படத்துக்கு நன்றி கூகிளார்
குமுதத்தில் படகு வீடு வந்தப்போ எல்லாம் வீட்டில் வாங்கலை. வெளியில் வாங்கி ஒன்றிரண்டு அத்தியாயங்கள் படிச்சிருப்பேனோ என்னமோ! அதன் பின்னர் இத்தனை வருடங்களாய்த் தேடியும் புத்தகம் கிடைக்கவில்லை. இப்போ எங்கள் ப்ளாகில் ஒரு பதில் கருத்தாகச் சொல்லி இருந்ததைப் பார்த்துட்டு நெல்லை தன்னிடம் இருந்த பிடிஎஃப் தொகுப்பை அனுப்பி வைத்தார்.
படகு வீடு பிடிஎஃபில் "நெல்லை" அனுப்பி வைச்சுப் படிச்சும் முடிச்சாச்சு. விறுவிறுப்பான கதை! அநேகமா எல்லோருமே படிச்சிருப்பாங்க என்பதால் கதைச் சுருக்கமோ விமரிசனமோ இல்லை! ஆனால் மீண்டும், மீண்டும் அந்தக் கதையின் நினைவுகள் மனதில் வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு சின்னப் பொறி இருந்தால் போதும்! மனம் திடமாகி சந்நியாசி ஆக என்பது அதைப் படித்தபோது புரிந்தது. ஆரம்பத்திலேயே புரிந்துவிடுகிறது இவர் இல்லற வாழ்க்கைக்குத் திரும்ப மாட்டார் என்பது. அதற்கான போராட்டங்களே கதையாகி விட்டது. என்னைப் பொறுத்தவரை இந்த நாவலே ரா.கி.ர.வின் மாஸ்டர் பீஸ் என்பேன். (இது அவரவர் ரசனைக்கு ஏற்ப மாறும்னு நினைக்கிறேன்.) ஏனெனில் கல்கியின் மாஸ்டர் பீஸ் என நான் நினைப்பது "அமரதாரா" தான். அவர் உயிருடன் இருந்து எழுதி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பாதியில் இறந்துவிட்டார். அதே போல் "தேவன்" எழுதியவற்றில் "துப்பறியும் சாம்பு"வும் "ஜஸ்டிஸ் ஜகந்நாதன்" இரண்டும். மற்றவையும் பெயர் சொல்லக் கூடியவை என்றாலும் இது இரண்டும் தனி. சாம்புவை மிஞ்ச யாருமில்லை. ஆனாலும் தேவனின் எழுத்துக்களைப் பிடிக்காதவங்களும் இருக்காங்க. அதே போல் கல்கியின் எழுத்துக்கள் பிடிக்காதவங்களும் உண்டு.
*********************************************************************************
படத்துக்கு நன்றி கூகிளார்
எப்போதும் ஆடி மாசக் கடைசி வெள்ளியில் வரும் வரலக்ஷ்மி விரதம் முன்னாடியே வர, ஆவணி அவிட்டம் (யஜுர், ரிக்) அதைத் தொடர அனைவருக்குமே பண்டிகைகள் மாறி வருவதாய்க் குழப்பம். ஆடி மாதப் பௌர்ணமி மாச நடுவில் வரப் பண்டிகையும் முந்திக் கொண்டு விட்டது. இந்த அமாவாசை பௌர்ணமி திதிகளின் படியே நாம் மாதப்பிறப்பையும், பண்டிகைகளையும் வைத்துக் கொண்டிருக்கோம். தமிழ்மாதங்கள் பிறப்பு கணக்கிடுவது சூரியனின் சஞ்சாரத்தை ஒட்டி. சித்திரை மாசம் சூரியன் மேஷ ராசிக்குப் போவதால் அன்று சித்திரை ஒன்று, வருடம் பிறப்பு எனக் கணக்கிடுகிறோம். ஆனால் பொதுவான பஞ்சாங்கப்படி அப்படி இல்லை. முக்கியமாய்த் திருக்கணிதமும், பாம்புப் பஞ்சாங்கமும் நிறைய மாறும். திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி ஆகி விட்டது. பாம்புப் பஞ்சாங்கப்படி டிசம்பர்/மார்கழியில் தான் சனிப்பெயர்ச்சி. இங்கே பெரும்பாலோர் பாம்புப் பஞ்சாங்கத்தையே கடைப்பிடிப்பதால் அதன் படி நாளை ஜென்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது. இதிலேயும் குழப்பம் வந்து யார், யாரோவெல்லாம் நாளை கொண்டாடக் கூடாது, செப்டெம்பர் 11 ஆம் தேதி ரோகிணி நக்ஷத்திரத்தில் வரும் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியைத் தான் கொண்டாட வேண்டும் என வாட்சப், முகநூல் மூலம் வேண்டுகோள்கள் எல்லாம் விடுத்துக் கொண்டிருந்தார்கள்.
படத்துக்கு நன்றி கூகிளார்
உப்பிட்டவரை கமலாவுக்காக!
