எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 18, 2020

முறுக்கு! முறுக்கு! முறுக்கேய்!

உப்பிட்டவரை

கிருஷ்ணா! கிருஷ்ணா!

ஜன்மாஷ்டமி

கிச்சாப்பயல்

கிச்சாப்பயல் 19

2015 ஆம் வருஷம் உப்பைப் போட்டுச் சுத்தின முறுக்கு அப்புறமா அடுத்த வருஷம் முறுக்கே சுத்த முடியாமல் கையெல்லாம் இழுக்கவே ஏதோ பேருக்கு முறுக்குனு ஒப்பேத்தி வைச்சிருந்தேன். கடந்த நாலைந்து வருஷப் பதிவுகள் மேலே கொடுத்திருக்கேன் பாருங்க. அதில் குட்டிக் குட்டிக் கால் போட்டிருப்பேன். சின்னக் காலாகப் போட்டு விரல்களுக்கான புள்ளிகளை மட்டும் மாற்றி மாற்றி வைப்பேன். அது அவ்வளவாப் படத்தில் தெரியாது. கிட்டப் பார்த்தால் தான் கால் மாற்றி வைச்சிருப்பது தெரியும். இந்த வருஷம் கோலம் தான் இல்லை, பாதங்களும் இல்லை! ஆனால் முறுக்குச் சுற்ற முடியாமல் போனதில் இருந்தே முறுக்கு அவ்வளவாச் சுற்றவில்லை. இப்போ வெளியேயும் வாங்க முடியாதே! திடீர்னு மனதில் தோன்றி நேற்றுக் காலை இரண்டு ஆழாக்குப் புழுங்கலரிசியை ஊற வைத்து அரைத்துத் துணியில் முடிந்து வைத்தேன். அதிகப்படி நீர் இறங்குவதற்காக! அதன் பின்னர் மத்தியானமா அந்த மாவை எடுத்துப் பிசைந்து கொண்டு உளுத்தமாவு சேர்த்து, வெண்ணெய், ஜீரகம், உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கலந்து கொண்டு சுற்றிப் பார்த்தேன். முன்னெல்லாம் மாதிரி வராட்டியும் முறுக்குனு சொல்லும்படி வந்திருக்கு. முன்னால் கை இழுத்த மாதிரி நேத்திக்கு இழுக்கலை. முறுக்கும் சுத்தினாப்போல் ஆச்சு. கொறிக்கவும் பக்ஷணம் ஆச்சு.

முறுக்குச் சுற்றும்போது படம் எடுக்க நினைச்சேன். ஆனால் என்னமோ மனசு அதில் பதியவில்லை. இப்போவும் முறுக்குப் படம் போடுவதாக இல்லை. வேண்டாம், சுமாராத் தானே வந்திருக்குனு நினைச்சேன். அப்புறமா முறுக்குகளை மட்டும்  படம் எடுத்தேன்.  இன்னும் கொஞ்சம் சுத்திச் சுத்திப் பார்க்கணும். பழக்கம் விட்டுப் போய்டுச்சுன்னா என்ன பண்ணறது? இன்னொரு முறை முறுக்கு மாவு பிசைவதில் இருந்தே படம் எடுத்துப் போடுகிறேன். ஏற்கெனவே போட்டிருக்கேன். அதெல்லாம் பழசு. இப்போப் புதுசாக எடுத்துப் போடணும். ஹிஹி, முறுக்குப் படங்களைப் ஓடாமல் பப்ளிஷ் கொடுத்துட்டேன்!  அவசரம்! விளக்கு ஏத்த ஏற்பாடு செய்யணுமே! வரேன்! அப்புறமா!



