எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, May 17, 2019

ஙே!!!!!!!!!!!!!!!!!!!

மூன்று நாட்களாக வேலை அதிகம். இணையத்துக்கு வந்தாலும் பதிவுகள் போடவோ,நண்பர்கள்பதிவுகளைப் படிக்கவோ முடியவில்லை. நல்ல வேளையாக யாரும் தேடவில்லை. நெ.த.வும், ரேவதியும் மட்டும் தனியாகச் செய்தி கொடுத்துக் கேட்டிருந்தார்கள். அதோட அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க வேலைகள் முக்கியம் இல்லையா? அதிரடி எல்லாம் அம்மா வந்திருக்கும் சந்தோஷத்தில் நினைக்கக் கூட மாட்டாங்க என்பது இயல்பு. அதோடு அவங்களுக்கு என்னோட ஜனனி, ஜனனி பதிவில் கொஞ்சம் இல்லை நிறைய வருத்தம்! :) மனசு தாங்கவில்லை அவங்களுக்கு.  நேற்றைய ஸ்ரீராமின் பதிவு மட்டும் அவசரமாக ஒரு பார்வை பார்த்தேன். கருத்துச் சொல்லவில்லை. அங்கே இருந்த ட்ராஃபிக் ஜாமில் காணாமல் போய்விடும் அபாயம் இருந்ததால் எதுவும் சொல்லவில்லை. யாருக்கானும் அந்த ருசியில் நம்ம நினைவு வந்திருந்தால்தான் ஆச்சரியப் படணும். :)

நேத்து ராத்திரி/இல்லை, இல்லை, இன்னிக்குக் காலையிலே தூக்கத்திலே  3- 30 மணி சுமாருக்குக் கத்தினேனாம். நம்ம ரங்க்ஸ் சொல்றார். எனக்கு நினைவில் இதெல்லாம் இருப்பதில்லை. எதுக்குக் கத்தினேன்னு கேட்டார். முழிச்சேன். என்ன பதில் சொல்றது? அப்போத் தான் 3 மணிக்கு ஏசியை அணைச்சுட்டுப் படுத்தேன். அரைமணிக்குள் என்னவா இருக்கும்? இஃகி,இஃகி, எனக்கே தெரியலை! ஒரு வேளை நேற்றைய அனுபவங்களோ?  நேத்துப் பூரா ஐஆர்சிடிசி தளத்தில் வெட்டியாக நாளைச் செலவழித்ததில் அதில் பயந்துட்டேனோ என்னமோ! கடைசியில் ரயில்வேயில் அங்கே இங்கேனு கேட்டும் மெயில் கொடுத்தும் வேலைக்கு ஆகலை! அது எரர் காட்டிக் கொண்டே இருக்கு. விஷயம் ஏதும் இல்லை.  ஐஆர்சிடிசி மூலம் ரயில்வேயில் அறை முன்பதிவு செய்யணும். தலை கீழா நின்னு பார்த்துட்டேன். பெப்பே என்று விட்டது. இன்னிக்கு மறுபடி உட்காரலாமா வேண்டாமானு யோசனை. அப்புறமா இந்த நாளும் வெட்டியாக ஆயிடுமோனு பயம்மா இருக்கு! அதான் துர்சொப்பனமா வந்து கத்தினேனோ? ஙே!!!!!!!!!!!!!!!!!!

85 comments:

 1. ஐஆர்சிடிசி தளத்தின் மூலமா எங்க பிரயாணம் பண்ணத் திட்டமிட்டீங்கன்னு யோசிங்க... விடை கிடைத்துவிடும்.

  ஒருவேளை அறை வாடகை எதிர்பார்த்ததைவிட அதிகமோ? இல்லை..மறுபடியும் எங்க போனாலும் 50-60 படிகள் ஏறவேண்டிய ஊரா? ஹாஹா

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லைத்தமிழரே, அதெல்லாம் ரயில்வேயில் அதிகமாய் வசூலிப்பதில்லை. படிகள் என்னமோ ஏறித்தான் ஆகணும்! வேறே வழியே இல்லை! :)))))

   Delete
 2. துர்சொப்பனமெல்லாம் வந்திருக்காது கீதாமா.
  இன்னிக்கு நல்ல நாளாச்சே.

  அந்த ஆத்தங்கரையைக் கடந்த நினைவில்
  சில்லென்று இருந்திருக்கும்.பரவாக்கரை நினைவோ.

