எங்க வீட்டு ராமர், எல்லோரும் பார்த்து நாளாகி இருக்குமே! அதான் எடுத்துப் போட்டேன். ராமருக்கு இடப்பக்கம், நமக்கு வலப்பக்கம் பூச்செண்டு மாதிரி ஒன்று தொங்குகிறதல்லவா? சிதம்பரம் நடராஜர் பாதத்தில் வைக்கும் வெட்டிவேர்க் குஞ்சிதபாதம் அது. எங்களுக்குக் கட்டளை இருப்பதால் தீக்ஷிதர் வீட்டுக்கு வரும்போது அவ்வப்போது எடுத்து வருவார்.
ராமரும் சேர்ந்து வராப்போல் தான் எடுக்கப் பார்த்தேன். காமிராவில் முழுசும் தெரிந்தது. ஆனால் படம் இப்படி வந்திருக்கு. ராமர் மேல் தட்டில் இருக்கார். இரு பக்கங்களிலும் ஒரு பக்கம் கிச்சாப்பயல் கையில் நவநீதத்துடன் தவழ்ந்த கோலத்தில். இன்னொரு பக்கம் நம்மாளு!
இதான் கிச்சாப்பயலின் பிறந்த நாளைக்குச் செய்த நிவேதனம். இந்த வருஷம் பண்டிகைகள் இல்லை என்பதால் மாக்கோலமோ, கிச்சாப்பயலின் பாதங்களோ போடவில்லை. அவனைத் தனியா அமர்த்திப் பூஜைகள் செய்யவில்லை. கூடவே ஊஞ்சலில் ஆடும் மற்ற இரு கிச்சாக்களையும் வைப்போம். வைக்கவில்லை. கிச்சா இருந்த இடத்தில் இருந்து கொண்டே எல்லா அலங்காரங்களையும் ஏற்றுக் கொண்டான். நிவேதனத்தில் பால், தயிர், வெண்ணை, அவல், வெல்லம், பலவகையான பழங்கள், கொஞ்சமாகப் பாயசம். மறுநாள் மாமனார் ஸ்ராத்தம் என்பதால் கொஞ்சமாகத் தித்திப்புப்போட்டுக் கஞ்சி மாதிரிப் பாயசம் வைத்துவிட்டு நான் அதையே சாப்பிட்டுவிட்டேன். அவருக்கு மட்டும் சப்பாத்தி பண்ணினேன்.
முந்தாநாள் மாமனார் ஸ்ராத்தமும் எளிமையாக ஹிரண்ய ஸ்ராத்தமாக நடந்து முடிந்தது. சமாராதனை சமையல் என்பதால் நானே சமைத்துவிட்டேன். ஸ்ராத்தமாகப் பண்ணினாலும் நானே சமைப்பேன் முன்னெல்லாம். இப்போத் தான் 3,4 வருடங்களாக மாமியைக் கூப்பிடுகிறோம். இந்த வருஷம் அதுவும் முடியாது என்பதால் யாரையும் கூப்பிடவில்லை. குடும்பப் புரோகிதர் வந்து எல்லாவற்றையும் நன்றாக முடித்துக் கொடுத்துவிட்டார். நேற்றே படங்கள் போட நினைத்துப் போடலாமா, வேண்டாமா என்னும் எண்ணத்தில் இருந்தேன். கோமதி அரசு இந்த வருடப் படம் போடுங்கள் எனக் கேட்டிருந்தார்கள். அதுக்காகவும், எங்கள் ப்ளாக் குழுவில் மற்றவர்கள் பார்த்திருந்தாலும் கமலா பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதாலும் போட்டேன். கோமதி அரசுவும் குழுவில் இருந்தார்கள்; இப்போ இல்லை. ஆகவே மற்றவர்கள் பார்க்க வசதியாகப் போட்டிருக்கேன்.
எப்படி கொண்டாடினால் என்ன எல்லாவற்றுக்கும் ஏதாவதுசமாதானம் இருக்குமே
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteராமரையும், கிருஷ்ணன் கையில் நவநீதமும் பார்த்தவுடன்
ReplyDeleteநவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ் - மருகோனே
என்ற திருப்புகழ் பாடல் நினைவுக்கு வருது.
கிச்சா அலமாரியில் ஒளிந்து கொண்டு நம்மை இந்தா வா! நவநீதம் பெற்றுக் கொள் என்று ஒளிந்து விளையாடுவது போல் இருக்கு படம்.