அன்றொரு நாள் 

இந்தச் சுட்டியில் பார்க்கலாம். புழுங்கலரிசியை அரைத்துத் துணியில் முடிந்து வைத்திருப்பதில் இருந்து ஆரம்பித்துச் சொல்லி இருப்பேன்.  சுத்தும் அப்போ மாதிரி இப்போ வந்திருக்காது! அதான், இன்னும் பழகிக்கணும். என்னடா இது! இப்படி ஆயிடுச்சேனு அதிர்ச்சியாக இருக்கு! :( வேறே வழியில்லை! மெல்ல மெல்ல முயற்சி செய்து பார்த்துட்டே இருக்கணும்.  இன்னும் என்னென்னவோ எழுத நினைச்சேன். ஆனால் முறுக்கோட அதுக்கும் சம்பந்தம் ஏற்படுத்துவது கஷ்டம்னு எழுதலை. இன்னொரு பதிவாப் போட்டுடலாம்.


47 comments:

  1. முறுக்கு ரொம்பவே அழகா வந்திருக்கு. உங்கள் முந்தைய பதிவுகளில் முறுக்கு படங்கள் பார்த்து அதுக்கும் இதுக்கும் வித்தியாசம் இருக்கான்னு பார்க்கணும்.

    நான் எப்போதுமே, எதுக்கு முறுக்கு சுத்தி கஷ்டப்படறாங்க, அதே மாவில் சீப்பி செய்துடலாமே, சுலபமாகவும் இருக்குமே என்று நினைப்பேன். By the by என் மனைவி தயார் செய்யும் முறுக்கு மாவு ரொம்பவே வாசனையா இருக்கும். எதுக்கு கஷ்டப்படணும்னு நான் முறுக்கு செய்யச் சொல்வதில்லை.

    ReplyDelete
    Replies
    1. 2015 ஆம் ஆண்டிலும் இதே கருத்தைச் சொல்லி இருக்கீங்க! போய்ப் பாருங்க எல்லாச் சுட்டிகளிலும். இல்லைனா என்னோட பழைய பதிவுகளை எல்லாம் நீங்க படிக்க மாட்டீங்க!:))))))

      Delete
    2. ஹஹ்ஹஹ்ஹாஹ் :) கீதாக்கா அதேதான்  ..நானும் காலைல இதே சிப்பி கமெண்டை பார்த்தேனே  2017 ஒருவேளை அந்த போஸ்ட் ஓபன் பண்ணிட்டானோன்னு தோணுச்சு 

      Delete
    3. அப்படீன்னா என் கருத்தில் உண்மை இருக்கு போலிருக்கு. மனதில் நினைப்பதைத்தான் பின்னூட்டமாகப் போடறேன் போலிருக்கு. ஹா ஹா.

      Delete
    4. 2018லதான் ரொம்ப விஸ்தாரமா நிறைய பட்சணங்கள் பண்ணியிருக்கீங்க. படமும் சூப்பரா வந்திருக்கு அப்போ.

      Delete
    5. அம்பத்தூரில் இருந்தவரைக்கும் பக்ஷணங்கள் நிறைய. அரிசி கர்ச்சிக்காய், அப்பம், திரட்டுப்பால், பாயசம், முறுக்கு, தட்டை, உப்பு, வெல்லச் சீடைகள், சீப்பி, கோளோடை, வடை எல்லாமும் உண்டு. பின்னால் ஒவ்வொன்றாகக் குறைத்துவிட்டேன். சாப்பிடவும் முடியறதில்லையே!

      Delete
  2. அடுத்த முறை ஐந்து சுற்று முறுக்கு டிரை பண்ணுங்க. அத்தோட வெல்லச் சீடையும்.

    முறுக்கு பிழியும் அச்சு உபயோகித்திருக்கீங்களா? நான் 75க்கு முன்பே மதுரை பொருட்காட்சியில் பார்த்திருக்கிறேன். அப்போ தோணும் எவ்வளவு சுலபமா முறுக்கைப் பிழிந்துவிடலாம் என்று.

