எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, April 16, 2022

2 வருஷங்களுக்குப் பின்னர் பெருமாள் தரிசனம்!

 


இந்தப் படம் பழைய படம். கூகிளாரிடமிருந்து கடன் வாங்கியது. இன்றைய அலங்காரமும் கிட்டத்தட்ட இப்படித்தான் என்றாலும் இன்னும் எளிமையாக மாலைகள் குறைக்கப்பட்டுக் காணப்பட்டார். ஒரே இளைப்பு!!!!!!!!!!!!!!!!!!!!! ரொம்பவே துளியாகப் போய்விட்டது உடம்பு. அல்லது 2 வருஷத்திற்குப் பின்னர் பார்ப்பதாலா? தெரியலை. ஆனால் பெருமாள் இளைத்துத் துரும்பாய் இருப்பதாக எனக்குத் தோன்றியது எனில் நம்ம ரங்க்ஸுக்கும் அதே தோணி இருக்கு.

இந்த வருஷம் ஒரு மாதமாகவே கஜேந்திர மோக்ஷத்துக்கு அம்மா மண்டபம் மண்டகப்படி இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். அதே போல் போன வாரம் அது பற்றி உறுதியான தகவல் கிடைச்சது. கோயிலுக்குத் தான் நம்மால் போக முடியலை. நம்மைத் தேடி வரும் பெருமாளையாவது பார்க்கலாம்னு ஆவலுடன் காத்திருந்தோம். நேற்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள் என்றாலும் இன்று காலை எழுந்தவுடன் அழகரைப் பார்க்கணும்னு நினைச்சது கூடப் பார்க்க முடியவில்லை. பெருமாளை எப்படிக் கீழே போய்ப் பார்ப்பது எனத் தோன்றியது. நம்ம ரங்க்ஸ் இலை வாங்கறதுக்காக நம்ம நண்பர் கோயிலுக்குச் சென்றார். அங்கே கோயில் வாசலில் எல்லாமும் கிடைக்கும். அப்போப் பெருமாள் இங்கே புலிமண்டபத்தில் மண்டகப்படி முடிந்து அடுத்ததுக்குப் போய்க் கொண்டிருந்திருக்கிறார். நல்ல திவ்ய தரிசனமாகக் கிடைச்சிருக்கு. காலை வேளை ஆகையால் அதிகம் வெயில் இல்லை. ஆகவே பெருமாள் திறந்த பல்லக்கிலேயே வந்திருக்கார்.

அதுக்கப்புறமா உள்ள பல மண்டகப்படிகளை முடித்துக் கொண்டு இங்கே வர ஒன்பதரையாவது ஆகும்னு எதிர்பார்த்தோம். நம்மவர் வெளியே இருந்து வந்ததுமே சொல்லிட்டார். நான் பெருமாளை ஆசை தீர நன்றாய்ப் பார்த்துட்டேன். கீழே நீயே போய்ப் பார்த்துக்கோ என அறிவிப்பு வந்து விட்டது. செக்யூரிடியைத் தொலைபேசியில் கேட்டதற்கு இன்னமும் புலிமண்டபத்திலேயே இருப்பதாகச் சொல்லக் கொஞ்சம் யோசித்த நான் தினம் தினம் பெருமாளுடனேயே பொழுதைக் கழிக்கும் எதிர்வீட்டு மாமியைக் கேட்டேன். அந்த மாமி புலி மண்டபத்தைத் தாண்டி இன்னும் நாலைந்து உபயங்களையும் முடித்துக் கொண்டு இன்னும் அரை மணி நேரத்தில் நம்ம பக்கத்து மண்டகப்படிக்கு வந்துடுவார்னு சொன்னாங்க. உடனேயே ரங்க்ஸ் கிட்டேக் கூடச் சொல்லாமல் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த பெண்ணிடம் சொல்லிட்டு/அவரிடம் தெரிவிக்கச் சொல்லிட்டுக் கீழே இறங்கினேன். ஹிஹிஹி லிஃப்டில் தான். ஆனால் கீழே 3,4 படிகள் உள்ளன. அதை எப்படிக் கடப்பது என்னும் பெரிய  கேள்வி ? இந்த வடிவிலேயே கண் முன்னால் நின்றது. லிஃப்டைவிட்டு வெளியே வந்ததும் அக்கம்பகம் யாருமே இல்லை. ஆகவே முதல் முதல் நடைபழகும் குழந்தையைப் போல் சுவற்றைப் பிடித்துக் கொண்டு மெல்ல மெல்லக்கீழே இறங்கிவிட்டேன். ஹையா! ஜாலி!

