இப்போதெல்லாம் பெண்களுக்கு எளிதில் விவாகம் நிச்சயம் ஆகிவிடுகிறது. ஆனால் நிச்சயம் ஆன விவாகங்கள் தொடர்ந்து அந்தக் குறிப்பிட்ட முகூர்த்தத் தேதி வரை நிலையாக இருக்கும் என்பதில் சந்தேகங்கள் இருக்கின்றன. ஏனெனில் திடீர் திடீர் எனப் பெண் வீட்டுக்காரர்களின் மனோபாவங்கள், மனோநிலைகள் மாறி விடுகின்றன. ஜாதகம் பார்த்துச் செய்யும் பல திருமணங்களிலேயும் பெண்ணுக்குக் கல்யாணம் ஆக வேண்டுமே என்ற கவலையில் பெண்ணின் ஜாதகத்தைப் பிள்ளை விட்டுக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர் மிகக் குறைவு. இப்போது இதை எல்லாம் கல்யாணத் தரகு வேலை செய்யும் இணையங்கள் செய்கின்றன. அங்கிருந்து ஜாதகத்தை ப்ரின்ட் அவுட் எடுத்துப்பிள்ளை வீட்டில் பொருத்தம் பார்த்துப் பெண் வீட்டிற்குத் தகவல் தெரிவித்தால் அவங்க சொல்வது, நாங்க பார்த்துட்டுச் சொல்றோம் என்பது தான்.
அப்படி உடனே சொல்லிடவும் மாட்டாங்க. நாமளும் பொறுத்துப் பார்த்து விட்டுத் தான் கூப்பிட்டுக் கேட்போம். அவங்களுக்கு வருமே கோபம்! அப்படி ஒண்ணும் உங்க பிள்ளைக்காக எங்க பொண்ணு காத்திட்டு இருக்கலை. அவளுக்கு நிறைய வரன் வருதுனு சொல்வாங்க. நாம் பொருத்தம் பார்த்தாச்சானு கேட்கலைனால் நீங்க ஏன் முன்னாடியே கேட்கலை! இப்போ நாங்க வேறே இடம் நிச்சயம் பண்ணிட்டோம்னு சொல்லிடுவாங்க. எல்லாவற்றையும் மீறிப் பெண் வீட்டார் சம்மதம் சொல்லிப் பெண்ணும், பிள்ளையும் பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டு முடிவு செய்த பின்னரும் பிள்ளைக்குச் சரியான வேலை இல்லை; சம்பளம் பத்தலை! எங்க பொண்ணை வைச்சுக் குடித்தனம் நடத்த இந்தச் சம்பளம் போதுமா என்கிறார்கள். எங்க பொண்ணே ஐம்பதாயிரம்/ஒரு லட்சம் சம்பாதிக்கிறா! அவளுக்குச் சமமாக உங்க பையரும் சம்பாதிச்சா எப்படிப் போதும்னு கேட்கிறாங்க. இத்தனைக்கும் வயசு வித்தியாசமும் அதிகம் இருக்கக் கூடாது. கிட்டத்தட்ட சம வயசில் இருக்கணும். அப்போ எப்படிப் பையர் பெண்ணை விட அதிகமா சம்பாதிக்க முடியும்? அதற்கான அனுபவமும், வயசும் வர வேண்டாமா? எடுத்த எடுப்பிலேயே இரண்டு லட்சம் சம்பளம் எல்லோருக்குமா கிடைக்கும்? இருக்கிற சம்பளத்துக்குள்ளே சிக்கனமாச் செலவு செய்தது எல்லாம் எந்தக்காலமோ ஆகி விட்டது! இப்போதெல்லாம் ஆடம்பரச் செலவுகள் தான் அதிகம். கல்யாணம் ஆகி இருக்கும்போதே பிள்ளைக்கு வீடு, கார் அல்லது நல்ல பைக் இருக்கணும். பெரியவங்களோட அனுசரிச்சுப் போறதும் ரொம்பக் குறைவே! ஒரு சில பெண்கள் இப்படி இல்லாமல் இருக்கலாம். ஆனால் பொதுவாகச் சரியாக இல்லைனு தான் சொல்லணும். கல்யாணம் ஆகிப் போகும்போதே பையருக்கு ஒரு லட்சத்துக்கு மேல் வருமானம் இருக்கணும்னா, அப்போத் தான் கட்டுபடி ஆகும்னா அப்போ அவங்க பொண்ணு செலவாளினு ஒத்துக்கறாங்களா? புரியலை! அதை ஜாதகம் பார்க்கிறச்சேயே கவனிச்சிருக்க மாட்டாங்களா? எல்லாம் பேசி முடிச்சுக் கிட்டத்தட்டக் கல்யாணம் நிச்சயம் பண்ணத் தேதி குறிப்பிடுகையில் சொல்வாங்க.