    ReplyDelete
    Replies
    1. புதுசாவா சுத்தறேன்? 50 வருஷங்களுக்கு மேலாக முறுக்குச் சுத்தறேன். ஐந்து சுற்று முறுக்கு என்னோட இரண்டாவது நாத்தனார் சீமந்தத்தின் போது நாங்க வீட்டிலேயே சுற்றிச் சீருக்கு வைத்தோம். என்னிடம் முறுக்குத் தட்டுகள் இருக்கின்றன. வெல்லச் சீடையும் கல்யாணம் ஆன வருஷமே தனியாகப் பண்ணி இருக்கேன். எங்க பக்கம் பெண்களைச் சமையலில் சீக்கிரமே விட்டுடுவாங்க! கல்யாணம் ஆகிப் போகையில் அநேகமாக எல்லாமும் தெரிந்திருக்கும் அந்தப் பெண்களுக்கு. அதே என் புக்ககத்தில் அவ்வளவாச் சொல்லிக் கொடுக்க மாட்டாங்க. செய்யறதைப் பார்த்தேத் தானாக வந்துடும்; அவ குடும்பம்னு ஆனதும் எல்லாமே செய்துடுவா என்று சொல்லுவாங்க. சுத்து வேலைகள் எனப்படும் வீடு பெருக்கித் துடைத்தல், பாத்திரம் அலம்புதல், எப்போவானும் அம்மியில் சமையலுக்கு அரைத்தல் போன்றவற்றைத் தான் செய்யச் சொல்வார்கள். அதே எங்க வீட்டில் குறிப்பா என் அப்பா பென்டு நிமிர்த்திடுவார். பள்ளி நாட்களில் கூட வீட்டு வேலைகளைச் செய்தால் புத்தகம் எடுத்துப் படிக்கவே உட்காரலாம். இல்லைனா கவலையே படாமல் புத்தகத்தைக் கிழித்துப் போடுவார்!

      Delete
  3. ஆஆஆஆ !!!! எனக்கே எல்லாம் வேணும் சூப்பரா இருக்குக்கா குட்டி குட்டியா அழகா ..எனக்கு இப்படி கைமுறுக்கு கையில்  சுற்றவே வரவே வராதது :) சரி எதுக்கும் இன்னிக்கு உங்க லிங்க் பார்த்து முயல்கிறேன் .:))) 

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், படத்தில் குட்டியாத் தெரியுதா? கொஞ்சம் பெரிசாத் தான் சுத்தி இருக்கேன். நீங்களும் சுத்திப் பாருங்க. பச்சரிசி முறுக்குப் பண்ணிப் பல வருஷங்கள் ஆகுது! 2015 ஆம் வருஷம் நிவேதனம் பண்ணப் பண்ணியது தான். அதிலும் ஒரு தரம் சுத்திப் பார்க்கணும்.

      Delete
    2. ஹையோ ஹாஆ :) எனக்கு குட்டி என்பது அளவில்லா அது கியூட் சொப்பு  நேர்த்தி அழகு அந்த அர்த்தத்தில் :)))))))))))))

      Delete
  4. கை முறுக்கு சுற்றுவது கஷ்டமல்லவா

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா, பழகினால் எதுவும் எளிதே!

      Delete
  5. முறுக்கு நன்றாக வந்திருக்கிறது. நான் இதை மட்டும் முயற்சி செய்ததில்லை. எங்கள் பாட்டி," "தோசைக்கு அரைக்கும் பொழுதெல்லாம் முறுக்கு சுற்றி பழகிக் கொள்ள வேண்டும்" என்பார். 

