நாளைக்கு எங்க ஆவணி அவிட்டம். ஆகவே காலையில் வீட்டு வேலைகள் அதிகம் இருக்கும். அதோடு இன்னிக்கு வடாம் பொரிக்கும்போது கையில் எண்ணெய் கொட்டிக் கொண்டு கட்டைவிரல் வலக்கையில் வெந்து போய்விட்டது. நாளைக்கு எப்படி எல்லாம் செய்யப் போறேனோ, தெரியலை. என்றாலும் ஏதாவது செய்து தான் ஆகணும். நாளைக்குப் பாடு ஆண்டவன் கைகளில். இப்போதைக்கு இந்தக் காயம் சரியாகணும். கையில் ஆயின்ட்மென்ட் தடவிக்கொண்டிருக்கேன். இதே போல் அப்பளம் பொரிக்கையில் முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னர் எண்ணெய் கொட்டினப்போவும் இப்படித்தான் பிரச்னை ஆச்சு. அப்போ மாமனார் ஸ்ராத்தம் வேறே வந்தது. சில, பல கல்யாணங்கள் போக வேண்டி இருந்தது. கைக் காயத்தோடு போயிட்டு வந்தோம். இன்னிக்குச் சாப்பிடவே முடியலை. ராத்திரி தான் மோர் சாதமானும் ஸ்பூனால் சாப்பிட்டுப் பார்க்கணும். :( எதிர்பாரா விபத்து! நினைச்சுக் கூடப் பார்க்கவில்லை. மனசிலும் இப்படி எல்லாம் நடக்கும்னூ தோன்றவே இல்லை. ஆண்டவன் சித்தம்! எப்படியும் ஒரு வாரம் ஆகும். இது வரைக்கும் கொப்பளிக்கவில்லை. உடனே ஆயின்ட்மென்ட் தடவிக்கொண்டதாலோ என்னமோ! இனியும் கொப்பளிக்கலைனால் பிரச்னை இருக்காது. பார்ப்போம்.
மண்டபத்துக்கு நான் தான் முதல்ல வந்தேனா தெரியலியே சொக்கா!!
ReplyDeleteகர்ண்டு போய் வந்து நெட் வரும் போது படுத்தல்...பதிவு வந்ததும் பார்த்தேன் நெட் போச்சு!!
கீதா
fristuuuuu!
Deleteநல்ல நாள் வரும் போது உங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?
Deleteவிநாயகப்பெருமானை பற்றிய பல அறிந்த அறியாத விஷயங்கள்.
நன்றி அன்பு. பிள்ளையார் பற்றி நானும் மழலைகள் குழுமத்தில் விரிவாக எழுதி மின்னூலாகவும் வெளி வந்துள்ளது. https://freetamilebooks.com/ebooks/pilliyar/ இங்கே போய்ப்பார்க்கவும். கூகிள் புக்ஸிலும் கிடைக்கும். பிள்ளையார் பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார் என்னும் தலைப்பில்.
Deleteஓ மை கடவுளே!
ReplyDeleteஅக்கா டக்குபுக்குனு கழுவினீங்களா கையை? ஆயின்ட்மென்ட் போட்டிருக்கீங்க தெரியுது...ப்ளீஸ் ஒரு ஏடி இஞ்செக்ஷ்ன போட்டுருங்க! பாதுகாப்பிற்குத்தான்
கீதாக்கா என்ன இது இப்படி? முந்தைய கமென்ட் வந்ததா என்றும் தெரியவில்லை நெட் மீண்டும் போய்விட்டது.
கீதா
கையை உடனே ஜில்லென்ற நீரில் கழுவிட்டேன். ஆயின்மென்ட் போடத்தான் கொஞ்சம் தாமதம். சாப்பிடவில்லை. சாப்பிட்டதும் போட்டுக்கொண்டேன். எங்கே சாப்பிட உட்கார்ந்தால் சாப்பாடே இறங்கலை. :(
Deleteவிரலை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் கீதா! இணையத்துக்கு மெதுவாய் வந்தால் போதும்!