இது சொந்தப்படம். ஒரு வருஷம் உப்பை அதிகமாய்ப் போட்டுட்டு விடாமல் சாப்பிட்டுத் தீர்த்த கதை. இந்த வருஷம் பண்டிகை இல்லை என்பதால் கிச்சாப்பயலுக்குப் பாயசம் மட்டும்.
ஏழை கண்ணீரைத் துடைக்க இங்கே அம்பத்தூர் வீட்டில் செய்த கடைசி கோகுலாஷ்டமிப் படங்கள். காப்பி பண்ண முடியலை என்பதால் சுட்டி கொடுத்திருக்கேன்.
கடைசியில் அதைப் பஞ்சாங்கம் பற்றி நன்கு தெரிந்த வைதிகர்கள் மூலமே தெளிவு செய்தாயிற்று. பண்டிகைகள் சாந்த்ரமானத்தை ஒட்டி வருவதால் நமக்கு ஆடி மாதம் என்றாலும் (ஆவணி பொதுப்பஞ்சாங்கத்தில், முடியும் நேரம்) பண்டிகை நாளையே வந்து விடுகிறது. அதே போல் வரலக்ஷ்மி விரதமும், ஆவணி அவிட்டமும் முன்னால் வந்தது. நம்முடைய மாதங்கள் பிறப்பது சூரியனின் சஞ்சாரத்தை ஒட்டி என்பதால் நமக்கு ஆவணி இனிமேல் தான். ஆனால் யுகாதி கொண்டாடும்/கொண்டாடிய /மக்களுக்கு ஆவணி முடிந்து விடும். இந்தத் தேதிகளைத் தான் இந்திய அரசுப் பஞ்சாங்கம் எனப்படும் காலன்டர்களில் கடைப்பிடிப்பதால் பண்டிகை தினம் இந்தியாவெங்கும் ஒன்றாக வந்தாலும் மாதங்கள் மாறுகின்றன. அதோடு இந்த வருஷம் மஹாலய அமாவாசைக்கு அடுத்த நாளில் நவராத்திரி ஆரம்பிக்கப் போவதில்லை. இன்னொரு அமாவாசை புரட்டாசியிலேயே வருகிறது. அந்த அமாவாசைக்குப் பின்னரே நவராத்திரி துலா மாதம் எனப்படும் ஐப்பசி ஒன்றாம் தேதியன்று ஆரம்பிக்கிறது. இரண்டு அமாவாசைகள் வந்ததால் இந்தக் குழப்பம். மஹாலயமும் ஆவணி பாதி, புரட்டாசி பாதி என்றில்லாமல் (சில சமயங்களில் புரட்டாசியிலேயே ஆரம்பித்தும் முடியும்) அப்படியும் இல்லாமல் ஆவணியிலேயே முடிந்து விடுகிறது. ஆகவே ஆவணியில் கல்யாணம் செய்ய இருப்பவர்களுக்கு நாள் கிடைப்பது கஷ்டம்! யாருங்க அங்கே, கல்யாணம் பண்ணவே கஷ்டமா இருக்குனு சொல்றது? உண்மைதான்! கொரோனா போனால் தானே கல்யாணம் விமரிசை எல்லாம்!
*********************************************************************************
பழைய படம் தான். இப்போதைய புது வெள்ளத்தை இன்னமும் போய்ப் பார்க்கலை/ படமும் எடுக்கவில்லை.
காவிரியில் நீர்த் திறப்பு அதிகரித்துள்ளது. மேட்டூரிலும் நீர்த் திறப்பை அதிகரிப்பார்கள்/அதிகரித்திருக்கலாம். செய்திகள் பார்க்கவில்லை. அந்த நீரெல்லாம் வந்து காவிரி இருகரையும் நீர்ப்பெருக்கோடு ரம்மியமாகக் காட்சி அளிப்பாள். அம்மாமண்டபம் போக முடியாதுனு நினைச்சிருந்தேன். நேற்று ஆதி வெங்கட் மகளுடன் வந்து அம்மாமண்டபம் படித்துறைக்குப் போயிருக்கார். நம்ம வீட்டுக்கு வரலை, கொரோனா காலம் என்பதால்! ஆனால் படித்துறைக்குப் போயிருக்கார். ஒரு நாள் போய் அங்கிருந்து படம் எடுக்கணும். இப்போ என்ன கதைன்னா இந்த வெள்ள நீரெல்லாம் வடிந்து கடலுக்குப் போகப் போகிறதே எனப் புலம்பல் இப்போவே ஆரம்பித்து விட்டது. கொஞ்சமானும் யோசிச்சுவிட்டுப் புலம்பக் கூடாதோ"
இங்கே கரூருக்குப் பின்னரே திருச்சியிலிருந்து ஆரம்பித்து முகத்துவாரக் கடைசி வரை சமவெளிதான். இந்தச் சமவெளியில் எப்படி, யார், எங்கே, எம்முறையில் அணை கட்டுவாங்க? ஒவ்வொரு வருஷமும் இந்தப் புலம்பல் யாரிடமிருந்தாவது வருது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இந்த டெல்டா பிரதேசத்தில் முடிந்தவரை தடுப்பணைகள் கட்டலாமே தவிர மேட்டூர் மாதிரியெல்லாம் அணைகள் கட்ட முடியாது. கொஞ்சம் யோசிங்கப்பா! அதோடு தண்ணீர் கடலுக்குப் போய்ச் சேரவில்லை எனில் முகத்துவாரம் உப்புத் தண்ணீராகிப் பாலைவனமாக ஆகிவிடுமே! அதை யோசிச்சீங்களா? அப்புறம் சுற்று வட்டாரமெல்லாம் நிலத்தடி நீர் உப்பாக மாறி விடும். தண்ணீர் போதுமான அளவுக்குக் கடலுக்குப் போய்ச் சேரத்தான் வேண்டும். அது இஷ்டத்துக்குப் போகவிடுங்க. இங்கே கிடைக்கும் நீரைச் சேமித்து வைத்துக்கொள்ளத் தடுப்பணைகள் கட்டினால் போதுமானது. அது தான் செய்ய முடியும்!