என்னதான் நினைச்சுட்டு இருக்காங்கனு தெரியலை! எங்களுக்குத் தெரிஞ்சவங்க மூலமா ஒரு பெண்ணோட ஜாதகம் வந்தது. தெரிஞ்ச பையருக்குப் பார்த்தோம். எல்லாம் சரியாக இருந்தது. பெண்ணுக்குப் பெற்றோர் இருவரும் இல்லை. சித்தப்பாதான் கவனிக்கணும். ஆனால் பெண்ணோடு கூடப் பிறந்த மற்ற இரு சகோதரிகளும் யார் மூலமாகவோ ஜாதகப் பொருத்தம் பார்த்துவிட்டு எங்களுக்குச் சம்மதம்னு பையர் வீட்டுக்குத் தொலைபேசிச் சொன்னாங்க. சரினு பெண்ணின் சித்தப்பாவைக் கூப்பிட்டுப் பேசினால் முதலில் அந்தப் பெண்ணுக்குப் பரிகாரம் பண்ணணும். அதுக்கப்புறமாப் பார்க்கிறோம். என்று சொன்னார். சொல்லி நாலு வருடங்கள் ஆகியும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இப்போ சமீபத்தில் அந்தப் பெண்ணின் இன்னொரு தங்கை மீண்டும் பையரின் வீட்டைத் தொலைபேசி மூலம் அணுகினால் மீண்டும் சித்தப்பா! ஜாதகம் பார்க்கவே இல்லை! பார்த்துட்டுச் சொல்றேன்னு சொல்லி ஒரு வருஷம் போல் ஆகிறது. கூப்பிடவே இல்லை! இத்தனைக்கும் பொதுத்துறை வங்கியில் அதிகாரியாக இருந்து பணி ஓய்வு பெற்றவர்!
பெண் வீட்டுக்காரங்க எல்லாம் பிள்ளை பார்க்கையில் எடுத்த எடுப்பில் அந்தப் பையர்கள் ஒரு லட்சத்துக்குக் குறையாமல் சம்பாதிக்கணும் என்று எதிர்பார்க்கிறாங்க. எல்லோருமே இஞ்சினியர் பிள்ளையாகப் பார்த்தால் மற்றத் துறைகளில் வேலை செய்யும் பையர்களைக் கல்யாணம் பண்ணிக்கப் பெண்களே முன் வரமாட்டாங்க போல! சம்பளம் பத்தலை, வேலை செய்யும் இடம் திருப்தி இல்லை! பையர் பார்க்கும் வேலையிலே எங்களுக்குத் திருப்தி இல்லைனு ஆயிரம் நொட்டுச் சொல்றாங்க! இத்தனைக்கும் பெண்களுக்கு 27 க்கு மேல் வயசு ஆகி இருக்கும். அப்படியும் பெண்ணின் தரப்பில் எங்களுக்கு அவசரமில்லை என்றே பதில் வருகிறது! ஒரு பக்கம் மருத்துவர்கள் எல்லாம் 30 வயசுக்குக் குழந்தை பெத்துக்கறது ஆரோக்கியமானது இல்லைனு சொல்றாங்க. இன்னொரு பக்கம் பெற்றோர் முப்பது வயதுக்குக் குறைந்து பெண்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறதில்லைனு நிச்சயமா இருக்காங்க.
என்னதான் நினைக்கறாங்க இந்தப் பெண்களைப் பெற்றவர்கள்னு புரியவே இல்லை. அதையும் மீறிக் கல்யாணம் ஆகிவிட்டாலோ ஒரே வருஷத்திலே விவாகரத்து! :( எதுக்குனே தெரியறதில்லை. பார்க்கவும், பழகவும் இரண்டு பேரும் எளிமையாத் தான் இருப்பாங்க. ஆனால் எங்கேயோ எதிலேயோ மன வேறுபாடு வந்து ஒரே வருஷத்தில் விவாகரத்து ஆகி விடுகிறது! அப்போக் கல்யாணத்துக்குச் செலவு செய்த பணம்? அதை எல்லாம் யாரும் நினைச்சுப் பார்ப்பாங்களா தெரியலை! பல நடுத்தரக் குடும்பங்களிலே கல்யாணக் கடனே முடிஞ்சிருக்காது. அதுக்குள்ளே விவாகரத்தும் ஆகி விட்டிருக்கும். அதிலேயும் இப்போல்லாம் கல்யாணங்களுக்கு ஆகிற செலவு பத்திக் கேள்விப் பட்டால் தலையைச் சுத்துது! எங்களால் எல்லாம் இப்படி ஆடம்பரக் கல்யாணம் நிச்சயமாப் பண்ணி இருக்க முடியாது. நல்லவேளையாகப் பெண்ணுக்கும், பையருக்கும் இந்த மாதிரி ஆடம்பரங்கள் எல்லாம் வரும் முன்னரே கல்யாணத்தைப் பண்ணி வைச்சுட்டோமோ, பிழைச்சோம்!