  இனிய பயணங்களுக்கும் வாழ்க்கைப் பயணத்துக்கும் நல் வாழ்த்துகள்
  கீதாமா. சாம்பசிவம் சாரிடமும் சொல்லுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, உங்க தயவால் இன்னிக்கு அனைவரும் வாழ்த்தும் பெரும் பேறு கிடைக்கப் பெற்றேன். ஆரம்ப காலங்களில் முதல் ஓரிரு வருஷம் சொன்னேன். அப்புறமெல்லாம் நான் சொல்லுவதில்லை. ஆனாலும் நினைவு வைத்துக் கொண்டு நீங்கள் பதிவு போட்டதுக்கு என் நன்றி.

   Delete
  2. நல்லவர்களுக்கு வாழ்த்துகள் சொல்வதில் எனக்குத் தான் புண்ணியம்
   கீதாமா.
   நீங்க கோமதி எல்லோரும் எப்பவும் சௌக்கியமா இருக்கணும்.

   Delete
  3. நேற்றைய தினம் உங்களால் எனக்குக் குவிந்த வாழ்த்துக்களை நினைத்து இன்னமும் கண்ணீர் வருகிறது. ரொம்ப நன்றி ரேவதி!

   Delete
 3. ஐஆர்சிடிசி மூலம் ரயில்வேயில் அறை முன்பதிவு செய்யணும்.//

  மறுபடியும் பயணமா?
  கீதாரெங்கன் தேடினார்களே உங்களை, ஊருக்கு போய் விட்டீர்களோ என்று கேட்டு இருந்தார்.

  எனக்கும் ஒரு வாரமாக வேலை அதிகமாய் இருக்கிறது.
  இன்றும் சிலவேலைகள் நல்லபடியாக முடியவேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறேன்.
  உங்களுக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.


  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி! கீ.ரெ. தேடினாரா? எனக்கும் இங்கே கொஞ்சம் வேலை அதிகம் தான். நானும் உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன். நன்றி.

   Delete
 4. வணக்கம் சகோதரி

  நேற்றெல்லாம் உங்களை எ.பியில் காணவில்லையே எனத்தேடினேன். இன்ன விஷயத்துக்காக என்று எப்போதும் சொல்லிவிட்டுப் போகும் நல்ல பண்புடைய தங்களை காணவில்லையே என்ற ஒரு நினைப்பு. நானெல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் மாயமாகி பின் நிதானமாக வருகிறவள். அதனால் யாருக்கும் என் நினைவு வராது.

  இன்று தங்களுக்கு திருமணநாள் என அறிந்தேன். மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள். அதற்கு ஸ்பெஷலாக ஏதேனும், வாங்க/செய்ய என்று வெளியில் சென்றீர்களோ என நினைத்தேன். பதிவை பார்த்து காரணத்தை புரிந்து கொண்டேன். மறுபடி பயணமா? நாங்களும் நே!! என்றுதான் விழிக்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, நானும் உங்களைப் பார்த்து 2,3 நாட்கள் ஆகிவிட்டது. அதெல்லாம் நான் எப்போவும் சொல்லிட்டுப் போகும் வழக்கம் இல்லை! ஹிஹிஹி! வேணும்னே சொல்லாமல் எல்லாம் போயிருக்கேன். போவேன். ஆனால் இப்போச் சில தவிர்க்க முடியாத காரணங்கள். வாழ்த்துகளுக்கு நன்றி.

   Delete
 5. நேற்றைய எங்கள் பதிவில் நாங்கள் உங்களைத் தேடினோம். வாட்ஸாப்பில் விசாரித்துச் சொல்லக் சொன்னார்கள். இன்று விசாரிப்பதற்குள் நீங்களே வந்துவிட்டீகள்!