அதோடு இல்லாமல் காவிரி, உபநதிகளின் ஆகாயத்தாமரை, கண்ட கண்ட புற்கள், மரங்கள் இவற்றை எல்லாம் எடுத்துச் சுத்தப்படுத்தித் தூர் வாரினாற்போல் பண்ணினாலே நீர் அதிகரித்து வருகையில் பூமியில் இறங்கி நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பாக இருக்கும். கரை ஓரங்களையும் மேடு பண்ணி, காவிரியின் பாசன வாய்க்கால்களையும் சுத்தம் செய்துவிட்டால் கடைமடை வரை நீர் போக வசதியாக இருக்கும். அதை எல்லாம் விட்டுவிட்டுக் காமராஜருக்குப் பின்னால் அணையே கட்டலை, தண்ணீர் வீணாகுது என்றால் தண்ணீர் கடலுக்குப் போய்த் தான் ஆகவேண்டும். இல்லை எனில் முகத்துவாரம் மேடு தட்டிக் காய்ந்து போய் உப்பு நீராக மாறிவிடும். சீனாவில் தான் என நினைக்கிறேன். ஆற்றில் வெள்ளம் அதிகமாய் வருகிறது என்பதால் ஆற்றின் போக்கை மாற்றி விட்டு (அதுவாக மாறினால் அது தனி) பின்னர் முகத்துவாரம் பாலைவனம் ஆனபின்னரே தவறை உணர்ந்திருக்கின்றனர். அந்தத் தவறை நாமும் செய்யாமல் இருக்க வேண்டும். இங்கே தமிழ்நாட்டில் இப்போது இருக்கும் அணைகளைத் தவிர்த்து வேறே அணைகள் கட்டும்படியான சூழ்நிலை இல்லை. எல்லாம் சமவெளிதான். முடிந்தவரை ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்கிக் கொள்ளலாம். அது தான் முடியும்.
ஆருளர் களிகன் அம்மா
ReplyDeleteஅரங்க மாநகருளானே!..
கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்...
வாங்க துரை. கோகுலாஷ்டமி வாழ்த்துகள்.
Deleteஆருளர் களைகண் அம்மா
Deleteஅர்ங்க மாநகருளானே...
தட்டச்சுத் தவறு பொருளை மாற்றிவிடும்.
Deleteஆருளர் களைகண் அம்மா அரங்கமா நகர் உளானே (ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை - திருமாலை பாசுரம்).
(அரங்கமா நகருளானே) உன்னைவிட்டால் என்னை ரட்சிப்பதற்கு யார் இருக்கிறார்கள்?
வாங்க நெல்லை,மொபைல் மூலம் தட்டச்சும்போது அதுவே ஆட்டோ கரெக்ஷன் என மாத்திக்குதே! அதுக்காகவே நான் மொபைலைப் பேச, வாட்சப் செய்திகள், பார்க்க, பேச, எப்போவானும் முகநூல் செய்திக்கு என வைத்திருக்கேன். ஆனால் ஆங்கிலம் தான்! அதிலேயே ஆட்டோ கரெக்ஷன் உயிரை வாங்கும்.
Deleteஎன் மாமா பையன், 'ஆருளர் களைகண் அம்மா' என்பதை பதம் பிரித்து படிப்பதாகநினைத்துக் கொண்டு ஆருளர் களை கண்ணம்மா என்று படிப்பான்.
Delete@பானுமதி, சும்மாவானும் தமாஷுக்குப் பண்ணி இருப்பார்.
Deleteகாவிரி கடை முகத்தைக் கண்டிராதவர்கள் எல்லாம் காவிரியில் அணை/ தடுப்பணை என்று பேசுவதும் Fb ல் எழுதுவதும் வேடிக்கை...
ReplyDeleteகடலுக்கு தண்ணீரே வுடக்கூடாது என்று ஒரு குரூப் இருக்கிற்து...
மழைக் காலம் ஆரம்பமானதும் எழுந்து வருவார்கள் பாருங்கள்...
