எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 22, 2019

புரந்தர தாசருக்கு அருளிய விட்டலன்!

பண்டரிபுரம் க்கான பட முடிவு           à®ªà®£à¯à®Ÿà®°à®¿à®ªà¯à®°à®®à¯ க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி விக்கிபீடியா

கண்ணனுக்குப் புண்டரீகனை உலகுக்குக் காட்டிக் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பம் நெருங்கியது புரிந்து விட்டது. ஆகவே ருக்மிணியைத் தவிர்த்து அவன் ராதையுடன் கூடிக் குலவக் கோபம் கொண்ட ருக்மிணி (ருக்மாபாய், தமிழ்நாட்டில் ரெகுமா பாய் என்பார்கள்) பீமா நதிக்கரையிலுள்ள வனத்துக்கு வந்து தனித்து உட்கார்ந்திருந்தாள். அவளைச் சமாதானம் செய்வதற்காகவும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு புண்டரீகனுக்குக் காட்சி கொடுத்து அவனுக்கு உயர்வை அளிப்பதற்காகவும் கண்ணன் வந்தான். ருக்மிணியைச் சமாதானம் செய்து அழைத்துக் கொண்டு வந்தான்.  வழியில் புண்டரீகன் குடிலின் வாயில் வந்தது. மாயக்கண்ணனுக்குச் சொல்லவா வேண்டும்? அவனுக்கு அப்போது பார்த்து தாகம் ஏற்பட்டது. ஆகவே குடிலின் கதவைத் தட்டிக் குடிக்க நீர் தருமாறு கேட்டான். பெற்றோர் சேவையில் ஆழ்ந்திருந்த புண்டரீகனோ சற்றுப் பொறுக்குமாறு சொல்ல, இங்கே சேறும், சகதியுமாய் இருக்கிறதே அப்பா! இந்தச் சேற்றில் எவ்வளவு நேரம் நிற்பேன் எனக் கண்ணன் கேட்க உள்ளிருந்து ஓர் செங்கல்லைத் தூக்கிப் போட்டான் புண்டரீகனிடம். கண்ணனிடம், "இதன் மேல் நிற்பீர்!" என்று சொல்லிவிட்டு மீண்டும் குடிசைக்குள் பெற்றோரின் பணிவிடைக்குச் சென்றான். விட் என்றால் மராத்தி மொழியில் செங்கல். இந்தச் செங்கல் மேல் நின்றதால் அவனுக்கு விட்டலன் என்னும் பெயர் ஏற்பட்டது.

புண்டரீகன் தன் பெற்றோருக்கான பணிவிடையை முடித்துக் கொண்டு அடுத்து வந்திருக்கும் அதிதிகளைக் கண்டு உபசரிக்க வந்தான். அவர்களை வரவேற்றான். என்ன வேண்டும் என்று கேட்டான். அத்தனை நேரம் சும்மா இருந்த ருக்மிணியால் இப்போது பேசாமல் இருக்க முடியவில்லை. தாங்கள் இருவரும் யார் என்பதைச் சொன்னாள். சுய ரூபத்தைக் காட்டினார்கள் இருவரும். வந்திருப்பது கண்ணனும், ருக்மிணியுமா? அவர்களையா காத்திருக்கச் செய்தேன்? புண்டரீகன் செய்வதறியாது திகைத்தான்.  கீழே விழுந்து மன்னிப்புக் கேட்டான்.கதறினான். கண்களில் கண்ணீர் பெருகியது. அப்போது கண்ணன் புன்னகைத்தான்.  "புண்டரீகா! நீ பெற்றோருக்குச் செய்த சேவையில் மனம்  மகிழ்ந்தோம். உன் மதிப்பை உலகுக்குக் காட்டவே இத்தகையதொரு திருவிளையாடலைப் புரிந்தோம்! நீ வேண்டும் வரம் கேள்! " என்றான் கண்ணன். அதற்குப் புண்டரீகன், " கண்ணா, இப்போது நீ நின்றிருக்கும் இடத்தில் இவ்வாறே நின்ற வண்ணம் பக்தர்கள் அனைவரும் வந்து காணும் வண்ணம் விட்டலனாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க வேண்டும். இந்த இடம் ஓர் புண்ணிய ஸ்தலமாக மாற வேண்டும். உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நீ இடர்களை நீக்கி அவர்கள் துன்பங்களைத் தீர்க்க வேண்டும்." என்றெல்லாம் கேட்டுக் கொண்டான். அவ்வாறே கண்ணனும் அங்கேயே கோயில் கொண்டான். இந்த ஊரில் பீமா நதி அர்த்த சந்திர வடிவத்தில் ஓடுவதால் சந்திரபாகா என்னும் பெயர் கொண்டு விளங்கும் என்றும் இந்த நதியில் குளித்து என்னை வந்து தரிசிப்பவர்களின் இடர்களை எல்லாம் நீக்கி அவர்களைத் துன்பத்திலிருந்து காத்தருள்வேன் "என்றும் கண்ணன் புண்டரீகனிடம் சொன்னான்.

