எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, April 21, 2021

சீதா ராம நாமமே துதி செய்! நாளும் ஒரு தரம்!

 


எங்க வீட்டு ராமர் வெகு நாட்களுக்குப் பின்னர் மீண்டும் வந்திருக்கார். மல்லிகைப் பூ மாலை நேற்றுக் கட்டினேன். இந்த வருஷம் கதம்பத்திற்கான பூக்கள் வாங்கலை. விலை ரொம்பக் குறைவு என்பதால் மொத்தமாய்த் தான் வாங்கணுமாம். கொஞ்சமாகக் கேட்டால் கொடுப்பதில்லை. அவ்வளவு பூக்கள் வாங்கினால் ஒரு வாரத்துக்கு வரும்! ஆகவே மல்லிகைப் பூக்களும் உதிரிப் பூக்களுமாக வாங்கினதோடு சரி! கிருஷ்ணரும்/ராமரும் எல்லாவற்றிலும் நேர்மாறாக இருப்பார்கள்! கிருஷ்ணர் நல்ல மழைக்காலத்தில் தேய்பிறை அஷ்டமியில் பிறந்தார் எனில் ராமரோ நல்ல அடிக்கிற வெயில் காலத்தில் வளர்பிறை நவமி! இங்கே ஶ்ரீரங்கத்தில் கிருஷ்ணாஷ்டமிக்கு ஆவணி மாதம் தான் கணக்கு. அதே போல் ஶ்ரீராமநவமிக்குச் சித்திரை மாதம் கணக்கு. ஒவ்வொரு வருஷமும் ஆவணியில் ஜன்மாஷ்டமியும், சித்திரையில் ராமநவமியும் வருவதில்லை. ஆனாலும் பெருமாள் கோயில்களில் முக்கியமாய் ஶ்ரீரங்கத்தில் ஆவணி மாதத்து தேய்பிறை அஷ்டமி கலந்த ரோஹிணி நக்ஷத்திரத்தில் ஜன்மாஷ்டமி! அதே போல் சித்திரை வளர்பிறை நவமி ஶ்ரீராம நவமி! இந்த வருஷம் பங்குனி மாதம் அமாவாசை மாசக் கடைசியில் வந்ததால் சித்திரையில் ஶ்ரீராமநவமி வந்திருக்கு. இல்லைனால் நமக்கெல்லாம் பங்குனி அமாவாசைக்கு அடுத்து வரும் சுக்ல பக்ஷ நவமியிலேயே கொண்டாடிடுவோம்.



சுவாமி அலமாரியின் கீழ்த்தட்டு உம்மாச்சிங்க! அறிமுகம் தேவை இல்லை. எல்லோரும் பல முறை பார்த்திருக்கீங்க! வெற்றிலை, பாக்கு, பழம் தட்டு மட்டும் இங்கே தெரியுது. மற்றப் பிரசாதங்கள் கீழே!

முன்னால் கொஞ்சம் மஞ்சள் நிறத்தில் தெரிவது கடலைப்பருப்புச் சுண்டல். கடலைப்பருப்பை உப்புச் சேர்த்து நன்கு நசுங்கும் பதத்தில் வேக வைத்துக் கொண்டு நல்லெண்ணெயில் தாளிக்கையில் கடுகு, பெருங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை சேர்த்துக் கொண்டு வெந்த பருப்பைக் கொட்டி ஒன்றரைத் தேக்கரண்டி சாம்பார்ப் பொடி சேர்த்துக் கூடவே ஒரு தேக்கரண்டி சர்க்கரை, தேங்காய்த் துருவல், துருவிய காரட், வெள்ளரி, மாங்காய்த் துண்டங்கள், நறுக்கிய பச்சைக் கொத்துமல்லி தூவிக் கிளறி இறக்கினால் சாப்பிட நன்றாக இருக்கும். விரத நாட்கள் இல்லாமலோ/அல்லது சும்மாச் சாப்பிடப் பண்ணினாலோ இவற்றோடு பெரிய வெங்காயம் பச்சையாகப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். புதினாவையும் சேர்க்கலாம். தேவையானால் எலுமிச்சம்பழம் பிழியலாம். 

பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு வறுத்து வேக வைத்துக் கொண்டு அரிசியும், தேங்காயும் சேர்த்து அரைத்து விட்ட பாயசம். வடை. இந்த வருஷம் உளுந்து வடை பண்ணலை. அதென்னமோ எனக்கு வடையே பண்ணத் தெரியலையாம். நம்ம சர்வாதிகாரியோட கண்டுபிடிப்பு! ஆகவே உளுந்து வடையே பண்ணாதே என ஆர்டர் போட்டாச்சு. ஆமவடைதான் பண்ணினேன். எங்க வீட்டில் இரண்டும் பண்ணுவோம் தான்! ஆனாலும் வடை பண்ணத் தெரியலைனு சொல்லிட்டுப் பண்ண வேண்டாம் என்பது என்னமோ சரியில்லை இல்லையோ? போனால் போகட்டும். ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் உளுந்து வடை பண்ணி நான் மட்டுமே சாப்பிடணும்னு முடிவு எடுத்திருக்கேன். 

பானகம், நீர்மோர், சாதம், பருப்பு! வடைப்பருப்பு எனச் சொல்லப்படும் பாசிப்பருப்பை ஊற வைத்துப் பிழிந்து அதில் வெள்ளரி, மாங்காய், காரட், பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை கொத்துமல்லி போட்டு உப்புச் சேர்த்து எலுமிச்சை பிழிந்தால் ஆஹா! ஓஹோ! சொர்கம் தான். ஆனால் இங்கே பண்ண முடியாது. இங்கே இவங்களுக்கெல்லாம் வடைப்பருப்புன்னாத் தெரியவும் தெரியாது. பல முறை பண்ணிக் காட்ட நினைப்பேன். ஆனால் அம்பத்தூரில் இருந்தவரை மன்னி கொடுத்தனுப்புவார் என்பதால் பண்ண மாட்டேன். இங்கே வந்து பண்ணணும்னு நினைச்சுட்டுப் பண்ணுவதே இல்லை. ஒரு நாளைக்கு சாலட் மாதிரிப் பண்ணிச் சாப்பிடணும்னு நினைச்சிருக்கேன்.

ஹிஹிஹி, ஶ்ரீராமநவமியை விட்டுட்டு கதா காலட்சேபம் பண்ணிட்டு இருக்கேன் போல! இவ்வளவு தான் ஶ்ரீராமநவமிக்கு எங்க வீட்டில் பண்ணியது. ரொம்ப எளிமை ராமரைப் போலவே! வடை கொஞ்சமாய்த் தட்டினேன். மிச்சம் வடை சாயந்திரமாத் தட்டணும். எல்லோரும் பிரசாதம் எடுத்துக்கோங்கப்பா! சுண்டல் அப்புறமா நல்லா இருக்காது. வாங்க, வாங்க சீக்கிரமா!

34 comments:

  1. //ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் உளுந்து வடை பண்ணி நான் மட்டுமே சாப்பிடணும்னு முடிவு எடுத்திருக்கேன்.//
    அத்து ! ஐ லைக் இட் யா !

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹாஹா! வாங்க, வாங்க! வருகைக்கு நன்னி ஹை!

      Delete
  2. இரண்டு வருடங்களாக காசி சென்றுவ வந்தபோது வாங்கி வந்த ராமர் படம் வைத்து பூஜை!  இன்று பானகம், நீர்மோர் மட்டும்.  வடைப்பருப்பு செய்யவில்லை.  செலவாகாது.

    ReplyDelete
    Replies
    1. ஹை, ஶ்ரீராம், இரண்டு வருடங்களாகவா காசிக்குப் போனீங்க? சொல்லவே இல்லையே!

      Delete
  3. உண்மையில் இன்று தண்ணீர், மோர் குடித்து சாப்பிடவே பிடிக்கவில்லை.  அதுவும் பாஸ் சாமபர் சாதம் என்றதும் வேண்டாம் என்றால் முறைக்கிறார்.  மோர்சாதம்..  அதுபோதும்!  யப்பா...   செம வெயில்.

    ReplyDelete
    Replies
    1. அட! ஆமா இல்ல! நானும் பானகம், நீர்மோரை வெளியேவே எடுக்கலை. உள்ளே வைச்சேன், மத்தியானமாக் குடிக்கலாம்னு! மறந்தே போச்சு!

      Delete
    2. இப்போத் தான் பானகம், நீர்மோரைச் செலவு செய்தேன். எங்க வீட்டில் இந்த வெயில் நாளில் தான் துவையல் அரைக்கச் சொல்வார். மைசூர் ரசம் வைக்கச் சொல்லுவார். இன்னிக்கு மைசூர் ரசம் தான்! :)))))) எனக்கென்னமோ வயிற்றுக்கு ஒத்துக்காதுனு தோணும்!