ஆமாம், துரை, பார்த்திருக்கேன். தடுப்பணை கூடக் குறிப்பாய்ச் சில இடங்களில் தான் இருக்கலாம். போகப் போகத் தடுப்பணையும் ஆபத்தானதே!
Deleteஅன்பு கீதாமா,
ReplyDeleteஇனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள்.
மஹாலயம் முன்பே வந்து விடுகிறதா.
கோவிலில் கேட்கவேண்டும்.
காவிரி தன்னை வளப்படுத்திக்கொள்ள அந்த
அன்னையையே வேண்டுவோம்.
சரியான அறிவுரைகள் கேட்டு எல்லோரும் நடக்கட்டும்.
நன்றி மா.
வாங்க வல்லி, உங்களுக்கெல்லாம் அடுத்த மாதம் அல்லவா? மஹாலயம் செப்டெம்பர் 2 ஆம் தேதியே ஆரம்பம். காவிரி தன்னை வளப்படுத்திக்கொள்ள இருக்கிறவங்க விடணுமே!
Deleteஇனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள்.
ReplyDelete//காமராஜருக்குப் பின்னால் அணையே கட்டலை, தண்ணீர் வீணாகுது என்றால் தண்ணீர் கடலுக்குப் போய்த் தான் ஆகவேண்டும்//
நாம் இவ்வளவு காலமாக எவ்வளவு அயோக்கியர்களை ஆள வைத்துக் கொண்டு வாழ்கிறோம் என்பதற்கு இதுவே சாட்சி.
வாங்க கில்லர்ஜி, அணையை எங்கே கட்டுவது? யோக்கியர்களாகவே இருந்தாலும் இங்கே கட்ட முடியாது அல்லவா?
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபடகு வீடு கதையை ஸ்வாரஸ்யமாக படித்துள்ளீர்கள். வாழ்த்துகள். நானும் படித்துள்ளேனா என்பது நினைவில் இல்லை. சிறுவயதில், அம்மா வீட்டில், துப்பறியும் சாம்புவும், ஜஸ்டிஸ் ஜகந்நாதனும் வாசித்த நினைவு உள்ளது. எந்த கதைகளையும் முதல் அத்தியாயத்தை கொஞ்சம் படிக்கவாரம்பித்து விட்டால், பொறி தட்டின மாதிரி நினைவுக்குள் வந்து விடும். அதுவரை அத்தனை கதைகளும் சற்று நினைவில் குடைசல்தான்.. ஹா.ஹா.
இந்த பண்டிகைகள் எப்போதும் குழப்பங்கள் தான்.. அமாவாசையை கணக்கு வைத்துக் கொண்டுதான் சுப காரியங்களும். பண்டிகைகளும் ஒரு சிலசாரார் கொண்டாடுகின்றனர். நீங்கள் தந்த பஞ்சாங்க விளக்கங்கள் மிகவும் நன்றாக உள்ளது.
ஊரோடு ஒத்து வாழ் என்பது போல், என்று பண்டிகையோ அன்று கொண்டாடத்தான் வேண்டும். இந்த தடவை அனைத்துமே சற்று குழப்பம்தான். கூடவே கொரானாவும் தன் பங்கிற்கு நன்றாகவே குழப்புகிறது. வெளியே போக பயம்.. தேவையான சாமான்கள் வாங்கி வர பயம்.. என்று கூடவே நின்று குழப்பி சந்தோஷமடைகிறது.
கோகுலாஷ்டமி பட்சணங்கள் பெரிது படுத்தி பார்க்க முடியவில்லை என்றாலும் ஓரளவு கணித்து பார்த்துக் கொண்டேன். நாளை தங்கள் வீட்டு பாயாசத்தை அருந்திட கிருஷ்ணர் கண்டிப்பாக தங்கள் இல்லம் வருவார்.
காவிரி அணைகள் பற்றிய விளக்கங்கள் அருமையாக சொல்லியுள்ளீர்கள்.நதியின் இயல்பு கடலோடு கூடி களிப்பதுதானே...! அதில் ஏது விதி விலக்கு..! இன்றைய அனைத்து அலசல்களும் படிக்க நன்றாக உள்ளன. இப்படி எதையும் அலசி எழுத உங்கள் ஒருவரால்தான் இயலும். மனம் நிறைந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, ஆமாம், சுவாரசியமாகத் தான் படிச்சேன். துப்பறியும் சாம்பு, ஜஸ்டிஸ் ஜகந்நாதன் எல்லாம் நினைச்சால் இப்போவும் எடுத்து வைத்துக் கொண்டு படிப்பேன். பண்டிகைகள் எப்போதும் குழப்பமெல்லாம் இல்லை. இந்த வருஷம் எல்லாப் பண்டிகைகளும் முன்னால் வந்து விடுகிறது. அமாவாசை,பௌர்ணமியைக் கணக்குப் போட்டால் புரிந்து விடும். இங்கே தமிழ்நாட்டில் எல்லாவற்றையும் போல் மாதங்கள் கணக்கிடுவதும் தனி! சூரியமானம். மற்ற மாநிலங்கள் எல்லாம் சந்திரமானம். பண்டிகைகள் சந்திரமானத்தை ஒட்டிக் கணக்கிடப்படும். அதனால் நமக்கு முன்னால் வந்துவிட்டாற்போல் தெரியும். காவிரியில் அணைகள் கட்டப்படவில்லை என சுமார் பத்து வருஷங்களாக எல்லோரும் புலம்புகிறார்கள். நானும் இதே காரணத்தைத் திரும்பத் திரும்ப எழுதி வருகிறேன். கோகுலாஷ்டமி பக்ஷணங்கள் 2015ஆம் வருடம் பண்ணினவை. அந்தச் சுட்டியை வேண்டுமானால் இங்கே இணைக்கிறேன். அங்கே போய் நன்றாகப் பார்க்கலாம். அதே போல் 2011 ஆம் வருடமும் அம்பத்தூர் வீட்டில் பண்ணினவை படம் போட்டிருந்தேன்.