தெரிஞ்சவங்க ஒருத்தர் வீட்டில் பெண் கல்யாணத்துக்குச் சத்திர வாடகையே ஒரு நாளைக்கு இரண்டு லட்சம்னு சொன்னாங்க. அதைத் தவிரச் சாப்பாடு இப்போது உயர்தர சமையல் கான்ட்ராக்டராக இருக்கும் ஏ.எஸ்.ராஜசேகரனைக் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தால் ஒரு சாப்பாட்டின் விலை குறைந்த பட்சமாக 750 ரூபாய் ஆகிறது. காலை டிஃபனுக்கு இரண்டு (சின்னதாய்த் தான் இருக்கும்.) இட்லி (ஸ்டிக்கர் பொட்டு சைஸில்) ஒரு சின்ன வடை, ஒரு சின்ன ஊத்தப்பம், ஒரு சின்னக்கரண்டி பொங்கல், ஏதேனும் (அநேகமாய் அசோகா போடுவாங்க) ஒரு ஸ்வீட்+ அரைக் கப் காஃபி (அந்தக் காஃபிக் கப்பே ரொம்பச் சின்னது! அதிலும் அரைக்கப் தான் கொடுப்பாங்க) இவற்றுக்கு 450 ரூபாய் ஆகிறது. ஒருத்தருக்குக் குறைந்தது 1,200 ரூபாய்! இதிலே எல்லோரும் போட்டதைச் சாப்பிடுறாங்களானு பார்த்தால் இல்லை! இலையில் வைச்சது வைச்சபடியே இருக்கும்! நிறைய உணவு வீணாகும். இப்படியே மூணு நாள் கல்யாணம்னா ஒவ்வொரு வேளைக்கும் கணக்குப் போட்டுப் பாருங்க! தலை சுத்தல்! இவற்றைக் குறைக்கலாம்னு நாம் ஆலோசனைகள் சொன்னால் கிட்டத்தட்ட நம்மை அடிக்காத குறைதான்!
பெண் வீட்டுக் கல்யாணங்களில் இப்படிச் செலவுன்னா பிள்ளை வீடுகளிலும் ஒண்ணும் குறைச்சல் இல்லை! எல்லோருக்கும் கொடுக்கப் புடைவை, வேஷ்டி, டீ ஷர்ட்(இப்போல்லாம் இதான் கொடுக்கிறாங்க) அல்லது நல்ல ப்ரான்டட் கம்பெனி ஷர்ட் வாங்கறாங்க! இதுவே பட்ஜெட் மூணு லட்சத்துக்குப் போயிடும். அப்புறமாப் பெண்ணுக்குச் செய்ய வேண்டிய முறைகள், பெண் வீட்டாருக்குப் பதில் மரியாதைக்குச் செய்ய வேண்டிய முறைகள், கல்யாணத்திற்கு வரும் உறவுக்கும் நட்புக்கும் கொடுக்க வேண்டிய பரிசுப் பொருட்கள், பிள்ளையும், பெண்ணும் ஹனிமூன் போகச் செய்ய வேண்டிய ஏற்பாடுகள்னு ஒரு பெரிய லிஸ்டே இருக்கு. ஏதேனும் விட்டிருந்தால் நினைவு படுத்துங்க!
இனி போகப் போக என்ன ஆகுமோ? ஆனால் இதுவே மீண்டும் முப்பது வருடங்களில் சுற்றிக் கொண்டு வந்து நிலைமை தலைகீழாக மாறும் என்று எதிர்பார்க்கிறேன். ஏனெனில் பெண்கள் பிறப்பு அதிகமாக இருப்பதாகச் சொல்கின்றனர். இப்போப் பெண்களே கிடைப்பதில்லை என்னும் நிலை! இது மாறிப் பெண்கள் அதிகமாயும் ஆண்கள் குறைவாயும் பிறப்பதால் காலம் மாறும் என்கின்றனர். இரண்டுமே சரியில்லை! பெண்ணோ, ஆணோ ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்துச் சென்றால் பிரச்னை இல்லை!