      Delete
  4. எல்லாம் பண்ணி முடித்தபிறகு ரொம்ப பசி வந்துடுச்சு போலிருக்கு. படம் கிளியரா எடுக்கலை.

    உளுந்து வடை - ஆஹா... இன்று மனைவி வடை சாயந்திரம்தான் பண்ணப்போகிறேன் என்றாள். என்ன வடைனு தெரியலை

    ReplyDelete
    Replies
    1. என்னவோ போங்க நெல்லை. படம் எடுக்க எனக்குத் தெரியாதுனு நூறு தரம் சொல்லியாச்சு! வந்தவரைக்கும் பேசாமப் பாருங்க! உ.வடை ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் பண்ணிட்டுப் படம் எடுத்துப் போடறேன்.

      Delete
  5. //வடையே பண்ணத் தெரியலை// - காய்கறி வாங்கறேன்னு வெளில போயிட்டு காய்கறி மட்டும்தான் வாங்கிட்டு வர்றாரா இல்லை முரளி கஃபே என்று மற்ற கஃபேக்களில் இட்லி வடைலாம் சாப்பிட்டு வர்றாரா?

    இது என்னடா...இந்த நளபாகச்சக்ரவர்த்தினிக்கு வந்த சோதனை

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, என் புக்ககத்திலேயே எல்லோருக்குமே எனக்கு எதுவுமே தெரியாது/தெரியலைனு ரொம்பக் குறை. மாமா அவ்வப்போது சாப்பாட்டில் குற்றம் சொல்லுவார். நான் இந்தக் காதில் வாங்கிட்டு அந்தக் காதில் விட்டுடுவேன் பல முறை. சில சமயங்கள் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிடுவேன்.

      Delete
    2. நெல்லை, கல்யாணம் ஆன புதுசிலே ஒவ்வொரு ஞாயிறன்றும் காலை காய் வாங்கப் போகும்போது அம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே இருக்கும் (இப்போவும்) கணேஷ் பவன் ஓட்டலில் இட்லி, சட்னி, சாம்பார், வடைனு சாப்பிட்டுட்டு வருவார். அதைச் சொல்லவும் மாட்டார். வீட்டுக்கு வந்தும் படுத்துண்டு புரண்டு கொண்டு இருப்பாரா! நான் குளிச்சுட்டு வாங்க சாப்பிடலாம்னு கூப்பிட்டா, "கணேஷ் பவனிலே இட்லி அடிச்சுட்டேன்!" என்பார் சிரிச்சுட்டே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதென்ன இட்லி அடிக்கிறது? முதல்லே புரியலை. பின்னாடித் தான் புரிஞ்சது. இதான் பெண் புத்தி பின் புத்தியோ? :)))))

      Delete
    3. முரளி கஃபேயில் காஃபி மட்டும் தான் கிடைக்கும். அதை ஒட்டிப் போட்டிருக்கும் ஒரு கடையிலும் டிஃபன் எனக் கிடைக்காது. வடை, பஜ்ஜி, போண்டா வகையறாக்கள் கிடைக்கும். காணாததைக் கண்டாப்போல் எல்லோரும் அள்ளிக் கொண்டு போவார்கள்.

      Delete
  6. அன்பு கீதாம்மா, பூஜை அறை ஸ்வாமி படங்கள் அருமை! இன்று எங்கள் வீட்டில் பானகம், நீர்மோர் (வெள்ளரிப்பிஞ்சும் மாம்பிஞ்சும் நறுக்கி போட்டு) மற்றும் பாசிப்பருப்பு வேக வைத்து தாளித்தோம். இன்று என் மாமியாரின் பிறந்த நாளும் கூட! அவர்களுக்காக கேசரி செய்தோம். சாமி கும்பிட்டு அவர்களிடம் ஆசீவாதம் வாங்கினோம்.இதுவே எங்கள் வீட்டு ராமநவமி சிறப்பு!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வானம்பாடி, நம்மளால் முடிஞ்சதைக் கொடுத்தால் போதுமே! உங்கள் மாமியாருக்கு எங்கள் வாழ்த்துகளும், நமஸ்காரங்களும்!

      Delete
  7. வணக்கம் சகோதரி

    ஸ்ரீராம நவமி வாழ்த்துகள். ஸ்ரீ ராமர் நம்மை என்றும் நல்லபடியாக காகக வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்.