    ReplyDelete
    Replies
    1. நானும் அப்போல்லாம் சின்ன வயதிலேயே அரைக்கும்போது சுத்திச் சுத்திப் பழகியது தான். அம்மாவுக்குச் சுத்திக் கொடுக்க ஆரம்பித்து, அப்போல்லாம் கட்டையாகச் சுத்துவேன். சொல்லிக் கொடுத்தது திருநெல்வேலிக்காரக் கடைய நல்லூர்மாமி. அங்கெல்லாம் கட்டையாகத் தான் சுத்துவாங்க முன்னாடி எல்லாம். அதனால் அதே பழக்கம் ஆனது. பின்னால் கல்யாணம் ஆனதும் அந்தக் கட்டையான சுத்து புக்ககத்தில் கேலி செய்யப் பின்னர் கொஞ்சம் மெலிதாகச் சுற்றக் கற்றுக் கொண்டு சுற்றினேன். இப்போக் கட்டையும் இல்லாமல் ரொம்ப மெலிதாகவும் இல்லாமல் நடுவாந்தரமாகச் சுத்தறேன். இப்போவும் என் கடைசி நாத்தனாருக்கு நான் முறுக்குச் சுத்துவதைப் பார்த்தாலே சிரிப்பு வரும்.

      Delete
    2. அதேதான் பானுக்கா தோசைக்கு அரைக்கும் போது என் பாட்டி என்னைச் சுற்று சுற்று என்று சொல்லுவார். நான் எனக்குச் சரியா வர மாடேங்குது என்று ரொம்ப அழுகை வந்து ஒரு சுற்றிலேயே போ பாட்டி எனக்கு வரலை என்பேன். அவர் ஒரு உருண்டை எடுத்துக் கொடுத்து இதையே சுற்றி சுற்றிப்பாரு என்று கொடுத்துவிட்டு அப்புறம் சொல்லுவார், எங்க கீதாவுக்கு எல்லாம் வரும் செய்வா இந்த முறுக்கு மட்டும் செய்யமாட்டேங்கறா பக்கதுலயே வர மாட்டேங்கறா என்று சொல்லி அங்கலாய்ப்பார். அப்புறம் என்னோடு இருந்த போது சுற்றிக் கொடுப்பேன் அவரும் சுற்றுவார் அப்படிக் கற்றதுதான்.

      கீதா

      Delete
    3. ரொம்ப பெர்ஃபெக்டா வராது ஆனால் சுற்றி விடுவேன் முறுக்கு என்று தெரியும் அளவில் !!!!!!!!!!!!

      கீதா

      Delete
  6. நிஜமா பாத்தா அப்படியா சாப்பிட ஆசையா இருக்கு, செஞ்சே ஆகணும்னு தோண வெச்சுட்டீங்க. எனக்கு சுத்த அவ்ளோ சரியா வராது. ஒரு சுத்து அச்சை வெச்சு அப்படியே சுத்தி சுத்தி ஒரு அளவுக்கு டிசைன் பண்ணிடுவேன். தோரயமா அளவு சொல்லுங்களேன், என்னை மாதிரி ஆளுகளுக்கு அளவில்லாம சாதம் கூட வடிக்க தெரியாது 😃

    ReplyDelete
    Replies
    1. உங்களோட மற்றத் திறமைகள் எனக்கு வராது ஏடிஎம். அளவெல்லாம் சொல்லுவது கஷ்டம். இன்னொரு தரம் பச்சரிசியில் பண்ணினால் அப்போ அளவு சொல்றேன். புழுங்கலரிசியை அரைச்சுப் பண்ணுவதில் கண் திட்டம் தான்.

      Delete
  7. இதுவே சுமாராத் தானே வந்திருக்கு என்றால், நாங்கெல்லாம் எங்கே போவது...?

    சங்கு சக்கர முறுக்கு சற்றே எளிது... ஆனால் வீட்டில் அதுபோல் போட விட மாட்டார்கள்...!

    ReplyDelete
    Replies
    1. கல்யாணங்களில் சக்கரம் மாதிரிவளைத்து வளைத்துச் சுற்றுவது உண்டு திரு தனபாலன். சங்கு முயற்சி செய்யவில்லை. அதை அடுப்பில் கொதிக்கும் எண்ணெயில் போடுவது கூடாது என்பார்கள். சக்கரம் மாதிரிச் சுற்றுவது கூடப் பூப்போல் தான் பின்னால் வரும். பெயர்களைச் சேர்த்தும் சுற்றுவோம்.