  ReplyDelete
  Replies
  1. இஃகி,இஃகி, ஶ்ரீராம்,அப்படியா? :))))))

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 ஸ்ரீராம்.. வட்சப்பில் விசாரிக்கலாமே என ஐடியாக் கொடுத்தது சுவீட் 16 அதிராதான் எனச் சொல்ல மனசு வரல்ல பாருங்கோ:)).. விடுங்கோ மீ காசிக்குப் போகப்போறேன்:))

   Delete
  3. வாட்சப்பில் நெ.த. விசாரித்திருந்தார். ரேவதியும் மெயில் மூலம் கேட்டிருந்தார். தி/கீதா வேலை மும்முரம்னு நினைக்கிறேன். இல்லைனால் அவரும் கேட்டிருப்பார். இன்னும் சில, பல வேலைகள்முடியலை! அதெல்லாம் முடியும் வரைக்கும் கொஞ்சம் இப்படியும், அப்படியுமாத் தான் இருக்கும். :(

   Delete
 6. உங்கள் திருமண நாளுக்கு என் நமஸ்காரத்தைச் சமர்ப்பித்து, வாழ்த்துகளை சொல்லிக் கொள்கிறேன் - இங்கும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி, நன்றி, நன்றியோ நன்றி.

   Delete
  2. ஆசீர்வாதம்?

   Delete
  3. ஹையோ! உங்களுக்கு இல்லாததா? எப்போதுமே உண்டு. உங்கள் அனைவருக்கும் எங்களோட ஆசிகள் எப்போவும் உண்டு.

   Delete
  4. //ஆசீர்வாதம்?// - கேட்கிற காரணம் புரியுது ஸ்ரீராம். கீசா மேடம் ஒன்வே டிராபிக். அவங்க பேங்க் அக்கவுண்ட்லதான் போடச் சொல்வாங்களே தவிர, நம்மகிட்ட பேங்க் அக்கவுண்ட் கேட்கமாட்டாங்க. அதுனால ஆசிகள் மட்டும்தான்.

   Delete
  5. எங்க வழக்கம் என்னன்னா, 'அம்மான் ஆசீர்வாதம்' என்றாலே அதற்கு அர்த்தம், மாமா கொடுத்த பணம் என்றுதான். கல்யாணத்துல இல்லை விசேஷத்துல நாம கொடுக்கறதை, வாத்தியார், 'இன்னாருடைய ஆசீர்வாதம்' என்று சொல்லித்தான் கவரை அவங்கள்ட கொடுப்பார்.

   Delete
 7. நேற்றைய எங்கள் பதிவில் உங்கள் கருத்து இல்லாதது எனக்குக் குறையே...​ நீங்கள் கருத்திட்டாள் அட்லீஸ்ட் என் மெயில் பாக்ஸுக்கு வந்து ஈஸியாகப் படிக்க முடியும் என்னால்!

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், பார்க்கிறேன். என்ன புளியோதரை கிடைச்சு உங்க ஜன்மம் சாபல்யம் ஆகி இருக்கு போல! அதென்ன ரயிலில் உங்க குழுவினரைச் சமைக்க விடலையா? சமைச்சு வைச்ச உணவுகளைக் கொடுத்திருக்காங்க! மிளகாய்ப் பொடி ஒத்துக்காத என் போன்றவர்களுக்குத் தொட்டுக்க என்ன?

   Delete
  2. //நீங்கள் கருத்திட்டாள்//

   கருத்திட்டால்

   Delete
  3. இன்னிக்கு முடிஞ்சால் அந்த வியாழக்கிழமைப் பதிவில் கருத்துச் சொல்லிடறேன். :)))))

   Delete
  4. //புளியோதரை கிடைச்சு உங்க ஜன்மம் சாபல்யம் ஆகி இருக்கு போல! // - கீசா மேடம்... நான் புரிஞ்சுக்கிட்டது என்னன்னா, அந்த நங்கநல்லூர் அனுமாரே ஸ்ரீராம் கிட்ட, ரயில் பயணத்தின்போது, 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'ன்னு சொல்லிச் சிரிச்சார்னு...

   Delete
 8. அதிரடி புதுப்பதிவு போட்டு விட்ட களைப்பில் இருக்கிறாராக்கும்! மறுபடியும் ரயில்வே ரிஸர்வேஷனா? புதிய பயணமா? வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், காலையில் உங்களோட வலைப்பக்கம் இடது பக்கம் அதிரடியோட புதுப் பதிவு கண்களில் பட்டது. பல பதிவுகள் இருக்கு படிக்க! மெதுவாத் தான் வரணும்.அதுக்குள்ளே அங்கே 300 கருத்துகள் வந்து நம்மளோடது காணாமல் போயிடும்.

   Delete
  2. அதுக்குள்ளே அங்கே 300 கருத்துகள் // இது புது ட்ரெண்ட் கீதா மா. முன்னாடி வலைப்பதிவில் கும்மின்னு
   வரும் நினைவிருக்கா.ஹாஹா. இதுவும் அழகா தான் இருக்கு.