பூஜை அறையும், வெட்டிவேர் குஞ்சிதபாதமும் அருமை.
நான் கேட்டவுடன் படமும் அழகான பதிவும் போட்டதற்கு நன்றி.
வாங்க கோமதி, எங்கள் ப்ளாக் குழுவிலும் எங்கள் குடும்பக் குழுவிலும் படங்கள் போட்டிருந்தேன். ஆதலால் பதிவு வேண்டாமோ என நினைத்துப் பின்னர் நீங்கள் சொன்னதும் போட்டேன். நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteகோலங்கள் இல்லாவிட்டாலும்
ReplyDeleteகோகுலக் கிருஷ்ணன் வருவானே..
வந்தருள் புரிவானே!!..
க்ருஷ்ண தரிசனம் அழகு...
ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா..
வாங்க துரை, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteகிருஷ்ணன் பிறந்தநாளைக் கொண்டாடியது அருமை.
ReplyDeleteபடங்கள் நல்லாவே வந்திருக்கு. நீங்க சொன்ன மாதிரி இராமர் படம் போட்டு ரொம்ப மாதங்கள் ஆகிவிட்டது.
பக்ஷணங்களில் என்ன இருக்கிறது. நம் மனசுதான் காரணம். எதை உவந்து கொடுத்தாலும் அதை அவன் ஏற்றுக்கொள்ள மாட்டானா?
வாங்க நெல்லை. ஒரு வருஷம் தட்டினால் 3 வருஷங்கள் தட்டி விடும் என்பார்கள். ஆகவே குறைந்த பட்சமாகப் பாயசமாவது வைச்சுடுவேன். அதுவும் குழந்தைப் பிறப்பாச்சே!
Deleteபாயசம் வைக்கும் இடத்தில் உப்புச் சீடை/வெல்லச் சீடையாவது வைத்திருக்கக்கூடாதா? உங்களுக்கும் சில நாட்களுக்கு நொறுக்குத் தீனியாயிற்று.
Deleteபாயசம் வைப்பது வேறே! வீட்டில் குழந்தை பிறந்தால் கட்டாயம் பாயசம் வைப்போம். அது மாதிரி இது. ஆனால் பக்ஷணங்கள் செய்து கோலமெல்லாம் போட்டுக் கொண்டாடுவது என்பது கொண்டாட்டத்தில் சேரும். ஆகையால் அது இல்லை. இது புரிஞ்சுக்கக் கஷ்டமாய் இருக்கலாம். ஆனால் இதான் யதார்த்தம்.
இந்தச் சமயத்தில் ச்ராத்தம் நன்றாக நடந்தது என்பதே பெரு மகிழ்ச்சிக்குரியது.
ReplyDeleteஎல்லாம் அவன் செயல்.
உண்மை நெல்லையாரே! ரொம்பவே பயந்து கொண்டிருந்தோம். நல்லபடி முடிந்து விட்டது.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. அழகான படங்களை பிரமாதமாக எடுத்துள்ளீர்கள்.ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் படம் அருமையாய் தெளிவாக தெரிகிறது. பெரிதுபடுத்தி ரசித்து தரிசித்துக் கொண்டேன். ஸ்ரீ நவநீத கிருஷ்ணர், நம் இஷ்ட தெய்வமான ஸ்ரீ பிள்ளையாரப்பன் என உங்கள் இல்லத்தை அலங்கரிக்கும் அனைத்து தெய்வங்களையும் மனமாற பிரார்த்தித்துக் வணங்கிக் கொண்டேன். பூக்களுடன் காட்சி தரும் தவழ்ந்த கிருஷ்ணர் அவ்வளவு அழகு. அவர் நமக்கு தரும் பிரசாதத்தை பற்றிய உங்கள் கருத்தைப் படிக்கையில் மனது நிறைந்தது. நம் உலகமே அவன்தான். ஆனால் அவன் நம்முள் அடக்கம். அதை புரிந்து கொண்டால், அதை விட பேரின்பம் நமக்கேது....!
மாமனார் திவசம் நல்லபடியாக கழிந்தது குறித்து மகிழ்ச்சி. இந்த கொரோனா காலத்தில் நீங்களே சிரமம் பாராமல் சமையல் செய்து முறைப்படி ஹிரண்ய சிரார்த்தம் செய்து மாமனாரை திருப்திபடுத்தியது சிறந்த செயல்.