      Delete
  8. முறுக்கு அழகா சுத்தி வந்திருக்கு.  பார்க்க அழகா இருக்கு.  ஆனாலும் பாருங்க எனக்கு முறுக்கு சாப்பிடறதுல என்னவோ இன்டரஸ்ட் இந்த வருஷம் இல்ல...   சப்புன்னு இருக்கற மாதிரி பீலிங்!  காரசாரமா இருந்தா நல்லா இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் முறுக்கு சாப்பிட அவ்வளவு ஆசை இல்லைதான். மாமாவுக்குச் சாப்பிடணும்னு தோணித்து. கொரோனாவுக்கு முன்னால் இங்கே அஷ்வின் என்னும் கடையில் முறுக்கு வாங்கி வருவார். ஓமமோ என்னமோ அரைத்துப் போட்டுக் கொஞ்சம் காரமாகவே முறுக்கு இருக்கும். ஆனால் உளுத்தமாவு சேர்த்துப் பண்ணி இருப்பாங்களானு எனக்கு சந்தேகமா இருக்கும். வெளியே வாங்கி இப்போ ஆறு மாசம் ஆச்சே!

      Delete
    2. அக்கா முறுக்கு நம் வீட்டில் செய்தால்தான் நன்றாக இருக்கிறது. அதுவும் புழுங்கலரிசி முறுக்கு வெளியில் அவ்வளவாகச் செய்வதில்லை நம் ஊர்ப்பக்கம் மட்டும்தான் செய்யறாங்க. அதுவுமில்லை வெளில அவங்க பொ க மாவு சேர்த்துதான் செய்யறாங்க. அதுவும் ஓகேதான். ஆனாலும் வீட்டில் செய்வது போல் இருப்பதில்லை.

      எனக்கு முறுக்கு ரொம்பப் பிடிக்கும். என் பாட்டி செய்தால் தாத்தாவுக்கு வயதானபிறகு பல் கடிக்க முடியவில்லை என்று மோரில் ஊறப்போட்டுக் கொடுப்பார். சின்ன சின்ன துண்டுகளாகவோ இல்லை அம்மியில் பொடித்தோ அதுவும் சுவையாக இருக்கும். நானும் அப்படிச் சாப்பிடுவதுண்டு!!!!!! சுவைக்காக

      கீதா

      Delete
    3. இடித்து பொடி செய்து தேங்காய் துருவல், சீனி போடு அம்மாவுக்கு கொடுப்போம் ரசித்து சாப்பிடுவார்கள் பல் இல்லாத காரணத்தால். பல் கட்டியதை மாமா பேத்தி நன்றாக இல்லை நீங்கள் வேறு மாதிரி இருக்கிறீர்கள் பயமாய் இருக்கு என்றாதல் .

      Delete
    4. முறுக்கை அம்மியில் பொடித்துத் தயிரில் ஊற வைச்சும் சாப்பிடுவாங்க, பார்த்திருக்கேன். 2015 ஆம் வருடம் உப்பு அதிகமா ஆனப்போ நானும் தயிர், வெங்காயம், தக்காளி உப்பில்லாமல் நறுக்கிச் சேர்த்து முறுக்கு, தட்டைகளை ஒன்றிரண்டாய்ப் பொடித்துச் "சாட்" மாதிரிச் சாப்பிட்டுத் தீர்த்தேன்.

      Delete
    5. அது பற்றி பதிவு போட்டீர்களே ! படித்து இருக்கிறேன்.

      Delete
  9. அதென்ன...  புழுங்கல் அரிசியை ஊற வச்சு துணியில் சுத்தி வச்சாலே மாவாயிடுமா?

    ReplyDelete
    Replies
    1. என்னடாப்பானு பார்த்தேன். கோட் செய்ய முடியாததால் செய்யவில்லை. புழுங்கலரிசியை ஊற வைத்து "அரைத்து"னு தான் எழுதி இருக்கேன். :))))) கண்ணாடியை மாத்துங்க! ஸ்ரீராம்.