அவ்வாறே அங்கே ஏற்படுத்தப்பட்ட கோயில் மற்றும் அதைச் சார்ந்த ஊர்கள் முதலில் புண்டரீகபுரம் என்னும் பெயரில் விளங்கி வந்து பின்னர் நாளாவட்டத்தில் பண்டரிபுரம்/பந்தர்பூர் என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கேயும் கோயிலுக்கு நான்கு வாசல்கள். நாமதேவரின் பித்தளைச் சிலை கையில் தம்பூருடன் காணப்படும் வாயில் கிழக்கு வாயில். அது வழியாத் தான் நுழைந்தோம். அடுத்து தத்தாத்ரேயர், கணபதி குடி கொண்டிருக்கும்  ஒரு பெரிய மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால் சுற்றிலும் மாடங்கள் நிறைந்து நடுவில் 16 அல்லது 18 கற்றூண்களுடன் காணப்படும் ஓர் மண்டபம். அந்த மாடங்களில் கிருஷ்ணன், ராதை, நரசிம்மர் போன்றவர்களோடு செந்தூரத்தில் குளிக்கும் நம்மாளும் காட்சி கொடுக்கிறார். அங்கே தான் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். கணபதியைத் தொட்டு வணங்கிக் கொண்டோம். முன் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு எனத் தனியான வாயில் எனச் சிலர் சொல்ல, இன்னும் சிலரோ கூட்டம் அதிகம் இல்லை, இப்போத் திரையை எடுத்துடுவாங்க. இங்கேயே போகலாம்.இங்கே போனால் தான் பாண்டுரங்கனைத் தொட்டு வணங்க முடியும். ஆன்லைன் பதிவு செய்த வரிசையில் சென்றால் தொட்டு வணங்க முடியாது. கருவறைக்கு வெளியே இருந்து தரிசித்துவிட்டுப் போக வேண்டி இருக்கும் என்றார்கள்.

அப்போ நமக்கோ வேலை ஒண்ணும் இல்லை; ஆகவே காத்திருந்தோம். பஜனைகள் முழங்கிக் கொண்டிருந்தன. அங்கே மாட்டப்பட்டிருந்த தொலைக்காட்சி மூலம் உள்ளே பாண்டுரங்கனுக்கும் ரெகுமாயிக்கும் நடந்த வழிபாடுகள் காணக் கிடைத்தன. அந்த மண்டபத்தில் ஒரு தூணுக்கு முழுக்க முழுக்க வெள்ளிக் கவசம் போல் பூண் போட்டிருந்தார்கள். அதைப் புரந்தரதாசர் கம்பம் எனவும் கருடஸ்தம்பம் எனவும் அழைக்கின்றனர். அதற்கான ஓர் கதையும் உண்டு. அநேகமாக மஹாபக்தவிஜயம் புத்தகத்தில் (என்னிடம் இருப்பது குகப்ரியை எழுதியது) படித்திருக்கலாம். பாண்டுரங்கனைப் பார்க்க வேண்டிப் புரந்தர தாஸர் கிளம்பிப் பண்டரிபுரம் வருகிறார். சத்திரம் ஒன்றில் தங்கிக் காலையில் எழுந்ததும் கண்ணனைக் காணவேண்டும் என்னும் எண்ணத்துடன் உறங்கச் செல்கிறார். நீண்ட யாத்திரையாக வந்தவருக்குக் கால் வலி தாங்காமல் உறக்கம் வரவில்லை. தன்னுடன் வந்த சீடனை அழைத்தார். "அப்பண்ணா! அப்பண்ணா! கால் வலி தாங்க முடியவில்லை. வெந்நீருடன் வா! வந்து ஒத்தடம் கொடு!" என அழைக்கிறார்.அப்பண்ணா கேட்பதாக இல்லை. வெகு நேரம் அழைத்த பின்னரே தாமதமாக அப்பண்ணா கையில் வெந்நீர்ப்பாத்திரத்துடன் வந்து சேருகிறான். அவன் மேல் கோபம் கொண்ட புரந்தரதாசர் வெந்நீர்ப்பாத்திரத்தை வாங்கி அப்படியே அவன் முகத்தில் விசிறி அடித்து விட்டார்.


