deleteஆட்டோக்காரர் தம்பியை அனுப்பினாரே! நல்லது.
ReplyDeleteகோயில் தரிசனத்திற்கு வருகிறேன்.
ஆமாம், அவருக்கு எங்களை விட மனதில்லை. அதோடு ஸ்டேஷனில் இருந்து அங்கே வந்ததுக்குக் காசு வாங்கிக்கலையே!
Deleteநிகழ்வுகளை நேரில் பார்ப்பது போல் இருக்கிறது.
ReplyDeleteவாங்க கில்லர்ஜி, நன்றி!
Deleteஒரு சின்னக் குழந்தைக்கு இவ்ளோ பிரச்னையா!...
ReplyDeleteதலை சுத்துது!..
விட்டல.. விட்டல...
//ஒரு சின்னக் குழந்தைக்கு// - எந்தச் சின்னக் குழந்தை துரை செல்வராஜு சார்... 'இரட்டை இலை' சின்னக் குழந்தையா இல்லை 'தாமரை' சின்னக் குழந்தையா? புரியலையே
Deleteவாங்க துரை, இஃகி,இஃகி,இஃகி, சின்னக் குழந்தைனு ஒத்துக் கொண்டதுக்கு நன்னி ஹை! :)))) நெ.த. என்ன சொல்றார்னு புரியலை உண்மையாவே!
Deleteஇந்த மாதிரி விஷயங்களில் எல்லாம் கணினி என்னைப் போட்டுப் பார்த்துடும். அதிலும் ஐஆர்சிடிசி முன்பதிவுனாலே எனக்கு வயத்தைக் கலக்கும்! :))))//
ReplyDeleteகீதாக்கா ஹையோ அதை ஏன் கேக்கறீங்க....மீ க்கும் வயத்தைக் கலக்கும் ஐஆர்டிசி புக்கிங்க்...சுத்து சுத்துனு சுத்தும் வெளிய வந்ததும் புக் ஆகியிருக்காது. அப்புறம் இருந்த சொச்ச டிக்கெட்டும் புக் ஆகியிருக்கும் வெயிட் லிஸ்ட் ஆர் ஏ சினு என்னத்தையோ காமிக்கும்...கேப்சா கோஆப்பரேட் பண்ணாது...இப்ப எப்படினு தெரியலை இதெல்லாம் 2 வருடம் முன்னான கதை. துளசிக்காக நிறைய புக்கிங்க் பண்ண போது...
கீதா
கீதாக்கா நீங்க குயந்தை அதான் உங்க கையை பிடிச்சு இழுத்து உள்ள வாங்க மாமா கிட்ட அந்த ஹோட்டல் காரர் பேசுவது தெரியக் கூடாதுனு அமுக்கிப் போட்டு ரும் காமிக்கறேன்னு கூட்டிப் போய்ட்டார் போல!! நல்ல தெக்கினிக்கி ஹா ஹா ஹா ஹா
ReplyDeleteஅது சரிதான் கொத்தனார் எப்படி வெளிய வந்திருப்பார் அதானே நல்ல கேள்வி இப்ப நாங்க இருக்கற வீட்டுல டாய்லெட் அப்படித்தான் அக்கா திரும்பக் கூட முடியாது. ட்ரெயின் டாய்லெட் விட சின்னதுனா பார்த்துக்கங்க...டாய்லெட் தரை கழுவி விட கொஞ்சம் கஷ்டம்தான்...
கீதா
பண்டரிப்பூர் ரொம்பவே கஷ்டமாகிடுச்சு போல....தரிசனம் எப்படி என்பது அடுத்த பகுதியில்...அதில் கஷ்டம் இருந்திருக்காது என்ற நம்பிக்கை
ReplyDeleteகீதா
பிரயாணத்தில் இத்தனை சிரமங்கள், டீ இத்தனை விலையா? முந்தைய பதிவும் வாசித்துவிட்டேன். கோலாபூர் கொஞ்சம் பரவாயில்லை போல இல்லையா இத்தனிய சிரமம் இல்லை போலத் தெரிகிறது.
ReplyDeleteதொடர்கிறேன்

துளசிதரன்