மெதுவாக செக்யூரிடி இருக்கும் இடத்துக்குப் போனால் எனக்கு முன்னால் நாலைந்து பேர்கள். துணிகளை இஸ்திரி போடும் பெண்மணி வெளியே இருந்து வர அவரைக் கேட்டதில் பத்து நிமிஷத்துக்குள்ளாகப் பெருமாள் வந்துடுவார் எனத் தெரிந்தது. சற்று நேரத்தில் அந்தப் பெண்ணும் வாசலுக்குப் போங்க, பெருமாள் வந்து கொண்டிருக்கார் என்று சொல்ல நாங்களும் போனோம். நான் நிற்க முடியாதே என்பதால் உள்ளே மண்டகப்படி மண்டபத்தினுள் போக அங்கே இருந்த ஒரு பெண்மணி என்ன நினைத்தாளோ என்னை உட்காரச் சொல்லிட்டுத் தான் நின்று கொண்டார். அதன் பின்னர் அடுத்தடுத்து எங்க குடியிருப்பு வளாகப் பெண்கள் சிலர் வந்தன. சற்று நேரத்தில் சங்கு ஊதிக்கொண்டு, குடைகள் பிடித்துக் கொண்டு நகராவைச் சத்தப்படுத்திக்கொண்டு கோயில் பரிசனங்கள் வரக் கொஞ்ச நேரத்தில் பெருமாள் தெரியலானார். பல்லக்கு என்னமோ திறந்த பல்லக்குத் தான். ஆனால் அப்போவே வெயில் அதிகம் ஆனதால் திரை போட்டு மூடிக் கொண்டு வந்தார்கள். மேலே குடை. இருபக்கங்களிலும் விசிறியால் விசிறிக் கொண்டு இருந்தார்கள்.

மேலே போட்டிருக்கும் படத்தில் உள்ளது போல் ஆபரணங்கள். பாண்டியன் கொண்டை. எளிமையான பட்டில் உடை! அதிகம்மாலைகள் கூட இல்லை. பெருமாளைப் பார்த்தால் ரொம்பக் குட்டியாய்ப் போய்விட்டாற்போல் இருந்தது. கண்களில் தண்ணீர் கொட்டப் பெருமாளை வைத்த கண் வாங்காமல் பார்த்தேன். ஒண்ணும் வேண்டிக்கத் தோணலை. கண் நிறைய, மனம் நிறையப் பெருமாளை என்னுள் வாங்கிக் கொண்டு அவர் உருவை மனதில் நிறுத்த முயன்றேன். இம்முறை செல்/காமிரா எடுத்துச் செல்லவில்லை. ஏனெனில் ஃபோட்டோ எடுப்பதில் கவனம் போனால் பெருமாளை நன்கு பார்க்க முடியாது. ஆகவே என் முழுக்கவனமும் பெருமாள் மேல் தான். மனம் விம்மியது. பார்க்கமுடியலையேனு நினைத்து வருந்திக் கொண்டிருந்த என் போன்றோருக்காகத் தேடிக் கொண்டு வந்து தன் தரிசனத்தைக் கொடுத்திருக்கார் நம்பெருமாள். சற்று நேரத்தில் மண்டகப்படி மரியாதைகள் முடிந்து பதில் மரியாதை நடந்து மெல்லப் பெருமாள் கிளம்பினார். இந்த வருஷம் ஆடி மாசமும் வருவேன்னு சொல்லி இருக்கார். பார்ப்போம். அங்கே பெருமாள் பிரசாதங்கள் கொடுத்துக் கொண்டிருக்கக் கூட்டமாக இருப்பதால் நான் வந்துட்டேன். ஆனால் எங்க வளாகக் காரியதரிசி அவர் வாங்கிய பிரசாதத்தை எல்லோருடனும் பங்கிட்டுக் கொண்டிருந்தார். அங்கே போய் நானும் கொஞ்சம் போல் பிரசாதத்தை எடுத்துக் கொண்டு மேலே வந்தேன். பாலில் ஊறிய பாசிப்பருப்புப் பிரசாதம். ரங்க்ஸுக்கும் கொடுத்துட்டு நானும் எடுத்துக் கொண்டேன். ஏதோ சாதனை செய்த நிறைவு மனதில்.