புரந்தர தாசர் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்


24 comments:

  1. உங்கள் பதிவை படித்தவுடன் மீண்டும் ஒரு முறை ஸ்ரீ மஹா பக்த விஜய்ம் படிக்க ஆசை வந்து விட்டது.
    முன்பு ஒவ்வொரு புரட்டாசி மாதமும் படிப்பேன்.
    எங்கள் வீட்டிலும் ஸ்ரீமதி குகப்ரியை எழுதிய புத்தகம் தான் இருக்கிறது.

    விட்டலன் புண்டரீகனுக்கு காட்சி கொடுத்தது இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றி, செங்கல் மேல் நின்ற கோலம் ! கண் முன் விரிந்தது. அருமை.
    அடுத்து புரந்தரதாசருக்கு பணிவிடை செய்த காட்சி வர போவதை படிக்க ஆவல். பக்தன் எப்போதும் விழிப்பு நிலையில் இருக்க சொல்லும் கதைகள் அல்லவா?
    இறைவனின் திருவிளையாடலை காண வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, நானும் நினைத்தால் எடுத்து வைத்துக் கொண்டு படிப்பேன். புத்தகம் தூளாகி விட்டது இப்போ! :(

      Delete
    2. எனக்கு ஒரு பழக்கம். நல்ல புத்தகம் எத்தனை முறை படித்தாலும், அது பழசாகிவிட்டால், புதிய புத்தகம் ஒன்று வாங்கிடுவேன். அப்படி நான் விஷ்ணு புராணமும் ஸ்ரீமஹா பக்த விஜயத்தையும் வாங்கியிருக்கிறேன்.

      Delete
    3. நான் புத்தகங்கள் வாங்குவதே பெரிய விஷயம். அவ்வளவு சீக்கிரம் அனுமதிக்க மாட்டார். என்னை விட்டால் படிக்க ஆளில்லை என்பதும் புத்தகங்கள் ஓர் அடைசல் என்பது அவர் கருத்து என்பதும் ஓர் காரணம். முக்கால்வாசி பைன்டிங் தான் இருந்தன. அதுவும் அங்கே இங்கே மாற்றலாகிப் போனதில் இரவல் கொடுத்ததில் காணாமல் போய் விட்டன. இதெல்லாம் வாங்கியதே பெரிய விஷயம்.

      Delete
  2. //விட் என்றால் மராத்தி மொழியில் செங்கல். இந்தச் செங்கல் மேல் நின்றதால் அவனுக்கு விட்டலன் என்னும் பெயர் ஏற்பட்டது//

    நம்மூரில் செங்கல்வராயன் என்ற தெய்வமும் உண்டே அது போலவோ...

    கதை தொடரும்தானே...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, நீங்க சொல்லுவதும் சரியாத் தான் இருக்கு!

      Delete
  3. புரந்தரதாஸருக்கு அவ்வளவு கோபம் வருமா? அடேங்கப்பா...

    ReplyDelete
    Replies
    1. தெரியலை. ஆனால் வட்டி வாங்கும் ஈட்டிக்காரன் போல தொழில்! புரந்தரதாசர் என்னும் பெயரிலேயே சின்னக் குழந்தைகள் நடிச்சு ஓர் திரைப்படம் வந்தது. எண்பதுகளிலேனு நினைக்கிறேன். அந்தப் படம் பார்த்திருக்கீங்களா? அதிலே புரந்தரதாஸரின் மனைவியாக நடிக்கும் சிறுமியின் நடிப்பு அபாரமா இருக்கும். தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டரில் பார்த்தேன் அந்தப் படம்!

      Delete
  4. வணக்கம் சகோதரி

    புண்டரீகனின் புகழை உலகம் அறிவதற்காக மாதவன் செய்த லீலை...அற்புதம். அவருக்கு தெரியாதா? எந்தந்த சமயத்தில் எப்படி செய்யவேண்டுமென்று.. ராஜதந்திரி ஆயிற்றே.!

    கோவில் விபரங்கள் அறிந்து கொண்டேன். பாண்டுரங்கனை தொட்டு நமஸ்கரிக்க எவ்வளவு நேரம் வேண்டுமானலும் காத்திருக்கலாமே .!
    அவனை தரிசிக்க செல்லும் நேரத்தையே அவன்தானே அமைத்து தருகிறான்.நல்ல தரிசனம் தங்களுக்கும் கிடைத்திருக்கும்.