      Delete
  10. முறுக்கு படம் அழகாக இருக்கிறது.
    அடுத்த பதிவில் புதிம படம் போடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, அது என்ன "புதிம" படம்? புதிய?

      Delete
    2. மன்னிக்கவும் புதியபடம் என்று படிக்கவும்.

      Delete
  11. ஆஹா கீதாக்கா புழுங்கலரிசி முறுக்கு !!! நல்லா வந்திருக்கே கீதாக்கா. சூப்பர் ப்ளீஸ் கொஞ்சம் அனுப்புங்க ஹா ஹா ஹா.

    பார்த்ததும் பு அ ஊறப் போடத் தோன்றிவிட்டது.

    நம் வீட்டில் புழுங்கலரிசியில்தான் செய்வாங்க. கிச்சாவுக்கு பச்சரி மாவில்தானே செய்யணும் செய்தேன். அப்புறம் புகுந்த வீட்டில் எப்பவுமே பச்சரிசிலதான் செய்வாங்க. அவங்க புஅ அதிகம் பயன்படுத்துவதில்லை.

    நான் நம் வீட்டில் புழுங்கலரிசியிலும் செய்வதுண்டு. இப்ப பார்த்தாச்சா உடனே கை துறு துறுன்னு வருது ஹா ஹா

    கீதா


    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, புழுங்கலரிசியை ஊற வைச்சு அரைச்சுத் தான் சேவையும் செய்வேன். இப்போக் கொஞ்ச நாட்களாகத் தஞ்சை ஜில்லா அரிசி கிடைப்பதால் பச்சரிசியிலும் சேவை பண்ணினேன் ஒரு நாள். நன்றாக வருது.

      Delete
  12. முறுக்கு பார்க்க அழகு.
    வீட்டில் செய்து சாப்பிடுவது இந்த காலநிலைக்கு ஏற்றதுதான்.

    என் மாமியார் கை முறுக்கு மிக அழகாய் செய்வார்கள், அம்மா தேன்குழல் சூப்பராக செய்வார்கள்.
    நானும் கை முறுக்கு செய்வேன் என் அத்தையிடம் கற்றுக் கொண்டு. ஆனால் பெரிதாக செய்ய வராது இப்படி குட்டி குட்டியாகத்தான் செய்வேன். தட்டை, கை முறுக்கு எல்லாம் அரைத்து தான் செய்வோம் எங்கள் வீட்டிலும். மிஷினில் ஈர அருசி அரைத்து தருவார்கள் அதிலும் செய்வோம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, நான் முறுக்குத் தட்டில் சுற்றினால் பெரிதாக வரும். அதை முங்க வைக்கும் அளவுக்கு எண்ணெய் வைத்துப் பண்ணவில்லை. ஆகவே சுமாரான அளவிலேயே சுற்றிவிட்டேன்.

      Delete
  13. முறுக்கு முறுக்காகத் தானே இருக்கு..

    இதைக் கண்டதும் பழைய நினைவுகள் எல்லாம் மீள்கின்றன...

    முறுக்கை விட அதற்கு முன் நிற்கும் அன்பு தான் கிச்சாவுக்கு வேண்டியது...

    ஸ்ரீ கிருஷ்ண.. கிருஷ்ண...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, உங்கள் கருத்துக்கும், வரவுக்கும் நன்றி.

      Delete
  14. கீசாக்கா, முடியல்ல முடியல்ல என மூக்கால அழுதழுது.. எதுக்கு கைச்சுத்து முறுக்கு செய்தீங்க? இது சுற்றுவது கஸ்டமெல்லோ?.. பார்க்க சூப்பராக இருக்குது, ஆனா செய்வது சரியான கஸ்டம் ... யூ ரியூப்பில் பார்த்தேன், அதனால முயற்சிக்கவில்லை.

    வீட்டில் அடிக்கடி முறுக்கு செய்வேன், ஆ எண்டாலும் ஊ எண்டாலும்.. ஆராவது பசிக்கிறதெனில்.. முறுக்கு அல்லது பருப்பு வடை, கீரை வடை இவற்றில் ஒன்று செய்திடுவேன்.. ஆனா இந்த கைச்சுத்து மட்டும் முயற்சிக்கவில்லை.