Deleteகமலா, உங்களுக்காக இரண்டு பதிவின் சுட்டியும் கொடுத்திருக்கேன். ஒன்று "உப்பிட்ட வரை" இன்னொன்று "ஏழை கண்ணீரைத் துடைக்க" முடிஞ்சப்போப் போய்ப் பாருங்க! நன்றி.
Deleteநானும் தடுப்பணைகள் ஏன் கட்டவில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நீங்கள் சொல்வதுபோல வாய்க்கால்களை கணக்கெழுதாமல் தூர் வாருவதும், கரைகளை பலப்படுத்துவதும், உபரிநீர் வாய்ப்பிருக்கும் இடங்களிலெல்லாம் பூமிக்குள் பாயச் செய்தும் முடிந்த அளவு நிலத்தடி நீர் உயரப் பாடுபடலாமே தவிர புது அணை கட்ட திருச்சிக்கு அப்புறம் வாய்ப்பில்லை என்பது புரிகிறது.
ReplyDeleteநெல்லையாரே, தடுப்பணைகள் கட்டுவதே குறிப்பாய் ஒன்றிரண்டு இடங்களில் தான் கட்ட முடியும். நம்மால் முடிந்தது நதிக்குள் நடுவில் கன்னாபின்னாவென முளைத்துக் கிடக்கும் செடிகள், கொடிகள், பார்த்தீனியம், மணல் திட்டுக்கள் ஆகியவற்றைச் சரி பண்ணுவது! நதியில் நீரோட்டம் நன்றாகப் போனால் தானாகவே நிலத்தடி நீர் வளம் பெருகிவிடும்.
Deleteஎங்களுக்கு அடுத்த மாதம்தான் ஸ்ரீஜயந்தி.
ReplyDeleteஇந்தத் தடவை முடிந்தால், வெல்லச் சீடையும் உப்புச் சீடையும் நான் புது மெதட்டில் செய்யலாம் என நினைத்திருக்கிறேன்.
இங்கே ஸ்ரீரங்கம் கோயிலில் பாஞ்சராத்ர ஸ்ரீஜயந்தி. உங்களுக்கு முனித்ரய ஜயந்தி என எ.பி.யில் படிச்சேன்.
Deleteகாவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்படும் பயங்கர வெள்ளத்தை செய்திகளில் படித்திருப்பீர்கள். அதனாலேயே முன்னெச்செரிக்கையாக 'படகு வீடு' கேட்டிருப்பீர்கள், அருகில் உள்ள காவிரியில் வெள்ளம் வந்தால் உபயோகமாக இருக்கும் என்பதற்காக, என நினைத்தேன்.
ReplyDeleteஹாஹாஹா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இங்கே எல்லாம் வெள்ளம் வராது. வந்தாலும் நாங்க நான்காம் மாடி!
Deleteஇயற்கையை மீறி இவர்கள் செய்வதெல்லாம்... யோசிக்கவே மாட்டார்களோ...?
ReplyDeleteநன்றி திரு தனபாலன் அவர்களே!
DeleteAt least 20-25% water has to go to sea. Thats one of the reason the water 'receiving' States have to have more share of water.
ReplyDeleteThere is still a slope towards the sea exists though... Check dams are still required throughout the river course and at each sage the water has to be moved to chain of canals and fill up several ponds. This way the ground water is "charged'.