26 comments:

  1. பெருமாளை தாங்கள் தரிசித்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  2. அக்கா அழகான தரிசனம் உங்கள் மனதிற்கு உகந்தபடி!!

    பெருமாள் மெலிந்திருக்காரா! ஆ அப்ப இரு வருடங்களாய்த் தன் பக்த கோடிகள் கீதாக்கா மாமா உட்பட பார்க்காமல் மெலிந்துவிட்டாரோ!!

    இனி பாருங்க நன்றாக ஆகிவிடுவார்!

    எனக்கும் இறைவன் முன் எதுவும் வேண்டத் தோன்றாது. மனதை ஒருநிலைப்படுத்தி அப்படியே பார்த்துக் கொண்டிருப்பேன். அதன் பின் நம் நட்புகள் உறவுகள் எல்லாரையும் நினைத்து எல்லாரும் சந்தோஷமா இருக்கணும் என்று சொல்லிவிடுவேன் ஆனால் நேருக்கு நேர் பார்க்கும் போது மனம் ஒருநிலைப்பட்டுத்தான் இருக்கும்.

    உங்களுக்கு நல்ல தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி கீதாக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா! மனது ஒரு நிலைப்பட்டதோ என்னமோ! பெருமாளைத் தவிர்த்துச் சுற்றி இருந்த யாரும் கண்களிலோ/மனதிலோ படவே இல்லை. உண்மையிலேயே இரண்டரை வருஷங்கள் கழிச்சு நல்ல தரிசனம் தான்.

      Delete
  3. வீட்டிற்கு அருகிலேயே கிடைத்ததுஇன்னும் மகிழ்ச்சி. அதுவும் உங்களுக்கு நடக்க நிற்க சிரமமான நேரத்தில், எப்படியோ நீங்கள் படிகள் தாண்டி - தடைகள் தாண்டுவது போல! தாண்டி தரிசித்துவிட்டு வந்தது நல்ல விஷயம். அவரின் அருள்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தி/கீதா, அந்தப் படிகள் ஏறுவதும் இறங்குவதும் தான் பெரிய பிரச்னை! இனிமேல் தினமும் மாடிப்படியில் ஏறி இறங்கும் பயிற்சி எடுத்துக்கலாமோனு நினைக்கிறேன். :( ஒவ்வொரு படியும் ஆழத்திலே இருப்பது போல் தோன்றுகிறது. :(

      Delete
  4. ஆடி மாசமும் வரேன் என்று சொல்லியிருப்பது நடக்கட்டும்.

    இப்பொதே பயமுறுத்தல்கள் தொடங்கிவிட்டதே. ஜூன் ஜூலையில் மீண்டும் 4 வது வரப் போகிறது என்றும் இப்போது தில்லியில் கூடிக் கொண்டிருக்கிறது என்றும் இதோ எங்கள் ஊரில் அரசு சொல்லியிருக்கிறது நாங்கள் அடுத்த அலையை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கிறோம், எல்லோரும் மாஸ்க் அணியுங்கள் கையைச் சுத்தமா வைத்துக்கொள்ளுங்கள், சமூக இடைவெளி என்று....

    மீண்டும் முடக்கம் வரமால் இருக்க வேண்டும்.