ReplyDeleteவாங்க மனோ, கட்டை விரல் என்பதால் தட்டச்சக் கஷ்டமா இல்லைனாலும் இணையத்தில் அதிகம் உட்கார முடியாது! வலி, வேதனை! :(
Deleteஅக்கா நாளை ரொம்ப எதுவும் மெனக்கிட வேண்டாம். உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லைதான் இருந்தாலும் கையில் தண்ணீர் படாம பார்த்துக்கோங்க. ஹெல்ப்புக்கு ஏதாவது மாமி கிடைத்தால் கூப்பிட முடிந்தால் கூப்பிட்டுக்கோங்க.
ReplyDeleteஎதிர்பாரா விபத்துதான். இப்பவும் ஸ்பூனால ஏதேனும் சாப்பிடுங்க கீதாக்கா. மருந்து வேற சாப்பிடறீங்கல்லியா உங்கள் கால் வலிப் பிரச்சனைகளுக்கு.
ஹப்பா கொப்பளிக்கவில்லை. சமாதானம் ஆனால் கையில் தண்ணி படாம பார்த்துக்கோங்க பட்டா கொப்பளிக்கலாம். ட்ரையா விடுங்க கையில் எதுவும் படாம பார்த்துக்கோங்க.
விரைவில் சரியாகிடும் கீதாக்கா. கண்டிப்பா பிரச்சனை இருக்காது. எல்லாம் நல்லபடியா நடக்கும்.
கீதா
தி/கீதா, இன்னிக்கு எதுவுமே பண்ணலை, சாதம், பருப்பு, பாயசம் மட்டும் தான். கொழுக்கட்டை எல்லாம் எதிர்வீட்டிலே இருந்து வந்தது. விரைவில் சரியாகும் என்றே நானும் நம்புகிறேன். இன்னிக்குக் கொஞ்சம் கொப்பளிச்சிருக்கு. மருந்தாளுநர் வீட்டிற்கு வந்து பார்த்துட்டு இன்னிக்குக் கொப்பளிக்கும் என்று தான் சொன்னார். அதே போல் கொப்பளம் லேசாக!
Deleteஐயோ.. கை பத்திரம். ஏன் இப்படி அஜாக்கிரதைக்கு? கவனமாக இருக்கக்கூடாது... நாளை உபாகர்மாவுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், அஜாக்கிரதை தான்! :( வாழ்த்துகளுக்கு நன்றி.
Deleteவலைக்கு லீவு போட்டா என்ன இப்ப. கைவிரலைப் பார்த்துக்கோங்க. நல்லா சரியானப்புறம் வந்தா போதும்.
ReplyDeleteஏதாவது இப்பவும் சாப்பிடுங்க..
பிரார்த்தனைகள் விரைவில் குணமாகிவிடும்
கீதா
அப்புறமாத் தயிர்சாதம் கரண்டியால் மசிச்சுச் சாப்பிட்டேன் ஸ்பூனால். சீக்கிரம் குணமானால் சரி.
Deleteவலக்கை என்றால் வேலைகள் செய்வது கஷ்டமே!
ReplyDeleteகவனமாய் பார்த்துக் கொள்ளுங்கள்.கற்றாழை கிடைத்தால் தொடர்ந்து தடவி வாருங்கள் விரைவில் சரியாகும்.
silverex gel இருந்தால் தடவி கொள்ளுங்கள் விரைவில் ஆறி விடும்.
வாங்க கோமதி, அடிக்கடி வலக்கையில் தான் ஏதேனும் பிரச்னைகள். கற்றாழை ஜெல் தான் தடவிக்கிறேன்.
Deleteபதிவின் தலைப்பே ஒரு சிறு பதற்றத்தைக் கொடுத்தது.
ReplyDeleteஎதிர்பாரா விபத்து. மருந்து போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். பொள்ளாமல் இருக்க வேண்டும். கவனமாக இருங்கள். நாளை அதிகம் சிரமப்பட வேண்டாம். நல்லதே நினைப்போம். காயம் விரைவில் குணமடைந்திடப் பிரார்த்தனைகள். விரைவில் குணமடைந்திடும்.
துளசிதரன்
வாங்க துளசிதரன், லேசாய்க் கொப்பளம் வந்திருக்கு. ஆனாலும் சரியாகிவிடும் என நம்புவோம்.