Rajan
நீங்க சொல்றாப்போல் என் புக்ககத்து ஊரான பரவாக்கரை, கருவிலியில் உள்ள குளங்கள் அப்படித் தான் நிரம்பிக் கொண்டிருந்தன என்பார் என் கணவர். இப்போல்லாம் அவற்றிலே தண்ணீரே இல்லை. முனைப்புடன் செயல்பட்டால் பழைய நிலைமை வரலாம். இந்த நூறு நாள் வேலைத்திட்டம் அதற்குப் பயன்படும். பெரும்பாலும் மக்கள் அதில் வேலை செய்வதில்லை என்றே சொல்கிறார்கள். அவர்களை இதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Deleteஎழுத்தாளர்களின் மாஸ்டர் பீஸ் எது என்பது அவரவர் ரசனைக்கேற்ப மாறுபடும் என்பது உண்மைதான். தேவனைப்பொறுத்தவரை துப்பறியும் சாம்பு, ஸ்ரீமான் சுதர்சனம் ஆகியவற்றைச் சொல்லலாம். ரா கி ர நினைவு வைத்துக்கொள்ளும் அளவு லிஸ்ட் போட்டுப் படித்ததில்லை.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், நான் அநேகமா ரா.கி.ர., எஸ்.ஏ.பி, ஜ.ரா.சு., புனிதன் போன்றோரின் எல்லா நாவல்களும் படித்திருக்கிறேன்.அநேகமாக பைன்டிங்குகளில். எஸ்.ஏ.பி. அவ்வளவாகக் கவர்ந்ததில்லை. "இல்லாத பிள்ளைக்குக் கல்யாணம்" என்னும் தலைப்பில் ஜ.ரா.சு? அவர் தானோ? அப்படித்தான் நினைக்கிறேன். அதுக்கும் முன்னால் கண்ணன் என்பவர் பி.எம்.கண்ணனோ? அவர் நாவல்கள் எல்லாம் குடும்பக் கதைகளாக நன்றாகவே இருக்கும். பெரியப்பா வீட்டில் பைன்டிங்கில் படித்தவை!
Deleteநெல்லை எனக்கும் படகு வீடு அனுப்பி இருந்தார். நான் இன்னும் படிக்கவில்லை. இரண்டு காரணங்கள், ஒன்று நேரம் இல்லை. இரண்டாவது அடோப் ரீடர் திறந்ததும் பத்து அல்லது இருபது நொடிகளில் அதுவே மூடி விடவா என்று கேட்டு மூடிக்கொள்கிறது!
ReplyDeleteநான் டவுன்லோடு பண்ணிக் கொண்டு விட்டேன். ஆகவே பிரச்னை இல்லை. என்றாலும் ஆன்லைனிலும் நன்றாகவே வந்தது.
Deleteகிருஷ்ண ஜெயந்திக்கு வந்த சந்தேகம் வரலக்ஷ்மி விரதம், உபாகர்மா போன்றவற்றுக்கு வரலை பாருங்கள்! அதை மட்டும் சைலண்டாக ஏற்றுக்கொண்டு விட்டோம்!
ReplyDeleteஇல்லையே, உபாகர்மா ஆடியிலேயே வந்துவிட்டது என்பதால் தானே பானுமதி ஒரு பதிவே போட்டார்.
Deleteகாவிரியில் வெள்ளம் செய்தி படித்தபோது உங்கள் நினைவுதான் வந்தது. மொட்டை மாடியில் கேமிராவும் கையுமாக நீங்கள் நிற்பதுபோல நினைத்துக் கொண்டேன்!
ReplyDeleteமறுபடியும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை, வெள்ளம் எனச் சற்று முன் சொன்னார்கள். சாயங்காலமாய்த் தான் முழுச் செய்தியும் கேட்கணும். மொட்டை மாடிக்கு நாளை வரை போக முடியாது. வீட்டில் வேலைகள் சரியாக இருக்கின்றன. மாத முதல் வார விறுவிறுப்பு என்பதோடு நாளை ஸ்ராத்தம் வீட்டில். அதற்கான ஏற்பாடுகள் முன்னர் செய்திருந்ததை மாற்றி விட்டோம். ஆண்டார் தெருவில் ஏற்பாடு செய்திருந்த வீட்டுக்குப் போகப் போவதில்லை. அங்கெல்லாம் கொரோனாவாம். ஆகவே எங்க வீட்டிலேயே ஹிரண்ய ஸ்ராத்தமாகச் செய்துடலாம் என எங்க குடும்பப் புரோகிதர் சொல்லி விட்டார். அப்படித் தான் நாளை செய்யப் போகிறோம். 3 பிராமணர்கள் வைத்து ஹோமம் வளர்த்துச் செய்வதெனில் பிராமணர்கள் கொரோனா காலத்தில் வர யோசிப்பதால் வீட்டுப் புரோகிதர், அவருக்குத் தெரிந்தவர் இருவரை மட்டும் வைத்துக் கொண்டு நாளை செய்தாக வேண்டும்.
Deleteஎந்த பண்டிகை எப்போது என்பது பொதுவாகவே குழப்பும் சூரியனுன் சந்திரனும் படுத்துகிறார்கள் எல்லாப் பஞ்சாங்கங்களையும் நேஷ்னலைஸ் செய்யலாம்
ReplyDeleteவாங்க ஐயா, கருத்துக்கு நன்றி.
Deleteஅனைத்து படங்களும் பட்ஷணங்களும் அருமை.
ReplyDeleteஅணை கட்டாததற்கு பேரம் படியாமையும் ஒரு காரணமாக இருக்கலாம். நீரை நாம் நினைக்கும் வண்ணம் சேகரிக்க முடியாது, அதன் போக்கிலே பெரும் பங்கு நீரை விட்டுவிடுவதுதான் மனிதகுலத்திற்கு பாதுகாப்பு.