எளிமையான பிரசாதங்களை இறைவன் என்றுமே மனமாற ஏற்றுக் கொள்வான். பிரசாதங்களும், அழகான படங்களுமாக இருக்கும் பதிவின் இறுதியில் என்னையும் குறிப்பிட்டு எனக்காகவும் இந்தப்படங்கள் என நீங்கள் கூறியது ஸ்ரீகிருஷ்ணரே வந்து தன்னருளை காண்பிப்பது போல் உணர்ந்து மெய்சிலிர்த்து விட்டேன்.
படங்களை பகிரும் போது என்னையும் நினைவு வைத்து குறிப்பிட்ட உங்களது அன்பிற்கு என் பணிவான நன்றிகள். (இதைதான் போன ஜென்ம பந்தங்கள், விட்ட குறை தொட்ட குறை என்கிறோமோ..?) மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்வரவு கமலா, வாங்க. உங்களுக்கும் கோமதி அரசுவுக்குமாகவே நான் இந்தப் படங்களோடு கூடிய பதிவைப் போட்டேன். கிருஷ்ணன் அழகைச் சொல்லவும் வேண்டுமா? இந்தப் பிள்ளையார், கிருஷ்ணர் எல்லோருமே பரம்பரையாகப்பெரியவங்க பூஜை செய்தவை. எங்களிடம் 2010 ஆம் ஆண்டில் வந்து சேர்ந்தது. உண்மையில் கிருஷ்ணன் அருள் எல்லோருக்குமே கிடைக்கும்போது உங்களைக் கிருஷ்ணன் மறப்பானா? அவன் அருள்கட்டாயம் இருக்கும். உடனடி வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. எங்க வீட்டு ராமரையும் நீங்க பார்த்திருக்க மாட்டீங்க. இவரும் பரம்பரையாகப் பூஜிக்கப்பட்டவர் தான்.
Deleteஆமாம். ராம பட்டாபிஷேகம் பார்த்து நாட்களாகி விட்டது.
ReplyDeleteதுளசி,,மற்றும் மலர் நடுவில் கண்ணன் ஆனந்தம்.
இத்தனை எளிமையாக இருப்பதே
கண்ணனுக்கு உகந்த காட்சி.
கொரோனா நேரத்தில் நல்ல விஷயங்கள் நடந்தேறுவதும்
நன்மைதான். அருமை கீதாமா.
வாங்க வல்லி, ராமரை அதான் போட்டேன். எளிமையாகவேனும் கண்ணன் பிறப்பைக் கொண்டாட வேண்டுமே!
Deleteபடங்கள் அருமை. தனியாக க்ளிக்கிப் பார்த்து ரசித்தேன்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்
Deleteவிடுபட்டுப்போன அப்பா ஸ்ராத்தத்தை மாளயபட்சத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று யோசனை. குறிப்பிட்ட திதியில் ஒன்றும், மஹா பரணியில் ஒன்றுமாக... ஒன்று ஹிரண்யமாக, ஒன்று அண்ணா ஸ்ராத்தமாக... பார்ப்போம்.
ReplyDeleteநல்லபடி நடக்கட்டும்.உங்கள் மனம் உறுத்தல் குறையும். ஆனால் புரோகிதர்களும் பயப்படுகிறார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை.
Deleteபிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலமாக இல்லாவிட்டாலும் நிறைவாக இருந்ததே மனதுக்கு மகிழ்ச்சி.
ReplyDeleteஅதே, அதே, கில்லர்ஜி!
Deleteவாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி திரு தனபாலன்
Deleteகொண்ட்டாட்டம் நன்று.
ReplyDeleteநலமே விளையட்டும்.
நன்றி வெங்கட்,
Deleteவாழ்த்துகள்
ReplyDeleteசிம்பிள் ஆனா க்யூட்! கீதாக்கா படங்கள் நல்லாருக்கு. கிச்சா பயலுக்கான அலங்காரம்!!
ReplyDeleteகீதா
சிம்பிள் ஆனா க்யூட்! கீதாக்கா படங்கள் நல்லாருக்கு. கிச்சா பயலுக்கான அலங்காரம்!!
ReplyDeleteகீதா
கீசாக்கா நலமோ? காவேரி நலமோ? ஆண்டாள் ஆனைப்பிள்ளை நலமோ? ... இந்தப்பிஞ்சு அப்பாவியை நினைவிருக்கோ?:))...