   Delete
  3. ஹா ஹா ஹா இல்ல கீசாக்கா மெதுவா வாங்கோ.. எனக்கு இன்று பதில்கள் குடுக்கவே நேரம் கிடைக்கவில்லை. இப்பகூட நித்திரை வந்துது ஏன் தெரியுமோஒ நவரத்தினா ஒயில் வாழ்க்கையில் முதல் தடவையாக வச்சு தோய்ந்தேன்ன்ன்.. கை கால் எல்லாம் சில்ல்ல்ல் என ஆகிட்டுது ஓடிப்போய் ஒரு மல்லி+ வேர்க்கொம்புக் கோப்பி குடிச்சேன்.. நித்திரை போயிட்டுது இங்கு ஓடி வந்து திறந்தேன்...

   Delete
  4. இன்னைக்குக் தான் மத்தியானமா வரணும்னு இருக்கேன் அதிரடி. இந்தக் காலை வேளையில் ஒரு மணி நேரம் போல் இணையத்தில் உட்கார்ந்தால் பல வேலைகள் பின்னுக்குப் போய்விடுகின்றன. :) அதான்.

   Delete
  5. ஆமாம், வல்லி, கும்மினுஅப்போல்லாம் சொல்லுவாங்க தான்! ரொம்பவே 300, 400 என்று போனால் என்ன விஷயம்ங்கறதே மறந்துடுமோனு எனக்குத் தோணும். :))))

   Delete
 9. விழித்து, முழித்த பிறகு பதிவு எழுதுங்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, முந்தைய பதிவில் ஆளைக் காணோம்! வேலைப்பளு குறைந்திருக்கா?

   Delete
 10. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 11. /எதுக்குக் கத்தினேன்னு கேட்டார். முழிச்சேன்/

  ராத்திரி நேரத்தில் நான் ஒரு ராஜஷன் போல் வருவேன்
  நாளைக்கு பதிவு இடுவேன் என்று சொல்லும் வரை போராடுவேன்.
  கீசாக்கா பதிவு வேணும்.
  கீசாக்கா பதிவு வேணும்.
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. ஜேகே அண்ணா, ராஜஷனா? ராக்ஷசனா? எழுத்துப் பிழை! இம்பொசிஷன் எழுதணும்.

   ஆஹா! நீங்க தானா அது? ராக்ஷசன் போல் வந்தது! அதான் பயந்து இருக்கிறேன்! :))))))

   Delete
  2. ///ஜேகே அண்ணா, ராஜஷனா? ராக்ஷசனா?//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது ரெம்ம்ம்ம்ம்ம்ப முக்கியம் இப்போ:)) அது ராட்சசன் ஆக்கும்:)) ஹா ஹா ஹா:)

   Delete
 12. திருமண நாள் வாழ்த்துகள் அம்மா...

  ReplyDelete
 13. ஹா...ஹா...இன்றும் துர்சொப்பனம்தான்.:)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, மாதேவி! என்னன்னே நினைவில் இல்லை.

   Delete
 14. ஹாப்பி ஹாப்பி அனிவெர்சரி அக்கா :)
  இன்னும் பதிவை முழுதும் வாசிக்கல்லை கீழே புது புடவை ஸ்வீட்ஸ் ஸ்னாக்ஸ் இருக்கும்னு நினைக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், நேற்றைய தினம் உண்மையிலேயே ஓர் ஆச்சரியமான தினம் தான். அம்பத்தூரில் எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டு மாமிக்கும் நேற்றுத் தான் கல்யாண நாள். என்னை விட ரொம்பப் பெரியவங்க. ஆனால் தாமதமான திருமணம். ஒவ்வொரு வருஷமும் அங்கே இருந்தவரை ஒருத்தருக்கொருத்தர் ஸ்வீட் கொடுத்து வாழ்த்திப்போம். நாங்க போய் மாமி, மாமாவை நமஸ்காரம் பண்ணுவோம். இங்கே வந்ததும் தொடர்பே இல்லாமல் இருந்தது. நேத்திக்கு அந்த மாமி கூப்பிட்டு வாழ்த்துச் சொன்னாங்க. இது போல் தொடர்பே இல்லாமல் இருந்த உறவினர் சிலரும் தொடர்பு கொண்டார்கள்.

