இங்கே முந்தைய பதிவு இந்தச் சுட்டியில் பார்க்கவும்.
முதலில் பண்டரிநாதன் அங்கே கோயில் கொண்ட வரலாறைப் பார்ப்போமா? ஜானுதேவர், சத்யவதிக்குப் பிறந்த மகன் புண்டரிகன். பெற்றோரைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தான். அவனுக்குத் திருமணப்பருவம் வந்ததால் பெற்றோர் ஓர் பெண்ணைப் பார்த்துத் திருமணம் முடித்து வைத்தார்கள். அந்தப் பெண்ணுக்கு மாமனார், மாமியாரைப் பிடிக்கவில்லை. தன் கணவன் அவர்களைக் கவனித்துப் பணிவிடை செய்வது அதைவிடப் பிடிக்கவில்லை. ஆகவே மெல்ல மெல்ல கணவன் மனதை மாற்றி விட்டாள். அதன் பின்னர் புண்டரீகன் பெற்றோரைக் கவனிப்பதே இல்லை. மனம் வருந்திய பெற்றோர் இனி இங்கு இருப்பது உகந்தது அல்ல என நினைத்துக் காசி யாத்திரைக்குக் கிளம்பி அங்கே போய் மிச்ச நாட்களைக் கழிக்கலாம் எனக் கிளம்பினார்கள். ஆனால் மருமகளுக்கு அதுவும் பிடிக்கவில்லை. அவர்கள் மட்டும் எப்படிக் கிளம்பலாம்? நாமும் போக வேண்டும் எனப் புண்டரீகனை நச்சரித்தாள்.
அதன் பேரில் புண்டரீகன் பெற்றோர் காசிக்குச் செல்லும் குழுவில் அவனும் தன் மனைவியுடன் கிளம்பினான்.எல்லோருமே நடந்து சென்று கொண்டிருந்தனர். ஒரு சிலர் குதிரைகளில் பயணம் செய்தனர். புண்டரீகன் தன் மனைவியைக் குதிரை மேல் அமர்த்தித் தானும் இன்னொரு குதிரையில் அமர்ந்து பயணம் செய்தான். பெற்றோரை லட்சியமே செய்யவில்லை என்பதோடு பலர் எதிரிலும் பெற்றோரை அவமானம் செய்தான். அலட்சியம் செய்தான். ஏளனமாகப் பேசினான். பெற்றோர் மன வருத்ததில் வாயே திறக்க வில்லை. ஒரு நாள் இரவு அனைவரும் குக்குட முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார்கள். உணவு உண்ட பின்னர் ஓய்வு எடுத்தனர். புண்டரீகன் அங்கே வெளியே படுத்துத் தூங்கி விட்டான். அதிகாலையில் ஏதோ சப்தம் கேட்டு எழுந்தவன் என்னவென்று பார்த்தால், நைந்து போன துணிகளை உடுத்திய வண்ணம் அழுக்கும் அருவருப்புமாகச் சில பெண்கள் ஆசிரமத்தில் நுழைந்ததைப் பார்த்தான். யார் இவர்கள்! ஏன் இப்படிக் காட்சி அளிக்கின்றனர் என அவன் எண்ணும்போதே அவர்கள் ஆசிரமத்தைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம்செய்து முனிவர் குளிக்க சுத்தமான நீர் எடுத்து வைத்து, முனிவரின் துணிகளைத் துவைத்து அவருக்கு உணவு தயாரித்து எனப் பலவிதமான பணிவிடைகளையும் செய்தனர். பின்னர் அங்கிருந்து கிளம்புகையில் அவர்களைப் பார்த்தால் பளிச்சென்று வண்ணமயமான ஆடைகளை உடுத்திக் கொண்டு ஒளி பொருந்திய உடல்களோடு சுத்தமாகவும், வணக்கத்துக்கு உரியவர்களாகவும் காட்சி அளித்தனர்.
புண்டரீகனுக்கு எதுவும் புரியவில்லை. அன்றும் அங்கேயே தங்கும்படி ஏற்பட்டது. ஆகவே அன்று அதிகாலை அவன் விழித்திருந்து அந்தப் பெண்களைப் பார்த்து இது என்ன அதிசயம் எனக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று காத்திருந்தான். ஆனால் அவர்கள் உள்ளே நுழைந்ததுமே வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்து விட்டனர். ஆகவே அவர்கள் வெளியே செல்லும்போது அவர்களிடம்கேட்டு விட வேண்டும் என்று காத்திருந்தான். அவர்களும் வேலைகளை முடித்துவிட்டுப் பளிச்சென்ற ஆடைகளோடும், சுத்தமான ஒளி பொருந்திய உடலோடும் வந்தனர். அவர்களை வழிமறித்து அவர்கள் கால்களில் விழுந்தான் புண்டரீகன். "நீங்கள் யார்? ஏன் தினம் இங்கே வந்து முனிவருக்குப் பணிவிடை செய்கிறீர்கள்?அதோடு வரும்போது அழுக்கும், அருவருப்புமாக வரும் நீங்கள் கிளம்பும்போது தூய்மையானவர்களாக மாறுவது எப்படி?" என வினவினான்.