ReplyDeleteஇந்த முறை கேள்வி கேட்க அதிரா இல்லை எனும் தெகிறியத்தில:)) கிருஸ்னருக்குப் பாயாசம் மட்டும் குடுத்துப் பேய்க்காட்டிப் பொட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அதனாலதான் ஓடி வந்தேன் கேள்வி கேட்க.. ஏன் வேறு எதுவும் செய்யவில்லை.. கிருஸ்ணரும் டயட்டில இருக்கிறாராமோ?:))
வாங்க அப்பாவி அதிரடி, உங்க வலைப்பக்கம் வந்தால் விரட்டி விடும்படி ஏற்பாடு பண்ணி வைச்சிருக்கீங்க போல! அங்கே வந்து என்ன ஆச்சுனு கேட்கலாம்னு வந்தால் வேறே எங்கேயோ கூட்டிச் சென்றது. ஏஞ்சல் சொன்னாங்க நீங்க வத்தல், வடாம் முடிஞ்சதும் வேறே வேலைகளில் மும்முரமாய் இருப்பதாக! சரி, அப்போ உடல்நலம் ஒண்ணும் பிரச்னை இல்லைனு தெரிந்து கொண்டேன். உங்க வருகைக்குத் தான் காத்திருக்கோம் எல்லோரும்.
Deleteஹாஹாஹஹா, கிருஷ்ணர் டயட்டில் எல்லாம் இல்லை. எல்லா வீட்டிலேயும் போய்ச் சாப்பிட்டுச் சாப்பிட்டு உடம்புக்கு ஒத்துக்கலைனா என்ன செய்யறது? அதுவும் இந்தக் கொரோனா காலத்தில்! அதான்! :))))))
Deleteபி.கு. எங்க வீட்டில் இந்த வருஷம் பண்டிகைகள் கொண்டாட முடியாத சூழ்நிலை அதிரடி.
ஓம் கீசாக்கா இமுறை நீங்கள் கொண்டாடுவது கஸ்டம்தானே மனதுக்கு.
Deleteஏன் கீசாக்கா என்பக்கம் கொமெண்ட் போட முடியவில்லையோ? என்னாச்சு எனத் தெரியாது, நான் என் புளொக் பார்த்தே ஒரு மாதமாகுது.. புதிதாக வலைப்பக்கம் மாறியிருக்கும் எப்படி இருக்குதென இன்னும் பார்க்கவில்லை நான்.. இனித்தான் போய்ப் பார்க்கோணும்.. ஸ்கூல் உம் தொடங்கி விட்டது.. நேரம் ஒதுக்க முடியாமல் இருக்குது.
வெண்ணை இல்லை வெண்ணெய். நீங்களுமா....
ReplyDeleteவெண்ணெய், எண்ணெய் தான் எழுதுவேன் எப்போதும். இது எப்படி வந்ததுனு தெரியலை. தானாக மாறி இருக்குப் போல! :) இதுக்குனு அங்கே இருந்து ஓடோடி வந்தீங்களா? எதுக்கோ மூக்கில் வேர்க்குமே, அது போல உங்களுக்கும் வேர்த்திருக்கு!
Deleteவரலைன்னா வரலைன்னு ஆவலாதி. வந்தா மூக்குல வேர்க்குதான்னு அதட்டல். உங்களை எல்லாம்....
Deleteஇப்போ எல்லாம் யாரையும் திருத்தப் போறதே இல்லை. ஆனால் சரியா எழுதறவங்க தப்பா எழுதினா அதைப் பார்த்து மத்தவங்களும் அப்படியே எழுதுவாங்களேன்னு தோணும். அப்பவும் சொன்னாத் தப்பா எடுத்துக்காதவங்க அப்பவும் கிட்ட மட்டும் சரி பண்ணக் கேட்டுக்கறது. அவ்வளவே.
ஹாஹாஹா, இப்போதைய தமிழைப் பார்த்தால் அதுவும் தொலைக்காட்சியில் கேட்கையில் எனக்கும் எதையாவது சாப்பிட்டுடலாமா, அல்லது தமிழ் பேசுவதையே விட்டுடலாமானு தான் இருக்கு!
Deleteகமென்டுக்குப் பதில் போகலைனு 4 தரம் முயன்றால் நாலும் வந்திருக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நல்ல கருத்தை எழுதி வைச்சுப் போடும்போது இப்படி எல்லாம் வரதில்லை. காக்கா தூக்கிண்டு போயிடும்! :(
Delete