   Delete
  2. புடைவை தான் கோலாப்பூரில் எடுத்திருக்கேனே. அதில் ஒன்றைக் கட்டிக் கொண்டேன். ஸ்நாக்ஸ் பண்ணணும்னு நினைச்சுப் பின்னர் பண்ணலை. சேமியா பாயசம் மட்டும் செய்தேன்.

   Delete
 15. // யாருக்கானும் அந்த ருசியில் நம்ம நினைவு வந்திருந்தால்தான் ஆச்சரியப் படணும். :) //
  கர்ர்ர் நேற்று எல்லாரும் தேடினாங்கக்கா ஆனா ஏனக்கு தெரியும் இன்னிக்கு வருவீங்கன்னு :)))

  ReplyDelete
  Replies
  1. அதே ஏஞ்சல் நானும் நேற்று அக்காவின் பதிவு வரும்னு எதிர்பார்த்தேன். எபி கும்மிக்கப்புறம் அங்கு ராகம் போட்டது கூட வந்துச்சானு தெரியல கரன்ட் கட் இங்கு மழை இடி மின்னல் என்பதால் கரன்ட் போயிருச்ஹ்கு....அப்புறம் லேட்டாகத்தான் வந்தது...ராத்திரி பார்க்க நினைத்து ஹிஹிஹி

   கீதா

   Delete
  2. ஹாஹா,ஹா, ஏஞ்சல், தி/கீதா, நான் பார்த்தேன் அங்கே நீங்கல்லாம் பேசிக் கொண்டதை. சும்மாத் தான் வம்பு பண்ணினேன். அல்லது எங்க ஊர் பாஷையில் ஒரண்டைக்கு இழுத்தேன். :))))

   Delete
 16. big கர்ர்ர்

  //அதோட அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க வேலைகள் முக்கியம் இல்லையா? //
  நான் வேலை பிஸினாலும் எங்கள் பிளாக்கில் பின்னூட்டங்களை போனில் படிச்சி தெரிஞ்சிப்பேன் யார் யார் வந்திருக்கானு யார் வரல்லைனு .

  நேற்று உங்களை முதலில் தேடியது கீதா ரெங்கனும் கமலாக்காவும் :) அதிரடி தேடவேயில்லை என்பதை அப்புறம் ஸ்ரீராம் கூட கீதா சொன்னபிறகே ஆமால்ல என்றார் :) இப்போதான் மனசுக்கு திருப்பதி :) இல்லை திருப்தி ஹ்ஹஹ்ஹா
  நேற்று ஒரே அட்டகாச கும்மியா அதில் 100 ,200 ஐ பிடிக்க ஏட்டாபோட்டி வேற வேறு யாரும் தேடினாங்களான்னு கவனிக்கலை ஹீஹீ

  ReplyDelete
  Replies
  1. //அதிரடி தேடவேயில்லை என்பதை///
   நான் ஜொன்னனே நான் ஜொன்னனே. நேக்கு எடிரி வெளியில இல்லை:) வீட்டுக்குள்ளயேதேன்ன்ன்ன்ன்ன்ன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கீசாக்கா உங்களைத் தேடியது நான் மட்டும்தேன்:))..

   பாருங்கோ நெ.தமிழன், ஸ்ரீராம், கீதா எல்லோரும் உங்களோடு வட்ஸப் குரூப்பில் இருந்தும் என்ன பயன்?:)) ஆபத்துக்குதவாத வட்சப்பை தூக்கிக் காவேரிக்கு நடுவில வீசுங்கோ ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்... ஆஆஆஆஆஆஆஆ இப்பூடி மூச்சு வாங்குதே.. அஞ்சு ஒரு ஹொட் மங்கோ ஊஸ் பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:).

   Delete
  2. ஹப்பா தேங்க்யு தேங்க்யு ஏஞ்சல்!! இதுதான் ஏஞ்சல்!!

