கொஞ்சம் ரொம்பவே கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் எடுத்த படங்கள். மேற்கே இருந்து காவிரி வருகிறாள்.
தூரத்தில் ஓர் மலை தெரிகிறது. உங்களுக்கும் தெரிகிறதா?
மெல்லமெல்லக் கிழக்கே திரும்புகிறாள் காவிரி. இப்போக் கொஞ்சம் வேகம் வந்திருக்கு. சில வருஷங்களாகக் காணாமல் இருந்த கடலரசனைப் பார்க்கச் செல்லும் வேகம் போல.
இங்கே கொஞ்சம் சாய்வான கோணத்தில் தெரிவாள். நடுவில் சில மரங்கள், திட்டுக்கள். முன்னால் அவை தெரிந்தன. இப்போது அவற்றை மூடிக் கொண்டு பாய்கிறாள் காவிரி.
இங்கே ஒரு பெரிய திட்டு. அது வரைக்கும் நடந்தே போவார்கள். இப்போத் தண்ணீர் வேகமாகப் போவதால் அங்கெல்லாம் போகத் தடை!
இங்கே இருக்கும் சில படித்துறைகளைத் தாண்டிக் கொண்டு காவிரி ஓடுகிறாள்.
இது என்னமோ படம் சரியா வரலை. ஏன்னு தெரியலை. ஆடிக் கொண்டும் அசைந்து கொண்டும் எடுத்தேனோ? செக் டாம் அங்கே தெரிகிறது பாருங்கள்.
செக் டாமின் மேல் பகுதி இங்கே படமாக்கினேன்.
இது கொஞ்சம் தள்ளி. அக்கரையில் சிந்தாமணிப் படித்துறைனு நினைக்கிறேன்.
நம்மாளு அங்கே மலை மேல் இருக்காரே! போகத் தான் முடியாது! ஒருதரம் போயிட்டுப் போதும், போதும்னு ஆகி விட்டது. :(
தெற்கு கோபுரம், ராஜ கோபுரம். முன்னால் தெரியும் அந்தப் புதுக்கட்டிடம் தான் கல்யாண மண்டபம். அங்கே நடப்பது எல்லாம் எங்க குடியிருப்பின் ஜன்னல் வழியாகப் பார்க்கலாம். கல்யாணம் நடக்கும் சமயங்களில் ஒரே சத்தமாக இருக்கும்.
நான்தான் first ஆஆஆ :)
ReplyDeleteவாங்க ஏஞ்சல். நீங்க தான் ஃபர்ஷ்ட்ட்ட்டு!
Deleteமுதல் படம் கேலண்டருக்கு போடலாம் செம .லாஸ்ட் படம் மாஸ் க்ளாஸ் என்னே அழகு இரவு விளக்கொளி .
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி ஏஞ்சல்.
Deleteபடங்களின் விளக்கம் கொடுத்ததால் புரிகிறது. படங்கள் தெளிவு இல்லையே... ஏன் ?
ReplyDeleteவாங்க கில்லர்ஜி, மாலை ஆறரை மணி. மேக மூட்டத்தினால் இருக்கும். மற்றபடி ஒரே ஒரு படம் தான் கொஞ்சம் அசங்கி விட்டது.
Deleteகாவிரி நடுவிலேயே ஒரு திட்டு (தீவு) மாதிரி முதல் படத்துல தெரியுதே.
ReplyDeleteஇரண்டாவது படத்தில் மலை தெரியுதான்னு கேட்கறீங்க? நல்லாவே தெரியுது.
படங்களும் அழகா வந்திருக்கு. வேகமாகச் செல்லும் காவிரி அன்னையைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கு.
நன்றி நெல்லைத்தமிழர்.
Deleteஉச்சிப்பிள்ளையார்.... நாங்கள் சென்றுவந்தது நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteஅன்று எங்களுக்கு தாயுமானவர் சன்னிதியில் கூப்பிட்டு வெண்பொங்கல் தந்தார்கள்.
உங்களுக்கு ஏறுவதற்கு கஷ்டமாக இருந்ததா? ஆனாலும் படிகள் (தாயுமானவர் சன்னிதி வரை) கொஞ்சம் உயரம்தான்.
நெல்லைத்தமிழரே, படிகள் சுமார் ஒன்றரை அடி உயரம் என்பதோடு ரொம்பச் செங்குத்து வேறே. கஷ்டப்பட்டுக் கொண்டு தான் போனேன்.
Deleteபின்னால, அதுல்லாம் காவிரி நடுவே இருக்கும் திட்டு என்று சொல்லியிருக்கீங்க. காவிரி சுழித்துக்கொண்டு ஓடுகிறது. சென்ற வருடம் காவேரி ஸ்னானம் (அம்மாமண்டபம் அருகில்தான்) செய்தது நினைவுக்கு வந்தது.
