எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, April 11, 2007

தமிழா இது?

என்னத்த செய்யறது? இங்கே ஒண்ணு வந்தால் இன்னொண்ணு வரதில்லை. இந்த லட்சணத்தில் நான் பதிவு எழுதறதும் அதைப் போடறதுமே பெரிய வி்ஷயமா இருக்கு. எழுதாமலும் இருக்க முடியலை. அப்புறம் ரசிகப் பெருமக்கள் எல்லாம் தவிப்பாங்களே? அதனால் கொஞ்சம் பொறுத்துக்குங்க. உபிச எடிட் செய்யறேன்னு சொல்லி இருக்காங்க. அது வரை பொறுக்கவும். இங்கே நான் அடிக்கிறது எனக்கு உருது மாதிரித் தெரியுது. அப்படி இருந்தும் ஏதோ அடிக்கிறேன்னா பார்த்துக்கோங்க. காப்பி, பேஸ்ட் பண்ண நேத்திக்கு என்னை விடவே இல்லை. இதெல்லாம் என்ன கெட்ட பழக்கம்னு சொல்லித் திட்டு வாங்கிக்கிட்டேன். இந்தியா, என் அருமை இந்தியா, ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸிதா ஹமாரா, ஹமாரா, ஹம் புல்புல் ஹை இஸிகிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ன்னு பாடிட்டு வரணும் போல் இருக்கு, என்ன இருந்தாலும் இம்மாதிரி வெளிநாடு போகும்போது தான் நம்ம நாட்டின் அருமை பெருமை புரியுது.

இங்கே எல்லாமே உபயோகப்படுத்திட்டுத் தூக்கி எறியவேண்டியது தான் கணவன், மனைவி உள்பட. :D ஒரு சிலர் வித்தியாசமாய் இருக்கலாம். என்றாலும் புதிய பால், புதிய காய்கனிகள் என்று நம்ம இந்தியாவில் நாம் அனுபவிக்கிற மாதிரி இங்கே கிடைக்காது. போன முறை வந்தப்போ ஹாஃப் அன்ட் ஹஸப் பால் வாங்கினா எங்க பொண்ணு. இப்போ ஆர்கானிக் பால். என்றாலும் நம்ம ஊர்ப் பாலின் ருசியும், மோரின் ருசியும், காஃபி, டீயின் ருசியும் வராது. அதுவும் எங்க வீட்டிலே இன்று வரை நல்ல புதிய கறந்த அன்றன்றைய பால்தான். காஃபியோ, டீயோ, பாலோ எங்க வீட்டில் சாப்பிடறவங்க அதை மறுமுறை நினைக்காமல் இருக்கவே மாட்டாங்க. இங்கே காஃபி எல்லாமே மெஷின் தான் தயார் செய்யுது. பின் அதைக் கப்பில் ஊற்றி மைக்ரோவேவில் வைத்துச் சூடு பண்ணணும்.

நம்ம டபரா, தம்ளர் எல்லாம் இங்கேயும் வச்சிருக்கோம். என்றாலும் ருசியோ தரமோ மாறுபடுது. நேத்திக்குப் பப்பாளிப் பழம் வாங்கி வந்தால் ஒரு பழம் விலை 2 டாலர்தான்னு ரொம்பவே சகஜமாச் சொல்வாங்க. நமக்கு அடிச்சுக்கும். இந்தக் கணக்குப் போடும் வேலையை விடுன்னு பொண்ணு கோவிச்சுக்குவா. இருந்தாலும் நம்ம புத்தி நம்மை விட்டுப் போகாதே! இருங்க, அப்புறமா வந்து மிச்சப் பயண விவரங்கள் எழுதி அறுவை போடறேன். கார்த்திக் உங்க வலைப்பக்கத்துக்கு வந்து படிச்சேன். பின்னூட்டம் தான் கொடுக்கலை. ஒருமுறை கொடுத்தேன்னு நினைக்கிறேன். அப்புறமா எக்ஸ்ப்ளோரரில் இருந்து படிக்கிறேன். திரும்பவும் நெருப்பு நரிக்குப் போய்ப் பின்னூட்டம் கொடுக்கணும். இன்னிக்கு முடிஞ்சா கொடுக்கிறேன். வராமல் எல்லாம் இல்லை. தவிர, இங்கே நேரம் வேறே பார்த்துத் தான் கணினியில் உட்காரமுடியும். :D

14 comments:

 1. //காஃபியோ, டீயோ, பாலோ எங்க வீட்டில் சாப்பிடறவங்க அதை மறுமுறை நினைக்காமல் இருக்கவே மாட்டாங்க//

  ஆமா! ஆமா! ஏன்டா இத குடிச்சோம்?னு நினைச்சுபாங்க.

  பொதுவா இந்த தஞ்சாவூர் காரங்க எல்லாம் தங்கள் முதுகிலேயே சபாஷ்!னு சொல்லி தட்டிபாங்களாம். உங்கள சொல்லி குத்தமில்ல. நீங்க வாக்கப்பட்ட இடம் அப்படி! :)


  Flash News: உங்க வீட்டுல காப்பி குடிச்சதுக்கு அப்புறம் TRC சார் 2 நாளா வாந்தியாம்.
  ரவிஷங்கர் பிளைட்டுல Rest roomல தான் பயணம் செஞ்சு ஏதோ பெருமாள் புண்ணியத்துல ஒரு வழியா ஊர் போய் சேர்ந்தாராம்.