   நான் இப்பத்தான் புலம்பிட்டு வந்தேன் கீழ. பாருங்க நான் கேட்டது யாருக்குமே தெரியலை அப்படினு!! ஹா ஹா ஹா

   கீதா

   Delete
  3. ஹாஹா, நாராயணா! நாராயணா! எப்படியோ நான் நினைச்ச காரியம் நடந்துடுச்சு இல்ல? ஏஞ்சல், தி.கீதா தான் முதலில் கேட்டிருந்தாங்க. ஸ்ரீராமுக்குக் கொஞ்சம் கொஞ்சம் ஏன் வரலைனு விஷயம் தெரியும். நெ.த. வாட்சப்பில் கேட்டிருந்தார். மற்றபடி சும்மா எல்லோரையும் வம்பிழுக்கத் தான் அதிரடி தேடலைனு சொன்னேன். மற்றபடி உங்கள் எல்லோருடைய அன்பையும் நன்கு அறிந்து வைத்திருக்கிறேன்.

   Delete
 17. நானும் கனவில் கத்தியிருக்கேன் ஆனா எதுக்குன்னு தெரில :) நான் கத்தினதே இவர் சொல்லித்தான் தெரியும் ஆனா அது சம்பந்தமாரெண்டு மூணு நாள் கழிச்சு ஏதாச்சும் பொருள் படம் பார்த்தா நினைவிற்கு வரும் .கனவுகள் நமக்கு தெரியாமல் இருப்பது மேல் :)

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) குழந்தையில் நான் கத்தியதுண்டு.. ஆனா பின்பு இல்லை, நான் நித்திரையில் இருக்கும்போது மூச்சு சத்தம் கூட கேட்காது அவ்ளோ சொஃப்ட்டான பிள்ளை.. உண்மையில...:)

   Delete
  2. ஏஞ்சல், நானும் கத்துவது இவர் சொல்லித் தான் தெரியும். உண்மையில் பயந்து போயிடுவார் போல! ஹிஹி, நனவில் பயப்படுத்த முடியலை! இப்படியானும் பயமுறுத்தறோமேனு ஒரு ஜந்தோஷம் உள்ளுக்குள்ளே! :))))

   Delete
  3. அதிரடி, நாங்கல்லாம் குறட்டை பயங்கரமா விடுவோமாக்கும்! :)))))

   Delete
  4. கடமை இரு முறை அழைத்துவிட்ட காரணத்தால் மிச்சம் இருக்கும் கருத்துக்களுக்குப் பின்னர் பதில். யாரும் வருத்தப்படாதீங்க. மத்தியானமா வந்துடுவேன் பதில் சொல்ல!

   Delete
  5. //நான் நித்திரையில் இருக்கும்போது மூச்சு சத்தம் கூட கேட்காது //--- அப்படியா அதிரா? உங்களுக்கு மூச்சுச் சத்தம்கூட கேட்பதில்லையா? உலக அதிசயம்தான்.

   மத்தவங்க எல்லாருக்கும் தூங்கும்போது அவங்க அவங்க மூச்சு விடற சத்தம் கேட்கும் போலிருக்கு....

   Delete
  6. //மத்தவங்க எல்லாருக்கும் தூங்கும்போது அவங்க அவங்க மூச்சு விடற சத்தம் கேட்கும் போலிருக்கு....///

   https://media.gettyimages.com/photos/angry-cat-picture-id936176546?b=1&k=6&m=936176546&s=612x612&w=0&h=E4ecrzn92uc2F9osYdu3q4McCAJqOKoQ-2WmvbuTFnc=

   Delete
 18. ஒருவேளை திருமணநாள் நினவு கனவில் வந்திருக்கும் அதனால்தான் கத்தினீர்களோ என்னவொ

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதெல்லாம் இல்லை. இப்படி அடிக்கடி நடக்கும்! என்ன, என்னனு கேட்பாங்க! தெரிஞ்சால் தானே சொல்றதுக்கு! :)))))

   Delete
 19. திருமண நாளை நினைத்துக் கொண்டால் மாமா அல்லவோ
  கத்தியிருக்க வேண்டும்?;))

  ReplyDelete
  Replies
  1. @பானுமதி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   Delete
 20. Happy anniersary & many more happy returns of the day Geetha akka!

  ReplyDelete
 21. வணக்கம் சகோ
  கடந்த பதிவை தாமதமாக படித்து கருத்துரை இடுகிறேன்...

  விழி நிறைந்து நிற்கின்றேன்... பல இடங்களிலும் சகோ கோமதி அரசு அவர்கள் என்னை தாயுமானவர் என்று குறிப்பிட்டு வருகிறார்.

  இதற்கு நான் தகுதியானவனா... ? என்பதை நானறியேன்.