    தங்கள் வீட்டு ராம நவமி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது குறித்து மிக்க சந்தோஷம். தனியாக நின்று இத்தனையும் செய்திருப்பதற்கு வாழ்த்துகள். ராமர் பட அலங்காரம் நன்றாக உள்ளது. இங்கிருந்தே உங்கள் வீட்டு ராமரை மனதாற வணங்கி அனைவரின் நலம் வேண்டி பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    /அதென்னமோ எனக்கு வடையே பண்ணத் தெரியலையாம். நம்ம சர்வாதிகாரியோட கண்டுபிடிப்பு! ஆகவே உளுந்து வடையே பண்ணாதே என ஆர்டர் போட்டாச்சு./

    ஹா.ஹா.ஹா. இதையெல்லாம் உங்கள் சர்வாதிகாரி படிக்க மாட்டாரா? நீங்கள் அத்தனை விஷேடங்களுக்கும் முறையே எல்லா நிவேதனங்கள்யும் நன்றாகத்தான் செய்கிறீர்கள். நானும் தங்கள் வீட்டு பிரசாதங்களை மானசீகமாக எடுத்துக் கொண்டேன்.

    நான் ஆமவடை. பாசிப்பருப்பு பாயாசம் மட்டுந்தான் செய்திருந்தேன்.ஸ்ரீசீதாராமரை மனதாற வணங்கி பிராத்தனைகள் செய்தோம். உங்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்.
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. நம்ம சர்வாதிகாரிக்கு நான் எழுதுவதும் கருத்துக்கள் வருவதும் நன்றாகத் தெரியும். ஆனால் ஒரு நாள் கூட உட்கார்ந்து படித்தது இல்லை. 2005 ஆம் வருடத்தில் ஆரம்பித்ததில் இருந்து இன்றுவரை ஒரு பதிவைக் கூடப் படித்தது இல்லை. ஆனாலும் சிதம்பர ரகசியம் எழுதும்போதும் சரி, ராமாயணம் எழுதும்போதும் சரி, கண்ணன் கதைகள் எழுதும்போதும் சரி கேட்டுத் தெரிந்து கொள்வார். சிதம்பரம் பற்றிய பல தகவல்களைக் கொடுத்திருக்கார். என்னோட ஒன்றுவிட்ட நாத்தனார் ஒருத்தரும், அவர் கணவரும் இன்னும் ஓரிரு உறவுகளும் என்னோட பரம ரசிகர்கள். அவங்கல்லாம் தொலைபேசியில் பேசும்போதோ, நேரில் பார்க்கும்போதோ பாராட்டிச் சொல்லுவார்கள். கேட்டுக் கொள்ளுவார். மத்தபடி இதை ஒரு சாதனையாகவெல்லாம் நினைக்க மாட்டார்.

      Delete
  8. அதுதானே. !!!!!!!!!!!
    கீதாமாவின் ராமபட்டாபிஷேகப் படமும்
    பிரசாதங்களும் இல்லாமல் ஏது ஸ்ரீராம நவமி.
    இங்கே இனிமேல் தான் ஆரம்பிக்கணும். ஏழைகளின் தலைவன்
    ராமனைக் கொண்டாட நாம உபசாரம்
    நாவுக்குச் செய்து கொண்டிருக்கிறேன்.
    பன்னிரண்டு மணிவாக்கில் மற்ற பிரசாதங்கள்.
    உணவைப் படம் எடுப்பதில் இங்கே
    நிறைய கட்டுப்பாடுகள் உண்டு,

    நாம் அதை அலட்சியப் படுத்த முடியாது இல்லையா?

    நீங்கள் வடை செய்து எனக்கும் அனுப்புங்கள் மா.
    ருசி தெரியாமல் வாதாடும் மாப்பிள்ளையைப்
    பார்த்து நாலு கேள்விகள் கேட்கக் காத்திருக்கிறேன்:)))))

    பக்தியுடன் படைக்கப் பட்ட பிரசாதங்கள்
    வெகு ஜோர். அனுமான் ஜி ஜன்னலுக்கு
    வந்தாரோ?
    அன்பு வாழ்த்துகள். ராமன் எல்லோரையும் காக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, எங்க பெண் வீட்டிலும் கட்டுப்பாடுகள் என்ன படம் எடுத்தாலும் உண்டு. சென்ற 2019 ஆம் ஆண்டில் நவம்பரில் நாங்க டாலஸ் போனப்போப் படங்கள் எடுக்க மிகுந்த கட்டுப்பாடுகள் விதித்தாள் பெண். வீட்டில் படங்கள் எல்லாம் எடுக்கவே முடியாது. அனுமன் இப்போதெல்லாம் கண்களில் படுவதே இல்லை.