ReplyDeleteஅரங்கன் கோபுரமும் அழகு
சென்ற வருடம் எங்க குடியிருப்பு வளாக வாசலில் படம் எடுத்து அனுப்பி இருந்தீங்க. அம்பேரிக்காவில் இருந்தோம்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteகாவிரி படங்கள் நன்றாக வந்துள்ளது. முதல் படம் அவ்வளவு அழகாய் தெளிவாக உள்ளது. இரண்டாவதில் மலை தெரிகிறதே..!
பதினெட்டாம் பெருக்கு என்பதால் காவிரித்தாய் துள்ளல் நடையில் விரைந்தோடுகிறாள். அவள் தவழ்வதும்,ஓடுவதும்,அனைத்துமே ஒரு அழகுதான்.
உச்சிப் பிள்ளையாரை தரிசித்துக் கொண்டேன்.ஏன் அவரை தரிசிப்பதில் என்ன பிரச்சனை? நாங்கள் திருமங்கலத்தில் இருக்கும் போது இரு தடவை அங்கு வந்துள்ளேன்.
ஸ்ரீரங்கம் கோபுர தரிசனம் கண்டேன். கோவில் பக்கத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில்தான் என இளைய மகனுக்கு திருமணம் நடந்தது. இதுவில்லை என நினைக்கிறேன். (மருமகள் திருச்சிதான்) அப்போது கோவிலுக்கு செல்ல இயலவில்லை. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வருவதாக ஏற்பாடுகள், கெடுபிடிகள் என செல்லாமல் திருமணம் முடிந்த மறுநாள் திரும்பி விட்டோம். அனைத்துப் படங்களும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, காவிரி இரு கரையும் தொட்டுக் கொண்டு ஓடுகிறாள். மகிழ்ச்சி அவளுக்கு. பல நாட்களாய்ச் சந்திக்காத கடலரசனைச் சந்திக்கும் ஆவலோடு, வழியெங்கும் மக்கள் தன்னைக் கொண்டாடுவதில் ஏற்பட்ட பூரிப்பும் கூட.
Deleteஉச்சிப் பிள்ளையாரைத் தரிசிக்க மேலே செல்ல ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டோம். அதிலும் என்னால் ஏறவே முடியவில்லை. எப்படியோ பல்லைக் கடித்துக் கொண்டு ஏறி தரிசனம் செய்து விட்டோம். கீழே இறங்க இன்னும் அதிக நேரம் ஆனது. அதிலும் தாயுமானவர் சந்நிதியிலிருந்து கீழ்ப்படிக்கு வரும்போது தலைகுப்புற விழுந்துடுவேனோனு பயம். உட்கார்ந்து கொண்டு இறங்கினேன். உடனே உடம்புக்கும் வந்து மருத்துவர் இம்மாதிரி மலைகள் ஏறாதீங்கனு சொல்லிட்டார். (
கண் குளிரக் குளிர
ReplyDeleteகாவேரியின் தரிசனம்...
12 ஆண்டுகளுக்கு முன் நள்ளிரவைக் கடந்த நேரத்தில் சமயபுரத்தில் இருந்து பஸ்ஸில் வந்து திரு ஆனைக்கா மெயின் ரோட்டில் இறங்கி அங்கிருந்து அம்மாமண்டபத்துக்கு நடந்து வந்து (3:45) காவிரியில் குளித்து விட்டு அங்கிருந்து திரு ஆனைக்காவில் ஆருத்ரா தரிசனத்துக்கு சென்றது நினைவுக்கு வருகிறது..
ஆனால் அங்கு ஆருத்திரா தரிசனம் ஸ்வாமி புறப்பாடு நடைபெறவில்லை...
ஏதோ காரணம் சொன்னார்கள்..
மறந்து விட்டது...
அப்போது தான் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினாள்..
அதையே இரண்டு பதிவாகப் போடலாம்...
12 ஆண்டுகள் முன்னர் நாங்க இங்கே வரலை. ஏன் ஆருத்ரா தரிசனம் புறப்பாடு இல்லாமல் போனது? புரியவில்லை. அகிலாண்டேஸ்வரி நிகழ்த்திய திருவிளையாடலைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அவளன்றி ஓரணுவும் அசையாது.
Deleteமிக மகிழ்ச்சி மா ...இனிய காட்சிகள் ...வாழி காவேரி ..