    அதற்குள் புரந்தரதாசர் கதையை படிக்கிறேன். ஸ்வாரஸ்யமாக செல்கிறது. அவருக்கும் கோபம் வந்து விட்டதே.! கால் உபாதையால் தாங்க முடியாமல் கோபம் வந்து விட்டதோ? தாமதமாக வந்த அப்பண்ணா விட்டலவனோ? விபரங்கள் அறியவும், விட்டலவனை தரிசிக்கவும், அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், காத்திருந்து தான் சென்றோம் கமலா. நல்ல தரிசனம் கிடைத்தாலும் உடனே நகர்த்தி விடுகிறார்கள். :(

      Delete
  5. கீசாக்கா அழகா கதை கதையாச் சொல்றீங்க.. ஆனா இதை எல்லாம் மனதில் ஏற்றி வைப்பதென்பது எனக்கு ரொம்ப ரொம்பக் கஸ்டம்...:)..

    ReplyDelete
    Replies
    1. அப்பாவி, ஸ்கூல் பாடத்தை எல்லாம் எப்படி மூளையில் சேச்சே, கிட்னியில் ஏத்தினீங்க? :)))))

      Delete
    2. கீதாக்கா நானும் அப்பாவி சொல்லுவதைச் சொல்ல வந்தேன்.... உங்க பதிலையும் பார்த்துவிட்டேன் ஹிஹிஹி...நான் சொல்லிருந்தாலும் எனக்கும் அதே பதில்தானே!!!!!

      கீதா

      Delete
  6. இந்தப் புண்டரீகன் கதையைத்தானே கொஞ்சம் மாறுதல் செய்து ஹரிதாஸ் படத்தில் உபயோகித்திருந்தார்கள். பார்த்திருக்கிறீர்களோ?

    ReplyDelete
    Replies
    1. ஹரிதாஸ்????எம்.கே.டி. படமா? நான் அதெல்லாம் பார்த்ததே இல்லை நெ.த. பழைய படங்கள் என நான் பார்த்தவை மிஸ்ஸியம்மா, மாயாபஜார், சபாஷ் மீனா போன்ற ஒரு சில படங்களே! அப்புறமும் பல படங்கள் சென்னைத் தொலைக்காட்சி தயவில் பார்த்தவையே! இதெல்லாம் தேடிப் போய்ப் பார்த்ததே இல்லை.

      Delete
  7. பாதிக்கதையிலேயே ஏன் இடுகையை முடித்துவிட்டீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. எங்கே முடிந்து விட்டது எனச் சொல்லி இருக்கேன்?

      Delete
  8. என்னாச்சு அப்புறம்? கதை இப்படி என்னனு சொல்லாம போயிட்டீங்களே

    அக்கா உங்களுக்கு நிறையக் கதைகள் தெரிந்து சொல்லறீங்க. இந்தக் கதை எல்லாம் கேட்டதே இல்லை...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பலவும் படித்துத் தெரிந்து கொண்டவையே தி/கீதா. சில நினைவில் நிற்கும், பல நினைவில் நிற்பதில்லை.
      தொடரும்னு போட்டிருக்கணுமோ? எல்லோரும் புரிஞ்சுப்பாங்க என நினைச்சுட்டேன். :(

      Delete
  9. முந்தைய பதிவும் வாசித்துவிட்டேன். பயணம் குறித்தும் அறிய முடிந்தது. இக்கதையையும் அறிந்து கொண்டேன்.

    புரந்தரதாசர் கதை மட்டும் பாதியில் நிற்கிறது போல

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன், இன்னிக்கு அநேகமாப் பந்தர்பூர் பதிவு முடிஞ்சுடும்னு நினைக்கிறேன்.

      Delete
  10. அன்பின் கீதாமா,
    ஹரிதாஸ் புண்டரீகர் கதைதான் நினைக்கிறேன். கிருஷ்ணா ,முகுந்தா முராரேன்னு

    பாடல் வருமே. அப்பா அடிக்கடி பாடுவார்.
    பக்திரசம் கூட பக்த விஜயம் படிக்க வேண்டும்.
    52 வருடங்கள் முன் வாங்கின புத்தகம்.
    இப்பொழுது பேருக்குப் புத்தகமாக இருக்கிறது.

    விட்டல நாமம் எங்கும் ஒலிக்கட்டும். உங்கள் தரிசன
    அனுபவத்தைப் படிக்கக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  11. பாண்டு ரங்கனை தொட்டு வணங்க கொடுத்து வைத்திருக்கணும்.

    ReplyDelete