  அங்கு என்னைக் குறித்து எழுதிய அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியும், எனது தாமதமான அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

  தங்களுக்கும் விவாஹ தின நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லை கில்லர்ஜி, நீங்க தான் வேலையில் மும்முரமாக இருந்தீங்களே! முதலில் நம் வீடு, சுற்றம் பின்னரே இணையம்! ஆகவே நான் ஒண்ணும் நினைச்சுக்க மாட்டேன். நீங்கள் மிகவும் தகுதி வாய்ந்தவர் என்பதில் சந்தேகமே இல்லை.

   Delete
 22. எங்கள் புளொக்கில் மோனிங் வாழ்த்தியாச்சு.. இது திரும்படியும்..

  இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் கீசாக்கா..

  https://media.tenor.com/images/583939249fdf68794e8178b61591c4b4/tenor.gif

  ReplyDelete
  Replies
  1. நன்னி, நன்னி அதிரடி! அழகான செண்டு!

   Delete
 23. ////அதிரடி எல்லாம் அம்மா வந்திருக்கும் சந்தோஷத்தில் நினைக்கக் கூட மாட்டாங்க என்பது இயல்பு. ////

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கார்டினில் கபேஜ் நடும்போதுகூட நினைச்சனே.. பொய் எண்டால் எங்கட டெய்சிப்பிள்ளையைக் கேட்டுப் பாருங்கோ:)..

  ///அதோடு அவங்களுக்கு என்னோட ஜனனி, ஜனனி பதிவில் கொஞ்சம் இல்லை நிறைய வருத்தம்! :) மனசு தாங்கவில்லை அவங்களுக்கு.///

  சே..சே... போஸ்ட்டில் எல்லாம் வருத்தமில்லை கீசாக்கா.. அது என்னமோ என் 8-9 வயசில அம்மப்பா இறந்தார்ர்.. அதுதான் நான் பார்த்த முதல் செத்தவீடு.. அன்று பாடிய இப்பாடல்.. எனக்கு அதன் பின் நான் நின்று பிடிக்க முடியாமல் ஓடுவேன் அப்பாட்டைக் கேட்டால்ல்.. அதுதான் கொஞ்சம் கஸ்டமாகிட்ட்டுது.... மற்றும்படி என்ன.. எதையும் நம்மால் தவிர்க்க முடியாதெல்லோ.. விரும்பினாலும் விரும்பாவிட்டலும் சில விசயங்கள் தவிர்க்க முடியாதவை.

  நான் எதை விரும்பவில்லை என அடிக்கடி சொல்கிறோமோ.. அதுதான் நம்மைத் தேடி வருமாமே.. ஹையோ ஆண்டவா:).. சரி சரி விரைவில வெளியே வாங்கோ..

  ReplyDelete
  Replies
  1. அதிரடி, கார்டனில் காபேஜ் நடும்போது என்னை நினைச்சீங்களா? ஏன்? ஙேஏஏஏஏ!!!!!!!!! காபேஜுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்! புரியேல்லை எனக்கு! அதுக்காகக் காவிரியில் எல்லாம் குதிக்க மாட்டேன். தண்ணியே இல்லை! வெயிலில் மணல் சுடும்! :(

   நான் எப்போவோ வெளியே வந்துட்டேனே!

   Delete
 24. நீங்க அந்தப் பாட்டைப் போட்டிட்டனே என ஓவரா ஃபீல் பண்ணியிருக்கிறீங்க நம்மைவிட, அதனால்தான் நித்திரையில் கத்தியிருக்கிறீங்க.. சிலவற்றை ரேக் இட் ஈசி யாக எடுங்கோ.. சீரியஸ் ஆகிடக்கூடாது.. ஏன் தெரியுமோ நாம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும்.. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்.. நடபதுதான் நடக்கும்.. அதனால நல்லதையே நினைப்போம் ஆனா வருவதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வோம்ம்:)) ஹா ஹா ஹா வாங்கோ கீசாக்கா காசிக்குப் போய் வரலாம்.....

  ReplyDelete
  Replies
  1. அப்பாவி, அந்தப் பாட்டை நினைச்செல்லாம் கத்தல்லை! என்னனு எனக்கே புரிவதில்லை. சில சமயங்கள் இப்படித் தான் கத்துவேன். அது எனக்குத் தெரியறதும் இல்லை. இவங்க யாரானும் எழுப்பிச் சொன்னால் தான் தெரியும்!