      Delete


  9. நீர் மோர் , பானகம் , வடை , பாயசம் , ஊற வைத்த பருப்பு அனைத்தும் செய்து எங்கள் வீட்டிலும் ராமநவமி சிறப்பாக கொண்டாடியாச்சு மா ....


    ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
    ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனு. ஶ்ரீராமன் அருளால் நினைத்தது அனைத்தும் நடந்தேறப் பிரார்த்தனைகள்.

      Delete
  10. ராமநவமியில் உங்கள் வீட்டு ராமர் தரிசனம் செய்தேன். எங்கள் வீட்டுக்கு ராமர் படத்துடன் நீங்கள் வந்த நினைவுகளும் கூடவே வருகிறது.

    வடைப்பருப்பும், பானகம், நீர் மோர் ராமநவமி விழாவில் முக்கியமாக நிவேதனம் செய்யபடுமே!


    நமக்கு பிடித்ததை தனியாக செய்து சாப்பிடும் பழக்கம் தான் இல்லையே நமக்கு! எப்போதும் மற்றவர்களுக்கு பிடித்ததை செய்து கொடுத்து மகிழும் வழக்கம் தான் நமக்கு இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி! ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. குட்டிக் குஞ்சுலு அம்மா வயிற்றிலே இருந்தாள். அப்போது நீங்கள் மீனாக்ஷி கோயிலுக்குப் போய் எங்க மருமகளுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டது எல்லாம் நினைவில் இருக்கு. ஆமாம், தனியாகச் செய்து சாப்பிடும் பழக்கம் இல்லை தான். இருந்தாலும் சொல்லாமல் ஒரு நாள் பண்ணிடணும்னு இருக்கேன். :)))

      Delete
  11. //எல்லோரும் பிரசாதம் எடுத்துக் கோங்கப்பா//

    ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது.

    ReplyDelete
    Replies
    1. ஏட்டுச் சுரைக்காய் ஆனாலும்
      காணக் கிடைக்கின்றதே!..

      Delete
    2. ஹாஹாஹா, கில்லர்ஜி, சும்மா, பார்க்கத்தானே!

      நன்றி துரை!

      Delete
  12. ஸ்ரீராம பட்டாபிஷேகம்..
    தஞ்சாவூர் ஓவியம்... அருமை.. அழகு...

    கதாகாலட்சேடம் என்றது தன்னடக்கம்...

    ஸ்ரீராம் ஜெய ராம்.. ஜெய ஜெயராம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை. ஶ்ரீராமன் அனைவரையும் காத்து அருள்வானாக!

      Delete
  13. ஸ்ரீராம நவமி கொண்டாட்டங்கள் நன்று. அனைவருக்கும் நல்லதே கிடைக்கட்டும். அனைவருக்கும் ஸ்ரீராமனின் பேரருள் கிடைத்திட எனது பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  14. ராமர் பெருமையை பேசப் போகிறீர்கள் என்று ஆசையாகத் திறந்தால், பிரசாத பெருமை!! இந்த வருடம் நான் முதல் முறையாக சரியாக இரண்டு பேருக்கு மட்டும் வரும்படியாக எல்லாம் செய்திருந்தேன். சே! பிரசாதம் செய்து மற்றவர்களுக்குத் தராமல் நாம் மட்டும் சாப்பிடுகிறோமே என்று தோன்றியது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க, வாங்க பானுமதி! நல்வரவு. ராமர் பெருமையை அவ்வப்போது பேசுவதோடு கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்களுக்குப் பேசி இருக்கேனே! இங்கே இப்போது ஐடியாவில் கம்சனின் படைத்தளபதி யார்? எனக் கேள்வி கேட்டுக் கொண்டு ப்ளாகர் படுத்தல் தாங்கலை ஒரு மாசமா! அதோடு இல்லை, கம்சனின் குலகுரு யார் என்று சொல்லும்படியும் கேட்டுக் கொண்டிருக்கு. இன்னொரு பக்கம் ஐயப்பனைப் பற்றிய கேள்விகள்!

      Delete