100 நாள் வேலை திட்டத்திற்கென ஒதுக்கப்படும் பணத்தை "ஒதுக்காமல்" வேலை செய்பவருக்கு முழுமையாக கொடுத்தால் வேலை வாங்குபவரும் திறம்பட வேலை வாங்க முடியும் வேலை செய்பவரும் முழுமனதுடன் வேலை செய்வார்கள்.
சுப தின வாழ்த்துக்கள்.
நன்றி கோயில் பிள்ளை. என்ன பேரம் பண்ணினாலும் டெல்டா பிரதேசத்தில் அணைகள் கட்ட முடியாது. நீரைச் சேமித்தாலே போதும். 100 நாள் வேலைத்திட்டப் பயனாளிகளுக்கு உரிய பணம் அவங்க வங்கிக் கணக்கிலே நேரடியாகச் செலுத்தப்படுவதாக அறிந்தேன்.
Deleteகீதாக்கா குமுதத்தில் படகு வீடு வந்தப்ப வாங்கவே இல்லைன்னு பார்த்ததும் அட நம்ம கீதாக்கா இப்போ படகுவீடு வாங்கியிருக்காங்களான்னு....ஹா ஹா ஹா ஹா ஹா
ReplyDeleteகீதா
ஹாஹாஹா. தி/கீதா, அப்போக் குமுதம் வாங்கவே இல்லை. அந்த ஒரு வார்த்தை மட்டும் விட்டுப் போயிருக்கு. சரினு நானும் விட்டுட்டேன். :)))))
Deleteபடகு வீடு ராகி ர வின் கதை என்று அங்கு கருத்திலும் பார்த்தேன் சும்மா உங்களைக் கலாய்த்தேன்!
ReplyDeleteவிறுவிறுப்பான கதையா. வாசிக்க வேண்டும். நெட்டில் கிடைக்கும் என்று நினைக்கிறேன் பார்க்கிறேன். கதையின் சாராம்சம் புரிகிறது. அட!! ம்ம்ம் சரி இது சஸ்பென்ஸ்...
கீதா
நெட்டில் எல்லாம் தேடிப் பார்த்துட்டேன். கிடைக்கலை. நெல்லை பிடிஎஃப் அனுப்பினார்.
Deleteஆமாம் வாசிப்பில் ஒவ்வொருவரது ரசனையும் மாறும்.
ReplyDeleteஎங்கள் வீட்டிலும் நேற்று கொண்டாடியாச்சு.
நீங்கள் சொல்லியிருக்கும் கணக்கு வழக்குகள் ஒரே குயப்பமாருக்கு!! ஹா ஹா
எல்லாம் அவன் செயல் அம்புட்டுத்தான்! அதானே இப்ப எங்க கல்யாணம்னு நாம கேட்டாலும் எல்லாரும் ஜாம் ஜாம்னு கல்யாணம் நடத்தறாங்களே. சமீபத்துல என் உறவுக் கல்யாணம் 3 நாள் கல்யாணமாக நடந்ததே! சென்னையில். நாங்கதான் போகலை. பயணம் வேண்டாம் என்று தவிர்த்ததால்.
காவிரி திறந்துவிட்டாச்சா ஆமா மேற்குத் தொடர்ச்சி மலையில் நல்ல மழை. மங்களூர்ப்பகுத்யிலும் நல்ல மழை.
ஆமாம் அக்கா தடுப்பணைகள் தான் வேட்னும். அது போல சேமிக்க பல வழிகள் இருக்கின்றன நீங்க சொல்லிருப்பது போல் காவிரி உபரி நீர்ப்பகுதிகளை கால்வாய்கள் எல்லாம் தூர் வாரி இந்த் நீரை அங்குச் சேமித்து வைக்கலாம்.
கீதா
அட? நேத்தே கொண்டாடிட்டீங்களா? எப்பூடி? இப்போக் காவிரியின் உபரி நீரைக் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து ஊருக்குள்ளே செல்லும் வாய்க்கால்கள், குளங்கள்னு திருப்பி விட்டுட்டாங்களே கர்நாடகத்தில்! இனிமேல் தமிழ்நாட்டுக்கு வரது சந்தேகமே! உபரி நீர் எங்கே வரப்போகுது?
Deleteகாவிரி நீர் சேமிப்பிற்கு நீங்கள் சொல்லியிருக்கும் தகவல்கள் சிறப்பு.
ReplyDeleteபண்டிகைகள் மாறி வருவது பற்றி அதிகம் தெரிவதில்லை. உங்கள் பதிவின் மூலம் அறிகிறேன்
துளசிதரன்
வாங்க துளசிதரன், கருத்துக்கு நன்றி.
Deleteஇந்த பஞ்சங்ககுழப்பம் பெரும் குழப்பமாக இருக்கிறது. திருக்கணித பஞ்சாங்கம் என்னதான் துல்லியம் என்றாலும், பலன்கள் வாக்கிய பஞ்சங்கப் படிதான் நடக்கின்றன என்று தோன்றும்.
ReplyDeleteநாங்க பண்டிகைகள் கடைப்பிடிப்பது, கோயில் திருவிழாக்கள் எல்லாம் வாக்கியப் பஞ்சாங்கம் எனப்படும் பாம்புப் பஞ்சாங்கம் மூலமே!
Deleteஅணை கட்டுவது பற்றி நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரி. நிறைய அணைகள் கட்டினால் டெல்டா பிரதேசம் என்பதே உருவாகாது. மேலும் கடலுக்கும் நல்ல தண்ணீர் தேவை. அது இல்லையென்றால் கடல் நீரில் உப்புத்தன்மை அதிகரித்து நீர் வாழ் உயிரினங்கள் மரிக்கும் அபாயம் உண்டு.
ReplyDeleteஅதுபோலத்தான் இந்திய நதிகளை இணைப்பது என்பதும் ஆபத்தானதாம். இதனால் ஜீவ நதிகள் வற்றிப்போகும் அபாயம் உண்டாம்.
நதிகளை இணைப்பது வேறு விஷயம். கடலுக்குத் தண்ணீரே போகாமல் தடுப்பது வேறே விஷயம். இப்போ நர்மதாவிலும் இப்படித் தான் சொன்னார்கள். ஆனால் நர்மதா சரோவர் மூலம் குஜராத்தின் பல மாவட்டங்கள் நீர்வளம் பெற்றிருக்கின்றன. அங்கெல்லாம் "செக்டாம்" எனப்படும் "தடுப்பணைகள்" அதிகம்.
Deleteபடகு வீடு படித்ததில்லை, அது குமுதத்தில் தொடராக வந்ததா? அதுகூட நினைவில்லை. ஒரு முறை ஒரு லெண்டிங் லைபரரியில் பார்த்தேன். புத்தகம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் எடுக்கவில்லை. புஸ்தகாவில் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.
ReplyDeleteரா.கி.ர. அவர்களின் கதைகளில் எனக்கு 'நான் கிருஷ்ண தேவராயன்' மிகவும் பிடித்தது. ஒரு முறை சதாப்தியில் பயணம் செய்த பொழுது எனக்கெதிரே அமர்ந்திருந்த பெண் அந்த புத்தகத்தின் ஆங்கில பொழி பெயர்ப்பை படித்துக் கொண்டிருந்தாள். யார் மொழி பெயர்த்தது என்று தெரியவில்லை.
எஸ்.ஏ.பி.யின் நாவல்களில் 'மலர்கின்ற பருவத்திலே' பிடிக்கும்.
நீங்கள் சொல்லியிருப்பது போல தேவன் என்ரால் துப்பறியும் சாம்புதான். கல்கியின் விமரிசனங்கள் பிடிக்கும். கதைகளில் கடைசியில் சொதப்பி விடுவார். நிறைய தொடர்களில் இரட்டை பிறவிகள் உண்டு.
அறுபதுகளின் கடைசியில் வந்ததோனு நினைக்கிறேன் பானுமதி. தொடராகத் தான் வந்தது. நான் கிருஷ்ண தேவராயன் இரு பாகங்களும் பல முறை படித்திருக்கின்றேன். எஸ்.ஏ.பி. அவ்வளவு கவர்ந்ததில்லை. தேவன் என்றால் உயிர். கல்கி எல்லா நாவல்களிலும் இரட்டைப் பிறவிகளைக் கொண்டு வரவில்லை, "பொன்னியின் செல்வனை"த் தவிர்த்து. அலை ஓசையில் தாரிணியும், சீதாவும் அக்கா தங்கைகள் தாம். இரட்டையர்கள் இல்லை. அதே போல் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு எதிலும் இரட்டையர் இல்லை. அமரதாராவிலும். எந்த நாவலிலும் கடைசியில் சொதப்பியதாகவும் தெரியவில்லை. எல்லாவற்றிலும் எந்த இடத்தில் முடித்தால் சரியாக இருக்குமோ அந்த இடத்தில் முடித்திருப்பார். பிடித்தவர்களுக்குப் பிடிக்கும். க.நா.சு. அவர்கள் எப்போதுமே "கல்கி"யை விமரிசனம் செய்வார். அவருக்குப் பிடிக்காது.
Deleteபடங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteபுத்தகவிமர்சனம் படிக்க தூண்டுகிறது.
படித்த நினைவு இல்லை. படித்து இருப்பேன் மீண்டும் படித்தால் நினைவு வரலாம்.
கிருஷ்ணனுக்கு படைத்த பலகாரங்கள் மனதை கவர்ந்தது.
முன்பு இனிப்பு சீடை, உப்புச்சீடை, தட்டை, முறுக்கு , திரட்டுப்பால் எல்லாம் செய்தேன்.
மகன் தான் விரும்பி சாப்பிடுவான்.
இப்போது பண்டிகைகளை விடாமல் செய்ய வேண்டும் என்பது மட்டுமே நினைவில்.