அதற்கு அவர்கள், அவர்கள் எல்லோருமே கங்கை, யமுனை, சரஸ்வதி, போன்ற பல புண்ணிய நதிகள் எனவும். மக்கள் அவர்கள் நதியாக ஓடும்போது நீராடித் தங்கள் பாவங்களை எல்லாம் இறக்கித் தூய்மை பெறுவதால் அந்தப் பாவங்கள் எல்லாம் சேர்ந்து அவர்கள் இப்படிக் கோர உருவைப் பெற்றுவிடுவதாகவும் சொன்னார்கள். அந்தப் பாவங்களை எல்லாம் அடியோடு தீர்த்துக் கொள்ளவே குக்குட முனிவரின் ஆசிரமத்துக்கு வருவதாயும் அவருக்குப் பணிவிடை செய்வதாகவும் சொன்னார்கள். அது என் அப்படி எனப் புண்டரீகன் கேட்க, குக்குட முனிவர் தன் பெற்றோரைத் தெய்வங்களாக எண்ணிப் பணிவிடை செய்து வருவதால் அவருக்குச் செய்யும் சேவை மூலம் தாங்கள் புனிதத்தை மீண்டும் பெறுவதாக அவர்கள் சொன்னார்கள். பின்னர் மறைந்து விட்டனர். புண்டரீகனுக்குத் தன் தவறு அப்போது தான் உறைத்தது. மனம் திருந்திப் பெற்றோருக்குப் பணிவிடை செய்வதை மீண்டும் ஆரம்பித்தான். பெற்றோரும் மனம் மகிழ்ந்து அவன் மனைவியோடும் மகிழ்வோடு இருக்கும்படி வற்புறுத்தினார்கள். ஆகவே அவர்களுக்காக மனைவியையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டான்.
இந்தப் புண்டரீகனை உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டியே அந்த விட்டலன் காத்திருந்தான். அந்த நாளும் வந்தது.
பக்திக்கதை ஒரு புறம் இருக்கட்டும்.
ReplyDeleteபுண்டரீகனைப்பற்றிப் படிக்கையில் அவனை மாற்றிய மனைவி.. இப்படியெல்லாம் ஒரு ஆணைத் தன் பெற்றோருக்கு எதிராக எளிதாக மாற்றிவிடுகிறார்களே இந்தப் பெண்கள். இத்தகைய நல்லகாரியங்கள் எங்கும் ஜெகஜ்ஜோதியாக நடப்பது தெரிகிறது. இதையெல்லாம் கவனிக்க நேர்கையில், பெண்களால் வாழ்ந்த குடும்பங்களைவிட, நாசமான குடும்பங்கள்தான் அதிகமோ என்கிற எண்ணம் வருகிறதே...
ஏகாந்தன் ஸார்... பெண்கள் தங்கள் அம்மா அப்பவே விட்டுப்பிரிந்து முற்றிலும் புதிய ஒரு குடும்பத்துக்குள் வாழ வருகிறார்கள். சிலருக்கு அந்தக் கோபம் இருக்கும் என்றுநினைக்கிறேன். நான் மட்டும் அம்மா அப்பாவைப் பிரிந்து வரவேண்டும். நீங மட்டும் அம்மா அப்பாவோடயே இருப்பாயா என்று தோன்றுமோ என்னவோ!
Deleteஏகாந்தன் அண்ணா உங்கள் கருத்து ஒகே என்றாலும் நான் பார்க்கும் வட்டத்தில் பலரும் தங்கள் மாமனார் மாமியாரைப் பார்த்துக் கொள்கிறார்கள். சிலர் மருமகள்களைச் சாடினாலும் கூட.என்று என்னால் சொல்ல முடியும்.
Deleteஇரண்டாவது அந்த ஆணிற்கு புத்தி எங்கே போயிற்று? மனைவி சொல்வதெல்லாம் அப்படியே ஏற்க வேண்டும் என்றில்லையே. எது அவனை வீழ்த்துகிறது? சுய புத்தி இல்லாத முதுகெலும்பு இல்லாத ஆண் என்று சொல்லலாமா?