ReplyDeleteநானும் அண்ணனிடம் வீடியோ எடுத்து அனுப்ப சொன்னேன் ...அவரும் காவேரி பாலத்தில் நின்று வீடியோ எடுத்து எனக்கு அனுப்பினார் ....விரைவில் நேரில் பார்க்கவேண்டும் என்னும் ஆசையில் பல முறை அவ்வீடியோ வை கண்டேன் ...
வாங்க அனு, உங்கள் பிறந்த ஊர் இல்லையா? நேரில் பார்க்க வரும்படி ரங்கன் அருள் புரியட்டும்.
Deleteகாவிரி ஓடி வரும் படங்கள் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteகோபுர தரிசனம் செய்து கொண்டேன். மின் விளக்கில் கோபுரம் அழகு.
மலைக்கோட்டை படமும் அழகு. மாலை நேரம் காவிரி ஆற்றின் அழகை ரசித்துக் கொண்டு கோபுர தரிசனம் செய்து கொண்டு இருக்கலாம்.
மாலை நேரம், காலை நேரம் தபால் தந்தி நகர் வீட்டு மொட்டை மாடியில் மதுரை மீனாட்சி அம்மன் கோபுர தரிசனம் செய்வேன் . அங்கேயே இருந்து இருக்கலாம் என்று தினந்தோறும் நினைக்க வைக்கிறது இன்றைய நிலை. வெளியில் எங்கும் போக முடியாத இந்த நிலையில் வெளி உலக காட்சிகளே பார்க்க முடியவில்லை இந்த வீட்டில் . அதிகாலை நிலாதான் பார்க்க முடியும். பெளர்ணமி நிலா பார்க்க முடியவில்லை.
மொட்டை மாடியில் காலை, மாலை பறவைகள் கூட்டமாய் பறந்து போவதை பார்க்கலாம் அங்கு .
வாங்க கோமதி, இங்கேயும் மொட்டை மாடியில் பறவைகள், கருடன் எல்லாம் பறந்து கூக்குரல் கொடுக்கும். பக்கத்துத் தோப்பில் 3 மயில்கள் வந்திருக்கின்றன. ஒரே கூவல், அகவல்! கண்ணில் தான் படவில்லை. கருநிற நாரைகள் கூட்டம் அதிகமாயும் இருக்கின்றன. இங்கே இரு பக்கமும் உதய சூரியன், உதய சந்திரன், அஸ்தமன சூரியன், அஸ்தமன சந்திரன் பார்க்கலாம். முந்தாநாள் மேக மூட்டம். வடகிழக்கே கருமேகங்கள்.
Deleteகீதாக்கா படங்கள் அழகு. செக் டேம் தூரத்தில் மலைகள் எல்லாம் தெரிகிறது
ReplyDeleteகாவிரி ஓடுவது அழ்காக இருக்கிறது.
படங்கள் அன்று போட்டதோ? இல்ல மாத்தி பப்ளிஷ் ஆகிடுச்சா?
கீதா
தி/கீதா, தலைப்பிலேயே படங்கள் புதுசுனு சொல்லி இருக்கேனே! கொஞ்சம் கொஞ்சம் கோணத்தையும் மாற்றி இருக்கேனே!
Deleteஇவ்வாறு தண்ணீர் ஓடுவதே மகிழ்ச்சி...
ReplyDeleteநன்றி திரு தனபாலன்
Deleteபடங்கள் எல்லாம் நல்லா வந்திருக்கு. ஒவ்வொன்றையும் க்ளிக்கி தனியாய் பெரிதாய் பார்த்தேன்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்.
Deleteநம்மாளு இருக்கும் அந்த இடம் மலைக்கோட்டைதானே? ஏன் அங்கே போகமுடியாது? ஏறுவது கஷ்டம் என்பதாலா?
ReplyDeleteஸ்ரீராம், ஏற்கெனவே என் தம்பி இருந்தப்போ தொண்ணூறுகளிலேயே மேலே அழைத்துப் போக மறுத்துவிட்டான். ஆஸ்த்மா நோயாளி என்பதால். அதுக்கப்புறமாத் திருச்சிக்குப் பல முறை வந்தும் உ.பி.கோ. போகலை. 2013இல் எப்படியானும் போகணும்னு நினைச்சுப் போயிட்டுப் போதும் போதும்னு ஆகி விட்டது.
Delete' நடந்தாய் வாழி காவிரி ' பாடல் உங்களது புகைப்படங்களையும் வர்ணனைகளையும் பார்த்து ரசித்த போது நினைவில் வந்தது!
ReplyDeleteவாங்க மனோ, நன்றி.
Deleteகரை புரண்டு ஓடும் காவிரி ஆற்றைக் காணும் நாள் எந்நாளோ?
ReplyDeleteபடங்கள் நன்று.