    அட பாலில் ஊறிய பாசிப்பருப்பு பிரசாதம்!

    சாதனை என்பது ஒரு புறம் நல்ல தரிசனம் கிடைத்த மனத்திருப்தி சந்தோஷம் இல்லையா!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வரணும் ஆடி மாசமும் நல்லபடியாய். நோய், நொடி ஏதும் இல்லாமல் அவர் தான் அனைவரையும் காத்து அருள வேண்டும். நீங்க சொல்லி இருக்காப்போல் ஆங்காங்கே தொற்று நாலாவது அலை ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கின்றனர். :( எதுவும் இல்லாமல் இறை அருள் புரியணும்.

      Delete
  5. உடம்பு முடியாததைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், மாமாவின் உதவியைக் கூட எதிர்பாராமல் கீழே தைரியமாக இறங்கி பெருமாளை தரிசிக்கச் சென்று விட்டீர்கள்.  சிறு குழந்தையின் ஆர்வம், அல்லது அம்மாவை அல்லது தகப்பனைப் பார்க்கும் குழந்தையின் ஆர்வம்..   நல்லபடியாகவே பெருமாளும் உங்களுக்கு தரிசனம் தந்து விட்டார்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், மாமாதான் முதல்லேயே சொல்லிட்டாரே! நான் பார்த்துட்டேன் என்று. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதுவே எனக்குள் ரோஷத்தைக் கிளப்பி விட்டு விட்டது. யாரானும் உன்னால் முடியாது என என்னிடம் சொன்னால் முடிச்சுக் காட்டறேன் என்று ஆர்வமாகச் செய்து முடிப்பேன். அந்த வேகம் நேற்றும் மனதளவில். உடல் ஒத்துழைக்கவில்லைதான்.

      Delete
  6. நடக்க சிரமப்படும் இந்த வேளையில் இறைவனின் மீதான உங்கள் உள்ளக் கிடக்கையை அறிந்த இறைவன் உங்கள் நிலை அறிந்து உங்களின் வீட்டருகே வந்திட, அதைக் காணும்படிச் செய்ததும் மிகச்சிறப்பு. நீங்களும் அவரைக் காணும் பரவசத்தில் உங்கள் வலியைப் பொடுட்படுத்தாமல் சென்று நன்கு தரிசித்ததும் மகிழ்வான விஷயம். இறைவன் உங்கள் உடல் நலத்தை பார்த்துக் கொள்வார், சகோதரி. கவலை வேண்டாம். விரைவில் நலம் பெறுவீர்கள்.

    இப்படி நாம் உண்மையாக, பக்தியுடன் விழைவதை இறைவன் நடத்தி வைப்பார்!

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன், எங்க வீட்டு மொட்டை மாடிக்குப் போயே 2 வருஷங்கள் ஆகிவிட்டன. அதுக்கும் ஒரு நாள் போகணும். கவலை எல்லாம் இல்லை சகோதரரே! இறை அருள் என்றென்றும் கிடைத்து வருகிறதே!ஆகையால் கவலை ஏதும் இல்லை.

      Delete
  7. பெருமாளை நானே தரிசனம் செய்ததுபோல மகிழ்ந்தேன்.

    அவன் தரிசனம் கொடுக்கணும் என்று நினைத்துவிட்டால், உங்களுக்குக் கிடைப்பதற்குக் குறைவேது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லை. கிளம்பலையா பத்ரிக்கு? அவன் நினைத்ததால் மட்டுமே நேற்று தரிசனம் கிடைத்தது என்பது உண்மை தான்.

      Delete
    2. மே முதல் வாரத்தில் கிளம்புகிறோம். கயா செப்டம்பரில் செல்வதாக நினைத்திருந்தோம். மஹாளயம் என்பதால் யாத்திரை நடத்துபவர் ஆகஸ்ட் என்று தேதி மாற்றிவிட்டார். அப்போது சென்னையில் ஒரு திருமணம் இருப்பதால் இந்த வருடம் கயா செல்வது சந்தேகம்.