    நீங்க மினக்கெட்டுச் செய்திருக்கிறீங்க... ரெசிப்பி பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பிஞ்சு அதிரடி, முயற்சி செய்து பாருங்க. உங்கள் கைவேலைத்திறன்களுக்கு முன்னால் இதெல்லாம் ஜுஜுபி!

      Delete
  15. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை.. "முறுக்கு முறுக்கு முறுக்கேய்" என்று கடைத்தெருவில் கூவி விற்பதை போல குரலில் பதிவின் தலைப்பு ரொம்பவே ஈர்க்கிறது. ஹா.ஹா.ஹா. கைமுறுக்கு பார்க்கும் போதே அதை விட கவர்ந்து ஈர்க்கிறது.மிக அழகாக சுற்றியிருக்கிறீர்கள். உங்களுடைய பழைய பதிவுகளையும் படித்து வந்தேன். அதிலயும் முறுக்குகள் இருக்கின்றனவே...அதிலுள்ள அத்தனை பட்சணங்களும் நன்றாக உள்ளது.

    மற்றும் அதிலுள்ள கிருஷ்ணர் கால் பாதம் கோலங்கள் அழகாக உள்ளது. நன்றாக வரிசை தப்பாமல் பொறுமையாக போட்டு வந்துள்ளீர்கள்.

    எங்கள் வீட்டில் மாக்கோலம் போடும் பழக்கமில்லை. ஆனால் கிருஷ்ணர் பாதம் இங்கு (பெங்களூர்) வந்தும் கூட நான் வாசலிலிருந்து கோல மாவினால் கைகளால்தான் போட்டுக் கொண்டு வருவேன். எட்டு மாதிரி போட்டுக் கொண்டு சின்ன சின்ன விரல்களாக சின்ன குழந்தையின் பாதம் மாதிரியான அமைப்பில் போடுவேன்.

    இப்போது இரண்டு மூன்று வருடங்களாக வீட்டில் பாதஅச்சு வாங்கியிருக்கிறார்கள். போன வருடம் பண்டிகை இல்லை. இந்த தடவை நான் கைகளினால் போடுகிறேன் என்றாலும், இளையவர்கள் கேட்கவில்லை. போகட்டுமென விட்டு விட்டேன்.

    எங்கள் அம்மா புழுங்கல் அரிசி முறுக்கு, பச்சரிசி முறுக்கு எல்லாமே நன்றாக சுற்றுவார்கள். அவர்கள் சொல்லித்தந்து கூடவே சுற்றுவேன். இப்போது பழக்கம் விட்டுப் போச்சு. சுற்றிப் பார்த்தால் வருமென நினைக்கிறேன்.

    அப்போதெல்லாம் இட்லி தோசைக்கு வீட்டில்தான் எங்கள் அம்மாதான் நெல் வேக வைத்து புழுங்கல் அரிசி தயாரிப்பார்கள். அது ஒரு பெரிய வேலை.. கூடவே இருந்து அதை உலர்த்தி அது ரைஸ மில்லில் குத்தி வந்ததும் தவிடு, உமி அரிசி என பிரிப்பது என வேலைகள் படு சுவாரஸ்யமாக அன்றைய நாள் முழுக்க இருக்கும். அதெல்லாம் ஒரு காலம்.

    அந்த வீட்டில் தயாரித்த புழுங்கல் அரிசியில் செய்யும் தட்டை,முறுக்கு என கிருஷ்ண ஜெயந்தி படசணங்கள் மிகப் பிரமாதமாக இருக்கும். இரு மாதங்கள் வைத்து சாப்பிடும்படியான பட்சணங்கள் அம்மாவும், பாட்டியும் செய்வார்கள். இப்போது இரு தினங்கள் சேர்ந்தாற் போல் எண்ணெய் பட்சணம் சாப்பிட்டால் நெஞ்சை கரிக்கிறது.

    இன்று கூட மதியம் பூரி, உருளை பன்னீர் மசாலா வீட்டில் மசக்கை.. விருப்பம்.. காலை டிபன் முடித்ததும் அந்த வேலைகள் சரியாக இருந்தது. வலைப்பக்கம் வர இயலவில்லை. மதியம் சாப்பிட்டது நெஞ்சை கரிப்பதால் உறக்கமின்றி உட்கார்ந்து கருத்துகள் அனுப்பி கொண்டிருக்கிறேன். பதிவு அருமையாக இருந்தது. நானும் தாமதமாகத்தான் வந்துள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, முடிஞ்சப்போக் கொஞ்சமாக அரிசியை ஊற வைச்சு அரைச்சுச் சுத்திப்பாருங்க. முன்னர் சுத்திப் பழக்கம் இருந்தால் வந்துவிடும் இயல்பாகவே. என் மாமியாரும் வீட்டில் தான் அரிசி புழுக்குவார். ஒரு 2,3 நாட்கள் வேலை நெட்டி வாங்கும். அதுவும் எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை என்பதற்காகப் பழகிக்கணும் என்றும் சொல்வார். ஆனால் புழுங்கலரிசியில் முறுக்கு, தட்டை அவர்களுக்குத் தெரியாது.

      Delete
  16. ஆஹா. இந்த முறுக்கை பார்ககாமல் விட்டேனே. இது சுமார் முறுக்கா. கண்ணைக் கட்டுகிறதே. மிக அருமை கீதா. புழுங்கலரிசிதான் முறுக்குக்கு ஏத்தது.
    உங்கள் உழைப்புக்கு மனம் நிறைந்த வணக்கம். விமானமில்லாமலேயே அங்கே வந்து எடுத்துக் கொண்டு விட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, தாமதமானால் என்ன? முறுக்கு 2 மாதங்கள் வரை வைத்துச் சாப்பிடலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

      Delete
  17. முறுக்கு ரொம்ப அழகாக சுற்றியிருக்கிறீர்கள்! இத்தனை வருட அனுபவம் அதில் தெரிகிறது! நான் பச்சரிசியில் தான் செய்வேன். புழுங்கலரிசியில் செய்ததில்லை. புழுங்கலரிசி என்றால் இட்லி அரிசியா அல்லது பொன்னி புழுங்கல் சாப்பாட்டு அரிசியா! நீங்கள் குறிப்பிட்டுள்ள 2 கப் அரிசிக்கு உளுந்து, வெண்ணெய் எவ்வளவு சேர்க்கணும்? உங்கள் பதில் கிடைத்தபின் செய்து பார்க்கணும்.

    முறுக்கைப்பொடித்து சாப்பிடும் டிப்ஸ் நீங்களும் கோமதி அரசுவும் கொடுத்தது மிகவும் அருமை! உண்மையிலேயே இவை இன்னும் டேஸ்டாக இருக்கும்போலத்தெரிகிறது!!

    ReplyDelete
  18. பெரியம்மா, அம்மா, அம்மாவின் சித்தி, பாட்டி என அனைவருமே முறுக்கு சுற்றுவார்கள். இல்லத்தரசியும் செய்ததுண்டு. என் அக்கா கல்யாணத்திற்கு வீட்டிலேயே தான் முறுக்கு சுற்றினார்கள் - அனைத்து வித இனிப்பு, காரம் என அனைத்துமே வீட்டில் செய்தது தான். மாவு இடிப்பது எங்கள் வேலை! :) இப்போது பலரும் இந்த வேலைகளை இழுத்து விட்டுக் கொள்வதில்லை - கடையில் வாங்கி விடுகிறார்கள் - ஆனால் வீட்டில் செய்யும் சுவை வருவதில்லை.

    ReplyDelete
  19. முறுக்கு சூப்பர்.

    ReplyDelete