Deleteஅட அநியாயமே... என்ன இப்படி ஆயிடுச்சு... நல்லவேளை கையைக் கழுவி, கொஞ்ச நேரம் கழித்தாலும் ஆயிண்ட்மெண்ட் போட்டீங்க. எல்லாம் சரியாயிடும். கொஞ்சம் கவனமா இருந்துக்கோங்க. ப்ரார்த்தனைகள்.
ReplyDeleteநெல்லைத்தமிழரே, சரியாகிடும். கவனமா இருந்தாலும் நேத்து வேண்டாத மன அழுத்தம்! தேவையில்லாமல் ஏற்படுத்திக் கொண்டது. அதில் தான் இப்படி ஆச்சு.
Deleteஇது எப்படி நடந்ததுன்னுதான் புரியலை. ஒரு சமயம், சாப்பிட உட்கார்ந்தபின், பையன் கேட்டான் என்று அவசரமாக அப்பளாம் பொரிக்க, கடுகு தாளிக்கும் பெரிய கரண்டியில் எண்ணெய் வைத்து 1/4 அப்பளாமாகப் பொரித்தேன். அந்தக் கரண்டி சரியாக உட்காராது. அதனால் இன்னொரு burnerன் ஸ்டாண்டில் நிறுத்தியிருந்தேன். கொஞ்சம் அவசரத்தில், இந்த ஸ்டாண்டை தட்டிவிட்டதில் எண்ணெய், அடுப்பின் மீதுதான் தெளித்தது. அதிலிருந்து இலுப்புச் சட்டியில்தான் எதையும் பொரிப்பேன். அப்பளாம் எப்போதுமே, அதற்கென உள்ள கரண்டியால்தான் பிடித்து எடுப்பேன்.
ReplyDeleteஏகலைவன் மாதிரி கட்டைவிரல்ல காயம் என்று சொல்றீங்களே. வெகுவிரைவில் குணமாகட்டும். நீங்களும் ரொம்பவுமே அந்த விரலை படுத்தாதீர்கள்.
நடந்தப்புறமா எல்லோருக்குமே எப்படினு தான் தோணும் நெல்லையாரே! நல்லவேளையாக நீங்க அந்த விபத்திலிருந்து தப்பிச்சீங்க. நேற்று நான் இலுப்பச் சட்டியில் தான் எண்ணெய் வைத்தேன். ஸ்பூனால் அல்லது சின்னக் கரண்டியால் வடாத்தை எடுத்திருக்கணும். சப்பாத்தி எடுக்கும் சிம்டாவால் எடுத்தேன். முன்னரும் அதில் எடுத்தப்போத் தான் எண்ணெய் கொட்டியது கை விரல்களில். நல்லவேளை இந்த முறை உடனே சுதாரிச்சதால் கட்டை விரலோடு தப்பியது. இல்லைனா புறங்கை முழுசும் ஆயிருக்கும்.
Deleteஎன்ன இது இப்படியொரு சோதனை..
ReplyDeleteகவனமாக இருந்தாலும் சில சமயங்களில் இப்படியெல்லாம் நேர்ந்து விடுகிறது..
விரைவில் குணம் அடைவீர்கள்...
இறைவன் துணை உண்டு...
சோதனைதான். கவனமாய்த் தான் இருந்தேன். பிரார்த்தனைகளுக்கு நன்றி துரை.
Deleteகை விரலில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள் கவனம்.
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
Deleteவினாயகர் வேதனையைத் தீர்த்து வைக்கட்டும்.
ReplyDeleteஅன்பு கீதா,
விரல் ரொம்ப எரியுமே.
பத்ரம் பா. நம்மை மீறி இப்படித்தான் ஏதோ சோதனை:(
ஆவணி அவிட்டம் ,சக்திக்கு ஏற்றார்ப்போல் நிறைவேற்றுங்கள். மாமாவின் உதவி கிடைக்கும் என்று நம்புகிறேன்.
தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
மன்சுக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது.
சரி இத்தோட போச்சுன்னு நினைக்கிறேன்.
பகவான் துணை. டாக்டரிடம் போய் வரவும்.
நலமடைய நம் வினாயகர் துணை.
வாங்க வல்லி, ஆவணி அவிட்டம் வீட்டிலேயே புத்தகத்தைப் பார்த்துப் படித்து அவரே போட்டுக்கொண்டார். வெளியே எங்கும் ஏற்பாடுகள் செய்யவில்லை இந்த வருஷம். நானும் இத்தோடு போச்சேனு தான் நினைச்சேன். சீக்கிரம் நலமடைவேன். கவலை வேண்டாம்.
Deleteகவனமாக இருக்கவும்...
ReplyDeleteநன்றி திரு தனபாலன்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஇப்போதுதான் பதிவை பார்க்கிறேன். கை விரல் வலி இப்போது எப்படி உள்ளது..? சூடான எண்ணெய் பட்டவுடன் எவ்வளவு எரிச்சல் இருந்திருக்கும் என்பது எனக்குள் உணர்கிறேன். மனம் கஸ்டமாக உள்ளது. உடனே நீங்கள் கையை அலம்பியவுடன் தேன், மாவு, இங்க் ஏதேனும் முதலில் பூசியிருக்கலாம். பயங்கர எரிச்சலில் இருந்து காப்பாற்றும். உங்களுக்கும் தெரிந்திருக்கும்.. ஆனாலும் பதட்டத்தில் சொல்கிறேன். ஆயில்மெண்டை விடாமல் தடவிக் கொள்ளவும். இயன்றவரை இன்றைய வேலைகளைப் பாருங்கள். கூடிய வரை தண்ணீரில் அந்த கை விரலை மட்டுமாவது நனைக்காமல் இருக்கவும். விரைவில் உங்களுக்கு குணமாக விக்னேஷ்வரனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். பிரார்த்தனைகளுக்கு கண்டிப்பாக இறைவன் செவி சாய்ப்பான். நன்றி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, இரண்டு, மூன்று நாட்களாக அதிகம் சூடாக இருக்கிறது. வெப்பம் அதிகரித்திருக்கிறது. அதுவே தாங்காமல் உடம்பெல்லாம் சிவந்து தடித்துப் போகிறது. அதில் இது வேறே! கொஞ்சம் எரிச்சலும், வலியும் அதிகம் தான் இருந்தது. தேன் இருக்கு. ஆனால் அது நினைவு வரலை. மாவெல்லாம் இல்லை. இங்க் பயன்படுத்துவதே இல்லையே. நல்லவேளையாக இந்த ஆயின்ட்மென்டை எப்போதும் கைவசம் வைத்திருப்பதால் உடனடியாகக் கொஞ்சம் நிவாரணம் தந்தது. விரைவில் சரியாகும். உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி.
Deleteஅடடா... கவனமாக இருங்கள். விரைவில் குணமாகட்டும். தீரண எண்ணெய் என்று ஒன்று நம் ஊரில் கிடைக்கும். அதைத் தடவி வாருங்கள். நல்ல பலன் தரும்.
ReplyDeleteவாங்க வெங்கட், நீங்க சொன்ன எண்ணெய் கேட்டுப் பார்க்கிறேன் நன்றி.
Deleteகவனமாக இருங்கள்.
ReplyDeleteநன்றி முனைவரே!
Deleteவிரைவில் நலமாகட்டும்.
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
நன்றி மாதேவி.
Deleteஇன்று கொழுக்கட்டைசெய்ய முடிந்ததா
ReplyDeleteஇந்த வருஷம் எங்களுக்குப் பண்டிகைகள் கிடையாது. ஆதலால் பாயசம் மட்டும் தான் பிள்ளையாருக்கு. நன்றி ஐயா.
Deleteஅடடா! தீ ரண எண்ணெய் தடவி வாருங்கள் மாமி...விரைவில் குணமாகி விடுவீர்கள்..சில வருடங்களுக்கு முன் என் இரண்டு கைகளிலும் வெந்நீர் கொட்டி அவதிபட்ட அனுபவத்தை கூட எழுதியிருப்பேன்..ஏறக்குறைய குணமாக ஒரு மாதமானது..தண்ணீர் பட்டு பட்டு நடுவிரல் கொழகொழவென்று இருந்தது..டாக்டரிடம் காண்பித்துக் கூட அவர்களும் தீ ரண எண்ணெய் தான் பரிந்துரைத்தார்கள்..வடக்கு வாசலில் கனகுப்பிள்ளை கடையில் கிடைக்கும் மாமி..உங்கள் வீட்டருகே தான் இந்த எண்ணெய் தயாராகிறது..
ReplyDeleteவாங்க ஆதி, உங்க யூ ட்யூப் சானல், ரோஷ்ணியோடது எல்லாம் பார்த்தேன். மாமாவிடமும் சொன்னேன். எனக்குத் தான் இன்னமும் கின்டில் மூலம் புத்தகங்கள் தரவிறக்கவோ படிக்கவோ முடியலை/தெரியலை. ஆப்ஷன் எது எனப் புரியலை. கொடுத்திருக்கும் ஆப்ஷனில் க்ளிக் செய்தால் புத்தகம் திறப்பதில்லை! :(
Deleteவெங்கட்டும் சொல்லி இருக்கார், தீ ரண எண்ணெய் பற்றி. வாங்கி வைச்சுக்கறேன். வடக்கு வாசல் வரை மாமாவை அனுப்ப யோசனை. இங்கே பக்கத்தில் இருக்கும் மருந்துக்கடையிலிருந்து மருந்தாளுனரே வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டு மருந்துகள் கொடுத்துச் சென்றார். இப்போது பரவாயில்லை. தெற்கு கோபுரம் தாண்டிச் செல்ல யோசனை/பயம்!
Deleteயூட்டியூப் சேனலுக்கு சென்று பார்த்தது குறித்து மிக்க மகிழ்ச்சி..உங்களை மாதிரி எல்லோரின் ஆசிகளுடன் நல்ல கண்டெண்ட் தொடர்ந்து கொடுத்து சிறப்பாக செய்ய வேண்டும்..
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதங்கள் வீட்டு உபாகர்மம் சிறப்பாக நடைபெற்றதா? இப்போதுதான் எல்லோர் பதிவிலும் தங்களை கண்டேன். உங்கள் கை விரல் காயம் (தீப்புண்) எப்படி உள்ளது? வலி குறைந்துள்ளதா? விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, மறு வரவுக்கு நன்றி. உபாகர்மா வீட்டிலேயே புத்தகத்தை வைத்துப் பூணூல் போட்டுக் கொண்டார். சிருங்கேரி மடத்தில் தான் வருஷா வருஷம் ஏற்பாடு செய்வார்கள். இந்த வருடம் இல்லை. தீப்புண் கொஞ்சம் கொப்பளித்திருக்கிறது என்றாலும் வலி குறைந்துள்ளது. ஆயின்ட்மென்ட் வேலை இல்லாத நேரங்களில் எல்லாம் தடவிக் கொண்டே இருக்கேன்.
Deleteகீதாக்கா இப்போ எப்படி இருக்கு கைவிரல் ..எண்ணெய் பட்டா எரிஞ்சு தள்ளிடும் .உடனே தேன் தடவனும் அது எரிச்சலை குறைக்கும் .கவனமா யிருங்க .ஒரே நேரம் நிறைய வேலைகள்பற்றி யோசிச்சிட்டு சமைக்காதிங்க .நமக்கே தெரியாம பதட்டத்தில் இப்படி நடந்திடும் .டேக் கேர்
ReplyDeleteவாங்க ஏஞ்சல், பொதுவா நீங்க சொல்றாப்போல் தான் யோசனைகளோடு சமைப்பேன். ஆனால் அன்னிக்கு மாமாவும் நானும் முக்கியமான விஷயம் பற்றிய மும்முரமான பேச்சு வார்த்தை! அதில் கவனம் போய்விட்டதால் கொஞ்சம் ஏமாந்து விட்டேன். :( இப்போது கொஞ்சம் பரவாயில்லை. எத்தனை நேரம் தான் சும்மாவே உட்காருவது? அதான் முடிஞ்சவரை தட்டச்சிப் பார்ப்போம்னு நேற்றே வந்தேன்.
Deleteசமையல் ஒரு கலை என்றாலும் அதற்கு பொறுமையும் கவனமும் மிக அவசியம். நலம் பெற வாழ்த்துக்கள்.
ReplyDelete