  பாலராஜன்கீதா அட்ரஸையே காணோம். இல்லாட்டி உங்களுக்கு பின்னூட்டி இருப்பாரே! :p

  ReplyDelete
 2. //புதிய பால், புதிய காய்கனிகள் என்று நம்ம இந்தியாவில் நாம் அனுபவிக்கிற மாதிரி இங்கே கிடைக்காது//

  பொதுவா இங்க இருக்கற வரைக்கும் இந்தியால அது சரியில்லை, இது சரியில்லை, கைலாசத்துல காப்பி கிடைக்கலை!னு சொல்ல வேண்டியது.

  யூ.ஸ் போனவுடனே இந்தியா போல வருமா?னு தோசைய திருப்பி போட வேண்டியது. சிலருக்கு இதே பொழப்பா போச்சு.

  இவ்ளொ கஷ்டப்பட்டு எதுக்கு போவானேன்? இந்த மொக்கைய இங்க இருந்தே போடலாம் இல்ல? ;)

  ReplyDelete
 3. //இங்கே எல்லாமே உபயோகப்படுத்திட்டுத் தூக்கி எறியவேண்டியது தான் கணவன், மனைவி உள்பட//

  பார்த்து சாம்பு மாமா படிச்சுட போறார்! :)

  ReplyDelete
 4. அம்பி, கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? அந்தப் பழமொழி உங்களுக்கு நல்லாப் பொருந்தும்னு நினைக்கிறேன். :P
  அப்புறம் நான் ஒண்ணும் ஜாலியா ஊர் சுத்திப் பார்க்க யு.எஸ். வரலை, அதனாலே ரொம்பவே பொறாமைப் படாதீங்க. நறநறநற

  தி.ரா.ச.சார் சொன்னார், நீங்க பங்களூரில் அவரைக் கவனிச்சுக்கிட்ட அழகை. அதனாலே ஒண்ணும் பேசாதீங்க. அப்புறம் எல்லா வி்ஷயமும் வெளியே வரும். :))))))))

  ReplyDelete
 5. வாங்க, வாங்க ஹரிஹரன் சார், ரொம்ப நாளா ஆளே காணோம்?
  ஹிஹிஹி, அது வந்து நான் இந்த கேட்டு வாசலில், நடு சென்ட்டரில், காம்பவுண்டு சுவரில் பார்த்தேனா? அதான் ஒண்ணும் புரியலை. ஹிஹிஹி, தலை சுத்துதா? நான் பொறுப்பு இல்லை. :D

  ReplyDelete
 6. ஹரிஹரன் எங்க வந்தார்.
  பின்னூட்டம் போடாதவங்களுக்கும் பதில் சொல்றது
  ஜெட்லாகின் மகிமையினாலா/:-)

  இல்லை நாந்தான் ஊருக்குக் கிளம்பற ஜோரில் பாக்கலியா?

  ReplyDelete
 7. hariharan enga vandharu?? appo kannum outa?? :-) indiala irukradhu indiala, inga irukra vasadhi inga. ellathukkum adoda thanithanmai undu illiya, onnu pola inonu varadhu. so enjoy this for a while!!

  ReplyDelete
 8. ஹிஹிஹி வல்லி. ஹரிஹரன் வந்தார் இதுக்கு முந்தின பதிவிலே. அங்கே கொடுத்த பின்னூட்டம் இங்கே வந்திருக்கு. அப்புறம் சேதுக்கரசி என்னைத் தான் வி.வி.ஐ.பின்னு ரொம்பவே அடக்கமாச் சொல்றாங்க. அவங்க ஒரு வி.ஐ.பி.ன்னா நான் வி/வி.ஐ.பி இல்லையா?
  அது என்ன? நான் வந்ததும் நீங்க இந்தியா கிளம்பறீங்க?

  ReplyDelete
 9. போர்க்கொடி பாட்டியின் த்த்துப் பித்துவங்களுக்கு ஒரு நன்றி, பாட்டி.

  ReplyDelete
 10. மேடம், இந்த பதிவு எந்த பிரச்சினையும் இல்லாம கொஞ்சம் நல்லாத் தெரியுது..

  ReplyDelete
 11. //கார்த்திக் உங்க வலைப்பக்கத்துக்கு வந்து படிச்சேன். பின்னூட்டம் தான் கொடுக்கலை. ஒருமுறை கொடுத்தேன்னு நினைக்கிறேன்//

  மேடம், சும்மா விளையாட்டுக்குத் தான் நீங்க வரலைன்னு சொன்னேன்.. பாவம், இந்த பிளாக்குகளை படிக்க நீங்க என்னென்ன கஷ்டப்படுறீங்களோ தெரியாது..

  ReplyDelete
 12. மேடம், உங்களால அந்த அழகு டேக்-ஐ எழுத முடியுமோ முடியாதோ என்று தான் உங்களக்கு டேக் போடல.. மத்தப்படி நீங்க இல்லாத பிளாக்கர் ஃபேவரிட் லிஸ்டா..

  ReplyDelete
 13. நான் போட்ட பின்னுட்டம் எங்க மேடம்?

  ReplyDelete
 14. கார்த்திக், வாங்க, வாங்க, வந்ததுக்கு நன்றி. அது சரி, வரவேற்பு எங்கே கொடுத்தீங்க? அதான் யாருமே வரலையே? ம்ம்ம்ம்ம்ம், தலைமைக் கழகத்தில் இருந்து தகவல் வரும் எல்லாருக்கும்.

  @மணிப்ரகாஷ், உங்க பின்னூட்டம் வந்ததைப் போட்டிருக்கேன். வேறே ஏதும் வரலை.அது சரி, ஏன் வரவேற்புக்கு வரலை?

  ReplyDelete