   காசிக்குத் தானே போனால் போச்சு! :))))

   Delete
 25. ஹலோ கீதாக்கா என்ன இப்பூடிச் சொல்லிப் போட்டீங்க. மீயும் எபியில் கேட்டிருந்தேனாக்கும்...பல சமயங்களில் நான் கேட்பது காணாமல் போய்விடுகிறது!!! அல்லது யாருக்கும் தெரியாமல் போய்விடுகிறது!!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, தி/கீதா, அதனால் என்ன? நான் சும்மாவானும் வம்பு பண்ணினேன். நீங்க, ஶ்ரீராம், ஏஞ்சல் எல்லோரும் பேசிக் கொண்டதைக் கவனிச்சேன். :)))))

   Delete
 26. எங்களின் பிரார்த்தனைகளுடன் மனமார்ந்த வாழ்த்துகள்! கீதாக்கா அண்ட் மாமா!

  உண்மையிலேயே வாட்சப்பில் கேட்க நினைத்து கேட்காமல் விட்டேன் நான். எபியில் கேட்டதோடு சரி.

  ஆமாம் அக்கா எனக்கும் வேலைகள் ஒருபுறம் இருந்தாலும் அதை விட மன ஓட்டம் என்னை மிகவுமே ஸ்லோ ஆகி இருக்கிறது.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தி/கீதா, மன ஓட்டம் படு வேகமாக இருக்கையில் அந்த மனக்குதிரையைப் பிடிச்சு இழுத்து நிறுத்தலைனா அன்றாட வேலைகள் பாதிக்கத் தான் செய்கிறது. ஆகவே நீங்க இதுக்குப் போய் வருத்தப்படாதீங்க! டேக் இட் ஈஸி! நான் விளையாட்டுக்குத் தான் சொன்னேன்.

   Delete
 27. அக்கா மீடும் பயணத் திட்டமா!!

  எஞ்சாய்!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, இப்போ இல்லை தி/கீதா!

   Delete
 28. ரூம் போடுவதற்கெல்லாம் ரயில்வே பின்னாடி ஏன் சுற்றுகிறீர்கள்! ஹோட்டல்கள் இல்லையா? அப்புறம், ஏசி-யை ஆஃப் செய்துவிட்டு சொப்பனம் காண்கிறீர்கள்..விசித்திர சத்தம்வேறு எழுப்புகிறீர்கள்போலிருக்கிறது.. ரங்க்ஸ் சாருக்குத்தான் எத்தனைப் பிரச்னைகள்! அவர் ஒரு பதிவுபோட்டால்..!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏகாந்தன், ஓட்டல்கள் அறை ஒரு ராத்திரிக்கு 2000க்கும் மேல் ஆகிறது! விலை குறைந்தால் அறை நல்லா இருக்கிறதில்லை! இல்லாட்டி ஏசி இல்லைனு சொல்வாங்க/வெஸ்டர்ன் டாய்லெட் இல்லை எனச் சொல்வாங்க! அதோடு ரயில்வேயில் அறை பெரிதாகவும் இருக்கும், எல்லா வசதிகளோடும் இருக்கும். ஒரு காலத்தில் அதிகம் ரயில்வே வெயிட்டிங் ரூமில் தான் தங்குவோம். தஞ்சை, திருச்சியில் எல்லாம் அங்கே தங்குவது பல விதங்களில் வசதி! 2,3 நாட்கள் கூட இருந்திருக்கோம்.

   Delete
  2. ஹாஹாஹா, ஏகாந்தன், சாதாரணமா ஏசியை அணைச்சுட்டால் அப்புறமாத் தூக்கம் வரதில்லை. நேத்து என்னமோ தூங்கி அதில் சொப்பனமும் வந்திருக்கு! விசித்திர சப்தம் எல்லாம் இல்லை! பயங்கர சப்தம்! ஹெஹெஹெஹெ, நீங்க சொல்றாப்போல் அவர் ஒரு பதிவு போட்டால் என நானும் நினைச்சிருக்கேன்! :)))))

   Delete
 29. ஆசிகள்
  வாழ்த்துகள்
  அன்புடன் ற

  ReplyDelete
  Replies
  1. நமஸ்காரங்கள் அம்மா, உங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றி. முடியாத நிலையிலும் வந்து வாழ்த்தும் ஆசிகளும் தந்தமைக்கு மீண்டும் நன்றி.

   Delete