      Delete
    3. மறு வரவுக்கு நன்றி நெல்லை . நாங்க மஹாலயம் என்பது தெரிந்தே கயிலை யாத்திரைக்கு அந்தச் சமயம் சென்றோம். மானசரோவர் கரையில் மஹாலயத் தர்ப்பணம் செய்தார் மாமா. கயா மட்டுமில்லாமல் காசியும் பாருங்கள். விஸ்வநாதரைத் தரிசிக்கலைனாலும் அன்னபூரணி, விசாலாக்ஷி இன்னும் மற்ற இடங்கள் அரண்மனை எல்லாம் இருக்கு. கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள். காசிச் செம்பு வாங்கவும் காசியில் தான் அனுமன் காட்டில் செட்டியார் கடையில் வாங்கலாம். கயா போனால் "போத் கயா"வும் போயிட்டு வாங்க.

      Delete
  8. எப்படியோ பெருமாள் மனதில் இடம்பிடித்து விட்டீர்கள். அதிர்ஷ்டசாலி நீங்கள்! இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு செல்லப்பா சார்.

      Delete
  9. சிறப்பாக தரிசனம் கிடைத்தது அறிந்து மகிழ்ச்சி. நல்லதே நடக்கட்டும்.

    ReplyDelete
  10. தங்களது பதிவு கண்டு மனம் நெகிழ்ந்து விட்டது..

    எனக்கும் பல சமயங்களில் இப்படித் தான்..

    இந்த ரங்கராஜன் அந்த ராம ராஜன் நம்ம ராசகோவாலு ..

    என்ன செய்றது பார்த்து வெகு நாட்கள் ஆகின்றன..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை. மத்தவங்களை எல்லாம் பார்க்கக் கொடுத்து வைச்சிருக்கோ இல்லையோ, உள்ளூரிலேயே இருந்து கொண்டு இவரைப்பார்க்கலையேனு குறை. நேற்றுக் கொஞ்சம் மகிழ்ச்சி.

      Delete
  11. நல்லபடியாக தரிசனம் செய்து வந்து விட்டீர்கள்.
    இவ்வளவு நாள் கழித்து பார்பதால் மெலிந்த தோற்றமாக இருக்கிறார் போலும்.
    கண்களில் நீர் மல்க பார்த்து கொண்டு இருந்த காட்சி நெகிழ்வு.

    நானும் காலைடுப்பு வலியுடன் தங்கை வீட்டுக்கு போய் தேரில் மீனாட்சி, சொக்கரை தரிசன்ம் செய்து வந்தேன். கூட்டத்தில் இடிபடாமல் ஓரமாக ஒதுங்கி நின்று தரிசனம் செய்து வந்தேன். அழகரை டி.வியில்தான் பார்த்தே. கூட்டத்தைப் பார்க்க பயமாக இருந்தது.
    நிறகவும் முடியவில்லை, நடக்கவும் முடியவில்லை வலி அதிகமாக இருக்கிறது எனக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, மெலிந்த தோற்றமாக மட்டும் இல்லை/ஒரே சுருட்டில் சுருட்டி விட்டாற்போல் ஆகிவிட்டார்! :( என்னவோ! எனக்குத் தான் தோன்றியது எனில் அவருக்கும் அதே தோன்றி இருக்கு. அழகரைத் தொலைக்காட்சி நேரலையில் பார்க்க முடியலை. பின்னர் வந்த யூ ட்யூப்கள் மூலம் பார்த்துக் கொண்டேன். உங்கள் கால் வலியையும் கவனமாகப் பார்த்துக்கொண்டு தேவையான மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

      Delete
  12. சுவர் - சுவரை
    கிணறு - கிணற்றை

    கண்ணு வேர்த்ததுனால என்ன டைப்பறோம்ன்னே தெரியாமப் போச்சு போல..

    ReplyDelete
    Replies
    1. அதானே! உடனே கண்ணில் விளக்கெண்ணையை ஊத்திண்டு வந்துடுவீங்களே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete