எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, March 24, 2007

உண்ணாவிரதம் அறிவிப்பு, முதலமைச்சர் தலைமறைவு?

யப்பா, எல்லாருக்கும் எவ்வளவு சந்தோஷம்? நான் வியர்டுன்னு ஒத்துக்கிட்டதிலே. என்ன ஒரு நல்ல மனசு எல்லாருக்கும்!!!!! :)))))))))) வாழ்க! வளர்க! எல்லாருடைய கிறுக்குத் தனங்களும். ஆனால் நான் எடுத்துட்ட அர்த்தம் அந்த adjective form-லே வருமே அந்த அர்த்தம் தான். அதாவது skilled in witchcraft-னு வச்சுக்கலாமா? அல்லது தமிழிலே சொல்லணும்னா உலக இயல்பை மீறியன்னு வச்சுக்கலாமா? (அம்பி, நான் ஒரு வியர்டுன்னு ரொம்பவே சந்தோஷப் பட வேண்டாம். உங்களுக்கு இங்கிலீஷே வராது.)
அதான் என்னை நானே ஒரு ESP-ன்னும் சொல்லிக்கிட்டேன். இந்த ச்யாம் அதை நம்பவே மாட்டேங்கறார். அவருக்காக ஒரு பதிவு தான் இது. அப்புறம் அவரோட அருமைத் தங்கச்சி, பாசமலர், வைரமூக்குத்தி புகழ் "வேதா(ள்), அவர்கள் நான் அவங்க கொடுத்த டாகைப் போடலைன்னு வேறே சொல்லி இருக்காங்க. நறநறநறநற..,.,.,. இதோ அந்த டாகோட லிங்க்: sivamgss.blogspot.com/2006/09/128-5.html இதான் அந்த லிங்க். அவங்க என்னை எழுதச் சொன்னது ஆகஸ்டிலே. நான் அப்போ ஊரில் இல்லாததால் அப்புறமா செப்டம்பரில் எழுதினேன். ஹிஹிஹி, உள்ளூறக் கொஞ்சம் திக் திக் திக் தான். தேடிக் கண்டுபிடிச்சதும்தான் தைரியமா ஒரு வாங்கு வாங்கலாம்னு. அதனாலே அவங்களும் இன்னிக்கு இந்த நிகழ்ச்சியிலே பங்கெடுத்துப்பாங்க. இது தலை(வலி)வியின் ஆனை, ச்சீச்சீ, ஆணை!!! **********************************************************************************
தலைவிக்கு ஐந்தாம் இடமா??

தொண்டர்கள் குமுறல். போராட்டம். உண்ணாவிரதம் அறிவிப்பு. மகளிர் தினத்தன்று எதிர்பாராத விதமாய் "இட்லிவடை" என்பவர் (சாம்பாருடன் சேர்த்துச் சாப்பிடாமல், சீச்சீ, அதே நினைப்பா வருது.) ஒரு வாக்கெடுப்பு நடத்தினார். இது பற்றிய தகவல்கள் தலைமைக் கழகத்துக்கு முறையாக அறிவிக்கப் படவில்லை. தலைவியின் பெயர் அங்கே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட்டிருந்ததையும் தெரிவிக்கவில்லை. தெரிவித்திருந்தால் எம் கழகத் தொண்டர்கள் தங்கள் வலிமையான பிரச்சாரத்தாலும், பலமான கள்ள ஓட்டுக்களாலும் தலைவியை முதல் இடத்துக்கும் மேல் ஏதாவது இருந்தால் அதிலே வெற்றி பெற வைத்திருப்பார்கள்.

ஆகவே அந்தத் தேர்தலை ஏற்காமல் கழகத்தின் தலைவர் திரு கார்த்திக்கின் ஆணைப்படி முதலமைச்சர் திரு ச்யாமும், துணை முதலை அமைச்சர் செல்வி வேதா(ள்)வும், உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார்கள். இருவருக்கும் தினமும் தண்ணீர் (ச்யாம்,நீங்க நினைக்கிற தண்ணீர் இல்லை) மட்டும் கொடுக்கப் படும். விழாப் பந்தல் செலவையும், போராளிகளைப் பார்க்க வருபவர்களுக்கு இனிப்பு, பிரியாணி வழங்கும் செலவையும் நிதி அமைச்சர் திரு பரணி தலைமையில், மணிப்ரகாஷ், கோபிநாத், ஜி-Z, போன்றவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

தகவல் தொடர்புத் துறை அமைச்சரான அம்பியும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கப் போவதாக வதந்திகள் உலவுகின்றன. தலைவியின் களப்பணியைப் பாராட்டி தலைவிக்குப் பொற்கிழி பரிசளிக்கப் படும். அப்போது உண்ணாவிரதம் இருக்கப் போகும் நபர்களைப் போனால் போகிறது என்று தலைவி வாழ்த்துவார். "இட்லிவடை" இனிமேல் தேர்தல் குறித்து அறிவிப்புச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுவார்.

முதலமைச்சரான ச்யாம் எங்கே இருந்தாலும் தொண்டர்கள் அவரைக் குண்டுக்கட்டாய்த் தூக்கிக் கொண்டு வந்து உண்ணாவிரதப் பந்தலில் அமர்த்தும்படிக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். அவ்வளவு தான் (அவர் எங்கே? அதெல்லாம் ஒண்ணும் நடக்காது) ஹிஹிஹி, அது என்னோட மனசாட்சி. கண்டுக்கவேண்டாம். ) இன்னிக்கு யாருமே இருக்க மாட்டாங்க. அதான் தைரியமாப் போஸ்ட் போடறேன். இன்னும் 2 நாள் வரதும் கஷ்டம். வந்து வாழ்த்திட்டுப் போங்க எல்லாரும்.

35 comments:

  1. மேடம்,

    இந்த பதிவை மொக்கபதிவுன்னு வகைப்படுத்தாத உங்களின் எதோச்சதிகார போக்கை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :)

    ReplyDelete
  2. உண்ணாவிரதமா.. முதல்வர் தலைமறைவா.. தோ.. படிச்சிட்டு வர்றேங்க மேடம்

    ReplyDelete
  3. \\விழாப் பந்தல் செலவையும், போராளிகளைப் பார்க்க வருபவர்களுக்கு இனிப்பு, பிரியாணி வழங்கும் செலவையும் நிதி அமைச்சர் திரு பரணி தலைமையில், மணிப்ரகாஷ், கோபிநாத், ஜி-Z, போன்றவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.\\\

    இந்த மாசம் யார் முகத்துல முழிச்சன்னே தெரியல
    வர வருமானம் எல்லாம் கட்சி பணிக்கே சரியா இருக்கு ;-(

    தல.... இந்தாங்க 20,000$.....உண்ணாவிரதத்திற்கு வச்சிக்கங்க (தலைவி கவனமாக கணக்கு கேளுங்க)

    ReplyDelete
  4. \\ முதலமைச்சரான ச்யாம் எங்கே இருந்தாலும் தொண்டர்கள் அவரைக் குண்டுக்கட்டாய்த் தூக்கிக் கொண்டு வந்து உண்ணாவிரதப் பந்தலில் அமர்த்தும்படிக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.\\

    இன்னும் தலைவர் கார்த்திக் பதிவில் இருக்கும் நயன் படத்தை பார்த்துக் கொண்டுருப்பதாக....நம்ம தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

    ReplyDelete
  5. \\இன்னும் 2 நாள் வரதும் கஷ்டம். வந்து வாழ்த்திட்டுப் போங்க எல்லாரும்.\\

    எப்பா சீக்கிரம் வாழ்த்துங்கப்பா.....இல்லைன்னா அதுக்கும் உண்ணாவிரதம் இருக்கணும் ;-)))

    வாழ்க தலைவி!!!
    வாழ்க அவர்களாது புகழ்!!!

    ReplyDelete
  6. என்ன கூத்து நடக்குது இங்கே! கொஞ்சம் இருங்க,கொத்ஸ் சிங்கம் லைன்ல தான் உலவுது! கூட்டிகிட்டு வாரேன்:-))

    ReplyDelete
  7. //இன்னும் தலைவர் கார்த்திக் பதிவில் இருக்கும் நயன் படத்தை பார்த்துக் கொண்டுருப்பதாக....நம்ம தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.
    //

    கோபிநாத், என்னப்பா போற போக்குல லைடா பத்த வச்சுட்டுப்போற..

    நாட்டாமை, நயன் உங்களுக்குத் தான்.. பயப்படாதீங்க

    ReplyDelete
  8. //கொத்ஸ் சிங்கம் லைன்ல தான் உலவுது! கூட்டிகிட்டு வாரேன்:-)) //

    தொல்ஸ், சிங்கம் னா ஆங்கிலத்தில் லைன் தான் என்பது கீதா வுக்கு தெரியும்... ஏன் இப்படி அவங்களின் திறமையை குறைச்சு மதிப்பிடுறீங்க தான் எனக்கு புரியல....

    ReplyDelete
  9. உண்ணாவிரதமா??????/

    ஏதும் உண்ணும் விரதம் இருந்தா சொல்லி அனுப்புங்க, நான் வந்து தலைமை தாங்குறேன்....

    ReplyDelete
  10. //ஆகவே அந்தத் தேர்தலை ஏற்காமல் கழகத்தின் தலைவர் திரு கார்த்திக்கின் ஆணைப்படி முதலமைச்சர் திரு ச்யாமும், துணை முதலை அமைச்சர் செல்வி வேதா(ள்)வும், உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார்கள். //

    தேர்தல் நடந்தது நமகெல்லாம் தெரியாது மேடம்.. அப்போ நாங்கள் நம்ம பக்க தேர்தல்ல பிசியா இருந்தோம்.. தெரிஞ்சிருந்தா 100 லாரில ஆள் ஏத்திட்டு போய், உங்களுக்கு ஓட்டை போட்டிருக்க மாட்டோம்..

    ReplyDelete
  11. இதனால், இட்லிவடையாருக்கு சொல்வது என்ன வென்றால், இப்படி எல்லாம் பிரச்சாரத்துக்கு நேரம் தராமல், தேர்தல் நடத்தியது செல்லாது..செல்லாது.. மறுபடியும் நடத்துங்க..

    ReplyDelete
  12. ஐந்தாவது இடம் கிடைத்ததே என்று பெருமை படுங்க, எத்தனை பெண் பதிவாளர்கள் இருக்காங்க தெரியும் இங்க, ஏதோ உங்களையும் ஞாபகம் வச்சி ஒட்டு போட்டு உங்களை ஐந்தாவது இடத்துக்கு வர வைத்தங்கள மட்டும் எனக்கு யாரு தெரியட்டும், அப்பால இருக்கு கச்சேரி.....


    :-)))))))))))))))))0

    ReplyDelete
  13. //தல.... இந்தாங்க 20,000$.....உண்ணாவிரதத்திற்கு வச்சிக்கங்க //


    தலைவி மேல நீ வச்சிருக்க பாசத்தை என்னன்னு சொல்றது கோபிநாத்.. இப்பவே உண்ணாவிரத போராட்டத்திற்கு நானூறு கோழிகள், 100 காடைகள், 1000 காலிபிளவர்கள், 100 பிசா எல்லாம் தயார் பண்ண சொல்றேன்..

    ReplyDelete
  14. நாட்டாமை, அப்படியே பந்தலுக்கு பின்னாடி வாங்க. பகார்டியோட, விருந்து ரெடி.. உண்ணாவிரதம் சூப்பரா வெற்றியடையும்.. இப்படித் தானே இன்றைய உண்ணாவிரதமெல்லாம் நடக்குது..

    ReplyDelete
  15. இந்த ஐயிட்டம் எல்லாம் இல்லையினா, மன்னன் படத்துல வர்ற கவுண்டமணி மாதிரி பக்கத்து ஹோட்டல் வாசம் பிடிச்சே நாட்டாமை புலம்பித் தள்ளிடுவார்..

    ReplyDelete
  16. //தகவல் தொடர்புத் துறை அமைச்சரான அம்பியும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கப் போவதாக வதந்திகள் உலவுகின்றன.//

    அய்! ஆசை தோசை, அப்பளம் வடை!

    அதேல்லாம் ஒன்னும் இல்லை. இதை பற்றிய செய்திகள் எதுவும் டிவி, ரேடியோனு எதுலயும் வர கூடாது!னு என் துறை அதிகாரிகளுக்கு சொல்லியாச்சு! :)

    //இந்த பதிவை மொக்கபதிவுன்னு வகைப்படுத்தாத உங்களின் எதோச்சதிகார போக்கை நான் வன்மையாக கண்டிக்கிறேன்//
    சபாஷ், ராம்! நான் சொல்ல வந்தேன்!
    ஆனா உங்களுக்கு தெரியாதா? இவங்க எது போட்டாலும் கூகிள், மொக்கை!னு தான் வகைபடுத்துதாம்! :p

    ReplyDelete
  17. //இந்த பதிவை மொக்கபதிவுன்னு வகைப்படுத்தாத உங்களின் எதோச்சதிகார போக்கை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :) //

    ரிப்பீட்டே.......

    ReplyDelete
  18. //ரிப்பீட்டே.......
    //

    @geetha madam, ha haaa :)
    now maduraimpathi also in our side. :p

    ReplyDelete
  19. ராம், என்ன மண்ணின் மைந்தர் நீங்க? மதுரைக்காரரா இருந்துட்டு, அரசியல் போக்கும், நிலவரமுமே தெரியலை? ம்ம்ம்ம்ம்ம்ம், தலைவின்னா எதேச்சாதிகாரப் போக்கு இருக்கணும்ங்க!

    @கார்த்திக், என்ன நயன் படமெல்லாம் போட்டு உண்ணாவிரதத்தைத் திசை திருப்பப் பார்க்கறீங்க?

    போர்க்கொடி, அதெல்லாம் யாருமே வர மாட்டாங்க!

    ReplyDelete
  20. ஹிஹிஹி, கோபிநாத், உண்மைத் தொண்டர்னா நீங்க தான். முன்னே ஒரு 10,000/-$, இப்போ ஒரு 20,000$ கொடுத்திருக்கீங்களே? என்ன ஒரு வள்ளல் நீங்க? கடை எழு வள்ளல்களுக்கு அப்புறம் நீங்க தான் போங்க!

    அது சரி, எங்கே நிதி அமைச்சரும் தலை மறைவா? ஜி-Z-ம் தலைமறைவா? நறநறநறநற

    ReplyDelete
  21. அபி அப்பா, இது உங்களுக்குக் கூத்தா? சரியாப் போச்சு போங்க, உங்க கொத்ஸ் சிங்கம் நம்ம பக்கம்தான், அது தெரியாது? சிங்கம் இங்கே வந்தால் என் பக்கம் தான் நின்று கர்ஜிக்கும். :P

    ReplyDelete
  22. @கார்த்திக், என்னது இது? சைடிலே நயன் வேறேயா? அசின் என்ன ஆனாள்? அடிக்கடி கட்சி மாறாதீங்க! :P

    @சிவா, நறநறநற, எல்லாம் வெட்டி கோச்சிங்க் செண்டர் கொடுத்த ஆதரவிலே பேசறீங்க போல் இருக்கு. க்ர்ர்ர்ர்ர்ர்ர், என் திறமையைக் குறைத்து மதிப்பிடறீங்களா? (ஹிஹிஹி, ஏதோ பேரைச் சேத்துக்கிட்டாங்களேன்னு உள்ளூர சந்தோஷம் தான். இருந்தாலும் தலைவின்னா ஒரு பில்ட்-அப் வேணாமா?)