எனக்குத் தெரிந்து அப்படி நீங்கள் சொல்லியிருக்கும் சூழலில் இருக்கும் ஆண்கள் முதுகெலும்பு தங்களுக்கு இல்லை என்று சொல்லிப் புலம்புவதையும் கேட்க நேர்கின்றது.
நீங்கள் சொல்லியிருக்கும் சூழலுலுக்கு மாற்றியும் நடக்கிறது மனைவியின் பிறந்த வீட்டவரை மதிக்காத, அண்டவிடாத ஆண்களும் இருக்கிறார்கள் ஏகாந்தன் அண்ணா
கீதா
வாங்க ஏகாந்தன், முதல் வரவுக்கு நன்றி. பெண்கள் தங்கள் கணவனையே சார்ந்திருப்பதிலும் பெற்றோரிடமிருந்து பிரிப்பதிலும் "Possessiveness" தான் முக்கியக் காரணம் என நினைக்கிறேன். அதோடு ஶ்ரீராம் சொல்லி இருக்கும் கருத்தையும் ஏற்கலாம். ஆனால் திருமணத்தன்றே தன்னை நமஸ்கரிக்க வரும் மருமகளிடம், "உயிரோடு என் பிள்ளையைத் தூக்கி உன்னிடம் கொடுத்துட்டேன்! என் பிள்ளையை என்னிடமிருந்து பிரிக்காதே!"என்று அழும் மாமியார்களையும், முதல் இரவுக்கு அனுப்பிய பிள்ளையை வெளியே அழைக்கச் சொன்ன மாமியாரையும் தெரியும்! இதுக்கு உங்கள் கருத்து என்ன? நல்லவேளையா இப்போதைய பெண்கள் மாமியார்கள் உட்பட இப்படி இருப்பதில்லை. பெரும்போக்காகவே இருக்கின்றனர். அவர்கள் என்ன கஷ்டப்பட்டிருந்தாலும் அதை மருமகள்களிடம் காட்டுவதில்லை.அன்பாகவே இருக்கின்றனர். அல்லது அவரவர் போக்கு என விலகி இருக்கின்றனர்.
Deleteமனைவியின் பிறந்த வீட்டைக் கணவன் ஏற்காததற்கு அவன் அம்மாவே முக்கியக் காரணம் தி/கீதா! அவர்களிடம் பணிந்து போயிடாதே! உன்னுடைய மதிப்பைக் குறைச்சுக்காதே என்றெல்லாம் சொல்லிப் பிள்ளையை ஆரம்பத்திலிருந்தே விலக்கி வைப்பது அந்தப் பிள்ளையின் அம்மா தான்! இதை எல்லாம் கணவன், மனைவி இருவரும் பேசித் தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். அம்மா சொல்வதைப் பிள்ளை கேட்டுக் கொண்டிருந்தாலும் நடைமுறையில் அப்படி எல்லாம் இருக்கக் கூடாது! வாய் பேசாமல் எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.
Deleteபடித்த கதைதான் அருமையாக சொல்கிறீர்கள்.
ReplyDeleteபுண்டரீகனை உலகுக்கு எடுத்துக் காட்ட விட்டலன் வருவதை படிக்க காத்து இருக்கிறேன்.
வாங்க கோமதி, இன்னிக்காவது விட்டலன் வருவானா பார்க்கலாம்.
Deleteஓஹோ. இது தான் திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெயர்க் காரணமோ? ஸ்ரீரங்கத்திலும் புண்டரீகாட்சன் ஒரு தூணில் உள்ளார் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteJayakumar
வாங்க ஜேகே அண்ணா! கடவுளே! எங்கே இருந்து எங்கே முடிச்சுப் போடறீங்க? புண்டரீகாக்ஷன் என்றால் செந்தாமரைக் கண்ணன் என்னும் பொருள்.
Deleteபுண்டரீகம்(பெ) பொருள் கீழே
தாமரை
பண்டைய காலம் தொடங்கியே மருமகளுக்கு மாமனார்-மாமியாரை பிடிக்காது போலயே,,,
ReplyDeleteவாங்க கில்லர்ஜி, இது உலகம் முழுவதும் உள்ளது! :(
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநல்ல அருமையான கதை. பிறப்பிலேயே நல்ல சுபாவம் கொண்ட ஒரு நல்ல மனிதன் சில சந்தர்பங்களினால் தவறுகள் செய்ய நேரிடும் போது அதை உணராவிட்டாலும், பின் திருந்தி உணர்ந்தி வருந்தி வரும் போது தெய்வத்தின் அருள் பார்வையும் அவன் மேல் வர்ஷிக்கும் பாக்கியம் பெற்றால், அதை விட அவனுக்கு வேறு என்ன வேண்டும்? தெய்வமும் இப்படிபட்ட புண்ணியவான்களைத்தானே பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கிறார்.! இதைதான் முன்பிறவி புண்ணியங்கள் (ஊழ் வினைப்பயன்) என்கிறோம். புண்டரீகனுக்கு அருள் மழை விட்டலவனால் எப்படி சொறிந்தது என அறியும் ஆவலுடன் இருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா! வரவுக்கு நன்றி.விட்டலன் இன்று வந்துடுவான் என நினைக்கிறேன்.
Delete// அவன் மனைவியோடும் மகிழ்வோடு இருக்கும்படி வற்புறுத்தினார்கள்... //
ReplyDeleteஇது தான் பெற்றோர்...
வாங்க டிடி. எல்லாப் பெற்றோரும் இப்படி இருப்பதில்லையே! :(
Deleteபுராணக் கதையைத் தெரிந்துகொண்டேன். கதையில் வருபவர்கள் எளிதில் ஒரு சம்பவத்தில் திருந்தி விடுகிறார்கள்!
ReplyDeleteஅதைச் சொல்லுங்க ஸ்ரீராம். ஒரே சம்பவம் மாற்றிடுது!!
Deleteசினிமாவில் கூட அப்ப்டித்தானே ஒரே சீன்ல மாறிடுவாங்க...மாதங்கள் கடந்து என்றோ வருடங்கள் கடந்து என்றோ கூடப் போட மாட்டாங்க ஹா ஹா ஹா ஹா..
கீதா
புண்டரீகன் ஏற்கெனவே நல்லவன் தானே! மனைவியால் தானே மாறினான். இப்போது தன் தவறைப் புரிந்து கொண்டான். நாம் எத்தனையோ தவறுகளை நம் பெற்றோர் சொல்லும்/எடுத்துக்காட்டும் ஒரு பேச்சில் புரிந்து கொள்ள மாட்டோமா? அதோடு அசுரர்கள், அரக்கர்கள் தான் விரைவில் திருந்த மாட்டார்கள் என்று புராணங்களில் வரும்.
Deleteஒரு சம்பவத்தால் மாறிய சிலரை நான் பார்த்திருக்கேன் தி/கீதா!
Deleteநிஜத்திலும் அப்படி நடக்கும் ஶ்ரீராம். ஏன் நம் வாழ்க்கையிலேயே யாரோ சொன்ன ஏதோ ஒரு சொல், மற்றவர்களைப் பார்த்து நாம் வியந்த ஒரு விஷயம் நம் நடத்தையில் மாறுதல் கொண்டு வந்திருக்கும். அதை நாம் உணர்வதில்லை, அல்லது பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
ReplyDeleteஅதே, அதே சபாபதே பானுமதி! உடம்பு தேவலையா? பஜனை நன்றாக இருந்தது.
Deleteபுராணக் கதையின் கருத்து நல்ல கருத்து.
ReplyDeleteகீதா
நன்றி கீதா!
Deleteபுண்டரீகனுக்கும் பண்டரிபுரனுக்கும் என்ன தொடர்புனு இனி வரும் கதையில் வருமோ?
ReplyDeleteகீதா
பெரிசா ஒண்ணுமில்லை. அவன் பெயரால் ஸ்தாபனம் ஆன ஊர் நாளாவட்டத்தில் பண்டரிபுரம் என்றானது. ஹிந்தி/மராட்டி உச்சரிப்பின் படி பந்தர்பூர் தான் சரியான உச்சரிப்பு.
Deleteகேட்டிராத கதை நன்றி
ReplyDeleteஅன்பு கீதா,
ReplyDeleteஒவ்வொரு பதிவாகப் படித்து வருகிறேன்.
முரளிதர ஸ்வாமிகள் முன்பு ராஜ் டிவியில்
இந்தக் கதைகளையெல்லாம் சொல்வார்.
எத்தனை கதைகள் இந்தப் பாண்டுரங்க விட்டலனைப் பற்றி. நீங்கள் சென்று வந்ததே
எங்கள் பாக்கியம்.
புரந்தர தாசருக்கு இத்தனை கோபமா. பகவானே விட்டலா.