    ReplyDelete
  23. ம்ம்ம்ம், கார்த்திக், என்ன செய்யறது? அப்போப் பார்த்து எல்லாரும் மும்முரமா ஆணி பிடுங்கிட்டு இருந்தீங்க! எல்லாம் என் HEAD LETTER

    ReplyDelete
  24. அது சரி, எங்கே உங்க நாட்டாமை? ஆள் விலாசமே இல்லை? உண்ணாவிரதம்னதும் ஓடிட்டாரா?
    யாரது அங்கே மந்திரி?
    ஓடிப்போய் "நாட்டாஆஆஆஅமையை"ப் பிடிச்சுட்டு வாங்க! உண்ணாவிரதப் பந்தலில் உட்கார வைக்கணும். :P

    ReplyDelete
  25. அம்பி, எல்லாத் தகவலும் சரியான நேரத்துக்குப் போய்ச் சேர்ந்தாச்சு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்., உங்களுக்கு மந்திரி பதவி கொடுத்ததே பெரிசு! அதனாலே பேசாமல் வேடிக்கை பாருங்க! :P

    ReplyDelete
  26. ராம், ஒண்ணும் அம்பி மாதிரி எல்லாம் இல்லை. மண்ணின் மைந்தர்! எனக்குத் தான் ஆதரவு தருவார்.

    @மதுரையம்பதி! நறநறநறநறநற, இப்போத் தான் ஒரு மண்ணின் மைந்தரைப் பாராட்டிட்டு வரேன். ஊர்ப்பேரை வச்சுட்டே நீங்க இப்படிச் செய்யலாமா? You too Brutus?

    ReplyDelete
  27. வேதா(ள்), துணை முதலை அமைச்சரே! உண்ணாவிரதம் அறிவிச்சது நீங்க. அதை வழி மொழிந்தது மட்டும் நான். போய் உங்க அருமை அண்ணன் பாசமலர், நாட்டாமை (நறநறநற)யைக் கூட்டிட்டு வந்து, "அண்ணன் காட்டிய வழி"யில் உண்ணாவிரதப் பந்தலில் உட்காருங்க இரண்டு பேரும் :P

    ReplyDelete
  28. @ஆப்பு அம்பி, அதெல்லாம் அவர் உங்க சைடே இல்லை. எனக்குத் தனி மெயிலில் ஆதரவு தெரிவிச்சிருக்கார். :P :P

    ReplyDelete
  29. கோபிதம்பி! ஒரு நல்ல விஷயத்துக்குன்னு துபாய்ல நீ துண்ட விரிச்சது இதுக்குதானா! 25000 டாலர் சேந்துச்சா :-)))

    ReplyDelete
  30. //ஏதும் உண்ணும் விரதம் இருந்தா சொல்லி அனுப்புங்க, நான் வந்து தலைமை தாங்குறேன்....//

    புலி உண்ணா விரதம்னா இன்னா தெர்மா? பூவா துன்ன கூடாது:-))

    ReplyDelete
  31. அட, அபி அப்பா, துபாய்க் கிளை தொண்டர்களும் நிதி உதவி அளித்திருக்கீங்களா? வாழ்க! வளர்க!

    அப்புறம் புலிக்குத் தெரியாதா என்ன புல்லைத் தின்னக் கூடாதுன்னு, சும்மா பாவ்லா காட்டிட்டு உள்ளே போய்ப் பதுங்கிடும். :P

    ReplyDelete
  32. (Mokkai) Thalaivi vazhga!sara vediya Mokkai posts!!aanalum sirikkara madhiridhan mokkai podreenga.

    Mudhalvar Unnaviradhama?LOL!
    yarai yavadhu vittu vaichurukeengala? Adhudhan Maami special.:D

    ReplyDelete
  33. adada idhellam eppa nadathathu....onnume puriyalaye......idhula naan biriyaani vera sponser pannanuma.....

    ReplyDelete
  34. க்ர்ர்ர்ர்ர்ர், வாங்க எஸ்.கே.எம். உங்களை இன்னும் விட்டு வச்சிருக்கேன் தெரியுமில்லை? இருங்க, அந்தக் குறையையும் தீர்த்துக்கலாம். :)))))))

    @நிதி அமைச்சர் பரணி, என்ன? உண்ணாவிரத ஏற்பாடு எல்லாம் தயாராயிடுச்சா? எங்கே உங்க நாட்டாஆஆஆஆஆஆஆஅமை? [போய்ப் பதுங்கிட்டாரோ] பிடிச்சு, இழுத்துட்டு வாங்க, சீக்கிரமாய், உண்ணாவிரதம் இருக்கிறதுக்கு. :D

    ReplyDelete